Posted inPoetry
முபாரக் கவிதைகள்
எறும்புகளை துரத்திக்கொண்டிருக்கின்றன…
பூச்சிகள்,
பூச்சிகளை
துரத்திக்கொண்டிருக்கின்றன எலிகள்,
எலிகளை
துரத்திக் கொண்டிருக்கின்றன பூனைகள்,
பூனைகளை
துரத்திக்கொண்டிருக்கின்றன நாய்கள்,
நாய்களை
துரத்திக்கொண்டிருக்கிறார்கள்…
மனிதர்கள்,
வலியவர்கள் எளியவர்களை விரட்டிக்கொண்டிருக்கும்
பூமியில்,
எல்லோருக்கும்
ஒரே மழையைத்தருகிறது…வானம்!