ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்  நாவலின் இந்தியப் பதிப்பு கட்டுரை – விஜயன்

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலின் இந்தியப் பதிப்பு கட்டுரை – விஜயன்




எதற்கெல்லாம் இந்திய அறிவியல் – தொழில்நுட்ப அறிஞர்களின் நேரத்தை பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு ஒரு வரையரையே இல்லை என்பதை இச்செய்தியைப் https://www.telegraphindia.com/india/ayodhya-sun-to-shine-on-ram-with-science/cid/1899477  பார்த்ததும் புரிந்து கொள்ளலாம். ஆம் அயோத்தியாவில் கட்டப்படும் ராமர் கோவிலில் அமைக்கப்பட உள்ள ராமர் சிலையின் நெற்றியில் அவரது பிறந்த தினமான ராமநவமி தினத்தன்று (பங்குனி மாசம் அம்மாவசைக்குப் பிறகு வரும் 9ம் நாள்) சூரிய ஒளிக் கற்றை அவரது நெற்றியில் விழும் வகையில் ஒரு சிறப்பு உபகரணத்தை அமைக்குமாறு Indian Institute of Astrophysics, Interuniversity center for Astronomy and Astrophysics, Council for Scientific Researchச் சேர்ந்த Central Building Research Institute ஆகிய நிறுவனங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளன. இதில் Indian Institute of Technology இப்போதைக்கு விடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் சேர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. Servomotor உள்ளிட்ட Opto-Mechanical arrangement ஐ Indian Institute of Technology தான் வடிவமைக்கும்.

இதை நடைமுறைப்படுத்த பல்வேறு சவால்கள் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமானதுதான். முதலாவதாக ராமநவமி என்பது சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தி குறிக்கப்படும் நாள். சந்திர நாட்காட்டியிலோ ஒரு வருடத்திற்கு 346+ நாட்களே உள்ளன. ஆனால் பூமி சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 365+ நாட்கள். இதை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டது சூரிய நாட்காட்டி. சூரிய நாட்காட்டி தினங்களையும் சந்திர நாட்காட்டி தினங்களையும் ஒருமைப்படுத்த சமன்பாடு எழுதி அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வரும் ராமநவமிகளை ஆங்கில நாட்காட்டியில் அதாவது சூரிய நாட்காட்டியாக மாற்றும் கணிணி நிரலை உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக பூமியின் அயன சுழற்சி (Precision). பூமியின் அச்சானது பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தில் 23.5 பாகை சாய்ந்திருக்கிறது. அத்தோடு நிற்காமல் இந்த சாய்மானமே அதே 23.5பாகை கோணத்தில் ஆட்டம் போடுகிறது. நேராக நின்று சுழலும் பம்பரம் நிற்கும் போது ஆட்டம் போடுமே அதேபோல் பூமியின் அச்சும் அதன் அடிப் புள்ளி ஒன்றில் நின்று அந்த அச்சின் உச்சிப்புள்ளியானது அதே 23.5 பாகையில் வட்டமடிக்கிறது. இதை அயன சுழற்சி என்பார்கள். இது ஒரு ஆட்டம் ஆட 26000- ஆண்டுகள் ஆகும். இதன் விளைவாக 13000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவகாலமும் தலைகீழகாக மாறிவிடும். அதாவது குளிர்காலமும் கோடைக்காலமும் தலைகீழாக மாறிவிடும். அயன சுழற்சியால் ஏற்படும் மாற்றமும் பூமியில் விழும் சூரிய கதிர்களின் கோணத்தை மாற்றும். இதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

மூன்றாவதாக ராமர் கோவிலுள்ள ராமர் சிலையின் நெற்றியின் இருப்பிடம் (Latitude, Longitude, Distance from the center of earth) கணக்கிட்டு அதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

நான்காவதாக, பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையான வட்டப்பாதையல்ல. நீள்வட்டப்பாதையாகும். ராமநவமி தினமானது இந்த நீள்வட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புள்ளியில் வரும். இதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

சூரியனின் கதிர்களை ஓரு வில்லைகள் மூலம் இணைக்கதிர்களாக மாற்றி ஒரு குழி ஆடியில் விழச் செய்ய வேண்டும். குழி ஆடியிலிருந்து எதிரொளிக்கப்படும் கதிர்களை வில்லைகள் மூலம் ராமர் நெற்றியில் குவியச் செய்ய வேண்டும். இது சாத்தியம்தான். இதற்குப் பிறகுதான் பிரச்சனையே. சூரிய நாட்காட்டிக்கும் சந்திர நாட்காட்டிக்கும் உள்ள இடைவெளியையும், அயன சுழற்சியை கணக்கில் எடுத்து, பூமியின் சுற்றுப்பாதையில் நாமநவமி வரும் புள்ளியையும் கணக்கில் எடுத்து, ராமர் சிலையின் நெற்றிப் பொட்டின் இருப்பிடத்தையும் கணக்கில் எடுத்து ஒரு கணிணி நிரல் எழுத வேண்டும். அதை ஒரு குறுங்கணிணியில் ஏற்ற வேண்டும். நிரலின் கணக்கீட்டு முடிவுப்படி குழியாடியானது அதன் மையப்புள்ளியில் மையமாக வைத்து சுழற்றும் மின்மோட்டாருடன் குழிஆடியை இணைக்க வேண்டும். கணிணி நிரலின் கட்டளைப்படி மின்மோட்டார் இயங்கி குழியாடி சுழன்று கணக்கீடு சொல்லும் இடத்தில் நிற்கவேண்டும். அடுத்தது கணிணிநிரல் கொண்டு மாற்றம் செய்யும் Servomotor என்ற உபகரணமானது ஒளிவாங்கி வில்லைகளின் தூரத்தையும் எதிரொளி வில்லைகளின் தூரத்தையும் மாற்றம் செய்யும். வில்லைகளின் நகர்த்தலையும் குவியாடியின் சுழற்சியையும் உள்ளடக்கிய Opto-Mechanical arrangementஐ கணிணியுடன் இணைக்க வேண்டும். அதை ஏற்கனவே நிர்ணயித்த இடத்தில் பொருத்த வேண்டும். இந்தப் பணிகளைத்தான் இந்த மூன்று அறிவியல் நிறுவனங்களும் செய்யப் போகிறது.

இது தேவையா என்பதுதான் எனது கேள்வி. அறிவியல் அறிஞர்களையும் தொழில்நுட்ப அறிஞர்களையும் ஆக்கபூர்வமான வேலைகளுக்கு பயன்படுத்துவதற்கு பதில் எதற்கும் பயன்படாத இந்த விஷயத்தை செய்வது ஏன்? ராம நவமி தினத்தன்று சூரியக்கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் படும் போது பக்திப்பரவத்திலிருக்கும் பக்தர்கள் சூரிய ஒளியானது ராமர்சிலையிருந்து கிளம்பிச் செல்கிறது என்றே முடிவெடுப்பார்கள். இதை வைத்து பிரசாரம் செய்து ராமர் அற்புத சக்தி படைத்தவர், அவர் சிலையில் கடவுள் குடியிருக்கிறார் எனவே அவரது‘ பிறந்த நாள் அன்று நெற்றியிலிருந்து ஒளியை உமிழ்கிறார் என்று பிரசாரம் செய்ய இது பயன்படும். ஏராளமான வீடியோக்கள் எடுத்து வாட்ஸ்அப்பில் சுற்றுக்கு விட்டுவிடலாம்.

டான் பிரௌன் எழுதிய ஏஞ்சல் அண்ட் டெமான்ஸ் நாவலில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்டிகனின் “அற்புத சக்தியை“ நிலை நாட்டி, சரிந்து வரும் வாட்டிக்கன் சந்தையை நிமிர்த்தி நிறுத்த போடும் திட்டத்தை அதன் கிளைமாக்ஸில் அற்புதமாக வர்ணித்திருப்பார் அதேபோல்தான் ராமர் சந்தையை என்றென்றும் நிலைத்திருக்கவும் அறியாமையைப் பரப்பவுமே இந்த தொழில்நுட்பங்கள் பயன்படப்போகின்றன. எனவேதான் இந்திய நாட்டின் முன்னணி அறிவியல் அறிஞர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

– விஜயன்

2022 Nobel Prize in Medicine or Physiology Article written by Vijayan. மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான 2022ம் ஆண்டு நோபல் பரிசு

மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான 2022ம் ஆண்டு நோபல் பரிசு



2022 Nobel Prize in Medicine or Anatomy  Article written by Vijayan. மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான 2022ம் ஆண்டு நோபல் பரிசு

மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு சற்று முன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசை பெற்றவர் ஸ்வண்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மரபணுவியலாளர். இவரது ஆய்வுகள் பேலியோஜெனோமிக்ஸ் (Paleogenomics) என்ற தனியான ஒரு அறிவியல் புலத்தை தோற்றுவித்திருக்கிறது. தமிழில் பண்டையமனித மரபணுவியல் எனலாம். இவர் செய்த ஆய்வுகளுக்கு செல்லும் முன் மரபணுவியல் பற்றிய ஒரு எளிய அறிமுகத்துடன் துவங்குவோம், மரபணுவியல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது எனலாம். ஒவ்வொரு உயிரினத்தின் வாரிசுகளிடம் பெற்றோர்களின் ஜாடை எப்படி இருக்கிறது என்ற கேள்வியை ஆய்வு செய்யத் துவங்கியதால் இந்த துறை உண்டானது. இருபதாம் நூற்றாண்டில் அது தாவிப்பாய்ச்சல் முன்னேற்றம் கண்டது. பெற்றோர் உடற்கூறு செய்திகள் எப்படி பிள்ளைகளிடம் செல்கிறது என்ற ஆய்வில் அதற்கு காரணமான உடற்கூறை தேடும் வேட்டையுடன் இது துவங்கியது. இறுதியில் உயிரினத்தில் செல்களுக்குள் உள்ள ஏதோ ஒரு பொருளில் ஒளிந்திருக்கிறது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.

ஒவ்வொரு உயிரினமும் செல்களால் கட்டப்பட்டவை. செல்களல்லாத உயிரனங்களும் உண்டு (உம் வைரஸ்கள்) செல்களுக்குள் செல் கரு இருக்கிறது. அது சிறிய ஜவ்வால் மூடப்பட்டிருக்கிறது. செல்லுக்கு வெளியே மைட்டோகான்டிரியா என்ற மூலக்கூறுகள் உள்ளன. அத்துடன் ரைபோசோம் என்ற பெரிய மூலக்கூறுகளும் செல்லுக்குள் உள்ளள. இவை அனைத்தும் ஒரு திரவத்தில் மிதக்கின்றன. செல் ஒரு ஜவ்வால் மொத்தமாக மூடப்பட்டிருக்கிறது. செல்லுக்குள் உள்ள மற்ற உறுப்புகளை இப்போது புறக்கணிப்போம்.

2022 Nobel Prize in Medicine or Anatomy  Article written by Vijayan. மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான 2022ம் ஆண்டு நோபல் பரிசு

செல் கருவிற்குள் டிஎன்ஏ என்ற மூலக்கூறு இருக்கிறது இதுதான் மரபுச் செய்திகளை தாங்கி நிற்கும் மரபணுவாகும். மிகபிரம்மாண்டமான மூலக்கூறாகும். இது அமினோஅமிலங்களால் கட்டப்பட்ட மூலக்கூறாகும். குறிப்பாக நான்குவகை அமினோ அமிலங்களால் ஆனது. இவற்றை A, T, C, G என்ற எழுத்துக்களால் குறிக்கலாம். இவை சுழலேணி வடிவத்தில் அடுக்கப்பட்டுள்ளன. ஏணியின் நெடுக்கு கம்பு சர்க்கரை மூலக்கூறால் ஆனது. படிகள் அமினோ அமிலங்களால் ஆனது. ஒவ்வொரு படியும் பேஸ் என்று அழைக்கபடுகிறது. Aயும் Tயும் மட்டுமே இணைந்து ஒரு படி உருவாக முடியும் அதேபோல் Cயும் Gயும் இணைந்து ஒரு படி உருவாக முடியும், மனித செல்லுக்குள் இருக்கும் மரபணுவில் மொத்தம் 300 கோடி படிகள் உள்ளன. இதே போன்று மிட்டோ காண்டிரியா என்ற மூலக்கூறும் மரபணுச் செய்தியை தாங்கி நிற்கும் மூலக்கூறாகும். இதில் 16.500 படிகள் உள்ளன.

மிட்டோ காண்டிரிய தாயிடம் இருந்து மட்டுமே வரமுடியும் ஏனெனில் தாயின் கருமுட்டைக்குள் விந்தணுசெல்லும் போது அதன் செல்கருவில் உள்ள டிஎன்ஏ மட்டுமே செல்கிறது. தாயின் செல்லில் உள்ள இதர பொருட்கள் அப்படியே குழந்தைக்கு வருவதால் மிட்டோ காண்டிரியாவும் தாயிடமிருந்து மட்டுமே வரமுடியும். இதேபோல் கருவிற்குள் இருக்கும் டிஎன்ஏ பல மடிப்புகளாக மடித்து வைக்கப்படிருக்கிறது. மடிப்புகள் அடிப்படையில் கணக்கிட்டால் அது 23 ஜோடி மடிப்புகளை மனித டிஎன்ஏ கொண்டிருக்கும், இந்த மடிப்புகள் குரோமோசோம் என்று அழைக்கப்படுகிறது. எளிய புரிதலுக்காக விஷயங்களை மிகவும் குறுக்கியுள்ளேன். விஷயம் இன்னும் சிக்கலானது என்பதை நினைவிற் கொள்ளவும். 23வது குரோமோசோமே குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது. இவற்றில் இரண்டு சாத்தியக்கூறுகளே உள்ளன. அதாவது ஆண் அல்லது பெண். பெண் சாத்தியக்கூறை தாங்கி நிற்கும் 23வது குரோமோசோமை எக்ஸ் என்றும் ஆண் சாத்தியக்கூறை தாங்கி நிற்கும் 23வது குரோமோசோமை ஒய் என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ் இருந்தால் அது பெண், ஒய் இருந்தால் அது ஆண். 23 வது குரோமேசோம் ஆணிடமிருந்து வருவதால் குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது ஆண்களே.

இந்த 300 கோடி ஏணிப்படிகளில் 30ஆயிரம் படிகளே மரபணுச் செய்திகளை தாங்கி நிற்பவை இதரவை ஜங்க் என்று அழைக்கப்படுபவை. இவைகளை வரிசைப்படுத்தினால் அந்த மனித உயிரின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதை எப்படி வரிசைப்படுத்துவது இதை எப்படி அறிவது என்பது ஒரு சவால். 20ம் நூற்றாண்டின் இறுதியில் மனித மரபணுக்களின் உட்கூறுகள் வரிசைப்படுத்தி தொகுக்கப்பட்டுவிட்டன, ஜங்குகன் பயனற்றவை கிடையாது. அதன் பயன்கள் பற்றி இப்போது பேச வேண்டாம். ஜங்குகளில் ஏற்படும் பிறழ்வுகளை வைத்து மனித வரலாறே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது மக்கட்தொகை மரபணுவியல் (Population Genomics) என்ற தனியொரு அறிவுப் புலமாக வளர்ந்துவிட்டது.

மரபணுவை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். பாபோவின் ஆய்வுக்கு வருவோம். மற்ற உயிரினங்களைப் போலவே மனிதனும் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவன். இன்று மனிதனாக அறியப்படுவனை நாம் ஹோமோ சேப்பியன் என்ற உயிரினம் என்று அழைக்கிறோம். மனிதர்கள் போல் தோற்றம் உள்ள இதர விலங்கினங்களை ஹோமோ என்ற முன்சொல்லை வைத்து வகைப்படுத்தப்டுகின்றன. சிம்பன்ஸி கொரில்லா போன்ற மனிதக்குரங்குகள் மனிதனுடைய சகோதர இனங்களாக இருந்தாலும் தூரத்து சகோதரர்களே ஆவார்கள். நெருங்கிய சகோதர இனமாக அறியப்படுவது ஹோமோ எரக்டஸ் என்றொரு மனித இனமே. இவற்றை நாம் அறிந்தது சென்ற நூற்றாண்டில்தான். ஜெர்மனியின் நியாண்டார்தால் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் நமது சகோதர இனத்தவரான ஹோமோ எரக்டஸ் இனம் என்றும் அந்த எலும்புக்கூட்டின் மனிதன் நியாண்டார்தால் மனிதன் என்றும் அழைக்கப்படுகிறான். இதுபோல் பீகிங் மனிதனும், சைபீரியாவின் டெனிசோவா மனிதனும் ஹோமோ எரக்ட்ஸ் இனத்தை சேர்ந்தவனே. ஆக இந்த மனிதர்களை தனித்தனி உயிரினங்களாக பிரிப்பது எது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்காண விடையத் தேடும் பணிதான் பாபோவின் ஆய்வுப்ணியாகும்.

2022 Nobel Prize in Medicine or Anatomy  Article written by Vijayan. மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான 2022ம் ஆண்டு நோபல் பரிசு

நியாண்டார்தால் மனித இனம் அதாவது ஹோமோ எரக்ட்ஸ் இனம் 70000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது.. நாம், ஹோமோ சேப்பியன்கள் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்தோம், நமது சகோதரன் ஹோமோ எரக்ட்ஸ் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்தான். இவன் ஆப்பிரிக்காவுக்கு வெளியே வாழ்ந்தான். 3லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நாமோ ஆப்பிரிக்காவில் வாழ்ந்தோம். 70000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவை விட்டு வெளியே வந்தோம். முதலில் அரேபியாவுக்கு வந்து பிறகு ஐரோப்பா ஆசியா முழுவதும் பரவினோம். 40000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுவிட்டோம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா கண்டத்திற்கு பரவினோம். ஐரோப்பா கண்டத்தில் நமது சகோதரனோடு பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். இருவருக்கு ஒரே பொது மூதாதையர் உண்டு அது 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்திருந்தது. மரபணுக்களின் பிறழ்ச்சியால் வெவ்வேறு உயிரினக்கள் தோன்றுகின்றன. மெல்ல மெல்ல நிகழும் பிறழ்வுகள் மெல்ல மெல்ல மாற்றத்துக்கு அடிகோலி ஒரு கட்டத்தில் தனித்தனி உயிரினங்களாகின்றன. பொதுவாக இரு உயிரினங்கள் கூடினால் குழந்தை பிறக்காது. அந்த நிலையை எட்டும்போதுதான் அவை இரண்டையும் வெவ்வேறு உயிரினங்கள் என்று அறிவியல் அழைக்கிறது. ஆனால் ஹோமோ எரக்டஸும் ஹோமோ சேப்பியன்களும் இணைந்து குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் கதைகள் போல் தெரிகிறதல்லவா. இவையனைத்தையும் அறிவியல் பூர்வமான நிறுவியவர் பாபோ.

தற்போது வாழும் உயிரினத்தின் டிஎன்ஏஐ தொகுப்பது எளிதாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பண்டைகால உயிரினத்தின் மரபணுவை எப்படித் தொகுப்பது? இதைச் செய்து காட்டியவர் பாபோ. 40000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட ஹேமோ எரக்டஸின் எலும்பிலிருந்து டிஎன்ஏஐ பிரித்தெடுத்து தொகுத்துக் காட்டியவர் பாபோ. வாழும் செல்லின் கருவின் டிஎன்ஏஐயும் மிட்டோகாண்டிரியா டிஎன்ஏஐயும் தனித்தனியாக பிரித்து எடுத்து தொகுக்க முடியும். பல்லாண்டுகளுக்கு முன்பு மடிந்து போனவற்றில் இந்த இரண்டு டிஎன்ஏக்களும் இணைந்து குழப்பமான சங்கிலியே கிடைக்கும்.அவற்றில் எது மிட்டோகாண்டிரியாவைச் சேர்ந்தது எது கருவைச் சேர்ந்தது என்று பிரித்தெடுக்கும் நுட்பத்தை கண்டுபிடித்தவர் பாபோ. இப்படிச் செய்து நியாண்டார்தால் மனிதனின் மரபணுவை முதன் முதலில் 2010ம் ஆண்டு தொகுத்துக் காட்டினார். இதன் விளைவாக ஹேமோ சேப்பியன்களது மரபணுப தொகுப்புக்கும் ஹோமோ எரக்டஸின் மரபணுத் தொகுப்பிற்கும் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்யும் களம் திறக்கப்பட்டது. எது ஹோமோ சேப்பியன் மனிதனை நியாண்டால் மனிதனிடமிருந்து வேறுபடுத்துகிறது என்பதை கண்டறிய உதவியது இவரது கண்டுபிடிப்பு.

இப்பொழுது நியாண்டார்தால் மனிதனின் மரபணுதொகுப்பின் 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை ஹோமோ சேப்பியன்களிடம் உள்ளது என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1 லிருந்து 6 சதவீதம் டெனிசோ மனிதனின் மரபணுக்கள் கலந்திருக்கிறது. நியாண்டார்தால் மனித மரபணுக்கள் நமது நோயெதிர்ப்பு அமைப்பில் என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் தற்போதைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பாபோவின் ஆய்வுமுறையால் அழிந்துபோன பண்டைய உயிரினத்தின் மரபணுக்களை தொகுக்கும் தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது. இது ஒரு அறிவுப்புலமாக வளர்ந்து பேலியோஜெனோமிக்ஸ் என்ற பெயர்தாங்கி நிற்கிறது. அதன்மூலம் தற்போதைய மனிதனின் உடலமைப்பில் என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது. இத்தகைய அற்புதமான பணிகளுக்காக ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த ஆண்டு மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

எஸ்.விஜயன்
03.10.2022

நூல் அறிமுகம்: நிர்மலின் நிலமும் பொழுதும் – விஜயன்

நூல் அறிமுகம்: நிர்மலின் நிலமும் பொழுதும் – விஜயன்

சமீபத்தில் கிண்டிலில் வெளிவந்த நண்பர் நிர்மல் எழுதிய நிலமும் பொழுதும் என்ற நூலை வாசித்தேன். இது ஒரு அற்புதமான நூல் என்பதை எனது மதிப்பீடாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறேன். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.  முதலாவது நூலை எழுதும் நபர் அந்த…
வேதியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

வேதியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

வேதியலின் ஒரு பிரிவான உயிர் வேதியல் கண்டுபிடிப்பு ஒன்று இந்தாண்டுக்கான‘நோபல்பரிசு பெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு மின்வேதியல் என்ற பிரிவில் நடைபெற்ற கண்டுபிடிப்பு நோபல் பரிசைப் பெற்றது. இந்தாண்டு வேதியல் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பானது எளிதில் மரபணுக்களை கத்தரித்தும் மாற்றவும் உதவும். இதன்மூலம்…
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

சிறு வயதில் அப்பாவுடன் சென்று வீட்டில் மாட்டுவதற்காக சாமிப்படம் வாங்கி வந்திருக்கிறேன். மகாவிஷ்ணு ஒரு கையில் சங்கும் இன்னொரு கையின் ஆள்காட்டி விரலை மேல்நோக்கி வைத்துக் கொண்டு அதன் உச்சியில் ஒரு சக்கரம் வைத்து ஒரு காலை தொங்விட்டுக் கொண்டும் மற்றொரு…
உடற்கூறியல், மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2020 – அறுவை சிகிச்சையும் மஞ்சள் காமாலையும் – விஜயன் TNSF

உடற்கூறியல், மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2020 – அறுவை சிகிச்சையும் மஞ்சள் காமாலையும் – விஜயன் TNSF

மஞ்சள் காமாலை நோயை அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்நோயைப் பற்றிய பதிவு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான ஹிப்போக்கிரடஸ் இந்நோயைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் வீரராஜேந்திர…