கிராமங்களில் திருவிழா வீதியுலா கவிதை – ச.சக்தி
வண்ண
விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்ட
வாகனத்தில்
அம்மன் வீதியுலா
ஊர்ந்து வருகிறது
கிராமங்கள் தோறும்
இரவு
முழுவதும்
விழித்திருந்து
அம்மனுக்கு
கற்பூரம்,
ஊதுபத்தி,
வெற்றிலை,
பாக்கு, வைத்து
வழிப்படுகின்றனர்
கிராமத்து பெண்கள்
விட்டு
விட்டு
எரிகிற
தெருவிளக்குகள்
வெளிச்சத்தில்
பறை இசை
முழங்க
பவனி வருகிறது மாரியம்மன்
கொழுக்கட்டை
சுண்டலூம்
வாழைப்பழமும்
இரவு முழுவதும்
தூங்காமல்
மாரியம்மனோடு
சுற்றிவரும்
இளைஞர்களுக்கு பசியாறுகிறது
பசியாறிய
இளைஞர்கள்
பள்ளத்தில்
மாட்டிக்கொண்ட
மாரியம்மனின்
வண்டியை
இழுத்து
செல்கின்றனர் தெருவெங்கும்
மாரியம்மன்
வீதியுலாவோடு
கரகாட்டமும்
பேண்டு
கச்சேரியும்
தெருக்களின்
தரத்தை
பரிசோதிக்கின்றன
ஆடிய ஆட்டத்தால்
தெருவெங்கும்
மனிதர்களின்
நடமாட்டம்
அதிகமாகியது
அம்மனின்
வீதியுலாவை காண
தாகம்
ஏற்படுகிற
இளைஞர்களுக்கு
தாகத்தை தீர்க்கிறது
மாரியம்மனுக்கு
உடைத்த தேங்காய் தண்ணீர்
விபூதியும்
ஊதுபத்தி
வாசனையில்
ஒவ்வொரு
தெருவின்
வழியாக
ஊர்ந்து போகிறது
மாரியம்மன் வீதியுலா
மாரியம்மன்
வீதியுலாவுக்காக
இரவு முழுவதும்
விழித்திருக்கிறன
நிலவும்
தெரு விளக்குகள் பல்புகளும்
மாரியம்மனை
இழுத்து
செல்லும்
மாடுகளுக்கு
அம்மனின்
கழுத்துக்கு
போட்ட மாலையை
மாடுகளுக்கு
அனிவிப்பார் வண்டிக்காரர்
சுண்டலையும்
கொழுக்கட்டையும்
வாழைப்பழத்தையும்
தின்பதற்காகவே
வீதியுலாவை
பின்தொடர்ந்தே
வருகிறது மக்கள் கூட்டம்
கீழிருந்து
புகையை
கக்கிக்கொண்டே
வானத்தில் போய்
வெடித்து
சிதறுகிறது
வானமும் பட்டாசுகளும்
பட்டாசு
வெடி சத்தத்தில்
மிரண்டு
வண்டிக்காரனையே
பார்த்து நிற்கிறது மாடுகள்
திருவிழா
காலங்களில்
பக்கத்து
கிராமத்து
மக்களும்
தஞ்சம் புகுகிறார்கள்
கரகாட்டத்தையும்
தெருக்கூத்தையும்
பார்த்து
கண்களுக்கு
விருந்து படைக்க
இருண்டே
கிடந்த
கிராமத்தின்
தெருக்களில்
வண்ண
விளக்குகள்
வெளிச்சத்தை
கொடுக்கிறது
திருவிழா காலங்களில்