Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – சாந்தி சரவணன்
அணிவகுத்து நின்ற
ஜல்லிக்கட்டுக் காளைகள்
பார்வையாளறற்ற வாடிவாசல்.
பசி தணித்த அன்னைக்கு
நன்றி விழா
பொங்கல் திருவிழா
அண்டத்தில் விதைதேன்
பிண்டத்தின் பசி தணித்தது
தைப் பொங்கல்
பச்சரிசிக்கும் வெல்லத்திற்கும்
கலப்புத் திருமணம்
சக்கரைப் பொங்கல்
கொரானா விழிப்புணர்வு ஹைக்கூ
தனித்திரு
விலகியிரு
பிழைத்திரு
கடல் அலை
கவனம்
கொரோனா அலை
கூடாதே
குடிக்காதே
சாகாதே.
கொன்றது அன்று
காத்தது இன்று
தனிமை