சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? | Who will protect Singara Chennai? Environment Article by Thomas Franco - https://bookday.in/

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது?

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? சென்னை மாநகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற மாநில அரசில் ஆட்சி செய்தவர்கள் கோடி கணக்கில் செலவழித்துள்ளனர். ஆனால் சென்னை சிங்கார சென்னையாக மாறவில்லை. சென்னை மாநகர முதல் திட்டம் 426 ச. கி. மீட்டரில் இருந்து…
கூவ நதிக்கரை கவிதை – வெ.நரேஷ்

கூவ நதிக்கரை கவிதை – வெ.நரேஷ்




கூவ நதிக்கரை
******************
சிங்கார சென்னைன்னு
பேர் மட்டும் வாழுது
சின்னஞ்சிறு பிள்ளைக் கனவு
கரையோரம் வேகுது

பட்டா கேட்டு பேனாலும் பவர் ரொம்ப வெரட்டுது
பாட்டாளேனு இருந்தாலும் விடியல் கண்ண உருட்டுது

ஓட்டேல்லாம் வாங்கிக்கிட்டு
எல்லோரையும் தொரத்தது
வீட்டுக்குள்ள பொக்லைன விட்டு
வெட்கம் இன்றி வெரட்டுது

கூவ நதிக்கரையோரம் குருவிக் கூடா வாழுறோம்
குடிசைக்குள்ள இருந்தாலும் கோபுரமா சாகுறோம்

– வெ. நரேஷ்