maainthazinthathu poetry written by jaleela musammil கவிதை: மாய்ந்தழிந்தது - ஜலீலா முஸம்மில்

கவிதை: மாய்ந்தழிந்தது – ஜலீலா முஸம்மில்

ஒரு மெல்லிய இசையைப் புதிதாகக் கேட்டுப் பிடித்துப்போவது போல இருந்தது நம் முதல் சந்திப்பு! நேசம் என்பது ஒற்றைச் சொல்... ஆனால், அது வியாபித்துக் கிடப்பது பிரபஞ்சத்தின் துணிக்கைகளிலும்! பவனிவரும் பால்வீதிகளிலும்! நதி இறுகிக் கல்லாகும்... கல் கரைந்து கலந்து நதியாகும்...…
kavithai: perunthee aval by dr jaleela musammil கவிதை: பெருந்தீ அவள் - Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: பெருந்தீ அவள் – Dr ஜலீலா முஸம்மில்

அவளே அன்பின் சொர்க்கமும் நரகமும் அவளே வாழ்க்கையின் தாகமும் தண்ணீரும் அவளே ஏகாந்தம் அவளே கொண்டாட்டம் அவளொரு தேவதை அவளொரு பிசாசு மேகமாகவும் கவிவாள் புயலெனவும் உருவெடுப்பாள் மழையாகவும் பொழிவாள் புயலாகவும் சுழல்வாள் இரகசியங்களை இறுக்கிக்கொண்டு இதழ் வழி புன்னகை விரிப்பாள்…
Samakala natappugalil marxiam webseries 9 by N. Gunasekaran சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

நாடுகள் ஏன் தோல்வி அடைகின்றன? இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஒரு இணைய நிகழ்வில் பேசுகிறபோது “தோல்வி அடைந்த ஒரு நாடு,இலங்கை” என்று தனது நாட்டைப் பற்றி குறிப்பிட்டார்.இந்த தோல்விக்கான காரணங்களையும் அவர் பேசியுள்ளார். அரசியல்,நீதித்துறை,காவல்துறை,பொது சேவைகள் என அனைத்து…
Pavalar Karumalai Thamizhazhanin Poems பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




என்று முடியும் இந்தக் கொடுமை
****************************************
கயர்லாஞ்சி மகாராட்டிர மாநிலத்தில்
கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்
வயலினிலே தினமுழைத்தே அந்த ஊரில்
வாழ்ந்திட்ட சுரேகாஓர் தலித்துப் பெண்ணாம்
உயர்தற்குக் கல்விநல்ல ஏணி என்றே
உணர்ந்ததனால் ஓரளவு கற்றி ருந்தாள்
தயக்கத்தைத் தகர்த்தெறிந்தே கணவ னோடு
தன்சாதிக் கீழ்மையினை எதிர்த்து நின்றாள் !

ஆதிக்கச் சாதிவெறி அரக்கர் தம்மின்
அடக்குமுறை கொடுமைக்குப் பதிலு ரைக்க
சாதிமாறி அம்பேத்கார் சென்ற தைப்போல்
சார்ந்திட்டாள் புத்தமத அரவ ணைப்பில்
வீதியிலே குடிசையாக இருந்த தன்னின்
வீட்டைக்கல் வீடாக்க முனைந்த போது
மோதியுயர் சாதியர்கள் தடைகள் செய்தே
மொத்தமாக வெளியேற்ற முனைந்து நின்றார் !

வீட்டிற்கு மின்சாரம் துண்டித் தார்கள்
வீட்டினிலே வளர்த்துவந்த ஆடு மாட்டை
கேட்காமல் பலர்சேர்ந்தே தடுத்த போதும்
கேள்விமுறை இல்லாமல் ஓட்டிச் சென்றார்
வீட்டோடு விவசாயம் செய்வ தற்கும்
விட்டிடாமல் கால்வாய்நீர் தடுத்து நின்றே
கூட்டாக வயலையுமே பொதுப்பா தைக்குக்
குறிவைத்தே வன்முறையால் பறித்துக் கொண்டார் !

எதிர்த்திட்ட சுரேகாவின் குடும்பந் தன்னை
எழுபதிற்கும் மேற்பட்ட கிராமத் தார்கள்
குதித்துவந்து குண்டுகட்டாய்த் தூக்கி வந்து
குரூரமாகத் தெருவினிலே நிற்க வைத்து
விதித்திட்டார் அவள்மகனைத் தங்கை யோடு
விலங்கைப்போல் உறவுகொள்ள துன்பு றுத்தி
மிதித்திட்டார் ! மறுத்ததனால் அவன்உயிர் நிலையை
மிருகம்போல் நசுக்கியுயிர்ப் பறித்துக் கொன்றார் !

இலங்கையிலே தமிழர்க்கு நடந்த போன்றே
இங்கேயும் சுரேகாவை பெற்றெ டுத்த
குலமகளைப் பகற்பொழுதில் பல்லோர் காணக்
குதறிட்டார் கூட்டாக உறவு கொண்டு
நலமாக சுயமானம் கொண்டு வாழ
நற்கனவு கண்டவளைக் குடும்பத் தோடு
நிலம்மீது பிணமாக வீழ்த்தி விட்டார்
நின்றெரியும் உயர்சாதி வெறித்தீ யாலே !

மதிகாண சந்திராயன் அனுப்பி யென்ன?
மங்கல்யான் செவ்வாய்க்கு விடுத்து மென்ன?
விதிமாற்றி வல்லரசாய் இந்தி யாவை
வியக்கின்ற படிஉயர்த்த முயன்று மென்ன?
மதிதன்னில் சாதியத்தை நீக்கி விட்டு
மனந்தன்னில் மனிதத்தைப் பதிய வைத்துப்
புதுமாற்றம் சாதியற்ற இந்தி யாவாய்ப்
புலராத வரையெந்த புகழும் வீணே !

( மகாராட்டிர மாநிலத்திலுள்ள கயர்லாஞ்சி ஊரினிலே நடந்த நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்ச்சி )

தூக்கிலிட்டால் சாமோ சாதி
************************************
பெரியாரின் அயராத உழைப்பி னாலே
பெரும்மாற்றம் தமிழ்நாட்டில் வந்த போதும்
விரியாத மனந்தன்னைக் கொண்டி ருப்போர்
விட்டிடாமல் பிடித்துள்ளார் சாதி தன்னை
நெரிக்கிறது கழுத்துதனைக் காதல் செய்தோர்
நிம்மதியாய் வாழ்வதற்குச் சேர்த்தி டாமல்
செரிக்காத உணவுடலைக் கெடுத்தல் போல
செய்கிறது சாதியிந்த சமுதா யத்தை !

நகரத்தில் இருகுவளை போன தென்று
நாம்பெருமை பேசினாலும் கிராமத் துள்ளே
நகராமல் தேநீரின் கடைக ளுக்குள்
நாட்டாமை செய்கிறது இன்னும் நின்றே
முகம்மழிக்கும் நிலையத்துள் தலித்க ளுக்கே
முடிவெட்டின் கடைதன்னை உடைப்போ மென்றே
அகவெறியில் கன்னடத்தின் ஊப்ளி ஊரில்
அறிவித்தே தடுக்கின்றார் சாதி யத்தால் !

தீண்டாமை பெருங்குற்றம் என்றே சட்டம்
தீட்டியிங்கே வைத்தென்ன நாளும் நாளும்
வேண்டாத மருமகளின் கைபட் டாலே
வெறுக்கின்ற மாமியாரின் முகத்தைப் போல
காண்கின்றோம் உயர்சாதி வெறியர் செய்யும்
கலகத்தை வன்முறையை நாட்டி லெங்கும்
தூண்டுவோரை துணையாக உடன்நிற் போரைத்
தூக்கிலிட்டால் தான் இந்த சாதி சாகும் !

Ceylon Special Egg Parotta (சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா) Short Story By Dr.Balasubramanian K, Book Day is Branch of Bharathi Puthakalayam.

*சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா 



சென்னைக்கு 90களில் பஞ்சம் பிழைக்க, சொந்த ஊராம் ‘நைனார் பாளையத்தை’ விட்டு வந்து.. மூன்று நாளாகியும், வேலை வெட்டி கிடைக்காத துயரத்தில், பசியோடு..தேவி தியேட்டர் வாசலில் பராக்கு பார்த்தபடி நின்றிருந்தான்… நம் கதாநாயகன் சேகர்…..

அம்மாவுக்கு தெரியாமல் ஒரு டஜன் கன்னிக்கோழி முட்டையையும், ஒரு படி விதை நெல்லையும், வந்த விலைக்கு விற்று, சொல்லாமல் கொள்ளாமல், சென்னைக்கு லாரி ஏறி வந்த, அவனுக்கு சென்னை இன்னும், கைகொடுக்காததால், ஊர் திரும்பும் யோசனையில் இருந்த போது, காலில் ஏதோ பேப்பர் போல் தட்டுப்பட, குனிந்து பார்த்த போது, அது ஒரு 500 ரூபாய் தாள் என்று உணர்ந்து, டக்கென்று, கால் பாதத்தில் மறைத்து கொண்டான். நல்ல வேளை, இன்னும் முதல் காட்சி முடியாததால், கூட்டம் அதிகம் இல்லை.. சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் கவனித்ததாக தெரியவில்லை…

மெள்ள அதை குனிந்து எடுக்க முயன்றபோது, ஒரு, அழகிய, நவீன உடை அணிந்த நவநாகரீக யுவதி, இவனை பரபரப்புடன் நெருங்கி, ,” சார் சார்! 500 ரூபாய் நோட்டை பார்த்தீங்களா?”, என வினவ, சேகர் உஷாராகி, “500 ரூபாய் நோட்டை நான் இதுவரை பார்த்ததே இல்லை.!.எந்த கலரில் அது இருக்கும்? ” என நகைச்சுவையுடன், நிலைமையை சகஜமாக்க முயன்றான்.

அவளோ கவலை தோய்ந்த முகத்துடன், “இல்ல சார், பர்ஸ்ல இருந்து எடுக்கும் போது, கைதவறி, காத்துல, உங்க பக்கமா பறந்து போச்சி சார், அதான் கேட்டேன் சார்” என விசனப்பட, சேகர் “ஐயோ பாவமே! நான் பாக்கலியேம்மா”, என்று கூறி, நின்ற இடத்தில் இருந்து கொண்டே பார்வையால்.. அங்கும் இங்கும் தேடுவது போல் பாசாங்கு செய்தான்..

சிறிது தேடலுக்கு பின் “சேரி சார்!எங்க போச்சுன்னே தெரியல சார் ” என்று அவள் ஏமாற்றத்துடன் நகர, இவன் மனமோ “ரொம்ப சாதுவான ஏமாளி பொண்ணு போல! , நம்பள அதட்டி கிதட்டி கேள்வி ஏதும் கேக்கல!” என குதூகலித்தான்..

வெகு இரகசியமாய், அதை மீட்டு, அந்த புத்தம்புது சலவை நோட்டை, சட்டைப்பையில் பத்திரப்படுத்தினான்..

அவன் மனமோ “சென்னையில் இப்படி எல்லாம் கூட நடக்குமா.? இவ்வளவு எளிதில், இவ்வளவு பணமா..?? இனி சென்னையை விட்டு போகவே கூடாது” என சங்கல்பம் செய்து கொண்டான்.

இந்தப் பெரும் தொகையில் என்னென்னவெல்லாம் வாங்கலாம்? என மனக்கணக்கு போட்டான்.. 10 ரூபாய் நோட்டை கூட, பார்த்து பல மாதம் ஆன அவனுக்கு அந்த 500 ரூபாய் பிரமிப்பைக் கொடுத்தது.

‘முதலில் நல்ல சட்டை பாண்ட், ஜட்டி, கைக்குட்டை, செருப்பு இத்யாதிகள் வாங்கணும்,…

பாவம் அம்மா, அவளுக்கு ஒரு 50 ரூபா மணி ஆடர் அனுப்பணும்,’ என்று யோசிக்க, அவன் காலியான வயிறோ பசியை உணர்த்த , ‘முதலில் நல்ல மிலிட்டரி ஓட்டலா பார்த்து ஒரு புடி புடிக்கணும்’ என முடிவுசெய்து, புகாரி ஓட்டல் பிரம்மாண்டமாய் தெரிய, உள்ளே நுழைந்து..

சர்வரிடம்.. பணம் இருக்கும் தோரணையில் “என்ன சூடா இருக்கு? ” என கேட்க, அவன் பதிலுக்கு மெனுவை அடுக்கிக்கொண்டே போக.. அவன் உச்சரித்த “சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா” என்ற அந்த வினோத பெயரில் லயித்து, அதை கொண்டு வர ஆர்டர் செய்கிறான் ..

அதை, பார்த்து, ரசித்து ருசித்து, அதன் சுவையில் சொக்கிப்போய்.. மேலும் அதே ஐட்டத்தை ஆர்டர் செய்து சாப்பிட்டு, ஐஸ் க்ரீம், பீடா, வாழைப்பழத்துடன், தன் மெனுவை நிறைவு செய்கிறான்.. ‘ஆஹா சென்னை, சென்னை தான்’, என்று மனதுள் பாராட்டிக்கொண்டான் !,

சர்வர் பவ்யத்துடன் கொண்டு வந்த பில்லில் ரூ 57.60.. என போட்டிருக்க, அவன் அலட்சியமாய், அந்த ஐநூறு ரூபாய் நோட்டை தட்டில் வைக்கிறான்..மீதிக்காக காத்திருக்கிறான்…

கல்லாவில் இருந்த ஆஜானுபாகுவான முஸ்லீம் பாய், நோட்டை மேலும் கீழுமாய் நோட்டமிட்டு, சர்வரிடம் ஏதோ, காதில் சொல்ல அவர் உஷாராகிறார்..
இவன் சில்லறை பணத்தை, எதிர்பார்த்தபடி, ‘அடுத்து எந்த கடைக்கு செல்லலாம்’ என யோசனை செய்ய., இவன் சட்டை காலரை… இரண்டு போலீஸ்காரர்களின் முரட்டு கரங்கள் பற்றி தூக்கி , “யாருடா நீ . உன்கூட எத்தினி பேர்டா, இப்டி கள்ள நோட்டு மாற்ற கிளம்பி இருக்கீங்க?? , நடடா ஸ்டேஷன்க்கு!” என மிரட்டியபடி இழுத்து சென்றனர்..

தூரத்தில் ஒளிந்திருந்த, அந்த நவ நாகரீக யுவதியும், அவள் கூட்டாளியான ஒரு முரட்டு ஆசாமியும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ச்சே! இந்த வாட்டியும் ஃபெயிலியர் ஆயிட்ச்சே!.. கள்ள நோட்டுன்னு கண்டுபுடிச்சிட்டாங்களே..! பாஸ், நாம கள்ள நோட்டு, இன்னும் நல்லா அச்சடிக்க முயற்சி செய்யணும் “என்று அவள் அவனிடம் ஏமாற்றத்துடன் புலம்ப, அடுத்த முயற்சிக்கு ஆயத்தம் செய்ய.. இருவரும் எஸ்கேப் ஆயினர்..

நம் சேகரோ “சார் சார்! எனக்கு ஒண்ணுமே தெரியாது சார்!, என்ன உட்ருங்க சார்!, நான் ஊர்நாட்டுக்காரன் சார், என் ஆத்தா என்ன தேடும் சார்!” என்று அழுது அரற்றிய அந்த கூச்சல், காவலர்களின் காதுகளில் விழுந்ததாகவே, தெரியவில்லை…

சென்னை அவன் கண்களுக்கு, இப்போது கொடிய நரகமாக தெரிந்தது.!

******************

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

        நந்திக்கடலில் மிதக்கிறது லட்சம் பிணங்கள். கண்ணையும்,மனசையும் கட்டும் வலிமிகு சொற்கள் இவை.தொட்டகைமுனு எனும் சிங்கள மன்னனுக்கும்,எல்லாளனுக்கும் துவந்த யுத்தம் இது என எவரும் இப்போது துவக்குவதில்லை. மாறாக எல்லாவற்றையும் முள்ளி வாய்க்காலின் துயர நாட்களில் முன்னும் பின்னுமாக அலைந்தே எழுதுகிறார்கள். நம்காலத்தின்…
ஏதிலி – அ.சி.விஜிதரன் | மதிப்புரை வெண்மணி 

ஏதிலி – அ.சி.விஜிதரன் | மதிப்புரை வெண்மணி 

ஈழப்போரின் தாக்கங்களை செய்திகள், திரைப்படங்கள், ஒரு சில நாவல்கள், தமிழ் தேசியத் தலைவர்கள் பேச்சுகளின் மூலம் ஓரளவு அறிய முடிந்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் அகதி முகாமிலிருந்து, வந்து படித்த ஒரு சில மாணவர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த தோழிகளின் மூலம் அவர்களின் வாழ்க்கை,…
ஈழப்போர் குறித்து பேசும் பார்த்தீனியம் – தமிழ்நதி | மதிப்புரை ராம்கோபால்

ஈழப்போர் குறித்து பேசும் பார்த்தீனியம் – தமிழ்நதி | மதிப்புரை ராம்கோபால்

ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு "பார்த்தீனியம்". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு. அப்படியே ஷோபாசக்தி அவர்களின் "ம்", “கொரில்லா", “இச்சா"…