நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் ’சீமையில் இல்லாத புத்தகம்’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் ’சீமையில் இல்லாத புத்தகம்’ – து.பா.பரமேஸ்வரி




நூல் : சீமையில் இல்லாத புத்தகம் 
ஆசிரியர் : தேனி சுந்தர்

விலை : ரூ.₹100
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

மனிதன் மொழியை இயற்கையிடமிருந்து கற்றான். பறவைகளின் கிறீச்சல்கள் பூச்சிகளின் ரீங்காரங்கள் காற்றின் அசைவு இலைகளின் இசைவுமழையின் ஓசை இடியின் மொழி அருவியின் சலசலப்பு என மொழிகளின் ஜீவிதம் இப்புவியில் தோன்றும் முன்னம் மனித உணர்வின் வெளிப்பாடுகளும் பரஸ்பர அறிவுறுத்தல்களும் இப்பேரண்ட படைப்புகளின் வழியே உதயமானது. தொடர்ந்து சப்த லயங்களும் குரல் ஓசைகளும் நாவின் சுழல்களும் மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சாதனங்களாகத் திகழ்ந்தன. சுற்றுச்சூழலின் வகைமைக்கேற்ப தட்பவெப்ப மாறுதலுக்கேற்ப மனிதக் குழுக்களின் ஒன்றிணைந்த பரிபாஷ சௌகரியங்கள் ஆங்காங்கே கவரப்பட்ட பல்லுயிர்களின் பரிபாலனங்களை உள்வாங்கியும் என மொழிகளின் ஜனனம் என்பது மனிதகுல பரிணாமத்தின் பரிமாண வளர்ச்சி, மொழி உற்பத்தியான வரலாறு.

அதே போல் ஒரு குழந்தை தனக்கான மொழியை முதன்முதலில் யாரிடம் கற்கிறது என்று ஆராய்ந்தால் படைப்பின் இயற்கை வழியாக என்பது ஒருபுறமிருந்தாலும், பிற உயிர்களுக்கு தன்னியல்பாக வெளிப்படும் குரலதிர்வு அவற்றின் தாய்வழி மொழி மனித குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை ஆதலால் தேவையின் பொருட்டு தமது அழுகையில் வெளிப்படுத்துவதும், நிறைமையை தமது பொக்கை வாய் மலர சிரித்து அறிவித்தும் இவ்விரு உணர்வு சார்ந்த மொழிகளை மட்டுமே தனக்கானதாக அறிந்திருந்த மனித குழந்தைகள் சப்தத்வனியுடனான சொல்லாடல்களை மொழிப்புனைவுகளை தாயிடமிருந்து முதலிலும் உறவுகளிடமிருந்து அடுத்தும் சுற்றத்திடமிருந்து தொடர்ந்தும் வாழும் சூழலிலிருந்து தன்னியல்பாகவும் தமது கூரிய அவதானிப்பில் தமது தொடர் கேள்விகளின் ஆய்வுத் தேடலில் கண்டுணர்ந்தும் கற்றுத் தேர்ந்தும் குழந்தைகளின் சுயகற்றல் என்பது அனிச்சையான செயலின் மொழியிலிருந்தே பயணிக்கிறது.

கற்றுத் தேர்ந்த ஒலியின் கலவைகளை மொழியாக உரு வார்க்க முதலில் தத்தித்தத்தி பின் தித்தித்தோதி என திக்கி விக்கி வெளிப்படும் மழலையின் கொஞ்சலான கோர்வை கொச்சை உரையாடல்களை நோக்கிப் பயணிக்கும். குழந்தைகளின் கற்றல் ஆவலைப் பொருத்தமட்டில் உறங்கும் பொழுதுகளைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பொழுதுகளிலும் தனது தன்னார்வ சுய தேடலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கும்.
இப்படியான தமது புலனைந்தின் வழியாகத் தேடல் பயணத்தின் துவக்கக் காலங்களை மழலைப் பருவத்தை அலட்சியப்படுத்தியும் அவர்களின் மழலை மொழி அறிமுகத்தைப் புறக்கணித்தும் வரும் பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் இயல்பான விடாபிடித்தனத்தையும் சேட்டையையும் தொடர் கேள்விக்கணைகளில் துளைத்தெடுப்பதையும் அவதானித்தும் கொண்டாடியும் ஊக்கப்படுத்தியும் பிள்ளைமைப் பேச்சு மொழியை உண்டுச்சுவைத்தும் உற்சாகப்படுத்தியும் ஊக்கப்படுத்தியும் பேசவும் கேள்விக் கேட்கவும் முழு அனுமதி தந்த மாண்புப் பூண்ட பெற்றோராக, மழலைகளுடனே தமது வெகுவான அன்றாடத்தைக் கடத்தி அவர்களின் உளவியலைப் பூர்ணமாகத் துய்த்துணர்ந்த ஒரு ஆசிரியராக, இலக்கியத்தின் எழுத்து வடிவங்களில் கவித்துவத்தைக் களமாகக் கொண்டு மழலைகளின் மொழியை கவிதையின் அரூபமாக வெளிப்படுத்தி வெற்றிக் கண்ட தோழர் தேனி சுந்தர் அவர்களின் பிள்ளையுலகைக் கற்றறிய முனைந்த ஒவ்வொர் அடியும் பாராட்டிற்குரியது.

அலைபேசி நுகர்வு கலாச்சாரம் தலைவிரித்தாடும் இந்த யுகத்தில் பெற்றோர் முதல் பாலர் வரை இணையசெயலி போதைக்குள் தம்மை மறந்து தன்னிலை இழந்து வருகின்றனர். பிள்ளைகளுடன் பெற்றோர்களின் இணக்கம் என்பது குறைந்துக் கொண்டே வருகின்ற மேற்கத்திய கலாச்சாரத் தொற்று வியாதிப் பரவி வரும் நிலையில், பொருள்வாத மனோபாவத்தில் உழலும் பெற்றோர் சமூகத்தின் மத்தியில் பிள்ளைகளின் மனதைத் தட்டி எழுப்பி அவர்களின் அனிச்சையான பிள்ளைமையை தனக்கிச்சையானதாகக் கொண்டாடித் தானும் ஒரு சிறு பிள்ளையைப் போல் அவர்களுடன் கூடிக் களித்து பிள்ளைகளின் அன்றாட இயல்பு இயக்கங்களில் உறவாடியும் உரையாடியும் ஊடாடியும், பொழியும் மக்கட்மொழிகளைச் இதம் பூக்கும் சப்த நாதங்களைப் பிள்ளைமனிதர்களின் பரஸ்பர புனைவுப் பேச்சுக்களைச் செதுக்கி அருவவுருவமாக மாற்றி நூலாக ஒப்பேற்றி வாசக மனத்திற்கும் வாசிப்பு வனத்திற்கும் மீண்டும் வார்த்தளித்த எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களின் படைப்பு இலக்கிய உலகின் தனித்துவ பாணி. தோழரின் இப்படியான மழலைக் கவிதைத்தொகுப்பு என்பது புதிதல்ல முதல் பிரசவம் முடிந்து தாலாட்டி சீராட்டி வளர்ந்து உயர்ந்து வெற்றி நடைப் போட்டு முடிக்க,அடுத்தொரு மகப்பேறு வெற்றிவாகை சூட களமிறங்கியுள்ளது.

ஆம்…. டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி நூலின் தமக்கையாக “சீமையில் இல்லாத புத்தகம்” மலர்ந்து நிற்கிறது. மழலைகளின் பிஞ்சு மொழி மகிமையை நூலாக்கி வெளியிடும் புதுவகைமையான இலக்கிய வடிவம் ஆசிரியரின் போற்றப்பட வேண்டிய ஒன்று. இனி அடுத்தடுத்து ஒவ்வொரு இலக்கியப் பெற்றோரும் தமது பிள்ளைகளின் மழலை மொழியை படைப்பூக்கமாக்கும் செயல்பாட்டில் தீவிர முன்னெடுப்பைத் துவங்கவாய்ப்பாக நிறுவியுள்ளது. அதற்கான முன்னோடியாக முன்னணியாக தோழர் தேனி சுந்தர் அவர்களின் சீமையில் இல்லாத புத்தகம் பிள்ளைமைக் கொண்டாட்டத்தில் வழி நடத்தும்.

ஒருபுறம் சிறுபிள்ளைத்தனத்தைத் தாண்டிய அறிவார்ந்த பெரியத்தன பேச்சுக் கவிதைகள் மறுபுறம் அறிவியல் பூர்வ ஆக்கமான சிந்தனை ஆய்வகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் ‘கதை கதையாம் காரணமாம்’என்பது போல பிள்ளைகள் கதைகளைக் கொண்டும் காலாட்சேபங்களைக் கூட்டியும் விலாசுகின்றனர்.
இந்தத் தொகுப்பு நீட்டி முழக்கி இழுத்துப் பறிப்பதால் கதையா..
மழலை மொழியில் திக்கி விக்கி தொக்கி ததும்புவதால் சிறார் இலக்கியமா…
பிள்ளைகள் ஒன்று கூடி விலாவரியாக முழங்கும் மேடை விவாதங்களா..
இருபுறமும் கருத்துப் பரிமாற்றத்தில் அலசி ஆராயும் பட்டிமன்றமா… என்றால்

இவை எதற்குமே சாராத தமிழிலக்கியத்தின் தனித்த முத்திரையை தமது முத்தாய்ப்பான எழுத்தில் புதிய மாறுதலை அறிமுகப்படுத்தி சிறார் இலக்கியத்தில் புரட்சிக் கண்ட மழலைகளின் மகிமை சமைத்தக் கவித்துவ நூலாக அசலில் மாநிலம் மாகாணம் மத்தியம் தாண்டிய அண்டத்தை நிறைக்காத சீமையிலேயே இல்லாத புழக்கமாக வலம் வருகிறது.

பிள்ளைகளின் மொழியின் வழியே மனதைப் பயின்ற ஆசிரியராகத் திகழும் தேனிசுந்தர் அவர்கள், அறிவியல் இயக்கத் செயல்பாடுகளில் அடாது செயல்படுவதாலோ என்னவோ பிள்ளைகளின் இயல்பறிவியலை இயற்கையான சிந்தையாற்றலைத் துல்லியமாக வாசிக்கவும் அணுகவும் தெரிந்த அறிவியலாளராக குடும்பத்தின் பிள்ளைகளின் பிரியமான அப்பாவாக மக்கட்செல்வத்தை வசியப்படுத்தி வைத்திருக்கும் எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களால் மழலைகளின் பஞ்சுபாத நடையில் கொஞ்சும் குழல் மொழியில் யாழிசையாக தமக்குள் பகிர்ந்துக் கொண்ட உணர்வு உரையாடல்களைத் தொகுத்துக் கவித்துவ மழலை மாலையாகவே அளித்துள்ளார்.

கீர்த்தி, புகழ்மணி, டார்வின் என்ற மூன்று குழந்தைகளும் கட்டி எழுப்பிய உலகிற்குள் வண்ண வண்ண சித்திரங்களாக ஒவ்வொரு பக்கத்தில் பேரின்பத்தை வழங்குகிறது.”டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி” நூல் ஆதியந்தமாக ஆரம்பமாகி மீள் தொடர்ச்சியாக அடுத்திருந்த நூல், மழலை சம்பாஷனைகள் இத்துடன் முடிந்து விடுமா என்றால் நிச்சயம் மழலைகளின் மொழிகளும் மென்மைத் தாங்கிய மெல்லிசையும் முடிவில்லா ஆகாயம் போல.. அந்தந்த பருவத்தின் மாற்றத்தில் குழந்தைகளின் மனம் வெள்ளெந்தியாய் புதிய புதிய ஆய்வுகளுக்குள் புகுந்து விடைகளைப் பூர்ணமாகக் கண்டடைய பரிணமித்துக் கொண்டே இருக்கும்.

நூலை புகழ்மதிக்கான பாகம் டார்வினுடனான பாகம் என பிரித்துப் பகுக்கும் வகையில் இருவரின் ஒத்த மழலை மொழி நம்மை சிலாகிக்கவும் சிதறடிக்கவும் வயிறுபுடையச் சிரிக்கவும் உடன் ரசிக்கவும் கவனமாகச் சிந்திக்கவும் வைக்கின்றன. பெருவாரியான பக்கங்களை வாசிக்கும் போது நூலாசிரியர் சுந்தர் அவர்களை நினைத்து..
“வெச்சி செய்றாய்ங்க போல பிள்ளைங்க…” என்பது போல மனதிற்குள் துள்ளி மகிழ்ந்தேன். அதுதானே பிள்ளைகளின் இயல்பு.
குழலினிது யாழினிது என்பார்..
மக்கட் சொல் கேளாதார்…
இது தானே படைப்பின் மனிதர்க்கான பேரின்பம்.

எலே சுந்தரு
இங்க வாடா..
அங்க பார்றா..

இது புகழ்மதி டயலாக்..

கீர்த்தி டயலாக்:
‘இந்தா மாமா வாரான்..
இந்தா வந்துட்டான்.
அடி நொறுக்கப் போறான்.

சேட்ட பண்ணாம இருந்துக்குங்க…!

இப்ப நம்ம தோழர் டென்சன்
ஆகிட்டார்..

நம்மள சீண்டுறதே
இதுகளுக்கு வேலயாப் போச்சு..!
நான் கோவமா பாத்தேன்…
என்னய திரும்பிக் கூட பாக்கல..!

கோவமும் வீணாப்போச்சு..
என்று நொந்துப் போனார் தோழர்..

அடுத்தது
இன்னைக்கு டார்வின் ரெண்டு மூணு மயிலிறகு வச்சிருந்தான் என தொடங்கும் சம்பவத்தின் அறிமுகம்…
தொடர்ந்து உரையாடல் மயிலிறகு பற்றி..

புக்லவச்சா நல்லா படிப்பு
வருமாக்கும்ப்பா…!

பரிசீலனைகள் நீள..
இறுதியில் இதுவெல்லாம் மூடநம்பகங்கள் என்று தாமாகவே உணர்ந்த டார்வின்..

பக்கத்துல
லவ் பேர்ட் இறகு
ஒன்னு கெடந்துச்சு..
அத எடுத்துக்கிட்டு சொன்னான்.

இத புக்ல வச்சா குஞ்சு பொரிக்கும்னு
சும்மாச்சுக்கும் சொல்லிவிட்டுர்றேன்..
நம்மளவே ஏமாத்திக்கிருக்காய்ங்க

ஆஹா.. என்னவொரு வில்லத்தனம்.. ஒரு இடத்தில்,
முன்பு பார்த்த வாத்து கூட்டம் இன்று காணவில்லை எங்கு போனது வாத்து கூட்டம் என்கின்ற பெரிய புலன்விசாரணை டார்வின் அப்பாவிற்கு மகனிடமிருந்து..
வாத்தை வயலுக்குள் விட்டால் புழு பூச்சு எல்லாம் வாத்து தின்றுவிடும் அவை அதன் உணவு என்று ஆரம்பித்த பாடம் இறுதியில் டார்வினின் ஆய்வு விசாரணை அறிவியல் ஆசிரியரை திக்குமுக்காடச் செய்தது.

இப்போ பாடம் நடத்தினார் நம்ம டார்வின் அப்பா..
புழு பூச்சி வாத்தோட உணவு
வாத்து மனுசனோட உணவு
கடைசில செத்துப் போன பெறகு மனுசன் புழு பூச்சிக்கு உணவு..!

இப்போ பாருங்க நம்ம டார்வின் எப்படி மடக்கறாங்க..
ஏற்கனவே செத்துப்போன பூச்சி
எப்படிப்பா மறுபடியும் வந்து
மனுசன திங்கும்…?

பதில் சொல்லுங்க ஆசிரியரே…

அடுத்தொரு சம்பவத்துல கண்டமேனிக்குக் கதற விடுறாப்புல நம்ம டார்வின் அப்பாவை பயணத்தின் போது..
வண்டியின் நம்பர் பிளேட் பற்றிய சர்ச்சை…

வண்டி வாங்கறப்பவே
நம்பர் எழுதி
மாட்டி விட்ருவாங்களாப்பா..
இது டார்வின்..

ஒரு வாரம்…
இல்லாட்டி
பத்து நாளு கழிச்சு கொடுப்பாங்க…
அப்பா பாவம் யதார்த்தமாய்..

அப்ப
அந்த வண்டியில இருக்கிற
நம்பருக்கு போன் போட்டா
அந்த வண்டிக்காரங்க
எடுத்து பேசுவாங்களா…?

அடடா…!ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போலருக்கே.. பிள்ளைங்க..

பெரியவர்கள் நமக்குள் தான் எத்தனை சிதிலமடைந்த சிந்தனைகளும் குழப்பமானமான முடிவுகளும்.. அத்தனையும் பெரியத்தன புகைச்சல்கள்…
நமது சேகரித்த அறிவில் தழைத்த கருவேகங்கள்..
சில நேரங்களில் பிள்ளைகளிடம் கருகிப் போகிறது..

டிவில பாட்டு வருது
பாட்டுல நெருக்கமான காட்சி
அடுத்து வரப்போகுது.
……….
சேனல மாத்த மனசு துடிக்குது..
.,…..
ஒரு பதட்டமான சூழ்நிலை..!

ரிமோட்டை எடுத்து
சேனலை மாத்திக்கிட்டே
டார்வின் கேட்டான்..
இந்நேரம்
சின்-சான் போட்டுருப்பாங்களப்பா…?

இதுதான் கறைபடா எழில்.. அனிச்சையான மனநிலை கள்ளமும் கபடமும் அற்ற பிள்ளைகளின் பிரத்யேக வெள்ளை மனம்..
தொடரும் நாட் குறிப்புகள் ஒவ்வொன்றும் வாசக விருந்து..
பிறகு ஒருநாள்…
பறவைகளில் ஜெண்டர் சம்பந்தமான சர்ச்சை அப்பாவிற்கும் மகனுக்கும்..

மேல் ஃபீமேல்..னா
என்னப்பா..?
இது டார்வின்..

இப்போ நம்ம ஆசிரியர்..
மேல்னா ஆண்…
ஃபீமேல்னா பெண்…
ஏன் கேக்குற..?
……….

நம்ம லவ் பேர்ட்ஸ்ல
எது மேல் எது ஃபீமேல்னு தெரியுமாப்பா…?

கேள்வி கேட்டாச்சு டார்வின் தரப்பில்..
சிக்கிட்டாரு நம்ம தோழரு..
இப்போ எப்படி சமாளிக்கிறார் பாருங்க…

இத வாங்கும்போதே
சொன்னேன்ல..
என்னென்ன கேக்கணுமோ எல்லாத்தையும்
கடக்காரங்க கிட்ட கேட்டுக்கன்னு…!

பிள்ளைகளை அமைதியாக்க ஆசிரியரின் யுக்தி இறுதியில் வெற்றி பெற்றது.. அமைதியானாங்க நம்ம டார்வின்.

அராத்து அராத்து என்பார்களே அது இது தானா..
அடா அடா அடா..சிரிச்சு மாள முடியல…

இனிமேல்’ லாம் அந்த ஆபீஸ்ல குப்பை கொட்ட முடியாதுங்க…
டார்வின் அம்மா..

இப்போ பாருங்க நம்ம ஹீரோ களம் இறங்கி அசத்துவதை..

என்னம்மா சொல்ற நீ ஆபீசுக்கு போறேன்னு நினைச்சா குப்பை கொட்ட போறேன்னு சொல்ற

இனிமே
காலைல காலைல
நம்ம தெருவுக்கு வர்ற டிராக்டர்லயே குப்பைய கொட்டிட்டு
பேசாம வீட்ல இரும்மா!

அது தான சூழல் கருக்கு இயல் ..

ஷாட் ஹேண்ட் எழுத்துரு கேள்விப்பட்டிருப்போமே.. அதை விட எளிமையான ஒரு எழுத்துருமை அவங்களுக்குத் தோதாக பிள்ளை கண்டுபிடித்து சாதித்து வெற்றியும் கண்டு விட்டாங்க டார்வின்‌..
கடைக்குப் போகச் சொல்லி அம்மா சொல்ல…
கத்தரிக்காய்.. ரசப்பூண்டு.. வெங்காயம்.. கொத்தமல்லி..
……..
வேகமாய் எழுதிக் கொண்டு வாங்கியும் வந்துட்டாங்க..
………
டார்வின் அப்பா காகிதத் தாளை வாங்கிப் பார்க்க..

க..
ர..
வெ….
கொ..
இம்புட்டு தான் எழுதிருக்கான்.

ஒன்றும் புரியாமல் அப்பா முழிக்க…

க.. கத்தரிக்காய்..!
ர…ரசப்பூண்டு..!
வாங்குனது கரெக்டா இருக்கான்னு மட்டும் பாருப்பா..

என்னே! மெத்த மேதாவித்தனம்..
விஞ்ஞானத்தைத் தாண்டிய மெய்ஞானம்…

இந்த சம்பவம் வேற லெவல்…
அநியாயத்துக்கு நல்லவர்களா இருக்காங்க… நாடு தாங்குமா…
வீடே தாங்காதே..

எப்பா..
நீ வீட்ல இருக்க
போன பீரோக்குள்ள வச்சி பூட்டிட்டு போ..
சாவிய ஒளிச்சு வச்சுரு…!
எதுக்குடா…?

எழுதணும்னு உக்காந்தா
இந்த போனு
என்னைய இழுத்துக்கே இருக்குப்பா
எழுத விட மாட்டுது..!

குழந்தைகள் அனைத்து மூடநம்பிக்கைகளையும் அது அறிவியல் சார்ந்தோ இல்ல அல்லது பாரம்பரியமாக புகுத்தப்பட்ட சடங்குக் கற்பித்தமோ அவர்களின் ஆழ்மனதில் அது எப்போதுமே அடாது அப்பி கிடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு பாடம்..

எனக்கு சிவப்பு வேணாம்…
ஏன்டா..?

சிவப்பு சட்டை போட்டா
காளை மாடு முட்டிபுடும்..

இது ஊடகத் தொற்றின் விளைவு..
ஹோட்டலில்..
டார்வின் கேட்டான்..
ஏம்ப்பா…
இவங்களெல்லாம் சீனாவா…?

எனக்குப் பசி வேற..
வடகிழக்கு மாநில
விளக்கமெல்லாம் எதுக்கு.. ஆமாம்னு சொன்னேன்..

உடனே கேட்கிறான்..
அப்ப நமக்கு கொரோனா வந்துடாதா
என்னப்பா நீய்யீ….!

பிள்ளைகளின் புத்திக்குள் புகுத்தப்பட்ட கொரோனா தொற்று அரசியல் பிரச்சாரத்தின் பக்கவிளைச்சல்

இப்ப நம்ம கதாநாயகி புகழ்மதி பாப்பாவின் மழலை மணியோசைகளும் மடக்கல்களும், மொழியாளுமையும், அறிவுத்தேடலும், பிரம்மாண்ட அணுகுமுறையும்..
என்னை மெய்சிலிர்த்திய கணங்கள்…
வாசித்து வசியமாக்கியது..

உணவுசேதாரமும் வீணாகுதலும் சமூக குற்றம்…
தெரியுமா நம் புகழ்மதி பாப்பாவிற்கு..‌அழுது புரளுவாங்க.. ஆக்கின சோறு வீணாணா..

இரவு படுக்கப் போகும் பாப்பா அழுதாங்களாம்..‌என்னான்னு அப்பா கேட்க, பாப்பா ஆக்கி வச்சது அண்ணன் டார்வின் சாப்பிடல.. பலத்த பரிந்துரைப்பில் சாப்பிட ஒத்துக் கொள்ள.. அழுது சாத்தியமாக்கினார்..

ஒரு டப்பா மூடிய எடுத்து சாப்பிடுவது போல
பாவ்லா பண்ணி வச்சிட்டான்..!

டார்வினின் சாதுர்யம்..
பாப்பாவின் சாமர்த்தியம்..

உடனே பாப்பா…
அதுல இன்னும்
நான் சாப்பாடு போடல..

சரி..போடு போடு..

சாப்பாடு போடுவதை போல் பாப்பா
சாப்பிடுவது போல் டார்வின்…!

அப்பவும் விடல…
இன்னும் நான்
கொழம்பே ஊத்தல..

பார்றா..
விட மாட்டோம்ல..

இறுதி முயற்சி
புகழ்மதி பாப்பாவிடம் தப்பிக்க..

சரி ஊத்து ஊத்து..
மறுபடியும் பாவ்லா…!
என்ன பாப்பா…
அண்ணன் சாப்பிட்டானா?
ம்ம்..

இப்ப தூங்கலாமா…?
ம்ம்..!

இதுக்கு போயா
இம்புட்டு அழுகை…!
ம்ம்… ஆக்கி வச்சது
வீணாப் போம்ல…!

எப்படி இருக்காங்க பொறுப்பா..

எப்பவும் எங்க போனாலும் நம்ம புகழ்மதி பாப்பாவின் மாறுபட்ட கருதுகோள்களும் ஒவ்வொன்றையும் அறிந்துத் தெளிய விடாப்பிடியாக நின்று சாதிக்கும் பல நிகழ்வுகள் என்னை வியப்பில் ஆழ்த்தின…

அப்பா குளிக்க வைத்தார்.பாத்ரூம் கழுவுற பிரஷ் கைப்பிடி ஒடஞ்சு கிடந்துச்சு..!
பாப்பா சென்சன்..
அம்மாவைப் பார்த்து…
யாருப்பா இத ஒடச்சது…?

கேள்வியும் நானே பதிலும் நானே..

தவளயாப்பா ஒடச்சிருக்கும்..? கதவை அடைச்சு தான வச்சிருந்தோம்..!
அப்ப எது வழியா வந்திருக்கும்..?
ஆயி இருக்குற கோப்பை வழியா வருமாப்பா…?

எப்படி அறிவா யோசித்து வழியை கண்டுபிடிக்கிறாங்க…

புகழ்மதி பாப்பா திரும்ப திரும்ப விடாமல் நட்டமாய் நின்றாலும் சலிப்பே வாராத மழலை மயக்க அதீதம்…
புத்தகங்களுடனான கொண்டாட்டக் களங்களில் ஒருநாள்..

அப்பா.
இந்த புத்தகமும்
இந்த புத்தகமும்
ஒரே மேட்ச்சா இருக்குப்பா..

அப்பா.
இந்த புத்தகமும்
என் சட்டையும்
ஒரே மேட்ச்சா இருக்குப்பா..

அப்பா..
இந்த புத்தகமும்
என் சட்டையும்
நம்ம மெத்தையும்
ஒரே மேச்சா இருக்குப்பா..

இதுதான் மேட்சிங் மேட்சிங் வாசிப்போ.. அடுக்குத் தொடர் இலக்கணம்..பிழையே கண்டறிய முடியாமல்..

அழகிய குட்டியூண்டு விரல்களையே எண்ணிக்கையாகக் கொண்டு எண்களைக் கூட்டிய கதையை அறிந்ததுண்டா.. கணிதமேதை கலங்கிப் போவார்..

என்ன பாப்பா…
கீர்த்தி இன்னைக்கு
ஸ்கூலுக்கு வந்துச்சா இல்லையா..?

கைய முன்னாடி வச்சு
ஒவ்வொரு விரலா நீட்டி நீட்டி
சொல்றாங்க..

நேத்தும்.. நேத்தும்..
நேத்தும்..நேத்தும்…
நேத்தும்..
கீர்த்தி ஸ்கூலுக்கு வரல…!

எத்தன நாளு வரல பாரு?!

மறுபடியும் கைய முன்னாடி வச்சு ஒவ்வொரு விரலா நீட்டி நீட்டி
சொல்றாங்க..
இத்தன.. இத்தன…
இத்தன. இத்தன..
இத்தன..
இத்தன நாளு வரலப்பா…?..

ஐந்து நாள் வரவில்லை என்று சொல்வது சாதா ஸ்பெஷல்..
நம்ம புகழ்மதி தான் ஸ்பெஷல் சாதா வாச்சே..
அப்படித்தான் கூட்டுவாங்க…நாம எண்ணிக்கனும்.. நல்லா இருக்குல.. அவங்களோட நாமும் வேல பாக்கனும்..

கட்டம் போட்ட நோட்ல எழுதும் போது பாப்பா ஒவ்வொரு கட்டத்துக்குமொரு “இதும்” (இதுவும்) போட்ட அழகு இருக்கே.. வாசிக்க வாசிக்க இதும் பேரழகு…

தனித்தனியா எழுதின எழுத்துக்கு எப்படி மொத்தமா வாசித்துக் காட்டுவது… முழுமையா எழுதினேன் என்று எப்படி விளங்க வச்சிருக்காங்க பாருங்க..

இதும்..
இதும்..
இதும்..
இதும்..
இதும் ..
இதும்..
இதும்..
இதும்.
இதும்..
இதும்.

அந்த பக்கத்துல இருக்க ஒவ்வொரு கட்டத்துக்கும்
ஒவ்வொரு எழுத்துக்கும்
ஒரு இதும்…?
எப்புடி நம்ம புகழ்மதியோட இதும்..

பிள்ளைகள் வெகுவாக தமது தேவையை நேரடியாகச் சுட்டிக்காட்டித் தமக்கான விழைகளுக்காக அடம்பிடித்தோ அழுதோ தாஜா செய்தோ கேட்டுப் பெறுவர். இது பிள்ளைகளுக்கேயுரிய நினைத்ததை சாதிக்க எத்தனிக்கும் இயல்பு. ஆனால் நம்ம பாப்பா ஸ்டைல் வேறு மாதிரி.. தமக்கான நியாயத்தைக் கண்டடையும் அனைத்துத் தரப்புகளையும் திறந்து வெளிப்படுத்தித் தமது விருப்பத்தைக் கோரி நிப்பாங்க..
இங்க பாருங்க பாப்பாவின் சாமர்த்தியத்தை..

அதாவது சம்பவம் நடந்த அன்று நாய் வளர்ப்பதைப் பற்றிய கரிசனங்கள் பெருமளவில் நெகிழ்ச்சியாய் அணிவகுத்தன மொழிகளில்..

அண்ணன்’ லாம் தொந்தரவு பண்ணுவான்…!
நான்லாம் கொலுசு சத்தம் கூட கேக்காம
இப்டி…இப்டி.. நடந்து போவேன்..!
…..

நாய்க்குட்டிய வாஷிங் மெஷின் பக்கத்துல படுக்க வச்சுருவோம்பா…!
அதுக்கும் சேத்து பால் வாங்கனும்..!
……

எப்பப் பா வாங்கித் தருவ..?
……
வாய்க் தெறிந்து சொல்லுங்கப்பா..!
நாய்க்குட்டி எப்ப வாங்கித் தருவ..?

யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துறாங்க நம்ம புகழ்மதி…..

சீமையில இல்லாத நம்ம நாயகியோட உடல் தொந்தரவுக் கால மருத்துவப் பரிசீலனை பிரமாதம்.. புதிய யுத்தி.. மருத்துவ உலகில் மற்றுமொரு புரட்சி..
பாப்பாவுக்கு சளி பிடிச்சிருக்கு..
அவங்க அத்தை உணவு பரிந்துரைப்பு செய்திருக்காங்க..
அதை அப்பாவிடம் சொல்லி செய்முறை வழியாக செயல்படுத்தனும்…

எனக்கு ஒரு ஆம்புலட்டு போட்டு குடுப்பா..

அந்த மஞ்சக் கருவுல் மெளகு போட்டு சாப்பிட்டா சளி சரியாயிரும்..!

இப்போ நம்ம நூலாசிரியருக்கு ஆம்புலட் போட்டுத் தர சுணக்கம்.. மகளுக்கு மாற்று உணவுப் பரிந்துரைப்புச் சொல்றார் தமக்குத் தோதாக….

ரசம் சோறு
இருக்கு பாப்பா
போட்டு தரவா..!

இப்போ பாருங்க நம்ம புகழ்மதி ட்விஸ்ட்… வலிநிவாரணி போல சளி நிவாரணி.. தேர்வின் அடிப்படையில்..

வேணாம்ப்பா…
எனக்கு ஆம்புலட்டு தான் வேணும்.‌
தோசை கூட சாப்பிலாம்ப்பா..!

ஆம்புலட்டும் தோசையும்
வட்டமா வட்டமா இருக்குல
அது சாப்பிட்டாலும்
சளி சரியாயிரும்..!

சரியாதான சொல்லியிருக்காங்க.. இங்க மனம் தான் நோய் தீர்க்கும் மருந்து.. வட்டமா இருக்கும் தோசையை ஆம்புலேட்டாக மனம் ஏற்றுப் பிடித்துத் தமக்கு உவப்பான உணவை எடுக்கும் பட்சம் தொந்தரவு சரியாகும் என்கிற உடல் சார் உணவு உளவியலையே இங்கு நமக்கான புரிதல்…

பிள்ளைகளின் அறிவு மேட்டிமை என்பது நமது பெரியத்தன அறிவிற்குப் புலப்படாத ஒன்று.. வானளாவிய எல்லை தாண்டி விரிந்துச் சிறந்து நிற்கும் அவர்களது தொலைநோக்குப் பார்வை.

காக்கா கைய்ய
இப்படி இப்படி செய்யாட்டி
கீழ விழுந்திருமாப்பா…!
அது கையி இல்ல பாப்பா றெக்கை..

அசலில் அது றெக்’ கை..
சரிதானே.. இதுகாறும் நமது குறுகிய அறிவு மேலோட்டமான அணுகுமுறை புறப்பார்வை… றெக்கை தான் பறவைகளின் கை என்பது சட்டென புலப்படவில்லை…

அதே போல்.
நம்ம டார்வினின் தீர்க்க சிந்தனையும் பலவிடங்களில் விந்தையைக் கிளப்பியது…

TATA தயாரிப்பு வண்டியொன்று முன்செல்ல, பேச்சு அப்பாவிற்கும் மகனுக்கும். டாட்டா நிறுவனத்தின் புறம் திணறியது..

நம்ம டிவில வேற
TATA ன்னு வந்துச்சே…!
…….

ஒரே கம்பெனி
வேற வேற பொருள்
தயாரிச்சு விப்பாங்க…

அப்போ
TATA SKY னு போட்டிருக்கு வானத்தையும்
தயாரிச்சு விப்பாங்களா..?

இப்படியான கேள்விகள் நமக்குள் ஒரு நாளும் எழுந்தது கூட இல்லை.கார்ப்பரேட் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை துளையிடுகின்றன டார்வின் கேள்வி..

இப்போது சீமையின் அடுத்த நாயகி நமது கீர்த்தி பாப்பாவின் பிள்ளைமொழியில் கொஞ்சம் கொஞ்சி நனையலாம்..பெரிய பஞ்சாயத்து ஒன்று.. புகழ்மதியின் பிறந்தநாளுக்கு டார்வின் கேக்கு வெட்டுவேன் என்று அடம் பிடிப்பதாகப் பஞ்சாயத்து கீர்த்தியிடம்…

நீ சொல்லு கீர்த்தி அவன் பிறந்தநாளுக்கு என்னைய வெட்ட விடுவானா அப்ப என் பிறந்த நாளைக்கு அவ வெட்ட கூடாது இல்ல கீர்த்தி..

நம்ம கீர்த்தி பாப்பா புகழ்மதியை அழைப்பதே ஒரு அழகு.. புகழ் ஐ…புலல் ன்னு கூட அழைக்கலாம் ல…
இப்போ பஞசாயத்துத் தலைவர் கீர்த்தி பாப்பா எப்படி தீர்ப்புக் தராங்க.. பார்ப்போம்….

ஆமா புலல்.
அவன் வெட்டக்கூடாது.
அவன் எதுக்கு வெட்டுறான்..!

டார்வின் வரட்டும் புலல்..
எதுக்குடா வெட்டு னண்டு
அவன் கிட்ட நான் கேக்குறேன்..

சூப்பர் ல.. ஒரு வழியா ஆறுமாதம் முன்பு வெளிச்சப்படாத பிரச்சனை இன்று தீர்வு கண்டது…

இறுதியாக டார்வின் சூதனமாகி நூதனமான முறையில் அப்பாவின் எழுத்துலக சாதனைக்கு வானளாவிய புகழுக்கான பின்னூட்டம், தங்களின் மழலை உரையாடலே என்பதை ஆய்வறிந்து புகழ்மதியிடம் குறிப்பாக உணர்த்துகிறார்.. என்ன ஒரு கண்டுபிடிப்பு..
அதையும் கூட புத்தகத்துல பதிவிட்ட நம்ம தோழரை என்னன்னு சொல்ல..

பாப்பா..
இனிமே
நம்ம ரெண்டு பேரும்
எதுவு ‘மே பேசக்கூடாது.. அமை…தியா இருக்கணும்..!

எதுக்குண்ணே…….?

பேசவே கூடாது பாப்பா…!

எதுக்குன்னு சொல்லுண்ணே…

நம்ம பேசுறத எல்லாம்
எழுதி
புக்கு போடுறாங்க
பாப்பா.,…!

இனி சத்தம் கேட்காமல் ஒருவருக்கொருவர் செவிமடல்களுக்கு மட்டுமே கேட்கும் உரையாடல் நடக்குமோ.. அல்லது ஆக்ஷன் வடிவில் திரைக்காணல்களா…
விரைவில்… அடுத்தப் பிரதியை நோக்கி….
குழந்தைகளின் சிந்தனை போக்கின் தடங்களாகவே நாம் இவற்றையெல்லாம் வாசித்து கற்க வேண்டும். எப்பொதும் பெரியவர் மனத்தின் உவப்பான உரையாடல்களையே வாசித்து பழகியுள்ளோம்.. நீண்டு நெடிந்து விவாதத்திற்குள்ளாகி வாசக வரப்பில் விரவியுள்ளோம்.. இங்கோ நூலாசிரியர் தேனிசுந்தர் மொழியியலின் தமிழ்ச்சூழலில் புதிதாய் மழலைகள் மனதை தமது கவித்துவ எள்ளலில் பிள்ளைக்கேயுரிய அசட்டையான ஆர்ப்பாட்ட துள்ளலைப் பெயர்த்து வாசிக்க வழங்கியுள்ளார்.

குடும்பம் என்கிற சாம்ராஜ்யத்தின் மழலை இளவரச இளவரசிகளை முக்கிய பிரமுகர்களாகச் சட்டசபைப் பிரதிநிதிகளாக மதித்துப் போற்றி வருகிறார் நாளொன்றிலும் தேனி சுந்தர் அவர்கள் என்பதற்கு இந்தத் தொகுப்பின் பிள்ளைகளின் ஒவ்வோர் கற்றல் தேடல், சிந்தனைச் செறிவு, ஆழமான அணுகுமுறை,கருத்துச்சுதந்திரம், தோன்றலின் தடைகளற்ற சூழல்கள் யாவும் சான்றுக்கோள்களாய் நிரூபிக்கின்றன. இந்நூல் இத்துடன் நிறைவுறாமல் தொடர்ந்து அடுத்தடுத்தக் கட்டங்களாகப் பிள்ளைகளின் செயல்திறன் சாயல்களுடன் படைப்புகளாக ஜீவித்திருக்க வேண்டும். புதிது புதிதான வடிவங்களில் பரிணமிக்க வேண்டும். கவிதை கட்டுரை சிறுகதை என ஆளுமைகளின் இலக்கிய ஆர்வங்களைத் தொகுத்திடலாம். மழலைகளின் அனிச்சையான செயல்களை அதற்கு உயிர்ப்புத் தரும் மொழிவளத்தைக் கோர்வையாக கொஞ்சமும் கூட்டாமலும் குறைக்காலும் அப்படியே தொகுப்பாக வடிவமாக்குவதற்குக் கூரிய அவதானிப்பும் அணுகுமுறைப் பொறுமையும் நிதானத்தின் தீவிரவாதியாகவும் இருப்பது அவசியம்.. இவை அனைத்தைக் காட்டிலும் பிள்ளைமை சேட்டைகளின் குறும்புகளின் தீவிர ரசிகராக இருப்பதும் கூடுதல் சிறப்பு.. இவ்வனைத்திலும் தம்மை ஒருமுகப்படுத்தியுள்ளார் தேனிசுந்தர் அவர்கள். அசாத்தியத்தைச் சாத்தியப்படுத்திய ஆசிரியரின் இந்த மாறுபட்ட வடிவம் இனி தமிழிலக்கியத்தின் தனித்தப் பிறப்பு….‌ சிறார் இலக்கியத்தில் சிறார் வாசிப்பு படைப்புகள் போல மழலை மொழி இலக்கியம் என்றொரு புதிய இலக்கிய இணைப்பு பிறக்கவிருக்க தேனி சுந்தர் அவர்களின் இந்தத் தொகுப்புகள் வித்தாக அமையப் போகும் அனைத்து திராணிகளையும் புலப்படுத்துகிறது. அடுத்தடுத்த மழலைகளின் அறுசுவைப் படையல்களை எதிர்நோக்கிய பேரறிவுடன் எனது விமர்சனத்தை நிறைவுசெய்கிறேன்.

து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் சீமையில் இல்லாத புத்தகம்..! – இரா.செந்தில் குமார்

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் சீமையில் இல்லாத புத்தகம்..! – இரா.செந்தில் குமார்




நூல் : சீமையிலே இல்லாத புத்தகம்
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

தேனி சுந்தர் அவர்களின் முந்தைய படைப்பான டுஜக் டுஜக் நூலின் பரந்துபட்ட வரவேற்பை தொடர்ந்து அதே வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது, சீமையில் இல்லாத புத்தகம். வாசிக்கும் ஒவ்வொருவரையும் தன் பக்கமாக வசீகரிக்கும் அருமையான நூல்.

குழந்தைகளின் பேச்சு மொழியை பதிவு செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்காகவே அவரை பாராட்டலாம். எல்லார் வீட்டிலும் குழந்தைகள் பேசுகிறார்கள் ஆனால் நாம் அவர்களின் பேச்சை கவனிக்கிறோமா என்பது கேள்விக்குறியே!

ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்தவுடன் உடனே கடக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும்…

ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளின் உலகத்தால் விரிகிறது…. அதில் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போதே பரவசமாகிறது….உடன் பயணித்தால் நம்மை வேறு மனிதர்களாக குழந்தைகள் மாற்றி விடுவார்கள் போலும்.

சீக்கிரமாக தீர கூடாது என மெதுவாக மெதுவாகவே வாசித்தேன்…. வாசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. உடனே வாசித்து கடக்கவும் முடியவில்லை… ஒரு சுகமான அனுபவம்.!

கேள்விகளால் துளைத்தெடுக்கும் டார்வின்களுக்கு நாம் அளிக்கும் பதிலில் தான் அடங்கியுள்ளது குழந்தைகளின் வளர்ச்சி..

ஓரிடத்தில் டாடா ஸ்கை பற்றி டார்வின் ஒரு கேள்வி கேட்பார்…அந்த கேள்வி நம்மை திக்குமுக்காட வைக்கிறது.

நாம் கற்பித்து வைத்துள்ள பாலியல் பேதங்களின் மீது குழந்தைகள் கல் எறிவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் வியர்க்கும் போது அப்பா சட்டை கழட்டுவதும் அம்மாவால் சட்டையை கழட்ட முடியாததை குழந்தை கேள்வி கேட்பதும்…!

டார்வின் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக மிளிரும் வாய்ப்பும் உண்டு அவருக்கு.
புகழ்மதியும் கீர்த்தியும் பேசும் மழலை பேச்சுக்கள் நம்மையும் குழந்தையாக மாற்றிவிடுகிறது…

ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போது சிரிக்காமலும் சிந்திக்காமலும் கடக்கவே முடியாது. ஓரிடத்தில் டார்வின் தனது நாய் குட்டிகாக ஏங்கும் காட்சிகள் மனதை கனமாக்குகிறது.

டார்வின் பற்றிய புத்தகத்தின் படத்தை பார்த்து டார்வினுக்கு ஏன் தமிழ் பெயர் வைத்துள்ளார்கள் என்ற கேள்வி இரசனையானது.

மழலைகள் உலகம் பள்ளிகூடத்தால் எப்படி நசுக்கப்படுகிறது என்று தூங்கிய குழந்தை புகழ்மதி எழுந்து உட்கார்ந்து எழுதுவதன் மூலமாக அறியலாம்.

குழந்தைகளின் உரையாடலோடு கடைசியாக விளக்கம் தரும்படி ஒரு வரி இருக்கும்.. முந்தைய வரிகளை வாசிக்கும் போதே நமக்கு அந்த புரிதல் வந்து விடுவதால், அந்த கடைசி வரிகள் தேவையில்லை என்று நினைக்கிறேன்..

இறுதியாக டார்வின், புகழ்மதியிடம் “இனி நாம பேசவே கூடாது.. நம்ம பேசுறது எல்லாம் எழுதி புத்தகமா போடுறாய்ங்க..!” என்பார் …. அதையும் பதிவு செய்து மேலும் புத்தகத்திற்கு அழகு சேர்த்துள்ளார் தோழர் சுந்தர்.

– இரா.செந்தில் குமார்
தொட்டியம்….

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் ‘சீமையிலே இல்லாத புத்தகம்’ – சோ.மோகனா

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் ‘சீமையிலே இல்லாத புத்தகம்’ – சோ.மோகனா




நூல் : சீமையிலே இல்லாத புத்தகம்
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
வணக்கம் நண்பர்களே..
06.10.22 அன்று விடியற்காலை ரயில் பயணம் மற்றும் காலை, பேருந்து பயணத்தின் போது, தேனி சுந்தரின் சீமையிலே இல்லாத புத்தகம் படித்தேன். ஒரே மூச்சில் 112 பக்கத்தையும், அணிந்துரையிலிருந்து, அவர் உரை வரை 9௦ நிமிடத்தில் படித்தாகிவிட்டது. என்ன சின்ன சின்ன கவிதை வரிகள் தான், எனவே படிக்க எளிதாகவும், விரைவாகவும் முடிந்தது, ஆனால் சீமையில் இல்லாத புத்தகம் படு சூப்பராக இருந்தது. ஆனால் வழக்கம்போல பல பணிகளால் அதனைப் பற்றிய பதிவு எழுத தாமதமாகிவிட்டது.

நெசமாகவே இது சீமையிலே இல்லாத புத்தகம்தான்.குழந்தைகளின் மழலை மொழியை பொதுவாக யாரும் பதிவு செய்வதில்லை. மழலை மொழிகளையே பதிவு செய்து இலக்கியம் ஆகிவிட்டார் தோழர் தேனி சுந்தர். படா கில்லாடி தான் இவர். கொஞ்சமும் கற்பனை கலக்காமல், அதற்கான அவசியமே இல்லாமல், நெசமான மழலை மொழியை பேசி மனதை கவர்தல் என்றால், வாழ்க்கை மொழியை குடும்ப மொழியை இலக்கியமாக்கிய முதல் மனிதர் இவராகத்தான் இருக்க முடியும்.

வாழ்த்துக்கள் மகனே…
“வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்.”

மேலும் சுந்தர் மகன் டார்வினின் கை ஓவியங்கள் அற்புதமாக உள்ளன. ஒரு சிறு பையனா இதனைப் போட்டான் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பெண் எழுதுவது போன்ற பின்பக்க ஓவியம் அதிஅற்புதம்.இந்த கவிதைப் புத்தகத்தில் கவிதையைப் பாராட்டவா, ஓவியத்தை வியக்கவா ? எல்லாமே டாப் டக்கர்தான். எதுவும் மிகையில்லை.

ஏங்க..
பாப்பாவ எங்கக் காணோம்..?

இந்தா..
வெளாண்டுக்ருக்குல..

பாப்பாவுக்கு பாலு வேணுமா..

ஆமா வேணுமாம்..!

பொறுங்க‌.
டம்ளரக் கழுவி
பாலாத்திக்கு வரேன்..

சடி..

ஏங்க உங்களுக்கு
எனக்குநதான் வேணும்

சடி
கொண்டுவாரேன்
………
,,,,
கீத்தி
இப்ப நீ தான் ஏங்க
நாந்தான் அம்மா

எவ்வளவு உன்னிப்பாக அப்பா அம்மாவைக் குழந்தைகள் கவனிக்கிறார்கள்

இந்த “சடி”

இந்த மழலை மொழியை எப்படிதான் பாராட்ட
யாருக்குப்பா இந்த சடிக்கு அர்த்தம் தெரியும்.

அறுபது பக்க புத்தகத்தை
அஞ்சே நிமிஷத்துல
படிக்க முடியுமா?
புகழ்மதி படிச்சுட்டாங்க..

ஒவ்வொரு பக்கமா
புரட்டுவாங்க..

படம் இருக்கும்
பக்கத்த மட்டும் பாப்பாங்க

இது அம்மா
இது அண்ணன்
இது போனு இது வீடு
இது மரம்,
இது குருவி..
…..

நான் படிச்சு முடிச்சுட்டேன்பா
யாராவது இப்படி படிக்க முடியுமா?

சூப்பர் பாப்பா இது

இதனை யாராவது ரசிக்காமல் இருக்கமுடியுமா
குழந்தை எவ்வளவு சமத்தா,, நான் படிச்சு முடிச்சுட்டேன்னு சொல்லுது.

அடுத்த கவிதை
அப்பா கவிதை

கொஞசம்
உயரமான சைக்கிள்தான்

வாடா ஓட்டிப் பழகுவோம்னு
அப்பப்போ கூப்பிடுவேன்
தயங்குவான்,
நைசா தப்பிச்சு ஓடிருவான்

காசுக்குப் புடிச்ச கேடு
வாங்கி வெட்டியா கிடக்கு,
யாருக்காச்சும்
தூக்கிக் கொடுத்து விட்ரனும்

கப்பக்கிழங்கு காரரு வரட்டும்
குடுத்துட்டு கிழங்கு வாங்குறேன்

என்னமோ..
கொஞச நாள் கழிச்சு \சித்தப்பன்
மேலே நம்[பிக்கை வைத்து
ஓட்டிப் பழகிட்டான்.

ரெண்டு கால்களுக்கும்
றெக்கை முளைச்சது போல
தெருவின் ரெண்டு முனைக்கும்
ஒட்டி ஓட்டி
ஓட்டி ரசிக்கிறான்..

இப்ப கேக்குறான்..
இருட்டாக்கிருச்சு
பைக்ல இருக்குற மாரி
இதுலயும்
லைட் வச்சு குடுப்பா

குழந்தைகளின் மனதை எப்படிப் படிக்க ;எப்படி ரசிக்க
எப்படி அங்கு கற்பனை புகுந்து சிறகடிக்கிறது

இதனாலதான் வள்ளுவர் சொல்கிறாரே

“குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்” என்று சொன்னாரோ

வாயில ஒன்னு
கையில ஒன்னு
எத்தனை சாக்லட்டு

வேணாம் பாப்பா
பல்லு பூரா
சொத்தையா போகும் ..

சொத்தையா போவாதுப்பா
சாக்லட்டு சாப்பிட்டா
இரும வராது
ஒனக்குத் தெரியாதா

இரும வராதா
யாரு சொன்னது..?

அப்பத்தா ….

அவங்க சொன்னது
ஹால்ஸ் மிட்டாய்
இந்த மேடத்துக்கு மட்டும்
சாக்லட்டுன்னு கேட்டிருக்கு ..!

குழ்நதைகள் எப்படி தனக்கு வசதியாக நம்மை ஏமாற்ற
தனது குழந்தைத்தனமான கற்பனையை
பறக்க விடுகிறார்கள் .
இதையெல்லாம் கேட்டும் மகிழ்ந்தும் நாம் நினைத்து நினைத்து ரசிப்போம் தானே.

கீழே
அப்பத்தாவின் பேச்சொலி கேட்டு
முழிப்பு வந்துருச்சு அவனுக்கு,
நறுக்குன்னு கால மிதிச்சு
கடந்து போனான்

விடியல
இன்னும் இருட்டாத்தான் இருக்கு

போடி போ
கதவ திறக்கணும்
என்னய த்தானே கூப்பிடணும்
தூங்குற மாதிரியே படுத்திருந்தேன் ..

அவன் அங்கன
கெடந்த சேரைத்
தூக்கிப் போட்டான்
கதவ தொறந்தான்
போடா பொக்கன்னு
ஒரு பார்வை பாத்துட்டு
கீழ போயிட்டான்

போன தலைவரு
அங்க போயி தூங்கிட்டாரு

எட்டு மணிக்கு
எந்திரிச்சு வந்தவன்
கேக்குறான்.

உம பக்கத்துல தானப்பா
படுத்து இருந்தேன்
எப்புடி கீழ இருந்து
வந்தேன் பார்த்தியா

அட ஆமா எப்டிடா?
அதெல்லாம் மேஜிக்
ஒனக்கு ஒண்ணும் தெரியாது..

இந்த தந்திர மந்திரத்தை என்னென்று சொல்ல ?எப்படி குழந்தைகள் நமக்குத் தெரியும் என்று \தெரிந்தும் நம்மை விளையாட்டாக ஏமாற்றுகிறார்கள்
இது என்ன கலை? அவர்கள் கற்பனையில்

இதைத்தான் ஆயிஷா தோழர் தனது அணிந்துரையில்,சொல்லி இருக்கிறாரோ…!

மாண்டிசோரியும், நோம்சாம்ஸ்கியும் கைகுலுக்கும்
புள்ளியில் இருந்து
ஊற்றெடுக்கும் கவிதைகள் என்று

ஒவ்வொரு கவிதையும் படு சூப்பர்

சொல்ல சொல்ல இனிக்குதடா
முருகா என கே. பி. சுந்தராம்பாள்
பாடிய பாடல் வரிகள்
சொல்ல சொல்ல இனிக்குதடா சுந்தர் என
இங்கு சிக்கென்று அற்புதமாகவே பொருந்தும்.

அடுத்த இன்னொரு சுவையான கவிதை, கொஞசம் அனுபவம்…..

கடைக்குச் சாப்பிடப் போனோம்.
வேண்டியத ஆர்டர் பண்ணினோம்

பக்கத்து டேபிள்ள
செவப்பா ஒருத்தரு
சுத்தப்படுத்திக்கிருந்தாரு
இன்னொருத்ததர்
இலை எடுத்தாரு

டார்வின் கேட்டான்..
ஏம்ப்பா இவங்கெல்லாம்
நம்ம ஊரா

இல்லடா

அப்ப சீனாவா ?
எனக்குப் பசி வேற

வடகிழக்கு மாநில
விளக்கமெல்லாம் எதுக்குன்னு

ஆமான்னு சொன்னேன்

உடனே கேக்குறான்
அப்ப நம்மளு க்கு
கொரோனா வந்துடாதா

என்னப்பா நீய்யீ
இதைக்கூடப் பாக்காம
உள்ள வந்து
உக்கார வச்சுட்டா ..?

மைக் செட்டுல
பாட்ட போட்டுப் போட்டு
எங்க வரைக்கும்
ரீச் பண்ணியிருக்காங்க

எனக்கு படித்து முடித்ததும் சிரித்து சிரித்தே வயிறு புண்ணாயிடுத்து.
குழந்தைங்க மனசு எப்படி எல்லாம் யோசிக்குது. இதுதான் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கிறது. என்பார்கள் ,..பாவம் சுந்தர்
குழந்தைகள் நம்மை நாம் எதிர்பாராமல் முட்டாளாக்கி விடுவார்கள்
என்ன சுந்தரண்ணே சரியா ?

எப்பா ..
எனக்கு ஒரு ஆம்லட்
போட்டுக் குடுப்பா

எதுக்கு பாப்பா
அந்த மஞ்ச கருவுல
மெளகு போட்டு சாப்பிட்டா
சளி சரியாயிடும் ..

யாரு சொன்னது

அத்தை..

ரசம் சோறு
இருக்கு பாப்பா
போட்டுத் தரவா ..?

வேணாம்ப்பா
எனக்கு ஆம்லட்டுதான்
வேணும்
தோசை கூட சாப்பிடலாம்ப்பா

சரி
தோசை எதுக்கு ?

ஆம்லட்டும் தோசையும்
வட்டமா வட்டமா இருக்குல்ல
அத சாப்பிட்டாலும்
சளி சரியாயிடும்

இது எப்படி இருக்கு..
எப்படி ஒரு ஒப்பீடு அளவில், சைசில்
சூப்பர் பாப்பா நீ.
..
குழந்தைகள் நம்மைவிட படா புத்திசாலிகள்
கொஞ்சம் அங்கு இங்கு யோசனை பண்ணினால் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்
நாமும் ஏமாந்தது போல பாசாங்கு செய்தால் குழந்தைகளுக்குக் கொள்ளை மகிழ்ச்சி

அம்மா,
என்னா பாப்பா
பேயி ..
ஆ..ண்டு கத்தற சத்தம்
கேக்குதும்மா

உங்க அப்பா வந்தாதான்
பேய அடிக்க முடியும்,

நாம ஒண்ணும் செய்ய முடியாது
பேசாம படு

அம்மா
என்னாடி..

அதான் சொன்னேன்ல
பேசாம படு..

இல்லம்மா
பேய நானே அடிச்சு
விரட்டிட்டேன்
நீ பயப்படாம படு..

எப்படி பாப்பாவின் சாமர்த்தியம் அம்மாவை எப்படி சமாளிக்குது குழந்தைகள் படு சாமர்த்தியசாலிகள்;பாடு சுட்டிகள். அவர்களின் திறமையை, கவித்துவத்தை, கற்பனையை, அறிவினை வியக்க தனி மனமும் தனி உள்ளமும் மூளையும் நமக்கு வேண்டும்,

இந்த சீமையிலே இல்லாத புத்தகத்தில் உள்ள கவிதை வரிகளில் எதைச் சொல்ல எதை விடுக்க..
அப்பறம் நீங்க படிச்சு சிரிக்க வேண்டாமா

முடிவா ஒரு கடைசி கவிதையை நான் ரொம்பவே வாசிச்சு ரசிச்சு சிரித்ததை சொல்கிறேன்.
அப்பத்தான்
வீட்டுக்குள்ள நுழையுறேன்
டார்வின் சொல்றான்

பாப்பா
இனிமே
நம்ம ரெண்டு பேரும்
எதுவுமே பேசக்கூடாது..
அமை…தியா இருக்கணும்

எதுக்குண்ணே ..?
பேசவே கூடாது பாப்பா !

எதுக்குன்னு சொல்லுண்ணே
நம்ம பேசறது எல்லாம்
எழுதி
புக்கு போடுறாய்ங்க
பாப்பா

இது எப்படி இருக்குது? சும்மா அதிருதுல்ல

எவ்வளவு உற்று நோக்கல், எவ்வளவு கூர்மையான அறிவும் விளையாட்டாக எதனையும் அறிந்து கொள்ளலும் ..
இதனைப் பற்றி சொன்னதும், சில பக்கங்களை படித்துக் காட்டியதும், எனது தங்கையின் மருமகள்,/தம்பி பெண் இந்த புத்தகத்தை அவர்கள் படிக்க கேட்கிறார்கள். எப்படி பிடிக்காதவர்களை ஈர்க்க வைக்கும் காந்தமாய் இந்த புத்தகம் “சீமையிலே இல்லாத புத்தகம் ”

சூழலைப் பொறுத்தே வளரும் குழந்தை மனமும், புத்திசாலித்தனமும்..
இதனை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து செயல்பட்டால் குழந்தை வளர்ப்பில்
சாதிக்க முடியும்.

சுந்தர் -அருணா தம்பதியர் சாதித்து இருக்கிறீர்கள்.
எவ்வளவு அழகாக குழந்தை மழலையை பதிவு செய்து
பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் பொறுப்பாளார் ஆகி “நச்சத்திரம்” போல ஜொலிக்கிறார்
தோழர் சுந்தர்.
குழந்தை மொழி பதிவு வரலாற்றில் தாங்கள்தான் முன்னோடி..
அட்டகாசமான புத்தகம்.
மீண்டும் மீண்டும் வாழ்த்துகளும், அன்பும், மகிழ்ச்சியும் சுந்தர் மகனே.

– சோ.மோகனா

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் சீமையில் இல்லாத புத்தகம்..!- அமுதா செல்வி

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் சீமையில் இல்லாத புத்தகம்..!- அமுதா செல்வி




நூல் : சீமையிலே இல்லாத புத்தகம்
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

ஒரு வழியா “சீமையிலே இல்லாத புத்தகம்” வந்து சேர்ந்து விட்டது. கையில் கிடைத்ததும் வாசிக்க தொடங்கி விட்டேன். அட்டை படமே அட்டகாசமா இருக்கு. திருப்பி பார்த்தால் ஆசிரியர் குறிப்பு அதைவிட பிரமாதம். ஆஹா…..

நிச்சயமா இது “சீமையில இல்லாத புத்தகம்” தான்.. இப்படி ஒரு ஆசிரியர் குறிப்பு இதுவரை நான் பார்த்ததில்லை. என்னமோ தெரியாது… சிலரிடம் காரணமே இல்லாமல் ஒருவித உணர்வு நெருக்கம் ஏற்படும். உடனே ‘முறை’ சொல்லி கூப்பிட தோணும்.

ச. தமிழ்ச்செல்வன் அண்ணனை பார்க்கும் போதெல்லாம் அப்படி ஒரு உணர்வு தோன்றும். அப்பா வயதுகாரர் என்றாலும் அண்ணன் என்று கூப்பிட கூப்பிட இனிப்பா இருக்கும். அது போன்றதொரு நெருக்கம் எனக்கு புகழ்மதியோடு ஏற்பட்டுள்ளது. “மருமகளே” என்று தாடையை பிடித்து கொஞ்ச தோன்றும் நெருக்கம்.

நான் அவளை நேரில் பார்த்ததே இல்லை. எனக்கும் அவளுக்குமான உரையாடல்கள் அத்தனையும் டுஜக் டுஜக் புத்தகமும் அதனை தொடர்ந்து வரும் வாட்ஸ் அப் செய்திகளும் மட்டுமே. இரண்டு மூன்று நாள் தகவல் இல்லை என்றால் கூட எங்கே போய்ட்டீங்க என்று கேட்க தோணும்.

நேற்று புத்தகம் கையில் கிடைத்ததும் அவளையே நேரில் பார்த்த மகிழ்ச்சி. ஒவ்வொரு பக்கம் படித்து முடித்து பொறட்டும் போதும் வாயெல்லாம் சிரிப்பு. முகமெல்லாம் மலர்ச்சி..!

சீமையில் இல்லாத புத்தகம் வாசித்த பிறகு ஏன் புகழ்மதி வயசு பிள்ளைங்க புகழ்மதி போல இல்லை. கீர்த்தி, புகழ்மதி கிட்ட இருக்கும் குழந்தமை ஏன் பெரும்பான்மையான குழந்தைகளிடம் இல்லை என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.

குழந்தை பிறந்த முதல் நாள் தொடங்கி அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்காக பெற்றோர்களே வாழ்கின்றோம்.. ஒருவேளை குழந்தையின் அந்தந்த வயதுக்குரிய இயல்பை இப்போது பரவலாக பார்க்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமா இருக்குமோ…

எல்லா பிள்ளைகளும் அறிவு ஜீவிகள் போல வயதிற்கு மீறி பேசுகின்றனர். சமீபத்தில் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பனின் இந்து நாளிதழில் வந்த கட்டுரையும் இவை குறித்தே பேசியது.

இவை அனைத்திலிருந்தும் விலகி நின்று குழந்தைகளின் உலகம் அவர்களுக்கான சுதந்திரத்தோடு நிர்மாணிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணத்தை தோழர் தேனி சுந்தரின் வீடு நமக்கு காட்டுகிறது.

குழந்தைகள் அவர்கள் இயல்பு நிலை மாறாமல் எட்டும் அறிவு நிலையே ஆரோக்கியமானது என்பதை அறிவுரையாக தராமல் வாழ்ந்து காட்டி பெரிய உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒவ்வொரு உரையாடலிலும் குழந்தைகள் புகழ்மதி, டார்வின், கீர்த்தி தெறிக்க விட்டுள்ளார்கள்.

“மூன்றாம் பிறை படத்திலிருந்து
பாட்டு ஓடுச்சு
அதை பார்த்துக்கிட்டே
பாப்பா சொன்னாங்க..
அங்கே பாருப்பா
அந்த நாய்க்குட்டி
அவங்க அம்மா கிட்ட ஓடுது
அங்க பாருப்பா
அவங்க அப்பா கிட்ட ஓடுது..
நல்லவேளை
இந்த விஷயம் கமலஹாசனுக்கு தெரியாது.!!”

இதை முதன் முதலில் வாசித்த போது விழுந்து புரண்டு சிரிச்ச சிரிச்சு சிரிச்சு இருமலே வந்து விட்டது.

“ஹலோ யார் பேசுறது..?

மேக்கப் கடைல இருந்து பேசுகிறோம்..

உங்க வீட்டுக்கு நாங்க வாரோம்..

நாங்க கூப்பிடவே இல்லையே..
எதுக்கு வரீங்க..?!

நாங்க அப்படித்தான் வருவோம்..

ஹலோ மேடம்
நாங்க நல்லா தான் இருக்கோம்..
மேக்கப் எல்லாம் வேண்டாம்..

மேக்கப்போடலைன்னா
கேவலமா இருப்பீங்க
வீட்ல இருங்க வந்துக்கிருக்கோம்…..!””

இப்படி நிறைய….

ரசித்து ரசித்து படிக்க நிரம்பி கிடக்குது புத்தகம் முழுவதும்.

“”என்னடி சொல்லிக்கிருக்க..

அங்கிட்டும் இங்குட்டுமா
ஓடி வெளாட
அது என்ன உன் பேத்தியா..??””

இப்படி சரவெடியா பக்கத்துக்கு பக்கம் வெடிச்சு சிதறுது பிள்ளைகளின் உரையாடல். மனச ரிலாக்ஸ் பண்ணனும்னா சீமையிலே இல்லாத புத்தகம் வாங்கி படிங்க. எப்படி புள்ள வளர்க்கணும் என்று ஃப்ரீயா கத்துக்கலாம்.

– அமுதா செல்வி,
மதுரை

நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்

நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்




“சிந்தனையாளர் சாக்ரடீஸ்” என்று பூவை அமுதன் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட 94 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு சுவாரசியமானது.

”பெரிய சாக்கிரட்டீஸ் மாதிரி கேள்வி கேட்க வந்துட்டான் பார்” என்ற சொல்லாடல்  நீண்டகாலமாகவே உண்டு. சிறு வயதிலிருந்தே சாக்ரடீஸ் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. ஏதோ ஒரு நாட்டில் எப்போதோ வாழ்ந்து மறைந்த ஒரு நபர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார் என்றால் சமுதாயத்திற்கு அவரின் அசாத்தியமான பங்களிப்பை போற்றாமல் இருக்க முடியாது.

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரத்தில் கி.மு. 469ம் வருடம் வறுமையான குடும்பத்தில் பிறந்தார் சாக்ரடீஸ். 40 வயது வரை ராணுவத்தில் பணியாற்றி மூன்று போர்களில் நேரடியாக பங்கேற்று போராடி பல பதக்கங்களை வென்றார்.  கிரேக்க நாட்டில் ஏறக்குறைய 2400 ஆண்டுகளுக்கு முன்பே குடியாட்சி இருந்தது.

உலகின் முதல் கேள்வியின் நாயகன் சாக்ரடீஸ் தான். ஏன்? எதற்காக? எப்படி? எதனால்? எவ்வாறு? என்று அடுக்கடுக்காக கேள்விகளால் மக்களின் சிந்தனையை தூண்டியவர். ”எதையும் கேள்வி கேட்காமல் ஏற்காதீர்கள்” என்று மக்களிடம் தொடர்ந்து போதனை செய்தார். ’பக்தி’ என்ற நம்பிக்கையால் சிந்திக்க தவறாதீர்கள் என்று மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்த முனைந்த உலகத்தின் முதல் முற்போக்காளர் சாக்ரடீஸ். ”சிந்திப்பதும், சிந்திப்பதை சொல்வதும் ஒவ்வொரு தனி மனிதனின் பிறப்புரிமை ஆகும்” என்றார்.

சப்பை மூக்கும், தடித்த உதடுகளும், பெருத்த மண்டையும், பெரிய கண்களும், சரிந்த தொப்பையும். அழுக்கு ஆடையுமாக வசீகரமற்ற தோற்றம் கொண்டவர் சாக்ரட்டீஸ். ஆனால் அவர் சந்தை. கோவில், விளையாட்டுத் திடல் போன்று மக்கள் திரளாக உள்ள இடங்களுக்குச் சென்று உரத்த குரலில் பேச ஆரம்பித்துவிட்டால், இளைஞர் முதல் முதியோர் வரை ஆண், பெண் அனைவரும் ஆர்வத்துடன் அவரின் பேச்சை கேட்பார்கள். மாற்றம் விரும்பிய, எழுச்சி உள்ளம் கொண்ட இளைஞர் கூட்டம் தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்களாக அவரை சூழ்ந்து கொண்டனர்.

பொய்யையும், புளுகையும் மூலதனமாக வைத்து மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருந்த கூட்டம் சாக்ரடீஸை கண்டு நடுங்கியது. சாக்ரடீஸின் பகுத்தறிவுக் கொள்கைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் தாங்கள் செல்லாக் காசாகி விடுவோம் என்று அஞ்சிய பழமைவாதிகளும், மதவாதிகளும் அவருக்கு எதிராக திரண்டனர்.

“அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் கடவுளை சாக்ரடீஸ் வணங்குவதில்லை. புதிய மதக் கோட்பாடுகளை புகுத்துகிறார். ஏற்கனவே உள்ள நம்பிக்கையை சிதைக்கிறார்…..….இளைஞர்களை தன் பேச்சு வன்மையால் கெடுத்து விடுகிறார்” என்று சாக்ரடீஸ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

”ஒரு மனிதனை குழந்தையாக தாய் ஈன்றார்; தந்தை படிக்க வைத்தார்; குரு போதித்தார்; அரசு மனிதனாக்கியது; நண்பர்கள் நல்லவனாக்கினார்கள்,  இவ்வளவு பேர் சேர்ந்து நல்லவனாக்கிய ஒருவனை நான் கொடுத்து விட்டேன் என்றால் எனக்கு அவ்வளவு பேரையும் விட அதிக சக்தி இருப்பதாகத் தானே அர்த்தம்? அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்பார் சாக்ரடீஸ்.

பெயருக்கு ஒரு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை முடிவில் நீதிபதிகளாக அமர்ந்திருந்த 501 பேரில் சாக்ரடீஸ் குற்றவாளி என்று 281 பேரும், குற்றவாளி அல்ல என்று 220 பேரும் வாக்களித்தனர். அவருக்கு அப்போதிருந்த சட்ட திட்டங்களின் படி ஹெமலாக் என்ற கொடிய நஞ்சு கொடுக்கப்பட்டு கிமு.399ம் ஆண்டு அவரின் எழுபதாவது வயதில் கொல்லப்பட்டார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், அங்கிருந்து தப்பிப்பதற்கு அவருடைய நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் சாக்ரடீஸ் அதனை தீர்மானமாக மறுத்துவிட்டார். ”உயிருக்கு பயந்து அடுத்த நாட்டில் கோழையாக வாழ நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” என்று கூறி மரணத்தை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு அவர் ஆற்றிய உரையில் “நான் இளைஞர்களைக் கெடுக்கிறேன் என்று என் மீது குற்றம் சாட்டி எனக்கு மரணதண்டனையை விதித்து விட்டீர்கள். விரைவில் என்னை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் என்னோடு என் கருத்துக்களையும் அழித்துவிடலாம் என்ற உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எனக்குப் பின்னால் எண்ணற்ற இளைஞர்கள் என்னைப்போலவே ஏதன்ஸ் நகர மக்களை நல்வழிப்படுத்த தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரையுமே உங்களால் அழித்து விட முடியாது. என்னதான் முயன்றாலும் என் கொள்கைகளை மண்ணோடு மண்ணாக்கிட முடியவே முடியாது என்பதை காலம் கட்டாயம் உங்களுக்கு மெய்ப்பித்து விடும்.” என்று குறிப்பிட்டார் சாக்ரடீஸ்.

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சாக்ரடீஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரின் சீடரானார் ’உயர்ந்த’ குலத்தில் பிறந்த பிளேட்டோ. சாக்ரடீஸின் சிந்தனைகளுக்கு எழுத்து உருவம் கொடுத்தவர் அவர். பின்னாளில் ”காரல் மார்க்சின் பொதுவுடமை புரட்சி கருத்துக்களுக்கும், ரூசோவின் புரட்சி எண்ணங்களுக்கும், இங்கர்சாலின் மூடநம்பிக்கையை எதிர்த்த கருத்துக்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர் சாக்ரடீஸின் முற்போக்கு கருத்துக்களுக்கு எழுத்துருவம் தந்த பிளேட்டோ” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதிகாரி நச்சுக் கோப்பையுடன் வந்தார். ”நண்பா நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தயவுசெய்து சொல்லு” என்று நிதானமாக அவரிடம் கேட்டார் சாக்ரடீஸ்.  ”ஐயா இந்த விஷத்தை நீங்கள் குடிக்க வேண்டும். பிறகு நடக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். பின்னர் படுத்துக்கொள்ளலாம். நஞ்சு தன் காரியத்தை நடத்தி முடித்து விடும்” என்று அந்த அதிகாரி வேதனையுடன் கூறினார்

சாக்ரடீஸ் மனதில் ஆண்டவனை தொழுதுவிட்டு விஷக் கோப்பையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று நிதானமாக பருகினார். பிறகு அவர் அமைதியாக நடக்க ஆரம்பித்தார். அவர் கால்கள் மரத்துப்போகும் உணர்வு வரும்வரை நடந்து கொண்டே இருந்தார். பின்னர் மல்லாந்து படுத்துக் கொண்டார். மரணம் அவரை தழுவிக் கொண்டது.

”பிறர் குறை காண்பவன் அரை மனிதன்; தன்குறை காண்பவனே முழு மனிதன்”
”மருத்துவ நூல் மருந்துகளின் நன்மைக்காக இல்லை; உடலின் நன்மைக்காக உள்ளது. அது போலவே ஆட்சி புரியும் கலை ஆள்பவர்களின் நன்மைக்காக இல்லை; ஆளப்படுகின்ற மக்களின் நன்மைக்காகவே இருக்கிறது”
”எங்கே என்னுடையது, உன்னுடையது என்ற எண்ணம் மறைந்து பொதுவுடமை நிலவுகிறதோ அங்கேதான் யாவருக்கும் பொதுவான மனநிறைவு ஏற்படும்”
போன்ற சாக்ரடீஸின் பல கருத்துக்கள் இன்றளவும் மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
மக்களுக்காக அயராது பாடுபட்டவரின் வரலாறு பற்றிய இந்த நூல் அனைவருக்கும், குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளது.

நூல் : சிந்தனையாளர் சாக்ரடீஸ்
எழுத்தாளர் : பூவை அமுதன்
பதிப்பகம் : பிரேமா பிரசுரம்
பக்கங்கள்:94

Kalapuvan Kavithai கலாபுவன் கவிதை

கலாபுவன் கவிதை

என் ஏகாந்தத்தின் தோழன் கவிதையே
தனிமையில் எழுதும் கவிதை தான் பலருக்கு பிடிக்கிறது
கவிதையே கதையின் சுருக்கம்
நானூறு உணர்ச்சிகளை நாலு வரிகளில் சொல்வது கவிதை
பாநூறு எழுதினாலும் படிப்பதற்கு ஆளில்லை
ஆகவே தான் சில வரிகளில் சிற்பமென செதுக்குகிறேன் கவிதைகளை
ஆராய்ந்து எழுதுகிறேன்
அடுக்கு மொழியில்லை ஆனாலும் நிஜங்களே அவை
தேனூற்று வார்த்தைகளை தேடி எழுதவில்லை
தேடி வருவோர்க்கு தெவிட்டாமல் எழுதுகிறேன்
சீரான வரிகள் இவை
சிந்தனையைத் தூண்டுபவை

கடைசி மனிதனுக்கும் கற்பனை வடிவதில்லை
சோகமோ சுகமோ சொல்லிவிட்டால் ஒரு நிம்மதி தான்
வானிலவு இருக்கும் வரை வாழ்கையில் கவிதையுண்டு
தேனிலவு முடிந்தாலும் திகட்டிடுமோ வாழ்க்கையிங்கு…..

Karkaviyin Kavithaigal 12 கார்கவியின் கவிதைகள் 12

கார்கவியின் கவிதைகள்

வயது தடையில்லை
*************************
முகம் மறைத்த
வெண்நறையை
இதழ் பிதுக்கி
ஊதிய நொடிகளில்
விட்டுப்போன
நம்பிக்கையும்
கடந்து போன நேற்றும்
காற்றோடு பறந்து விடுகிறது…..!

நடைபாதை வழியெல்லாம்
உன் இழப்புகளை
எல்லைக்கல்லாய்
செருகி வைக்க
ஏதாவது ஒன்றின்
மேல் அமர்ந்து பூர்த்தி செய்கிறது
வயதின் விடாமுயற்சி பயணம் தனை……!

நீர் நிறைந்த குளத்தில்
நீந்தியாட துடிக்கும்
வயதிற்கு
கைத்தாங்கலாக கொடுக்கப்பட்டது தடி
எடுத்தெறிந்து வா
இயல்பாக வாழ
வயது தடையில்லை…….!

இளமையோடு
போட்டியிடும்
நாளையது வயதினில்
புது கதவினை திறந்திடலாம் உலகை -என்றும்
வயது தடையில்லை…

எத்தனை நாம்
******************
துண்டு துண்டாக
வெட்டப்பட்ட
நீர்க்குழாயில்
துண்டுபடாமல்
கோர்த்து செல்கிறது
நீரோட்டம்………………………
நிரந்தரமில்லாத
நீ எம்மாத்ரம்…………………
எத்துணை
திருப்பங்கள் இருப்பினும்
கைக்கோர்த்து
நடைபோடுகிறது
நீர்சுழிகள்…………………
நீ
நான்
எத்தனை நாம்……………….

மண்ணும் மங்கையரும்
****************************
நீ நமிர்ந்த பார்த்த தருணத்தில்
நிச்சயம் கொட்டும் வான்மழை
நீ வளர்த்த சிறு பூச்செடிக்கு
சாரலை கொடுக்கும் அந்த மர சன்னல்

உழவாடும் வயல் வெளிகள் தாகம் சுரந்தது
நீ ஊற்றிய நீர் இனிப்பாய்
வரப்புகளுக்கு எடையேற்றிய உன் நடை
நீ குனிந்து பறித்த அந்த இயற்கை

பாதங்களை விட்டுச்செல்லும் உன் பாலை
நண்டுகளின் வரிசையில் உன் நெய்தல்
வரப்போரம் சாகுபடியில்
உன் மருதம்
ஓங்கிய அழகாய்
உன் முல்லை
சூடிக்கொள்ள நீ ஏற்கும் குறிஞ்சி

ஆறடியில் அழகை ஏற்க காத்திருக்கும் மண்
அடையாத ஏக்கத்தில் காலம் முடிக்கும் பெண்
வழியில்லை வழியுண்டு மண்ணில் பிறந்த மங்கையற்கு

சிந்தனை 1000
******************
நீ
சரியென்றாலும்
தலையாட்டும்
தவறென்றாலும்
தலையாட்டும்
நீ நம்பகமானவனாக இருந்தால்
இன்று தோளில்
உயர்த்தப்பட்ட
நீ
நாளை காலின்கீழ்
வைக்கப்பட வெகு நாள்
இல்லை

உன்குறைகளை பேசும்
அவர்
அவர் குறைகளை மட்டும்
கண்ணைக்கட்டிக் கொண்டு
வரையறுப்பதுதான் சிரிப்பு

உன் புரிதலில்லாத
மனதிற்கு நான்
சரி என்று
ஏற்றுக்கொள்ளும்
தவறைவிட
உன்னை நான் எப்படி
திருப்தி செய்துவிட முடியும்

கார்கவியின் கவிதைகள் 4 Karkaviyin Kavithaigal 4

கார்கவியின் கவிதைகள்

சிந்தனை 1000
***********
என்றோ ஒரு நாள் பெய்யும் மழைக்காக குடை வாங்கிவரும் அப்பாவின் அனுபவம் போல்
மனிதர்களுக்காக
மௌனக்குடைகளை பற்றியே திரிகிறது காலம்….

மணலோடு சேரும் பைஞ்சுரத்தின் இணைப்பிற்கு ஈடாவதில்லை
பாழாய் போன மனிதர்களும்..
பாலாய் போன குருதியும்…!

யாரென்று_தெரிகிறதா..!
*****************************
நான் யாரென
கண்டிப்பாக நீ அறியமாட்டாய்
உன் முன்னர் சென்றிருப்பேன்
உன் முன்னால் சென்றிருப்பேன்…!
யாரிடமாவது என் பெயர் புலப்பட்டிருக்கும்
எவராவது என்னை முனுமுனுத்துக் கொண்டே இருப்பார்….!

மௌனத்தில் என்னை
திட்டி தீர்த்திருப்பாய்
இருப்பினும் நான் யாரென்று தெரிய வாய்ப்பில்லை…!

கண்ணாடி மை ஒழுகு
கண்ணீர் துடைத்திருப்பாய்
துடைத்த விரல் ரேகையில்
நான் கண்டிப்பாக இருந்திருப்பேன்
காலம் என்று சொல்லி
வையித்து சென்றிருப்பாய்…!

செல்லிவிட்டுதான் போயென்றால்
இதோ சொல்லிவிட்டு
அடுத்த சிந்தனைக்கு
கூடு தாவுகிறேன்
நான்தான் உன் மனசாட்சி…!

அமைதியாக
நினைத்துபார்
நான்தான் – உன்
மனசாட்சி…!

சொற்பெயர்தல்
*******************
ஒவ்வொரு கவிஞனையும்
பார்த்துப் பார்த்து இடம்பெயர்கின்றேன்
ஏதோ கூறிச்செல்கிறான்
இயற்கையை வர்ணித்துச் செல்கிறான்
அவனின் அவளை ஏகபோகமாகக் காதலிக்கிறான்..!

சின்னதாக ஒரு லைக்
மொத்தமாகக் குத்தகையில் அருமை எனும் பாராட்டல்
முடிந்தால் ஈமோஜிகளின் அணிவகுப்பு
இத்தனையும் எங்கே போனது
எனது தேடலில் வந்து நிற்கிறது..!

கசக்கி எறியப்பட்ட
காகிதக் கருத்துக் குப்பைகளில்
பேனா மை நிறைந்த
கண்டும் திருப்தியில்லாமல்
நகரும் சொற்பெயர்தல்..!