என் கனவு இந்தியா கவிதை – செ.சினேகா

என் கனவு இந்தியா கவிதை – செ.சினேகா




“சுதந்திரமாக சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க வேண்டும்…

வேலை தேடும் இளைஞர்களுக்கு
வேலை விண்மீனாகக் கண் சிமிட்டிட வேண்டும்…

காசு வாங்காத
கல்விக் கூடங்கள் வேண்டும்…

பொதுச் சொத்தை
நம் சொத்தாகப் பாதுகாக்க வேண்டும்…

சாதி சண்டை இல்லாமல்
சரித்திரம் படைக்க வேண்டும்…

குப்பை இல்லா வீதிகள்
முதியோர்
அமர்ந்து பயணிக்கும் பேருந்துகள்

ஏழைபணக்காரர்
எல்லோர்க்கும் ஒரே பள்ளி

வீதியில் தவிக்கா விவசாயிகள்
இல்லங்கள் ஏற்கும் முதியோர்கள்

முற்றுப்புள்ளியில்லா முயற்சிகள்

எல்லா உயிர்களும் என் உயிர் போல….

இது தான் என் கனவு இந்தியா….”

நிஜமாகுமா
நீங்களே சொல்லுங்கள்….

செ.சினேகா
திருப்பத்தூர் மாவட்டம்,
புதுப்பட்டு கிராமம்.
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரி,
சென்னை. இளங்கலை தமிழ்.