நடிப்பு கவிதை – சக்தி ராணி

நடிப்பு கவிதை – சக்தி ராணி




கதறி அழும்…
நான்கு சுவர்களுக்கு
மத்தியில்… யாருக்கும் தெரியாமல்…அழுது விட்டு
வெளியில் வந்து புன்னகைப்பதில்
கலந்து விடுகிறது நடிப்பு…

பிடிக்காத விஷயங்களும்…
பிடித்ததாய்ச் செய்யும் போதே…
பிடித்தலுக்குள் பிடித்துப்போய்விடுகிறது நடிப்பு…

காரசாரமான விவாதங்களுக்காக…
காத்திருக்கும் நபரிடம்…கை குலுக்கி
கடந்து விடும் போது…
கலந்து விடுகிறது…நடிப்பு…

உண்மை விளக்கும் உன்னத உரையில்
சுயநலமான சொற்களுக்கு மத்தியில்
சுயம் தேடி அலைவதில்…சுயமாய்
நடிக்கிறது நடிப்பு…

உயிரானவனின் உதவி வேண்டலில்…
எல்லாம் இருந்தும்…இல்லை என்றே…
ஒற்றை வார்த்தையில் உண்மை
மறைப்பதில்…உறைந்து கிடக்கிறது நடிப்பு…

எல்லாம் நடித்து விட்டு…ஏதும் அறியாதவனாய்….கண்ணாடி பார்த்தே…
நானும் நல்லவன் தான் என்றோ…
எனக்குள் நல்லவன் இருக்கிறான்
என்பதோ…ஆகச்சிறந்த நடிப்பு…

– சக்தி ராணி