Enge Pogiraai Poetry by Poet Vasantha. Book Day And Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam Publication.

எங்கே போகிறாய்? – வ. சு. வசந்தா



எங்கே போகிறாய்?

எங்கே போகிறாய்?
ஏனிந்த அவசரம்!
உண்டாயா , உறங்கினாயா;
கண்டாயா,
கேட்டாயா;
பார்த்தாயா,
பரவசம் கொண்டாயா;
நின்றாயா,
நடந்தாயா;
நெடுந்தூரம் சென்றாயா;
கொடுத்தாயா,
கொள்வினை செய்தாயா;
விதைத்தாயா,
அறுவடை செய்தாயா;
பகைத்தாயா,
பாவம் தீர்த்தாயா;
சிதைத்தாயா,
சிந்தித்தாயா;
மறைத்தாயா,
மனத்துயர் களைந்தாயா;
தேன் கலந்து கொடுத்தாயா;
எங்கே போகிறாய்?
ஏன் இந்த அவசரம்!

வ.சு. வசந்தா
விருகம்பாக்கம்