வானத்திற்கென்ன வேலி கவிதை – வசந்ததீபன்
ஆயிரம் ஆயிரம் ப்ளாட் வீடுகள்
எங்கு பார்த்தாலும் கண்கவர் வண்ணங்களில்
இன்னும் பல ஜனங்களுக்கு ப்ளாட் பாரம் தான் கதி
துருப்பிடித்த கத்தி அதிகாரம்
துளையிடும் தோட்டாக்கள் எதேச்சதிகாரம்
திரள் நெருப்பில் கருகும் யாவும்
கடைசிப் படகுக்காரன் போய்விட்டான்
கரையில் தனியாக நிற்கிறேன்
காரிருள் காட்டு விலங்காய்ச் சூழ்கிறது
வீடில்லாதவன் நாடு காக்கப்போனான்
நாடு காக்கப் போனவன்
சுடுகாடு போனான்
சுடுகாடு போனவன் வீடு
சுடுகாடாகிப் போனது
படங்களாகக் காட்டிப் பெண்ணை அசிங்கப்படுத்தினாய்
வார்த்தைகளாக எழுதிப் பெண்ணை மானபங்கப்படுத்தினாய்
சொல்லாடல்களாய்ப் பெண்ணை அவமானம் செய்கிறாயே ஈனப்பயலே
உன் சாதி உனக்கு உதவாது
உன் மதம் உன்னை கடையேற்றாது
மனிதம் உனக்குக் கை கொடுக்கும்
நிலம் நெகிழ்ந்து கிடக்குது
நெஞ்சம் மகிழ்ந்து குதிக்குது
விதைப்பின் காலம்
கழுதை கவிதை சொன்னது
நரி கதை கூறியது
காக்கைகள் சபாஷ் என்றன
குயில் மவுனமாய் அமர்ந்திருந்தது
காக்கைகள் கரைகின்றன
மழைக்காலம்…மழைக்காலம்
பழ வண்டிக்காரன் கூவுகிறான்
பழங்களில் ஈக்கள் மொய்க்கின்றன
பிண ஊர்வலம்.
நனைந்த ஆடு
கொதிக்கும் தண்ணீர்
பசி
ஈரக் காற்று
இலையற்ற மரம்
துணை இழந்த கிளி
நச்சு மழை
காளான் குடை
காலற்ற வெல்வெட் பூச்சி.