உலக மிகக் கடுமையான வெப்பநிலை குறையப் போவதில்லை Extreme Heat (degrees Celsius) are not going to drop in World |Chandraguru Thalamuthu| - https://bookday.in/

கடுமையான வெப்பநிலை குறையப் போவதில்லை

மிகக் கடுமையான வெப்பநிலை குறையப் போவதில்லை உலக வெப்பநிலை பதிவு செய்யப்படத் துவங்கிய 1850ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் கடுமையான வெப்பம் மிகுந்த ஆண்டாக 2023ஆம் ஆண்டு இருந்துள்ளது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2023ஆம் ஆண்டு வெப்பநிலை 2016ஆம் ஆண்டில்…
வெப்பத்தால் தகிக்கும் சென்னை இந்தியாவிற்கு முன்னுதாரணமாகத் திகழலாம் Explore the climate change in Chennai (சென்னை காலநிலை மாற்றம்). Witness the increasing temperatures, heatwaves, and volatile weather - https://bookday.in/

வெப்பத்தால் தகிக்கும் சென்னை

வெப்பத்தால் தகிக்கும் சென்னை இந்தியாவிற்கு முன்னுதாரணமாகத் திகழலாம்  கடலோர நகரான சென்னையில் காற்றில் உள்ள ஈரப்பதம் வியர்வையின் குளிரூட்டும் விளைவைக் குறைப்பதற்கான வழியை வகுத்துத் தருகிறது.  அதன் விளைவாக வெப்பநிலை அதிகரிப்பு, தளர்வடையச் செய்யும் வெப்ப அழுத்தம், சோர்வு மற்றும் ஆபத்தான…
ஹைக்கூ | Haiku | க. புனிதன் | Punithan

ஹைக்கூ மாதம் – “புனிதனின் ஹைக்கூ முத்துக்கள்”

வசந்த காலம் பூ மரத்தை அசைத்தேன் வெண் கொக்குகள் பறந்தன .... நீர் பாய்ச்சும் வயல் மடை மாற்றும் முன் புருவத்தைத் திருத்தினேன் .... முட்டப் பார்க்கும் மேய்ச்சல் மாடு பனித்துளியில் தெரியும் முகம் .. மழைநீரைப் பருகினேன் குளிர்ச்சியாய் மலர்ந்திருந்தன…
உண்மை கவிதை – எஸ் வி வேணுகோபாலன்

உண்மை கவிதை – எஸ் வி வேணுகோபாலன்




உன்னை அறிந்தவர்கள் பலரும்
பரிச்சயம் அற்றவர்கள் போல்
விலகிப் போகின்றனர்

உன்னை மறுப்பார்
நெய்து கொண்டே இருக்கின்றனர்
நெருப்பை மூடும் சீலைத் துணியை

அறியாதோர், பாவம்
திரும்பத் திரும்ப
உற்றுப் பார்த்து விட்டு
மன்னிச்சுக்கப்பா என்று
முணுமுணுத்தபடி
கடந்து போய் விடுகின்றனர்

வெயில் காய்ந்து தீய்க்கிறது
மழை பொழிந்து தள்ளுகிறது
விறைக்கிறது குளிர்
வெக்கைப் புழுக்கம் சில போது

அப்போதும் மங்கவில்லை உன் புன்னகை

இப்போது அருகே சத்தம் கேட்கிறது…
மெல்ல நெருங்குகிறது
ஒரு ஜேசிபி எந்திரம்.

– எஸ் வி வேணுகோபாலன்

தர்மசிங் கவிதைகள்

தர்மசிங் கவிதைகள்




வேடங்கள்
*************
கொதிக்கும் வெயிலை
வலைக்குள் அடைத்து
நடுங்கும் குளிரை
நயமாய் துரத்துவோம்
என்றீர்கள்

மழையின் வேர்களை
நடவு செய்யும் முறையை
மழலைப் பருவத்திலேயே
புத்திக்குள் புகுத்துவோம்
என்றீர்கள்

சூரியக் கீற்றுகளை
கட்டுகளாக கட்டிவைத்து
உங்கள் உள்ளத்து இருளை
விரட்டியடிப்போம்
என்றீர்கள்

காற்றின் எல்லைகளை
வரைமுறைப் படுத்தி
உங்கள் சுவாசங்களுக்கு
உத்தரவாதம் தருவோம்
என்றீர்கள்

வசந்தத்தின் தூதுவர்களே
வருகவென்றோம்

முள் வேலிகளால்
எங்கள் பாதைகளை
முடக்க முயன்றபோது தான்
புரிந்தது

நீங்கள்
சொக்கும் சொற்களால்
வானம் படைப்பவர்கள்

நறுமணப் பூக்களால்
தீ வளர்ப்பவர்கள்

சிதைகளின் நெருப்பில்
குளிர் காய்பவர்கள்
என்பது…

எங்கள் வழியை மறித்தீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் கைகளில் விலங்கிட்டீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் அங்கங்களை உரசினீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் மர்ம உறுப்புகளை
ஆயுதங்களால்
சிதைத்த போதுதான்
உயிர் வலியால்
நடுங்கிப் போனோம்

பலவான்களே!

உங்கள் இதயத்தில்
எப்போதாவது
ஈரம் கசிந்தால்
உங்கள் வேடங்களை
களைந்து விடுங்கள்

பாதுகாவலர்கள் எனும்
பதத்தை கேட்டாலே
நெருப்பு பொறி பறக்கிறது
நெஞ்சாங்கூடுகளில்…

வலி
******
காலை வேளையில்
இணைந்து நீராடும்
நண்பர்களோடும்

பணிக்குத் திரும்புகையில்
புன்னகைக்கும்
உள்ளூர் உறவுகளோடும்

பேருந்து நிறுத்தத்தில்
பத்துநிமிட
தோழர்களோடும்

அருகாமை இருக்கைகளில்
பயணிக்கும்
நாற்பது நிமிட நேர
சக பயணிகளோடும்

பணியிடத்தில்
பத்துமணி நேர
உடன் ஊழியர்களோடும்

புதிது புதிதாய்
நிதமும் சந்திக்கும்
வாடிக்கையாளர்களோடும்

இரவு வீடு திரும்புகையில்
மாமூலாகப் பயணிக்கும்
பேருந்தின்
நெருக்கமான நடத்துனர்களோடும்

இறங்குமிடத்தில்
வீடுதிரும்ப
தயாராகிக் கொண்டிருக்கும்
தையல்கடை நண்பரோடும்

அண்டை நாட்டு
நிகழ்வுகளையும்
உள்நாட்டு அரசியலையும்
குடும்ப வலிகளையும்
சின்னச்சின்ன
மகிழ்வுயகளையும்

பரிமாறிக் கொள்ளும்
வாய்ப்பினை இழந்து

அலை பேசியோடும்
தொலைக் காட்சியோடும்
போராடுகிற நிலையில்
வீட்டுக்குள் முடக்கிய
இந்த கொரோனா கால
” லாக் டவுண் ”
மனநலத்தை சோதிக்க

உள்ளுணர்வில்
மனதை மௌனமாக
உறுத்திக் கொண்டேயிருக்கிறது

வீட்டுச் சுவர்களை
தனது எல்லைகளாக்கி
நாட்களை நகர்த்தும்
வாழ்க்கைத் துணையின்
வலி…

நமக்கென்ன?
****************
பிளந்த மண்டையிலிருந்து
பீரிடுகிறது ரத்தம்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

கைகளின் மொத்த பலமும்
லத்தி வழி நுழைகிறது
முழங்கால்களில்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

முதுகில் வரிவரியாய்
ஆயுதங்கள் முத்தமிட்ட
சிவப்புத் தடங்கள்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

விரலுக்கு மீறிய
வீக்கங்கள்
வெண்கட்டுகளுக்குள்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

கிழித்து வீசப்பட்ட
துப்பட்டாக்களில் படிந்து கிடக்கிற
கண்ணீரின் ஆறாத வலிகள்
அவளுக்குத் தானே
நமக்கென்ன?

சுதந்திரமாய் சீறும்
துப்பாக்கி முனையின் முன்
அவனது மார்பு தானே
நமக்கென்ன?

அந்நியருக்கான நேற்றைய
வலி வடிவங்களில்
இன்று நானாக இருக்கலாம்
நாளை நீயாக இருக்கலாம்
மறுநாள் அவனாக இருக்கலாம்

நம் மௌனமே
நம் வாழ்வுக்கு ஆதாரமானால்
நாளையே படரும்
நம் செவிப்பறைகளிலும்

” அவனுக்குத்தானே
நமக்கென்ன?”…

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…

Aaratha Aru Kuzhanthaigal Childrens ShortStory By Era. Kalaiyarasi ஆறாத ஆறு குழந்தைகள் கதை - இரா. கலையரசி

ஆறாத ஆறு குழந்தைகள் கதை – இரா. கலையரசி




“கசகச னு ஒரே வியர்வையாக இருக்கு. வெயில்காலம் ஆரம்பிச்சிருச்சுல அதான்”.பேசியபடி தண்ணீரில் மூக்கை அலசிப் பார்த்தது மித்து.

நெடி தாங்க. முடியாமல் அப்படியே பின்னுக்கு ஓடியது.’இது என்ன?இப்டி ஒரு வாடை,.ஆத்து தண்ணீர் கெட்டு போயிருச்சோ?’

“படிச்ச மனுசன் பாடு தான் பாட்டா பாடுது ஊருதான்”.

தத்துவ தாத்தா ஆந்தை பாடியவாறே அங்க வந்தார். “என்ன எல்லாரும் ஆத்தோரமா நின்னுட்டீங்க?”னு கேட்க “வாங்க வாங்க, தண்ணீர் குடிக்க அலக விட்டேன்.உயிரே போயிருச்சு” என்று மித்து அழுகாத குறையா பேசுச்சு.

“எல்லாம் கழிவுதான்..அங்க இருக்கிற சாயப்பட்டறையில இருந்து வருது…ஆறே செத்த மாதிரி ஆகிருச்சு”.

“வட்ட வட்டமா நுரை நுரையா வருதே? நம்ம இப்டி தான் சாவோம் போல” சொல்லிட்டுப் பறந்தது மித்தி.

“ஓடுற தண்ணியில ஒரு குடம் விசம் குடிக்க நெனச்சா ஆகிடும் நாசம்”.

பஞ்ச் பேசிப் பறந்துட்டாரு ஆந்தையாரு.

என்ன குழந்தைகளா? ஆறு குளங்கள் மாசடையறத பத்தி என்ன நினைக்கறீங்க?