“மெட்டி” சிறுகதை – சாந்தி சரவணம்

“மெட்டி” சிறுகதை – சாந்தி சரவணம்




ஜானகியின் குரல் வாசல் வரை அதிர்கிறது.

ஜகன் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தான். வாசல் கதவு திறந்து இருந்தது. அப்பாவின் அறையில் அக்கா ஜானகியின் பேச்சு சத்தம் தான் அது.

“அப்பா இறந்து ஒரு மாசம் கூட ஆகல. எப்படி உன்னால இந்த காரியத்தை செய்ய முடிந்தது.. ”

‘அம்மாவின் விசும்பல் சத்தம்… ”

“நல்லவேளை உன் மருமக அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா… அவ பார்த்து இருந்த மானமே போய் இருக்கும். ‘

“அதுவும் இல்லாம என் வீட்டுக்காரர் வந்து என்னை கூப்பிட்டு போக வரேன் என சொல்லி இருக்கிறார். நீ செஞ்ச காரியத்தை பார்த்து இருந்தால் அவ்வளவு தான்…. ”

“அக்கா, அக்கா என ஜகனின் குரல் கேட்டு… சரி சரி கண்ணை தொட…. ஜகன் வந்து விட்டான்…. என சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள், ஜானகி”

“வா ஜகன்.. எப்போ வந்தே… ”

“இப்ப தான் அக்கா… என் கதவை திறந்து வைச்சு இருக்கீங்க. அம்மா எங்கே. ”

“ரூம்ல தான் இருக்காங்க… ”

அம்மா, அம்மா, “ஜகன் வந்து இருக்கிறான் பாரு” என்றாள்.

55 வயது கமலா மெல்லமாக வெளியே வந்தாள். கண்கள் கலங்கி இருந்தது சென்ற மாதம் அவள் கணவன் ராஜன் இறந்து விட்டார். பலரை கொன்று சென்ற கொரானா கமலத்தின் கணவனையும் விட்டு வைக்கவில்லை.

மகள் ஜானகி மகன் ஜகன் இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.. ஜானகி திருமணம் முடித்து அண்ணாநகரில் வெல்கம் காலனியில் தான் குடியிருக்கிறாள். மகன் மருகளோடு தான் கமலா கோல்டன் ஜுபிலீ அடுக்கத்தில் தான் இருக்கிறாள். ராஜன் பிரிவில் இருந்து அவளால் இன்னும் வெளியே வர முடியவில்லை. மகன் ஜகன் சொல்லிற்கு ஏற்ப பொட்டு வைப்பதை தொடர்ந்து உள்ளாள்.

அம்மா, “ஏன் டல்லாக இருக்கீங்க என்ற மகனின் குரல்”, அவளின் கண்களை நினைத்தது.

“அது ஒன்னுமில்லடா.. அப்பா ஞாபகம் தான்… ” என்றாள் ஜானகி

அதற்குள் வாசலில் பைக் ஆரன் அடிக்க ஜானகியின் கணவன் ராம்.

ஜகன், “உள்ளே வாங்க மாமா என்றான்.. ”

“இல்லப்பா, அவசரமா போகனும் அப்புறம் வருகிறேன். அக்காவை வரச் சொல்” என்றார்.

அதர்குள் ஜானகி அம்மாவிடம், “அம்மா சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என கிளம்பினாள்”

“வரேன்டா ஜகன்.. ”

“சரிக்கா.. ” என சொல்லிவிட்டு ஜகன் அப்பாவின் அறைக்குள் சென்றான்.

அங்கு அம்மாவின் மெட்டி நசுங்கி அங்கொன்றுமாக இங்கொன்றுமாக கிடந்தது.

அம்மாவிற்கு பிடித்த ஜாதி மல்லி கதவின் பின்புறம் கிடந்தது.

அம்மா, “காபி” என்றான் ஜகன்.

கமலா உள்ளே சென்று காபி போட்டு வந்து, “இந்தாபா” என்றாள்.

அம்மா முகம் கழுவிக்கிங்க. வெளியே போய்விட்டு வரலாம்.

“எங்க பா. இப்போ எல்லாம் போக கூடாது என்ற கமலத்தை மறுத்து, நான் சொல்கிறேன் ரெடியாகுங்க என சொல்லி முகம் கழுவ சென்றான்”.

எங்கு அழைக்கிறான் என தெரியாமல் மகனோடு கிளம்பினார் கமலம்.

கணவன் இறந்த பின் முதல் முறையாக மகனோடு பயணம். கார் ஜி ஆர் டி வாசலில் நின்றது.

“எதுக்கு பா நகை கடைக்கு”.

“நான் பார்க் செய்து விட்டு வருகிறேன். நீங்க உள்ளே போங்கமா.. ”

“எதுக்கு பா.. ”

“சொன்ன கேளுங்க….” என கமலத்தை இறக்கிவிட்டு வண்டியை பார்க் செய்ய சென்றான்.

கமலம் தயங்கியபடி இருக்க.. அவளின் நினைவு அலைகள் சற்றே பின்னே சென்றது,

அன்று காதலர்கள் தினம்.

ராஜன் அன்று மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து விட்டார்,

“காதலர்கள் தினம் வாழ்த்துகள்”, பெண்டாட்டியே என்ற கணவனை பார்த்து

அட வயசான காலத்தில் காதலர்கள் தினமா!

“அப்படியா அப்போ மத்தியம் இதய வடிவில் ஏன் மேடம் கிழங்கு ஃப்ரை செய்து கொடுத்து இருந்திங்க” என்றார் ராஜன்.

“அது சும்மா”, என்ற மனைவியை கட்டி அணைத்து என் பெண்டாடியை நான் லவ் பண்றேன் என்றார்.

“லவ் பன்ற வயச பாரு..”

“ஐம்பதிலும் ஆசை வரும்……. “

அட

“ஆமாம் டீ “

“வா டிபன் எதுவும் செய்யாதே. ஜகன், ராதா சினிமா போய் இருக்காங்க. அவர்கள் வர லேட் ஆகும்.”

நாமும் வெளியே போகலாம் வா

“இல்லைங்க ஜானகியும் மாப்பிள்ளையும் வருவாங்க”.

“சீக்கிரம் போய்வீட்டு வரலாம் வா”, என என்றார்.

“உனக்கு பிடித்த ஒன்றை வாங்கி தருகிறேன்” என்றார் சிரித்தபடி ராஜன்

“என்னதுங்க…” என் அவலுடன் கண்கள் விரிய கேட்ட கமலத்திடம்

“ஸஸ்பன்ஸ” என்றார் ராஜன்

அசை கமலாவை தொற்றிக் கொண்டது..

“பிளிஸ்… பிளிஸ்… என்னவென்று சொல்லுங்கள்

“சொல்லமாட்டேன் ஆனா நீ வந்தால் உனக்கு பிடித்தது கிடைக்கும்.

சரி என ஒரு பொய் கோபத்தோடும் மகிழ்ச்சியோடும் கிளம்பினாள்.

இருவரும் பைக்கில் செல்வது என்றால் கமலாவிற்கு மிகவும் பிடிக்கும்.

காரில் குடும்பத்தோடு பயணித்தாலும் கணவனோடு பைக்கில் செல்வது என்பது அவளுக்கு பிடித்த ஒன்று. அதனால் பெரும்பாலும் இருவர் செல்வதாக இருந்தால் ராஜன் கார் எடுக்க மாட்டார். பைக் தான்.

“இறக்கை கட்டி பறக்குதுமா அண்ணாமலை சைக்கிள்..” என்பது போல பைக் பயணம் தொடங்கியது.

நேராக தி.நகர் பெருமாள் கோயில் சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு இருவரும் வெளியே வந்தார்கள். கமலாவிற்கு பிடித்த இடங்களில் தி.நகர் பெருமாள் கோயிலும் ஒன்று,

அலைபேசி அடித்தது. மகளிடம் இருந்து போன், “அம்மா எங்க இருக்கீங்க”.

இதோ நானும் அப்பாவும் பெருமாள் கோயிலுக்கு வந்து இருக்கோம் மா.

சூப்பர். சரி வீட்டுக்கு வந்தவுடன் போன் செய்யுங்க என போன் வைத்தாள் மகள் ஜானகி.

“பாருங்கள் அதான் சொன்னேன் பசங்க போன் செய்வார்கள் என… “

சரி சரி உட்காரு… அதற்குள் மணி 9.00.pm

வண்டி “நாதல்லா நகை கடை“ முன் நின்றது.

“இறங்கு”

“இங்கு எதற்குங்க” என்று கமலா கேட்டு கொண்டு இருக்கும் போதே,

“வாட்ச்மென் சார் கிளோஸ்ங் டைம் ஆகிவிட்டது. இனி யாரையும் உள்ளே விட கூடாது என இடமறித்தான்..”

சார், “இன்று என்ன நாள் தெரியுமா? “

செக்கியுரிட்டி வயதான தம்பதியரிடமிருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

சமாளித்துக் கொண்டு தெரியும் சார். “காதலர்கள் தினம்”. காலையில் இருந்து ஜோடி ஜோடியாக நிறைய சின்ன பசங்க வந்து போனாங்க என்றார்.

நாங்களும் சின்ன பசங்க தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க…… சீக்கிரமா செலக்ஷ்னை முடித்து விடுகிறேன் என அவரை பேசவிடாமல் மனைவியை இறங்கு சொல்றேன் என வண்டியை பார்க் செய்து விட்டு இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

ராஜன் சில்வர் பிரிவுக்கு உள்ளே சென்று மெட்டி என்றார்.

வரிசையாக மெட்டி மாடல் எடுத்து வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்த நாள் முதல் இன்று வரை மனைவியின் கால்களில் “கொலுசு”, “மெட்டி” இரண்டையும் ரசிப்பது ராஜன் பழக்கம்.

“ஏற்கனவே காலில் போட்டு இருப்பது நல்லாதாங்க இருக்கு”, என்ற மனைவியிடம் பரவாயில்லை இன்று ஒன்று வாங்கி கொள் என்றார்

கணவனின் பேச்சை மறுக்க முடியாமல் மெட்டியை பார்க்க ஆரம்பித்தாள். சலங்கை வைத்த பெட்டியை எடுத்து இது நல்லாயிருக்காங்க என்றாள்

காலில் போட்டு காட்டு மா என மனைவிக்கு காலில் பழைய மெட்டியை கழுட்ட உதவி செய்து புதியதை போட்டு, “செம அழகா இருக்கு”.

மேடம் இதையே செலக்ட் செய்து விடுங்கள் என வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

வாசலில் ஜாதி மல்லி. அக்கா பூ வாங்கிக்கோங்க கா என பின்னாடியே ஒரு சிறுவன் ஒடி வந்தான்.

5 மொழம் பூ கொடுப்பா

ஜாதி மல்லி மனைவிக்கு ரொம்ப பிடிக்கும். வெளியே வந்தால் கண்டிப்பாக வாங்கிவிடுவார்.

தினமும் பூவுடன் தான் அலுவலகத்தில் இருந்து வருவார்.

மனைவியிடம் பூவை கொடுத்தார்.

பின் இருவரும் ஹோட்டல் சென்று டிபன் சாப்பிட்டு விட்டு இரவு தாமதமாக தான் வீடு வந்து சேர்ந்தார்கள்.

அதே நேரம் மகனும் மருமகளும் உள்ளே வர, அத்தை என மாமா காதலர்கள் தினம் ஸ்பேஷலா….. என சிரித்தபடி உள்ளே சென்றாள்…

கமலா வெட்கத்துடன் சிரித்தபடி உள்ளே சென்றாள்.

அம்மா என்ற ஜகனின் குரல் கமலத்தை தன் நினைவுகள் கலைந்து.

சொல்லுப்பா….

“வா மா என வெள்ளி பிரிவுக்கு அழைத்து சென்றான்.. ”

கமலத்திற்கு என்னவென்று புரியவில்லை..

நேராக சென்று மெட்டி வேண்டும் என்றான்.

என்ன ஸைஸ் என்ற பெண்ணிடம், ‘இதோ எங்க அம்மா கால் விரல் ஸைஸ் என மெட்டி எடுத்து அம்மா எது வேண்டும் என பார் என்றான் .”..

கமலம் கண்கள் வேர்க்க ஆரம்பித்தது

திடிரென்று ராஜனுக்கு கொரானா தொற்று என மருத்துவமனையில் அனுமதித்து விட்டார்கள்.

கமலத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ஜகன் தான் முழுமையாக பார்த்துக் கொண்டான்.

இரண்டு தடுப்பு ஊசி போட்டுக்கூட கொரானா தொற்று எப்படி வந்தது என்று யாருக்கும் புரியவில்லை.

எப்படியாவது அப்பாவை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு ஜகனும் தன்னை விட்டு ராஜன் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் காலமும் பமந்தூர் மருத்துவமனைக்கு நடையாய் நடந்து சென்றார்கள்.

ராஜன் உடல் நன்றாக முன்னேற்றம் அளித்தது.

ஒரு நாள் உள்ளே சென்று பார்க்க மாஸ்க், செனிடேஸர் என பல சாதனங்களோடு உள்ளே செல்ல அனும்தி கிடைத்தது.

கமலம் உள்ளே சென்றவுடன் ராஜன் கண் அடித்து என்னடீ சிவாஜீ படத்தில் ரஜினி காஸ்டியும் அணிந்து வந்து இருக்க.

போங்க என்ற மனைவியை பார்த்து உன்னை விட்டு நான் போக மாட்டேன் டீ.

ஒருவேளை எனக்கு எதாவது நடந்தாலும் நீ தைரியமாக இப்படியே தான் இருக்க வேண்டும் என்றார்,

பேசாமா இருங்க… என்னை விட்டு நீங்க எங்கேயும் போக மாட்டிர்கள் என தைரியம் சொல்லிவிட்டு அவளும் ராஜனுக்கு சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தார்கள்

அவளின் எண்ணம் எல்லாம் வீணாகி போனது.

திடிரென ராஜனுக்கு மாரடைப்பு உடனே மருத்துவமனைக்கு வர சொல்லி அழைப்பு வர மகனும் தாயும் ஓடி சென்றார்கள். ஆனால் அதற்குள் ராஜன் கமலத்தை விட்டு சென்று விட்டார்.

கொரோனா தொற்று என்பதால் பாடியை வீட்டுக்கு தர மாட்டேன் என கூறி விட்டார்கள்.

அரசியல் பிரமுகர்கள் உதவியுடன் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் வீட்டு வாசலில் ஒரு நிமிடம் நிறுத்தி செல்ல அனுமதி பெற்று இருந்தான் ஜகன்.

இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் வீட்டை நெருங்கியது. யாரையும் நெருங்க விடவில்லை.

ஜகன் அம்மா நீ ஒரு முறை அப்பா முகத்தை பார்த்து விடு என்று கதற…

தட்டு தடுமாறி வண்டியில் ஏற துணிந்த கமலத்தை டிரைவர் தடுத்து விட்டார்.

ஜகன் வண்டியோடு ஈமச்சடங்கு செய்ய கிளம்பிவிட்டான்

கதறி அழுதபடி இருந்த கமலத்தின் கால்களில் இருந்த மெட்டியை, கழுத்து சங்கிலியை யாரும் எதிர்பார நேரத்தில் சுற்றி இருந்த பெருசுகள் கழற்ற துடிதுடித்து போனாள் கமலம்.

அம்மா என்ற ஜகனின் குரல் மிண்டும் கமலத்தை தன் நினைவுகள் கலைந்து.

சொல்லுப்பா….

“மெட்டி எடுங்க மா….”

“வேண்டாம் பா….”

நான் சொல்வதை கேளுங்க…. என்றவுடன்

நடுக்கத்துடன் மெட்டி தேர்வு செய்ய துவங்கினாள்.

“சலங்கை வைத்த பெட்டியை எடுத்து இது நல்லாயிருக்கு மா. இதை எடுத்துக்கோங்க” என்றான் ஜகன்

பதில் சொல்ல முடியாமல் கமலம் நிற்க

காலில் போட்டு காட்டு மா என அம்மாவின் காலில் மெட்டியை போட காலை தூக்கி மேலே வைக்க உதவி செய்தான்.

கமலம் அவள் அறியாமல் கண்களில் வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு மெட்டி அணிந்தாள்.

“செம அழகா இருக்கு மா” என்ற ஜகனின் கையை பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள் கமலம்…

ஜகன் அம்மாவின் கையை பிடித்தபடி தைரியமா இருமா… நான் இருக்கேன் என்ற மகனின் குரலில் மீண்டும் பிறந்தாள கமலம்.

அதே சமயம் கைபேசி அடிக்க, “உம் சொல்லு கா…. . என்றான் ஜகன்…

ஒன்னும் இல்லடா ஜகன் அம்மா…

அக்கா, ஜீ. ஆர். டிக்கு அம்மாவுக்கு மெட்டி வாங்க வந்து இருக்கிறேன். அப்புறம் பேசறேன் என வைத்தான்..

திருமதி. சாந்தி சரவணன்
கோல்டன் ஜூபிலி பிளாட்
பிளாக் எண்:157/16பாடி குப்பம் ரோடு
அண்ணா நகர் மேற்கு
சென்னை 40
Mob:9884467730
email: [email protected]