பேராசை என்ன செய்யும்? கவிதை – சிந்து

பேராசை என்ன செய்யும்? கவிதை – சிந்து




பேராசை என்ன செய்யும்?
நாடுகளைக் கடந்து மக்களை
அடிமைப்படுத்தும்
இயற்கை வளங்களைச் சுரண்டும்
லாபத்தைச்  குறிவைக்கும்
போரை ஊக்குவிக்கும்
ஆட்சியைக் கவிழ்க்கும் ,கலகமூட்டும்
மக்களின் உழைப்பைச் சூறையாக்கும்
மக்களுக்கான சித்தந்தாங்களை
மண்ணோடு மண்ணாக்கும்
ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டும்
வல்லரசு என்று மார்தட்டும்….
ஆம் போர் ஓர் நிகழ்வு அல்ல
அது திட்டமிட்டு
எளிய மக்கள் மீது
நிகழ்த்தப்படும் ஓர்
ஆணவத் தீவிரவாதம்
அரச பயங்கரவாதம்…….

– சிந்து

லவ் ஜிகாத்? கவிதை கிருகல் — சிந்து

லவ் ஜிகாத்? கவிதை கிருகல் — சிந்து

கொடுமைமிகு நாட்களிலும் கண்ணியம் காப்பது ஜிகாத் கடமையொன்றே கண்ணாக களம் காண்பது ஜிகாத் பொறுப்பொடு பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பது ஜிகாத் பொறுத்தலும் மனிதம் போற்றி மறத்தலும் ஜிகாத் கால்கடுக்க காதங்கள் பல கடந்து நீதிக்குப்போர் ஜிகாத் மதமறியாது குலமறியாது மொழியறியாது இனமறியாது…
தனியார் கல்வியும், ஆன்லைன் வகுப்பறையும்

தனியார் கல்வியும், ஆன்லைன் வகுப்பறையும்

வணக்கம், இந்த கோவிட்-19தில் கோவிடை விடவும் அதிகம் பேசு பொருளாய் மாறி இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் பற்றி ஆசிரியராய் எனக்கிருக்கும் சிற்சில ஆதங்கங்கள் இவை. குழந்தை இவ்வளவு நேரம் மொபைல் பார்க்கிறானே, ஃபீஸ் கேட்கிறார்களே என்கிற சத்தம் அதிகமாய் கேட்கிறது. பெற்றவரை…