தாய்மொழியை பெருமைப்படுத்தும் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் -A social science research institution that prides itself on its mother tongue

தாய்மொழியை பெருமைப்படுத்தும் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் – ஆ. அறிவழகன்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்.ஐ.டி.எஸ்.) அண்மையில் தனது பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தை நிறைவு செய்துள்ளது. 1971ஆம் ஆண்டு சென்னை அடையாறு காந்தி நகரில் மேனாள் யுனெஸ்கோ துணை இயக்குநர் நாயகமாகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா-எலிசபெத் ஆதிசேசய்யா ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம்,…
J Baby Movie-Urvashi and Attakathi Dinesh ( ஜே.பேபி திரைவிமர்சனம் - ஊர்வசி )

“J.பேபி” – திரைவிமர்சனம்

வயதான தாயைத் தொலைத்துவிட்டு இறுதியில் தேடி கண்டடையும் பிள்ளைகளின் நெடுந்தொலைவு பாசப்பயணம்தான் இப்படத்தின் மையக்கதை. உண்மை சம்பவத்தின் அடைப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் திரையாக்கத்தில் உயிருள்ள கதையாக நீள்கிறது.இது ஓர் உயிருள்ள சினிமா.இந்தப் படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் சுரேஷ் மாரி  அவர்களின்…
kannukku ettatha ulagam poetry written by -s.p.agathiyalingam கவிதை: கண்ணுக்கு எட்டாத உலகம் - சு.பொ.அகத்தியலிங்கம்

கவிதை: கண்ணுக்கு எட்டாத உலகம் – சு.பொ.அகத்தியலிங்கம்

புது புத்தகத்தின் வாசம் எப்போதும் கிறங்க வைக்கிறது . வாசித்து அடுக்கிய புத்தகங்கள் பார்க்கும் நொடியில் புன்னகைக்கின்றன . வீட்டில் இடமில்லாமல் பராமரிக்க முடியாமல் இடம் பெயர்ந்து விட்ட , இரவலாகப் போய்விட்ட அன்பளிப்பாய்க் கைமாறிவிட்ட , தோழமையோடு ‘சுட்டு’ச் சென்றுவிட்ட…
isaivalkai 92 : isayee paai kodu - s.v.venugopalan இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு - எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு – எஸ் வி வேணுகோபாலன்

காலை வேளைகளில் சமையல் அறையில் பாடல் கேட்டுக்கொண்டே வேலையில் மூழ்கி இருக்கையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சில பாடல்களைக் கேட்கும்போது, ஆஹா..இந்தப் பாட்டுக்கு என் உயிரைக் கொடுப்பேன் என்று சொல்வது வழக்கம்.... இணையர் ராஜி கேட்பார், இப்படி எத்தனை பாட்டுக்கு உயிர்…
nool arimugam: sangachurangam-aninadai erumai - su.po.agathiyalingam நூல் அறிமுகம்: சங்கச் சுரங்கம் – இரண்டாம் பத்து – அணிநடை எருமை -சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: சங்கச் சுரங்கம் – இரண்டாம் பத்து – அணிநடை எருமை -சு.பொ.அகத்தியலிங்கம்

எருமை மீது எமனை உட்கார வைத்தது யார் ? எப்போது ? “சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்த்து , தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது .இந்நூலை…
nool arimugam: en sariththiram- r.esudoss நூல் அறிமுகம்: என் சரித்திரம் - இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: என் சரித்திரம் – இரா.இயேசுதாஸ்

என் சரித்திரம்." நூல்.....உ.வே.சாமிநாதையர் 822 பக்கங்கள்...முதல் பதிப்பு 1950 அடையாளம் பதிப்பகம் ..முதல் பதிப்பு..2019 விலை ரூ.450/-   19.2.2021 அன்று உத்தமதானபுரத்திற்கு தமுஎகச,வலங்கைமான் கிளை ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்விழாவிற்கு சென்றிருந்த போது அவரைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டும்…
nool arimugam: manimekalai kappiyam vaasiththalum pagiryhalum-r.mohana sundaram நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

மணிமேகலை எனும் குடியுரிமைப் போராளி! தமிழியல் ஆய்வுப் போக்கில், மரபான இலக்கியநயம் பாராட்டி விதந்தோதும் முறைக்கு எதிர்வினையாக, பகுப்பாய்வு, கட்டுடைப்பு ஆய்வுமுறைகள் வந்து சேர்ந்தன. முந்தையது கட்டமைப்பை நிகழ்த்தி முன்னேறிச் செல்கையில் கட்டவிழ்ப்பு அதனைத் தளர்த்தி அகலப்படுத்தத் தொடங்கியது. இவற்றுள் மு.ர-வின்…
தேர்வு சிறுகதை – சாந்தி சரவணன்

தேர்வு சிறுகதை – சாந்தி சரவணன்




“ராகுல் ராம் விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்தது.”

தமிழ்செல்வி, “ராம் குழந்தையை திட்டாதே டா” என்றார்

அக்கா, “நீ சும்மா இரு, கஷ்டப்பட்டு இவனை G.E சேர்த்து, கல்லூரி கட்டணம், தேர்வு கட்டணம், பயணக் கட்டணம் எனக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். இவன் என்னவென்றால் எளிதாக இரண்டு தாள் அரியர் வந்துள்ளது எனச் சொல்றான். அதுவும் இல்லாமல் இப்போழுது மறுமதிப்பீடு செய்யக் கட்டணம் கொடுங்கள் எனக் கேட்கிறான். நான் களாவாடிக் கொண்டு தான் வர வேண்டும். இவன் ஓழங்காக எழுதியிருந்தால் தேர்வாகி இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து என புலம்பிக் கொண்டிருந்தான்.

அத்தை, “நான் எல்லா தேர்வும் நல்லா எழுதினேன்.” எங்க. பேராசிரியர் கூட தேர்வு தாளை இணையவழியாக சரிபார்த்து 85 மதிப்பெண் வரும் எனச் சொன்னார்கள். மறுமதிப்பீடு கட்டணம் கட்டு என சொன்னார்கள். அதனால் தான் கேட்கிறேன்.

“அப்பாவை கட்டணம் கொடுக்க சொல்லுங்க அத்தை”. நான் என்ன எழுதினேன் என எனக்கு தானே தெரியும் என ஆவேசமாக அவன் பேசியது, தமிழுக்கு தன்னுடைய பிம்பமாக அவன் காட்சி தருவது போல் இருந்தது.

அவளின் நினைவலைகள் சற்றே பின்நோக்கி சென்றது.

“ல்* பல்கலைக்கழகத்தில் *வெட்டியியல்” பட்டயம் படிக்க ஆர்வம் வந்த காரணம், ஒரு பயிலரங்கில் “ஜாங்கிரி எழுத்துகளை” கற்றுக் கொண்டவர்கள் அனைவரும் மூத்த தோழர்களாக இருக்கிறார்கள் “ஜாங்கிரி எழுத்துகளை” கற்றுக் கொண்டு அந்த எழுத்துகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க சிலர் முன் வரவேண்டும் என மூத்த தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

“பேசும் மொழி பல உண்டு. ஆனால் எந்த மொழிக்கு எழுத்து வடிவம் உள்ளதோ அதுவே நீடிக்கிறது” என்றார்.

“ஜாங்கிரி எழுத்துக்களை” வருங்கால தலைமுறைக்கு சொல்லித் தரலாம் என் ஊக்கப்படுத்தினார்கள். அந்த பயிலரங்குக்கு பின் தமிழும், சகதோழமைகளும் “ஜாங்கிரி எழுத்துக்களை” பள்ளியில் சென்று கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

பள்ளியில் சென்று கற்றுக் கொடுப்பதை தொடர் செயலாக செய்ய எண்ணியதால் “ல்* பல்கலைக்கழகத்தில் பட்டயம் படிப்புச் சேரலாம் என தமிழும் பயிலரங்கம் கலந்துக் கொண்ட மற்ற தோழமைகளும் முடிவு செய்தனர்.

தொலைநிலைக் கல்வி விண்ணப்பம் அனுப்பி அனைவரும் “ல்” பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, வகுப்புகளில் கலந்து கொண்டு *வெட்டியியல்” தேர்வும் எழுதி முடித்தனர்.

யாரும் எதிர்பாரத கொரானா தொற்று பரவுவியதால் வாய்மொழித் தேர்வும், ஆய்வுக்கட்டுரையும் சமர்பிக்க எந்த ஒரு அறிக்கையும் “ல்* பல்கலைக்கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியாகவில்லை.. பெரும்பாலன பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை இணைய வழியாக நடத்தி முடித்தனர்.

“ல்* பல்கலைக்கழகத்தை தமிழ் தொடர்பு கொண்டபோது, இணைய வழியாக நடத்த இயலாது. “ஒரே நாள் நேரில் வந்து சமர்பித்துச் செல்லுங்கள்” என தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் பெண்கள் பல ஊர்களில் இருந்து “ல்* பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வு அறிக்கையை சமர்பித்து, வாய் மொழி தேர்வு இரண்டையும் முடித்து வந்தனர்.

“தேர்வு முடிவுகள் விரைவில் ‌‌வந்துவிடும்” என்றனார்.

நாட்கள் நகர்ந்தன. “ல்* பல்கலைக்கழகத்தை தமிழ் தொடர்பு கொண்டபோது, “கொரானா காரணத்தினால் முடிவுகள் தாமதமாகிறது”, என்றனர்.

அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஒரு நாள் அதிசயமாக, “ல்” பல்கலைக்கழகத்திலிருந்து இன்று தேர்வு முடிவுகள் வெளிவரும்.. யாரெல்லாம் தேர்வில் தேர்வு ஆகவில்லையோ அனைவரும் தேர்வு கட்டணம் கட்டி விடுங்கள் என ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக அலைப்பேசியில் தெரிவித்தார்கள்.

என்ன ஆச்சரியம்! . நாம் எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும் சரியான பதில் நமக்கு ஒரு போதும் கிடைக்காது. இன்று மட்டும் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன் அழைத்து முன் அறிவிப்பு அளித்தது ஆச்சிரியமாக இருந்தது. அனைவரும் இது எப்படி சாத்தியம் என் கேள்வியோடு காத்திருந்தனர்.

எப்படியோ “ல்” பல்கலைக்கழகத்தில் எழுதிய தேர்வு முடிவுகள் இன்று வெளியாகப் போகிறது. 47 வயதிலும் படிச்சு நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கை நிறைவேற ‌போகும் நாள் என ஆவலோடு மாலை வர போகும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தாள், தமிழும், தோழர்களும்

அவர்கள் அளித்த தகவலின்படி, தேர்வு முடிவுகள் வந்தது.

தமிழுக்கு தலையே சுற்றியது. “வெட்டியியல்” தேர்வில் தான் தேர்வாகவில்லை என்ற செய்தி அவளை நிலைக் கொள்ளாமல் செய்தது. அவள் தேர்வாகதது என்பதை விட ஒற்றை எண் மதிப்பெண் பெற்று தேர்வாகவில்லை என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உடன் எழுதிய தோழமைகளில் ரதி மட்டுமே தேர்வு! ரதி டிஸ்டிங்ஷன் வாங்கும் பெண்மணி. சிறு வயது முதலே வெட்டியியல் எழுத்துக்களைப் பார்த்து அதன் மேல் மையல் கொண்டவர். *வெட்டியியல்” படிக்க வேண்டும் என்ற அவருடைய ஆர்வம் திருமணம் முடிந்து தான் இந்த பட்டயம் படிப்பு வழியாக நிறைவேற்றிக் கொண்டவர். அவரின் மதிப்பெண் அவரை மிகவும் பாதித்தது. தேர்ச்சி தான் ஆனால் அது “என்னுடைய மார்க் இல்லை”. நான் இன்னும் அதிகமாக பெற்று இருப்பேன் என ஆதங்கப்பட்டு கொண்டு இருந்தார்’

இதைவிட மிகவும் சிறப்பான செய்தி என்னவென்றால் தேர்வு எழுதிய சில தோழமைகள் தேர்வே எழுதவில்லை என முடிவுகள் வெளியாகியிருந்தது. ‌

இந்த ஒரு தகவல் தான் தமிழுக்கும் தமிழுடன் தேர்வு எழுதிய தோழமைகளுக்கு ஒரு செய்தியை உறுதிப்படுத்தியது. “ஏதோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது.” “இது நம்முடைய மதிப்பெண் அல்ல” என்று.

மாணவர்கள் செய்யும் தவற்றை தட்டிக் கேட்கலாம். ஆனால் . பல்கலைக்கழகத்தில் நடந்தால் எப்படி? பதில் யாரிடமும் இல்லை.

மாணவர்கள் அனைவருக்கும் இது மற்றொரு கேள்வியாக எழுந்தது.

தோழர்களிடமிருந்து வரும் அழைப்பு இவள் தோழர்களிடம் ஆலோசனை பெறுவதென மனம் சூழன்று கொண்டே இருந்தது.

இன்று என்று பார்த்து தன் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழல். அங்கிருந்து அலைபேசியில் பேசவும் முடியவில்லை. ஆனாலும் பேசினாள்.

தமிழும் ஷோபாவும் தான் சேர்ந்து வெட்டியியல் தேர்வுக்கு தயாரானார்கள்.

தமிழ் ஷோபாவை அழைத்து என்ன செய்யலாம் என இருவரும் ஆலோசித்தனர். அப்போது அவர்கள் நினைவில் உதித்தவர் நிலா மேடம். பக்குவமாக ஆணையர் அவர்களிடம் பேசுவார். ஆதலால் நாம் கான்பிரன்ஸ் கால் செய்து நிலா மேடத்தை பேச சொல்லாம் என‌ முடிவு செய்து அவரிடம் தகவல் பகிர்ந்து கொண்டார்கள்.

நிலா மேடம் அனுபவம், நாம் அனைவரும் சேர்ந்து இமெயில் அனுப்பி வைக்கலாம் என அவரின் தோழர் வழியாக ஆலோசனை பெற்று ஆணையர் மற்றும் “ல்” பல்கலைக்கழகம் அனைவருக்கும் இமெயில் அனுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு இருந்த மறுதேர்வு அட்டவணை தேதி பின் அறிவிக்கப்படும் என‌ சுற்றறிக்கை “ல்” பல்கலைக்கழகத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சி.

தமிழ் மறுமதிப்பீடு மற்றும் அரியர் தேர்வு இரண்டிற்கும் கட்டணம் கட்டினாள். பலர் அரியர் தேர்விற்கு பணம் கட்டினார்கள்.

ரதி, மறுமதிப்பீடு செய்ய தேர்வு கட்டணம் கட்டபோவதில்லை.

ஏன் என்று கேட்ட தமிழிடம் எனக்கு பல்கலைக்கழகத்தின் மேலிருந்த நம்பிக்கை போய்விட்டது என்றார்.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இது மிக பெரிய பிரச்சனை.

அதே போல் தமிழோடு சேர்ந்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கலாவும் தேர்வு எழுதியிருந்தார். அவரும் தேர்வாக வில்லை. ஆனால் அவர் மறுமதிப்பீடு விண்ணப்பமோ, அரியர் தேர்வு விண்ணப்பமோ எதுவும் செய்யவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்திடம் நமது கோரிக்கையை வைக்கும் போது அனைவரும் சேர்ந்து வைப்பது தானே சரி.

தமிழ் அவர்களை அலைபேசியில் அழைத்து மேடம் தங்களின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை. தாங்கள் நிச்சியமாக தேர்வு ஆகியிருப்பிர்கள் இருந்தும் ஏன் தாங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? என கேட்டாள். அதற்கு அவர் நாம் கேட்டாலும் பல்கலைக்கழகத்திலிருந்து நமக்கு சாதகமாக பதில் வராது என்றார்.

ஆசிரியராக இருந்து கொண்டு ஒரு தவறு நடப்பதை கேட்காமல் இருப்பதும் தவறு தானே? என கேட்டாள் தமிழ். ஆனால் மனதில் ஒரு ஆசிரியரின் முயற்சிக்கு கூட முற்றுப்புள்ளி வைத்துவிட்டதே பல்கலைக்கழகம் எனவும் தோன்றியது.

ஒருபக்கம் “வெட்டியியலை காப்போம்”. ஜாங்கிரி எழுத்துக்களை அனைவரும் கற்க வேண்டும். மொழி வளர்ப்போம் என பிரசங்கம் செய்வது. மறுபுறம் “வெட்டியியல்’ படிக்கும் மாணவர்களை வேடிக்கையாக எடுத்துக் கொள்வது. இதுவே “திங்கிலம்” படிப்பு‌ என்றால் ஒரு ஈர்ப்பு. ‘திங்கிலம்” பேசினால் முதல் உரிமை.

ஒப்பீடு எழுத்துக்கள் தெரிந்தால் தானே பழமையை உணர முடியும். இதை “ல்” பல்கலைக்கழகத்திற்கு நாம் சொல்லி தர வேண்டுமா?. “வெட்டியியல்” ஆர்வாலர்களை இப்படி மூடக்க என்ன காரணம். இதற்கும் அவர்களுக்கு பதில் இல்லை.

அதே சமயம் ஜாங்கிரி எழுத்துக்களை கல்வி வழியே கற்காமல் புத்தகங்கள், ஆராய்ந்து கற்வர்களே பலர்.

சில சமயங்களில் இப்படி தோன்றினாலும் சமூகம் ஒரு தாளை அதன் மதிப்பீடுகளை வைத்து தானே அவர் கற்றலை உறுதி செய்கிறது. இதில் எப்போது மாற்றம் வரும்.

மனம் சிந்தனைகளை சிதறிக் கொண்டேயிருந்தது. எப்படியும் தேர்வு கட்டணம் கட்டியாகிவிட்டது. பல்கலைக்கழகத்தில் யாரோ ஒருவரின் தவறால் தவறு நடக்க சாத்திய கூறுகள் இருக்கலாம். நம் முயற்சியை கைவிட வேண்டாம், முயற்சி திருவினையாக்கும்., என தொடர்ந்து இமெயில், மெஸேஜ், அலைபேசி என கோரிக்கையை தமிழ் “ல்” பல்கலைக்கழகத்தின் முன் வைத்து கொண்டே இருந்தாள்.

ஒரு நல்ல பேராசிரியர், துணை வேந்தர் துணையுடன் அந்த முயற்சிகள் தொடர்ந்துக் கொண்டு இருந்தன,

அதே நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுவன் ரித்விக், சிறுவயது முதல் மாநில முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என பெற்றோர்களால் மற்றும் சமூகத்தால் மூளை சலவை செய்யபட்டவன் கொரானா காரணத்தால்,சமீபத்தில் 10வது 12வது தேர்வு ரத்தான செய்து கேட்டு பல நாட்கள் உளவியியல் சிக்கலில் சீக்குண்டான். தேர்வு எத்தனை பிரச்சனைகளை சமூகதில் உருவாக்குகிறது..

இதற்கிடையில் நம்பிக்கையுடன் காத்திருந்த “வெட்டியியல்” பட்டயம் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் கோரிக்கையும் ஏற்று தேர்வு தாள்கள் மறுபரிசீலனை செய்யுமாறு ஆணையர் உத்தரவு ‌அளித்தார்.

ஆம் சில தினங்களில் “பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனர்” என்ற அறிவிப்பு வெளியானது” அதிலும் சிலர் தோல்வியை தழுவினர். அதிலும் மறு தேர்வு எழுதிய ஒரு தோழருக்கு தேர்வு எழுதவில்லை என வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேறு வழியின்றி தோழமைகள் மறு தேர்வு எழுதியது நினைவிற்கு வந்தது.

“அத்தை அத்தை அப்பாவிடம் பேசுங்கள்” என்ற ராகுலின் குரல் கேட்டு நினைவு திரும்பினாள் தமிழ்.

ராம், ராகுல் கண்டிப்பாக தேர்வாகி இருப்பான். அப்படி மறுபதிப்பிடும் செய்தும் தேர்ச்சி ஆகவில்லை என வந்தால் பார்த்துக் கொள்ளலாம். சில நேர்ங்களில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என வெளியாகி, அதை பார்த்து தவறான முடிவு எடுத்த மாணவர்களை நாம் இழந்து இருக்கிறோம். அதன் பின் அந்த மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிரிண்டிங்க மிஸ்டேக் என செய்தி தாள்களில் பார்த்துள்ளோம்…..

ஏன் என் வாழ்க்கையிலும் அவ்வாறு நடந்தது உனக்கு தெரியும் தானே. தேர்வு என்பது ஒரு மதிப்பீடு. அவ்வளவு தான். அதுவே பிள்ளைகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக கூடாது. அந்த நிலையில் பிள்ளைகளின் மனநிலை சார்ந்தே அவர்கள் அதை வெளிப்படுத்த முடியும். உளவியல் ரீதியாக சிந்தித்து பார்த்தால் பிள்ளைகளின் நிலையை நாம் உணர முடியும்.

ஏன் சமீபத்தில் இணைய வழி வகுப்பு, இணைய தேர்வு என சிறு வயது குழந்தைகள் mute செய்துவிட்டு விளையாடியதையும், கல்லூரி மாணவர்கள் ஒப்பன் புக் தேர்வுயென பார்த்து எழுதியதை நாம் பார்த்ததை மறந்துவிட்டாயா? அப்போது எங்கு சென்றது இந்த தேர்வு முறை வரைமுறைகள் டா…

“மதிப்பெண்” என்பது நமது வயது போல நம்பர் தான்டா. ஆனால் நம் உள்ளுணர்வு நம்மை “முயற்சி செய்” என சொல்லும் போது முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி தான்.

“ராகுலின் உறுதி சொல்கிறது அவன் பாஸ்” என்று என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அத்தை என தமிழை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் ராகுல்.

திருமதி. சாந்தி சரவணன்
சென்னை

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் ”கிளியும் அதன் தாத்தாவும்” – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் ”கிளியும் அதன் தாத்தாவும்” – இரா.சண்முகசாமி




நூல் : கிளியும் அதன் தாத்தாவும்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ.60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : செப்டம்பர் 2022
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

ஆசிரியருக்கு பெருந்தொற்று காலத்தில் இணையத்தில் கிடைத்த கதைகளை நமக்குத் தேவையானதை மட்டும் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.

பீகார் பகுதிகளில் வாயில் வெற்றிலை பாக்கு  போட்டுக்கொண்டு உட்கார்ந்து  கதை பேசிக்கொண்டிருந்த பெரிசுகளிடமிருந்து பெறப்பட்ட மைதிலி மொழி சிறார் கதைகள். இதில் போஜ்புரி, மைதிலி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்று ஐந்து மொழிகளில் வழங்கப்பட்டவை.

இக்கதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டது. தமிழ்ச் சிறார்களுக்கான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் நீதிபோதனைகள் உள்ளே வராமல் வெட்டிவிட்ட பின்பே வழங்கியிருக்கிறார். குழந்தைகளின் வயிறு குலுங்கும் வண்ணம் கதைகள் சொல்லலாம். நான் ‘நகர, கிராமத்து காக்கா’ கதையை வாசித்து குலுங்கி சிரித்துவிட்டேன். பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்தவர் ஒரு மாதிரியாக பார்த்தார். இது என்னுடைய வாசிப்பில். உங்களுக்கு எப்படி இருக்குமோ எனக்குத் தெரியாது தோழர்களே.

அந்தக் கதையின் சுருக்கம்-
கிராமத்து காக்காவுக்கு எதுவும் கிடைக்காம நகரத்துக்கு வந்து நகர காக்காவிடம் உதவி கேட்க, நகர காக்கா கிண்டல் மட்டுமே செய்தது. அதாவது நாம பேசுவோமே கிராமத்தான் என்று அதுபோல. அப்போது ஒரு சிறுவன் கையில் ஜாங்கிரியுடன் வர நகரத்துக் காக்கா தன்னுடைய திறமையை பீத்துவதாக எண்ணி அவனிடம் பிடுங்க அருகே சென்றது. சிறுவன் காகத்தை பார்த்து ஜாங்கிரியை வாயில் போட்டுக்கொண்டான். நகர காக்கா ஏமாந்தது. இப்போது கிராம காக்கா அதே சிறுவனின் அருகில் சென்று அவன் தலையில் தன் அலகால் லேசாக தட்டியது. ஆ என்று சிறுவன் வாய் திறக்க ஜாங்கிரி கீழே விழ தூக்கிகொண்டு பறந்தது. யார் திறமைசாலிங்க என்று தயவுசெய்து நீதியை குழந்தைக்கு சொல்லக்கூடாது. மீதியை புத்தகத்தில் காண வாரீர். எழுத்தாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இதில் 16 கதைகள் உள்ளது. வாசிப்போம். குழந்தைகளை வாசிக்க வைப்போம் தோழர்களே.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.