Emptiness poem by Va.Su.Vasantha வ.சு.வசந்தாவின் வெறுமை கவிதை

வெறுமை கவிதை – வ.சு.வசந்தா



மலர்கள் பூத்துக்குலுங்குகிறது கண்களுக்கு விருந்தாக
எனக்கானது அல்ல
கலகல வளையோசை காதுகளில்
என் கைகளில் இல்லை
நட்சத்திரங்களாக வண்ண வண்ண பொட்டுகள்
எனக்கு ஏற்புடையது இல்லை
மஞ்சளும் மருதாணியும்
மணம் கூட்டும்
மங்கை என்னை பார்க்காது
நலுங்கு வைக்க அலைபாயும்
கைகள்
ஒதுக்கித் தள்ளும் மங்கை கூட்டம்
வாசலில் வந்தால் முகம் சுளிக்கும்
சுற்றமும் நட்பும்
ஆனால்
தென்றல் என்னை தள்ளாது
தாலாட்டும்!
தாய் மண் என்னை வெறுக்காது
அணைத்துக் கொள்ளும்!