உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி  அரசியலும் உணர்வுகளும் – நிர்மல் தோஹா

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அரசியலும் உணர்வுகளும் – நிர்மல் தோஹா



 நிர்மல், தோஹா (Doha)

அரசியல் என்றால் என்ன என்பதற்கு “நிலைப்பாடு” என எளிதாகப் பொருள் சொல்ல முடியும். எதில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோமோ அது அரசியலாகும். உதாரணமாக “எனக்கு அரசியல் பிடிக்காது” என நாம் ஒரு நிலைப்பாடு எடுத்தால் அது கூட அரசியலே ! எனவே அரசியல் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. ஆனால் அந்த அரசியலை இடம் அறிந்து காலம் அறிந்து வெளிப்படுத்த முடியும். எப்படி எங்கு வெளிப்படுத்துகிறோம் என்பது பல நேரங்களில் அந்த அரசியலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடும்.

உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்கள் அரசியல் வெளிப்படுத்தக் கூடிய களமாக மாறுவதைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த வகையில் 2022 ஆண்டு உலகக் கால்பந்துப் போட்டியில் வெளிக்காட்டப்படும் சில அரசியல்களை தொகுத்து கட்டுரையாக்கலாமென எண்ணினேன்.

இதுதான் அரபு – இஸ்லாமிய நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பைப் போட்டி என்பதே முதல் அரசியல் வெளிப்பாட்டுக்கு காரணமாக அமைந்தது. உலகளாவிய இஸ்லாமிய வெறுப்பைக் குறித்த நிலைப்பாட்டை பலநாடுகள் வெளிப்படையாகவே தங்கள் அரசியலை காட்டினார்கள். சிலர் ஆதரித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். 1990களுக்கு முன் இருந்த அமெரிக்கா ரஷ்யா பனிப்போர் காலத்தில் இப்படித்தான் ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகள் நடக்கும் இடத்தை வைத்து அரசியல் உணர்வுகளை வெளிக்காட்டும் நிகழ்வுகள் நடக்கும். அமெரிக்காவில் நடந்தால் ரஷ்யா புறக்கணிக்கும், ரஷ்யாவில் நடந்தால் அமெரிக்க அணி புறக்கணிக்கும். ஆனால் கத்தாரில் நடக்கிறது என்பதற்காக யாரும் போட்டியை புறக்கணிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பல எதிர்மறை செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். மிகச் சிறிய குறைகள் கூட ஊதிப் பெரிதாகக் காட்டப்பட்டது. அரங்கத்தின் வெளியிலிருந்த நடைபாதையின் ஓரத்தில் ஒரு சிறு குழி இருந்தது. சரியாக செங்கல் வைத்து மூடாமல் விட்டுவிட்டார்கள் போல – இந்தச் சிறிய குழியின் புகைப்படம் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இதோ பாருங்கள் அவர்கள் உருப்படியாக போட்டிகளை நடத்த முடியாது என்கிற தொனியில் செய்திகள் புறப்பட்டன.

கடந்த 25 ஆண்டுகளாக உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அரபிய இஸ்லாமிய வெறுப்புணர்வு உலகெங்கும் பரவியுள்ளது என்பது புரியும். பெரும்பாலும் இவை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ’இவர்கள் இப்படித்தான்’ என்பது போன்ற ஒற்றைத் தன்மைக்குள், ஒரு மதத்தினர் மீது அசைக்கமுடியாத பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது. செய்தித்தாள்கள், சினிமாக்கள், டிவி, சமூக ஊடகங்கள் எனப் பல விதங்களில் இவை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதுமாக உருவாகியிருக்கும் இந்தப் போலி பிம்பக் கட்டமைப்பின் தாக்கத்தை இந்தியாவிலும் நாம் உணர்ந்தே வருகிறோம்.

அப்படியான கட்டமைப்பை தகர்க்கக் கத்தார் இந்த உலக கோப்பைப் போட்டியின் துவக்க விழாவை கவித்துவமாக பயன்படுத்தியது .

“மனிதர்கள் தேசங்களாகவும் இனங்களாகவும் சிதறிக் கிடப்பது ஏன் தெரியுமா? நாம் வேற்றுமைகளின் அழகையும் மாறுபாட்டையும் புரிந்து கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளத்தான். இந்த நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்,” என்கிற உணர்வைச் சொல்லி, “வாங்க பழகலாம்” என அழைத்தது அழகிய அரசியலாகவும் மேன்மையான உணர்வைச் சொல்லுவதாகவும் அமைந்திருந்தது.

இது துவக்க விழாவில் வெளிக்காட்டிய அரசியலாக அமைந்தது. ஆனாலும், உலகக் கால்பந்து போட்டியின் போது ஈரான் வீரர்கள் வெளிக்காட்டிய அரசியல்தான் உலகம் முழுவதும் பேசும் பொருளான முதல் அரசியல் வெளிப்பாடு. ஈரான் அரசு-பயங்கரவாத அடக்குமுறையை எதிர்த்தும், பொதுமக்கள் போராட்டங்களை ஆதரித்தும் வெளிப்படுத்திய அரசியல் இது. உலகக் கால்பந்து போட்டிகளில் நடக்கும் அனைத்து போட்டியின் துவக்கத்திலும் போட்டியிடும் இரு நாட்டினர் தேசிய கீதம் இசைக்கப்படும். மிகவும் உணர்ச்சிவயப்பட்டு வீரர்களும் பார்வையாளர்களும் பாடுவார்கள். பார்க்கவே பரவசமாக இருக்கும். இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை தங்கள் அரசியலுக்காக பயன்படுத்தினார்கள் ஈரானிய கால்பந்து வீரர்கள். வேறொன்றும் செய்யவில்லை, தேசிய கீதம் இசைக்கும்பொழுது அதைப் பாடாமல் அமைதியாக இருந்தார்கள் அவ்வளவுதான் !

மஹ்சா அமினி எனும் பெண் தன் தலை மூடாங்கை, (ஹிஜாப்) சரியாக அணியவில்லை என ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன. இனி பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம் என்கிற நடைமுறைக்கு மாற்று வர வேண்டுமென போராடினார்கள். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு, அரசு பயன்படுத்திய வன்முறையின் காரணமாக இன்னும் பலர் மரணம் அடைந்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் ஈரானிய வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்து தங்கள் அரசியலை உலகக்கோப்பை போட்டியின் பொழுது வெளிக்காட்டினார்கள்.

இப்படியான அரசியல் வெளிப்பாடுகளை குறித்து எழுதும் பொழுது, நம் ஊர்களில் நடக்கும் கோவில் திருவிழாக்கள், நம் வீட்டில் நடக்கும் திருமணம் மற்றும் பல விழாக்கள் நினைவுக்கு வருகிறது. இப்படியான விழாக்கள் மக்களை ஒன்றிணைக்கும். மக்கள் என்றால் நமக்குப் பிடிக்காதவர்கள், பிடித்தவர்கள் என அதில் அடங்கும். இப்படியான சூழல் பலதரப்பட்ட மனிதர்களை ஒரே இடத்தில் கூட்டும் பொழுது, அவர்களின் எண்ணங்கள், கருத்துக்கள், அரசியல்கள், பழைய பகைகள், உராய்வுகள் கூட வெளிப்படக் கூடிய இடமாக திருவிழாக்கள் மாறிவிடும். இப்படியான சூழல் உலகக் கால்பந்து போட்டியின் பொழுதும் அமைந்தது.

Kan11 எனும் ஊடக நிறுவனம், இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தது. அதன் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மோவ்வர்டி, உலகக் கால்பந்துப் போட்டிகளை குறித்து செய்திகள் சேகரிப்பதற்காகக் கத்தார் வந்தவர் இவர். கத்தார் நாட்டால் முறையாக அனுமதிப் பெற்று வந்தவர். அவரை இனங்கண்ட சில அரபு ரசிகர்கள் அவர் மீது வெறுப்புச் சொற்கள் கொண்டு பேசிய காணொளி உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காணொளியில் ஒரு அரபு ரசிகர், இஸ்ரேலிய ஊடகவியலாளரை நோக்கி, “பாலஸ்தீனம் தான் இருக்கிறது, இஸ்ரேல் என்பது கிடையாது. உங்களை யாரும் இங்கு வரவேற்கவில்லை, தயவுசெய்து நாட்டை விட்டு வெளியே செல்லுங்கள். இது கத்தார், இது எங்கள் நாடு,” என பேசியது வைரலானது. இது மட்டுமல்ல இன்னும் சில இஸ்ரேல் ஊடகவியலாளர்களும் இப்படியான வெறுப்புணர்வின் வெளிகாட்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இது ஒரு சிறந்த உலகக் கோப்பைப் போட்டி என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நாங்கள் மிகவும் மோசமான உணர்வோடு இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் எனத் தங்கள் வருத்தத்தை பதிவு செய்கிறார்கள் இஸ்ரேலிய ஊடகவியளார்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருப்பதால், இஸ்ரேல் – அரபு உறவு என்பது எலியும் – பூனையுமான உறவுதான். இஸ்ரேலியர்களைக் குறித்து அரபியர்களுக்கு எப்போதும் கசப்பான உணர்வு உண்டு. இதற்கு வரலாற்றுக் காரணங்கள், அரசியல், பொருளாதார காரணங்கள் உண்டு. இசை கட்டமைத்த உணர்வின் வெளிப்பாடே அரபு ரசிகர்கள் வெளிக்காட்டிய உணர்வு. அதைக் காணொளியாக பதிவு செய்து பரப்பியது ஒருவித அரசியல் வெளிப்பாடே.

மனித உரிமைப் பாகுபாடுகளை ஒழித்தல் என்பது இன்றைய உலகின் முக்கிய அரசியல். மாற்றுத்திறனாளிகள், பாலினப் பேதங்களுக்கு ஆட்படுகிறவர்கள், முதியவர்கள் போன்றவர்களை எந்தத் தருணத்திலும் தனிமைப்படுத்திவிடக் கூடாது. எல்லாக் காரியங்களிலும் Invlusive எனும் ஒன்றிணைக்கும் தன்மை இருக்க வேண்டும் என்கிற உணர்வு மேலோங்கி இருக்கும் காலம் இது.

கத்தார் நாட்டில் உலகக் கோப்பை நடக்கப் போகிறது என்கிற செய்தி வெளிவந்த முதல், அந்த நாட்டின் மீது வைக்கப்பட்ட மிக முக்கிய குற்றச்சாட்டு, கத்தார் LGBT எனும் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை மறுக்கும் நாடு. புலம் பெயர்ந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முழுமையான உரிமைகளை வழங்காத நாடு போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மனித உரிமை மீறல் செய்யும் நாட்டிலா உலகக் கோப்பை, என்பதுதான் பரவலாக பரப்பப்பட்ட அரசியலாக இருந்தது. இதைக் குறித்துக் கத்தாரும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாக அறிவிக்காமலே இருந்தது. அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், எங்களின் கலாச்சாரங்களுக்கு மதிப்பளியுங்கள் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது. போட்டி ஆரம்பித்ததும் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை குறித்த அரசியல் வெளிப்படத் துவங்கியது. அதை வெளிக்காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம், “One Love” எனும் வாசகம் பொறித்தக் கைப்பட்டை (Arm Band). இந்த ஒன் லவ் என்பது எல்லாவித பாகுபாடுகளுக்கும் எதிரான வாசகத்தைத் தாங்கியக் கைப்பட்டை என்றாலும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உரிமை கத்தாரில் மறுக்கப்படுகிறது, அதனால் இந்த ஒன் லவ் எனும் கைப்பட்டையை அணிந்துதான் எல்லா விளையாட்டுப் போட்டியிலும் விளையாடுவோம் என 7 ஐரோப்பிய அணிகளும் அறிவித்தன. “One Love” என்ற வாசகமும் அதிலிருக்கும் வானவில் கொடியும் LGBTQ உரிமைகளை வெளிக்காட்டும் சின்னம். இப்படியான அரசியல் வாசகங்கள் போட்டியில் விளையாடும் பொழுது அணிவது FIFA வின் விதி முறைக்கு எதிராக இருப்பதால், இப்படியான கைப்பட்டை அணிந்தால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள் என எச்சரித்தது FIFA. FIFAவின் இந்த விதிமுறைக்கு கட்டுப்பட்டு ஒன் லவ் கைப்பட்டையைக் கட்டித் தங்கள் அரசியலை வெளிப்படுத்தும் முயற்சியை கைவிட்டனர் ஐரோப்பிய நாட்டு அணியைச் சேர்ந்த வீரர்கள்.

என்னதான் சில வெளிப்பாடுகளுக்கு தடை விதித்தாலும், சில நேரங்களில் உள்ளுக்குள் இருக்கும் அரசியல், புது விதமாக வெளிப்பட ஆரம்பிக்கும். தங்களின் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தடை உள்ளது என்பதை உணர்ந்த ஜெர்மானிய வீரர்கள், தங்களின் எதிர்ப்பைப் புதுவிதமாக உலகுக்கு தெரிவித்தது பரபரப்பானது. ஒவ்வொரு அணிகளும் போட்டித் துவங்கும் முன், விளையாடும் பதினோரு பேர்கள் மட்டும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது அனைத்து ஜெர்மானிய வீரர்களும் தங்கள் கைகளால் வாயை மூடியவாரு எடுத்துக் கொண்டார்கள். அதாவது கத்தாரில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாக உள்ளது, தொழிலாளர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவே அதை எதிர்க்கிறோம் என்கிற தங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட இங்குத் தடை இருக்கிறது என்பதால் இப்படிச் செய்தார்கள்.

உலகக் கோப்பைப் போட்டி என்பது விளையாட்டு வீரர்களின் உணர்வுகளையும் அரசியலையும் வெளிக்காட்டும் இடம் மட்டுமல்ல, ரசிகர்களும் பார்வையாளர்களும் கூட இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஐரோப்பிய வீரர்களின் இந்த ஒன் லவ் கைப்பட்டை அணியும் சர்ச்சைக்கு எதிர் அரசியலாக பார்வையாளர்கள் பாலஸ்தீன நாட்டுக் கொடி கொண்ட கைப்பட்டையை அணிந்து வர ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி பல பார்வையாளர்கள் பாலஸ்தீன நாட்டின் கொடிகளை அரங்கில் தூக்கிப் பிடித்து தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டார்கள்.

உலகக் கால்பந்துப் போட்டி நடக்கும் பொழுது நாம் காணும் இப்படியான அரசியல் மற்றும் உணர்வு வெளிக்காட்டல் மனித இயல்பு. தவிர்க்க முடியாதது. முடிந்தவரை சட்டங்கள் போட்டு வரைமுறை நிர்ணயம் செய்யலாம். ஆனாலும் தவிர்க்க முடியாது. இது விளையாட்டுக்கான அரங்கு, இங்கு அரசியலுக்கும் சமூக உணர்வு வெளிகாட்டலுக்குமான இடம் அல்ல என சிலர் கூறினாலும், அதையும் தாண்டி அரசியலும் உணர்வுகளும் வெளிப்பட்டே தீரும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான உணர்வு வெளிக்காட்டல்கள் உலகக் கோப்பைப் போட்டிகள் மட்டுமின்றி நம் வீட்டுத் திருவிழா, திருமண மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் கூட விதவிதமாக வெளிக் காட்டப்படுவதை நாம் அறிந்திருப்போம். அவள் வந்தால் நான் விழாவுக்கு வர மாட்டேன், அவர் மேடையிலிருந்தால் நான் மேடையில் ஏற மாட்டேன், இவரையெல்லாம் கூப்பிட்டால் நாங்க வர முடியாது, இப்படிப் பலவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் இப்படியான செயல்கள் பொது நிகழ்வையே பாதிப்பதாகவும் அந்நிகழ்வே நடைபெற முடியாத வகையில் அமைந்துவிடும், ஆனால் உலகக் கால்பந்துப் போட்டிகளில் வெளிக்காட்டிய அரசியலாகட்டும் உணர்வுகளாகட்டும் எதுவும் போட்டி நடத்த இடையூறாக இருக்கவில்லை, ரசிகர்களையும் பார்வையாளர்களையும் அது பாதிக்கவுமில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக இதைச்செய் எனக் கூறவில்லை, போட்டிகள் தங்கு தடையின்றி கொண்டாட்டமாக நடந்தது. அனைத்து வகை அரசியல் உணர்வுகளையும் விஞ்சி நின்றது. “கால்பந்து” என்கிற விளையாட்டின் மீது ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இருந்த அளப்பறியா காதலே இதற்குக் காரணம் எனச் சொல்ல முடியும்.

அப்படியான காதலும் அந்த விளையாட்டின் மீதான வேட்கையும் அளவுக்கு மீறி பொங்கி வழிந்தது எனவும் சொல்லமுடியும். உதாரணமாக ஒரு அரங்கு, கிட்டதட்ட 86 ஆயிரம் பேர். இவர்களில் 99 விழுக்காடு பிரேஸில் அணி ஆதரவாளர்கள். கிட்டத்தட்ட அனைவரும் மஞ்சள் பச்சை நிற உடைகள், பிரேஸில் கொடிகள், முகப்பூச்சுக்கள், மேள தாளங்கள், தொப்பிகள் என அமர்களம். இதெல்லாம் பிரேஸில் நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல, பெரும்பாலும் இந்தியர்கள், அரபியர்கள் இன்னும் பல நாட்டினர்தான் இப்படி பிரேஸில் நாட்டின் கொடி ஏந்தி உற்சாகப்படுத்தினார்கள். ஒவ்வொருமுறை கோல் போஸ்டை நோக்கி உதைக்கப்படும் பந்திற்காகத் தன்னை மறந்து கத்துகிறார்கள். பிரேஸில் அணி வீரன் தள்ளிவிடப்பட்டால் கோவப்பட்டுத் திட்டிக் கொள்கிறார்கள்.

தேச எல்லைகளைக் கடந்த ஆதரவுக்கு என்ன காரணம்? – இவற்றிற்க்கு ஒரே பதிலாக இருப்பது – “புட்பால்” மட்டும்தான் !

இது போல அர்ஜெண்டினாவிற்கு, கத்தாரில் வாழும் இந்தியர்களின் உற்சாக வரவேற்பும், கட்டில் அடங்காத ஆதரவும் கால்பந்து விளையாட்டை மனித குலத்தின் மாபெரும் வேட்கையாகவேப் பார்க்க வைத்துவிட்டது.

ஸ்பெயின் நாட்டில் பிறந்து வளர்ந்த மொரோக்கா அணி வீரர்கள், ஜெர்மனி, சுவிஸ், ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து நாட்டு அணியில் இடம் பெற்ற ஆப்பிரிக்க வீரர்கள், எனத் தேச எல்லைகளை எல்லாம் கடந்து, கால்பந்துக்கென புதிய வகையான அணி சேர்தலை சாத்தியப் படுத்தியிருக்கிறது. இதுவே எதிர்கால மனித சமூகத்திற்கான அரசியல் வெளிப்பாடு எனக் கொண்டாட அழைக்கிறது. இன, நிறப் பாகுபாடுகளை கடக்கும் பயணம், மிகச் சரியாகச் சென்றுக் கொண்டிருக்கிறது என ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படி மனிதப் பாகுபாடுகளை களைந்து சமத்துவ உணர்வை நோக்கிய நீண்டப் பயணத்தில் கால்பந்து போட்டியும் ஒரு அங்கமாக ஆகியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதைப் புரிந்து கொள்வதும் அவசியம்.

கத்தாரும் FIFAவும் போட்டிகளைத் தங்குத் தடையின்றி, அதே வேளையில் பலவித உணர்வு அரசியல் வெளிக்காட்டலை மேலான்மை செய்து, சரியான முறையில் சமாளித்து, உணர்வுகளுக்கு ஏற்ற செயல்முறைகளைச் செய்திருந்தது. அது மட்டுமல்ல, இந்த உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியின் சமூக அரசியல் முழக்கமாக No Discrimnation – பாகுபாடு ஒழித்தல் என்பதையே வைத்திருக்கிறார்கள். அனைத்துப் போட்டியின் துவக்கத்திலும் No Discrimination என்கிற வாசகம் தாங்கியப் பதாகை அணிகளின் அணிவகுப்பில் இடம்பெறுகிறது, மேலும் புகழ் பெற்ற வீரர்கள் No Discrimination என்கிற முழக்கத்தைச் சொல்லும் காணொளிகளும் போட்டித் துவங்கும் முன் அரங்கில் இருக்கும் மின் திரையில் ஒளிபரப்பப்படுகிறது.

அனைத்து வகையான பாகுபாடுகளைக் களைய வேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார அத்துமீறல் பல மக்களைப் பாதிக்கிறது, அது அவர்களுக்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது, மனிதத் திறமைகளை வீணாக்குகிறது, சமூகப் பதட்டங்கள், ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்துகிறது எனப் பாகுபாடு ஒழிக்கும் முழக்கங்களை தனது அரசியலாக வெளிக்காட்டுகிறது, உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் FIFA.

அரசியல் வெளிப்பாடுகளும், உணர்வு வெளிப்பாடுகளும் மனிதர்களின் தவிர்க்க முடியாத தனித்துவமான குணம். இது மக்களை அணியாக ஒன்றிணைக்கிறது. இறுதிப் போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிக் அரசியலும் உணர்வுகளும் பஞ்சமில்லாமல் பொங்கி வழிந்ததைக் காண முடிந்தது.

அர்ஜென்டினா அணி வீரரான மெஸிக்கு அரேபிய முறைப்படி அளித்த முதல் மரியாதை அனைவரையும் வியக்க வைத்தது. நம்மூரில் பொன்னாடை போர்த்துதல், பூரணக் கும்ப மரியாதை அளித்தல், தலப்பாகைக் கட்டிவிடுதல் போன்றவை மரியாதையும் மதிப்பையும் வெளிக்காட்டி இன்னொருவரை கவுரவிக்கப் பயன்படுத்தப்படுவதைப் போல, இங்கு, “பிஸ்த்” எனும் அங்கவஸ்திரம் அணிவித்தல் !

இந்த மேலாடை அரசாளுகிறவர்கள், மத குருமார்கள், அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் அணிந்திருப்பார்கள். மேலும் திருமண கொண்டாட்டக் காலத்திலும் அணிந்திருப்பார்கள். கத்தாரின் எமிர், மெஸிக்கு இதைப் பரிசளிப்பு விழாவில் அணிவித்து கவுரப்படுத்தினார்.

மெஸ்ஸியும் அதைத் தனக்கே உரிய அடக்கத்தோடும், மகிழ்வோடும் ஏற்றுக் கொண்டு பதில் மரியாதைச் செய்தது பார்க்க அருமையாக இருந்தது.

பொதுவாக அதிகாரத் தலைமை வகிப்பவர்கள், பிரதமர்கள், இன்றும் மன்னர்களாக இருந்து ஆட்சி செய்கிறவர்களை மற்றவர்கள் சந்திக்கும் பொழுது சில முறைகள் உண்டு. அவர்களுக்கு மிக அருகில் செல்லக் கூடாது, இப்படியான உடையணிய வேண்டும், அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது, நமது பின்புறத்தைக் காட்டக் கூடாது எனப் பட்டியல் நீளும். இங்கிலாந்து ராணியை சந்திக்கிறவர்களுக்குச் சிறப்பு பயிற்சி கூட உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கத்தார் நாட்டின் மன்னரும் இப்படியானவராகத்தான் இருப்பார் என்கிற எண்ணத்தை சந்தேகிக்க வைப்பதாக இருந்தது இறுதிப் போட்டி வெற்றி விழா நிகழ்வு.

பரிசளிக்கும் பொழுது, போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் ஆரத்தழுவி நீங்கள் நினைக்கிற ஆள் நான் இல்லை என்பதைச் சொல்லுவதாக இருந்தது.

துவக்க விழாவில் “வாங்க பழகலாம்” என்கிற முழக்கத்தை முன் வைத்ததை இன்னும் ஒருபடி எடுத்துச் சென்றது போல அமைந்திருந்தது கத்தார் மன்னரின் உணர்வுப்பூர்வமான தழுவல்கள்.

(கட்டுரை ஆசிரியர் குறிப்பு: ஏரலைச் சேர்ந்த நிர்மல் கத்தார் நாட்டிலிருக்கும் தோஹா நகரில் சுமார் இருபது வருடங்களாக வசித்து வருகிறார். அங்கு ஒரு பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் `காணாமல் போன தேசங்கள்”, `நிலமும் பொழுதும்’, `குன்றா வளம்’, `சகாக்கள்” ஆகிய நூல்களின் ஆசிரியர்) 

Essential requirements for internet classroom 70th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70 – சுகந்தி நாடார்




                                                                                                  கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்

கல்வி என்பது வரலாற்றில் காலத்திற்கு ஏற்பவும் மனிதனின் பொருளாதாரத் தேவைக்காகவும், புத்தாகச் சிந்தனைகளை செயல்படுத்தத் தேவையான மனித வளத்தைத் தயாரிக்கவும் மாறிக் கொண்டே வருகிறது. குருகுலப் பயிற்சியிலிருந்து தொழிற்சாலைகளை இயக்கத் தேவையான திறன்களைக் கொடுக்கக் கூடிய கல்வி என்று மாறிய கல்வி, சட்டம் மருத்துவம் வணிகம் என்ற மனிதத் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது இப்பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கல்வி முறை மாறவேண்டும் என்று நம் அனைவருக்கும் தெரியும். தேர்வுகளின் அடிப்படையில் நடக்கும் கற்றலும் படித்து முடிந்ததும் பணிக்குச் செல்வதும் 18- 19ம் நூற்றாண்டுகளின் தேவையாக இருந்தது. 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து, இப்போதுவரை நமது வாழ்க்கை முறை அதிவேகமாக மாறிவிட்டது.

ஆனால் அந்த மாற்றத்திற்கும் நமதுக் கல்விக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. 19ம் நூற்றாண்டுக் கல்விக்கு அன்றையத் தொழிற் சாலைகளின் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டிய வேலை மட்டுமே இருந்தது. ஆனால் இன்றையக் கல்வி எதிர்கால சந்ததியையும் அவர்களின் செயல்பாடுகளையும் மனதில் கொண்டு அமைய வேண்டியிருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தால் நமக்குக் கிடைக்கும் வளங்கள் நமக்குப் பற்றாக்குறையாக இருக்கிறது. இந்தப் பற்றாக்குறை எதிர்காலத்தில் குறையுமா அதிகரிக்குமா என்பது நாம் செய்யப் போகும் வாழ்க்கை முறை மாற்றத்தில் இருக்கின்றது.

ஒருவரின் வாழ்க்கை முறை மாற வேண்டுமென்றால் அங்கு கண்டிப்பாக ஒரு ஆசிரியரின் பணி இருக்கும். நம் எதிர்காலத் தேவை, ஒரு தனிமனித வாழ்க்கை முறையின் மாற்றம் மட்டுமல்ல ஒரு சமுதாயத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம். அத்தகைய மாற்றத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு கருவி கல்வி. எதிர்காலப் பற்றாக்குறைக்கு தயார் செய்யக் கூடிய கல்வி முறை ஒரு அவசியத்தேவை.

நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றுத் தெரிந்தால் தான் நம் கல்வியின் பரிணாமம் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை நமக்கு வரும். இன்றைய வாழ்க்கை முறையை வைத்துப் பார்க்கும் போது மனித குலம் பல்வேறு பற்றாக்குறைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஏற்கனவே இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வும், தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வும் எதிர்காலக் கல்வியின் பரிணாமத்தை எவ்வாறு நிர்ணயிக்கின்றது என்று பார்க்கலாம். ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு இன்னும் பெரிதாக விரியப்போகின்றது. அதன் முதல் அறிகுறியாக 2022ல் அமெரிக்காவில் 3G அலைபேசிகள் வேலை செய்யாதாம்.
ஏன்?

இரண்டு காரணங்கள்
முதலாவது 2022லிருந்து 2030க்குள் பல நகரங்கள் திறன் வாய்ந்த நகரங்களாக மாறிவிடும். அங்கே சாலை போக்குவரத்து முதல் நம் வீட்டுப் பொருளாதாரம் வரை நம்முடைய ஒவ்வொரு அசைவும் மின் எண்ணியியல்களாக மாறி வானில் வலம்வரும். நாம் இப்போதே ஒரளவு அப்படிப்பட்ட வாழ்க்கைக்குப் பழகி விட்டோம். ஆனால் அதை விட வேகமாகவும் அதிகமாகவும் இன்னும் எண்ணியியல் தரவுகள் வான் வழி பறக்கப்போகின்றன. அப்படி செல்லும் தகவல் தரவுகள் எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் இரு கணினிக் கருவிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கணினிக் கருவிகளுடன் தொடர்பிலேயே இருக்கும். கணினி தான் நம்முடைய அன்றாட வாழ்வு எனும் போது எவ்வளவு தரவுகள் ஒவ்வோரு நாட்டிலும் உருவாகும் என்று யோசித்துப் பாருங்கள். இந்தத் தரவுகள் வேகமாகச் செல்ல இப்போது பயன்பாட்டிலிருக்கும் 3G போதாது. அதனால் 5Gன் வேகத்திற்கு நிறுவனங்கள் மாறுகின்றன.

இரண்டாவது காரணம் அலைவரிசைகளின் பற்றாக்குறை. அலை வரிசை என்றால் என்ன?
ஒலியோ ஒளியோ ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்லும் போது உருவாகும் அலைகளின் எண்ணிக்கை தான் அலை வரிசை. மனிதன் முதன் முதலாக அலைவரிசையைப் பயன்படுத்தி பொழுது போகிற்காக உருவாக்கியத் தொழில்நுட்பம் வானொலி என்று நினைக்கின்றேன்.
வானொலித் தொழில்நுட்பத்தின் அடிப்படை20 kHz to around 300 Ghz வேகத்தில் செல்லும் மின்காந்த வான் அலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஒலி மின்காந்த அலைகளாக மாற்றபட்டு ஓரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கடத்தபடுகின்றன தொலைக்காட்சி எனும்போது ஒரு புகைப்படக்கருவியும், ஒரு ஒலி வாங்கியும் இணைந்து படத்தையும் ஒலியையும் மின்காந்த அலைகளாக மாற்றபட்டு நம்மால் தொலைகாட்சி வழியாக அனுபவிக்கப்படுகின்றது.

அலைபேசிகளின் அறிமுகம் 1979 -80 களில் நம்மின் புழக்கத்திற்கு வந்தது அப்போது அவை மின்காந்த அலைகளின் வடிவில் விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதனால் ஒலிகளே அலைபேசிகளுக்கு இடையில் பயணம் செய்தன. அடுத்து அலைபேசி வழியே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தது. இந்த அலைபேசிகள், அலைபேசிகளின் முதல் தலைமுறை என்ற பொருளில் 1G என்று அழைக்கபடுகின்றன. இவை தரவுகளை பரிமாறிக் கொள்ளத் தேவையான வேகம் ஏறத்தாழ 3 kb. இந்த அலைபேசிகள் குறைந்த அளவு bandwidth தேவைப்பட்டது. குறைவானத் தரவுகளே அனுப்பப்பட்டன. நம் தமிழ் நாட்டில் பெரும்பான்மையோர் இந்த மாதிரி அலைபேசிகளை பயன்படுத்துவதை நான் பார்த்து இருக்கின்றேன், இவை 800 Mhz அலை வரிசையில் வேலை செய்தன.

அடுத்து வந்தது 2G. இந்த அலைபேசிகள் 900MHZ, 1800MHz அலைவரிசைகளில் 50 kb வேகத்தில் செயல்படுகின்றன. இவை குறுஞ்செய்திகள் பல்லூடகங்கள் அனுப்ப உதவியாக இருந்தன. இன்னோரு முக்கியமான விஷயம் முதன் முதலாக தரவுகள் அலை வடிவத்திலிருந்து கணினியின் இரும எண்களாக இந்த அலைபேசிகள் வழி மாற்றப்பட்டு தகவல்கள் வான் வழி பறந்தன.
Iphone, Apple, Communication, Mobile, Modernஅடுத்து வந்தது 3G. Apple நிறுவனத்தின் முதல் திறன்பேசி கண்டுபிடிக்கப்பட்டு குறிஞ்செய்திகள் ஒலி மட்டுமின்றி இணைய உலாவல், மின்னஞ்சல் திரைப்படம் மின்னூல் என்று பல வடிவங்களில் தரவுகள் நம்மை வந்து அடைந்தன. நம்மிடமிருந்து மற்றவருக்கும் சென்றன. இன்றைய தரவு சாம்ராஜியங்களின் பலம் ஒரு பணி சார்ந்த தொழில்நுட்பத்திலிருந்து, தரவுகளை மேலாண்மை செய்யும் நிறுவனங்களாக மாற ஆரம்பித்தன. இணையப்பக்கங்கள் எல்லாம் குறுஞ்செயலிகளாக வடிவமைக்கப்பட்டன. இதனால் வான் வழிப்பயணம் செய்யும் தரவுகளின் அளவு அதிகரித்ததோடு, தரவிற்கான செலவும் அதிகரித்தது. நுகர்வோர் கலாச்சாரம் மெள்ள மெள்ள முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இதனால் பல நிறுவனங்கள் குறைந்தவிலையில் தங்கள் சேவைகளை விற்க ஆரம்பித்ததோடு, தரவுகளைப் பரிமாறும் வேகத்தையும் அளவையும் அதிகரித்தன.200 kps வேகத்தில் 2100HZ வேகத்தில் செயல்படுகின்றன. இப்போது பயன்பாட்டில் இருக்கும் 4G 850 MHz, 1800 MHz அலை வரிசைகளில்ஒரு வினாடிக்கு 100 Mb முதல் 1 Gb வரை வேகமாகச் செயல்படுகிறது. இதனால் கொளவுகணிமை, இணைய வழிக் கலந்துரையாடல்கள் இணையத் திரைப்படங்கள் என்று கணினித் தொழில்நுட்பம் தன்னை மாற்றிக்கொண்டது.
YouTube, Netflix, and Prime Video reduce streaming quality in Europe due to coronavirus - Technology Shoutதிரையரங்குகளும் வானொலிப்பெட்டிகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் போய் எல்லாமே திறன்பேசி என்று ஆகிவிட்டது. நுகர்வோர் கலாச்சாரம் உச்சக்கட்டத்திற்கு சென்று உள்ளது கணினியில் எந்த ஒரு தொழில்நுட்பத்தை, அல்லது சேவையை நாம் அளித்தாலும் திறன்பேசி வழி அளிக்க வேண்டியப் பொருண்மையாகத் தயாரிக்க வேண்டியுள்ளது. இன்று Netflix, Amazon Prime,Youtube என்று காணொளிகளாக வரும் ஒவ்வோரு பொழுது போக்கு அம்சமும் இன்று இணையத்தை, ஆண்டு கொண்டு இருக்கின்றன. இப்போது 3G அலைவரிசை சார்ந்த தொழில்நுட்பத்தை நீக்கிவிட்டு முழுக்க முழுக்க 5G அலைபேசி நிறுவங்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன.
3G rule' › Friedrich-Alexander-Universität Erlangen-Nürnbergநம் போக்குவரத்துப் பிரச்சனையை சமாளிப்பதற்காக, சாலைகளை விரிவு படுத்துவது போல் இந்த தரவுப் போக்குவரத்தின் Band widthம் அதிகரிக்கப் போகின்றது. ஆனால் ஏன் 3G திறன்பேசித் தொழில்நுட்பத்தை நீக்க வேண்டும்? இரு அலைவரிசைகளும் ஒன்றாக இணைந்து பயணிக்க இயலாதா என்றால் முடியாது என்கின்றனர் அலைபேசித் தொடர்பு நிறுவனத்தார்.

வேகமாகவும் பாதுகாப்பானதாகவும் விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படக்கூடிய இந்த தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் உள்ள மூன்று முக்கிய அலைபேசி நிறுவங்கள் கூறூவதாவது அரசு அலைபேசிகளுக்கென வகுத்து வைத்த விதிகளின் படி திறன்பேசிகளுக்கு என்று அலைவரிசை பங்குகள் முடிவடைந்து விட்டதாகவும் அதனால் அடுத்து வரும் தரவுப் பெருக்கத்தை எதிர் நோக்கி 3G திறன்பேசிகள் பயன்படுத்திக் கொண்டிருந்த அலைவரிசைகளை எதிர்காலத்திற்குப் பயன்படுத்துவதற்காக தற்போது எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பமும் அதற்கான கருவிகளும் முடக்கப்படுகின்றன.

முந்தைய தொடரை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 65 -(எண்ணியியல் செலவாணியின் நிலையற்ற தன்மையும் அதன் பதிவேட்டு முறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 (வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்)  – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69 – சுகந்தி நாடார்



கல்வியின் எதிர்காலம் கணினியா?

ஒரு புதியக் கருத்து நமக்குச் சொல்லப்படுகின்றது என்றால், அது நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு கருத்தாக இருந்தாலோ அல்லது நம் அனுபவத்தில் உணர்ந்து இருந்தாலோ தான் நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதே கருத்து நமக்கு ஏதோ ஒரு வகையில் முன்பே அறிமுகமாகி இருக்கவில்லை என்னும் போது, அந்தக் கருத்தை சட்டென்று புரிந்து கொள்வது ஒருவருக்கு இயலாத காரியம்.

அது போலத் நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடி, நம் எதிர்காலம் மாறிக் கொண்டு வருகிறது மரம் என்று சொல்லும்போது நம்மால் உடனே புரிந்து கொள்ளும் அளவு, நம் எதிர்காலக் கல்வியின் நிலை கணினிகளால் நிர்னயிக்கப்படும் வரையறை செய்யும் போது அது ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒரு ஆசிரியரின் அனுபவத்தை ஒரு கணினியால் எப்படிப் பிரதிபலிக்க முடியும்? நம் முன் இருக்கும் மாணவர்களின் உணர்வுகளையும் முக மாற்றங்களையும் எவ்வாறு ஒரு கணினி கண்டு கொள்ளும்? மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி எவ்வாறு கற்பிக்கும்? சிறு குழந்தைகள் கணினி மூலம் கற்றால் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? என்று பல பதில் தெரியாத கேள்விகள் ஒவ்வோரு ஆசிரியருக்குள்ளும் எழும்பி நம்மைக் குழப்பமைடையச் செய்கிறது.Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு கருத்தை நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்துடன் இணைத்துப் பார்க்கும் போது ஓரளவு சொல்லப்படும் கருத்தின் பொருண்மையைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குக் கிடைக்கின்றது. எதிர்காலம் கணினிகளால் ஆளப்படும் என்று சொல்லும் போது, அது ஒரு புரியாதக் கருத்தாக இருந்தாலும் எதிர்காலத்தில் முக்கியமான ஒரு தொழில்நுட்பங்களாக செயற்கை அறிவுத் திறன், தானியங்கி வாகனங்கள், புதிப்பிக்கப்படகூடிய எரிசக்திகள், பாளச்சங்கிலித் தொழில்நுட்பம், சாமர்த்திய ஆடை அணிகலன்கள் என்று தொழில்நுட்பங்களை நம் வாழ்வாதரத்தின் அடிப்படையில் சொல்லும் போது ஓரளவு தெளிவான பொருண்மையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஏன் என்றால் இவற்றில் ஏறக்குறைய எல்லா வழிகளிலும் நாம் தொழில்நுட்பத்தை அனுபவித்துப் பார்த்து இருக்கின்றோம்.Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?மேற்ச்சொன்ன தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் அடிப்படை தரவுகளும் இத்தரவுகளை தந்திரமாகவும் திறமையாகவும் கையாளக் கூடிய கணித கணக்கீட்டு முறைகள் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதும் ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் நிச்சயமாக இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் உறுதி இட்டுக் கூற முடியாது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இன்று முன்னணியில் இருக்கும் சமூக வலைதளங்கள் மூலமாக நமக்கு எந்த நேரமும் ஒவ்வோரு வினாடியும் விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்ற காரணத்தால் நமக்கு அப்படித் தோன்றுகின்றதா?

இல்லை உண்மையிலேயே கணினி தான் நம் எதிர்காலம்? நமது வாழ்வாதாரம் வேலை உடல் மனநலம் பொருளாதாரம் பாதுகாப்பு இயற்கை வளங்கள் பேராபத்துகள் அனைத்துமே கணினியை சார்ந்தோ அல்லது கணினியின் கட்டளையாலோ தான் நடக்குமா? முக்கியமாகக் கல்வி என்று எடுத்துக் கொண்டால் எத்தனையோ கேள்விகள் குழப்பங்கள்.

இன்று நாம் பலவித பாடப்பொருண்மைகளாகப் பிரித்துப்படிக்கும் அனைத்துமே தரவுகளால் நிர்ணையிக்கப்பட்ட பாடங்களாக அமைந்து விடுமா? எந்த ஒருப் பாடப்பொருண்மையிலும் தொழில்துறை விற்பனர்கள் என்வரை அடையாளம் காணவே முடியாதா? நாம் கண்டு பேசி இருக்காத ஒருவரின் சமூக வலைதளங்களின் பதிவுகள் அவரை விற்பனராகக் காட்டினால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா?Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?

நமது கருத்துக்கள் மிக எளிதாகப் பரவ சமூக வலைதளங்கள் நிச்சயமாக உதவுகின்றன இன்றைய சமூக வலைதளங்களின் முக்கிய வேலை அவர்களது சேவையை நாம் 24 மணிநேரமும் பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் அதனால் நம்மைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலும் நம் கவனத்தை எந்நேரமும் அவர்கள் கொடுக்கும் விஷயங்களிலுமே நம்மை வைத்து இருக்க உதவுகின்றனர். நாம் இவர்களது சேவையை எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதை வைத்து, அவர்களின் கணினிக் கணக்கீடுகள் நம் தேவையை ஊகித்து அதற்குத் தகுந்த செய்திகளை நமக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் பற்றியத் தகவலை நாம் விரும்பினாலது போன்ற விஷயங்களைத் தான் முகநூல் நிறுவனம் காட்டும். அதே நேரத்தில் எனது பெயர் பற்றி பலநேரங்களில் சமூக வலைதளத்தில் விவாதம் நடக்குமேயானால், அது போன்ற, மக்களைப் பிரித்தாளக்கூடிய விஷயங்களையே முகநூல் காட்டும்.
Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் செய்திகளில் முகநூல் முன்ணனி வகிக்கிறது என்றும், துவேஷதத்தைத் தூண்டும் செய்திகளால் இந்நிறுவனம் இலாபம் அடைந்து வருகிறது என்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் பல ஆவணங்களின் சாட்சிகளுடன் அந்நிறுவனத்தின் மேல் குற்றம் சுமத்தி இருக்கின்றார். மக்கள் உணச்சி வயப்படக்கூடிய செய்திகளின் மூலம் மக்களை தங்கள் தளத்திற்குச் சுண்டி இழுத்துக் கொண்டுகிறது இச்சமூக வலைதளம். இவ் வலைதளத்தின் இன்னோரு பகுதியான Instagram வழி பெண் குழந்தைகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்ற விவரம் தெரிந்த போதும் இந்நிறுவனம் அதைப்பற்றி ஒரு சமூக அக்கறையின்றி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் அமெரிக்கப் பத்திரிக்கையான Wall street Journal அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பயனாளிகள் தங்கள் குழுக்கள் மூலமாக பொருள் ஈட்டும் வகைக்கான வழிகளைச் செய்து வருகின்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

நவம்பர் மாதம் 9ம் தேதி இந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஒருவர் தங்கள் தளத்தை 10000 முறை பார்வையிட்டால் அதில் குறைந்தது 15 முறையாவது அடாவடித்தனமான செய்திகளும், ஒருவரைத் துன்புறுத்தும் செய்திகளும் வெளியாகி உள்ளது என்று கூறியுள்ளது. Instagramல் குறைந்தது 5 முறையாவது இப்படிப்பட்டச் செய்திகள் வந்துள்ளன என்று இந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்து உள்ளது. ஏற்கெனவே புலனத்தில் நம்மைப் பந்தாடும் பொய்ச்செய்திகளைபற்றிய அனுபவமும் நமக்கு இருக்கின்றது.

நம் தேடுபொறிகளோ நமது உலாவிவழி நமது இருப்பிடத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளம்பரங்களை நாம் தேடும் இணையப்பக்கத்தின் முகப்பில் போடுகின்றன. நமது இருப்பிடத் தகவலை நாம் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நமது கணினியின் இணைய நெறிமுறை முகவரி கொன்டு அதற்குத் தகுந்த விவரங்களைக் கொடுக்கின்றது. இதனால் இப்பக்கங்கள் ஒரு விளம்பரப் பலகையைப் போலத் தோன்றுகின்றன. நாம் தேடுபொறிகள் கொடுக்கும் விஷயத்தை கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்வதால் விளம்பரத்திற்கும் உண்மையான விஷயத்திற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சென்ற வாரம் எங்களது பயணம் பற்றி சந்தேகங்கள் கேட்க ஒரு விமான நிறுவனத்தின் நுகர்வோர் உதவி எண்ணை தேடுபொறியில் தேடினோம். கிடைத்த எண்ணை அழைத்து அரை மணிநேரம் பேசிய பின், அவர் பணம் வசூலிக்க முற்படும் போதுதான் இது சரியான எண் தானா என்ற சந்தேகமே தோன்றியது.

அந்த அளவிற்கு நம்பகமான வகையில் செய்திகளும் மற்ற விவரங்களும் நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம்மைத் தாக்கவரும் செய்திகள் உண்மையானவையா? அல்லது பொய்யானவையா? அல்லது கற்பனையில் ஜோடிக்கப்பட்டதா என்று நாம் புரிந்து கொள்ளவே ஒரு பட்டப்படிப்புப் படிக்க வேண்டும் போல.

நம்மை நோக்கி வரும் தகவல்கள் அனைத்தும் பயன்படுத்தக் கூடிய விஷயத்தைத் தருகின்றதோ இல்லையோ நம் வாழ்க்கை முறையில் சிறிது விஷத்தை விட்டுசெல்கிறது என்பதே உண்மை. நம் வாழ்வில் மட்டுமல்ல நம் வாழ்வாதாரத்திலும் பொய்ச்செய்திகளாளும் புரளிகளாலும் விஷம் சேர்க்கப்படுகின்றது என்று அறியாவண்ணம் கவனக்குறைவையும் கவனச்சிதறல்களையும் நம்முடைய அன்றாட செயலின் அங்கமாகி உள்ளது, கவனக்குறைவும் கவனச் சிதறல்களும் நம்மை இந்த நிறுவனங்களுக்கு அடிமையாக்கி வைத்து இருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

இந்த சமூக வலைதளங்கள் மக்களுக்கு அதிகமான தகவல்களைக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வழிவகுப்பது போன்று இருந்தாலும் , முழுக்க முழுக்க இவை பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டவை. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் மூளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கின்றோம்.A picture containing text Description automatically generatedஒரு தொலைக் காட்ச்சியிலோ அல்லது வானோலியிலோ ஏன் திரைப்படத்திலோ நாம் நமது நேரத்தைச் செலவிட்டாலும் நம்முடைய வாழ்க்கை நடைமுறைக்கும் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் வேறுபடுத்திப் பார்க்க நம்மால் முடிந்தது. ஆனால் இந்தக் கணினியுகத்தில் அப்படி யோசிக்க விடாமல் சமூக வலைதளங்கள் விளம்பரங்களைத் தகவல்களாக நம் முன்னே காட்டிக்கொண்டே இருக்கின்றன. காதுக்குள் சொய் சொய்ங் என்று சுற்றி வரும் தேனீக் கூட்டத்தைப் போல் தகவல் தொழில்நுட்பம் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கின்றது.

வரலாறு என்பது கூட கணினித் தரவுகளின் அடிப்படையில் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய காலம் வரும். இன்று இலக்கியங்களும் காலம் காலம் தொட்டு வரும் பழக்கங்களும் பல நாடுகளில் உலகமயமாகுதல் உலக வர்த்தகம் காரணமாக சற்றே உருமாறி மேற்கத்தியக் கலாச்சாரமும் , கிழக்குக் கலாச்சாரமும் கலந்த ஒரு வாழ்க்கை முறை உலகெங்கிலும் இயற்கையாகிவிட்டது. ஒவ்வோரு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து இன்று நம்முடைய வாழ்வில் இரண்டாம்பட்ச அல்லது மூன்றாம்பட்ச இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டன.

இதே நிலையில் போனால் கணினிவழி வரும் செய்திகளை நம்பியே பாடங்களும் அதன் வழிமுறைகளும் உருவாக்கப்படும் நிலை கூட வரலாம். முழுக்க முழுக்க கணினி வழிபடிப்பித்தல் மட்டுமே நடக்கக் கூடும். Moodle canvas போன்ற கல்வி மேலாண்மைத் தளங்கள் இணையவழித் தொழில்நுட்பங்களைக் கொண்டு பலவிதமானத் தேர்வுகளை நடத்த வழி வகை செய்துள்ளன. வீத்தேர்வுகளால் ஆசிரியரும் மாணவரும் நேரில் சந்திக்க வேண்டியத் தேவையே இல்லாமல் போகின்றது.

இன்று இணையப்பக்கங்களில் நுகர்வோருக்கு உதவியாக பல கணினிகளே அடிப்படைக் கேள்விகள் பலவற்றிக்கு பதில் சொல்லும்படி அமைக்கப்படுள்ளன. அச்சுக்காகிதங்களால் உருவாக்கப்பட்ட பாடநூல்கள் முதல் பலவகைக் கலைகள் இன்று கணினி மயமாக்கபப்ட்டுவிட்டன. பள்ளியில் பாடங்கள் மட்டுமன்றி ஒருவர் தன் வாழ்க்கையில் எதைக் கற்றுக் கொள்ள விழைந்தாலும் ஆதை இணையம் வழி செய்கின்றோம்.

ஆக இயந்திர மனிதர்களே ஆசிரியர்களாகக் கூட இருக்கலாம். மனிதர்களோடு இணைந்து இன்று இயந்திர மனிதர்கள் வேலை செய்வது போய் அவர்களே ஒரு குடும்பமாக ஒரு சமுதாயமாக உருவாகலாம். இவை எல்லாம் ஒரு கற்பனையின் வடிவங்களாக இருந்தாலும் கணினியையே நம்பி இருக்கக்கூடிய தலைமுறைகள் வளர வளர இயந்திரங்கள் ஆக்கிரமித்த ஒரு உலகம் அமையலாம். உயிரற்ற கணினியின் நிழலில் மனிதர்கள் வாழ வேண்டிய காலமும் வருமோ?
Essential requirements for internet classroom 69th Series - Suganthi Nadar. Book Day. The future of education is computer ? கல்வியின் எதிர்காலம் கணினியா ?இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவில் தொழிலாளர் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் பலநாடுகளிலிருந்து மக்கள் குடியேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டது. ஆனால் இந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவைச் சார்ந்துள்ள பல நாடுகள் தங்களுடைய பிரஜைகளை தங்கள் நாட்டிலேயே வேலை பார்த்துக் கொள்ள பல வசதிகள் செய்துள்ளன. தொழிலாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு பதிலாக அமெரிக்கத் தொழிற்சாலைகளை தங்கள் நாட்டிலேயே அமைத்துக் கொடுக்கவும் அரசுகள் ஆயத்தமாய் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் விலை உயர்வு அதிகமாகி உள்ளது. பேரிடர் காலத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்கள் முதற்கொன்டு அனைத்துக் நுகர்வோர் பொருட்களும் மின்சார, வாயு ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் பொருட்களின் அலிப்பை அதிகரிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இயந்திர மனிதர்களை நாட வேண்டிய அவசியத்தில் உள்ளன.

இந்த பேரிடர் காலத்திற்குப் பிறகு அமெரிக்க நிறுவனங்கள் பல தொழிலாளர்கள் கிடைக்காமல் இயந்திரங்களை தங்கள் தொழிற்சாலையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பல வாகனத் தொழிற்சாலைகளில் இராட்சத இயந்திரங்கள் வாகனங்களை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகனத் தயாரிப்பில் தொழிலாளர்களின் உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் பல வேலைகளை இன்று கணினிகள் தான் செய்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள Acieta என்ற நிறுவனம் பலதரப்பட்ட இயந்திரங்களை மனித வேலை செய்யும் படிக்கு உருவாக்கியும் பல நிறுவனங்களுக்கு விற்றும் வருகின்றனர். எந்த ஒரு தொழில்நிறுவனத்தின் பல்வேறு வேலைகளைச் செய்யத் தகுந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் விற்பனையாகியுள்ளது என்று இந்நிறுவனம் கூறுகின்றது.

தென் கொரிய நாட்டில் விண்ணில் பறக்கும் வாடகைக் கார்கள் UAM (urban air mobility service) கொண்ட ஒரு தொழில்நுட்பத்தை தென் கொரிய போக்குவரத்து வல்லுனர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்நாட்டின் சியோல் நகரத்திலிருந்து நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு விரைந்து செல்ல இந்த விண் வாடகைக்கார்கள் பயன்படுத்தப்படும் என்றும் 2025குள் இவை பயன்பாட்டில் வர செய்யவேண்டிய அனைத்து வேலைகளும் முடிந்து இருக்கும் என்றும் தெரிகிறது. இவை இன்றைய நகரப் போக்குவரத்து நெரிசலைப் போக்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு தானியங்கி வாகனமாகவோ அல்லது, ஓட்டுனர் வைத்தோ இயங்க முடியும் என்றுத் தெரிகிறது. இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் உலங்கூர்தியைப் போல இயங்கும் இந்த வாகனம் பொதுமக்களின் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றது. பிரபல வானூரிதி தயாரிப்பு நிறுவனமான airbuனைது குறித்து பல ஆராய்ச்சிகளையுன் செயல்பாடுகளையும் செய்து வருகின்றது.

இதையெல்லாம் பார்க்கும் போது கணினிமயமான எதிர்காலம் கண்ணுக்குத் தெரியத்தான் செய்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்றுமே தொழில்நுட்பத்திலும் நவீன கண்டுபிடிப்புக்களிலும் தங்களை முன்னோடியாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களால் உலகின் மற்ற பாகங்களை அதே வேகத்தோடும் சீராகவும் அடைய முடிந்ததா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடிப்படையில் கணினித் தொழில்நுட்பம் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது என்பதைத் தாண்டி பல நாடுகள் விதவிதமாக பிரச்சனைகளை இந்தக் கணினியுகத்தில் சந்தித்து வருகின்றது.

பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போல தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு உலகில் மலிந்து இருக்கின்றது என்கிறது ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரபூர்வமான அறிக்கை. 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி வெளிவந்த அறிக்கை கூறுவதாவது, ஆசியா, பசுபிக் பகுதியில் உள்ள நாடுகளில் 52% மக்களுக்கு இணைய வசதியே இல்லை என்பது தான். அதாவாது தங்கள் பணி சம்பந்தமாக நகரங்களில் வேலை செய்து வந்த போது அவர்களுக்குக் கிடைத்த இணையவசதி பேரிடர் காரணமாகத் தங்கள் பணியிடத்தை விட்டு தங்களின் கிராமங்களூக்குச் செல்லும்போது அவர்களுக்கு கிடைக்க வழியில்லாமல் போனது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறது அந்த அறிக்கை, இதை விட UNICEF தரும் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் என்னவென்றால் மூன்றில் ஒரு குழந்தைக்கு இணைய வழி கல்விக் கிடைக்காமல் போய்விட்டது என்பது தான். அதுவும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கல்விக் கற்கத் தேவையான தொழில்நுட்பப் பற்றாக்குறை என்றால் இன்னோரு பக்கம் குடும்பச் சூழ்நிலை.

நம் ஆசிரியர்களில் பலருக்கு இது அனுபவமாகக் கூட இருக்கலாம். வீட்டில் படிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை, வறுமை காரணமாக வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை இவை குழந்தைகளை அவர்களின் ஆரம்ப நடுநிலைக்கல்வி மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. தனி மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி ஆனால் கல்வி என்பது ஒரு குழந்தைக்கு இல்லையேல் ?

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (அதிகாரம்:கல்வி குறள் எண்:393)

பொருளாதாரத் தட்டுப்பாட்டால் கல்வி கிடைக்காத து ஒரு நிலை என்றால் தொழில்நுட்ப பற்றாக்குறைகள் ஒரு பக்கம் கல்வியை காணாமல் போகச்செய்கின்றன, கல்வி இல்லாத எதிர்கால சந்ததி எப்படி இருக்கும்.? நம் குழந்தைகளின் எதிர்காலமே கல்வியின் அடிப்படையில் தான் என்று எண்னிய பெற்றோர்களின் தியாகத்தில் வளர்ந்த பிள்ளைகள் நாம். நாமும் அப்படித்தான் நம் குழந்தைகளின் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.

உலகின் ஒரு பக்கத்தில் சாமர்த்திய நகரங்கள் மொதுமக்கள் பயன்படுத்த வான்வழி வாகனங்கள், இணைய விளையாட்டுத்தளங்கள் தனியார் விண்கலங்கள் என்று இருக்க மற்றோரு புறம் பசி பட்டினியோடு சேர்ந்து பண்பாட்டை கலாச்சாரத்தைத் தொலைத்த சந்ததியினரும் இருந்தால் எப்படி இருக்கும். தொழில்நுட்பத்திலேயே உருண்டு பிரண்டு வாழ்பவர்கள் நாகரீகமானவர்களாகவும், தொழில்நுட்பப் பற்றாக்குறையினால் வாய்ப்பிழந்து இருப்பவர்கள் நாகரிகம் அற்ற பழங்குடிகளாகவும் கருதப்படுவார்களா?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 62 (இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 63 (இராட்சத கொளவு எண்ணியியல் அகழ்தல் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 65 -(எண்ணியியல் செலவாணியின் நிலையற்ற தன்மையும் அதன் பதிவேட்டு முறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 (வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்)  – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்



“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்”
  அடால்ப் ஹிட்லர்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

“விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது” என்று குஜராத் முதல் மந்திரியாய் இருந்த நரேந்திர மோடி 2011 மார்ச் 22ம் தேதி ஊடகங்களிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தார். “மக்களிடம் கேட்டறிந்தே அந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார். இதனை அவரது வலைத்தளத்திலும் பதிவு செய்தார். அதே நாளில் குஜராத்தில் பண்டிட் தீனதயாள் பல்கலை கழகத்தில் பேசும்போதும், “நான் ஊழலற்றவன் என அமெரிக்கா சொல்லி விட்டது.” என்று தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.

விஷயம் என்னவென்றால் விக்கிலீக்ஸிலிருந்து மைக்கேல் ஓவன் என்பவர் 2006ம் ஆண்டில் மோடியை சந்தித்து உரையாடியிருந்தார். குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட களங்கத்தால் மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்து விட்டிருந்தது. அதையொட்டி மனித உரிமை மீறல் குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் மோடி குறித்த ரிப்போர்ட் ஒன்றை விக்கிலீக்ஸுக்கு ஓவன் அனுப்பி இருந்தார்.

2011 மார்ச் 22ம் தேதி வெளியான ஹிந்து நாளிதழில் அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் குறித்த செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ”குஜராத்தின் பொது வாழ்க்கையில் ஊழலை குறைத்தவர் போன்ற பிம்பத்தை மோடி வெற்றிகரமாக கட்டமைத்திருந்தார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதைத்தான் அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்த நரேந்திர மோடி இங்கு முதலில் குறிப்பிட்டபடி தன் இஷ்டத்திற்கு திரித்துக் கொண்டார். அப்போது யாரும் பெரிதாய் அது பற்றி அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. 2013ம் ஆண்டில் பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மோடியின் விசுவாசிகளும், பிஜேபி தொண்டர்களும், இந்துத்துவ வெறியர்களும் மோடி குறித்து நாடெங்கிலும் பற்ற வைத்த கதைகளில் அதற்கு கை, கால், வாய் எல்லாம் முளைத்திருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“அமெரிக்கா மோடியைக் கண்டு பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு மோடி ஊழல் செய்யாதவர் என்று தெரியும்.” என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சொன்னதாக டுவீட்டரில் தொடர்ந்து செய்திகள் பரப்பி விடப்பட்டன. மோடிக்கு அது குறித்தெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இருக்கவில்லை.

2002ம் ஆண்டிலிருந்து குஜராத் முதலமைச்சராக இருந்த காலமெல்லாம் அவர் ஊழலற்றவர் என்ற பிம்பத்தை எப்படி கட்டமைத்திருந்தார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு இந்தக் கதையை தொடர்வோம்.

‘சுஜலாம் சுபலாம் யோஜனா’ என குடிநீர், விவசாயத்திற்கான நீர் வளத்தை விரிவுபடுத்தும் திட்டம் செப்டம்பர் 2004ம் ஆண்டு குஜராத்தில் கொண்டு வரப்பட்டது. திட்டங்களுக்கு பேர் வைப்பதில் எல்லாம் ஒரு குறையும் இருக்காது. டிசம்பர் 2005ற்குள் 4904 கிராமங்கள், 34 நகரங்களுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. அதற்கான மொத்தச் செலவு 458.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு காண்டிராக்டருக்கு ஒரு காண்ட்ராக்டுதான் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த திட்டம் 2008ம் ஆண்டு வரையிலும் கூட நிறைவேற்றப்படவே இல்லை. 911 கோடி ருபாய் செலவு செய்தும் 2524 கிராமங்கள், 19 நகரங்களில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. விதிமுறைகளுக்கு எதிராக 106 காண்ட்ராக்டுகளை 16 காண்டிராக்டர்களுக்கு மொத்த மொத்தமாய் வழங்கி இருந்தது மோடியின் அரசு. வரையறுக்கப்பட்டதை விட அதிக நிதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (The Comptroller and Audit General of India – CAG) அறிக்கையில் அதில் நடந்த ஊழல்களும், முறைகேடுகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

குஜராத்தில் 2002ம் ஆண்டிற்கு பிறகான மோடி அரசின் நிர்வாகத்தின் லட்சணத்திற்கு ஒரு பதம் அது. ஆனால் “நான் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என 2007 டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மோடி தைரியமாக மார்தட்டி பிரச்சாரம் செய்தார். மூலை முடுக்கெல்லாம் இந்த வாசகங்கள் நிரம்பிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

அரசு அலுவலகங்களில், கீழ்மட்ட அளவில் லஞ்சத்துக்கு எதிரான தீவீரமான கண்காணிப்புகள் இருப்பதாய் காட்டிக்கொண்டு, அங்கங்கு சில அதிகாரிகளை கைது செய்து ஊழலுக்கு எதிரான தனது வேகத்தைக் காட்டிக் கொண்டார். ஊழலுக்கு எதிரான பெரும் யுத்தத்தை தான் தொடங்கி விட்டதாகவும், அதனை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டேன் என்றும் வாளை சுழற்றிக் கொண்டிருந்தார்.

மக்களின் பார்வைக்கு வராமல் உயர் மட்ட அளவிலான பெரும் ஊழல்கள் நடந்து கொண்டு இருந்தன. கார்ப்பரேட்களுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

தொழில் வளர்ச்சி என்ற பேரில் டாட்டா, அதானி உட்பட பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்களை வழங்கியதில் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. பெரும் முறை கேடுகள் நடந்திருந்தன. ‘Corrupt Modi’ என்னும் ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊழலும் கதை கதையாய் சொல்லப்பட்டு இருக்கிறது.

2007ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் துவங்கப்பட்ட Gift City (Gujarat International Finance Tech City) திட்டம் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. 12.26 லட்சம் சதுர அடி நிலம் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2700 கோடி மதிப்புள்ள நிலத்தை, சதுர அடிக்கு ரூ.1/- என கணக்கிடப்பட்டு ‘Gift’ போல கொடுக்கப்பட்டது.

முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசு விமானங்களையோ, வணிக ரீதியான விமானங்களையோ ‘ஏழைத்தாயின் மகனான’ மோடி பயன்படுத்தவில்லை. உயர் தர வசதிகளுடன் கூடிய தனி விமானங்களையே பயன்படுத்தி வந்தார். அவைகள் எல்லாம் அவரால் சலுகைகள் வழங்கப்பட்ட பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவை. அதெல்லாம் ஊழல் கணக்கிலேயே இல்லை.

குஜராத் அரசின் இளம் வருமானத்துறை அதிகாரிகளுக்கான பணி நியமனத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றது. சர்ச்சைகள் எழுந்தன. சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திநகரில் கோச்சிங் செண்டர் நடத்தி வந்த கல்யாண்சிங் சம்பவத் என்பவர், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடம், வேலை பெற்றுத் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. விசாரனையில் அவர் பணம் பெற்றது தெரிய வந்தது.

அந்த கல்யாணசிங் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், பிஜேபியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாயின. “பிஜேபி கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பிஜேபி எப்படி பொறுப்பாக முடியும். கல்யாணசிங் பிஜேபியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை” என விஜய் ருபானி கை கழுவிக் கொண்டார். அந்த ருபானி பின்னாளில் குஜராத் முதலமைச்சரானார். இதுபோல இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.

சஹாரா குரூப் கம்பெனியிலிருந்து மோடியே 55 லட்சம் ருபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் கூட ஒரு செய்தி கசிந்து கொண்டிருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

எந்த துறையையும் மோடி அரசு விடவில்லை. மீன்வளத்துறை அமைச்சராயிருந்த புருஷோத்தம் சோலங்கி டெண்டர் அறிவிக்காமல் முறைகேடாக லஞ்சம் பெற்று தனக்கு வேண்டியவர்களுக்கு காண்ட்ராக்ட் விட்டதாக இஷாக் மராடியா என்பவர் 2013, ஜனவரி 5ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 400 கோடிக்கு மேலாக ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீஸ் இதனை விசாரிக்கக் கூடாது எனவும், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் மூலமாக கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் காந்திநகர் காவல்துறையே அந்த குற்றச்சாட்டை விசாரித்து 2015ம் ஆண்டில் புருஷோத்தம் சோலங்கி மீது எந்த தவறும் இல்லையென அறிக்கை கொடுத்தது. உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது. ஷோலங்கி மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

2018ம் ஆண்டில் தன் மீது நடக்கு விசாரனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என புருஷோத்தம் சோலங்கி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

2019ம் ஆண்டில் மே மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடுத்த இஷாக் மராடியா மீது ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னை அச்சுறுத்தவும், பழிவாங்கவுமே அரசு நடவடிக்கை எடுப்பதாக இஷாக் தெரிவித்தார்.

அதே சோலங்கி மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாய் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் 2019ம் ஆண்டில் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன, காவலாளி ஒருவரைக் கொல்ல முயன்றது மற்றும் பார்லர் ஊழியர் ஒருவரை அடித்தது போன்ற ரவுடித்தனங்களால் அவரது மகன் குஜராத் மாநிலம் அறிந்த பிரபலம். இந்த தகவல்களோடும் சேர்த்துப் பார்த்தால் மோடியின் குஜராத் அரசு எத்தகையது என்பது விளங்கும்.

திசை திருப்புவது, குற்றம் சுமத்துபவர்களை அச்சுறுத்துவது, குற்றம் நிரூபிக்கப்படாமல் போக வைப்பது என ஆட்சியில் இருந்த பிஜேபி தன் அதிகாரத்தை பிரயோகித்து உண்மைகளை விழுங்கியது.

மொத்தம் 17 முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய போது, “காங்கிரஸ் என்ன யோக்கியமா” எனவும், “குஜராத் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது” எனவும் முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன.

லோக் ஆயுக்தா சட்டத்தின் பிரகாரம் குஜராத் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பை செயல்பட விடாமல் வைத்திருந்த பெருமை மோடியைச் சேரும். முடிந்தவரை அதனை நீர்த்துப் போகச் செய்திருந்தார். அவர்தான் அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கடுமையாக்கப் போராடிய அன்னா ஹசாரேவை ஆதரிக்கவும் செய்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நேரில் பார்க்காத நமக்கு, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அகிம்சை வழியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது” என ட்வீட்டினார். தனது இணைய தளத்தில் எழுதவும் செய்தார்.

குஜராத்தில் நடந்த இந்த ஊழல்களுக்கு எதிரான சத்தங்கள் எல்லாம் மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் வெளிவந்த ஊழல்களை எதிர்த்து நாடெங்கும் எழும்பிய சத்தங்களில் அடிபட்டுப் போனது. நாடே அன்னா ஹசாரேவின் பஜனையில் மூழ்கிப் போனது.

ஊழலின் ஊற்றுக் கண்ணாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள், ஊழலை ஒழிப்பதற்கான வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்றார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கார்ப்பரேட்களே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும் நாடகமொன்று நாட்டு மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது. காங்கிரஸ், மன்மோகன்சிங் மீது மக்களின் கோபம் திரும்பியது. ஊழல் பேர்வழி மோடி கார்ப்பரேட்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக வலம் வந்தார்.

சரி, இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.

“மோடி ஊழலற்றவர் என்பதை அறிந்து அமெரிக்காவே பயப்படுகிறது” என்றாலும் யார் கேட்க போகிறார்கள்? அமெரிக்கா வந்து மறுக்கப் போகிறதா என்னும் மூர்க்கத்தனமான தெனாவெட்டில் வெளியிடப்பட்ட சங்கிகளின் ட்வீட்களுக்கு விக்கிலீக்ஸே பதில் அளித்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies HistoryThe story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“மோடி ஊழலற்றவர் என விக்கிலீக்ஸின் எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்றும் “மோடியின் ஆதரவாளர்கள் தவறான செய்திகளை உக்கிரமாக பரப்புகிறார்கள்” என்றும், ”நரேந்திர மோடியின் பிஜேபி தவறான செய்திகளை பரப்புகிறது. அசாஞ்சே ஒருபோதும் மோடி ஊழலற்றவர் எனச் சொல்லவில்லை” என்றும் அடுத்தடுத்து டுவீட்டரில் விக்கிலீக்ஸில் மறுப்புகளை தெரிவித்தது.

ஒன்றிரண்டு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், “இந்தியாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.”, ”மோடி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறார்” “பிரதம வேட்பளரான அவருக்கு இது பின்னடைவு” என்றெல்லாம் பேசினார்கள். எழுதினார்கள்.

சகலத்தையும் உதிர்த்த பிஜேபிக்கும், மோடிக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. “அமெரிக்காவின் சர்டிபிகேட் ஒன்றும் மோடிக்குத் தேவையில்லை.” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவர்களே களத்தில் இறங்கினார்கள்.

”மோடி ஊழல் கறை படியாதவர்” என்று அவர்களே தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

“இந்த தேசம் தான் என் குடும்பம். தனிப்பட்ட முறையில் எனக்கென்று குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?” என மோடி நாட்டு மக்களிடம் தன்னைப் புனிதராகக் காட்டிக் கொண்டார்.

ஆனால் அவருக்கு குடும்பம் இருந்தது. இந்திய கார்ப்பரேட்கள்தான் அவரது குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசமான பிரதம சேவகன் அவர். நாடு, மக்கள் எல்லாம் பிறகுதான்.

அவரது 56 இஞ்ச் மார்பைத் திறந்து பார்த்தால் அங்கே அம்பானியும், அதானியும், டாடாவும் காட்சியளிக்கக் கூடும்.

References:
* I am glad that America admits Modi is incorruptible: Hon’ble CM ( Narendara Modi websidte)
* Modi supporters aggressively pushed fake Assange Endorsement (Published in Outlook on 17th Mar 2014)
* Narendra Modi’s incorruptibility: What WikiLeaks cable actually said (Ashish Mehta in GovernanceNow on Mar 20, 2014)
* Sujalam gets CAG rap (Written by Kapildev, DNA dated Feb 20, 2009)
* Kalyan sinh Champawat on remand for allegedly duping Talati job applicants (Desh Gujarat, Feb 18, 2014)
* Big Corporates got govt land cheap: CAG (Indian Express, Gandhi Nagar dated Apr 03, 2013)
* Rs 400 crore Fisheries scam: Gujarat HC rejects plea filed by BJP Minister (Ahmedanbad Mirror, Nov 05, 2021)
* 17 Scams that Narendra Modi does not want Lok Ayukta to probe (DNA, Aug 27, 2011)
* Anna-led movement reinforces confidence in non-violence – Narendra Modi (The Economic Times, Aug 28, 2011)
* Wikileaks never said Modi was incorruptible (Counter view dated Mar 18, 2014)

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 7 – ஜா. மாதவராஜ்



”உண்மையான நேர்மையான மனிதனை விட
ஒரு பொய்யன் நம்பகத்தன்மை மிக்கவனாக தோன்றுவது
இன்றைய காலத்தின் பெரும் துரதிர்ஷ்டம்”

                                                                                               – முனியா கான்

“என் வாழ்க்கைல …. ஒவ்வொரு நாளும்….. ஒவ்வொரு நிமிடமும்….. ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..” என்று நடிகர் அஜித் ஒரு படத்தில் பஞ்ச் வசனம் பேசுவார். திருமணமானதும் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய், அங்கங்கு சில வருடங்கள் அலைந்து திரிந்தது வரை வேண்டுமானால் மோடியும் இது போன்று “நானா செதுக்குனதுடா” என மார்தட்டிக் கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த பிறகு இந்துத்துவா வெறி அவரை செதுக்கியது. அதன் தொடர்ச்சியாக பிஜேபியில் இணைந்ததும் அரசியல் அதிகாரம் அவரை செதுக்கியது. குஜராத் கலவரங்களுக்குப் பிறகு இறுதியாக இந்திய ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் உலகம் அவரை செதுக்க ஆரம்பித்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பத்து வருடங்களில் மோடியை ஒரு ’பிராண்ட்’ (வியாபார அடையாளம்) ஆக முன்னிறுத்தி சந்தையில் இறக்குவதற்கு தயாராக்கி இருந்தார்கள். தேர்தல், ஜனநாயகம், வாக்குரிமை, மக்களின் பிரச்சினைகள் என்று பொழுதெல்லாம் மிகுந்த அக்கறை கொண்டு அலசி ஆராயப்படும் அரசியலின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு, இந்தியக் குடிமக்கள் அனைவரையும் தங்களின் ‘சந்தை’யாக கார்ப்பரேட் உலகம் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டு உற்றுப்பார்த்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

தங்களின் புதிய பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தி, அதனை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்கும் அனைத்து விளம்பர உத்திகளும், வியாபார உத்திகளும் திட்டமிட்டு வகுக்கப்பட்டன. அதற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜெயினின் தலைமையில் ஒரு குழுவும், பிரசாந்த் கிஷோர் தலைமையில் ஒரு குழுவும், ஹிரேன் ஜோஷி தலைமையில் ஒரு குழுவும், அரவிந்த் குப்தா தலைமையில் ஒரு குழுவுமாக மொத்தம் நான்கு குழுக்கள் இணைந்து மோடியின் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் அளந்து அளந்து செதுக்கி செதுக்கி வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். மோடி என்னும் பிராண்டின் முகம் மட்டுமே தெரியும். தெரிந்தது.

“விரும்பப்படுகிறாரோ , வெறுக்கப்படுகிறாரோ அது முக்கியமில்லை. ஒருவர் எவ்வாறு உணரப்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் ஒருவரின் பிராண்ட்!” என்று அமெரிக்க மார்க்கெட்டிங் குருவும், பிராண்ட் குறித்து பல புத்தகங்கள் எழுதியவருமான டேவிட் ஆக்கர் சொல்கிறார். தொடர்ச்சியான, உறுதியான, செயல்பாடுகளின் மூலம் இந்த வகை பிராண்டு தன்னை நீட்டித்துக் கொள்ளும், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் தன்னை அப்படியே கலைத்துக் கொள்ளும் என ‘பிராண்ட்’ குறித்த தன்மையை விவரிக்கிறார். 2003லிருந்து ‘துடிப்பு மிக்க’ குஜராத் (Vibrant Gujarat ) மூலம் மோடி அத்தகைய ‘பிராண்ட்’ ஆக உருவாக்கப்பட்டிருந்தார்.

பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, தங்களின் பிராண்ட் நரேந்திர மோடிக்கு மூன்று முக்கிய சவால்கள் இருப்பதாக கார்ப்பரேட் உலகம் ஆராய்ந்து வைத்திருந்தது. முதலாவதாக மூன்று முறை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி ஒரு பிரதேசத்தின் பிராண்ட் ( Regional Brand) ஆக மட்டுமே தென்பட்டார். அவர் அகில இந்திய அளவில் ‘பிராண்ட்’ ( National Brand) ஆக இல்லை. இரண்டாவது, 2002 குஜராத் கலவரங்களினால் ஏற்பட்ட கறைகள் மோடி மீது தேசீய அளவில் படிந்திருந்தது. மூன்றாவது, பெரும்பாலும் இந்தியிலேயே பேசும் அவர் நகர்ப்புறத்தைச் சேர்ந்த, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோடு நெருக்கமாக வேண்டும். 63 வயதான மோடி, அடுத்து வரும் தேர்தலில் 15 கோடி புதிய வாக்காளர்களான இளைஞர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் மேலும் இருந்தது ஒரு பிராண்ட்தான். காங்கிரஸ் மட்டுமே. அதுவும் தனது பிராண்ட் தன்மையை இழந்து விட்டிருந்தது. அதற்கு ஒரு மாற்றை தேடிக் கொண்டு இருந்த நேரம் அது. மோடியை பிராண்ட் ஆக்குவதற்கு காங்கிரஸே இடம் கொடுத்திருந்தது.

ஒரு பொதுவான தேவையை உணர்த்தி அதற்குரிய விளைவுகளையும் ஒரு பிராண்டினால் உருவாக்க முடிந்தால், அதன் எல்லைகளை விரிவாக்க முடியும். என்கிற ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின்’ பேராசிரியர் ஸ்ரீதர் சாமு, ஒரு பிரதேசத்தில் மட்டுமே இருந்த சரவண பவனும் ஹால்டராமும் எப்படி தேசீய பிராண்டாக தங்களை உயர்த்திக் கொண்டன என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

குறுகிய காலத்தில் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக 5000க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில், 470க்கும் மேற்பட்ட அரசியல் கூட்டங்களில் பறந்து பறந்து மோடி கலந்து கொண்டார். பறவையின் பார்வையில் மேலிருந்து பார்த்தால் இந்தியாவை அப்படியே இறுக்கப் பிணைத்த ஒரு சிலந்தி வலையைப் போல அவரது பயணத்தின் பாதைகள் இருந்திருக்கும்.

அடுத்ததாக மோடி மீது படிந்திருந்த குஜராத் கலவரக் கறைகளை என்ன செய்வது? ஒரு பிராண்டைப் பொறுத்த வரையில் அதை மறுக்கவோ, அது குறித்து மேலும் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பேச ஆரம்பித்தால், அது குறித்த விவாதங்களும் நடந்து கொண்டே இருக்கும். மக்களின் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துவிடும். சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது ஒரு ‘பிராண்டின்’ சூத்திரம்.

காட்பரிஸ் சாக்லெட்டில் புழு இருந்தது. கோக், பெப்சியில் நச்சுத்தன்மை இருந்தது. அந்த நேரத்தில் பதற்றத்தோடும் கடும் வேகத்தோடும் பேசப்பட்டன. கோக்கும் பெப்சியும் விற்றுக்கொண்டே இருந்தன. மெல்ல மெல்ல எதிர்ப்புகள் அடங்கி, முணுமுணுப்பாகி பின்னர் எந்தப் பேச்சும் இல்லாமலேயே போய்விட்டது. விளையாட்டு மற்றும் சினிமாவில் பிரபலமானவர்களின் கைகளில் பெப்சியும், கோக்கும் இருந்தன.

2003க்குப் பிறகு குஜராத் கலவரங்கள் குறித்து மோடி பேசுவதை குறைத்துக் கொண்டே வந்தார். அவரது ஒரே மந்திரமாக ‘வளர்ச்சி’ மட்டுமே இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் அபிமானத்துக்குரியவர்கள் மோடியை சந்தித்த அல்லது மோடி அவர்களைப் போய் சந்தித்த நிகழ்வுகள் அரங்கேறின. அவர்கள் நெருங்கி நின்று சிரித்த வண்னம் நின்றிருந்த காட்சியளித்தனர். இரக்கமற்ற, கொடூரமான, வெறுப்பைக் கக்கிய உருவத்திலிருந்து உறுதியான, வேகமான, எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடிய கனவானின் உருவத்திற்கு மோடியின் பிம்பம் மாறியது. ‘புதிய மனிதா, பூமிக்கு வா’ என கார்ப்பரேட்கள் கொண்டாடினார்கள்.

பிறகென்ன? கண்கள் மற்றும் காதுகள் வழியாக 2013 இறுதியில் இந்திய மக்கள் அனைவருக்குள்ளும் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வார்த்தைகள் சொருகப்பட்டன. அதாவது “இந்த தடவை மோடி அரசு!”

மூன்றாவது நகர்ப்புறத்து மக்களோடும் இளஞர்களோடும் தொடர்பு கொள்வதற்கு மோடி என்னும் பிராண்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சோஷியல் மீடியாக்கள். பிஜேபி தலைவர்கள் ஃபியூஸ் கோயல் மற்றும் அஜய் சிங் தலைமையில் ஒரு பெரும் படையே 24 மணி நேரமும் இயங்கியது. பிஜேபியின் தகவல் & தொடர்பு துறையினருக்கு இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் ஊழியர்கள் பயிற்சி கொடுத்தார்கள்.

இங்கு செய்திகளும், தகவல்களுமே அறிவாகவும், ஞானமாகவும் சுருக்கப்பட்டு இருக்கிறது. தகவல்களை வடிகட்டி, கடந்த காலத்தின் பின்னணியோடு பகுத்துப் பார்ப்பதுதான் அறிவு என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இரண்டு ஃபார்வேர்டு மெஸேஜ்களை படித்து விட்டு எல்லாம் தெரிந்தவர்களாய் தங்களை கருதிக் கொள்கிறார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு தொடை தட்டி பேசுவதில் கெட்டிக்காரர்களாகி கிடக்கிறார்கள். பெரும்பாலான இந்திய மத்தியதர வர்க்கத்தையும் படித்த இளஞர்களையும் பீடித்த சாபம் இது. ஒரு பிராண்டை அறிமுகப்படுத்துவதற்கும், வார்ப்பதற்கும் உற்ற சூழல் இது.

குஜராத்தில் எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக, குஜராத்திற்கு வெளியே தொடர்ந்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் செய்திகள் ஃபார்வேர்டு ஆகிக் கொண்டே இருந்தன. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட்கள் வெளிப்படையாக மோடியை பாராட்டி வந்தார்கள். குஜராத்தில் தொழில்துறை, விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உள் கட்டமைப்பு எல்லாம் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக கற்பனைகளை அலை அலையாய் எங்கும் மிதக்க விட்டார்கள். ஆனாலும் மிக முக்கியமாக புதிய வாக்காளர்களான 15 கோடி இளஞர்களை மோடி என்னும் பிராண்ட் தன் பக்கம் கவர வேண்டி இருந்தது.

எல்லாம் தெரிந்த, வலிமையான ஒரு தந்தையின் பிம்பத்தை மோடிக்கு கட்டமைப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள். மோடியின் சிறு வயதுக் கதைகளை காமிக்ஸ் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும், வாய்மொழி வழியாகவும் பரப்ப ஆரம்பித்தார்கள். முதலைகள் நிறைந்த குளத்தில் நீந்திய சிறுவனாக ஒரு கதை. பின்னர் இளைஞனானதும் பொது வாழ்க்கைக்காக குடும்பத்தை விட்டு வெளியேறியதாக ஒரு கதை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் துணிவும், அர்ப்பணிப்பும் மிக்க ஒரு பிம்பம் அரூபமாய் மூளையில் படரும்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

‘நரேந்திர மோடி’யை ‘நமோ’ என சமஸ்கிருதச் சொல்லாடலோடு அழைக்க ஆரம்பித்தார்கள். மிக எளிதாக பெரும்பாலான மனிதர்களுக்குள் ஊடுருவும் வார்த்தையானது.‘ப்ரோ’ என அழைத்துப் பழகும் இன்றைய நவயுக மனிதர்களுக்கும் ‘நமோ’ நெருக்கமானது. கடும் கிண்டல்களும், கேலிகளும் ஒரு புறம் எழுந்தாலும், ஊதிப் பெருக்கப்பட்ட அந்தக் கதைகளின் முன்னே அவையெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய அளவில் சொற்பமாகவே இருந்தன.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

இளைஞனான மோடி துடைப்பத்தால் பெருக்குவதைப் போன்று வெளியிடப்பட்ட போட்டோவை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வைரலாக எங்கும் பரப்பப்பட்டது. எளிமையான, பணிவான, உண்மையான, உழைக்கிற தோற்றம் யாரையும் சட்டென்று கவரும். அந்த போட்டோ பொய்யானது என்றும், போட்டோஷாப்பில் உருவமாற்றம் செய்யப்பட்டது எனவும் பின்னாளில் தெரிய வந்தது. அதற்குள் மக்களின் மனதில் அந்த பிம்பம் அழிக்க முடியாதபடிக்கு பதிய வைக்கப்பட்டிருந்தது.

ஃபேஸ்புக், ட்வீட்டரில் நரேந்திர மோடி 2009லிருந்தே இருந்தார். அதில் தொடர்ந்து அவர் பதிவு செய்தும் வந்திருந்தார். அவை யாவுமே அவரது நீண்ட கால, தீர்க்கமான இலக்குகளை நோக்கியதாக இருந்தன.

மிக முக்கியமாக, மோடியின் பேச்சாற்றலை குறிப்பிட வேண்டும். சிந்திக்கத் தூண்டாமல், உணர்ச்சி வசப்பட வைக்கும் தன்மை நிறைந்தது அது. வரலாற்றில் ஹிட்லரும் இது போன்று மக்களை ஆர்ப்பரிக்க வைக்கிற, வெறியேற்றுகிற பேச்சாளனாக இருந்தான். ’ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டுவிடும்’ என்பதை உலகுக்கு காட்டியவன். மோடி அப்படி மக்களை நம்ப வைக்க க் கூடியவராய் இருந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

2013 பிப்ரவரி 6ம் தேதி டெல்லி ‘ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில்’ மோடி பேசியது அன்றைக்கு இந்திய அரசியலில் ஒரு சாதாரண நிகழ்வாக தெரிந்திருக்க வேண்டும். 15கோடி முதன்முறை வாக்காளர்களை குறிவைத்து அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தங்கள் எதிர்காலம் குறித்து கனவுகளும், கவலைகளும் நிறைந்த அந்த கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். மோடி என்னும் ’பிராண்ட்’ அன்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.

“இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகாத்மா காந்தியின், வல்லபாய் பட்டேலின் பூமியிலிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நன்கு திட்டமிடப்பட்டு முன்வைக்கப்பட்டவை.

“உலக வரைபடத்தில் தனக்கான இடத்தை இந்தியா கண்டு கொள்ள வேண்டுமானால், நல்ல நிர்வாகம் வேண்டும்” என்றார்.
“இது விவேகானந்தரின் 150வது ஆண்டு. இதனை நாம் ‘யுவ வருஷமாக’ நினைவு கூர்வோம்” என்றார்.

“ஒரு முறை வெளிநாட்டு தூதுவர் என்னை பார்க்க வந்தார். இந்தியாவின் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் சவால் என்றேன். அவர் ஆச்சரியமடைந்தார். உலகில் அதிகம் இளைஞர்களைக் கொண்ட நாடு இப்போது இந்தியாதான் என்று சொன்னேன்” என்றார்.

“இந்திய இளைஞர்கள் இங்கே புதிய வாக்காளர்களாக பார்க்கப்படுகிறார்கள். நம் இளைஞர்களை நான் புதிய சக்தியாக பார்க்கிறேன்.” என்றார்.

திரும்பத் திரும்ப இளைஞர்களை தூக்கி வைத்து கொண்டாடினார் மோடி. அந்த புதிய வாக்காளர்கள் அப்படியே வசியம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆரவாரித்துக் கிடந்தார்கள். தங்களை இரட்சிக்க வந்த தேவதூதன் மோடிதான் என்று நம்பினார்கள்.

“இந்தியாவை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மோடியிடம் அதற்கான ஆற்றலும் வேகமும் இருக்கிறது” என்றார் அந்தக் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸ் படித்துக்கொண்டு இருந்த 19 வயதான அபிஷேக்.

“குஜராத்திற்கு மோடி நிறைய செய்திருக்கிறார். தேசீய அளவில் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார் மிடல் குப்தா என்னும் மாணவர்.
“நாம் வல்லரசாக வேண்டுமென்றால், நமது பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு சரியான மனிதர் மோடியே!” என்றார் செஜ்வால்.

அன்றைய மோடியின் பேச்சையும், மாணவர்களின் கருத்துக்களையும் இந்தியாவின் ஊடகங்களை அனைத்தும் மாற்றி மாற்றி ஒளிபரப்பின. ஃபேஸ்புக், ட்வீட்டர் எல்லாவற்றிலும் வைரலாயின. அதே நாளில் மோடியின் வருகையை எதிர்த்து அந்த கல்லூரி மாணவர்களில் சிலர் வெளியே நின்று கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். ஊடகங்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. உலகமும் அறிந்திருக்கவில்லை.

எதிர்த்த அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருந்தது…. ‘திரும்ப திரும்பச் சொன்னாலும் பொய் உண்மையாகி விடாது’ என்பது. அதற்குப் பிறகான மீதிக் கதையும், இன்று வரையிலான தொடர்கதையும் அதுதானே.

சமூக ஊடகங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான போலியான பொதுக்கருத்தை உருவாக்க பாஜக முயன்றது – புத்ததேவ் ஹால்டர் (தமிழில்: தா.சந்திரகுரு)

சமூக ஊடகங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான போலியான பொதுக்கருத்தை உருவாக்க பாஜக முயன்றது – புத்ததேவ் ஹால்டர் (தமிழில்: தா.சந்திரகுரு)

தலைமையற்ற இயக்கங்களில் ‘தலைவர்’ என்ற வகையில் சமூக ஊடகங்கள் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. முன்பெல்லாம் பொதுக்கருத்தை உருவாக்கிட செய்தித்தாள்கள் அல்லது கட்சியின் ஊதுகுழல்களாக இருந்த பத்திரிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தங்களுக்கு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த செய்திகளையும், தகவல்களையும் பெறுவதற்கு…
சமூக ஊடகங்களும் வியாபார அரசியலும் | நடிகர் இரா.ஜெயச்சந்திரன்

சமூக ஊடகங்களும் வியாபார அரசியலும் | நடிகர் இரா.ஜெயச்சந்திரன்

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more…
சாதி அட்டூழியங்களும், சமூக ஊடகங்களும் (Economic and Political Weekly தலையங்கம்) – தமிழில் ச. வீரமணி

சாதி அட்டூழியங்களும், சமூக ஊடகங்களும் (Economic and Political Weekly தலையங்கம்) – தமிழில் ச. வீரமணி

தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் மிகவும் புதிரான முறையில் அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து பல பத்தாண்டுகளுக்கு முன்பே பி.ஆர். அம்பேத்கர் கூறியவற்றை துயரார்ந்த முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக மட்டுமே அட்டூழியங்கள் நடைபெறுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்தப்…