Nadavandi short story by Karkavi நடவண்டி குறுங்கதை - சே கார்கவி

நடவண்டி குறுங்கதை – சே கார்கவி




பொறந்த ஒரு வருசத்துல எல்லாத்தயும் புடிச்சு நடந்துட்டா…என் மவன் கார்த்திலு…. அவனுக்கு கைப்பிடிச்சு நடக்க கீழ விழாம பழகுற அளவுக்கு ஒரு நடவண்டி செய்யனும்…..”

சுள்ளி பொறிக்கி போகுற வழியில ஒரு தச்சுப்பட்டரைய பாத்து “ஏங்க இந்த நடவண்டி எவ்வளவுங்க” னு கேட்டா அஞ்சம்மா…அதுக்கு கடகாரன் ஏய் உனக்கு இதெலாம் கேட்குதா…போய் வேற வேலய பாரு போ னு அதட்டி சொன்னான் கடைகாரன்….சின்ன நடுக்கத்தோட அந்த இடத்தை விட்டு விலகி போனா அஞ்சம்மா….

தூரமா இத எல்லாம் பாத்து கிட்டு நின்னா புருசன் சேகரு….அவனோ தினக்கூலிக்கு மரம் வெட்டுற வேலைக்கு போய் குடும்பத்த காப்பாத்துறான்….சின்ன மனக்கஷ்டத்தோட அவன் சைக்கிள உருட்டிக்கிட்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சான்…சேகரு…

அந்த விசயத்த பாத்த பிறகுதான் தான் மகன் நடக்க பழகுற அளவுக்கு வளந்துட்டானு அவனுக்கு மூளைக்கு செய்தி வருது….

என்ன பன்னலாம் னு …தினம் யோசிச்சு அதுக்காக அதிகம் வேலை செய்ய ஆரம்பிக்கிறான் சேகரு……..

வீட்டு வேலை பாத்துட்ட மீதம் இருக்கிற நேரத்துல பனமரத்துல பனங்கொட்டை நடுர வேலைக்கு ……. அஞ்சம்மா அப்பப்ப போய் அஞ்சோ பத்தோ சம்பாதிப்பா……..

எப்படியோ கஸ்டப்பட்டு பணம் சேத்துட்டான் சேகரு…… அவனுக்கு தெரியாம அஞ்சம்மாவும் பணம் சேத்துட்டா….

ஒருநாள் ராவுல ஏயா…நா பனங்கொட்ட புதைச்சதுல அம்பது ருபாய் சம்பாதிச்சுட்டயா… நம்ம பைய நடக்க செவுத்த புடுக்கிறான்யா….இந்த காசுல அந்த மொக்கன் பட்டரையில. புதுசா நடவண்டி விக்கிதுயா…அத வாங்கலாம்யா….னு அவ ரொம்ப அஸ்கி குரலுல மவன மடியில போட்டு தட்டிகிட்டே புருசன் கிட்ட சொல்லுரா…

அப்ப இன்னொரு அதிர்ச்சியா…”ஏய் இந்தா புள்ள அம்பதுருவாய்…” நீ அன்னைக்கு அந்த கடைல பேசினத பாத்த…மொக்கன் உன்ன திட்னதயும் பாத்த…இந்தா நாளைக்கு முத வேலயா பையலுக்கு அத வாங்கிடு…சரியா…னு சொன்னான் …..அத கேட்டதும் அஞ்சம்மாக்கு அவ்ளோ சந்தோசம்…..

அடுத்த நாள் காலைல ரெண்டு பேரும் போய் அந்த மொக்கன் பட்டரைல…” யோவ் மொக்க அன்னைக்கு என் பொன்சாதிய சத்தம் போட்டியாமே…ஏன்யா இருக்குறவன்தான் வாங்கனுமா…எடுயா அந்த நடவண்டிய அப்டினு சத்தம் போட்டு….எவ்வளவுயா னு கேட்டான்….அம்பத்தி அஞ்சு சேகரு…அப்படினு மொக்கன் சொல்ல…இந்தா புடி னு கொடுத்துட்டு…வண்டிய வாங்கு அஞ்சம்மா கைல கொடுத்தான் சேகரு…..

அவசரமா வாங்கி அத தொட்டு தடவி ரொம்ப சந்தோசத்தோட மகன் கைல கொடுத்து ” செல்லம் புடிங்க அப்படி புடிங்க..அங்க பாரு அப்பா பாரு…தள்ளு தள்ளு தள்ளு….நடங்க அம்மா கூடவே வர…அப்பா உனக்கு முன்னாடி போறாங்க பாரு….னு மகன உற்சாகப்படுத்துனா….அஞ்சம்மா….நடவண்டிய கைல வாங்குன சந்தொசத்துல வேகவேகமா தள்ளி கீழ விழுகிறான் கார்த்திலு……..அடுத்த நொடி சின்னதா ஒரு அதிர்வு…திரும்பி பாத்தா….அஞ்சம்மாவும் சேகரும்…பொடி நடையா கார்த்திலு கைய புடிச்சிகிட்டு…..

என்ன இடம் பா இது…ஏங்க உங்களுக்கு தெரியுமா…னு கேட்ட… இதுவா மா….இது தா நாம இனிமே இருக்க போற இடம்மா….எனக்கு ஒரு பெரிய கம்பேனில வேலை கெடச்சிருக்குல….அந்த கம்பேனில கொடுத்த வீடுமா……அங்கதா நாம போறோம் னு சொல்லி….அஞ்சம்மாவையும், சேகரையும் ரெண்டு பக்கமும் கைப்பிடிச்சு…அவனுக்கு நடவண்டி சொல்லிக் கொடுத்த. கடந்த காலத்த நினைச்சுகிட்டே…சந்தோச நட போட்டான்….கார்த்திலு…