Sykes's lark: Name Telling Birds Series 25 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 25 -வானம்பாடி Sykes's lark

பெயர் சொல்லும் பறவை 25 – வானம்பாடி | முனைவர். வெ. கிருபாநந்தினி




பாடும் வானம்பாடி என்ற படத்தில் பாட்டு மற்றும் நடனம் முக்கிய கதையாக நகர்கிறது, பாடும் வானம்பாடி பாடலில் கதாநாயகி பாடகர். இவை இரண்டும் இந்த குறிப்பிட்ட பறவைக்கு மிகவும் பொருந்தும். நாம் இன்றைக்கு பார்க்கவிருக்கும் பறவை “வானம்பாடி”. இதன் ஆங்கில பெயர்கள் Syke’s Lasrk, Deccan crested lark, Deccan lark கவிஞர் நா. காமராசன் (1942 – மே 24, 2017) அவர்கள் எழுதிய பாடல் வரிகளில் வானம்பாடி பறவையை குறிப்பிட்டுள்ளார் குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் பாடுவதை பதிவுசெய்துள்ளார்

“பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி”
மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை பாடிக்கொண்டே மெதுவான இறக்கைகள் படபடப்பது, உயரமாக, வட்டமிடுவது போன்றவை விதவிதமாக பறந்து பெண் பறவையை கவர முயலும்.

இவர் ஆங்கில இயற்கை ஆர்வலர், இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்துடன் பணியாற்றினார். அரசியல்வாதி, இந்தாலஜிஸ்ட் மற்றும் பறவையியலாளராக செயல்பட்டார். விக்டோரியன் புள்ளியியல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர், ராயல் புள்ளியியல் சங்கத்தின் நிறுவனர், அவர் கணக்கெடுப்பு நடத்தி, இராணுவ நடவடிக்கையின் செயல்திறனை ஆய்வு செய்தார். இந்தியாவில் சேவையிலிருந்து திரும்பிய அவர் கிழக்கிந்திய நிறுவனத்தின் இயக்குனராகவும், பாராளுமன்ற பிரதிநிதித்துவ உறுப்பினராகவும் ஆனார்.

Sykes's lark: Name Telling Birds Series 25 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 25 -வானம்பாடி Sykes's lark
படம்-Colonel William Henry Sykes, FRS (25 January 1790 – 16 June 1872)

இவர் இங்கிலாந்தில் பிறந்தார். அவர் 1803 இல் இராணுவ சேவையில் சேர்ந்தார் மற்றும் 1 மே 1804 இல் கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு கமிஷனைப் பெற்றார். பம்பாய் ராணுவத்தில் இணைந்தார். ஐரோப்பாவிற்கு 1819 ல் பயணம் செய்தார். அக்டோபர் 1824 இல் அவர் இந்தியா திரும்பினார் மற்றும் பம்பாய் அரசாங்கத்தின் புள்ளிவிவர நிருபராக Mountstuart Elphinstone என்பவரால் நியமிக்கப்பட்டார்.பின்னர் அவர் புள்ளியியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆராய்ச்சிகளைச் சேகரித்தார், மேலும் டெக்கான் மக்கள்தொகை கணக்கெடுப்பை முடித்தார், இரண்டு பெரிய புள்ளிவிவர அறிக்கைகளையும், வரைபடங்களுடன் விளக்கப்பட்ட ஒரு முழுமையான இயற்கை வரலாற்று அறிக்கையையும் தயாரித்தார். அவர் 1824 இல் ரெனிஸ்டவுனின் வில்லியம் ஹேவின் மகள் எலிசபெத்தை மணந்தார். அவரும் இவருடைய ஆய்வுகளுக்கு உதவினார்.

கணக்கெடுப்பு பொறுப்பில் இருந்த பொழுது தக்காண பீடபூமி முழுவதும் பயணம் செய்தார். சைக்ஸ் இந்தியாவில் ஒரு முன்னோடி வானிலை ஆய்வாளராக இருந்தார், தினமும் வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தம் அளவீடுகளை எடுத்துக் கொண்டார்; தினசரி அழுத்த மாறுபாடுகளில் வழக்கமான வடிவங்களைக் கவனித்தார் மற்றும் மழைக்காலங்களில் குறைந்த வேறுபாடு ஏற்பட்டாலும், குளிர்காலத்தில் வரம்பு மிக அதிகமாக இருப்பதை பதிவு செய்தார்.

சைக்கின் விலங்குகளின் சேகரிப்பின் விளைவாக டெக்கான் பகுதியிலிருந்து பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் பட்டியல்களை தயாரித்தார், அவற்றில் பல விலங்கியல் சங்கத்தின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டன. அவரது கண்டுபிடிப்புகளில் ஐம்பத்தாறு பறவைகளை பற்றிய புதிய அறிவியல் தகவல்களை கொடுத்துள்ளார்.

இதில் இந்திய குளத்துக் கொக்கும் அடங்கும். சைக்ஸ் அப்பகுதியின் மீன்களையும் ஆய்வு செய்தார், மேலும் இந்தியாவின் காடைகள் மற்றும் கௌதாரி ஆவணங்களை எழுதினார். தக்காண பகுதியில் மட்டும் பறவைகள் பட்டியலில் கிட்டத்தட்ட 236 இனங்கள் இருந்தன.

சார்லஸ் டார்வின் இயற்கை ஆர்வலர் Edward Blyth அவர்களை சீனா பயணத்தில் இணைத்துக்கொள்ள வில்லியம் ஹென்றி சைக்ஸ்க்கு கடிதம் எழுதினார். அந்த அளவிற்கு இவருக்கு மதிப்பும் செல்வாக்கும் இருந்தது.

Sykes's lark: Name Telling Birds Series 25 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 25 -வானம்பாடி Sykes's lark
படம்: சைக்ஸ் அவர்கள் எழுதிய புத்தகம்

சைக்ஸ் பௌத்தம் மற்றும் அதன் தொன்மை குறித்து விரிவாக எழுதினார். ஏசியாடிக் சொசைட்டி இதழில் 1842 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில், பிராமணர்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல என்றும் பாலி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்றும் வாதிட்டார். பிராமணியத்தை விட, பௌத்தம் தான் இந்தியாவின் பண்டைய கடந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்று அவர் நம்பினார். 1856 ஆம் ஆண்டில், பாம்பேயின் குடிமக்கள் சைக்ஸின் சொந்தக் கல்வி முறைக்கு ஆதரவாக வாதிட்டதற்காக அவருக்கு ஒரு பதக்கத்தை வழங்கினர். டெக்கான் பகுதியில் காணப்படுவதாலும், இவரும் டெக்கான் பகுதிகளை ஆய்வு செய்ததாலும் இப்பறவைக்கு இவருடைய பெயரை வைத்துள்ளனர். இவருடைய ஆய்வுகளை
கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இப்பறவை குஞ்சுகளுக்கு பூச்சிகளையே ஊட்டுகின்றன. அலகுகள் மூலம் தோண்டி உணவை எடுக்கின்றன. சைக்ஸ் லார்க் என்பது தீபகற்ப இந்தியாவின் புல்வெளியிகளில் காணப்படும் இனமாகும். அதன் வாழ்விடத்தில் காணப்படும் மற்ற 34 பறவைகளின் அழைப்பைப் பின்பற்ற முடியும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

Sykes's lark: Name Telling Birds Series 25 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 25 -வானம்பாடி Sykes's larkமொழி, இனம் போன்றவற்றிற்கு மனிதர்கள் நாம் இன்றைக்கு டி. என். எ வை ஆய்வு செய்து கொண்டிருக்கும் அவல நிலையில் 1800 களில் இயற்கை ஆய்வாளரின் தரவுகளே நமக்கு வரலாறுகளுக்கு சான்றாக உள்ளது. ஆகவே நாம் யார் என்று தேடுவதற்கு பதிலாக அனைவருக்குமான, தேவையான இயற்கையை அழியாமல் காக்க முயல்வோம்.

தரவுகள்:
1. The Discovery of Ancient India: Early Archaeologists and the Beginnings of Archaeology Upinder Singh
2. The Asiatic Journal and Monthly Register for British and Foreign India, China, and Australia Parbury, Allen, and Company, 1842 
3. Crisologo, Taylor; Joshi, Viral; Barve, Sahas (2017). “Jack of all calls and master of few: Vocal mimicry in the Tawny Lark (Galerida deva)”. Avian Biology Research. 10 (3): 174
4.https://archive.org/details/sketchesofsomedi00laur/page/104/mode/1up?view=theater

தரவுகள்: 

பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து(Accipiter butleri) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 23 – தவளைவாயன் | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 24 – கூம்பலகன் | முனைவர். வெ. கிருபாநந்தினி