Posted inPoetry
உமா மோகன் கவிதை
நீதிக்குப்பின் பாசம்
பிரித்து வாசிக்கக் கற்றுக்கொண்டபின் வந்தவர்களின் பரிபாலனத்தில்
ஆலவட்டக்குடைகள் ஆரஞ்சு நிறத்தில்
கண்ணாடிக்குள் பதப்படுத்தி மிதக்கும்
கைகள் நீள வாய்ப்பில்லை
உறுதிப்படுத்திக்கொண்டபின் நீளும் கரங்களில்
ரத்தவாடை
தூக்குக்கயிற்றை
நீட்டிய குற்றரேகைகளை
ரூபாய்த்தாள்கள் கொண்டு துடைத்துக் கொள்கிறார்கள்
இரண்டெழுத்துதானே
நடுங்காமல் உறையில் எழுதப்படுகிறது “நீட்’டாக
உமா மோகன்