உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/

உலக புலிகள் தினம் (International Tiger Day) – ஏற்காடு இளங்கோ

உலக புலிகள் தினம் (International Tiger Day) நமது கிரகத்தில் வாழக்கூடிய மிகச் சிறந்த விலங்குகளில் ஒன்று புலி ஆகும். இது பார்ப்பதற்கு மிக அழகாகவும், கம்பீரமாகவும் காணப்படும். விலங்குகளை வேட்டையாடி உண்பதால் இது கொடூர விலங்காகக் கருதப்படுகிறது. இது அடர்ந்த…
Samakala sutrusoozhal savalgal webseries 25 by dr ram manohar தொடர் 25: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 25: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

அண்டை நாட்டின் அலட்சிய நிலை! அரிய நம் வன விலங்கின் அழியும் நிலை! பொதுவாக, நம் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள், உடன் நாம் நட்புடன் இருக்க முயன்றாலும், எல்லை சுவர், மரம் நம் வீட்டு செல்ல பிராணி, அங்கு செல்லுதல், என…
தேசிய விலங்கின் கதை (கட்டுரை) – மாதா

தேசிய விலங்கின் கதை (கட்டுரை) – மாதா




உலகெங்கும் உள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் தங்கள் பண்பாடு, பாரம்பரியம், சுற்றுச்;சு+ழல் ஆகியவற்றைத் தழுவி கானுயிர்கள், பறவைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேசிய விலங்காகவும், தேசிய பறவையாகவும் வைத்திருக்கிறார்கள். அவைகளை தங்கள் நாட்டின் ரூபாய் நோட்டுகளிலும், நாணயங்களிலும் அச்சிட்டு வெளியிடுகிறார்கள். அத்தகைய விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க பல கடுமையான சட்டங்களை இயற்றுகிறார்கள். உதாரணமாக சீனாவின் தேசிய விலங்காக பாண்டா கரடி உள்ளது. இங்கிலாந்தில் சிங்கமும், பாகிஸ்தானில் தாடி வைத்துள்ள மார்க்கோர் ஆடும,; இலங்கையில் யானையும் தேசிய விலங்குகளாக உள்ளன. அமெரிக்காவின் தேசிய விலங்காக பைசன்(காட்டெருமை)யும், தேசிய சின்னமாக கழுகும் உள்ளது. நேபாளத்தில் பசு தேசிய விலங்காக இருக்கிறது. கலிங்கத்துப் போருக்குப் பின் அசோகர் மனம் திருந்தி புத்த மதத்தைத் தழுவி அமைதியையும், சமாதானத்தையும் விரும்பினார். அதன் வடிவமாக சாரநாத்தில் கருணை வடிவமான சிங்கமுகத்தைப் பொருத்தி ஸ்தூபி அமைத்தார். அதையே நேருவின் ஒன்றிய அரசு 1948ல் தேசிய சின்னமாக அறிவித்தது. அதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. அதே ஆண்டில் அறிவிக்கப்பட்ட சிங்கம் 1972வரை தேசிய விலங்காக இருந்து வந்தது.

யானைக் குட்டிகள் பரிசளிப்பு

தேசிய விலங்கு பற்றிய முரண்பாடான கருத்துக்கள் நாடு சுதந்திரம் அடைந்ததுமே எழுந்தது. ஜவஹர்லால் நேரு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஜப்பானுக்கு 1949ம் ஆண்டு ஒரு யானைக் குட்டியை “இந்திரா” எனப்பெயரிட்டு அங்குள்ள ஒரு குழந்தைக்கு பரிசாக அனுப்பினார். யானையோடு அனுப்பப்பட்ட கடிதத்தில் யானை என்பது இந்தியாவின் அடையாளம் என்று குறிப்பிட்டிருந்தார். எதிர்ப்பு எதுவும் வராததால் அந்தக் கருத்து உறுதிப்படுத்தப்பட்டது. 1955ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா, துருக்கி, ஜெர்மெனி, சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அமைதியின் அடையாளமாக யானைக் குட்டிகளை பரிசளித்து வந்தார்.

அயலக தூதரகங்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தகைய அரசியல் விளையாட்டுக்கள் இந்தியாவின் மீது உலக நாடுகளின் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா கடைப்பிடித்த அணிசேராக் கொள்கையின் குறியீடாக யானை உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு யானைக் குட்டிகளை அனுப்பிய செயலானது நாளடைவில் யானையை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அன்றைக்கு இருந்த குஜராத் தேசிய வரலாற்றுக் கழகம் இந்தக் கோரிக்கையை பலமாக எதிர்த்தது. குஜராத் காங்கிரஸ்; கமிட்டியும் யானையை தேசிய விலங்காக கோரிக்கை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது. சர்தார் படேல் தலைமையிலான குஜராத் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் பழமைவாதிகளாகவும், நேருவின் சோசலிசக் கொள்கைகளை முற்றிலும் எதிர்ப்பவர்களாகவும் இருந்தார்கள். குஜராதின் கலாச்சார அடையாளத்தை பாதுகாப்பதற்காக சிங்கம்தான் தேசிய விலங்காக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். விலங்கிற்காக இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் தேசம் இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்திருந்தது. எல்லைப்புற மாகாணங்களிலும், தலைநகர் டெல்லியிலும் பெரிய கலவரம் ஏற்பட்டு இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அடித்து மடிந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

புலி தேசிய விலங்காக அறிவிப்பு

நேருவிற்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியும், இந்திராகாந்தியும் பிரதமராக வந்தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு மொரார்ஜிதேசாய் தலைமையில் சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிரிந்தது. 1971ல் இந்தியா பாகிஸ்தானுடன் போர்புரிந்து வங்க தேசத்தை மீட்டுக் கொடுத்தது. இதனால் இந்தியாவின் செல்வாக்கும், இந்திராகாந்தியின் புகழும் உலகெங்கும் பரவியது. அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் மாபெறும் வெற்றிபெற்று 352 இடங்களைக் கைப்பற்றியது. மொரார்ஜிதேசாய் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் 16 இடங்களைப் பெற்றது. அதில் பதினோறுபேர் குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக காமராஜர் மட்டுமே வெற்றிபெற்றார். இந்திராகாந்தி பெரிய அரசியல் சக்தியாக, அதிகாரம் மிக்க துணிச்சல்காரராக, இரும்பு மனுஷியாக அறியப்பட்டார். இந்த தைரியத்தில், பெருமிதத்தில் குஜராத்தின் கலாச்சார அடையாளமாக அறியப்பட்ட சிங்கத்தை மாற்றி புலியை தேசிய விலங்காக அறிவித்தார். நாடு முழுவதும் பிரச்சனை வெடித்தது. சிங்கத்தை மாற்றி புலியை அறிவித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் வந்த போது, புலிகளுக்குத்தான் சரணாலயம் உள்ளது. சிங்கங்களுக்கு இல்லை என்று அரசின் முடிவுகளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

மீண்டும் சிங்கத்தை அறிவிக்க கோரிக்கை

குஜராத் தொழிலதிபரும், மாநிலங்களவை சுயேட்சை உறுப்பினருமான பரிமால் நாத்வானி என்பவர் 2012ல் சிங்கத்தை மீண்டும் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று தனிநபர் மசோதா கொண்டுவந்தார். அன்றைய மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை நிராகரித்தது. அதன் பின்பு முன்னாள் குஜராத் முதல்வாரன நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார். 2015ல் பரிமால் நாத்வானி மீண்டும் சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் கோரிக்கை எழுப்பினார். ஆனால் தேசிய வனவிலங்குகள் வாரியம் இக்கோரிக்கையை ஏற்கவில்லை. புலிதான் தேசிய விலங்னென்று உறுதிப்படுத்தியது. ஆனால் சிங்கத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். சுதந்திரம் வாங்கியதிலிருந்து 1972 வரை சிங்கம்தான் தேசிய விலங்காக இருந்தது. அதை காங்கிரஸ் அரசுதான் மாற்றி புலியை அறிவித்தது என்று குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குரலெழுப்பிக் கொண்டே இருந்தார்கள். இதன் பின்னணியில்தான் நரேந்திரமோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சதைப்பிடிப்புடன், குரூரமாக கர்ஜிக்கும் சிங்க முகத்தைப் பொருத்தியுள்ளார். இது ஏற்கனவே தேசிய சின்னமாக உள்ள சிங்கமுகத்தின் மாறுபட்ட வடிவமாக உள்ளது.

ஆர்எஸ்எஸ் செயல் திட்டம்

இந்த குழப்பத்தில் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவா செயல் திட்டத்தை புகுத்த நினைத்தது. சிங்கமும் இல்லை புலியும் வேண்டாம். உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் கோமாதாவை தேசிய விலங்காக வைத்திருக்கிறார்கள். அதைப்போல் பாரத தேசத்தில் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்றார்கள். 2018ம் ஆண்டு சேகர் குமார் யாதவ் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். உத்தரப்பிரதேசத்தில் அப்போதுதான் பதவிக்கு வந்திருந்த முதலமைச்சர் யோகிஆதித்யநாத் அந்தக் கருத்தை பலமாக ஆதரித்துப் பேசினார்.

குஜராத்தியர்களைத் திருப்திபடுத்துவதற்காக நரேந்திரமோடி “மேக் இன் இந்தியா” திட்டத்தின் சின்னத்தை கர்ஜிக்கும் சிங்கமாக வடிவமைத்து அதன் உடம்பு முழுவதும் பற்சக்கரங்களும், ஸ்பானர்களும், இன்னும் பல தொழிற்கருவிகளும் பொருத்தி வெளியிட்டார். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தேசிய விலங்கிலிருந்து புலியை மாற்ற முடியவில்லை. ஆனால் இந்துத்துவாவாதிகள் பண்பாட்டு மரபுகளை மாற்றி மத அடையாளங்களை தேசிய சின்னத்தில் நிறுவும் விதமாக பசுவை தேசிய விலங்காக கொண்டுவருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-மாதா

முகவரி
மாதா
மே-பா மா.தங்கராசு
75, கிழக்குத் தெரு, சக்கம்பட்டி
ஆண்டிபட்டி-அஞ்சல்
தேனி- மாவட்டம் 625512
செல் – 9442452505

நூல் அறிமுகம்: ச.ச.சுபவர்ஷினியின் அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) – வே.சங்கர்

நூல் அறிமுகம்: ச.ச.சுபவர்ஷினியின் அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) – வே.சங்கர்




பெண் யானைக்கு ‘அத்தினி’ என்றொரு பெயர் இருப்பதே இந்த நூலின் தலைப்பை வாசித்த பிறகே தெரியவந்தது. தற்போது ஏராளமானோரின் கைகளில் தவழும் இந்த அத்தினிக்காடு என்ற நூல் பலரின் கூட்டுமுயற்சிக்குப் பிறகே சாத்தியமாகியிருக்கிறது.

தவிர்க்க முடியாத ஆளுமைகளின் அணிந்துரை, நேர்த்தியான புத்தக வடிவமைப்பு, பக்கத்திற்குப் பக்கம் அழகழகான ஓவியங்கள், மொபைல் ஃபோனில் ஸ்கேன் செய்து பார்க்கவும் கேட்கவும் க்யூ ஆர் கோடு, பின்புற அட்டையில் இளம் எழுத்தாளர் சுபவர்ஷினியின் அழகிய புகைப்படம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது இந்த நூல். 

பதின் பருவத்தைத் தாண்டாத குழந்தைகளே ஒவ்வொரு கதைக்கும் தேவையான ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திற்கு முன்னதாக அச்சேற்றி அவர்களை அடையாளப்படுத்தியும் அங்கீகரித்தும் இருப்பது சிறப்பு.

நேர்மறை எண்ணம் கொண்ட பதினைந்து சிறுகதைகள் வாசிக்க வாசிக்க நமட்டுச் சிரிப்பை வரவழைக்கிறது.  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக் குழந்தையான சுபவர்ஷினியின் கற்பனைக்கு எதுதான் எல்லை? என்ற எண்ணம் கடைசிவரை நீடித்துக் கொண்டே இருக்கிறது.

வளர்ப்பு விலங்கோ அல்லது காட்டு விலங்கோ எதுவாக இருப்பினும் சிறுவர் கதைகளில் பேசுவது என்பது இயல்பாகவே தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது. 

அப்படித்தான் இந்த நூலிலும், சிங்கமும் புலியும் ஒரே காட்டில் இருக்கின்றன.  ஒரு சிறுமிக்கும் யானை  நண்பனாக இருக்கமுடியும் என்றால் புலியும் நண்பனாக இருக்க முடியும்தானே?

ஒரு வளர்ப்பு நாய்க்குட்டியால் தன்னை பாசமாக நேசிக்கும் சிறுவனுக்காக ஓடிப்போய் டாக்டரை அழைத்துவர முடிகிறது. ஒற்றைச் சிறுமியால் புலிகளிடம் பேசியே யானைக்குட்டியைக் காப்பாற்றிவிட முடிகிறது. வாத்துக் குஞ்சுகளுக்கு நீரின் அவசியத்தைப் புரியவைக்க முடிகிறது.

கொசு ஒன்று காட்டிற்குள் பட்டாம்பூச்சியுடன் சினேகம் கொண்டு சுற்றிப் பார்க்கிறது. கொரோனா என்ன செய்யும் மனிதர்களை அழித்துக் கொல்லும் ஆனால், ஒரு குழந்தையின் பார்வையில் தந்தையை வீட்டிலேயே இருக்க வைத்து தன்னோடு விளையாட வைக்கும் அப்படியானால் கொரோரானா என்ற பெருந்தொற்று நோய்க்கும் நன்றி சொல்லவேண்டும்தானே? அப்படித்தான் ’கொரோனா நிகழ்வு’ என்ற கதை கவனத்தை ஈர்க்கிறது.

நாய்க்கு நண்பர்களாக பூனைகள் ஒரு கதையில் கதாப்பாத்திரங்கள் என்றால் மற்றொரு கதையில் முயலும் ஆப்பிள்களும் மாறுவேடத்தில் ஊர்சுற்றக் கிளம்பிவிடும் கதாபாத்திரங்கள். 

அடிபட்ட புறாவுக்கு மருத்துவம் செய்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாக் குழந்தைகளுக்கும் இருப்பதுபோலவே பறவையைத் துன்புறுத்துபவர்களுக்கு அது தவறு என்று தன்மொழியில் குழந்தையாக சொல்ல முயன்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அடிபட்ட டால்பின் மீன் கரை ஒதுங்கிக் கிடப்பதும் அதைக் குணப்படுத்தி மீண்டும் கடலுக்குள்ளே கொண்டுவிடும் கற்பனையும் அபாரம்.

வனம் என்றால் பசுமையாகத்தான் இருக்கும்.  பசுமையாக இருந்தால் அங்கே விலங்குகள் இருக்கும்.  அவர்களும் பள்ளிக்கூடம் செல்வார்கள்.

அதுவும் பேருந்தில்.  மனிதர்களைப் போலவே பூச்சிகளும் களைத்து போய்விடலாம். களைத்துப் போய் வகுப்பறையில் தூங்கியும் விடலாம்.  ஆசிரியை எப்போதும் போல் தாமதமாக வந்த பூச்சிக்கு தண்டனையாக வெளியே நிற்க வைத்துவிடும் சாத்தியக்கூறுகளும் குழந்தைகளின் கதையில் தவிர்க்க முடிவதில்லை.

எல்லாம் கற்பனைதானே என்று கேட்டால், ஆம்! கற்பனைதான்.  குழந்தைகளுக்குள் எழும் கற்பனைகள் வளர்ந்த மனிதர்களுக்கு ஏன் தோன்றுவதில்லை? என்ற கேள்வி இந்நூலை வாசிப்போர்க்கு கடைசிவரை எழுந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு விடை தேடவேண்டுமானால் இதுபோன்ற குழந்தைகள் எழுதிய கதைகளை வாசிக்க வேண்டியது கட்டாயம்.

குழந்தைகள் கேட்டறிந்த பக்கத்து ஊருக்குக் கற்பனையில் பாண்டா கரடிகள் வர வாய்ப்பிருக்கிறது.  புலியும் அதே இடத்திற்கு வந்து எனக்கு கோழியும் ஆடுகளும் வேண்டும் என்று கேட்கிறது, அங்கிருக்கும் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ’லாக்டவுன்’ என்ற சொன்னவுடன் அதே புலி ’அப்படியானால், இன்று வேண்டாம், நாளையிலிருந்து கொடுக்கவேண்டும்’ என்ற கட்டளையிடுவதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமே தோன்றும் அசாத்தியக் கற்பனைகள்.

குழந்தைகளின் கதைகளை வளர்ந்தவர்கள் எழுதவதற்கும் குழந்தைகளே எழுதுவதற்குமான உள்ள வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அளவில் சிக்காத நீள அகலங்களைக் கொண்டவை சிறுவர்களுக்காக சிறுவர்களே எழுதும் கதை. குழந்தைகளுக்கான கதைகளை குழந்தை சொல்லும் போது தான் கேட்ட அல்லது பார்த்த அத்தனையும் கதைகளுக்குள் வலம்வருகின்றன.  

அவ்வகையில் அத்தினிக்காடு விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் கூடவே மனிதர்களும் வாழும் இடம் இந்த பூமி என்று அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

லாஜிக்கைப் பற்றி எந்தவிதத்திலும் கவலைப்படுவதில்லை குழந்தைகள். அதற்கான சமரசத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. மனம்போன போக்கில் கதை நகர்த்தியும், அதைச் சொல்லியும் அவற்றைப் புத்தகவடிவில் பார்த்து மகிழும் பாக்கியம் ஒருசிலருக்கே அமையும் அவ்விதத்தில் அத்தினிக்காடு நூல் எழுதிய சுபவர்ஷினிக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துகள்.

– வே.சங்கர்

நூல்: அத்தினிக் காடு
ஆசிரியர்: ச.ச.சுபவர்ஷினி (வயது 8)
விலை: ₹99
பக்கங்கள்: 104

வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

புலி : சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்புகள் – திறனாய்வு ; மதுராந்தகன்

புலி : சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்புகள் – திறனாய்வு ; மதுராந்தகன்

மொழிபெயர்ப்பு வகைகளில் மாதிரிக்கொன்றாய் எடுத்தது போல் இந்நூலில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் என.  சுற்றுச்சூழல் பற்றி சுப்ரபாரதிமணியன் எவ்வளவோ நாவல்களில் கட்டுரைகளில் பல கருத்துக்களைக் கூறியுள்ளார் . அவரின் சாயத்திரை, புத்து மண் போன்ற நாவல்களும் பத்துக்கும்…