Why are shirt buttons on the left for women and right for men? article by Sindhuja Sundaraj. Book Day is Branch of Bharathi Puthakalayam

சட்டை பொத்தான்கள் பெண்களுக்கு இடதுபுறத்திலும், ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பது ஏன்?



நீங்கள் எப்போதாவது ஷர்ட்களை துவைக்கும் போதே அல்லது இஸ்திரி செய்யும் போது பெண்களின் சட்டையில் பொத்தான்கள் (பட்டன்) இடது பக்கத்தில் அல்லது ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலதுபுறத்தில் இருப்பதைக் கவனித்திருப்போம். அது ஏன் என்று கேள்விக்குப் பதில் நாம் யோசித்துக் கூட இருக்க மாட்டோம். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் நம்மை நீண்ட தூரம் நம்மை அழைத்துச் செல்கிறது.

நீண்ட காலத்திற்கு முன்பு, உடைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதைப் பாலினம் தான் தீர்மானித்தது. இப்போது யுனிசெக்ஸ் ஃபேஷன் மற்றும் பரிணாம வளர்ச்சியுடன், ஆண்களும் பெண்களும் தங்கள் ஆடைகளை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. இனி பெண்களுக்கு பேன்ட் அல்லது ஆண்களுக்குப் பாவாடை போன்ற ஆடைகளை வைத்து ஒருவரின் பாலினத்தைத் தீர்மானிக்க முடியாது. இவை இப்படி இருப்பினும், சட்டைகளுக்கு வரும்போது, ​​பொத்தான்களின் வேறுபாடு மட்டும் இன்னும் தொடர்கிறது. நீங்கள் ஒருபோதும் கவனித்தது இல்லை என்றால், பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்திலும் ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பதைக் கவனியுங்கள். அது சரி, இந்த வேறுபாட்டிற்கு என்று எந்த நடைமுறை காரணமும் இல்லை, ஆனால் 1850களில் இருந்து அதையே பரிந்துரைக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. வாருங்கள் சற்று உள்நோக்கி கவனிப்போம். பொத்தான்கள் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடிவமைக்கப்பட்டது. அப்போது தான் பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டது. அப்போது பொத்தான்கள் எல்லோர் ஆடையிலும் இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் அதன் விலை கூடுதலாக இருந்திருக்கிறது.

Why are shirt buttons on the left for women and right for men? article by Sindhuja Sundaraj. Book Day is Branch of Bharathi Puthakalayam

அந்த காலத்தில் ஆடைகள் பெரும்பாலும் உயர்த்தட்டு மக்களுக்குரியது என்று இருந்தது. அவற்றில் பெண்கள் உடுத்தும் ஆடைகள் பல அடக்கு ஆடையே பயன்படுத்தினர். மறுமலர்ச்சி மற்றும் விக்டோரியன் சகாப்தத்தில் பெண்களின் ஆடைகள் பெரும்பாலும் ஆண்களை விட மிகவும் கடினமானதாகவும், விரிவானதாகவும் இருந்தன – பெட்டிகோட்கள், கோர்செட்டுகள் மற்றும் பெரிய பாவாடைகள் எனப் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் பெண்களுக்கு அவர்களின் பணிப்பெண்களே ஆடையை உடுத்தினார் . அப்படி அணிவிக்கப்படும் ஆடைகளைப் பணிப் பெண்கள் தான் பொத்தான்களைப் பூட்டுவதற்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது புறத்தில் பொத்தான்கள் தைக்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.

நாம் பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பெண்கள் பொதுவாகக் குழந்தைகளை இடது கைகளில் வைத்திருப்பார்கள், இடதுபுறத்தில் பொத்தான்களை வைப்பதன் மூலம் இலகுவாக பொத்தானை திறந்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று கருத்தும் நிலவியது.

ஆனால் ஃபேஷன் வரலாற்று இணையப் பதிவர் குறிப்பிடுகையில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளிலும் ஆண்கள் வேலைக்காரர்களால் ஆடை அணிந்திருப்பார்கள். இதற்கிடையில், 18 ஆம் நூற்றாண்டு வரை பெண்களின் ஆடைகளில் பொத்தான்கள் அரிதாகவே இருந்தன, 1860க்கு பிறகுதான் பெண்களுக்குப் பொத்தான்கள் இடதுபுறத்தில் தோன்றத் தொடங்கியது – குறைந்தது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பணிப்பெண்கள்/வேலைக்காரர்கள் இத்தகைய பணிகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் ஏன் உயர் வர்க்க மக்கள் வேலைக்காரர்களுக்காக ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது இன்றும் கேள்வியே?

ஆனால் ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலது புறத்தில் தைக்கப்பட்ட தன் காரணம் அவர்கள் போர்க்களத்திலும், ராணுவத்திலும் ஆயத்தங்களைக் கையாள வலது கையே பயன்படுத்தினர். அப்படிக் கையாளும் போது சட்டையில் உள்ள வலதுபுறத்தில் பொத்தான்கள் வடிவமைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது இந்த அனுபவத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் இந்த சௌகரியம் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை.

Why are shirt buttons on the left for women and right for men? article by Sindhuja Sundaraj. Book Day is Branch of Bharathi Puthakalayamநெப்போலியன் கோட்பாட்டின் படி பெண்கள் பலர் பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பொனபார்ட்டின் கை-இடுப்பு போஸ்டை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவரின் அந்த போஸ் கண்ணியத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. அதனை அறிந்த பேரரசு நெப்போலியன் பெண்களின் சட்டைகளில் உள்ள பொத்தான்களை ஆண்களுக்கு எதிர் பக்கத்தில் வைக்கும் படி உத்தரவிட்டார். அப்படிச் செய்தால் பெண்கள் கேலிக்கூத்தாகப் பார்க்கமுடியாது என்பது அவரின் கோட்பாடு. தனி ஒருவரின் தேவைக்காக ஓட்டு மொத்த பெண்களின் ஆடையிலும் தனது வெறுப்பைச் செலுத்துவது எவ்விதமான பாகுபாட்டை வலியுறுத்தி இருக்கிறார் என்பது புரிகிறது.

அதையும் கடந்து ஒரு விஷயம் என்னவென்றால், அப்போதெல்லாம் குதிரை சவாரி செய்யும் போது பெண்கள் வலப்புற பக்கவாட்டில் அமர்ந்து சவாரி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் குதிரை சவாரி செய்யும் போது காற்று அவர்களில் மேல் பாய்வதைக் குறைத்து துணியை விலக விடாமல் தடுக்க இடதுபுறத்தில் பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

Why are shirt buttons on the left for women and right for men? article by Sindhuja Sundaraj. Book Day is Branch of Bharathi Puthakalayam

இதைத் தொடர்ந்து எளிய மக்களும் ,உயர் தட்டு மக்களின் ஆடையையே விரும்பினர். அப்போதெல்லாம் பொத்தான்கள் விலைமதிப்புமிக்கதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும் விலைமதிப்புமிக்கவை இடது புறம் இருக்க வேண்டும் என எண்ணினர். அதன் நீட்சியே ஆண்களின் சட்டையிலும் பெண்களின் சட்டையிலும் பொத்தான்கள் நிரந்தரமாக வலதிலும் இடதிலும் இடம்பெற்றது .

ஆடையில் பாலின சமத்துவம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாலியல் வல்லுநர் ஹாவ்லாக் எல்லிஸ் எழுதுகிறார் ஆண் மற்றும் பெண்: இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாலியல் கதாபாத்திரங்களின் ஆய்வு (1894 இல் வெளியிடப்பட்டது), பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது பெண்களின் “வலிமை மற்றும் வேகத்தைக் குறைப்பதாக இருந்திருக்கூடம் என்கிறார். எனவே ஆண்களை விடப் பெண்கள் குறைவானவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்கள் ஆடையில் உள்ள சிரமங்களால் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

Why are shirt buttons on the left for women and right for men? article by Sindhuja Sundaraj. Book Day is Branch of Bharathi Puthakalayam

மற்றொரு கோட்பாடு என்ன வலியுறுத்துகிறது என்றால் பெண்களின் ஆடைகள் விடுதலையை வெளிப்படுத்தத் தொடங்கியதும், ஆண்களின் ஆடைகளிலிருந்து (எ-டு காட்டு: பேன்ட்) கடன் வாங்குவதும், உற்பத்தியாளர்கள் இடதுபுறத்தில் உள்ள பொத்தான்களை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை வேறுபடுத்துவதற்கான ஒரு நடைமுறையாகப் பராமரித்தனர். எவ்வாறாயினும், மினசோட்டா ஆடை வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் ஜான்சன் “பாலினங்களுக்கிடையில் பாகுபாட்டை நாம் தொடரும் வரை அது நம் ஆடையிலும் தொடரும் என்கிறார்.

பெண்களின் சட்டையில் உள்ள இடதுபக்க பொத்தான்கள் பாலின பாகுப்பாடின் ஒரு அடையாளம். யார் யாரே சிந்தனையில், அடுக்கு முறையில் பெண்களின் ஆடையிலும் தொடர்ந்த இருக்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் இன்று காலம் மாறி வருகிறது. அதன் வடிவமே பெரிய நிறுவனங்கள் யூனிசெக்ஸ் உடைகளைக் கையில் எடுத்திருக்கிறது. அவை ஆண்களைப் போன்றே சட்டையில் பொத்தான்கள் வலது பக்கத்தில் வைக்க உந்துகிறது. இது போன்ற முன்னெடுப்புகள் கட்டாயம் ஆடையில் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சிந்துஜா சுந்தர்ராஜ்

Civilization and the history of clothing Article By Sindhuja Sundaraj. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!



கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏட்டில் வரலாறு பதியப்படாத காலத்திலும் மனிதன் வாழ்ந்தானே. இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் மனிதன் தோன்றியபோது மேற்கூறிய பேதங்கள் எதுவும் இல்லையே.

முதன் முதலில் தென் ஆப்பரிக்காவில் மனித இனம் தோன்றியது. அந்த ஆரம்ப காலகட்டங்களில் ஆடை பற்றிய சிந்தனையெல்லாம் யாருக்கும் எழவில்லை. அதற்கு அங்குள்ள தட்பவெட்ப நிலையும் கூட ஓரு காரணம். அதன் பின் அங்கிருந்து இடம்பெயரந்த மக்கள் ஐரோப்பா, சைபீரியா போன்ற குளிர் பிரதேசத்தில் குடியேறினர்.

கடும் வெப்பத்தை பார்த்தவர்களுக்கு – குளிரை எதிர்கொள்ள – உடலைத் தயார் படுத்த வேண்டிய தேவையிருந்தது. மனித உடலை இயற்கையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே ஆடைகள் தோன்றின.  விலங்கை வேட்டையாடி மாமிசத்தை உட்கொண்டவர்கள், அதன் தோலை கடும் குளிரில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள தோலை உடுத்திக் கொண்டனர். இப்படி தான் உலகின்  முதல் ஆடை உருவானது.

இதனை மனிதன் எவ்வாறு கண்டுபிடித்தான். குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகள் எப்படி அந்த குளிரை தாக்கிக் கொள்கின்றன என்பது பற்றி சிந்திக்கையில், அவற்றின் தோலும் அதன் மேல் இருந்த அடர்த்தியான ரோமங்களும் குளிரிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளவை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்கிறான். கூர்மையான கற்கள், மரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றில் துளையிட்டு தனது  உடல்பாகங்களுக்கு ஏற்றவாறு நார்கள், கொடிகள் மூலம் இறுக்கிக் கட்டி ஆடையாக்கிக் கொண்டான்.

ஆடை பற்றிய வரலாறு என்ன சொல்கிறது? ஆடையை வடிவமைக்க மனிதர்கள் எந்த பொருளை பயன்படுத்தினர் என்ற கேள்விக்கு நாம் துருக்கியிலுள்ள கட்ல்ஹோக் செல்ல வேண்டும். கட்ல்ஹோக் உலகின் மிகப் பழமையான மனித நாகரிகங்களில் ஒன்று. கிமு 7100 முதல் கிமு 5700 வரை மக்கள் வாழ்ந்த நாகரிகம் அது. கட்ல்ஹோக் மக்கள் ஆளி(Flax) செடிகளை விளைவித்து அதிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அது தான் நாம் இன்று பயன்படுத்தும் கைத்தறி ஆடையான லினன்(Linen).

ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளில் உள்ள ஒரு பழங்கால குகையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் 34,000 வருடங்களுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படும் ஆளி இழைகளைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு தான் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட துணி மற்றும் நூலின் பழமையான மாதிரிகளைக் குறிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அர்மேனியாவில் கண்டெடுக்கப்பட்ட வைக்கோலாலான பெண்கள் உடை

உலகில் முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய ஆடை ஆர்மீனயாவில் அரேனி குகையில் கண்டு எடுக்கப்பட்ட ஓரு பெண்ணின் பாவாடை. இது சுமார் 5900 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கோலால் (Straw) பின்னப்பட்ட இந்தப் பாவாடைதான் இதுவரை நடந்த அகழாய்வில் கிடைத்த தொன்மையான ஆடை. இதைப் போன்றே உலகின் பழமையான கால்சட்டை சீனாவிலுள்ள யாங்காய் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் குதிரை சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட கால்சட்டை என ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.

அப்படியே வரலாற்றை இன்னும் புரட்டினால் அது நம்மை எகிப்து நோக்கி பயணிக்க வைக்கிறது. எகிப்தியர்கள் ஆடை வடிவமைப்பில் முன்னோடிகளாக திகழ்ந்து உள்ளனர். எகிப்தியர்கள் நாணல், பாப்பிரஸ், பனை போன்ற செடிகளிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை கண்டுபிடித்தனர். எகிப்தியர்கள் கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்கான ஆடைகளைப் பயன்படுத்தினர். உலகில் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட ஆடை எகிப்தில் உள்ள தார்கன் என்று இடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ஆடைக்கு “தார்கன் ஆடை”என்று பெயர். கடந்த 2015ம் ஆண்டு கார்பன் டேட்டிங் செய்ததில் இதன் வயது கிமு 3482-3102 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆடைகளின் வரலாற்றில் நாம் ஆசியா நோக்கி நமது பயணத்தை தொடரலாம். ஆசியா என்றதும் சீனா தான் முதலில் கண்ணிற்கு தெரிவது. சீன வரலாற்றின் படி , கிமு 27-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசி ஹிஸ் லி ஷி தான் பட்டு நூலை (silk) நெசவு நாராக கண்டுபிடித்த முதல் நபர்.அந்தக் கதை கொஞ்சம் சுவாரசியமானது.

பேரரசி ஒரு நாள் மல்பெரி மரத்தின் கீழ் தேநீர் குடிக்கும் போது, ​​ஒரு பட்டுப்பூச்சிக் கூடு (cocoon) அவரது கோப்பையில் விழுந்து. அது மெல்ல பிரிந்து நூல் அவிழத் தொடங்கியது. அதைப் பார்த்த ராணி அரண்மனையில் உள்ளவர்களை அது குறித்து ஆராய உத்தரவிட்டார்.

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான், பட்டாடைகள் ஆசியா முழுவதும் உள்ள பிற பகுதிகளை சென்ற அடையத் தொடங்கின. பட்டு நூல்கள் மிக வலுவாகவும், பளப்பாகவும், விலையுயர்ந்தாகவும் இருந்தது. இதை அறிந்த சீனர்கள் பட்டுடன் செடி ,கொடிகளிலிருந்து இயற்கை சாயத்தை கண்டுபிடித்து பல வண்ணங்களான பட்டு ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பட்டும், சாயமும் உலகம் முழுதும் அறியப்பட்டது.

இந்திய துணைக் கண்டத்தில் ஆடைகளின் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தையது. இந்தியர்கள் உள்ளூரில் வளர்க்கப்பட்ட பருத்தியால் ஆன ஆடைகளை அணிந்துள்ளனர். ஹரப்பா காலத்தில் கிமு 2500-ல் கூட பருத்தி பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்ட முதன்மையான இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அருகிலுள்ள தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்கள் மற்றும் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் காணப்படும் மனித கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம். ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்திய வேதாகமங்களில் (Scripture) உடைகளை மனித உடலைச் சுற்றி போர்த்தக்கூடிய உருவங்களே காணப்படுகிறது. பாரம்பரிய இந்திய உடைகள் பெரும்பாலும் உடலைச் சுற்றி பல்வேறு வழிகளில் கட்டப்பட்டன.

தென் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் நெசவு செய்ததும் சாயம் ஏற்றுவதும் நம் முன்னோருக்கு தெரிந்து இருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் பயன்படுத்தியத்தன் சான்று கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான நூற்புக்கதிர்கள்,அரிக்கமேட்டில் கிடைத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட நூற்புக்கதிர்கள், கொடுமணலில் கிடைத்த நூற்பு உருளைகள் போன்றவை தமிழகத்தில் பண்டைக்காலத்தில் நெசவு செய்யப்பட்டதற்கான ஒரு மிகப் பெரிய சான்று.

இப்படி ஒவ்வொரு மனிதச் சமூகங்களிலும் ஒவ்வொரு நாகரிங்களிலும் அந்தச் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப ஆடைகள் மற்றும் நாகரிகங்களின் வளர்ச்சி நடைபெற்றது. நாகரிக வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் இன்றும், நமக்கு ஆடைகள் அடையாளம் காட்டுகின்றன அல்லவா ?

சிந்துஜா சுந்தர்ராஜ்

Is Pegasus Spyware Spying on Us? So what is Pegasus? What does it do? article Sindhuja Sundaraj. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பெகாசஸ் ஸ்பைவேர் நம்மை உளவு பார்க்கிறதா? அப்படியானால் பெகாசஸ் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களிலும், ஊடகத்திலும் பெகாசாஸ் என்ற வார்த்தை உலவிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் “பெகாசஸ்” மீது கேள்வி எழுப்பி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். பெகாசஸ் திட்டத்தைப் புலனாய்வு செய்த சர்வதேச ஊடக கூட்டமைப்பானது (International…
The path through which the saree passed article by Sindhuja Sundaraj. Book Day is website of Bharathi Puthakalayam

சேலை கடந்து வந்த பாதை – எஸ். சிந்து

புடவை என்றவுடன் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம், திருவிழா , திருமணம், கோவில் இவை எல்லாம் தானே புடவையைப் பற்றி நாம் அதிகம் பேசும் இடம். ஆனால்  ஆண்களுக்குப் புடவை என்றுடன் நினைவுக்கு வருவது பெண்களின் வெட்கமும், புடவை மடிப்பும்…
ஜீன்ஸ்: டெனிமின் சொல்லும் கதைகள்- நீதா தேஷ்பாண்டே | தமிழில் எஸ். சிந்து

ஜீன்ஸ்: டெனிமின் சொல்லும் கதைகள்- நீதா தேஷ்பாண்டே | தமிழில் எஸ். சிந்து

ஆடை என்பதை நாம் நம் கலாச்சாரத்துடன் பார்ப்பது எப்படியோ அப்படியே ஆடையை அந்த நபரின் நடத்தையுடன் பார்ப்பது தவறு. ஆடை மனித பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். தேவை, சூழ்நிலைக்கேற்ப  மாறி கொண்டேவரும் தன்மையுடையது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரட்…
வட இந்தியா ஒளிர்கிறது எரியும் பிணங்களால் 😥😭 – சிந்துஜா

வட இந்தியா ஒளிர்கிறது எரியும் பிணங்களால் 😥😭 – சிந்துஜா

பெருந்தொற்றுக்கு ஏது சாதி, மதம் விலகி இருப்பதில்லை மனிதனிடம் வீதியெங்கும் பிணக்குவியல் சுவாசிக்கும் காற்றும் சுவாச மற்றுபோகிறது வான் உயர்ந்த சிலைகளுக்கு இடமிருக்குமிடத்தில் உயிருடனிருக்க ஓரு படக்கையில்லை மாத்திரை மருந்து மந்திரகளுக்கு மட்டும் மரணப்படுக்கையில் எண்ணற்ற உயிர்கள் ஏன் என்று கேட்க…
பெண்கள் நாம் உடுத்தும் உடை பல போராட்டங்களின் வெளிப்பாடு ஆடை – சிந்து

பெண்கள் நாம் உடுத்தும் உடை பல போராட்டங்களின் வெளிப்பாடு ஆடை – சிந்து

உலகம் நாகரிகம் அடைய தொடங்கியதிலிருந்து பெண் போராடிக் கொண்டு தான் இருக்கிறாள். நாகரிகம் ஏற்படுத்திய பல பெண்களுக்கு போராட்டத்தை கொடுத்தது . இதில் பெண்களின் ஆடையும் அடங்கும். ஆடையால் போராட்டாமா ? ஆம் ஆடை நாகரிகத்தின் வெளிபாடாக உடலை மறைக்க உதவும்…
கவிதை: நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய கைகள் — சிந்து

கவிதை: நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய கைகள் — சிந்து

நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய கைகள் இன்றைக்கு உங்களின் லட்டியை கையாள்கிறது வானம் பார்த்து விவசாயம் செய்தே பழகிய கண்கள் இன்றைக்கு கண்ணீர்ப்புகைக்குண்டுகளை பார்க்கிறது குயில்களும் மயில்களின் சத்தம் கேட்டே பழகிய காதுகளை இன்றைக்குத் தண்ணீர் பீரங்கிகள் துலைக்கின்றன வயிற்றுக்கு…
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வர வேண்டும். அது தான் எப்போது ? – பத்திரிக்கையாளர் சுதா ராமச்சந்திரன் (தமிழில் சிந்துஜா சுந்தர் ராஜ்)

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வர வேண்டும். அது தான் எப்போது ? – பத்திரிக்கையாளர் சுதா ராமச்சந்திரன் (தமிழில் சிந்துஜா சுந்தர் ராஜ்)

19 வயதான தலித் பெண் மீது சமீபத்தில் நடந்த மிருகத்தனமான பாலின தாக்குதல்  மற்றும் சாதி வன்முறை குறித்த இந்தியாவின் பயங்கரமான தட பதிவை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி, வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் (முன்னர் “தீண்டத்தகாத”)…