Posted inPoetry
உயிர் அவள் கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி
இவளின் மொழியோ
அடர் மௌனம்
காதலியா மனைவியா தெரியவில்லை
கூடவே இருக்கிறாள்
கண்களால் பார்த்தது இல்லை
ஆனால் அழகாய் இருக்கிறாள்
ஒருபோதும் வெளியில் வருவதில்லை
வந்தால் மீண்டும் செல்ல மாட்டாள்
கொஞ்சம் பிடிவாதக்காரி தான்
ஆனால் மென்மையானவள்
சூதுவாது தெரியாதவள்
சாதி மதம் இனம் கடந்தவள்
விட்டுச் சென்று விடுவேன் என
அவ்வப்போது மிரட்டுவாள்
அய்யோ பாவம் அவள்
தாய்தந்தையால் பிள்ளையால்
வாழ்க்கைத் துணையால் காதலால்
கட்டி வைக்கப்பட்டுள்ளாள்
உன் பெயர் என்ன என்றேன்
“உயிர்” என்றாள்
