Posted inPoetry
கடலின் மேல் ஒரு கையெழுத்து கவிதை – கலா புவன்
பரந்து கிடந்தது கடல்
சூரியக் கதிர்கள்
கடலின் ஆழத்தை தொடமுயன்று தோற்றன
சிப்பிகள் இதமான குளிரில் முத்துக்களை
தாங்கி நின்றன
பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன
திமிங்கிலங்கள் பெரிய மீன்களை கவ்விக் கொண்டன
கட்டுமரங்களிலும் படகுகளிலும் மீனவர்கள்
மீன்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்
கப்பல்கள் கடலின் அமைதியை காயப்படுத்திக்கொண்டிருந்தன
காற்று மட்டும் கடலின் மேல்
கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தது
கடலின் கவிதைகள் அலைகளின் மேல் பயணித்து
கரைகளை சென்றடைந்தன
காதலர்கள் கால்களை கடலைகளில் நனைத்துக்கொண்டனர்