Valiyilla Vazhkai Kavithai By Kalai வலியில்லா வாழ்க்கை கவிதை - கலை

வலியில்லா வாழ்க்கை கவிதை – கலை




தூரத்து மருத்துவமனையில்
மலைப் பாதை வரிசையில்
மருத்துவரைப் பார்க்க
உலர்ந்த எலும்பும்
சுருண்ட நரம்பும் உள்ள
கை கால்கள் குடைச்சலில்
குத்திய போதும்
போய் குந்திவிட வில்லை
புண்ணான
கண்கள் வரட்சியால் சுழற்றியடித்ததிலும் சொக்கவில்லை
சதையில்லா இடுப்பெலும்பிலிருந்து
நழுவியும் இறக்கி விட
மனமில்லை
காலிடுக்கில்
எறும்பு கடித்த போதும்
அவளது சின்னக்
குழந்தையை…

***********************
அப்பா நாத்தாங்காலில்
வெதச்ச நெல்லே
மொளைச்சி நமக்கு சோறாகிறது என்பதை அறிந்த
சிறுமிக்கு வந்த ஒரே சந்தேகம்
அம்மா சந்தையில் வாங்கிய உருளைக்கிழங்கும் வெங்காயமும் மொளைத்திருப்பதை பார்த்த அப்பா
ஏன்
அம்மாவைத் தெண்டக்காரினு திட்டிவிட்டு
தூக்கி எறிய சொன்னபோது!