வன்முறைக் களமாகும் நம் தமிழ் சினிமா? (Our Tamil cinema is a battlefield of violence) - கு.மணி | நல்ல படங்கள் | வன்முறைக் காட்சிகள்

வன்முறைக் களமாகும் நம் தமிழ் சினிமா? – கு.மணி

வன்முறைக் களமாகும் நம் தமிழ் சினிமா? - கு. மணி "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது கார்ல் மார்க்ஸ் கூற்று. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் ஏதோவொரு விதத்தில் எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகிறது. சுற்றுச்சுழல், பொருளாதாரம் கேளிக்கை, பொறியியல் அறிவியல் மக்களின் பழக்கவழக்கங்கள்…
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை - 2 (Viduthalai Part 2) political movie - https://bookday.in/

“விடுதலை – 2” (Viduthalai Part 2) தொடங்கிய விவாதம்

"விடுதலை - 2" (Viduthalai Part 2) தொடங்கிய விவாதம் விடுதலை - 2 முழுக்க கம்யூனிஸ்ட் கொடிகளால், செயல்களால், சித்தாந்த விவாதத்தில், அழித்தொழித்தல், அரச பயங்கரவாதம் என்று முக்கியமான பொருளைப் பேசுகிறது. படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டதால்,…
விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் | வாத்தியார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் - https://bookday.in/

விடுதலை – 2 (Viduthalai 2) திரைப்படம் பேசும் அரசியல்

விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் பெருமாள் - நல்ல மாணவன், கணவன் வாத்தியார் - நல்ல ஆசிரியர், போராளி மனிதரே மனிதர் சுரண்டும் போக்கு ஒழிய வேண்டும், ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த…
விடுதலை-2 (Viduthalai 2) திரைப்பட விமர்சனம் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் வெளியான திரைப்படம் https://bookday.in/

விடுதலை-2 திரைப்பட விமர்சனம்

விடுதலை-2 திரைப்பட விமர்சனம் - ஆர். பத்ரி அங்குமிங்குமாக சில காட்சிகள் என்றில்லாமல் நேரடியாகவே இடதுசாரி அரசியலை பேசுகிறது விடுதலை.. கைது செய்து கைவிலங்கிட்டு ஒரு இரவு முழுவதும் காட்டில் நடந்து கொண்டே வாத்தியாரும் போலீஸ் டீமூம் பேசும் அரசியல் அடர்த்தியானது,…
அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்

அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்



Inauguration of Arumbu Children's Library: K.Ramesh அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்

சுமார் ஒரு மாதத்துக்கு முன் ஒரு பெரிய இடத்தை பாரதி புத்தகாலயத்துக்காக எடுத்திருக்கிறோம் என்று சொன்ன போது அப்படி ஒன்றும் பெரிதாக எனக்குத் தோன்றவில்லை.  சற்று தாமதமாகத்தான் அதைப் பார்க்கச் சென்றேன்.  உள்ளே நுழைந்ததும் பிரமிப்பு.  இவ்வளவு பெரிய இடமா?  அங்கு ஜரூராக மரவேலை நடந்து கொண்டிருந்தது.  ஆனால் உள்ளுக்குள் ஒரு தயக்கம் ஓடிக்கொண்டே இருந்தது.

பாரதி புத்தகாலயம் முதலில் தொடங்கப்பட்டு தீக்கதிர் அலுவலகத்தின் கீழ் ஒரு சிறு இடத்தில் செயல்படத் தொடங்கியது முதல் அதனுடன் பயணித்து வருபவன் நான்.  பின்னர் என் அலுவலகத்துக்கு அருகிலேயே கடையும், அலுவலகமும் வந்து விடவும், மாலை வேளையில் அங்கு சென்று அட்டெண்டென்ஸ் போட்டு விட்டுத்தான் வீடு திரும்புவது என்பது வழக்கமாகி விட்டது.  என்னை அறியாமலேயே அங்கு நானும் ஒரு ஊழியனைப் போல்தான் என்ற நினைப்பு எனக்கு உண்டு.
கடந்த வாரம் புதன்கிழமை அலுவலகம் சென்றிருந்த போது தோழர் நாகராஜன் வரும் அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளன்று புதிய கடையைத் திறக்கப் போவதாகச் சொன்னார்.  எனக்கு அப்போதும் நம்பிக்கையில்லை.  வேலையை சீக்கிரம் முடிப்பதற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன்.  ஆனால் அவர் சீரியாசகத்தான் சொன்னார் என்பது புரிந்த போது மீண்டும் பிரமித்தேன்.  இரண்டு நாட்களில் எல்லாம் முடிய வேண்டுமா?  உடனே என்னிடம் பொன்னாடைக்கு ஏற்பாடு செய்யுமாறு சொல்ல, நானும் ஏற்பாடு செய்தேன்.  அடுத்த நாள் மாலை சென்ற போது, என்னிடம் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்.
பாரதி புத்தகாலயத்துக்காக சிறுவர் நூல்களை எழுதியவர்களைக் கவுரவிக்கப்போகிறோம் என்றும் அதற்கான பட்டியல் தயார் என்றும் சொன்னார்.  நான் வலுக்கட்டாயமாக நுழைய, அவரும் எழுத்தாளர்களை அழைக்கும் வேலையை என்னிடம் கொடுத்தார்.  வெள்ளி முழுவதும் நான் அலுவலகத்தில் சங்கப் பணியில் மும்முரமாக இருந்து விட்டு அன்று மாலை சென்ற போது, நூலரங்கம் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் புதுமாப்பிள்ளை காளத்தி வீட்டுக்குக் கூடப் போகாமல் தனது விஸ்வரூபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்.  தயார் செய்யப்பட்டிருந்த பட்டியலில் இருந்த எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர் படங்களைத் தயாரித்திருந்தார்.  உடனடியாகப் படம் இல்லாதவர்களை அழைத்துப் படம் கேட்குமாறு என்னிடம் கூறினார்.  என்னால் முடிந்த படங்களை எடுத்துக் கொடுத்தேன்.
அன்றும், அடுத்த நாளும் என்னிடம் கொடுத்த பட்டியலின்படி எழுத்தாளர்களை அழைக்க, பெரும்பாலானோர் ஏற்கனவே நாகராஜனோ, ஜெயசீலியோ அழைத்து விட்டதாகக் கூறினார்கள்.  இவ்வளவு வேலைக்கும் நடுவில் அவர்கள் இதையும் செய்திருக்கிறார்கள்.  சற்று வெட்கத்துடன் நானும் அவர்களை அழைத்தேன்.
எழுத்தாளர்களுக்கு நினைவுப் பரிசும் கொடுக்கப் போவதாகச் சொல்லி மீண்டும் என்னைத் திகைப்பில் ஆழ்த்தினார் தோழர். நாகராஜன்.  இருப்பது இரண்டு நாள்.  இதில் எப்படிச் செய்வது என்று நான் கேட்க, ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்றார்.  அடுத்த நாள் சென்றபோது, அந்த மார்க்கம் ஏற்கனவே திறந்து, அவரே நேரில் சென்று ஆர்டர் கொடுத்திருக்க, தோழர் பாலாஜி அவற்றை எடுத்தும் வந்து விட்டார்.  ஞாயிற்றுக்கிழமை காலையில் பார்த்தால், அவற்றில் பெயர் முதற்கொண்டு ஒட்டி பாரதி புத்தகாலயத் தோழர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.

இவை அனைத்துக்கும் இடையில் திறப்புவிழாவின் முக்கிய அழைப்பாளர்களையும் அழைத்து, அழைப்பிதழ் அனுப்பி. . .!  அதிலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று, அவரது பேரன் கோபாலகிருஷ்ண காந்தி திறந்து வைக்கிறார் எனும்போது ..!

ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு அங்கு சென்றபோது பாரதி புத்தகாலயத் தோழர்கள் எப்படிப் பம்பரமாகச் சுழன்றார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஏற்கனவே கூட்டம் கூடத் தொடங்கி இருந்தது. சிறுவர்களும், சிறுமியர்களும் அங்கும் இங்கும் ஓடிப் புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருக்க, அப்பாக்களும், அம்மாக்களும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். உண்மையில் அவர்கள் ஏற்கனவே புத்தக விற்பனையைத் திறந்து வைத்து விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
Inauguration of Arumbu Children's Library: K.Ramesh அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்Inauguration of Arumbu Children's Library: K.Ramesh அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்
சரியாகப் பத்தரை மணி அளவில் அரங்கம் முழுதும் நிறைந்து இடம் பற்றாத நிலை ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில் முக்கிய அழைப்பாளர்கள் கோபாலகிருஷ்ண காந்தியும், இயக்குநர் வெற்றிமாறனும் வந்து விட, முழு உற்சாகத்துடன் திறப்புவிழா தொடங்கியது. வாசலில் முதலில் நூலரங்கை கோபாலகிருஷ்ண காந்தி திறந்து வைக்க, உள்ளே டிஜிட்டல் ஸ்டூடியோவை இயக்குநர் வெற்றிமாறன் திறந்து வைத்தார். (இந்த நிகழ்வை அருகில் நின்று கொண்டிருந்த நான் படம் பிடித்தேன். அதுதான் பகிரப்பட்டிருக்கிறது. என்னை நானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன்.)
எழுத்து அசுரன் ஆயிஷா நடராசன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த அரங்கம் ஒரு கனவு என்றும் அதை இன்று தோழர் நாகராஜன் நனவாக்கி இருக்கிறார் என்றும் சரியாகக் குறிப்பிட்டார் ஆயிஷா. மதுரை புத்தகத் திருவிழாவில் ஒரு சிறுவன் கேட்ட கேள்விதான் இதற்கு விதை என்பதையும் விளக்கினார். தொடங்கிய காலத்திலிருந்து சிறிது சிறிதாக வளர்ச்சி பெற வைத்து இன்று இந்த அளவுக்குக் கொண்டு வந்த தோழர் நாகராஜனுக்குச் சால்வை அணிவித்துப் பாராட்டினார் ஆயிஷா. நமக்கு இது மனதில் இருந்தாலும், அதை அறிந்து நடைமுறைப்படுத்திய ஆயிஷா நடராஜனுக்கு நன்றி.
அடுத்தபடியாக இன்றைய டிஜிட்டல் உலகில் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதையும், அதை மாற்ற வேண்டிய நிலை இருப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசினார் வெற்றிமாறன். குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்றால், பெற்றோர் முதலில் அதைச் செய்ய வேண்டும், அதைப் பார்த்துத்தான் பிள்ளைகளும் கற்கும் என்பதைச் சரியாகச் சொன்னார். பின்னர் பேசிய கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கமும் இந்த முயற்சியை மனம் நிறையப் பாராட்டினார்.
முதல் விற்பனையைச் சிறுவர் புத்தகங்களைக் கொடுத்து வெற்றிமாறன் தொடங்கி வைக்க, உடனடியாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்துப் பெற்றுக் கொண்டார் திரு சேது சொக்கலிங்கம்.
Inauguration of Arumbu Children's Library: K.Ramesh அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்
பின்னர் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் கவுரவிக்கும் நிகழ்வு தொடங்கியது. மிகுந்த உற்சாகத்துடன் அனைவரும் கலந்து கொண்டனர். அதிலும், காந்தி பிறந்தநாளன்று அவரது பேரன் கையால் சால்வை பெறுவது என்பது எவ்வளவு பெரிய பேறு! வெற்றிமாறனின் கையால் நினைவுப் பரிசு. நினைவுப் பரிசு பேனா நிப்பைப் போலவே செய்யப்பட்டிருந்தது இன்னொரு சிறப்பு. மீண்டும் ஒரு சபாஷ் தோழர்.நாகராஜன். ஒரே நாளில் அதை மட்டுமின்றி, அதன் கீழ் பெயர் முதற்கொண்டு ஒட்டித் தயார் செய்திருந்தது பெருமகிழ்ச்சி. நானும் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டேன் என்பதையும் சொல்ல வேண்டுமா?Inauguration of Arumbu Children's Library: K.Ramesh அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்
நிகழ்ச்சிக்கு இடையில், இரண்டு சிறுவர்கள், லவன், குசன் ஆகியோர், மிகச் சிறப்பாக, கவிதை மழை பொழிய, கூட்டத்தினர் ஆர்ப்பரித்து, அவர்களைப் பாராட்டு தெரிவித்தனர்.Inauguration of Arumbu Children's Library: K.Ramesh அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்

அவர்கள் இருவரும், விரைவில், கவிதை புத்தகம் தொகுப்பு வெளியிடப்படுவதாக சொன்னது. மேலும், உற்சாகம் அளித்தது, தோழர் இளம் பாரதி, எழுத்தாளர் அவர்களின், முதல்வன். அரும்பு என்ற, பெயரை, காலையில் தெரிந்தால் கூட, அவசரமாக playல் செய்து கொண்டு வந்திருந்தது. மிகவும் சிறப்பாக இருந்தது. அது மேலே மாட்டப்பட்டிருந்தது. நான் இளம் பாரதியிடம் அதை frame போட்டு, இங்கு மாட்ட வேண்டும் என்று, என் கோரிக்கையை முன் வைத்தேன்.

தோழர் மாலதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
விழா முடிந்தாலும், கூட்டம் கலையவில்லை. வந்திருந்த எழுத்தாளர்களும், குழந்தைகளும், பெரியவர்களும், மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு செல்ஃபிக்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர். நானும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதியுடம் நின்று படம் எடுத்துக் கொண்டேன். தோழர் இளங்கோ, என்னுடைய சிவப்பு நிற ஜிப்பாவைப் பார்த்துப் புகழ்ந்து விட்டு என்னுடன் நின்று படம் எடுத்துக் கொண்டார். (அதை அன்றுதான் ரிலீஸ் செய்திருந்தேன்)
வெற்றிமாறன் பேசும்போது, விழியன் எழுதிய மலைப்பூவைப் புகழ்ந்து சொன்னார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விழியனிடம் நான் அப்ளிகேஷன் போட, மகிழ்வுடன் அனுமதியளித்தார் அவர். அது சிறப்பாக அமைய முயல வேண்டும்.
அனைவர் மனமும் நிறைந்து அமர, பாரதி புத்தகாலயம் சார்பில் வயிறும் நிறைய உணவு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். ஆனால் நான் கிளம்ப வேண்டியிருந்ததால், மனமின்றி விடைபெற்றுக் கிளம்பினேன்.
பாரதி புத்தகாலயம் மேலும் ஒரு மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது. நாமும் இணைந்து பயணிப்போம்.
Inauguration of Arumbu Children's Library: K.Ramesh அரும்பு சிறுவர் நூலரங்கம் திறப்பு விழா: கி.ரமேஷ்
– கி.ரமேஷ்
தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




இசைமேதை இளையராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து வந்திருக்கிறேன். அவரின் குரல் சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. எனக்கு அவர் பாடிய பாடலென்றால் உயிர். அந்தக் குரல் அத்தனை இதமானதாகத் தோன்றும் எனக்கு. வைரமுத்து அவர்களின் கட்டுரை வழியாகவோ பாரதிராஜா அவர்களின் வாழ்க்கை சரிதத்திலிருந்தோ இளையராஜா பற்றிய செய்தி வரும்போது லயித்து விடுவேன். அதற்காக எனக்கு பாரதிராஜா வைரமுத்து இருவரையும் பிடிக்காதென்று அர்த்தமில்லை இந்த இருவரையுமே எனக்கு இளையராஜா அளவுக்குப் பிடிக்கும்.

இளையராஜா போல் தமிழை மிக சரியாக உச்சரித்துப் பாட வேறு ஒருவரைத் தேடுவது கடினம். மொழி இலக்கணத்திலும் அவருக்கு ஞானம் அதிகம். “மயிலு” எனும் படத்தில் தான் அவர் இசையில் முதன்முதலாக பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தில்,

“நம்மலோட பாட்டுத்தான்டா
ஒலகம்பூரா மக்கா
கண்ட பாட்ட நாங்க கேக்க
காணப் பயறுத் தொக்கா”

என்றொரு பாடல் எழுதியிருப்பேன். அதில் முதலில் ‘காணப் பயிரு’ என்று தான் எழுதியிருந்தேன், அவர் தான் எனக்கு “காணப் பயறு” என்பதுதான் சரியென்று கற்றுத் தந்தார். அதே போல் அவர் கொடுக்கும் தத்தகாரம் மிக எளிமையாக இருக்கும். அவரின் தத்தகாரத்திற்கு யார் வேண்டுமானாலும் பாடல் எழுதிவிடலாம். பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் தத்தகாரத்தை தரும்போதே எழுபது சதவீத வேலையை முடித்து விடுவார்கள் ஆனால் இளையராஜா அவர்கள் மெட்டைத தருகிபோது மிக மிக ராவாக இருக்கும், ஆனால் அதன் பின் அந்தப் பாடலை “அவனா இவன்” என்பதுபோல் அசத்திவிடுவார். அவர் படத்தில் ஒரு பாடல் எழுதிவிட்டால் போதும் ஒருவன் எப்படி மெட்டுக்கு பாடல் எழுதுவது என்பதை கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம் அவர் மெட்டுப் போடுகிற பெரும்பாலான பாடல்களின் பல்லவியை அவரே எழுதிவிடுகிறார் என்பது அவர் மேலுள்ள குற்றச்சாட்டு எனினும் அவர் எழுதியதற்கு மேலான பல்லவி வரிகளை கவிஞர்கள் எழுதிவிட்டால் அதை ஏற்க மறுப்பவரும் இல்லை.Paadal Enbathu Punaipeyar Webseries 23 Writter by Lyricist Yegathasi தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

அவர் இசையில் கடைசியாக நான் எழுதிய பாடல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் “விடுதலை” எனும் படத்திற்கு. அவர்மேல் திரைப்படத்துறையில் ஒரு பார்வை இருக்கிறது அவர் ரொம்பவும் கண்டிப்பானவர் என்பார்கள். ஆனால் நான் பணிசெய்த குறைந்த படங்களின் அனுபவத்தில் அவரைப்போல் ஒரு எளிமையான இலகுவான மனிதரைப் பார்க்க முடியாது என்பதுபோல் இருந்தது. அவரருகே அமர்ந்துவிட்டால் அத்தனை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவ்வளவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படித்தான் இயக்குநர் பாலா அவர்கள் மீதும் ஒரு பார்வை உண்டு மற்றவர்களுக்கு ஆனால் நான் அவரோடு இரண்டொரு பட வேலைகளில் பாட்டுக்காக உரையாடிக்கொண்டிருக்கும் போது நான் அதுவரை அவர்மேல் வைத்திருந்த அத்தனை தப்பிதமான பிம்பங்களும் உடைந்துபோயின. இயக்குநர் பாலா மிகவும் மென்மையானவர். நேர்மையானவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பிறரை மரியாதையோடு நடத்துகிற மாண்பு மிகப் பெரியது.

என் சிறு பிராயத்தில் இளையராஜா அவர்களின் பேட்டி ஒன்றை தூர்தர்ஷனில் பார்த்தேன். அப்போது நிருபர் கேட்ட கேள்வியும் பதிலும் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. நீங்கள் எப்படி இசையை உருவாக்குகிறீர்கள்? நான் எதையும் உருவாக்குவதில்லை இந்த பூமி இசையால் நிரம்பியிருக்கிறது. பெய்யும் மழைத் தூறலிலும் ஒரு ரிதம் இருக்கிறது அதை எப்படி இசையாக்குவது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். கிராமத்திலிருந்து வந்த நீங்கள் எப்படி நகரத்து வாழ்வோடு ஒத்துப் போனீர்கள் என்பது போன்ற ஒரு கேள்வியை நிருபர் எழுப்புமுன் இடை நிறுத்தி, 100 வருடங்களுக்கு முன் சென்னையும் கிராமம் தான் என்று சின்னதாகச் சினந்தார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு எனக்கு அப்படி ஒன்று இல்லை, நான் இப்போது உங்களோடு பேசும் நேரத்தே வேண்டுமானால் எனது ஓய்வு நேரமென்று சொல்லலாம் என்றார். இப்படியாக அப்போதைய இளையராஜா அவர்களின் தீர்க்கமான எண்ணத்திற்கும் செயல்பாட்டிற்கும் இப்போதிருக்கும் இளையராஜாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவரின் முடிவும் செயல்பாடுகளும் அவரது உரிமை என்றாலும் அவரை விமர்சனம் செய்யும் நண்பர்கள் அனைவரும் அவரின் இசை ரசிகர்களே. அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் காதலை அவர் உணரவேண்டும் என்பதே என் கருத்து.

Paadal Enbathu Punaipeyar Webseries 23 Writter by Lyricist Yegathasi தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிநான் இரண்டாவதாக இயக்கிய “அருவா” எனும் திரைப்படத்திற்கு நண்பர் ஜெய கே தாஸ் தான் இசை. ஆறு பாடல்களை இழைத்துத் தந்துள்ளார். அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளராக உலகம் அறிந்து கொள்ள இந்தப் படம் வெளியாவது அவருக்குத் துணையாக இருக்குமென நம்புகிறேன். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு காதல் பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்கள் பாடினார்கள். அப்போது இசையையும் பாடல் வரிகளையும் வெகுவாகப் பாராட்டினார். அதில் தந்தையின் அன்பைச் சொல்லுகிற ஒரு பாடல். இந்தப் பாடலை இசைமேதை இளையராஜா அவர்கள் பாடினால் நன்றாக இருக்குமென யோசித்தோம் ஆனால் பிறர் இசைக்கும் இசையில் பாடமாட்டார் எனவும் விதிவிலக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மட்டும் ஒரு படத்தில் பாடியிருப்பதாகவும் கூறினார்கள். ஆனாலும் எனக்கு அவர் குரல் வேண்டும் என்பதால் அவர் குரலையொத்த கங்கை அமரன் அவர்களை அழைந்துப் பாடவைத்தோம் மனம் நிறைவடைந்தது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் தோழர் வேல ராமமூர்த்தி அவர்கள். இந்தப் படத்தின் டப்பிங் பேச வந்த அவருக்கு அந்தப் பாடலை காட்சியோடு பார்த்தவர், நான் எத்தனை படம் பண்ணியிருந்தாலும் எனக்கு இது வேற ஒரு படம் எனச்சொல்லி என்னைக் கட்டியணைத்தார். காரணம் எல்லா படங்களிலும் வேல ராமமூர்த்தி கடுங் கோபக்காரர் என் படத்தில் கனிவான அப்பா.

பல்வவி:
காசு பணமெல்லாம் சும்மா – இவர்

கர்ப்பப் பை இல்லாத அம்மா (2)

எத்தனை முகங்கள்
யாருமற்று அலைய
தண்ணீர் துளிகள் இங்கு
காற்றடித்துத் தொலைய

பிடித்து நடந்து செல்ல
விரல் தரும் மனிதருண்டோ
இவர் போல் அன்பு கொள்ள
கடவுள் உண்டோ

சரணம் – 1
செம்மறி ஆட்டுக்கெல்லாம்

மேய்ப்பவனே அப்பா
பார்வையற்ற மனிதனுக்கு
ஊன்றுகோல் அப்பா

நிலவு அம்மா என்றால்
சூரியன் தான் அப்பா
அன்பை நட்டு வைத்தால்
சொல்லுங்களேன் தப்பா

பாருங்களேன் மாலைக்குள்ள
பல பூவிருக்கும் – அவை
அத்தனையும் கட்டிக்கொண்டு
ஒரு நூலிருக்கும்

சரணம் – 2
பூக்கள் வாசனையை

பூட்டி வைப்பதில்லை
வேர்களை பூமியிங்கு
விட்டுப் போவதில்லை

சொந்த பந்தம் எல்லாம்
சொல்லில் மட்டும் இல்லை
விழுதாடும் அத்தனையும்
ஆலமரப் பிள்ளை

கத்துகிற பறவைக்கெல்லாம்
ஒரு பேர் இருக்கும்
ஒத்தையடிப் பாதைக்கெல்லாம்
ஓர் ஊர் இருக்கும்