கலையின் கவிதைகள்

கலையின் கவிதைகள்




குப்பையைக் கிளறிவிட்டு
சாணம் தெளித்த
ஈரத் தரையில் குந்தி
மண்ணை இறக்கைகளில் வாரும் கோழிகளுக்குத்
தெரிந்திருக்கிறது
சூட்டைத் தணிப்பது
எப்படியென்று
நாம்தான்
எப்போதும் கற்துகளிலே!
****************************
வாய்க்காலில் நகரும்
நத்தைகள் ஒருநாளும் கூடு நனைந்து போனதற்காக
போக்கிடமில்லையென புலம்பியழுததில்லை
உலா போய்க்கொண்டுதான் இருக்கின்றன…

நல் மண்ணில் வாழும்
கரையான் காற்று மழையில் கரைந்தாலும்
உறைந்து போக வில்லை
விரைந்து
கரையெழுப்பி வாழுகிறது …

வழிகளிருந்தும்
விழிகள்தான் செல்வதில்லை செல்லாதவர்க்கு!

-கலை