Posted inUncategorized
சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்
வாரத்தின் முதல் நாள் ஞாயிறு
வாழ்வில் என்றும் பொறுமை யாயிரு
ஞாயிறுக்கு அடுத்த நாள் திங்கள்
ஞாயிறு அம்மா செய்வாள் பொங்கல்
திங்களுக்கு அடுத்துச் செவ்வாய்
தித்திக்கும் அரிசி செம்பூவாய்
செவ்வாய்க்கு அடுத்த நாள் புதன்
சொன்னதைச் செய்வான் ஆதன்
புதனுக்கு அடுத்த நாள் வியாழன்
இசையை மீட்டுவான் யாழன்
வியாழனுக்கு அடுத்த நாள் வெள்ளி
விளையாடு நீயும் துள்ளி
வெள்ளிக்கு அடுத்த நாள் சனி
மார்கழியில் கொட்டும் பனி
– சரவிபி ரோசிசந்திரா