Vetridam poem by Sureshkumar சுரேஷ்குமாரின் வெற்றிடம் கவிதை

வெற்றிடம் கவிதை – சுரேஷ்குமார்



வெற்றிட கருப்பையில் உருவாகி
வெற்றிட சுவர்களுக்கு இடையில்
வெற்றிடம் விதைத்தறுத்து
வெற்றிட வயிற்றை நிரப்பி
வெற்றிட சுற்றத்தில்
வெற்றிட நிலத்தில் வசித்து
வெற்றிடக்காற்று நிறைந்த
வெற்றிடமெல்லாம் நமதென
நமதையே நாம் நிறைக்க
வெற்றிட மதிப்பறியா
உடல் விட்டு வெளியேறும்
உயிரெனும் வெற்றிடம்!!