குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் | Special Poems (Sirappu Tamil Kavithaikal) Written By Kumaran Viji | குமரன்விஜி எழுதிய 10 தமிழ் கவிதைகள்

தொடர் 13: சிறப்புக் கவிதைகள் – குமரன்விஜி

குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் 1. என் ஆமை மெல்லச் செல்வதை ஒரு வெயில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது அதிவேக முயலை அதிவேக காட்டு நாய் துரத்திக்கொண்டு ஓடுகிறது நான் ஏன் முயலை இந்த நேரத்தில் போட்டிக்கு அழைக்கப் போகிறேன். என் நத்தை…
கவிதைகள்- Poems | NaveArul- Kaliya Moorthy

தொடர் 11 : சிறப்புக் கவிதைகள் –  கலியமூர்த்தி

1 காகங்கள் பாடும் கவிதைகள் வேம்பு பூக்கத்துவங்கிவிட்டது இளவேனில் பருவத்தின் அடையாளம் அது கனிபழுக்கும் காலத்துக்கு முதுவேனில் வரை காத்திருக்க வேண்டும் அதுவரை மிஞ்சிய ஒன்றிரண்டு புழுக்களையோ செத்த மாட்டின் குடலையோ உண்டுதான் உயிர்த்திருக்க வேண்டும் வேப்பங்கிளைக் காகங்கள் அதற்காக யாரும்…
கவிதைகள்- Poems | NaveArul-சூரியதாஸ்

தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் –  சூரியதாஸ் 

1. ' கனல் இல்லையானால்...' கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும் எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும் முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும் குரல் இல்லையானால் காக்கைகள் கூடக் குயிலாய் நடிக்கும் துடிப்பில்லையானால் இதயம் கூடத் துருப்பிடிக்கும்…
சிறப்புக் கவிதைகள் (Sirappu Kavithaikal) - கனகா பாலன் (Kanaga Balan)

தொடர் 9: சிறப்புக் கவிதைகள் – கனகா பாலன்

1.**அம்மா** நிலாவைக் காட்டி நாயைத் தடவிக் கொடுத்து மீசைமாமாவைப் பூச்சாண்டியாக்கி உணவூட்டும் அம்மாவின் பசி அரைகுறையாகத்தான் அடங்குகிறது அழும் குழந்தையால் படுக்கை ஈரத்தின் நனையா இடைவெளிகளைத் தேடித் தேடி மழலையை நகர்த்திப் போட்டவள் மறந்தேதான் போகிறாள் இரவு தூங்கவேண்டுமென்பதை தப்புக்குத் தண்டனைதரும்…
sirappu kavithaikal series 8 by Valavaduraiyan

தொடர்:8 “சிறப்புக் கவிதைகள்”

  வளவதுரையன் கவிதைகள்     1. வருணதேவன் வாய்திறந்து கொட்டுகிறானே வழியெங்கும் வெள்ளமாய். வாடும் பயிருக்குத் தனைவிட்டால் யாருமில்லை என்றெண்ணி அவ்வப்போது மறக்காமல் பெய்கிறது இந்த மாமழை. இதுபோன்று பெய்தால் இனியதுதான். விரைவில் நின்றுவிடும். தூளியை ஆட்ட ஆட்டத் தூங்காமல் சிணுங்கும்…
தொடர் 6 : சிறப்புக் கவிதைகள் – தாமரைபாரதி

தொடர் 6 : சிறப்புக் கவிதைகள் – தாமரைபாரதி

      ரிக்க்ஷாக்காரர் கால்கள் மேலும் கீழுமாக முன்னும் பின்னுமாய் சீரலைவு இயக்கத்தில் இயங்க கைகளால் மணியடித்தவாறே கூட்டத்தை விலக்கியபடி கடக்கிறார் ரிக்ஷாக்காரர். ஆங்கில நாளிதழ் ஒன்றை சாவகாசமாகப் படித்தவாறு அமர்ந்திருப்பவருக்கு கால்களிரண்டும் நன்றாக இருக்கின்றன. சவாரி முடியும் தருணத்தை…
ஜி.சிவக்குமாரின் சிறப்புக் கவிதைகள்

சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்

    1.   உள்ளிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். வெளியிலிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். இதுவும் எத்தனை எத்தனையோ பார்த்திருந்தது. எல்லோரையும் பார்த்தபடியிருக்கிறது எவரும் பார்க்காத கை விடப்பட்ட வீட்டொன்றின் ஜன்னல்…
சிறப்புக் கவிதைகள் தொடர் 3– பாவண்ணன்

சிறப்புக் கவிதைகள் தொடர் 3– பாவண்ணன்

      16. மாநகர கோவர்த்தனள் புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள் கடந்த ஆண்டு மழையோடு இந்த ஆண்டு மழையை…
சிறப்புக் கவிதைகள் தொடர் 2 – பாவண்ணன்

சிறப்புக் கவிதைகள் தொடர் 2 – பாவண்ணன்

      1.அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூமூட்டைகள் பாலைச் சூடாக்க அடுப்புப் பற்றவைக்கிறார்…