சோளக்காட்டு பொம்மை கவிதை – ச. சக்தி
பாறையில் முளைத்த
மரங்கள் அழுகின்றன,
தூரத்திலிருந்து
பூமியை நோக்கி
அருவிகளிலிருந்து அதிரும்
நீரின் சத்தம்,
மஞ்சள் பூசிய முகங்கள் வாடுகின்றன
தலைவன் பறத்தலோடு போனதால்,
வண்டுகள் தலையை
மேய்ந்து கொண்டிருக்கின்றன
மேயும் ஆடுகள் பாறையின்
மீது ஓடி விளையாடுகின்றன,
பாறைகளின் மீது முளைத்த
ஆலமர கிளையில் அமர்ந்த சிட்டுக்குருவிகள்,
நிலத்தில் பாயும் நீரில்
அடித்துவரப்படும்
ஏரி மீன்களும் தவளைகளும்,
விளைந்த நெற்பயிர்களைக்
கடித்து தின்னும் தட்டாம்பூச்சிகள்,
பறை இசை கேட்கிறது களத்து
மேட்டில் சிட்டுக்குருவிகளை விரட்ட,
நெல்மணிகளைப் பறித்துக்கொண்டு
பறந்து போகின்றன
அரசமர
கிளைகளை நோக்கி,
பச்சைக் கொடி பறக்கிறது
வயல் நிலங்களில்,
கோமணம் கட்டிய விவசாயி
ஓடை நீரில்
மிதக்கும் சட்டையும் வேட்டியும்,
பேண்ட்,சட்டை அணிந்த சோளக்காட்டு பொம்மைகள்……!!!!!
ச,சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986