கவிதை: வசந்தமான வறுமை
கவிதை: போராளிப் பெண் – சூரியாதேவி ஆ
தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி
எண்ணங்கள் எழுச்சிபெற்று எழுந்து நிற்கும் பேரோவியமாய்
வண்ணங்கள் பல தீட்டப்பட்டு வடிக்கப்பட்ட காவியமாய்
வாழ்க்கையை இன்பமயமாக்க இறுதிவரைப் போராடி
வேள்விகள் பல கடந்து உறுதியோடு வாதாடி
என்ன இந்த வாழ்வு என்றெண்ணி சோர்ந்து போகாமல்
எதையும் சாதிக்கும் என் நாட்டு பெண்மணிகள்
சாகசங்கள் பல நிகழ்த்தும் தன் நாட்டு கண்ணின் மணிகள்
வண்ணங்கள் இல்லாது போய்விட்டால் வானவில் ஏது
பெண்ணவள் இல்லாது போய்விட்டால் வாழ்கையே கிடையாது
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று
அனைத்துத் துறையிலும் பெண்கள்
அனைத்துத் துறையிலும் பெண்கள்.
மார்ச் – 8 – 2023
முகவரி:
சூரியாதேவி ஆ
3/130, பாண்டியன் நகர் ,
சிவரக்கோட்டை,
திருமங்கலம் (தா),
மதுரை 625 706
அலைபேசி : 63795 25988
வீராப்பு கவிதை – சூர்ய தேவி
காடு மேடெல்லாம்
கடந்து நடந்து
ஆடு மேச்ச ஆறுமுகத்துக்கு
கால் வயித்துக்
கஞ்சி குடிக்க நேரமில்ல;
சோம்பேறி பையன பெத்ததால
சூடு போட்டாப்புல
பேசினாலும்
தான் பெத்த புள்ளயாச்சே
அவனுக்கும் சேர்த்துதான் சோறு போடணும்;
காடு மேடெல்லாம்
கண்ணசந்து தூங்காம
நாலா பக்கமும்
ஆடு ஓடுமெனு
நட்ட நடு பகலுல ஒட்டு போட்ட
செருப்ப போட்டு ஓட முடியல;
பொண்ணு புள்ள ரெண்ட
கரசேர்த்தாச்சு
பொண்டாட்டியும் நீயும்
உட்கார்ந்து கஞ்சிய
குடியுமப்பானு
ஊரார் சொல்லியும்;
கேட்காம
காலு ரெண்டும் ஓடுதப்பா
மூணாவதா
சோம்பேறி பையன
கரசேர்க்கணுமுண்ணு;
இம்புட்டு செய்யுறயே
உம் மவனுக்கு
உனக்கென்ன கடைசியில
கஞ்சியா ஊத்தப்போரானு
கேட்ட ஊராருக்கு புரியும்படியா
ஆறுமுகம் சொன்னாரய்யா
கையும் காலும்
நல்லருந்தாபோதுமய்யா
கட்டையில போகும் வரை
இந்த கட்ட
கையேந்தாம வீரப்பா
பொழப்ப நடத்திப்புடும்னு.
– சூர்ய தேவி