இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67 – சுகந்தி நாடார்
எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்
திறவூற்றுத் தொழில்நுட்பமும் Github இன்றைய பாளச்சங்கிலித் தொழில்நுட்பமும் தொழில்நுட்ப ஏகாதிபத்தியத்தில் கோலோச்சும் நிறுவனங்களின் எதிரொலி தான் நிரலர்களின் கணினி வழி சங்கமம் நிறுவனங்கள் தங்கள் இலாபக் கணக்கை ஏற்ற தொழில்நுட்பங்களை தங்கள் கைக்குள் முடக்கிப் போட்டதன் விளைவு இன்று பாளச்சங்கிலி தொழில்தர்மமாக வெளிப்பட்டு இருக்கின்றது, படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் குறிப்பிட்ட கணக்கீடு முறையில் விடுவிக்கப் படும் ஒரு கணிதப்புதிர் போலத் தோன்றினாலும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம் எதிர்காலப் பொருளாதாரத்தில் மிக முக்கியப்பங்கு வகிக்கும் என்பது உண்மை.
European central bank எண்ணியியல் அகழ்தலும் எண்ணியியல் செலவாணியும் உலகப் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் என்று கூறுகின்றது. இன்று தனி எண்ணியியல் செலவாணி அகழ்பவர் பொது அருகலை வழியாக மற்றக் கணினிகளின் செயல்முறை சக்திகளைத் திருடி எண்ணியியல் செலவாணிகளை அகழ்கின்றனர்(cryptojacking) என்று MacaFee என்ற கணினிபாதுகாப்பு மென்பொருள் தயாரிக்கும் நிருவனம் கூறுகின்றது எங்கெங்கு கொளவு எண்ணியியல் அகழ்வு தொடங்கப்படுகின்றதோ அங்கெல்லாம் சிறிது சிறிதாக இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றது என்பதை பாளச்சங்கிலித் தொழில்நுட்பம் தொடர்பான செய்திகள் வலியுறுத்துகின்றன.
எண்ணியியல் செலவாணிக்கு உரிமையாளர் யாரும் இல்லை. ஆனால் அதை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களுக்கு உரிமையாளர்கள் இருப்பார்கள் தானே?இவர்கள் தான் எண்ணியியல் செலவாணியை முனைப்பாக சந்தைப்படுத்துகின்றனர். தங்களைத் தாங்களே நாளையப் பொருளாதாரத்தின் முன்னோடிகளாகச் சொல்லிக் கொள்கின்றனர். இத்தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தி புத்தகங்களும் தொலைக்காட்சியிலும் பேசி வருகின்றனர். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த ஊடகங்கள் வழி செய்திகளைக் கேட்பவர்களும் செய்திகளைச் சொல்பவர்களும் நிரலர்கள் இல்லை. இவர்கள் நிச்சயமாய் பாரம்பரிய பொருளாதார வல்லுனர்களே. ஆனாலும் ஒரு நிரலர் சொல்வதை ஆராய்ந்து பார்க்கும் நிரல் அறிவு இவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. பங்குச்சந்தையில் எண்ணியியல் செலவாணியின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க செய்தியாளர்களின் கவனம் அதைப்பற்றி விவாதிப்பதிலேயே இருக்கிறதே தவிர இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையை பயனாளர்களுக்கு விளக்கிச் சொல்ல இங்கே யாரும் இல்லை.
இன்றையத் தலைமுறையினராக இருக்கும் எண்ணியியல் அகழ்வாளர்களும் எண்ணியியல் செலவாணி நிரலர்களும் இன்றைய மின் எண்ணியியல் தலைமுறை என்பதால் இவர்களின் சிந்தனையும் செயல்பாடும் அவர்களின் கைகளில் தவழும் திறன்பேசியில் உள்ளக் குறுஞ்செயலிகளோடேயாகும். இப்படிச் சொல்வதைவிட திறன்பேசியில் பார்க்கும் விவரங்கள் தான் இன்றைய இளைய சமுதாயத்தின் உலகமே என்று சொன்னால் சரிவரும் உலக நடைமுறையில் இவர்கள் ஒரு புற வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணம் சிந்தனை செயல்பாடு அனைத்துமே அவர்களின் திறன் பேசிக்குள் அடங்கி விடுகின்றது. அவர்களுக்கான இந்த மின் எண்ணியியல் உலகத்திற்கு நுண்தரவுலகம் (meta universe) என்ற ஒரு கலைச்சொல்லே உருவாகி விட்டது எனும் அளவிற்கு இன்றைய தலைமுறையினர் திறன்பேசி உலகிற்குள் மூழ்கி இருக்கின்றனர், இந்த மாறிவரும் குணாதிசயத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஒரு நபரைச்சுற்றி நடக்கும் உலக நிகழ்வுகள் அனைத்தும் மெய்நிகர் உலகத்தில் பிரதிபலிக்கபப்டுகின்றது. இத்தகைய ஒரு மெய்நிகர் உலகமே (meta universe) நுண்தரவுலகம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுலகில் மெய்நிகர் மக்களும் அவர்களுக்கான கடைகளும் பள்ளிகளும் ஏன் சமூக வலைதளங்களும் கூட இந்த மெய்நிகர் உலகில் இருக்குமாம்.
முகநூல் நிறுவனமும் இத்தகைய ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு அதை விளையாட்டாய் விளையாடிப் பார்ப்பார்கள் போல.இவர்கள் இந்த மெய்நிகர் உலகில் செலவு செய்ய எண்ணியியல் செலவாணிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. அதாவது தங்களுடைய பணத்தைப் பயன்படுத்தி எண்ணியியல் செலவாணிகளை வாங்கி அந்த எண்ணியியல் செலவாணிகளை செலவு செய்கின்றனர்.
கைபேசி உலகத்திலேயே வாழ்வதால் உடனுக்குடன் கிடைக்கும் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும், இன்றைய சமுதாயம் அடிமையாகி விட்ட காரணத்தால் என்ன செய்கின்றோம் ஏன் செய்கின்றோம் என்ற யோசனையே இல்லாமல் டிஜிட்டல் சந்ததி என்று சொல்லி சொல்லி சந்ததியே டிஜிட்டலாகி விடுமோ?
1841களில் சார்ல்ஸ் மக்கே(Charles MacKay) என்பவர் 17ம் நூற்றாண்டில் நடந்த Tulip mania என்ற பொருளாதார நிகழ்வை வர்ணிக்கையில் 16ம் நூற்றாண்டின் இடையில் ஐரோப்பாவில் வாழும் டச்சு மக்கள் தங்கள் தாய் மண்ணில் விளையாத ஒரு அரிய வகை Tulip எனப்படும் காட்டுச்செண்பகம் என்று அழைக்கப்படும் மணிமலர்களில் தங்கள் முதலீட்டைச் செய்தனர். இந்த மணிமலர் விதைகளில் ஒருவித வைரஸ் தாக்கையஹ்டால் மலரின் இதழ்களில் வரிவடிவம் தோன்றியது. இது ஒரு நோய்வாய்ப்பட்ட மலர் என்று அறியாத பாமரர்கள் இந்த மலர்களை மிக அதிகமான விலையில் வாங்கினார்கள். மலர்களின் விதைகளையும் சேகரித்தனர்.
இவ்வாறு அதிக முதலீடு செய்து பெற்ற இந்த மலர்களை சில ஆண்டுகள் கழித்து உயர்ந்த விலைக்கு விற்கலாம்என்பதே ஒரு பெரிய எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பினால் மக்கள் ஆர்வத்தோடு வாங்கினார்கள். 1836 கடைசியில் 5 டச்சு கில்டருக்கு ( டச்சு செலவாணியின் பெயர்) விற்ற மணிமலர் பூ 197ம் ஆண்டு தொடக்கத்தில் 200 டச்சு கில்டராக உயர்ந்தது. அதே ஆண்டு இறுதியில் மீண்டும் 5 டச்சு கில்டருக்கே வந்து விட்டது. சார்ல்ஸ் மக்கே(Charles MacKay) என்று பொருளாதார வரலாற்றைப் பதிவு செய்கின்றார். இவரின் கருத்துப் படிடச்சு சமுதாயம் முழுவதுமே பொருளாதாரத்தில் அடிபட்டதாகத் தெரிகிறது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம்(Dutch East India Company மூலம் லச்சு மக்கள் பெற்றசெல்வத்தை இந்த மலர் மணி சந்தையில் இழந்ததாகத் தெரிகின்றது இவருடைய கருத்து கற்பனையால் மிகைப்படுத்தப் பட்டது என்று கூறப்பட்டாலும், உலகின் முதல்பொருளாதாரக் குமிழி என்று பிபிசி நிறுவனம் இந்த நிகழ்வை வர்ணிக்கின்றது. இதுவே ஐரோப்பிய நாடுகளில் முதல் முதலாக பணமாற்று சந்தை உருவாகியது என்றும் சொல்லலாம். இந்த மணிமலரின் ஆர்வக் கோளாறு போல இன்றைய இளைய சமுதாயத்தின் பொருளாதார நடவடிக்கைகள் எண்ணியியல் செலவாணியை மிகைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனரோ என்ற சந்தேகம் வருகிறது. செய்திகள் புத்தகங்கள் இணைய தளங்கள் அனைத்திலும் ஒரு சமுதாயத்தின் எதிர்காலமே எண்ணியியல் செலவாணி தான் என்று பேசுகின்றார்கள்.
charles schwab என்ற நிதி நிறுவனம் எண்ணியியல் செலவாணிகளை குலுக்கல் சீட்டு முறைக்கு ஒப்பிடுகின்றது. நிதி நிறுவனம் ஜேபி மார்கனின் தலைவர் அண்மையில் எண்ணியியல் செலவாணியைப் பற்றிக் குறிப்பிடும் போது அதைப் புகைப்பிடித்தலுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு தனி மனிதனாக அவர் எண்ணியியல் செலவாணியை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவரது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணியியல் செலவாணியில் முதலீடு செய்ய விரும்புகின்றனர் என்பதால் அந்நிறுவனம் பாளச்சங்கிலித் தொழில்நுட்பத்திற்கு என்ற ஒரு அணியை உருவாக்கி, JPM coin என்ற எண்ணியியல் செலவாணியை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கின்றனர்.
மனிதர்கள் சரியான வழியில் வாழ உதவுவது அறம். கணினிகள் சரியான முறையில் வேலைப்பார்க்கத் தேவையானது ஒரு கணக்கீடு மட்டும் தான். கணினி கணக்கீட்டு முறைகள் சரியாக இருந்தால் மனிதர்களின் வழிநடத்துதல் இல்லாமல் நாம் செய்யும் எல்லா வேலைகளையும் செய்து கொன்டு கணினிக் குடியிருப்பில் கணினிகள் இருக்குமோ என்னவோ?
கணினித் தொழில்நுட்பம் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா? அல்லது இந்த தொழில்நுட்பம் சமுதாயப் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. பொருளாதாரப் பாதுகாப்பும், அனைவராலும் நம்பத் தகுந்த ஒரு தொழில்நுட்பமாக எண்ணியியல் செலவாணித் தொழில்நுட்பம் வருங்காலத்தில் இருக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
எண்ணியல் செலவாணியின் இன்றைய நிலை, நிரலர்கள்தான் அவற்றை உருவாக்குகின்ற்னர். அதனால் இன்னும் 10 ஆண்டுகளில் பணப்புழக்கம் செய்ய வேண்டிய அனைவரும் நிரலர்களாக வேண்டியது அவசியம்.
செயற்கை அறிவுத் திறனின் இன்னொரு கிளைதான் எண்ணியியல் பாளச் சங்கிலித் தொழில்நுட்பம் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுபம் முன்னெறிவிட்டக் இக்காலத்தில் கணினி நிரலர்கல் இல்லாமலேயே கணினியே தனக்குத் தேவையான கணக்கீடுகளை உருவாக்கிக் கொள்ளக்கூடிய எதிர்காலம் வருமோ என்னெவோ?
மனைதர்களின் குணாதிசியங்களை மாற்றக் கூடிய அளவு முகநூல் கூகுள் அமேசான் ஸ்விகி ஆகிய நிறுவனங்கள் தங்கள் கணக்கீடுகளைக் கொண்டு மட்டுமே செயல்படும் போது ஒரு கணினியால் இன்னோரு கணினிக்கு கணிதப் புதிர்களை உருவாக்கவும் விடுவிக்கவும் கற்றுக் கொடுப்பது சிரமமா?
கணினி கணினியோடு பேசி மக்களைப் போல விளையாடவும் வியாபாரம் செய்யவும் இயற்கை மனிதன் வாழுவது போல கணினிகளின் உலகிலும் ஒரு மாய உலகம் சிருஷ்டிக்கப்பட்டு கணினிகள் தங்களுக்குள்ளேயே உறவாடிக் கொண்டிருக்கும் எதிர்காலம் தொலை தூரத்தில் இல்லை. தான் எப்படி இயங்க வேண்டும் என்று தனக்குத் தானே கணக்கீடுகளைப் போட்டுக் கொள்ளும் கணினியால் மனிதர்களின் அறம் என்றால் என்ன என்று புரிந்து செயல் பட முடியுமா? ஒரு கணினி என்ன யோசிக்கின்றது என்ன செய்கின்றது என்று மனிதர்களால் உணர முடியுமா?
மனிதனின் உதவியாளராக இருக்கும் கணினி தானே மனிதன் செய்யும் எல்லாவேலைகளையும் செய்து விட்டால் மனிதனுக்கு இப்புவிலகில் என்ன வேலை?
காலை எழுந்ததும் பரபரப்பாக அலுவலகம் கிளம்ப வேண்டாம். சாலைபோக்குவரத்தில் இடிபட வேண்டாம். கல்வி கற்க வேண்டாம். வேலைக்குப் போக வேண்டாம்.பணம் சம்பாதிக்கவும் வேண்டாம். நாம் செய்ய வேண்டியது எல்லாம் கணினிகளுக்கு ஒரு சரியான கணக்கீடு முறையைக் கொடுக்க வேண்டியது மட்டுமே. நம் எல்லா வேலைகளையும் கணினியைச் செய்ய பழக்கிவிட்டாள். உண்பதும் உறங்குவதும் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே மனிதனின் வேலையாகிப் போனால் நமக்கும் இன்னபிற உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்? நாகரிகத்தின் உச்சியில் மனிதர்களாகிய நாம் ஆதிகால மனிதனைப் போல விலங்கோடு விலங்காகத்தான் வாழ்வோமா?
கணினிகளை ஆள மனிதன் கற்றுக் கொள்ளாவிட்டால் இயற்கை அழிவோடு நம் கலாச்சாரம் பண்பாடு மொழி இலக்கியம் இலக்கணம் எல்லாவற்றிகுமே ஒரு பொருள் இல்லாமல் போய்விடும் தானே?
நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நம் கடந்த காலமும் நம்முடைய இன்றையப் பழக்க வழக்கங்களும் தான் சுட்டிக் காட்ட வேண்டும் கடன் அட்டைகளைக் கொண்டும் மின்னியல் பணப்பரிவர்த்தனைகளும் பெருகியுள்ள காலத்தில் இன்று அமெரிக்க நாட்டில் நாணையத் தட்டுப்பாடு சிறு நிறுவனங்கலையும் உணவு விடுதிகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் சிறியத் தொகை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு சரியான சில்லறை கொடுக்கும் படி வேண்டுகோள் அனைத்து வியாபாரங்களிலும் காணலாம். பல தொண்டுநிறுவனம் மக்களிடமிருந்து சில்லறைகளை தானமாகப் பெற்று தங்கள் செயல்பாடுகளைச் செய்பவர் தற்போது மக்களிடமிருந்து சில்லறை கிடைக்காமல் நிதி வசூலிக்க முடியாமல் இத்தொண்டு நிறுவனம் திண்டாடுகிறது. அமெரிக்க அரசும் தன்னுடைய கடன் வாங்கும் திறனை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ செய்து வருகிறது. இது உண்மைநிலை. ஆனால் இங்கே கண்னுக்குத் தெரியாத ஒரு செலவாணியை உருவாக்கி அதை பொருளாதார உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.
கடன் அட்டைகள் பயன்பாடும் அதனால் மாறிய உலகத்தையும் நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டு யோசிப்போம்
பணம் என்பது மனிதன் உருவாக்கியது/ அதன் மதிப்பு அதைக் கையால் தொட்டுத் தடவி செலவழிக்கும் போது நாம் யோசித்துச் செயல்படுகின்றோம். கடன் அட்டைகள் வந்தவுடன், வரவு செலவுபார்க்காமல் கடன் வாங்கி தங்கள் பொருளாதாரத்தைக் குலைத்துக் கொண்டவர்கள் ஏராளம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் திவாலாகி விட்டதாகக் கொடுக்கும் அறிவிப்புக்களில் 97% தனிமனிதர்கள் என்று statista என்ற தளத்தின் ஆய்வு கூறுகிறது. நல்ல வேளையாக அப்படி அறிவிப்பவர்களின் 5% கண்டபடி செலவு செய்ததனால் வருகிறது என்றும் அத்தளம் கூறுகிறது. மேலும் 2019ல் அப்படி அறிக்கை விட்டவர்கள் 774940 என்று 2020ல் 544463 என்றும் அமெரிக்க அரசு கூறுகின்றது. இன்று அமெரிக்க மக்கள் தொகை ஏறத்தாழ நானூறு மில்லியன்.
அப்படியென்றால் 2020ல் தாறுமாறாக செலவு செய்ததினால் திவால் அறிக்கை விட்டவர்கள் 27223 நபர்கள் என்பது மிகக் குறைவானத் தொகையே. இருந்தாலும் எண்னியியல் செல்வாணியின் பாதிப்பு எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த வரலாற்று உதாரணம் நம்பிக்கையைத் தருகிறது. என்ன தான் பொருளாதார வல்லுனர்களும் எண்னியியல் செலவாணி நிரலர்களும் எண்னியியல் செலவாணிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினாலும் உலக அளவில் பொதுமக்கள் தங்களுடைய பாரம்பரிய பொருளாதார செயல்பாடுகளை விட்டு விடாமல் தங்கள் வாழ்க்கைத் திறனுக்கு ஏற்றபடி செயல்படுவார்கள் என்று இன்றைய மாணவர்களிடமும் நாளைய ஆசிரியர்களிடம் தான் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
இன்னும் பார்க்கலாம்…
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 59 (எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 62 (இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 63 (இராட்சத கொளவு எண்ணியியல் அகழ்தல் ஏன்?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்