ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்-ன் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில்: வசந்ததீபன்
(1) பெயரற்ற பறவையின் பெயர்
கங்கைநதி புளியமரத்தின் இலைகளில் மறைந்திருந்த
ஒரு பறவையின் வாய் இருளைப்
பேசுகிறது மிகு இனிப்புக் குரலில்
போகவில்லை என்ன?
போகவில்லை எதனிடம்?
மற்றும் பொழிகிறது மழை
பாதி தூக்கத்தில் கட்டில் _ படுக்கை சுருட்டி
வீடுகளுக்கு உள்ளே ஓடுகிறார்கள் மக்கள்
கொஞ்சம் சிடுசிடுப்புகள், கொஞ்சம் சந்தோஷம்
மேகங்கள் சூழ்ந்த அந்தகாரத்தில் மின்னுகிறது மின்னல்
கனத்து பெய்கிறது மழை
நீர் நிரம்பிக் போகிறது வயல்
திருப்தி ஆகிப் போகிறது முன்னோர்களின் ஆன்மாக்கள்
உடைவதில் தப்பிக்கிறது
மனதின் முதுகு தண்டு
சொல்கிறாள் பிச்சைக்காரி
இந்த பறவையின் குரலால்
வருகின்றன மேகங்கள்
வெகு தூரமான சமுத்ரங்களிலிருந்து எழுந்து
ஓ.. பறவையே
நீ பேசினாய் தொடர்ச்சியாக கிராமத்தில்
வீட்டில், பள்ளத்தாக்கில், வனத்தில்
கல்லாகிப் போன மனிதனின் மனதில்.
(2) யாத்திரை
நதிகள் இருந்தன எமது வழியில்
அவைகளை அடிக்கடி கடப்பதற்கு இருந்தது
ஒரு சூரியன் இருந்தது
அது மூழ்காமல் இருந்தது
எப்படி யோசித்து இருக்கிறாய் என அதற்குப் பிறகு
எமக்கு என்ன நடக்கும்
ஒரு காடு இருந்தது
நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது
சில பூக்கள் இருந்தன
நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம்
ஒரு வயல் இருந்தது
நெல்லினுடய
விளைந்து
அது கூரான அரிவாளால் தொடுதலோடு
இருந்தது சந்தோஷம்
ஒரு நீலப்பறவை இருந்தது
நெல்லிக்காய் மரத்தின் வளைந்த கிளையிலிருந்து
இப்போது பறப்பதற்கு தயாராக
நாங்கள் இருந்தோம்
விஷயங்களின் பழைய பொட்டலங்களை அவிழ்க்கிறோம்
எமது பசி மற்றும் களைப்பு மற்றும் தூக்கத்தோடு சண்டையிடுகிறோம்
தூசி இருந்தன தொடர்ச்சியாக பறந்து இருந்தது
அது எமது புன்னகையை மூடி மறைக்க முடியாமல் இருந்தது
ஆனால் எமது முடி நிச்சயம்
சணல் போல காணப்பட இருந்தது
குளிர் இருந்தது மலையின்
எமது எலும்புகளில் இறங்கியது
விளக்கு ஏற்றும் நேரமாக இருந்தது
எப்படி மலையின் மேல் எங்கே எங்கே
மறைந்து இருக்கின்றன ஒளி_ பூக்கள்
ஒரு கரடுமுரடான சாலை இருந்தது
தொடர்ச்சியாக எம்முடன்
ஆறுலைத் தருகிறது
நீ மிகச் சரியாக சேர்வீர் வீடு என்று.
(3) பணநோட்டு எண்ணும் எந்திரம்
கனவுகளை எண்ண முடிகிற அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
கனவுகள் அவை பூமியின் மேல் பரவுகின்றன
இருக்கின்ற பூக்களின் விதைகள்போல.
அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது ஆசைகளை எண்ண கூடியதாக.
அந்த பிரத்யேக அதிர்வு
அது அநியாயம் மற்றும் சித்திரவதைகளுக்கு விரோதத்தில்
பிறக்கிறது.
பீதி பிறக்கிறது பணத்தின் சலசலப்பு
யாரோ குடிக்கிறான் வெள்ளி கிண்ணத்தில்
மனிதனின் ரத்தம்
எமது கடின உழைப்பின் தேன் யாரோ குடிக்கிறான்
ஒரு வலையது தினமும் விழுகிறது எங்கள் மேல்
ஆனால் தெரியவில்லை
இந்த வலையின் ஒவ்வொரு நரம்பதை எண்ண முடியும்.
அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
காடாக இருக்கிற பிந்த்ரான்வாகர் போல
மற்றும் மரங்களை எண்ணுவது இருக்கிறது கடினம்
கடினமாக இருக்கிறது எண்ணுவது.
அன்பு மற்றும் கனவு மற்றும் ஆசைகளை
மனிதனின் கோபம் எரிமலைக் குழம்பாக மாற்றுகிறது
மற்றும் அதனுடைய அன்பிலிருந்து பரவுகிறது ஒளி
மலருகின்றன ரோஜாக்கள்.
அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது நட்சத்திரங்களையும் ரோஜாக்களையும் எண்ணி முடிய.
அவை மலருகின்றன மனிதனின் அன்பில்
இரவின் வனத்தில்
மற்றும் பகலின் மரக்கிளைகளின் மேல் எண்ணிக்கையற்று.
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்
ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
பிறப்பு : 08.02.1964
பிறந்த இடம் : ச்சுரா, ச்சதீஸ்கட்
சில முக்கியநூல்கள் : அன்ன ஹைன் மேரே சப்த , மிட்டீ ஸே கஹூங்கா தன்யவாத் , பீஜ் ஸே ப்பூல் தக்.
விருதுகள் : சரத் பில்லெளரே புரஸ்கார், கேதார் ஸம்மான், துஷ்யந்த் குமார் புரஸ்கார், டாகூர் பிரஸாத் சிங் புரஸ்கார், நரேந்த்ரதேவ் வர்மா புரஸ்கார் மற்றும் ஹேமந்த் ஸ்மிருதி கவிதா ஸம்மான் போன்றவை.