சாலமன் கிரண்டி மொழிபெயர்ப்பு கவிதை – இரா. இரமணன்
ஒரு திங்கள் கிழமை பிறந்தான்
சாலமன் கிரண்டி.
காதுகுத்தி பெயர் வைத்தார்கள்
செவ்வாயன்று.
அவன் திருமணம் நடந்ததோ
ஒரு புதன் கிழமை.
நோயில் விழுந்தான்
வியாழனன்று.
வியாதி முற்றியது
வெள்ளிக்கிழமை .
மரித்துப் போனான்
ஒரு சனிக்கிழமை.
நல்லடக்கம் நடந்தது
ஞாயிற்றுக்கிழமை .
இப்படித்தான் முடிந்தது
சாலமன் கிரண்டியின் கதை.
1960களுக்கு முன் பிறந்தவர்கள் ‘Solomon Grundy’ எனும் ஆங்கிலப் பாடலை பாடமாகப் படித்திருப்பார்கள். அதனை தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்த ஆங்கிலப்பாடலை 1842ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஆர்ச்சார்ட் ஹல்லிவேல் (James Orchard Halliwell ) என்பவர் கண்டறிந்து வெளியிட்டாராம்.
‘புத்தகம் பேசுது’ இதழில் இரா.நடராசன் அவர்கள் அழ..வள்ளியப்பாவின் ‘திங்கள் கிழமை பிறந்த குழந்தை ‘ பாடலின் நேர்மறையான பொருளுக்கும் இந்த ஆங்கிலக் கவிதையின் எதிர்மறையான உள்ளடக்கத்திற்கும் ஒப்பிட்டிருக்கிறார்..