Never Again Shortstory By Shanthi Saravanan நெவர் அகேன் சிறுகதை - சாந்தி சரவணன்

நெவர் அகேன் சிறுகதை – சாந்தி சரவணன்
“ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்ய தெரிகிறதா‌? முண்டம். நீ எல்லாம் படிச்ச முட்டாள். “தண்டம்” உன்னே போய் பூர்த்தி செய்ய சொன்னேன் பாரு. என்னை சொல்லனும் என கத்திக் கொண்டே இருக்கும் கணவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை “, வெண்பா.

கண்களில் வழியும் நீரை துடைத்த வண்ணம் பேசாமல் “பெண் ஏன் அடிமையானால்” பிடித்த பெரியாரின் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு பிள்ளைகளின் அறைக்குள் சென்றாள்.  மகன் ரித்விக்  கல்லூரியில் முதல் ஆண்டு கணிதம் படிக்கிறான். மகள் காவியா 12ம்‌ வகுப்பு படிக்கிறாள். இருவரும் அவர்களின் பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார்கள்.

ஒரு வங்கி விண்ணப்பம் பூர்த்தி செய்யதான் இத்தனை‌ ஆர்ப்பாட்டம்.

வெண்பா முதுநிலை படித்த பெண். அலுவலகத்தில் மேலாளர் பொறுப்பு ‌ ஆவணங்கள் தயாரிப்பு என்றால் அது வெண்பாதான். அத்தனை கச்சிதமாக இருக்கும்‌. அவள் ஒரு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றுதான் இப்போது இந்த பேச்சு.

அலுவலகத்தில் இருக்கும்  வெண்பா வேறு. வீட்டில் இருக்கும் வெண்பா வேறு. அலுவலகத்தில் வெண்பா என்றாலே அனைவரின் பார்வையில் திறமைசாலி, புத்திசாலி, அன்பானவள் சிரித்த முகம், நல்ல குணமுடையவள், ஈகை குணம் கொண்டவள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மாறாக வீட்டில் அவள் ஒரு மக்கு, திமிர் பிடித்தவள், அடங்கா பிடாரி, உமனா மூஞ்சி,  இப்படி பல பட்டங்கள். ஆனால் வெண்பா என்பவள் ஒருத்தி தான். மற்றவர்கள் அவளை பார்க்கும் பார்வைதான் மாறுபடுகிறது.

அலுவலகத்தில் ராணி. வீட்டிற்குள் வந்தவுடன் அடிமையாகி விடுவாள். இது பெண் இனத்தின் சபாக்கேடு‌. இந்த சூழலிலும் வேலை செய்து கொண்டே சைக்காலஜி பட்டம் படித்து முடித்தாள்.

வீட்டு வேலைகள் சமைப்பது, தண்ணீர் எடுப்பது, துணி மிஷினில் போடுவது, காய்ந்த துணி எடுத்து மடித்து வைப்பது, கிரைண்டர் போடுவது, பெருக்கி மாப் போடுவது etc.,  இப்படி  பெரும்பாலும் பெண் இனம் செய்யும் வரிசையில் நமது வெண்பா. அனைத்து வேலைகளையும் சரியான திட்டமிடலுடன் அவளே முடித்து விடுவாள். பிள்ளைகள் பார்த்து கொள்வது, அலுவலகம் செல்வது, கவுன்சிலிங் பகுதி நேர வேலை என 24 மணி நேரத்தை  சரியாக பயன்படுத்தி கொள்வாள்.

கணவன் யுவன் பெற்றோர்கள் பார்த்து வைத்து செய்த திருமணம்தான். அப்பாவின் அன்பில் வளர்ந்தவள்.  ஆனால் திருமணத்திற்கு பின் எதற்கேடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் கணவன். அப்பாவிற்கு தான் மகிழ்ச்சியாக இல்லை என தெரிந்தால் சங்கடப்படுவார் என் ஓரே காரணத்தால், பழகிக் கொண்டாள். அது யுவனுக்கு வசதியாக போய்விட்டது. அதனின் தொடர்ச்சிதான்  இது…….

தன்னை பற்றிய சிந்தனையில். “பெண் ஏன் அடிமையானால்”  புத்தகத்தை கையில் வைத்தபடி அமர்ந்து இருந்தவளை  கைபேசியில் ஒலிக்க, அவள் தன்னிச்சையாக ஹலோ என்றாள்.

“லில்லி  பேசறேன் மேடம் உங்க கிளினிக் கிட்ட தான் இருக்கேன். தயவு செய்து வர முடியுமா?”

“மணி என்னமா? இரவு 10.00.  இந்த நேரத்திலா?.”

“கொஞ்சம் அவசரம் மேடம். பொண்னை கூட்டிட்டு வந்து இருக்கிறேன். பிளிஸ். மேடம் கொஞ்சம் வாங்க….'”

“சரி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கீழே வரேன்”, என சொல்லி அலைபேசியை வைத்தாள்.

கோபமாக இருக்கும் கணவன் யுவனிடம், “பேஷன்ட் வந்து இருக்காங்க. கிளினிக் போய்விட்டு வந்து விடுகிறேங்க…..”

“இந்த நேரத்திலயா…..”

“ஏதோ அவசரமா..’

“நீ பார்த்து என்ன சரியாக போது. உனக்கு வீட்டையே ஒழங்கா பார்த்துக்க தெரியலா……. நீ போய். சரி சரி போ. ….”

அவ்வாறு அவன் பேசுவது ஒன்றும் புதிதல்ல. திருமணம் முடிந்த நாள் முதல் இன்று வரை அது தொடர்கிறது.  ஆரம்பத்தில் அதை சமாளிக்க கடினமாக இருந்தது. பின்னர் அது பழகி விட்டது. 

கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

லில்லி  அதற்குள் மறுபடியும் ஆழைத்தாள்‌ “மேடம் இன்னொரு முறை வருகிறேன். பாப்பா போகலாம் என்கிறாள்…”

வெண்பாவின் இதயம் படபடத்தது. “என்னம்மா இப்போ தானே கூப்பிட்ட இதோ கீழே வந்துட்டேன்.”

“இல்ல மேடம் பாப்பா போலாம் என்கிறாள்….”

வெண்பாவிற்கோ போகவில்லை என்றால் மறுபடியும் கணவனிடம் வசையடி வாங்க வேண்டி வருமே என்ற பயம் ஒருபுறம்.  “இதோ கீழே வந்துவிட்டேன்”,  என ஓடினாள்.

ஸ்கூட்டியோடு நின்ற வண்ணம் லில்லி பின்னால் அவளின் மகள் லைலா. ஒன்பதாம் வகுப்பு ‌படிக்கிறாள்.

வெண்பாவிற்கு  லைலாவை பற்றி தெரியும். சென்ற வாரமே லில்லி அலைபேசியில் அவளின் பிரச்சினைகளை பகிர்ந்து இருந்தாள். ஆனால் லைலாவிற்கு இது தெரியாது.

“நான் மேலே வரமாட்டேன்”

“அம்மி போலாம் போலாம்…. என ஸ்கூட்டியை விட்டு இறங்காமல் அழுதுகொண்டே இருந்தாள்.”

வெண்பா, “ஹைய் எப்படி இருக்கீங்க, என புன்னகையோடு அவள் அருகில் செல்ல….”

அவள் கண்களை மூடிக் கொண்டு “அம்மி பிளிஸ் பிளிஸ். வா போலாம்…. வா போலாம்”, என கண்களை மூடிக்கொண்டு சொல்லிக் கொண்டே இருந்தாள்….

வெண்பா, “லைலா நானும்  உங்க அம்மாவும் பிரண்ட்ஸ். முதல ஒன்னா வர்க் செய்தோம். ஆன்டிக்கு ஒரு ஹெல்ப் வேண்டும். அதைப் பற்றி பேசதான் அம்மா வந்து இருக்காங்க. பிளிஸ் எனக்காக உள்ளே வாம்மா. ஒரு ஃபைவ் மினிட்ஸ் நீங்கள் கிளம்பி விடலாம்”, என சொல்ல லைலாவிடம் மௌனம் உண்டானது.

“லில்லி, நீங்கள் இறங்கி வாங்க. லைலா உள்ளே வருவாங்க”, என கூறி கிளினிக்கை திறந்து உள்ளே சென்றாள் வெண்பா.

அவளை தொடர்ந்து லில்லி செல்ல தயக்கத்துடன் லைலா லில்லியின் கைகளை பற்றி கொண்டு பின் தொடர்ந்தாள்.

“வா லில்லி, உட்காரு மா”

“லைலா அம்மா பக்கத்தில்‌ உட்காருமா..”

“தயங்கி தயங்கி அமர்ந்தாள்.”

“சொல்லு லில்லி  எப்படி இருக்கீங்க”.

“நல்லாயிருக்கேன் மேடம் என‌ உதடுகள் மட்டுமே உச்சரிக்க, கண்களில் அருவியாக கண்ணீர்”.

“என்னம்மா என்னாச்சு”

“லைலா மகிழ்ச்சியாக இல்லை மேடம்.”

அவர் மில்டிரி ஆபிசர். உங்களுக்கு தெரியும். நானும் லைலாவும் தான் வீட்டில் இருக்கிறோம். அனைத்து வேலைகளையும் நான் தான் செய்ய வேண்டும். அலுவலகத்தில் வேலை ப்ளூ அதிகமாக உள்ளது. கொரானா கட்டுபாடு. ஆட்குறைப்பு வேறு நடக்கிறது. எங்கு என் வேலை பறிபோகுமா என்ற அச்சத்தோடு பயணிக்கிறேன். இது அத்தனையும் ஏன்? என் மகள்  மகிழ்ச்சியாக இருக்கதான். இது அவளுக்கு புரியவில்லை என அழ ஆரம்பித்தாள்.

“லைலா அம்மாவின் கைகளை பிடித்துகொண்டு அம்மி don’t cry…. Don’t cry என்றாள்.”

“லைலா உனக்கு என்னடா பிரச்சினை? நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை.”

அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.

தொடர் போராட்டத்திற்கு பிறகு மெதுவாக  பேச ஆரம்பித்தாள்

“மம்மி என்னை பாட்டி வீட்டில் வீட்டு விட்டு ஆபிஸ் செல்கிறார்கள்.”

“சரி…”ஆனால் அங்கு எனக்கு சரியான மதிப்பு அளிக்க மாட்டேன் என்கிறார்கள்.

“அப்படியா?”

அம்மா “அட்சஸ்ட் பண்ணிக்கோ என என்னைதான் சொல்கிறார்கள்”

“நான் ஏன் அட்சஸ்ட் ஆகனும். நான் தப்பு செய்யாத போது. அட்சஸ்ட் செய்து கொண்டே போனால் நான் எப்படி ஆண்டி இருப்பேன்”.

“கரக்ட் தானே!”

லைலா வெண்பா அவளுக்கு தான் ஆதர்வாக பேசுகிறாள் என உணர்ந்தாள்..

வெண்பா மேல் நம்பிக்கை பிறந்தது….

ஆண்டி ஆன்லைன் வகுப்பு நடக்கும் போது பெரியம்மா பையன் அண்ணன் பிரேம் டிவியை சத்தமாக வைக்கிறான்.

அவனை யாரும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள். என்னால் கிளாஸ்ஸை கவனிக்க  முடியவில்லை.

அது மட்டும் அல்ல, பாட்டி நடுவில் வந்து, நான் என்ன செய்கிறேன் என பார்த்து விட்டு செல்கிறார்கள்.

என்னை நம்ப மறுக்கிறார்கள்.

அம்மாவிடம் சொன்னால், அட்ஜஸ்ட் செய்து கொள் என்கிறார்கள்.

“I  will loose my originality, my uniqueness if I compromise”.

“நான் தவறாக இருந்தால் நான் திருத்தி கொள்கிறேன். இல்லையெனில்  why should I?”

அனைத்து விஷயங்களுக்கு காம்பிரமைஸ் ஆனால் அம்மா மாதிரி தான் ஆண்டி தன்னந்தனியாக கஷ்டப்பட வேண்டும்.

“No means no aunty”

இப்போ கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆண்டி. அதனால் எனக்கு இங்கு வர வேண்டிய அவசியமில்லை என பளிச் என்று பேசும் லைலாவை பார்த்த வெண்பா ஒரு நிமிடம் மௌனம் ஆனாள்.

இங்கு கவுன்சிலிங் யாருக்கு தேவை‌. லைலாவிற்கா, அல்ல்து தனக்கும், லில்லிக்கா?

லைலா சரியாக தானே உள்ளாள்.

யார் யாருக்கு கவுன்சிலிங் கொடுப்பது.

பெண் பிள்ளைகள் “எண்ண சுதந்திரம்” கொண்டு வளர்ந்தால் அவர்களின்  வாழ்க்கையில் அவளுக்கு நடக்கும் அநீதியை அவள் கடந்து வெற்றி அடைவாள்.

தன் பெற்றோர் தனக்கு செய்தவற்றை லில்லிக்கு அவளின் பெற்றோர் செய்த தவற்றை இருவரும் சேர்ந்து லைலாவிற்கு செய்ய கூடாது.

“தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். சரி எனும் போது ஏன் காம்பிரமெஸ் ஆக வேண்டும்.”

“கரெக்ட் செல்லம்”

நான் மம்மி கிட்ட சொல்றேன்.

“கொஞ்சம் நீங்க  உள்ள மீன் தொட்டி இருக்கு போய் பாருங்க, நான் மம்மியிடம் ஆபிஸ் பற்றி பேசிட்டு, உங்களையும் திட்ட வேண்டாம் என சொல்கிறேன்”, என்றாள்.

லைலா மீனுடன் விளையாட செல்ல…..

வெண்பா லில்லியை பார்த்து, “மாற வேண்டியது லைலா இல்லை,  லில்லி, “நாம தான்”  என  லில்லிக்கு புரியும்படி எடுத்து உரைத்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பினார்கள்.  லைலா மகிழ்ச்சியாக ஒரு சிரிப்பை வெண்பாவை பார்த்து உதிர்த்து  bye aunty  என்றாள்.

“bye ma” கூறி அவர்கள் கிளம்பியதும் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

எனோ அவள் நினைவில்  பல் எண்ண ஒட்டங்கள் இன்றைய நிலைக்கு நாம் தான் காரணம்.

நாம் ஏன் கோழையாக இருக்கிறோம் என பல கேள்விகள் மனதில்…… இதற்கடையில் எதிர்வீட்டில் புதுமைபெண் பட பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. அமைதியாக அமர்ந்து முழுமையாக கேட்க துவங்கினாள். ரேவதி கதாபாத்திரம் அவளின் கண் முன்னே!

ஓஒருதென்றல்புயலாகிவருமே
ஓஒருதெய்வம்படிதாண்டிவருமே
காலதேவனின்தர்மஎல்லைகள்மாறுகின்றதே
காலதேவனின்தர்மஎல்லைகள்மாறுகின்றதே

வீட்டிற்கு வந்தாள், வெண்பா

“தண்டம்” என்ன இவ்வளவு நேரம்? என்ற கணவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். இதுவரை அப்படி ஒரு பார்வையை அவன் பார்த்ததில்லை.

முதலில் என்னை “தண்டம்” என்று எல்லாம் சொல்லும் வேலை வேண்டாம். பிறகு விண்ணப்பத்தை நான் சரியாக தான் பூர்த்தி செய்துள்ளேன், நீங்கள் சரியாக பாருங்கள்.

“அப்புறம் இதன் பிறகு என்னை மக்கு முட்டாள் என வசைப்பாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். “

“Never again”  “நெவர் அகேன்”

ஆணின் “எண்ண கழிப்பறையாக” பயணித்தது போதும். முக்கியமாக அவளின் வாழ்வியல் முறைதான் தன் மகள் காவியாவிற்கு வழிகாட்டலாக அமையும் என்பதை நன்கு உணர்ந்தவளாய், உள்ளே சென்றாள்.

வெண்பாவா ! இது என விகித்து நின்றான் யுவன்.

https://bookday.in/pidunga-mudiyathavargal-poem-by-pangai-thamizhan/

பிடுங்க முடியாதவர்கள் கவிதை – பாங்கைத் தமிழன்

இன்னும்
பிடுங்க முடியவில்லை…

எத்தனை ஆண்டுகள்?
எத்தனை ராஜாக்கள்?
எத்தனை பிரபுக்கள்?
எத்தனை ஆட்சிகள்?

ஊஹூம்…
அசைக்கிக்கூடப்
பார்க்க முடியவில்லை!
அரசனோ
ஆட்சியோ….

நீர் ஊற்றி
நிலை நிறுத்தினரே தவிர…
பிடுங்க நினைத்தாரில்லை!

அது
இப்போது…
ஜோராகவே நடக்கிறது!

ஏதோ…
ஒன்று இரண்டு பேர்
சிறு சிறு
கிளைகளை
ஒடித்தார்கள்!

பாவம்
ஒன்றும் செய்ய
இயலவில்லை!

பிடுங்குவதைப் போல்
நடித்தவர்களும்
நடிக்கின்றவரும்
இருக்கும் வரை
எப்படி பிடுங்க முடியும்!

விஷ விதைகளை
நட்டவன்
முள் வேலிகளாக
வேள்வி என்றும்
வேதம் என்றும்
பாதுகாப்பு அரணை
பலப்படுத்தி….

பக்கத்துணையாக
பயில்வான்களை
வைத்துக்கொண்டான்!

எவ்வளவு
தொலை நோக்குப் பார்வை!
அப்பாவிகளை
அடிமைப் படுத்தி….

வழி வழி
வாரிசுகளுக்கு
வழிவிடாமல்
வாழ விடாமல்…

அடர் இருள்
காட்டிற்குள்
அநாதைகளாக்கி….

மண்டிக் கிடக்கும்
மதமெனும்
சாதியெனும்
காட்டு மரங்களை….

எந்த ஆட்சியாலும்
பிடுங்க முடியவில்லை!
முடியாதோர்
மூலையில் படுங்கள்!

பிடுங்கிப் பார்க்க
முயல்வோரை
தடுக்காமல் இருங்கள்!
சாதி மத மரங்களை
பிடுங்குவார்கள்…

Matravendum Poem By Shanthi Saravanan. மாற்றம் வேண்டும் கவிதை - சாந்தி சரவணன்

மாற்றம் வேண்டும் கவிதை – சாந்தி சரவணன்

மாற்றமில்லை மாற்றமில்லை
சமூகத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
மனிதனிடத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
அடிமைத்தனத்தில்
மாற்றமில்லை

மாற்றமில்லை மாற்றமில்லை
அடக்கி ஆளும் வர்கத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
ஜாதி பிரிவினையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பெண்னின் நிலையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பட்டினியில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பஞ்சத்தில்
மாற்றமில்லை!

முன்டாசு கவியே!
உன் புரட்சி சிந்தனைகளை ஏட்டில் மட்டுமே
நூற்றாண்டை கொண்டாடுகிறது இவ்வையகம்!
நம்பிவிடாதே!

மாற்றமே எழுச்சி
மாற்றமே மலர்ச்சி
மாற்றமே உயிர்ப்பு
நீ கண்ட நிஜ மாற்றத்தை
சமூகத்தில் சுடர்விட
சிந்தனை செழிக்க
ஓவ்வொரு பெண்ணின் கருவிலும்
கருவாய், உருவாய், உயிராய், சூடராய்
அக்கினி பிழம்பாய், தகதகவென ஜனித்து
வா பாரதி வா!

Freedom to slave Poem By Henry Louis Vivian Derozio in tamil Translated By Era Ramanan மொழிபெயர்ப்பு கவிதை - அடிமைக்கு விடுதலை - ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ | தமிழில்: இரா இரமணன்

மொழிபெயர்ப்பு கவிதை – அடிமைக்கு விடுதலை – ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ | தமிழில்: இரா இரமணன்
‘நீ இனி அடிமை இல்லை’
என்றொரு அறிவிப்பு
காதில் விழுந்தபோது
அவன் அப்படி பரவசப்பட்டான்!
சுதந்திரமானவன் என்ற
முதன்முதலாய் அறிந்தபோது
அவன் இதயம்
பெருமையால் அப்படி துடித்தது!

சட்டென்று
ஆத்மாவின் மேன்மை உணர்வுகள்
சுடர் விடத் தொடங்கியது.
இனி மண்டியிட வேண்டாம்.
சிந்தனைகள் உயரத் தொடங்கின.
தான் ஒரு மனிதன் என்று
தனக்குள்ளே உணர்ந்தான்.

மேலே நோக்க
சுவர்க்கத்தின் சுவாசக் காற்று
புதிதாய் அவனை சூழ்ந்தது.
காட்டுப் பறவைகள் பறப்பது கண்டு
அவன் முகம்
மகிழ்ச்சிப் புன்னகை பூத்தது..
காலடியில் ஓடை நோக்க
அது சுழித்தோடியது.
காற்றும் பறவையும் வெள்ளமும் போல்
‘நானும் சுதந்திரமானவன்’
என்று கூக்குரலிட்டான்.

‘ஓ விடுதலையே!
உன் பெயரில் கூட
ஏதோ பிரியம் இருக்கிறது.
அது
ஆத்மாவின் அகல் விளக்கை
அணையா சுடராய் ஏற்றுகிறது.

உனக்காய்
உறையிலிருந்து உருவும்
தேசபக்தனின் கத்திக்கு
வெற்றி சேவகம் செய்கிறது.
விடுதலை வேண்டி
உன்னத குருதி சிந்தும்
மார்புகள் வாழ்க!
சர்வாதிகாரி பிணித்த
அடிமை சங்கிலியை உடைத்தெறியும்
வலிய கரங்கள் வாழ்க!
சீரழிக்கப்பட்ட மனிதனுக்காய்
சிந்தித்தால்
அது அடிமைக்கும் சுதந்திரம்
அளித்திடுமே!

பிப்ரவரி 1827
ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ 1809ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தந்தை போர்த்துகீசியர். தாய் இந்தியர். 19ஆம் நூறாண்டின் ஐரோப்பிய ஆசிய ஆளுமைகளில் ஒருவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.காலரா நோயினால் தனது 22ஆம் வயதிலேயே காலமானார். போயம்ஸ்(1827), தி ஃபக்கீர் ஆப் ஜுங்கீரா, தி பொயடிக்கல் ஒர்க்ஸ் ஆஃப் ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். அந்த கால கவிஞர்களைப்போல சுதந்திரம்,தேச பக்தி,நவீன சிந்தனைகள் ஆகியவை இவர் எழுத்துகளில் காணப்படுகிறது. தன்னுடைய மாணவர்களையும் காப்பிய நூல்களைப் படிக்க வைத்து புதிய சிந்தனைகளை ஊக்குவித்தார். இவரது புரட்சிகரமான கொள்கைகளினால் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவரது ‘freedom to slave’ என்கிற பாடலை மொழியாக்கம் செய்துள்ளேன்.

இந்தப் பாடலில் கூறப்படும் விடுதலை மூன்று நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று; ஒரு மனிதனின் பிற்போக்கான சிந்தனைகளிலிருந்து அவனது ஆத்மா விடுதலை அடைவது; இரண்டு ஆப்பிரிக்க, அமெரிக்க மற்றும் இந்திய கண்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் விடுதலை; மூன்றாவது அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியா போன்ற நாடுகளின் விடுதலை. மேலும் இறுதி வரிகள் அடிமைப்பட்டுக் கிடப்பவர்கள் பால் சிந்தனை செலுத்துபவர்களே சுதந்திரமானவர்கள் என்பது ‘அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டின் தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைய உதவாமல் அடிமைப்படுத்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைய முடியாது’ என்கிற மார்கீசிய கண்ணோட்டத்தோடும் ‘தன்னுடைய அடிமை சங்கிலியை கழற்றி எறிவது மட்டுமே சுதந்திரமாகாது. மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதித்தும் மேன்மைப்படுத்தியும் வாழும் வாழ்வே சுதந்திரமாகும்’ என்கிற நெல்சன் மண்டேலாவின் கூற்றோடும் ஒப்பிடத்தக்கது.

உசாத் துணைகள்:
1.Indian Writing In English – ஆங்கிலத் துறை- டெல்லிப் பல்கலைக்கழகம்
2.litreary yog – https://literaryyog.com/freedom-to-the-slave-by-derozio-summary)

John Donne Death be not proud Holy Sonnet10 in tamil Translated by Thanges. ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை - தமிழில்: தங்கேஸ்

ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை – தமிழில்: தங்கேஸ்
கவிதைச் சூழல்
(ஷேக்ஸ்பியரின் சமகால கவிஞரான ஜான் டன் எழுதிய பத்து சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாக. (Death be not proud (Holy Sonnet 10) ) விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. காதல் கவிதைகளும் பெண் ஈர்ப்புக் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்த ஜான் டன் தன் பிற்கால வாழ்க்கையில் ஒரு உண்மையான மத போதகராக மாறிய பின்பு முற்றிலும் கிறிஸ்த்துவ மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல் (Sonnet ) இது . மரணமென்பது வாழ்வின் முடிவல்ல இறைவனின் சொர்க்கத்தில் எல்லையின்மையில் வெளியில் தூய ஆன்மாவின் ஆனந்தம் தொடரும் என்கிற ரீதியில் எழுதப்பட்ட பதினான்கு வரிகளை கொண்ட பாடல் இது)

John Donne
Death be not proud (Holy Sonnet 10)

கர்வம் வேண்டாம் மரணமே I
ஆனாலும் அத்தனை கர்வம்
உனக்கு வேண்டாம் மரணமே |

அறியாதவர்களோ உன்னைப் பார்த்து
அகில உலகச் சக்கரவர்த்தி
அதி பயங்கர கு௹பி என்று அடைமொழியிட் டு
நடு நடுங்குகிறார்கள்
ஆனால் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் நீ
அத்தனை ஆனந்தப்படத் தேவையில்லை

ஓர் இரகசியம் தெரியுமா உனக்கு?
மெய்யாகவே நீ கொல்லும் மனிதர்கள்
யாரும் சாவதில்லை

ஓய்வையும் உறக்கத்தையும்
ஓவியம் தீட்டுகிறேன்
அட ஆச்சரியம் உன் முகம் தோன்றுகிறது ஓவியத்தில்
அம்முகத்திலிருந்து பீறிட்டு பிரவாகமெடுக்கிறது ஆனந்தம்

ஆகச் சிறந்த மனிதர்கள் உன்னோடு பயணிக்கும் போது
அவர்களின் எலும்புகளோ
பூமிக்குள் போகின்றன
அவர்களின் ஆன்மாவோ எல்லையின்மைக்குள் பறக்கின்றது

பெருமிதத்தால் பெருத்து விடாதே மரணமே

நீ சுதந்திரமானவனா சொல் ?
அடிமை தானே நீ ?
விதிக்கும் அகாலத்திற்கும்
இரத்த வெறி கொண்ட அரசர்களுக்கும்
தற்கொலை என்ணம் கொண்ட வீணர்களுக்கும்
நீ அடிமை தானே மரணமே..?

உன் சகவாசம் என்ன?
விஷத்துடனும் போர்க்களத்துடனும் போக்கிடமற்ற நோய்களுடனும் தானே

ஓ… அதிகர்வி மரணமே !
விரல்களின் வருடல்களிலேயே
உயிர்களுக்கு தூக்கத்தைத் தருபவன் என
ஆணவத்தில் ஆர்ப்பரிக்க வேண்டாம்

பாப்பி மரங்களின் போதை நெடியும்
மந்திரவாதியின் உச்சாடனங்களும் கூட
எங்களுக்குத் தூக்கம் தருபவை தானே.

இறுதி என்பது என்ன?
இங்கே சிறு துயிலில் விழுகிறோம்
அங்கே எல்லையின்மையில் எழுகிறோம்
பிறகு எங்களுக்கேது இறப்பு?
உண்மையில் அது உனக்குத்தானே?

மூலம்: ஜான் டன்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்