Posted inPoetry
கோவி.பால.முருகுவின் மூன்று கவிதைகள்
புத்தியுள்ள பொழுதுகள் புத்தியுள்ள பொழுதாக புலர்காலை விடியட்டும் வித்தைகளைப் புரிவதற்கு வேண்டிநின்று தொழுகட்டும் முத்தான உழவோடு தொழில்பலவும் செழிக்கட்டும் சத்தான தொண்டுசெய்ய மக்கள்திரள் விழிக்கட்டும்! சுயநலத்தின் வேர்களிங்கே சுரண்டுவது ஒழியட்டும் பயனின்றி உழைப்போர்கள் பலன்பெற்றுச் செழிக்கட்டும்! நயமாகப் பேசிநாட்டை அழிப்பவர்கள் வீழட்டும்…