oppari poem written by sakthi கவிதை: ஒப்பாரி - ச.சக்தி

கவிதை: ஒப்பாரி – ச.சக்தி

ஏவ் எப்போதும் போல இன்னிக்கும் நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா ஆமாம் டி இன்னிக்கும் நா குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் யாயா படுபாவி ‌இப்படி தெனமும் குடிச்சிட்டு வந்தேனா உடம்புக்கு என்னையா ஆகுரது நீ பட்டுனு நாக்கு வறண்டு செத்து தொலைஞ்சிட்டனா ‌…
na.ka.thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள். மேகம் நகர்கிறது? நிலா நகர்கிறதா? இரண்டுமே நகரவில்லை அங்கேயே தானிருக்கிறது நகரும் அழகினைப் பார்த்து ரசிக்கும் என் மனம் அப்பாலுக்கு அப்பால் நகர்ந்து போகின்றன மெல்ல மெல்ல நகர்ந்து, இன்னும் அப்பாவுக்கு அப்பால் நகர்ந்து எங்கோ?…
ayyanar edadi kavithaikal அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

  1.நம்பிக்கை அதிகாலைச் சூரியன் உதயத்தின் மடியில் கசாப்புக்கடையில் முட்டி மோதுகிறது வெள்ளாட்டங்கெடாக்கள் கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டினைப் பார்த்து. பசிக்கும் வயிற்றில் பூவரசம் பூக்களை இலையோடு மெல்ல கடிக்கிறது தூக்குச்சட்டியோடு…
தங்கேஸ் கவிதைகள் thangesh kavithaikal

தங்கேஸ் கவிதைகள்

இந்த அற்புதமான அந்தி வானத்தை தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது எத்தனை அபத்தம்? ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே இந்த செம்பருத்தியும்  ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது  மனதை சுமந்தலையும் உனக்குத்தான்  ஒரு பில்லியன் டன் பாரம்…

தங்கேஸ் கவிதைகள்

ஞாபகமாக.. பசும் புல்லைப் போல வளர்ந்து செழித்திருக்கிறது நம் நேசம் இதே நிலவை மீண்டும் பார்க்க ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம் நாம் அப்போது பறவைகளாக மாறியிருப்போம் அல்லது பேசும் நட்சத்திரங்களாக இப்போது நம் நேசத்தை கருவுற்றிருக்கும் அப்போது இருக்குமோ என்னவோ?…
குமரகுருவின் கவிதைகள்

குமரகுருவின் கவிதைகள்




குமரகுரு கவிதைகள்
************************
பார்த்ததைப் பற்றிய யோசனை
பார்த்த பின் அதிகரித்துக் கொண்டேயிருந்தது!

பார்த்த போதொரு காட்சியாகவும்
பிறகொரு அனுபவமாகவும்
பாடங்களை உதிர்த்தபடி
நிகழ்ந்து போனது!!

**********************
அருவியினடியிலொரு
மீன் துள்ளியபடியிருந்தது
அதன் துள்ளலுக்கேற்ப என் விழிகளை நகர்த்தி கொண்டேயிருந்தேன்!
விழியின் துள்ளலுக்கேற்ப இப்போது மீன் துள்ளிக் கொண்டிருந்தது!!

**********************

கிளிக்கொரு பழமெனப்
பழுக்க வைத்துக் காத்திருக்கும்
மரத்திற்கு வராத கிளிகளே!!
எங்கேயோ இல்லாத பழத்தைத் தேடிக் கொண்டிருக்கவா
இம்மரம் காய்த்தது?

***********************

கண நேரம் உன் கைப் பிடித்திருந்தேன்
பெருங்கடலொன்று அலையலையாய் ஊர்ந்து செல்ல முயல்வதைப் போல்
தன் பரந்து விரிந்து இறக்கைகளால் பறந்து போகும் வானம் போல்
மௌனம் நம்முள் மிதக்கத் துவங்கியது!

**********************

படகினடியில்
நாய்க்குட்டி போல்
துடுப்பை விரட்டி வரும் அலைகளைப் பாரேன்!
ஒரு கணம் கூட ஓயாமல் விரட்டி கரை சேர்த்ததும் தான்
சற்று ஓய்ந்து மீண்டும் கடலுக்குள் செல்கிறது!

***********************

ஓரிகாமி பறவையொன்றைச் செய்ய நினைத்தவள்,
யூடியூப்பில் காணொளி பார்த்துக் காகிதத்தை மடக்குகிறாள்
மடக்குகிறாள்
திடீரென அடித்த காற்றில்
அவள் கை கதகதப்பிலிருந்து
தப்பிப் பறந்தோடுகிறது
அந்த பாதி பறவை!!
விடுவதாயில்லை
அவள் அதை மீண்டும் பிடித்து
மடக்குகிறாள்
மடக்குகிறாள்
வீடியோ முடிந்ததும்
முழுதாகாத பறவையை செய்து முடிக்க
மீண்டும் ரீவைண்ட் செய்கிறாள்
மீண்டும்
தப்பிப் பறக்கிறது
அந்த முக்கால் பறவை…
மெதுவாய் பிடித்து
மீண்டும் மடக்குகிறாள்
மீண்டும் மடக்குகிறாள்

இப்போது “அப்பா! இங்கே பாரேன்!! பறவை செய்துவிட்டேன்!!” என்று என்னிடம் காண்பித்தாள்…
பறக்கவியலா ஓரிகாமி பறவை
கசங்கிய காகிதத்தில்
ஒடுங்கி கிடந்தது!!
“நல்லாயிருக்குமா!! ஆனா!! அந்த காகிதம் ஒரு கூண்டு போல்,
உன் பறவையால் பறக்க முடியல,
அதைப் பிரித்து பறக்க விடேன்!” என்று சொன்னதும்…

“போப்பா!!” என்றபடி அந்த பறவையை மடக்கி
புத்தகத்துக்குள் மறைத்து விட்டாள்.
“நான் நாளை என் பள்ளி தோழிக்கு காட்டுவேன்!!” என்றபடி!

காலைக்குள் அந்த முழு பறவை
மீண்டும்
பறந்திடாமல் இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்!

குமரகுரு
9840921017

சங்கமித்ராவின் கவிதைகள்

சங்கமித்ராவின் கவிதைகள்




* நீலமேறிய வானத்தைக் கிழித்தபடி
புன்கைமர அடர்த்திக்குள் வந்து
அமர்ந்தது அந்த அழுகுரல் பறவை

அப்பறவையின் சிறகசைப்பில்
தெறித்து விழுந்த ஒரு துளி
குரலுக்குள் உற்றுப்பார்த்தேன்
பாடி நகர்ந்து வரும் ஒரு நதியை

குரல்கள் வழிந்தோடி
எங்கோவொரு தொலைவுக்கு
அப்பால் கடலாகத் ததும்பியபோது
புன்னகைப் பெருவனம் உம்மென்று
மௌனித்திருந்தது

அவை மனம் கனக்க
நேரப்போகும் நம் பிரிவை
முன்பே அறிந்திருந்தன
போலுமென் ஆண்தேவதையே…
************************************

* வாழ்வெனும் பெருவனத்தில்
உன் பிடிவாதக் கங்குகளால்
தீயூட்டித் தப்பிச் செல்கிறாய்

இப்போதெல்லாம் எப்படிக் கடக்கிறாய்
குறைந்தபட்சம் குறுச்செய்திகளில்கூட
பிரியங்கள் பகிராத இந்நெடுநாட்களை?…

உன் பித்தேறிய தருணங்களால் மூர்ச்சையாகிய நான் மீண்டெழ
கொஞ்சம் நஞ்சேறிய வார்த்தைகளையாவது உதிர்த்துவிட்டுப்
போயிருக்கலாம் நீ

இனி மீதமுள்ள வாழ்வை வலிந்தேனும் நகர்த்த பிரார்த்திக்கிறேன்
முன்பைப் போல்
சிறகுகளை முறித்து
அதே நிலத்தில்
விழச் செய்துவிடாதேயென் ஆண்தேவதையே…
***************************************************

* பிரிவைப் பருகுதல் என்பது
ஒருவகைப் பித்துநிலை

புளித்த திராட்சை ரசமாய்
நினைவுகள் நுரைக்க
அபாண்டத்தின் பழிச்சொல்லென
கையிலிருக்கும் அப்பத்தை நனைத்து
பிரிவைப் பருகுதல் என்பது ஒருவகை பித்துநிலை

இப்போது பழைய ஞாபகங்களை முதுகில் சுமந்தலையும்
ஒரு பறவையாகிறேன் என் வானமெங்கும் நஞ்சேறிய
அடர்நீலமாய் காட்சியளிக்கிறது

இத்தனை கடந்தும்
சிறகுகளை வலுப்படுத்த
ஒருபோதும் மறப்பதில்லையென் ஆண்தேவதையே
அடுத்த நாளை எதிர்கொள்ள…
*************************************

* இதுகேளென் ஆண்தேவதையே
முன்பொரு காலத்தில் நாம்
காடுகளுடன் கைகோர்த்து
நடந்தோம் சரித்திர மர நிழலில் இளைப்பாறினோம்

முதைப் புனம் கொன்று
சுடுபுன மறுங்கில் பயிரிட்டோம்
நம் சந்ததிகளை

நாளெல்லாம் வெயில் பருகும்
பறவைகள் காலத்தின் மீதான
அதிர்வுகளில் நம்மோடு
பயணித்தன

நட்சத்திர ஆழங்களில் புதைந்து
மீள வல்லவையாக இருந்தன
நம் சுவடுகள்

கல்லோடு கல்லுரசி தீயெழுப்பிய
கற்கால நினைவுகளுக்குள்
பின்னிக்கிடக்கின்றன
நம் மரபின் வேர்கள்

‘மரபு வழிப்படுதல்
மானிடர்க்குக் கடனாயின்
‘குறிஞ்சி’ என்பது வெறும் ‘புணர்தலும்; புணர்தல் நிமித்தம்’ மட்டுமன்று…
********************************************************************************

* நானோ; நிபந்தனையற்ற காதலோடு
உன்னை அணைத்துக்கொள்கிறேன்…

இறுகக் கரம் பற்றி முத்தமிடுகிறேன்;
மார்பில் உன் முகம் புதைத்துக் கொள்கிறேன்;
தலை கோதி உறங்க வைக்கிறேன்…

துயரம் படிந்த வாழ்வில்
நீ தொலைத்த பால்யத்தை மீட்டுத்தருகிறேன்
கனவுகளையும்கூட

நீயோ; பாசறையோன்
சமூக நீதி
சுயமரியாதை
பகுத்தறிவென பெரியாரின் தீச்சொல்லைக் கணையாக்கி
மனித அவலம் களைத்து
மகிழ்ச்சியின் பெருங்கூச்சலெடுத்து தேர்க்குரவை ஆடுகிறாய்.

வேந்துவினை முடித்து விரைந்து வந்துவிடுவேன் கண்ணே
என் செவிமடல் வருடும்
உன் விரல்களை முத்தமிட
இன்னமும் காத்திருக்கிறேன்…

இனிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ எங்கிருக்கிறாய்? விரைந்து வந்துவிடுவாய்தானே?
என் ஆண்தேவதையே…

– சங்கமித்ரா

சாந்தி சரவணனின் கவிதை

சாந்தி சரவணனின் கவிதை



இயற்கையிடம்  ஒரு கேள்வி? 

வானம் கண்டு நீல நிறமறிந்தேன்

சூரிய உதயம் கண்டு மஞ்சள், ஆரஞ்சு நிறமறிந்தேன்

சூரிய அஸ்தமனம் கண்டு கருஞ்சிவப்பு நிறமறிந்தேன்

நிலவு கண்டு வெண்மை நிறமறிந்தேன்

இருட்டைக் கண்டு கருமை நிறமறிந்தேன்—

புல்லைக் கண்டு இளம் பச்சை நிறமறிந்தேன்

இலையைக் கண்டு கரும்பச்சை நிறமறிந்தேன்

யானையைக் கண்டு வெள்ளி நிறமறிந்தேன்

மானைக் கண்டு வெண்கல நிறமறிந்தேன்

குயிலைக் கண்டு பழுப்பு நிறமறிந்தேன்

வானவில்லிருந்து , ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் வயலட் என ஏழு வண்ணங்களை அறிந்தேன்.

மலர்களின் வாசத்தில் அதன் மனமறிந்தேன்!

கனிகளின் சுவையில் அதன் ருசியறிந்தேன்!

மிருகங்களின் உருவத்தில் அதன் குணமறிந்தேன்!

எண்ணற்ற  வண்ணங்களையும், வாசத்தையும்,

குணத்தையும் கற்றுக்  கொடுத்த இயற்கையே!

நீ மனித எண்ணங்களின்

வண்ணத்தையும்  வாசத்தையும்

குணத்தையும் மட்டும் மறைத்தது ஏன்?

நன்றி   

திருமதி. சாந்தி சரவணன்
Punithanin Kavithaigal புனிதனின் கவிதைகள்

புனிதனின் கவிதைகள்




தேநீர் மரம்
**************
வாசல்
வானமாக தெரிகிறது
வானம்
ரோஜா பூக்கள் பூத்த
வாசலாக தோன்றுகிறது

அம்மாவுக்கு அடுக்களையில்
தேநீர் வைக்க
உதவி செய்பவன்
விவசாயம் பொய்த்த பின்
தேநீர் கடையில்
தேநீர் தயாரிப்பவன் ஆகிறான்

போதி மரமாகிறது
தேநீர் கடையில் ஒலிக்கும்
சினிமா பாடல்கள்

ஜென் ஆகிறான்
தேநீர் தயாரிப்பவன்

டென்னிஸ் மட்டையின் ஜென் ஆற்றல்
********************************************
இந்த வருடம்
மஞ்சள் விளைச்சல் குறைவு
உடல் சோர்வு
மன அழுத்தம்
வாதை

அம்மா வழக்கம் போல்
காலையில் தேநீர் தந்தாள்
பட்டாம் பூச்சி
பாறாங்கல்லை கட்டி தூக்குவது போல்
மனம் லேசானது

பிரண்டை சட்னி எப்படி
செய்வது என பேசி கொண்டிருந்தார்கள்
அம்மாவும் சக வேலைக்கார அம்மாவும்

ஒண்டிரெண்டு நகைச்சுவை
அடிக்க முயன்றேன் நானும்

அம்மா வழக்கம் போல்
மதியம் ஒரு மணிக்கு
உறங்குவதற்காய்
கொட்டாவி விட ஆரம்பித்தாள்

அம்மா உறங்க போன பின்
என் கட்டிலில் கிடக்கும்
தலையணையை
வெறுமனே பார்க்க
ஆரம்பித்தேன்

சோர்வுறும் முயற்சியை விட
வாழ்வியல் பயிற்சியே
தேவை என புரிந்தது