kavithai: aanmaavai minukkum - dr jaleela musammil கவிதை: ஆன்மாவை மினுக்கும் - Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: ஆன்மாவை மினுக்கும் – Dr ஜலீலா முஸம்மில்

உன்னில் இருந்து என்னைப் பீடித்துக்கொண்டதா என்னிலிருந்து உனக்குத் தொற்றி விட்டதா நீடித்துக் கொண்டே இருக்கிறது உனக்குள்ளும் எனக்குள்ளும் நேசப்பிணி... நம்மிருதயங்களையது பலப்படுத்திக்கொண்டே பாலமமைக்கிறது! பூங்கொத்துக்கள் தேவையில்லை வானில் சிதறிக்கிடக்கும் உன் நட்சத்திரப்புன்னகைகளில் ஒன்றிரண்டைத் தூதனுப்பு கொஞ்சம் மினுக்கிக் கொள்கிறேன் என் ஆன்மாவை!…