Vignesh Kumar Poetry Marangal (Trees) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

மரங்கள் – விக்னேஷ் குமார்



மரங்களை எனக்கு நன்கு தெரியும்;
அவற்றிற்கும் என்னை.
மேலிருந்து பார்ப்பதுதானே மரங்களின் வேலை.
தினமும் நான் பார்க்க நிறைய மரங்கள்.
வீட்டெதிரேயுள்ள புங்கை மரம்,
பக்கத்து வீட்டு தோட்டத்திலுள்ள மாமரம்,
தெருக்கோடியிலுள்ள அரசமரம்,
நூலகத்தின் வேப்பமரம்,
நான்கடுக்கு மாடியுயரத்திற்கு இணையாக நிற்கும்
பெயர் தெரியாத தடித்த மரம்.
இப்படிப் பல மரங்கள் எனக்கு நன்கு அறிமுகமானவை.
ஒவ்வொரு முறையும் இந்த மரங்களை
தலை நிமிர்ந்து பார்க்கும்போது
அவை பேசத் தொடங்கிவிடுகின்றன.
அர்த்தமற்ற பேச்சுகள்.
சிலசமயங்களில் அமைதியாக பார்த்து நிற்கும்;
அவற்றில் பல அர்த்தம் நிறைந்திருக்கும்.
எப்போதாவது அரிதாக
ஒரு தழுவல் என்னை வாரியெடுத்து அணைத்துக் கொள்ளும்.
அப்போதெல்லாம் என்னுள் முளைத்துவிட்ட மரம் ஒரு கிளை விடும்.

விக்னேஷ் குமார்

Vignesh Kumar Poetry Thagam in Tamil Language. Book Day (Website) And Bharathi TV (YouTube) Are Branches Of Bharathi Puthgakalayam.

விக்னேஷ் குமாரின் கவிதை *தாகம்*

தாகம் ஒவ்வொரு மாதமும் , காமம் தலைக்கேற அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்கிறாள் தீயில் இறக்கி எரித்துவிடாமலிருக்க கோலமிடுகையில் தெருநாய்களின் ஊடுறவு நெருப்பில் குளிர்காய்கின்றன கல்லை விட்டெறிந்து ஆண்டாளோடு பாசுரம் பாடச் சென்று விடுகிறாள் வெடுக்கென கல்லால் அடித்துக் கொன்றவர்களைத் தெரிந்திருந்தது…
Vignesh Kumar Poetry Sutri Eppothum Nangu Pallikal. Book Day Website And Bharathi TV are Branch Of Bharathi Puthakalayam.

சுற்றி எப்போதும் நான்கு பல்லிகள் – விக்னேஷ்குமார்

சுற்றி எப்போதும் நான்கு பல்லிகள் வெளிறிய, கரும்புள்ளியோடு, தடித்த, வால் துண்டிக்கப்பட்ட என நான்கு பல்லிகள் டியூப் லைட் பின்னாலும் சாமி படங்களுள் ஒளிந்தும் கடிகாரத்தில் உறவாடியும் குடும்பம் நடத்துக்கின்றன வீட்டின் ஒவ்வொரு கதவை திறந்து மூடும் போதும் தெறித்து ஓடுகின்றன;…
காலமும் காத்திருப்பும்..! – தேடன்

காலமும் காத்திருப்பும்..! – தேடன்

காலமும் காத்திருப்பும்! ******************************** பிரிதொரு யுகத்தில் எரிகல் வீச்சுக்காய் நிலைக் குப்புற விழுந்துவிட்ட மலைகளின் பள்ளங்களில் செங்குத்தாய் வழிந்தொழுகி ஒழுகி நிற்கும் காலம். உறைநிலையின் இருப்பிலிருக்கும் டைனோசர் முட்டை நெருப்புக் கோழியின் கால் தடம் அணில்களின் எலும்புக் கூடுகளென அனைத்திலும் எண்ணெய்…
நூல் அறிமுகம்: நா.முத்துக்குமாரின் *வேடிக்கை பார்ப்பவன்* –  விக்னேஷ் குமார்

நூல் அறிமுகம்: நா.முத்துக்குமாரின் *வேடிக்கை பார்ப்பவன்* – விக்னேஷ் குமார்

நூலின் பெயர்: வேடிக்கை பார்ப்பவன்  ஆசிரியர்: நா. முத்துக்குமார் பதிப்பகம்: விகடன் பிரசுரம் பக்கங்கள்: 231 விலை: ₹230/-    வேடிக்கை பார்ப்பவனை நா.மு தன் வாழ்க்கை சரிதமாகவே வடிவமைத்துள்ளார்.    வாரா வாரம் விகடனில் வேடிக்கை பார்ப்பவன் என்ற தலைப்பில்…