பெயர் சொல்லும் பறவை 25 – வானம்பாடி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பாடும் வானம்பாடி என்ற படத்தில் பாட்டு மற்றும் நடனம் முக்கிய கதையாக நகர்கிறது, பாடும் வானம்பாடி பாடலில் கதாநாயகி பாடகர். இவை இரண்டும் இந்த குறிப்பிட்ட பறவைக்கு மிகவும் பொருந்தும். நாம் இன்றைக்கு பார்க்கவிருக்கும் பறவை “வானம்பாடி”. இதன் ஆங்கில பெயர்கள் Syke’s Lasrk, Deccan crested lark, Deccan lark கவிஞர் நா. காமராசன் (1942 – மே 24, 2017) அவர்கள் எழுதிய பாடல் வரிகளில் வானம்பாடி பறவையை குறிப்பிட்டுள்ளார் குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் பாடுவதை பதிவுசெய்துள்ளார்
“பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி”
மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை பாடிக்கொண்டே மெதுவான இறக்கைகள் படபடப்பது, உயரமாக, வட்டமிடுவது போன்றவை விதவிதமாக பறந்து பெண் பறவையை கவர முயலும்.
இவர் ஆங்கில இயற்கை ஆர்வலர், இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்துடன் பணியாற்றினார். அரசியல்வாதி, இந்தாலஜிஸ்ட் மற்றும் பறவையியலாளராக செயல்பட்டார். விக்டோரியன் புள்ளியியல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர், ராயல் புள்ளியியல் சங்கத்தின் நிறுவனர், அவர் கணக்கெடுப்பு நடத்தி, இராணுவ நடவடிக்கையின் செயல்திறனை ஆய்வு செய்தார். இந்தியாவில் சேவையிலிருந்து திரும்பிய அவர் கிழக்கிந்திய நிறுவனத்தின் இயக்குனராகவும், பாராளுமன்ற பிரதிநிதித்துவ உறுப்பினராகவும் ஆனார்.

இவர் இங்கிலாந்தில் பிறந்தார். அவர் 1803 இல் இராணுவ சேவையில் சேர்ந்தார் மற்றும் 1 மே 1804 இல் கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு கமிஷனைப் பெற்றார். பம்பாய் ராணுவத்தில் இணைந்தார். ஐரோப்பாவிற்கு 1819 ல் பயணம் செய்தார். அக்டோபர் 1824 இல் அவர் இந்தியா திரும்பினார் மற்றும் பம்பாய் அரசாங்கத்தின் புள்ளிவிவர நிருபராக Mountstuart Elphinstone என்பவரால் நியமிக்கப்பட்டார்.பின்னர் அவர் புள்ளியியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆராய்ச்சிகளைச் சேகரித்தார், மேலும் டெக்கான் மக்கள்தொகை கணக்கெடுப்பை முடித்தார், இரண்டு பெரிய புள்ளிவிவர அறிக்கைகளையும், வரைபடங்களுடன் விளக்கப்பட்ட ஒரு முழுமையான இயற்கை வரலாற்று அறிக்கையையும் தயாரித்தார். அவர் 1824 இல் ரெனிஸ்டவுனின் வில்லியம் ஹேவின் மகள் எலிசபெத்தை மணந்தார். அவரும் இவருடைய ஆய்வுகளுக்கு உதவினார்.
கணக்கெடுப்பு பொறுப்பில் இருந்த பொழுது தக்காண பீடபூமி முழுவதும் பயணம் செய்தார். சைக்ஸ் இந்தியாவில் ஒரு முன்னோடி வானிலை ஆய்வாளராக இருந்தார், தினமும் வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தம் அளவீடுகளை எடுத்துக் கொண்டார்; தினசரி அழுத்த மாறுபாடுகளில் வழக்கமான வடிவங்களைக் கவனித்தார் மற்றும் மழைக்காலங்களில் குறைந்த வேறுபாடு ஏற்பட்டாலும், குளிர்காலத்தில் வரம்பு மிக அதிகமாக இருப்பதை பதிவு செய்தார்.
சைக்கின் விலங்குகளின் சேகரிப்பின் விளைவாக டெக்கான் பகுதியிலிருந்து பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் பட்டியல்களை தயாரித்தார், அவற்றில் பல விலங்கியல் சங்கத்தின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டன. அவரது கண்டுபிடிப்புகளில் ஐம்பத்தாறு பறவைகளை பற்றிய புதிய அறிவியல் தகவல்களை கொடுத்துள்ளார்.
இதில் இந்திய குளத்துக் கொக்கும் அடங்கும். சைக்ஸ் அப்பகுதியின் மீன்களையும் ஆய்வு செய்தார், மேலும் இந்தியாவின் காடைகள் மற்றும் கௌதாரி ஆவணங்களை எழுதினார். தக்காண பகுதியில் மட்டும் பறவைகள் பட்டியலில் கிட்டத்தட்ட 236 இனங்கள் இருந்தன.
சார்லஸ் டார்வின் இயற்கை ஆர்வலர் Edward Blyth அவர்களை சீனா பயணத்தில் இணைத்துக்கொள்ள வில்லியம் ஹென்றி சைக்ஸ்க்கு கடிதம் எழுதினார். அந்த அளவிற்கு இவருக்கு மதிப்பும் செல்வாக்கும் இருந்தது.

சைக்ஸ் பௌத்தம் மற்றும் அதன் தொன்மை குறித்து விரிவாக எழுதினார். ஏசியாடிக் சொசைட்டி இதழில் 1842 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில், பிராமணர்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல என்றும் பாலி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்றும் வாதிட்டார். பிராமணியத்தை விட, பௌத்தம் தான் இந்தியாவின் பண்டைய கடந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்று அவர் நம்பினார். 1856 ஆம் ஆண்டில், பாம்பேயின் குடிமக்கள் சைக்ஸின் சொந்தக் கல்வி முறைக்கு ஆதரவாக வாதிட்டதற்காக அவருக்கு ஒரு பதக்கத்தை வழங்கினர். டெக்கான் பகுதியில் காணப்படுவதாலும், இவரும் டெக்கான் பகுதிகளை ஆய்வு செய்ததாலும் இப்பறவைக்கு இவருடைய பெயரை வைத்துள்ளனர். இவருடைய ஆய்வுகளை
கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இப்பறவை குஞ்சுகளுக்கு பூச்சிகளையே ஊட்டுகின்றன. அலகுகள் மூலம் தோண்டி உணவை எடுக்கின்றன. சைக்ஸ் லார்க் என்பது தீபகற்ப இந்தியாவின் புல்வெளியிகளில் காணப்படும் இனமாகும். அதன் வாழ்விடத்தில் காணப்படும் மற்ற 34 பறவைகளின் அழைப்பைப் பின்பற்ற முடியும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
மொழி, இனம் போன்றவற்றிற்கு மனிதர்கள் நாம் இன்றைக்கு டி. என். எ வை ஆய்வு செய்து கொண்டிருக்கும் அவல நிலையில் 1800 களில் இயற்கை ஆய்வாளரின் தரவுகளே நமக்கு வரலாறுகளுக்கு சான்றாக உள்ளது. ஆகவே நாம் யார் என்று தேடுவதற்கு பதிலாக அனைவருக்குமான, தேவையான இயற்கையை அழியாமல் காக்க முயல்வோம்.
தரவுகள்:
1. The Discovery of Ancient India: Early Archaeologists and the Beginnings of Archaeology Upinder Singh
2. The Asiatic Journal and Monthly Register for British and Foreign India, China, and Australia Parbury, Allen, and Company, 1842
3. Crisologo, Taylor; Joshi, Viral; Barve, Sahas (2017). “Jack of all calls and master of few: Vocal mimicry in the Tawny Lark (Galerida deva)”. Avian Biology Research. 10 (3): 174
4.https://archive.org/details/sketchesofsomedi00laur/page/104/mode/1up?view=theater
தரவுகள்:
பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து(Accipiter butleri) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 23 – தவளைவாயன் | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 24 – கூம்பலகன் | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 24 – கூம்பலகன் | முனைவர். வெ. கிருபாநந்தினி
இவ்வுலகில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் தனது சூழலை கவனித்து கேள்விகள் கேட்பதிலிருந்தும், அதற்கான பதில்களை தேடுவதிலிருந்தும் கிடைக்கின்றன. அதில் தற்போது விவாத பொருளாகவே உள்ள உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி தவிர்க்கமுடியாதது. அதற்கான பதில்களை தேடும்போது கிடைத்தது தான் கூம்பழகனின் அலகு வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்.
பரிணாம வளர்ச்சி பற்றி சார்லஸ் டார்வின் அவர்கள் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூல் பற்றி அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் எப்படி ஒரு உயிரினம் உடல் அமைப்பில் மாறுபடுகிறது என்பதை ஒரு பறவையின் அலகை கவனித்து கணடறிந்தார். இயற்கையில் ஏற்படும் சில மாற்றங்களால் உயிரினங்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு எளிதாக கிடைக்கும் உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கின்றன. அதன் விளைவாக அதன் உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.
குறிப்பிட்ட இனங்கள் இப்பூமியில் தங்கள் இனங்களை நிலைநிறுத்த மாற்றங்களுக்கு தகுந்தாற் போல் தங்களை தகவமைத்து கொள்கின்றன. அதில் மிக முக்கியமான பறவைகளில் ஒரு இனம் தான் பின்ச் (Finch species). ஆதலால் ‘டார்வின் பின்ச்’ என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள்.
உலகில் மொத்தம் 230 இனங்களை கொண்டுள்ளன. அதில் கூம்பலகன் (Rosefinch) 27 இனங்கள் உள்ளன. நாம் இன்றைக்கு பாக்கவிருப்பது பிலித் கூம்பலகன் (Blyth’s rosefinch). பொதுவான பெயர் விலங்கியலாளர் “எட்வர்ட் பிளைத்” என்பவரின் நினைவாக உள்ளது.

அவர் ஒரு ஆங்கிலேய விலங்கியலாளர் ஆவார். கொல்கத்தாவில் உள்ள இந்திய ஆசிய சமூகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
ஒரு வகைப்பாட்டியலராகவும், களஆய்வாளராகவும் பிளைத் டார்வினின் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், பறவையியலில் அவரது ஆய்வுகளே பிளைத்தின் மிக முக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.
பிளைத் ஆசியச் சமூக விலங்கியல் அருங்காட்சியகத்தில் 1841ஆம் ஆண்டு பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. எனவே, பத்திரிக்கைகளில் எழுதுவது போன்ற வேலைகளைத் தன் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு அவர் செய்துவந்தார். இதைத் தவிர, ஆசிய சமூகத்தின் பனுவலுக்காக பறவைகள், பாலூட்டிகள் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பன்னாட்டு ஆய்விதழான இயற்கை வரலாறு பனுவலில் பல்வேறு பறவைகள் குறித்த ஆய்வுகளை வெளியிட்டார். 1857ல் கல்கத்தா ரிவ்யூ என்ற பனுவலுக்காக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையை டார்வின் தம் இயற்கையியல் தேர்வு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் டார்வினுடன் பிளைத் கடிதங்கள் மூலம் வைத்துக்கொண்ட தொடர்பு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
அருங்காட்சியகத்தில் பிளைத் பணியிலிருந்த காலத்தில், அங்கிருந்த விலங்கியல் சேகரிப்பை அவர் பெரிதும் வளப்படுத்தியிருந்தார். அது அதிக பார்வையாளர்களை அங்கு ஈர்த்தது. உயிரினங்களில் செயற்கைத் தேர்வு என்ற கருத்தியல் சார்ந்து பிளைத் எழுதிய மூன்று ஆய்வுக் கட்டுரைகள் இயற்கை வரலாறு பனுவலில் வெளியிடப்பட்டன. அக்கட்டுரைகளில் மாறுபாடு, இயற்கைத் தேர்வு, மரபுப் பெறுகை, தக்கன பிழைத்தல் போன்ற கருத்தியல்களைக் கூறியிருந்தார்.
மொத்தம் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் பர்மாவில் உள்ள பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் பட்டியல், கொக்குகளின் இயற்கை வரலாறு ஆகிய இரண்டு நூல்கள் அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்டன.
பிளைத்தின் பெயர் தாங்கிய பறவைகள்:
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளான, பிளைத் நாணல் கதிர்குருவி, பிளைத் நெட்டைக்காலி
இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் பறவைகள் — பிளைத் இலை கதிர்குருவி, Blyth Olive bulbul, பிளைத் கிளி, Blyth rosefinch, Blyth shrike-babbler, Blyth tragopan, பிளைத் மீன்கொத்தி
உலகின் பிற பகுதிகளில் காணப்படும் பறவைகள் — Blyth hawk-eagle, பிளைத் தவளைவாயன், பிளைத் இருவாயன்.
பிளைத்தின் பெயர் தாங்கிய உயிரினங்கள்:
பாம்புகள் — Blythia reticulata, Rhinophius blythii
அரணை – Eumeces blythianus
பல இன்னல்களுக்கு இடையிலும், விமரசங்களைக் கடந்தும் பறவைகளை பற்றிய ஆய்வுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவருடைய பெயரை கூம்பழகன் என்ற பறவைக்கும் வைத்துள்ளனர். கூம்பழகன் வடக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கு இமயமலை வரை காணப்படுகிறது. அதன் வாழ்விடங்கள் மிதமான காடுகள் மற்றும் போரியல் புதர் நிலங்கள் ஆகும். உயர்ந்த மலைப் பகுதிகளில் ஊசியிலையுள்ள காடுகளில் அல்லது மரக்கட்டைகளுக்கு மேல் காணப்படும். குளிர்காலத்தில் தோப்புகளுக்கு இடம் பெயர்கிறன்றன.
ஒப்பீட்டளவில் கனமான, வெளிர் அலகை கொண்ட பெரிய கூம்பழகன். ஆண் புருவம் மற்றும் கன்னங்கள் மற்றும் மந்தமான இளஞ்சிவப்பு கீழ் பகுதிகள் உள்ளன. பெண் பறவையானது ஒட்டுமொத்தமாக பழுப்பு நிறத்தில் வலுவான கோடுகள் மற்றும் வெளிறிய, லேசான கோடுகள் கொண்ட புருவத்துடன் இருக்கும்.
கூம்பழகன் பலுசிஸ்தானில் (வட-மேற்கு எல்லைப்புற மாகாணம்) 2400 மீ முதல் 3500 மீ வரையிலும், கில்கிட்டில் (பால்டிஸ்தான்) 3700 மீ வரையிலும், லடாக் மற்றும் லாஹுல் (அலி & ரிப்லே 2007) 3400 மீ முதல் 3800 மீ வரையிலும் இனப்பெருக்கம் செய்கிறது.
தாவரப் பொருட்களான (திறந்த இலை மொட்டுகள், பூ மொட்டுகள், பழங்கள் மற்றும் இலையுதிர் மரங்களின் விதைகள், புதர்கள் மற்றும் மூலிகைகள்) முக்கிய உணவாக உட்கொள்கின்றன.
பொதுவாகவே குழந்தைகள் எதை பார்த்தாலும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளால் பெரியவர்களை யோசிக்கவைப்பது வழக்கம். அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறிய சிந்தித்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைத்துவிடும். ஆதலால் குழந்தைகளைப் போல் நாமும் சுற்றுப்புறத்தை கவனிப்போம், கேள்விகள் கேட்போம், சிந்திப்போம், தீர்வுகளை கண்டறிவோம். அப்போது தான் சூழலை நாம் முழுமனதாக காப்பதற்கு முன் வருவோம்.
தரவுகள்
https://osme.org/wp-content/uploads/2019/10/10-Busuttil_C_pp146-159_31_2_Sandgrouse.pdf
https://www.mun.ca/biology/scarr/Adaptation_in_Darwins_Finches.html
https://ebird.org/species/blyros1?siteLanguage=en_IN
http://indianbirds.in/pdfs/IB7.5_Rahut_BlythsRosefinch.pdf
https://ncse.ngo/edward-blyth-creationist-or-just-another-misinterpreted-scientist
https://en.wikipedia.org/wiki/Edward_Blyth
முந்தைய தொடரை வாசிக்க :
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து(Accipiter butleri) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 23 – தவளைவாயன் | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 23 – தவளைவாயன் | முனைவர். வெ. கிருபாநந்தினி
“தவளை தன் வாயால் கெடும்” என்று நாம் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த கூடாத தகவலை பேசி மாட்டிக்கொள்ளும் போது கூறுகிறோம். தவளைகள் இரவில் அதன் வாழ்விடங்களில் அவைகளின் குறள் கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கத்தை கொண்டே ஒப்பிடுகிறோம். பறவைகளில் தவளை வாயின் வடிவமைப்பில் 14 வகையான பறவைகள் உள்ளன. அதனாலேயே அதன் பெயர் தவளைவாயன், ஆங்கில பெயர் Frogmouth. இது பக்கிப்பறவை குடும்பத்தை சார்ந்தது. இரண்டுமே இரவில் பூச்சிகளை பிடித்து உண்ணும் இயல்புடையது.
நாம் இன்றைக்கு பார்க்கவிருப்பது Dulit frogmouth. DULIT என்ற ஆங்கில பெயர் போர்னியோ காடுகளில் உள்ள ஒரு மலையின் பெயர். அம்மலையில் 600 மீட்டர் உயரத்தில், ஒரு இரவு நேரத்தில் ஒலி வெளிச்சத்தை நோக்கி வந்த பொழுது சேகரிக்கப்பட்டதால் அம்மலையின் பெயரையே ஆங்கிலப்பெயராக வைத்துள்ளனர். இதன் அறிவியல் பெயர் Batrachostomus harterti.
harterti – எர்னஸ்ட் ஜான் ஓட்டோ ஹாட்டர்ட் ஒரு பறவையியலாளர். ஹார்டெர்ட் 1859 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் பிறந்தார். ஜூலை 1891 இல், அவர் கிளாடியா பெர்னாடின் எலிசபெத் ஹார்டெர்ட் என்ற ஓவியர் மற்றும் பறவையியலாளரை மணந்தார். இவர் மனைவியுடன் சேர்ந்து சென்ற பயணத்தின் போது blue-tailed Buffon hummingbird என்ற பறவையின் புதிய இனத்தை கண்டறிந்தார்.
இங்கிலாந்தில் உள்ள டிரிங்கில் உள்ள ரோத்ஷில்டின் தனியார் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பறவையியல் கண்காணிப்பாளராக வால்டர் ரோத்ஸ்சைல்ட், 2வது பரோன் ரோத்ஸ்சைல்ட் என்பவரால் 1892 முதல் 1929 வரை பணியமர்த்தப்பட்டார். இங்கு ஹார்டெர்ட் காலாண்டு அருங்காட்சியக கால இதழான Novitates Zoologicae ஐ வெளியிட்டார். The Hand-List of British Birds என்ற புத்தகத்தை 1912 ஆம் ஆண்டு பிரான்சிஸ் சார்லஸ் ராபர்ட் ஜோர்டெய்ன், நார்மன் ஃபிரடெரிக் டைஸ்ஹர்ஸ்ட் மற்றும் ஹாரி ஃபோர்ப்ஸ் விதர்பி ஆகியோருடன் இணைந்து வெளியிட்டார்.
இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்து அங்கிருந்த தாவரங்களை பற்றிய நூலையும் வெளியிட்டுள்ளார். ஹார்டெர்ட்டின் அவர்கள் 1930 ல் பெர்லினுக்கு திரும்பிய பிறகு 1933 ஆம் ஆண்டு இறந்தார்.
ஹார்டெர்ட் எர்வின் ஸ்ட்ரெஸ்மனுக்கு வழிகாட்டியாக இருந்தார், ஹார்டெர்ட் எர்வின் 1972 இல் ஆசிரியர் ஹார்டெர்ட்டின் அவர்களின் கல்லறையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த பறவை தவிர 12 பறவைகளுக்கும் ஒரு பல்லி இனத்திற்கும் இவருடைய பெயரை வைத்து சிறப்பித்துள்ளனர்.
இவர் சேகரித்ததில் நவம்பர் மாதம் கிடைத்த ஒரு பறவையின் இரைப்பையில் நிறைய வெட்டுக்கிளிகளும், அதன் முட்டைப்பையிலதயாராக பெரிய முட்டைகளும் இருந்துள்ளன. இவை இந்தோனேசிய மற்றும் மலேசியா தீவில் மட்டுமே காணப்படுகின்றன. அழிந்து வரும் பறவைகளில் இதுவும் ஒன்று.
இது பெரிய, இருண்ட, பழுப்பு நிறமுடையது, நீளம் 32 முதல் 37 செ.மீ வரை இருக்கும். இறக்கையின் நீளம் 220 முதல் 250 மிமீ ஆகும். அதன் கழுத்தின் பின்புறம் கொண்டை உள்ளது. இறகுகளின் மறைப்புகளில் பெரிய வெள்ளை திட்டுகள் உள்ளன. கீழ்ப்பகுதி வெளிர் பழுப்பு நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும். பாலினங்கள் ஒரே மாதிரியானவை.
தவளைவாயன்களின் விருப்பமான வாழ்விடம் கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1500 மீ உயரத்தில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வளர்ச்சியின் கீழ் வரும் மலைக்காடுகளாகும். டுலிட் மலையில், இது மிகவும் பரவலான மற்றும் உயரமான பகுதிகளில் காணப்பட்டது ஆனால் தற்போது கீழ் பகுதிகளிலேயே இப்பறவைகள் வசிக்கின்றன.
டுப்லிட் தவளை வாய் பறவை வாழும் பரப்பளவு 127,000 km2 என மதிப்பிடப்பட்டு குறைந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாழ்வதாலும், அந்த பகுதிகளில் மரம் வெட்டுதல் மற்றும் விவசாய வளர்ச்சியின் மூலம் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுவதாலும் இப்பறவையின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. தவளைவாயன் போன்ற சிறப்பினங்கள் அழியாமல் காப்பது ஒல்வொரு அரசின் கடமையாகும். அதுவே சூழலுக்கு செய்யும் மாபெரும் நன்மையாக இருக்கமுடியும். ஒவ்வொன்றின் வாழ்விடங்கள் காக்கப்படும் போது அதையொற்றி வாழும் கண்களுக்குப் புலப்படாத எண்ணற்ற உயிரினங்களும் காப்பாற்றப்படும்.
தரவுகள்:
1) Phillipps, Quentin & Phillipps, Karen (2011). Phillipps’ Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. ISBN 978-1-906780-56-2.
2)https://www.researchgate.net/profile/RobertHutchinson2/publication/277146262_Nesting_records_of_Dulit_Frogmouth_Batrachostomus_harterti_with_notes_on_plumage_and_vocalisations/links/55640bf108ae86c06b695d54/Nesting-records-of-Dulit-Frogmouth-Batrachostomus-harterti-with-notes-on-plumage-and-vocalisations.pdf
3) https://en.wikipedia.org/wiki/Ernst_Hartert
முந்தைய தொடரை வாசிக்க :
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து(Accipiter butleri) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து | முனைவர். வெ. கிருபாநந்தினி
தீவுகள் என்பது நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு கடலுக்குள் ஆங்காங்கு சிறு நிலப்பகுதிகளாக இருக்கும். இவ்விடங்கள் இயற்கையின் வளம் மிகுந்து காணப்படும். சுற்றியும் கடல், கடற்கரை இருப்பதால் தினசரி பிரச்சனைகளிலிருந்து சிறிது நாட்கள் விலகி தனிமையாகவோ, குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது நண்பர்களுடன் அந்த இயற்கையை ரசிக்க செல்கிறோம்.

அதில் இந்தியாவுடன் தொடர்புடைய அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அடங்கும். பறவைகள் மற்றும் குரங்குகள் பற்றிய ஆய்வுகளுக்காக நண்பர்கள் சென்று வந்து அங்கு நடந்த அனுபவங்களை என்னிடம் சொல்லுவது வழக்கம். அவர்கள் எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசித்ததுண்டு.
தீவுகளில் மட்டுமே வாழும் உயிரினங்கள் பலவற்றில் நிக்கோபார் பருந்தும் ஒன்று. இது நிக்கோபர் தீவில் மட்டுமே உள்ளதால் Nicobor Sparrow Hawk என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர். Accipiter butleri இன் அறிவியல் பெயர் பட்லரை நினைவுபடுத்துகிறது.
ஆர்தர் லெனாக்ஸ் பட்லர் (Arthur Lennox Butler – 22 பிப்ரவரி 1873 – 29 டிசம்பர் 1939) ஒரு பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர். பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர், அந்த நேரத்தில் அது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அவரது தந்தை பிரிட்டிஷ் பறவையியல் நிபுணர் எட்வர்ட் ஆர்தர் பட்லர் மற்றும் அவரது தாயார் கிளாரா பிரான்சிஸ் பட்லர். பதினெட்டாவது வயதில், 1891 ஆம் ஆண்டில், பட்லர் தேயிலை தோட்டக்காரராக சிலோனுக்கு (இப்போது இலங்கை) பயணம் செய்தார், அவர் அறிவியல் தரவுகள் சேகரிப்பாளராக மாற நினைத்து அதனை கைவிட்டார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் 1898 இல், கண்காணிப்பாளராக ஆனார். அவர் பிரிட்டிஷ் பறவையியல் வல்லுநர்கள் சங்கத்தின் உறுப்பினராக 1899 இல், தேர்ந்தெடுக்கப்பட்டார். 1901 ஆம் ஆண்டு தொடங்கி, ஆங்கிலோ-எகிப்திய சூடானில் விளையாட்டுப் பாதுகாப்பின் கண்காணிப்பாளராக இருந்தார், 1915 ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். 1921 ஆம் ஆண்டில், அவர் பிரிட்டிஷ் பறவையியலாளர்கள் கிளப்பில் உறுப்பினரானார்.
இப்பறவைக்கு மட்டுமல்லாது நான்கு வகையான ஊர்வன (கெஹைரா பட்லெரி, லைகோடான் பட்லெரி, சிலோரினோஃபிஸ் பட்லெரி, மற்றும் டைத்தோஸ்சின்கஸ் பட்லெரி) மற்றும் ஒரு தவளை இனத்துக்கும் இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய புகைப்படம் கிடைக்கவில்லை.
கார் நிக்கோபார், கிரேட் நிக்கோபார், லிட்டில் நிக்கோபார், டில்லாங்சோங், கமோர்டா, கட்சல், நான்கோவ்ரி மற்றும் டிரிங்காட் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன. பெண்ணின் பறவையின் மேல்புறம் பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதி சிவப்பு-பழுப்பு நிறத்திலும் இருக்கும். தலை முதல் வால் வரை 28–34 சென்டி மீட்டர் நீளமுடையது. மஞ்சள் நிற கால்களை கொண்டுள்ளது. இது பல்லி மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது
இப்பறவை ஆண்டுக்கு இரண்டு முறை பிப்ரவரி மற்றும் செப்டம்பரில் இனப்பெருக்கம் செய்கின்றது என்று சான்றுகள் கூறுகின்றன. நிக்கோபார்களின் கடலோர வாழ்விடங்களில் 2006 ஆண்டு களப்பணியின் போது மூன்று வருடங்களில் 20-25 பறவைகளை மட்டுமே பார்த்துள்ளனர் எனபது வியப்பாக உள்ளது. அதன் பின்னர் 2009 முதல் 2011 வரை இரண்டு முறை மட்டுமே பார்த்துள்ளனர்.
1988 – இல் சரியான எண்ணிக்கையில் இருந்துள்ளது (Least concern), பின்னர் 1994 முதல் 2000 வரை அருகி வரும் (Near threatened) பட்டியலுக்கு தள்ளப்பட்டது, அதன் பின்னரும் நாம் விட்டுவைக்கவில்லை 2002 முதல் இன்று வரை மிக அருகிவரும் (Vulnerable) பட்டியலுக்கு அதனை தள்ளியுள்ளோம்.
இக்குறிப்பிட இனம் வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவு போன்ற காரணங்களால் விரைந்து அழிந்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை கருத்தில் கொள்ளமுடியும். குறிப்பாக 1960 லிருந்து 1970 வரை இந்திய நிலப்பரப்பில் இருந்து மனித புலம்பெயர்ந்தோர் வந்ததிலிருந்து காடழிப்பு துரிதப்படுத்தப்பட்டது.
சுனாமி அனைத்து தீவுகளிலும் வாழ்விடத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளை 2004 ஆம் ஆண்டு அழித்தது. மேலும் விவசாய விரிவாக்கத்திற்காக காடுகளை அகற்றுவதும் பெருமளவில் அதிகரித்தது, இது இன்னும் பெரிய மண் அரிப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது அதன் பின்னரும் தொடர்ந்த மேம்பாடு செயல்பாடுகள் இப்பறவையின் அழிவிற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இக்குறிப்பிட்ட இன பருந்தை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட பகுதியாக கட்ச்சலில் உள்ள சமூகத்தினர் நிர்வகிக்கின்றனர். மேலும் இந்த இனம் இந்திய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
வலைத்தளங்களில் ஒரு மீம் வைரலாகிக் கொண்டிருந்தது, விலங்குகள் கடந்து சென்ற வழித்தடம் அதன் கால்கள் பதிந்து இருந்தன, ஆனால் மனிதர்கள் கடந்து சென்ற பாதை குப்பைகளாக கிடப்பது போல காட்டியிருந்தார்கள். இதனைத் தான் நாம் நடைமுறையில் செய்கின்றோம், பார்க்கின்றோம், அதற்கு சான்று கடந்த வாரம் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு பல காரணங்களில் ஒன்று ஏரிகள் ஆக்கிரமிப்பு மற்றொன்று நெகிழி பொருட்கள் கால்வாய்களில் அடைபட்டிருந்தது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்து வரும் மனிதஇனம் எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை.
ஏற்கனவே சொன்னது போல தீவுகள் மனிதர்கள் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாவே உள்ளன. மனிதர்களின் காலடி பட்டவுடன் ஒவ்வொன்றாக அழிய ஆரம்பித்து விடுகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளால், பேராசையால் ஒவ்வொன்றாக சுரண்டி இயற்கை சீரழிக்கின்றோம். நாம் கண்டு ரசிக்கும் இயற்கை , நாம் நோயற்று வாழக் காரணமான இயற்கை சூழல் நமது குழந்தைகளுக்கு வேண்டாம் என நாம் நினைக்கிறோமா? சிந்திப்போம் காப்பாற்ற முன்வருவோம்.
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
ஒவ்வொரு மனிதர்களுக்கும் வித்தியாசமான குரல்கள் இருப்பது போல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தனித்தன்மையுடன் உள்ளன. யானைகள், வௌவால்கள் ஆகியவை அகவொலிகள் மூலம் நமக்கு கேட்காத மொழிகளில் பேசுகின்றன. மற்றவை அவர்களுக்குள் பேசும் பொழுது அவர்கள் மொழி புரியும். நமக்கு அர்த்தம் தெரியாததால் சப்தமாக உணர்கிறோம். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் மொழியை கற்று புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் அலைபேசியில் பேசும்பொழுது நமக்கு பழக்கமான குரலை எளிதில் கண்டுபிடித்து விடுவோம். சில நேரங்களில் குழப்பம் இருக்கும். அதே போல் பறவைகளில் குறிப்பாக அதன் குரலில் ஆய்வு செய்பவர்களுக்கு பல பறவை இனங்களின் குரல்கள் பழக்கப்பட்டவை. அதனால் வித்தியாசமான குரலை கேட்டால் உடனே நின்று கவனித்து அது என்ன பறவை என்று கண்ணில் பார்த்து முடிவு செய்வார்கள்.
அதன் விளைவு 2016 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் வடகிழக்கு இந்தியா மற்றும் சீனாவின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பறவைகளை பற்றிய ஆய்வின் போது இத்தனை நாட்கள் கேட்காத, பழக்கமில்லாத ஒரு குரலை கேட்டுள்ளனர். ஸ்வீடன், இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு அதன் உடல் அமைப்பு வண்ணங்களை கவனித்தனர், அதன் கழுத்து பகுதி முதல் வால் பகுதி வரை அடிப்பகுதி கருப்பு புள்ளிகளையும். மேட்பகுதி இறகுகள் அடர் பழுப்பு நிறத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் திட்டவட்டமான உருவ வேறுபாடுகள் புலத்தில் கண்டறியப்படவில்லை. ஆதலால் வெவ்வேறு இடங்களில் 45 முறை பதிவு செய்த இக்குறிப்பிட்ட பறவையின் குரலை பகுப்பாய்வு செய்துள்ளனர். இதே போல் பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் இது புதிய இனம் என உறுதி செய்துள்ளனர்.
இப்பறவை குறைந்தது 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான மூதாதையரிடம் இருந்து பிரிந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பூங்குருவி 1440 – 3800 மீட்டர் உயரமான வனப்பகுதிகளில் வாழ்கிறது. தரையில் உணவு தேடுகிறது, மூங்கில் மரங்களை அதிகம் பயன்படுத்துகிறது. நத்தை, பூச்சிகள், வெட்டுக்கிளிகள், எறும்புகள் ஆகியவை உண்ணுகின்றன.
இந்தியா, பூட்டான், மியான்மார், நேபால் மற்றும் வியட்னாம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன. ஆனால் இந்தப் பறவை இனங்கள் இந்தியாவில் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்கில் இருந்து சீனாவில் வடமேற்கு யுனான் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தப் பறவையின் குரல் மற்றப் பூங்குருவிகளின் குரலைவிட இனிமை வாய்ந்ததாக உள்ளதே இதன் தனிச்சிறப்பு.
இமாலய பகுதியில் மட்டும் வாழ்வதால் இந்தப் பறவைக்கு இமாலயன் ஃபாரஸ்ட் த்ரஷ் (Himalayan Forest Thrush) ஆங்கிலத்தில் பொது பெயர் வைத்துள்ளனர். அறிவியல் பெயராக Zoothera salimalii என்று இந்திய பறவையியல் வல்லுநரான டாக்டர் சலிம் அலி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சாலிம் அலி உலகப் புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சாலீம் அலி நவம்பர் மாதம் 12 ஆம் நாள் 1987 ல் பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர்.

அவருடைய மனைவியுடன் சேர்ந்தே விடைகளை தேடி அலைந்தார். நாடு விடுதலை அடைவதற்கு முன்பு சாலை வசதிகள் இல்லை, பள்ளம்-மேடான சாலைகளில் மாட்டு வண்டிகளில் பயணம் செய்தனர். இருவரும் சிறிய கூடாரங்களில் தங்கினர். அனைத்து விதமான கடினமான சூழலிலும் இருவரும் சேர்ந்தே பயணித்தனர். “The book of Indian Birds” என்று 1934-1939 வரையிலான காலத்தில் இந்தியப் பறவைகளை பற்றி புத்தகம் எழுதினர். இப்புத்தகம் 1941ல் வெளிவந்தது. விடுதலை போராட்டத்தின் மூலம் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேருவை சந்தித்து இப்புத்தகத்தை இவருடைய கையெழுத்துடன் கொடுத்தார். படித்து ஆச்சரியமடைந்த அவர் தனது மகள் இந்திரா காந்தி அவர்களுக்கு பரிசளித்ததை தொடர்ந்து உலக அளவில் இந்நூல் கவனத்தை பெற்றது. இந்நூல் உருவாக இவருடனேயே அனைத்து களப்பணிகளுக்கும் பயணம் செய்து, இந்நூல் எழுதுவதற்கும், திருத்துவதற்கும் இவருடைய மனைவி பெரும் உதவியாக இருந்தார். அவருடைய மனைவி இறந்து பிறகு அவர் தனிமையில் வேலை செய்த கடினங்களை வெளிப்படுத்தியதில் மனைவி தெஹ்மினா பேகம் அவர்களின் இழப்பு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சாலிம் அலி அவர்களின் ஆய்வு பறவைகளை மற்றும் காப்பாற்றவில்லை. கேரளத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு, ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகிவையும் காப்பாற்றப்பட்டன. தற்போதும் இவர் அறிமுகபடுத்திய பறவைகளின் காலில் வளையமிடுதல், மற்றும் இவர் வெளியிட்ட புத்தகம் ஆகியவையே பறவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்தப் படைப்புகள் இன்றைக்கும் உலக அளவில் மதிக்கபட்டு வருகின்றன. இந்திய அரசு அவரை கௌரவிக்கும் வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் தலையும் வெளியிட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் சாலிம்அலி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தன்வரலாற்று நூலான “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) என்ற தலைப்பில் அவரது வாழ்க்கையை பற்றிய நூல் வெளியிட்டுள்ளார். சாலிம் அலி அவர்கள் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக 1985 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Latidens salimalii என்று ஒரு வௌவால் வகைக்கும் இவருடைய பெயர் வைத்துள்ளனர். எழுத்தாளர் ச.முகமதுஅலி அவர்களும் ஆதிவள்ளியப்பன் அவர்களும் இவரை பற்றிய நூலை எழுதியுள்ளனர்.
பறவை நோக்கல் என்பது பொழுதுபோக்காக ஆரம்பித்து பிற்காலத்தில் மொத்த இயற்கையையும் காப்பாற்ற ஆராய்ச்சி முடிவுகளை செயல்படுத்தி, அவரே பி.என்.எச்.எஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு ஏற்கும் அளவிற்கு உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன் மேல் தட்டு மக்களால் பயன்படுத்திய பறவைநோக்கல் எனும் இத்துறை தற்போது அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மக்கள் என விரிந்துள்ளது. மேலும் இவை பற்றிய ஆராய்ச்சிகளை இன்னும் பரவலாக்க வேண்டும்.
வரும் 12 நவம்பர் அன்று சாலிம் அலி அவர்களின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை எழுதுவதில் மகிழ்ச்சி. “நான் என்னுடைய பங்கை முடித்துவிட்டேன், இனி இளைஞர்களாகிய உங்கள் கையில்” என்று ஆங்கிலத்தில் “I suppose I have done my bit, Its now upto you younger people“ சாலிம் அலி அவர்களின் செய்தியுடனே இக்கட்டுரையை நான் முடிக்கிறேன்.
தரவுகள்
http://indianbirds.in/pdfs/IB_12_6_Singh_Blackbird_Thrush.pdf
https://www.conservationindia.org/articles/himalayan-forest-thrush
https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/new-bird-found-himalayan-forest-thrush-304858-2016-01-21
https://avianres.biomedcentral.com/articles/10.1186/s40657-016-0037-2
சாலிம் அலி: உயரப் பறந்த இந்தியக் குருவி ஆசிரியர் ஆதி வள்ளியப்பன்
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
கம்பிவால் தகைவிலான்
காற்றைக்கிழித்துப் பறந்துகொண்டே கண்ணுக்கு புலப்படாத சிறு பூச்சிகளை பிடித்து உண்ணும் இதன் மொத்த நீளம் 14 சென்டிமீட்டர், ஆனால் வால் மட்டும் 10 சென்டிமீட்டர் என்பதால் ஆங்கிலத்தில் இதனை Wire-tailed Swallow என்றும் தமிழில் கம்பிவால் தகைவிலான் என்றும் அழைக்கிறோம்.

சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் தென் பகுதிகளில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் குளிர்காலத்தில் பரவலாக காணப்படும். குறிப்பாக பிச்சாவரம் சதுப்புநிலம், நீலகிரி ஆகிய பகுதிகளில் பெருமளவில் காணலாம்.
கம்பிவால் தகைவிலான் வடக்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானிலும் இது தெற்கில் நீலகிரியில் மட்டும் இனப்பெருக்கம் செய்வதான குறிப்பு உள்ளது. நீர் நிலைகளுக்கு அருகில் சேற்றை சேகரித்து குடுவை போன்று வடிவமைத்து அதனுள் வேர்கள், முடிகள், இலைகள், கூழாங்கற்கள் போன்ற பொருட்களை நிரப்பி ஆண் பெண் இரண்டும் சேர்ந்து கூடுகள் கட்டுகின்றன. மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடுகின்றன.
களஆய்விற்கான பயணத்தில் 31 வயதிலேயே உயிரிழந்த நார்வே நாட்டை சார்ந்த தாவர சூழலியல் அறிஞர் கிறிஸ்டியன் சுமித் அவர்களின் பெயரால் smith அறிவியல் பெயரில் Hirundo-smithii என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்டன் ஸ்மித் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால நார்வே மருத்துவர், பொருளாதார நிபுணர் மற்றும் இயற்கை ஆர்வலர், குறிப்பாக தாவரவியலாளர். ஸ்மித் நோர்வேயின் டிரம்மனில் உள்ள ஸ்கோஜரில் பிறந்தார். பேராசிரியர் மார்ட்டின் வால் கீழ் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் தாவரவியல் பயின்றார். ஜென்ஸ் வில்கன் ஹார்னெமனுடன் சேர்ந்து, நார்வேயின் பெரும்பகுதிகளில் பயணம் செய்தார் மற்றும் தாவரவியல் ஆய்வுகளையும் மேற்கொண்டார், ஜோகிம் ஃபிரடெரிக் ஸ்கோவ் மற்றும் மோர்டன் வோர்ம்ஸ்கோல்ட் ஆகியோரும் பயணத்தில் இணைந்தனர்.
ஸ்மித் 1808 இல், பட்டம் பெற்று நார்வேயில் மருத்துவம் செய்யத் தொடங்கினார். கிறிஸ்டியானியாவில் புதிதாக நிறுவப்பட்ட ராயல் ஃப்ரெட்ரிக் பல்கலைக்கழகத்தில் தேசிய பொருளாதாரம் மற்றும் தாவரவியல் பேராசிரியராக 1814 ஆம் ஆண்டில், நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஐரோப்பாவில் தாவரவியல் பூங்காக்களின் வளர்ச்சிக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் அவர் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்கினார்.
அவரது முதல் பயணம் அவரை ஸ்காட்லாந்துக்கும் அங்கிருந்து லண்டனுக்கும் அழைத்துச் சென்றது, அங்கு அவர் பிரஷ்ய புவியியலாளர் லியோபோல்ட் வான் புச்சை சந்தித்தார். புச் எரிமலை கேனரி தீவுகள் மற்றும் மடீராவுக்குச் செல்லத் திட்டமிட்டார், மேலும் அனுபவமிக்க விஞ்ஞானியுடன் ஒரு பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பை ஸ்மித் ஆவலுடன் பயன்படுத்திக் கொண்டார். இருவரும் பயணத்தை 1815 இல் தொடங்கினார்கள். அந்த ஆண்டு டிசம்பர் 8 அன்று அவர்கள் போர்ட்ஸ்மவுத் திரும்பினர், ஸ்மித் 600 வகையான தாவரங்களை கொண்டு வந்தார், அதில் சுமார் 50 வகை அறிவியலில் புதியவை. ஸ்மித்தின் புதிய இனங்களில் மிகவும் பிரபலமானவை அநேகமாக பைனஸ் கேனாரென்சிஸ், கேனரி தீவு பைன் ஆகும்.
புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்ததோடு, புச்சில் இருந்து புவியியலைக் கற்றுக்கொண்ட ஸ்மித்தை, லண்டன் ராயல் சொசைட்டி அணுகியது, காங்கோ நதிக்கு மேற்கத்திய நைஜர் பேசின்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க கேப்டன் ஜேம்ஸ் ஹிங்ஸ்டன் டக்கியின் கீழ் ஒரு அறிவியல் பயணத்தில் பங்கேற்கச் சொன்னார். மற்றும் மத்திய ஆப்பிரிக்கா பயணத்தின் தாவரவியலாளர் மற்றும் புவியியலாளராக ஸ்மித் செயல்பட்டார். அவருக்கு உதவியாளராக டேவிட் லாக்ஹார்ட் இருந்தார்.
காங்கோ பயணம் பிப்ரவரி 1816 இல் தொடக்கத்தில் இருந்து மோசமாக சென்றது. நீராவி படகாக கட்டப்பட்ட “எச்எம்எஸ் காங்கோ” என்ற பயணக்கப்பலைப் பயன்படுத்தி ஆற்றில் பயணம் செய்வது தான் இயல்பு, இது இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தது. கப்பல் வழக்கமான பாய்மரங்களில் பொருத்தப்பட்டிருந்தாலும், கனமான கட்டுமானம் அதை தண்ணீரில் ஆழமாக உட்கார வைத்தது. அதனுடன் இணைந்த இலகுவான கப்பலான “டோரோதி” பயன்படுத்தப்பட்டது.
ஆனால் 160 கிமீ உள்நாட்டு வேகத்தில் நிறுத்தப்பட்டதால், கொங்கோ வழியாக mosquito-infested swamps என்ற சதுப்பு நில பகுதி வரை நடந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்
இந்த பயணம் ஆற்றில் 450 கிலோமீட்டர் வரை செல்ல முடிந்தது அதன் பின்னர் உணவு பற்றாக்குறை, அங்கிருந்த ஒரு சில மனிதர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் வெப்பமண்டல காய்ச்சல்கள் ஆகியவை தேடிசென்றவைகளை கண்டுபிடிக்காமலேயே பயணத்திலிருந்து திரும்பினர். ஆற்றில் கீழ் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது வழியில், வெப்பமண்டல காய்ச்சல் ஸ்மித் அவர்களையும் தாக்கியதில் இறந்தே விட்டார். அப்பொழுது அவரது வயது 31.
கப்பலில் பயணித்த விஞ்ஞானிகள் மற்றும் கேப்டன் உட்பட 56 உறுப்பினர்களில் 18 பேர் இறந்தனர். அதில் பிழைத்த ஜோசப் கான்ராட் என்பவர் பல வருடங்களுக்கு பிறகு பயண அனுபவங்களில் உத்வேகம் அடைந்து அனுபவங்களையும், துன்பங்களையும் எழுதி Hear of Darkness என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
காய்ச்சலுக்கு முன்பு, ஸ்மித்தின் நாட்குறிப்பு மற்றும் தாவர மாதிரிகள் லண்டனுக்கு அனுப்பப்படுவதை கேப்டன் டக்கி உறுதி செய்தார். இச் செய்தியை படிக்கும் பொழுது இன்றைக்கு இருக்கும் மனிதர்களை ஒப்பிட்டு பார்த்தேன். என்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கப்பலின் கேப்டன் அப்பயணத்தின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளார், இவர்கள் சேகரித்த இயற்கை பற்றிய அறிவியல் தகவல்களின் பயனர்களை உணர்ந்து அனுப்ப வேண்டிய இடங்களுக்கு சரியாக அனுப்பி வைத்துள்ளார்.
இவர்களுடைய உழைப்பு வீண் போகவில்லை. பயணத்திலிருந்து அவரது சேகரிப்பில் 620 இனங்கள் இருந்தன, அவற்றில் 250 புதியவை என்று நிரூபிக்கப்பட்டன. அவர் விட்டுச் சென்ற பல நூல்கள் பின்னர் அவரது நண்பர் மார்ட்டின் ரிச்சர்ட் ஃப்ளோரால் வெளியிடப்பட்டன. கிரிஸ்டியா ஸ்மிதி என்ற பாம்பின் இனமும் கிறிஸ்டன் ஸ்மித்தின் நினைவாக பெயரிடப்பட்டது தான்.
நேற்று இவருடைய 234 ஆவது பிறந்தநாளில் இவரை பற்றி எழுதுவதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இத்தனை பேர்கள் வாழ்க்கையையே இழந்து நமக்கு கொடுத்து சென்ற அறிவியல் தகவல்களை வைத்து படித்து பட்டங்கள் பெற்று சுயநல வாழ்க்கை வாழ்வதோடு மட்டுமில்லாமல் மிச்சம் மீதி இருக்கும் இயற்கையையும் அடுத்த தலைமுறைக்கு கூட வேண்டாம் நமது எதிர்காலத்திற்கே கூட விட்டு வைக்காமல் அழித்து கொண்டிருக்கிறோம் என்பது துயரமாகவே உள்ளது.
தரவுகள்
https://www.wikitree.com/wiki/Smith-203095
https://web.archive.org/web/20031229090451/http://humboldt.mpiwg-berlin.mpg.de/10b.sunding.htm
http://indianbirds.in/pdfs/IB4.1_SandilyanETAL_Kodiyampalayam.pdf
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) | முனைவர். வெ. கிருபாநந்தினி
காட்டுப் பஞ்சுருட்டான்
மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது ஒவ்வொரு கடைகளிலும் நாம் “சுத்தமான மலை தேன் கிடைக்குமா”? என்று விசாரிக்கிறோம் அல்லது நம் வீட்டில் கை குழந்தைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் நோய்க்கு மருந்தாக சுத்தமான தேன் போன்றவை தேவைப்படும் போது மட்டும் தேனை தேடுகின்றோம்.
மனிதர்களின் தேவையை அரைகுறையாக பூர்த்தி செய்ய பல குடிசை தொழில்கள் உள்ளன. அதில் தேனீ வளர்ப்பும் ஒன்று. தேனீக்கள் பூக்களில் இருந்து இயற்கையாக சேகரிக்கும் தேன் மருத்துவத்திற்கு பயன்படுகிறது, ஆனால் வளர்ப்பு தேனீக்களில் கிடைக்கும் தேன் அதுபோன்று கிடையாது. இன்னும் சில நாடுகளில் தேனீக்களையே மக்கள் உணவாகவும் உண்ணுகின்றனர். தேனீக்கள் தாவரங்களின் அயல்மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேனீக்கள் எதிர்களிடமிருந்து தங்களைக் காப்பற்றிக்கொள்ள கொடுக்கில் விஷம் இருக்கும்படி தகவமைப்பு பெற்றுள்ளன. ஆனால் பூச்சிக்கொல்லி, கால நிலை மாற்றம், பூச்சிக்கொல்லி போன்றவைகளால் தேனீக்கள் தற்போது விரைவாக அழிந்து வருகின்றன.
தேனீக்களை வளர்ப்பவர்கள் சர்க்கரை கரைசலை உணவாக கொடுக்கிறார்கள். இதனால் நமக்கு சத்துள்ள தேன் கிடைப்பது அரிதாகிறது. அதனால் தான் சத்துள்ள தேனை நாம் மலைபகுதிகளுக்கு செல்லும்போது தேடுகின்றோம், மேலும் சர்க்கரை கரைசலை கொடுப்பதன் மூலம் மிகவும் முக்கியமாக இயற்கையின் உணவுச்சங்கிலியில் அதனுடைய செயல்பாடுகளான மகரந்த சேர்க்கை தடைபடுகின்றன. இதனால் தாவரங்களில் நோய் எதிர்ப்பு போன்ற வீரியம் குறைந்தும், ஒரு சில தாவர இனங்களையும் இழந்தும் வருகின்றோம்,
இத்தகைய தேனீக்களை உணவாக உண்பதால் இப்பறவைகளுக்கு ஆங்கிலத்தில் Bee Eater என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் நாம் இன்றைக்கு பார்க்க இருப்பது Blue-bearded Bee-eater. தொண்டையின் இறகுகள் நீண்டுபோகும்போது அவை தாடியுடன் தோற்றமளிப்பதே இப்பெயருக்கு காரணம்.
ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒரே மாதிரி தோன்றினாலும், ஆண் பறவைகளின் நீல தொண்டை இறகுகளில், பெண் பறவைகளை விட அதிகமான புற ஊதா பிரதிபலிப்பு காட்டப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் Nyctyornis athertoni (Jardine & Selby, 1830)
Nyctyornis – Gr. nukti- nocturnal, night-; ornis bird.
Athertoni – Lt. Jeptha Atherton (1797–1827) British Army and naturalist in India (Nyctyornis).
லியூட்டின் ஜான் அதெர்டன் என்பவரின் பெயரை வைத்துள்ளனர். பறவையின் மாதிரியைப் பெற்றவர் திருமதி பி ஜே செல்பியின் மருமகன். சர் வில்லியம் ஜார்டினுடன் இணைந்து 1828-ல் வெளியிடப்பட்ட “பறவையியலின் விளக்கப்படங்கள்” இல் செல்பி இனங்களை விவரித்தார் (Illustrations of Ornithology, Series 1, Volume 2 part 4, November 1828, plate 58).
காட்டுப் பஞ்சுருட்டானை பெங்களூர் ஆட்சியாளரின் உதவியுடன் கண்டறிந்தார் எனவும், அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது, இரவில் உணவு உண்கிறது எனவும், மேலும் இதனுடைய சப்தம் அல்லது அழைப்பு “கர்ர், கர்” அழைப்புகளுடன் சத்தமாக இருந்தது எனவும். இப்பறவை பற்றிய குறிப்புகளில் கடிதமாக எழுதி ஷெல்பி அவர்களுக்கு அனுப்பியுள்ளார் அடெர்டன். லியூட்டின் ஜான் அதெர்டன் அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை என்பது வருத்தமே.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, சீனா, லாவ்ஸ், மியான்மார், நேபால், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இதனை காணலாம்.
மாலை நேரத்தில் மின் கம்பிகளில் வரிசையாக அமர்ந்து பூச்சிகளின் வருகைக்காக காத்திருக்கும். மறைந்து கொண்டிருக்கும் சூரிய ஒளியில் அவை ரம்மியமாக காட்சியளிப்பதை கண்டு ரசிக்கலாம். ஆனால் தற்போது தேனீக்கள் அழிந்து வருகின்றன, அவற்றிக்கான உணவுகளும் குறைந்து வருகின்றன. பிரச்சனைகள் வரும் பொழுதும், தேவைப்படும் போதும் மட்டும் தேடாமல் எப்பொழுதும் தேவையை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் இதுபோன்ற பிரச்னைகளையே தடுக்கலாம்.
விவசாய நிலங்களில் பல்வேறு விதமான இரசாயனங்கள் தெளிப்பதையும், பூக்கும் தாவரங்களை பாதுகாத்தலுமே, செயற்கையாக தேனீ வளர்ப்பதும் கட்டுப்படுத்தும். இயற்கையாகவே தரமான தேனும் கிடைக்கும், தேனீக்களை உண்ணும் பஞ்சுருட்டான் போன்ற பாதுகாப்பாக இருக்கும் பறவைகளும் அழியாமல் தொடர்ந்து இதே போல் தக்கவைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நமது அடுத்த தலைமுறைகளும் தரமான உணவுகளை பெற்று இயற்கை ரசித்து ஆரோக்கியமாக வாழலாம்.
தரவுகள்
https://www.nwf.org/Educational-Resources/Wildlife-Guide/Invertebrates/Bees
http://datazone.birdlife.org/species/factsheet/blue-bearded-bee-eater-nyctyornis-athertoni
https://en.wikipedia.org/wiki/Jeptha_Atherton
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
ஆற்று ஆள்காட்டி
இது நம்ம பகுதியில் உள்ள ஆள்காட்டி போலவே உருவ அமைப்புக் கொண்டது. ஆனால் நிறத்தில் வேறுபாட்டுடன் காணப்படும். தலையில் தொப்பி போன்று கருப்பாகவும், கால்களும் கருப்பாக இருக்கும். இந்த ஆள்காட்டி பறவை தமிழ்நாட்டில் இல்லை. ஆதலால் நமக்கும் இந்த பறவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டியதில்லை.
இயற்கையில் மனிதர்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் தான். பூமியில் அன்றாடம் நிகழும் எல்லா பிரச்சனைகளையும் சேர்த்து யாரோ எங்கேயோ இந்த பூமியில் செய்யும் தவறுகளுக்கு மற்றொரு இடத்தில் உள்ள மனிதனுக்குப் பிரச்சனைகள் நேர்கின்றன. அதிலும் குறிப்பாக காற்று, நீர் ஆகியவை நிலத்தின் போக்கிற்குத் தகுந்தவாறு அனைத்து இடங்களுக்கும் செல்வதால் தான் நதி நீர் இணைப்பு பற்றி நாம் பேச முடிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி உலக ஆறுகள் தினம். ஆற்றுப் பகுதியில் ஆற்றை நம்பி வாழும் ஒருவகை ஆள்காட்டி பறவையைப் பற்றி தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஆற்று ஆள்காட்டி பறவை இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் தெற்கு சீனாவில் (யுன்னான்) நாடுகளிலும், இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் பரவி காணப்படுகின்றன. இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷில் மார்ச் முதல் ஜூன் வரை இனப்பெருக்க செய்கின்றன. முட்டைகளைத் தரையில் வைத்து அடைகாக்கும்.
ஈரமான புல்வெளிகள், ஏரிகளின் விளிம்புகள், மணல் நிலப்பரப்பு, கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றங்கரைகள், புல்வெளிகள், விளைநிலங்கள் மற்றும் வறண்ட புல்வெளிகள் போன்ற பல்வேறு வாழ்விடங்களில். பெரும்பாலும் நீர் சூழலில் ஒன்றான ஆறுகளில் வாழ்வதால் இதன் ஆங்கில பெயர் River Lapwing
ஆற்றுப் பகுதிகளில் உள்ள புழுக்கள், மெல்லுடலிகள், கணுக்காலிகள், தேனீ,வண்டு, எறும்பு போன்ற பூச்சி வகைகளை உண்டு வாழ்கின்றன.
இதன் அறிவியல் பெயர் Vanellus duvaucelii
duvaucelii – Alfred Duvaucel ஆல்பிரட் துவாசெல் ஒரு பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். டிசம்பர் 1817 இல், துவாசெல் பிரான்சிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவிற்குப் புறப்பட்டு மே-1818 இல் கல்கத்தாவுக்கு வந்தார், அங்கு அவர் பியர்-மடார்ட் டயர்டை சந்தித்தார். பின்னர் இருவரும் ஒன்றாக, இணைந்து பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நிலையமான சந்தர் நகருக்குச் சென்று, பாரிஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்காக விலங்குகள் மற்றும் தாவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அவர்கள் தினசரி உயிருள்ள மற்றும் இறந்த மாதிரிகளைச் சேகரிக்க வேட்டைக்காரர்களை வேலைக்கு அமர்த்தினர். வேட்டையாடத் தேவையான பொருட்களை உள்ளூர் ராஜாக்களிடமிருந்து பெற்றனர். அவர்களின் வளாகத்தின் தோட்டத்தில் உள்ளூர் தாவரங்கள் மற்றும் நீர் பறவைகளை வளர்த்தனர்.
ஜூன் 1818 இல், அவர்கள் பாரிஸுக்கு முதல் சரக்குகளை அனுப்பினர், அதில் கங்கை நதி டால்பின் எலும்புக்கூடு, திபெத்திய எருவின் தலை, சிறிய வகை பறவைகள், சில கனிம மாதிரிகள் மற்றும் சுமத்ராவிலிருந்து ஒரு தும்பிக்கை பன்றி, இரண்டாவதாக அனுப்பியதில் ஒரு உயிருள்ள காஷ்மீர் ஆடு, க்ரெஸ்டட் ஃபெசண்ட்ஸ் மற்றும் பல்வேறு பறவைகள் ஆகியவை அடங்கும்.
தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸை அவர்களை 1818ஆம் ஆண்டின் இறுதியில் சந்தித்தார், அவர்கள் இருவரும் மலாய் தீபகற்பம், சிங்கப்பூர் மற்றும் சுமத்ரா ஆகிய பகுதிகளுக்குச் சென்று அந்தப் பிராந்தியத்தின் இயற்கை வரலாற்றைப் படித்தனர்.
இந்தோனேசியாவில் உள்ள பாடாங் பகுதிக்குப் பயணம் செய்து மலையன் தபீர், சுமத்ரன் காண்டாமிருகம், பல குரங்குகள், ஊர்வன, மான் மற்றும் அச்சின் மாதிரிகளை சேகரித்தார். மேலும் அவர் பல சூழ்நிலைகளில் பாடம் செய்யப்பட்ட விலங்குகள், எலும்புக்கூடுகள், தோல்கள் மற்றும் சில குரங்குகளுடன் கல்கத்தா திரும்பினார்.
இந்தியாவின் வடக்கில் உள்ள கங்கையை நோக்கி பயணம் செய்தார். அப்பொழுது பாட்னாவின் கிழக்கே ராஜமஹால் மலைகளில் சிறிது நேரம் செலவழித்தபோது ஒரு காண்டாமிருகம் அவரை தாக்கியது. அதில் கடுமையாகக் காயமடைந்தார், அதிலிருந்து குணமடைய வில்லை. முதலில் பாகல்பூரில் மருத்துவ உதவி வழங்கப்பட்ட போதிலும் பின்பு கல்கத்தாவிலும் இறுதியாக மெட்ராஸிலும் சிகிச்சை அளித்த நிலையிலும் அதிலிருந்து அவர் மீள முடியாமல் 1824 ஆம் ஆண்டு இறந்தார்.
இந்த பயணங்களுக்குப் பிறகு அவர் நேபாளம் அல்லது திபெத், பாட்னா, கோரக்பூர் மற்றும் காத்மாண்டு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனால் காண்டாமிருகம் தாக்கப்பட்டதிலிருந்து மீள முடியாமலேயே போனது நமக்கும் பேரிழப்பே. ஏனென்றால் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தங்கி சுமார் 2000 விலங்குகளைச் சேகரித்து பாரிஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். காண்டாமிருகம் தாக்கப்படாமல் இருந்திருந்தால் நமக்கு இன்னும் பல விலங்குகளைப் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும்.
இவருடைய இந்த அர்ப்பணிப்புக்காக இவருடைய பெயரை ஆள்காட்டி பறவைக்கு வைத்திருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாகும். ஆனால் தற்போது இந்த குறிப்பிட்ட ஆள்காட்டி பறவை அருகி வரும் நிலையில் உள்ளன. அழிந்து வருவதற்கான காரணம் மனிதர்களால் அதன் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிக்கப்படுவது தான். மேலும் அதன் வரம்பில் உள்ள பெரிய ஆறுகளில் ஏராளமான நீர்மின் திட்டங்கள் இருப்பதால் இதனையும் மிகப்பெரிய ஆபத்தாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கொரானாவிற்கு முன்பே புனித கங்கை நீரை மாசுக்கள் நிறைந்ததாகவும் குடிக்க தகுதியற்றதாகவும் அறிவித்துள்ள நிலையில் கொரோன இரண்டாம் அலையில் யமுனை ஆற்றில் மிதக்கவிட்ட மனித உடல்களினால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் பல பலன்களுக்கு யாரோ ஒருவர் வாழ்க்கையைத் தியாகம் செய்திருப்பதை உணராமல், மறந்து அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அழித்துக் கொண்டிருப்பதன் விளைவு, எங்களது எதிர்காலமும் அடுத்த தலைமுறையின் எதிர்காலமும் இயற்கை சீற்றங்களுக்கு நடுவில் தினசரி போராட்டமாகத் தான் வாழ்க்கை இருக்கப்போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆபத்தை உணர்ந்து இனிமேலாவது ஆள்காட்டிப் பறவை போன்று அழிந்து வரும் நிலையில் உள்ள பறவைகளையும் வாழ்விடங்களையும் காப்பாற்றுவோம் .
தரவுகள்
- https://www.researchgate.net/publication/334344374_Mauled_by_a_rhinoceros_the_final_years_of_Alfred_Duvaucel_1793-1824_in_India.
- https://www.researchgate.net/publication/325844182_Population_Structure_Behavior_and_Distribution_Pattern_of_River_lapwing_Vanellus_duvaucelii_Lesson_1826.
- http://www.birds.iitk.ac.in
- https://www.wii.gov.in/nmcg/priority-species/birds/river-lapwing
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி