Posted inPoetry
வாழ்க்கை : கவிதை – சு.ரசிகா
பிறந்தோம் எதற்கு பிறந்தோமென்று மறந்தோம்
வளர்ந்தோம் வயதில் மட்டும் வளர்ந்தோம்
கற்றோம் கையிலுள்ள தாளை மட்டும் கற்றோம்
ஓடினோம் ஓய்வில்லா பிழைப்பை தேடி ஓடினோம்
கூடினோம் குதூகல குடியின் கூட்டத்தில் கூடினோம்
பயந்தோம் பணக்கார பதவியின் பாவிகளை கண்டு
சேர்த்தோம் சுயநல வாழ்விற்கு தங்ககூண்டுகளை
பார்த்தோம் பத்தடி விலகலில் பக்கத்துவீட்டு பிரச்சனையை
உண்டோம் உயர்தர விஷங்களை உணவாக உண்டோம்.
கண்டோம் குருட்டுதனமான தீர்ப்புகளை கண்டோம்
பழகினோம் பயந்தே வாழும் வாழ்க்கைக்கு பழகினோம்
விலகினோம் முன்னோர் விட்டு சென்றவிதிகளில் விலகினோம்
முடித்தோம் முழுஉரை இல்லா வாழ்க்கை புத்தகத்தை
இறந்தோம் எதற்கு பிறந்தோமென்று மறந்தோம்..