Vali Poem By Sambath சு.சம்பத்தின் வலி கவிதை

வலி கவிதை – சு.சம்பத்




ஆசிரியராய் நான்
ஆனபின் இப்போது
‘ஆண்டை’ வீட்டுக்குப்
போனால் போதும்
அதிசயமாய் என்னை மட்டும்
‘அணைக்குடி சம்பத் வாங்க’
என்று
அன்பொழுக அழைத்துச் சென்று
நாற்காலியில் அமர வைத்துத்
தேநீர் கொடுக்கின்றார்கள்
ஆனால்
அப்பா தம்பியையெல்லாம்
இன்னமும்
அதே கொல்லைப் பக்கமாகத்தான்
அழைத்துச் சென்று
தேநீர் கொடுக்கின்றார்கள்