சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 3 – முனைவர். பா. ராம் மனோகர்
சூரிய ஆற்றல், சுலபமாய் கிடைக்குமா, நம் மக்களுக்கு!?
முனைவர். பா. ராம் மனோகர்.
சுற்றுசூழல் பிரச்சினைகளில், மிகவும் முக்கியமானது,”ஆற்றல் தேவை” ஆகும். உலக மயமாக்கல், நவீன இந்தியாவில், வணிகம், வாகனங்கள் பெருக்கம், மக்களின் வாழ்க்கை மாற்றத்தினால், மின்சாரம், எரிபொருள் ஆகியவை, அதிகம் பயன்பாடு, ஏற்பட்டுள்ளது எனில் மிகையில்லை! மேலும் படிவ எரி பொருட்கள், பெட்ரோலியம், நிலக்கரி குறைந்து வரும் நிலை ஒரு புறம், இருப்பினும் 1.4பில்லியன் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆற்றல் குறைபாடு, சமீபகாலமாக தவிர்க்க இயலாத ஒன்று.
மாற்று புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களான காற்று, கடலலை, சூரிய ஆற்றல் போன்றவற்றின் தொழில் நுட்பம் அறிந்து அவற்றை செயல்பட பல திட்டங்கள் தீட்டுதலும்
அவசியம் ஆகி, இந்தியாவில் மத்திய அரசு அவற்றை துவக்கம் செய்துள்ளது என்பது உண்மை! எனினும் அவற்றை சரியாக செயல்பட செய்ய பல சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.
சூரிய ஆற்றல் கருவிகளின் அடிப்படை பொருட்களான polysilicon பாலிசிலிகான், ingots இங்கோட்ஸ், wafers வெபர்ஸ் போன்றவற்றை நம் நாட்டில் உற்பத்தி செய்ய இயலவில்லை.
Solar photovoltaic (சூரிய ஒளி ஈர்ப்பு கருவி ), நவீன தொழில் நுட்பம், பொருளாதார அளவீடு, உயர் நிலம், மின்சார கட்டணம், குறை திறன் பயன்பாடு, உயர் நிதி கட்டணம், திறன் குறைவான தொழிலாளர் போன்றவை ஒருங்கிணைந்த நிலையில் இல்லாதது, உற்பத்தி விலை அதிகரிக்க காரணம் ஆகிவிட்டது.
சூரிய ஆற்றல் தேவை குறிக்கோளினை, சரியாக அடைய நிலையற்ற கொள்கையும், ஒரு தடை ஆகும்.
வழக்கமான ஆற்றல் கருவி உற்பத்தி நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வணிகம் குறையும் என்ற அச்சத்தில் புது மாற்று ஆற்றல் முறைகளை தவிர்த்து வருகின்றன. மாநிலங்களுக்கு இடையில் சூரிய ஆற்றல் சட்ட விதிகள் மாறுவது, வாங்கும் திறன் மாற்றம் போன்றவை நுகர்வோருக்கு தடையாகிவிடுகிறது.
இந்த சூரிய ஆற்றல் கோட்பாடு, கொள்கை குழப்பம் செயல்பாடு மேற்கொள்ள, தாமதம் ஆகும் நிலை உள்ளது.
இதே போல் பெட்ரோலிய வாகனங்களுக்கு அதிக நிதி, கடன் வழங்கும் நிலை உள்ளது. சூரிய ஆற்றல் திட்டங்கள், கடன் நிதி பெற்று செயல் படும் நிலை கடினம்.
ஒரு புறம் அரசு புதுப்பிக்கும் எரி சக்தி விழிப்புணர்வு மேற்கொள்கிறது. ஆனால் நிலக்கரி உற்பத்தி,, சுரங்க தொழில் ஆகியவற்றிற்கு மானியம் கிடைக்கிறது.2018 ஆம் ஆண்டு துவக்க நிலை வணிக ஆற்றல் நுகர்தலில் 56%நிலக்கரி, 30%எண்ணெய், 6%வாயு, 3%புதுப்பிக்கும் ஆற்றல், 4%நீர் ஆற்றல், 1%அணு ஆற்றல் ஆகிய நிலையில் இருந்தது.
வழியில் முன்னுரிமை, சூரிய ஆற்றல் கருவிகள் உற்பத்தி, வணிகம் ஆகியவற்றுக்கு தர வேண்டும்.
வெப்பமண்டல பருவகால நாட்டில் எளிதில் பெறக்கூடிய ஆற்றல் என்பது சூரிய ஆற்றல் மட்டுமே! இது அனைத்து தரப்பு மக்கள் எளிதில் பெற கட்டணங்கள் குறைப்பு, பெரு விழா அரங்கம், தொழிற்சாலை ஆகியவற்றில் கட்டாய கருவி அமைப்பு போன்ற நிலை வர சட்டம் கொண்டு வரலாம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சூரியன் ஆற்றல் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் முழுமையாக அறிய வேண்டும். சுற்றுசூழல் பாதிக்காத, காற்று மாசு ஏற்படுத்தாத இந்த ஆற்றல் நாம் அனைவரும், எதிர் காலத்தில் எளிதில், விரைவில் பெறுவோம் என்ற நம்பிக்கை கொள்வோம்.