கவிதை : உள்ளங்கை ரேகையாய் - ஜலீலா முஸம்மில் kavithai ; ullangai regayai - jaleela musammil

கவிதை : உள்ளங்கை ரேகையாய் – ஜலீலா முஸம்மில்

உள்ளங்கை ரேகையாய்... உள்ளார்ந்த மௌனத்தில் உதிரிப் பூக்களாகும் உன் நினைவுகள் மெல்லிய நேசவாசம் கொண்டு மேனி தழுவிப் பின் மேகந்தாண்டிப் பரவும் நிலவை வசீகரம் செய்து நெஞ்சம் நெகிழ்த்தும் விண்மீன்களில் கவிதை நெய்து பிரபஞ்சம் போர்த்தும் உள்ளார்ந்த மௌனத்தில் உன் ஸ்நேகம்…