ninavil olirum jimiki kammal

நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் புத்தக வெளியீட்டு விழா

08-08-2024 அன்று திரைப்பட இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி (Seenu Ramasamy) அவர்களின் கவிதைத் தொகுப்பான "நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்"நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நூலை வெளியிட, திரைக்கலைஞர் விஜய்…
வருகை மேகம் - கவிதை - தமிழ் -ஆஸ்பான் இனியன் - Varugai Megam Tamil Poetry ( Kavithai) written by Aspan Iniyan - Book Day - https://bookday.in/

வருகை மேகம் – கவிதை

வருகை மேகம் - கவிதை நீ ஊர் வரும்போது ஒரு மழை நாளாக இருக்க வேண்டும் ஆனால் மழை கூடாது.. தார்ச் சாலையெல்லாம் பொன் கொன்றைப் பூக்கள் படுக்கையாகி விடவேண்டும் தேநீர்க் கோப்பைகளில் சர்க்கரை சேர்க்காமல் சொல்லி வை ஒரு மிடறு…
அடர் மழை (கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அடர் மழை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

பல மனிதர்கள் பல வாசனைகள் ஒன்றுக்கொன்று திணறடிக்க... முகம் சுளிக்காமல் சுவைத்துக் கொண்டிருந்தேன் ... ஆம்.... சக பயணியாய். அமைதியான மனிதர்கள் . முழுக்க தெம்பற்ற தேகம் கை காட்டுகிறார். பேருந்தும் நிற்கிறது. திரும்பவும் கை காட்டி போ.... என்கிறார். அடுத்த…
Torch Roads (Poem) | தார்ச் சாலைகள் (கவிதை)

தார்ச் சாலைகள் (கவிதை) – செ.ரா.கிருஷ்ணகுமாரி

  சிவப்புக் கம்பளங்களை விரித்து தாய் வீட்டிற்கு அழைக்கின்றன தார்ச் சாலைகள் குண்டும் குழியுமான தார்ச் சாலைகள் குறையாகத் தெரிவதில்லை நிரம்பிய மனதோடு காத்திருக்கும் அம்மாவின் முன் அம்மா வீட்டிற்குச் செல்லுகையில் நெடிய சாலையாகவும் வீடு திரும்புகையில் குறுகி இருப்பதும் ஒரே…
தங்கேஸ் கவிதைகள்…

தங்கேஸ் கவிதைகள்…

      கவிதை 1 நீ இப்படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னை அப்படியே எடுத்து விழுங்கி விடுவேன் என்றேன் எப்படி என்றாள் பொதுவாக என்னைப்போல் இல்லை என் விழிகள் அவை இரண்டும் சுத்த அசைவப் பிராணிகள் என்றேன்…
kavithai: enniniya - dr.jaleelamusammil கவிதை: என்னினிய....-Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: என்னினிய….-Dr ஜலீலா முஸம்மில்

இரண்டாம் தடவையும் என்னைப் பார்க்க மாட்டீர்கள் அதே தேன் நிரம்பிய குடுவையல்ல நான் உணர்வுகளின் உக்கிரத்தை துப்பி வழித்து எறிந்து விட்டே மீண்டும் வந்திருக்கிறேன் என்னுள் உடைந்த சிதிலங்களை சித்திரமாக்கி வைத்திருக்கிறேன் நீங்கள் பார்த்துச்சிரிக்க சேதங்கள் இங்கே இல்லை பதங்கமாகிய போர்வாளின்…
Valiyilla Vazhkai Kavithai By Kalai வலியில்லா வாழ்க்கை கவிதை - கலை

வலியில்லா வாழ்க்கை கவிதை – கலை




தூரத்து மருத்துவமனையில்
மலைப் பாதை வரிசையில்
மருத்துவரைப் பார்க்க
உலர்ந்த எலும்பும்
சுருண்ட நரம்பும் உள்ள
கை கால்கள் குடைச்சலில்
குத்திய போதும்
போய் குந்திவிட வில்லை
புண்ணான
கண்கள் வரட்சியால் சுழற்றியடித்ததிலும் சொக்கவில்லை
சதையில்லா இடுப்பெலும்பிலிருந்து
நழுவியும் இறக்கி விட
மனமில்லை
காலிடுக்கில்
எறும்பு கடித்த போதும்
அவளது சின்னக்
குழந்தையை…

***********************
அப்பா நாத்தாங்காலில்
வெதச்ச நெல்லே
மொளைச்சி நமக்கு சோறாகிறது என்பதை அறிந்த
சிறுமிக்கு வந்த ஒரே சந்தேகம்
அம்மா சந்தையில் வாங்கிய உருளைக்கிழங்கும் வெங்காயமும் மொளைத்திருப்பதை பார்த்த அப்பா
ஏன்
அம்மாவைத் தெண்டக்காரினு திட்டிவிட்டு
தூக்கி எறிய சொன்னபோது!

Kalapuvan Kavithai கலாபுவன் கவிதை

கலாபுவன் கவிதை

என் ஏகாந்தத்தின் தோழன் கவிதையே
தனிமையில் எழுதும் கவிதை தான் பலருக்கு பிடிக்கிறது
கவிதையே கதையின் சுருக்கம்
நானூறு உணர்ச்சிகளை நாலு வரிகளில் சொல்வது கவிதை
பாநூறு எழுதினாலும் படிப்பதற்கு ஆளில்லை
ஆகவே தான் சில வரிகளில் சிற்பமென செதுக்குகிறேன் கவிதைகளை
ஆராய்ந்து எழுதுகிறேன்
அடுக்கு மொழியில்லை ஆனாலும் நிஜங்களே அவை
தேனூற்று வார்த்தைகளை தேடி எழுதவில்லை
தேடி வருவோர்க்கு தெவிட்டாமல் எழுதுகிறேன்
சீரான வரிகள் இவை
சிந்தனையைத் தூண்டுபவை

கடைசி மனிதனுக்கும் கற்பனை வடிவதில்லை
சோகமோ சுகமோ சொல்லிவிட்டால் ஒரு நிம்மதி தான்
வானிலவு இருக்கும் வரை வாழ்கையில் கவிதையுண்டு
தேனிலவு முடிந்தாலும் திகட்டிடுமோ வாழ்க்கையிங்கு…..

Parameshwari Poems. து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்

து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்




வாழ்வின் இரகசியம் ..
*****************************
அன்புள்ள கவிதாயினிக்கு,
எழுதுகிறேன் ஒரு கடிதம்..
விடியலின் விடிவெள்ளியே..
காலையில் மலரும் தாமரையே..
பகலில் மிளிரும் பவித்ரமே..
மாலையின் மஞ்சள் வெயிலே..
இரவின் பால்வண்ண நிலவே..
பொல்லாத மனிதர் கொண்ட பூமி இது….

போராட்டம் மட்டுமே வாழ்வு
குற்றங்கள் தான் புரிந்து
சுமத்துவர் பழி நம் மேல்..
கொல்லாமலே நம்மைக் கொல்வர்
இந்தக் கூறுகெட்ட மனிதர்..
வராது துன்பம்  வாழ்வில் என்றும்
வந்தாலும் நீயும் மோது..
பேறானது நம் பண்பாடு  நாளும்
போற்றி நீயும் வாழு..
பெறாது இன்பம்  பெற்றாலும் நித்தம்
தமிழ் வாழ்த்தி நீயும் பாடு..

கவிதை பெற்ற பைங்கிளியே..
கவிதை போற்றும் கவிக்குயிலே
கடந்தகால கசப்பைக் கடத்தி விடு
எதிர்கால  எதிர்பார்ப்பை மறந்து விடு
நிகழ்கால எண்ணத்தை மட்டும் கையிலெடு..
இதுவே வாழ்வின் யதார்த்தம்..
எதிலும் உறுதியாய்..
நின்றுவிடு..
செய்து விடு…
நடத்திவிட்டு..
வென்று விடு…
சாதித்து விடு…
வெற்றியின்..
ரகசியம் அப்படித்தான்இருக்கும்..

வாழ்தலின் வாழ்தல்
*************************
வாழ்தலின் வாழ்தலைக் கொண்டாட
வாழ்தலை  சிலதுளிகளாவது  வாழ்ந்துத்தான் பார்க்க வேண்டும்…
உயிர்த்திருக்கும் ஈசல் சில நிமிடங்கள்‌ மட்டுமே…
ஜெனித்திருக்கும் பட்டாம்பூச்சி சில நாட்கள் மட்டுமே.
தகவமைத்திருக்கும் கிருமிகள் சில வாரங்கள் மட்டுமே..
வாழ்ந்திருக்கும் கரப்பான் சில மாதங்கள் மட்டுமே..
வாழ்தலைப் வாழ்த்த நூறாண்டுகள் வரம் பெற்றுள்ளோம் நாம்..
வாழ்தலை வாழாது
வாழ்தலைப் புறக்கணித்து
வாழ்தலைத் தொலைத்து
வாழாதே போகிறோம்
வாழ்தலின் வாழ்வெண்ணாது
வாழ்தலின் விளிம்பு உணர்த்திடும் வாழ்தலின் வாழ்வை.
வாழ்தலின் வாய்ப்பிழந்தப் பின்
வாழ்தலை நினைத்து
வாழ்தலிலிருந்து நகர்ந்தே
செல்ல வேண்டும்
வாழ்தலின்‌ வாழ்கனவுகளோடு..

புலரும் விடியலின்‌ஓசை
*******************************
ஒவ்வோர்
விடியலை இனிதாக்கும்  குயிலோசை….
கேட்க கேட்க தேவராகமாய்
காதில் மீண்டும் மீண்டும்
ஒலித்திருக்கும் மணியோசை
மீப்பெரு பொழுதையும்
மீச்சிறு நொடியையும்
நீட்சியான நிமிடத்தையும்
நீக்கமற மணித்துளியையும்
பேரின்ப மயமாக்கும்
குழலோசையாய்..
அந்தக் குயிலோசை..
வாழ்த்தலை மகிழ்கூட்டும்
கவின்னிசை..

குரல் கேட்டு கொண்டாடியக்
குயில்முகந் தேடி
சுற்றினேன் இருள் வனங்களில்..
தாவினேன் அடர் கிளைகளில்
தேடினேன் நெடுமரங்களில்
எங்கும் காங்கவில்லை..
எதிலும் தோன்றவில்லை
குரலலையால் கவர்ந்திழுத்த
அந்த முகாந்திரம்…
பின்பே உணர்ந்தேன்..

குயிலிசை போதுமே..
குயில்முகம் தேவையா..
உணர்வுகள்‌ போதுமே..
அதன் உருவம் தேவையா…
நம் கண்களில் தோன்றிடும் காட்சிகள் யாவும் கற்பனையை சிதைத்திடுமே..
கண்களில் தோன்றா காட்சிகள் யாவும்
கற்பனை வளர்த்திடுமே..
குயில் முகம் தேடி அலையும் தேடல்கூட
ஆடல் போல்
ஒரு சுகமே….