Essential requirements for internet classroom 68th Series - Suganthi Nadar. Book Day. Computer in education கல்வியில் கணினி இணைய வகுப்பறை

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68 – சுகந்தி நாடார்



கல்வியில் கணினி

கல்வியில் கணினி என்பது கணினிக் கருவிகளை வகுப்பில் உபயோகத்துவது மட்டுமல்ல. அதைத் தாண்டி ஒரு மாணவரின் வளர்ச்சிக்கு கணினியும் கல்வியும் இணைந்து செயல்பட வேண்டியக் கட்டாயமான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.

Apple, Imac, Ipad, Workplace, Freelancer, Computer

ஒரு வகுப்பில் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் என்னென்ன வேலை கிடைக்க எந்த மாதிரியான விஷயங்களில் தொடங்கி இன்றையப் பொருளாதாரத்தையே மாற்றிக் கொண்டு இருக்கும் எண்ணியியல் செலாவணி பற்றி ஓரளவு நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம் அத்தோடு, கணினியின் ஆளுமை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் அதற்குத் தேவையான கணினி நிரல் எழுதும் திறன் எவ்வளவு அவசியம் என்று நாம் உணர்ந்து கொண்டே வருகின்றோம். இந்தக் கணினியுகத்தில், முதன் முதலாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் கற்றுக் கொடுக்க வேண்டியதும், நம் கவனத்தை எங்கு செலுத்த வேண்டும் என்பது தான். செய்யும் வேலை இரண்டு நிமிடத்திற்குத் தான் என்றாலும், அதை முழு கவனத்தோடு செய்ய வேண்டும்.

முழு கவனம் என்று சொல்லும் போது முதலில் நம் புலன்களை ஒருமித்துப் பயன்படுத்துவது எப்படி என்றுத் தெரிய வேண்டும். இரண்டாவது, நமது சூழலை, அது சமுதாய சூழலாக இருந்தாலும் சரி, அரசியல் சூழலாக இருந்தாலும் சரி இயற்கைச் சூழலாக இருந்தாலும் சரி, நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்ன? அவற்றின் பின்புலம் என்ன? அதன் விளைவுகள் யாவை என்ற விழிப்புணர்ச்சி நமக்குத் தேவை.

Ecommerce, Selling Online, Online Sales, E-Commerce

உதாரணமாக நாம் ஒரு இணைய தளத்தில் பொருளை வாங்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கடைக்குச் சென்று பொருளை வாங்குவதை விட இணையத்தில் வாங்குவது வேறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும். கடைக்குச் சென்றால் நாம் செல்லும் கடையைப் பொறுத்து, கடன் அட்டைகளைப் பயன்படுத்தலாம். அல்லது பணபரிமாற்ற செயலிகலைப் பயன்படுத்தலாம். நம் கையிலிருக்கும் பணத்தை எண்ணி எடுத்துக் கொண்டு செல்லலாம். பொருட்களை புலன்களால் உணர்ந்து வாங்கலாம். ஏன் பேரம் கூடப்பேசலாம். இணையத்தில் வாங்கும் போது அப்படி எல்லாம் செய்ய முடியுமா?

கடைகளில் நாம் கடன் அட்டிக்கு பதில் நம் கையில் உள்ளப் பணத்தைக் கொடுக்கலாம். இணையதளக் கடையில் அப்படி செய்ய முடியுமா? முடியாது அல்லவா? இந்தியாவில் கடன் அட்டை வசதி இல்லாதவர்கள். தன் இணைய தளத்தில் பொருட்கள் வாங்க இயலாது என்ற ஒரே காரணத்தால் அமேசான் இணைய விற்பனை நிறுவனம் பொருளைக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கும் வசதியைக் கொண்டு வந்தது. இந்த நடைமுறை கடன் அட்டைகளையே நம்பி வாழும் அமெரிக்க நாட்டில் இல்லை.

Dropshipping, Oberlo, Shopify, E-Commerce, Website

கடைக்குச் சென்று நேரடியாக பொருட்களை வாங்காமல் நாம் இணையம் வழி பொருட்களை வாங்கும் போது பணம் செலுத்தும் வகைகள் கடன் அட்டை வழி நடக்கும் போது, தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. தரவுகளின் அடிப்படையில் பெறப்படுகின்றன. என்று தெளிவாகத் தெரிகிறது. கடன் அட்டையை கடைகளில் தட்டிவிட்டுப் போகும்போது கடன் அட்டைக்கும் அதை வாங்கும் கருவிக்கும் இடையில் என்ன நடக்கிறது என்றேத் தெரியாது. என்ன மாதிரியான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன, அவை ஏன் சேமிக்கப்படுகின்றன  சேமித்தத் தரவுகள் என்ன ஆகும் என்ற கேள்விகளை நாம் கேட்பதே இல்லை. கேட்கவே தோன்றாத வண்ணம் பொருட்களை தளத்தில் காட்டுவர். அதனால் நாம் இணையத்தில் அமர்ந்து வேலை செய்யும் போது சிறிதாவது கவனம் என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் கணினிக் கணக்கீட்டு நெறிமுறைகள் தான் இப்போது இணையத்தை ஆட்சி செய்யும் விதிகளாக உள்ளன. ஒவ்வோரு நிறுவனமும் தங்கள் வசதிக்கு ஏற்ப நுகர்வோர்களைத் தங்கள் கையில் வைத்துக் கொள்ள, பலவித கணினி கணக்கீட்டு நெறி முறைகளைப் பயன்படுத்துக்கின்றன.

கணினிக் கணக்கீட்டு நெறிமுறை என்று சொல்லும் போது அவை ஒரு நிறுவனம் பெறும் தரவுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றது. ஒரு நுகர்வோரை தங்கள் இஷ்டத்திற்கு வளைய வைக்க, நுகர்வோரைப் பற்றிய ஆராய்ச்சி இந்நிறுவனங்களுக்கு அவசியம். மனிதர்களின் குணாதிசியங்களை பழக்க வழக்கங்களை, பற்றி முழுமையாகவும் ஆழமாகவும் தரவுகளை சேகரித்து, அதை ஆராய்கின்றனர்.

அப்படி ஆராய்ந்து கண்டு கொண்ட இரு விஷயங்கள் மனித மூளை, தனக்குப் பழக்கமான ஒன்று அனிச்சையாக செய்யத் தொடங்கும். இரண்டாவது ஒரு விவரத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள தேவையான நேரம் இல்லாவிட்டால் தன் கண்கள் படிக்கும் வரிகளை முழுமையாகப் படிக்காமல் முக்கியமான வார்த்தைகளை மட்டும் தேடி சொல்லப்பட்ட சாரத்தைப் புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யும் இந்த இரண்டு கோட்பாடுகளைக் கணினி நிறுவனங்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகின்றன.

இணைய விற்பனைத் தளங்களை பயன்படுத்தும்போது, அந்த நிறுவனத்தின் விதிகள், பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதிகள், நிறுவனத்தின் பொருட்களுக்கான உத்திரவாதம் என்ற சில முக்கியமான தகவல்களை இணைய பக்கத்தின் அடியில் சிறு எழுத்தில் கொடுத்து இருப்பர்.

இன்னோரு உதாரணம் நாம் ஒரு மென்பொருளை நிறுவும்போதோ, கணினிக் கருவிகளை வாங்கும் போதோ அதை வாங்குவதற்கான, அல்லது பயன்படுத்தும் விதிமுறைகள் படித்துக் கையெழுத்திட சில நிமிடங்கள் ஆகும்படி அதிகமான விவரங்கள் நுணுக்கிக் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனால் நாம் அவசரத்தில் எதையும் படித்துப்பார்க்காமலே சரி என்ற பொத்தானை அழுத்தி விடுவோம்.

எத்தனை பெரிய முட்டாள் தனம்!

ஆனால் அது தானே நாம் எல்லோரும் தினப்படி செய்கின்றோம், அதேபோல நாம் ஏதாவது தளத்திற்குச் சென்று விவரங்கள் சேகரித்தாலோ அல்லது நம் விவரங்களைக் கொடுத்தாலோ நம்மை அவர்களுடையச் செய்தி மடலை மின்னஞ்சலில் பெறச்சொல்லி ஒரு தெரிவு இருப்பதை நாம் பார்த்தவுடன் கண்டுகொள்ள முடியாத படி சிறு எழுத்துக்களில் இருக்கும். அதே போல அதைச் சரி என்று தெரிவு செய்யும் குறியும் ஏற்கனவேத் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும்.

இதை நாம் கவனிக்காவிட்டால் நமது மின்னஞ்சலில் எத்தனைக் குப்பை செய்திகள் வந்து விழுகின்றன என்பதே இதற்கு ஒரு சான்று, தற்போது இதே போல ஒரு சிறு பழக்கத்தை அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக ஆடை நிறுவனங்கள் சில சிறு சிறு வித்தியாசங்களைக் கொண்டு இருக்கின்றது. இத்தளங்களில் இப்போது கடன் அட்டை வழியே பணம் செலுத்துவதைத் தாண்டி electronic bearer certificate என்று ஒரு பணம் கொடுக்கும் முறை உருவாக்கியுள்ளது. டன் அட்டைகள்மட்டுமன்றி இன்னும் பல பண பரிவர்த்தனைக் கருவிகளும் மின் எண்ணியியலாக மாறி வருகின்றன. அப்படியென்றால் நாம் எவ்வளவு விழிப்புணர்வோடும் எச்சரிக்கையாகவும் நம்மை நாமே எந்தெந்த வழிகளில் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

ஏற்கனவே, மின் எண்ணியியல் செலாவணியைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கலாம் என்று பொது மக்களை ஓரளவு நன்றாகவே நிறுவனங்கள் உருவாக்கிவிட்டன. இந்தியாவிலும் கூட இப்போது குறுஞ்செயலிகள் வழியாகவே மிண்ணியியல் செலாவணிகளை பண்டகப்பொருளாக, பங்கு சந்தையில் வாங்கி விற்க முடியும் என்று Thomson Reuters என்ற நிறுவனத்தின் செய்தித்தளம் நமக்குத் தெரிவிக்கின்றது. இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் கூட விழா எடுத்து மின் எண்ணியியல் செலாவணியை அறிமுகம் செய்து வைத்துள்ளன.

TextDescription automatically generated

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பங்குச்சந்தைப் பத்திரிக்கையான Borron’s இதழில் மின் எண்ணியில் செலவாணியில் முதலீடு செய்ய விளம்பரங்கள் ஒரு பக்கத்திற்குக் கொடுக்கப்படுகின்றன. அதற்கான ஒரு மாதிரியை இங்கேக் கொடுத்துள்ளேன்.

இதைப்பார்த்தவுடன், ஏதோ முக்கியமான செய்தி என்று நினைத்து விட்டேன். ஆனால் விவரங்களைப் பார்த்த பின் தான் அது ஒரு ஒரு விளம்பரம் என்று புரிந்தது.

இப்படி பல விதங்களில் நமக்கு வரும் செய்திகளால் நாம் சூழப்பட்டு இருக்கும் போது, நம்முடையக் கவனக்குறைவும் கவனச் சிதறல்களும் அதிகமாகி உள்ளன. நம்முடைய ஆபத்தான பழக்கத்தை நாம் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வெள்ளத்தில் அடித்து இழுத்துச் செல்வதைப் போல உலகில் இருக்கும் ஒரு சில பெரிய நிறுவனங்களின் வியாபார, விளம்பர உத்திகளில் நாம் மூழ்கி விடுவோம்.

ஒரு நாட்டின் வரலாறு பண்டைய காலத்தில் அரசர்களாலும் நவீன காலத்தில் தொழில்புரட்சியாலும் உருவாக்கப்பட்டது என்று நம்மில் பலர் யோசிக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் உண்மையில் உலக வரலாற்றை மாற்றிப் போட்டது கல்விதான். கல்வி என்று வரும்போது அது பள்ளிக்கூட கல்வியாக இருந்தாலும் சரி, அனுபவக் கல்வியாகவும் இருந்தாலும் சரி அது தான் உலகை மக்களின் போக்கை மாற்றி அமைக்கின்றது.

இப்படி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கல்வி ஒரு ஏட்டுக்கல்வியாக இருக்காமல் ஒரு செயல்திறன் சம்பந்தப்பட்டதாகவும், நமது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனுபவக் கல்வி சார்ந்த செயல் முறைகளாகவும் இருந்தால் தான் உண்மையான மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.

கணினிகள் நம்மை முட்டாளாக்காமல் இருக்க நாம் முனைப்பு எடுக்க முதல் வழி நம்முடைய செயல் திறனிலும் சிந்தனையிலும் காட்டும் கவனம்தான்.

நம்மால் முடியுமா?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 51 (மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 52 (மறைக்குறியீட்டு செலவாணியில் walletஐப் பற்றிய விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 53 (மறைக்குறியீட்டு செலவாணியில் wallet தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 58 (எண்ணியியல் செலவாணி பரிவர்த்தனை மையங்களின் அடிப்படை என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 59 (எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 60  (எண்ணியியல் செலவாணி வர்த்தக மையங்களும் அவற்றிற்கான எச்சரிக்கைகளும்)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 62 (இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 63 (இராட்சத கொளவு எண்ணியியல் அகழ்தல் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 65 -(எண்ணியியல் செலவாணியின் நிலையற்ற தன்மையும் அதன் பதிவேட்டு முறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 (வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்)  – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 67(எண்ணியியல் செலவாணியின் எதிர்காலம்) – சுகந்தி நாடார்