பூமர் அங்கிள்- சிறுகதை | short story - Boomer Uncle

சிறுகதை : பூமர் அங்கிள்! – அ.சீனிவாசன்

" மச்சான் இந்த பையனப் பாரேன் புடிச்ச நடிகை ரேவதிங்கறான்" ராகிங்கில் சீனியர் ஒருவன் இவனைக் கேவலமாக பேசியதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது, ரோஜா, மீனா, ரம்பாயுகத்தில் ரேவதியைப் பிடிக்குமென அவன் சொன்னது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் பட்டிருக்கும். " நீ…
Buddhanukku maru peyar mama Poem by k. Punithan புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை - க. புனிதன்

புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை – க. புனிதன்

பாப்பா பார்த்தவுடன்
மாமா என்றது
புத்தனுக்கு மறு பெயர்
மாமா
நாய்க் குட்டி
மழைத்துளி
டெடி பொம்மை
மகிழ்ச்சி

ஊர் சுற்றி வந்த நாயை
தெள்ளவேரி என திட்டினாள்
அம்மா
ஏனோ புத்தனின் ஞாபகம் வந்தது

பட்டு நூல் நூற்கும்
சின் கோனா மரம்
போதி மரம் எனக்கு

புத்தன் கண் மூடி அமர்ந்திருந்தார்
பட்டுப் புழுவின்
அமைதியான நூற்பிசை கேட்டு

நூலகம் அருகே
மரக்கிளையில்
அமைதியாய் நூல் நூற்கும்
பட்டு புழு