Solaimayavan Poem சோலைமாயவனின் கவிதை

சோலைமாயவனின் கவிதை




சுடுநீர்க் குடுவைக்குள்
வெந்துகொண்டிருக்கிறது
நிரந்தரமற்ற வாழ்வின் பகல்
திறக்கப்படாத அறையினுள்
புழங்கிய வெம்மை
மனசின் நரம்புகளில் ஊறிக்கிடக்கிறது
தெறிக்கும் உமிழ்நீர்க் கங்குகளாக

இதயத்தைத் துளைக்கிறது
அடர் சிவந்த கனலைத் தூக்கிய
கண்களில் ஈரம் காய்ந்திருந்தது
நட்சத்திரங்களை விரலில் சுமந்து
புற்களை எரித்துக்கொண்டிருக்கிறார்கள்
தன் பாதையை
யாரும் பயன்படுத்தாமல் இருக்க
எரிந்த மரத்துண்டுகளைச் செப்பனிடுகிறார்கள்
விடும் மூச்சுக்காற்றில்
ஒரு மிடறு வெப்பம் கூடியிருந்தது
அனல்காற்றுக்குள் சிக்கி
தகித்துக்கிடக்கிறது மனிதனின்
சிறிய வாழ்வு
அன்புஎனும் பெருமழை என்மீது
பெய்துவிடாதாயென எங்கும்
ஒவ்வொருவரும் தனக்குள்
வெடிக்கும் எரிமலையை
சுமந்து அலைந்துகொண்டிருக்கிறார்கள்

சோலைமாயவன் கவிதை

சோலைமாயவன் கவிதை

உச்சந்தலையைச் சுட்டெரிக்கும் கோடைப்பொழுதுகளில் வானத்தை உற்று உற்று கண்களால் மழையைக் கண்காணிப்பார் முதல் மழை பூமியைக் குளிர வைக்கும் பொழுதே போக்கியத்திற்கு ஓட்டும் கழனியை மேலும் கீழுமாக ஆறப்போட ஆரம்பித்துவிடுவார் வேங்கையின் வேகத்தோடு விதைநெல்லை மோப்பம்  பிடித்து முன் தொகை ஒப்படைத்து…