Roman Polanski Andrzej Wajda Polish History of film - European Cinema

தொடர் 40: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா போலந்து திரைப்படங்கள்-1 கிழக்கு ஐரோப்பிய சினிமாவில் ஜெர்மன் நாஜி ஆக்கிரமிப்பும், ஹிட்லரின் கொடிய ஜெஸ்டபோ போலீஸ் எஸ்.எஸ். படையினரின் கொடுமைகளோடு நரகமயமான அவர்கள் அமைத்த “CONCENTRATION CAMS”கள் ஏற்படுத்திய சிறை முகாம்களுக்கும் போலந்து பெயர் பெற்றது. போலந்திலுள்ள…
தொடர் 39: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 39: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

      கிழக்கு ஐரோப்பிய சினிமா செக்- திரைப்படங்கள் இந்நாளை செக் குடியரசு, அந்நாளில் செக்கோஸ்லோவாகியா, [CZECHOSLOVAKIA]. இப்பெயரை என் பள்ளி நாட்களில் மூன்று விதமாக நான்கு பையன்கள் உச்சரிப்பார்கள். அவ்வாறு நாங்கள் நான்கு பேருக்கும் இக் கிழக்கு ஐரோப்பிய…
தொடர் 31: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 31: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



இங்கிலீஷ் சினிமா
விட்டல்ராவ்

ஆங்கில சினிமா என்று தமிழில் சொல்லுவதை தேவைப்படுமிடங்களில் “இங்கிலீஷ் சினிமா” என்று எழுதுகிறேன்.

“ஒரு இங்கிலீஷ் பிக்சருக்குப் போலாம்.”
“இம்பீரியல்லே இங்கிலீஷ் படம் ஆடுது.”

ஆங்கில மொழியில் பேசும் திரைப்படங்கள் எல்லாமே “இங்கிலீஷ்” படங்களாகவே பாமர மக்கள் முதல் ஓரளவுக்கே விவரம் தெரிந்த திரைப்பட ரசிகர்கள் வரை புரிந்தும் புரியாமலும் பார்த்த வந்த சினிமா. ஆங்கிலப் படமென்றாலே, “இங்கிலீஷ் படமா, சண்டைப்படம்” என்று சொல்லியும் அவைகளில் இடம்பெறும் ஆண்-பெண் நெருக்கமான காட்சிகளைக் கொண்டும் பாமர மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு திரையரங்கை முற்றுகையிடுவார்கள். அதே சமயம் தீவிர – சினிமா ஞானம் உடைய ரசிகர்களுக்கு ஆங்கிலம் பேசும் எல்லா திரைப்படங்களுமே அசல் “இங்கிலீஷ்” சினிமா அல்ல என்பது தெரியக்கூடும். பொதுவாக திரைஙரங்குகளில் திரையிடப்பட்டு பார்த்து வைக்கும் திரைப்படங்ள் அமெரிக்க திரைப்பட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டும், வேறெங்கெங்கோ எந்தெந்த மொழிகளிலோ தயாரிக்கப்பட்டு பிரபல அமெரிக்க திரைப்பட நிறுவனங்கள் வாயிலாக ஆங்கில மொழியாக்கம் பெற்று உலகெங்கும் விநிகோகிக்கப்பட்டு திரையிடல் கண்டு மக்கள் பார்த்து வைப்பவை, இவ்வகை படங்ளில் இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், சீனா, கொரியா, ஸ்பெயின், ரஷ்யா, பொலந்து மொழிப்படங்களும் ஆங்கிலம் பேசிக்கொண்டு பாமர மற்றும் சராசரி திரைப்பட ரசிகர்களால் “இங்கிலீஷ் படம்” என்று கருதப்பட்டும், சொல்லப்பட்டும் பார்த்து வைப்பவை.

எல்லாவகையான அமெரிக்கத் தயாரிப்புத் திரைபடப்படங்களும், அமெரிக்க நிறுவனங்ளால் வினியோகிக்கப்படும் திரைப்படங்களும் “இங்கிலீஷ் சினிமா” என்றெ நம்பப்பட்டு கருதப்பட்டு பார்க்கப்படுபவை. அசல் அமெரிக்க சினிமா என்பது “அமெரிக்க ஆங்கிலம்” பேசும் திரைப்படங்கள்.

அசல் ஆங்கிலம் – “QUEEN’S ENGLISH” என பெருமை கொள்ளும் ”பிரிட்டிஷ் ஆங்கிலம்” பேசும் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் “இங்கிலீஷ் சினிமா” என வைத்துக்கொள்ளலாம்.

அமெரிக்கா – இங்கிலாந்து இருநாடுகளும் பேசும் ஒரே மொழி ஆங்கிலம் – சற்றே வேறு விதமாய் பேசப்படுவது அமெரிக்க ஆங்கிலம். அன்றே அறிஞர் பெர்னார்டு ஷா [BERNARD SHAW] கூறினார்:-

“ENGLAN AND AMERICA ARE TWO COUNTRIES SEPARATED BY THE SAME LANGUAGE” என்று. இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே மொழியால் வெவ்வேறு நாடுகளாயிருக்கும் இரு நாடுகள்.

அதற்கேற்றாற்போல பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர்களும், பல்வேறு தொழில் நிபுணர்களும், நடிக, நடிகையரும் இங்கிலாந்தை விட்டு வெளிஙேறி அமெரிக்காவுக்குச் சென்று குடியேறி அங்கிருந்து திரைப்படங்கள் செய்து வந்தனர். மாபெரும் சினிமா கலைஞர்கள், சார்லி சாப்ளின், ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், டேவிட் லீன், ரிச்சர்டு அட்டென்பரோ முதலியோரை உதாரணப்படுத்த வெண்டும். இவர்களது இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அசல் அமெரிக்க தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவை. சாப்ளின் செய்த “தி கிட்” [THE KID], GOLD RUSH, MODERN TIMES, GREAT DICTATOR, CITY LIGHT, THE CIRCUS, LIME LIHG COUNTRESS FROM HONG KONG என்ற அமரத்துவம் பெற்ற திரைப்படங்களை பெரும்பாலும் எல்லா மட்டத்து ரசிகர்களும் பார்த்திருப்பார்கள். ஹிட்ச்காக்கின், 39 STEPS, SABOTEARS, STRANGERS ON TRAIN, SPELBOUND, NOTORIOUS, NORTH BY NORTH WEST, VERTIGO, PSYCHO, BIRDS, REARWINDOW, DIAL M FOR MURDER என்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் எல்லாவித படித்த படிக்காத சினிமா ரசிகர்களாலும் கண்டு ரசித்து காலத்துக்கும் பேசப்பட்டு வருபவை. டேவிட் லீன் உருவாகிய, கிரேட் எக்ஸ்பெக்டேஷன், டேவிட் காப்பர் ஃபீலடு, லாரன்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ ஆகிய அரிய திரைப்படங்ள் அமர காவியங்கள். அட்டென்பரோவின் YOUNG WINSTON, CRY FREEDOM, MY BELOVED COUNTRY, A BRIDGE TOO FAR, GHANDHI என்ற மாபெரும் படங்களை மறக்க முடியுமா? இந்த அசல் பிரிட்டிஷ் இயக்குனர்களால் அமெரிக்காவிலிருந்து இயக்கிய திரைப்படங்ளில் ஹாலிவுட் பகட்டும், இயல்பு மீறியயதார்த்த சித்தரிப்பும் காணப்படாதவை.

அமெரிக்காவின் முக்கியமான ஒரு பகுதியான கலிஃபோர்னியாவில் பரவலாகப் புழக்கத்திலுள்ள அமெரிக்க ஆங்கில கொச்சை மொழியைத் தம் வசனங்களில் முழுக்கக் கையாண்டு புகழ் பெற்ற “GRAPES OF WRATH” ‘OFMICE AND MEN”, ‘EAST OF EDEN” ஆகிய நாவல்களைப் படைத்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற JOHN STEINBECK-ன் நாவல்களைப் படித்ததிலோ, அவை முறையே JOHN FORD, ELIA KHZAN ஆகியோரின் உயரிய இயக்கத்தில் திரைப்படங்களாய் உருவானபோது பார்த்ததாலோ இந்திய மற்றும் பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசி- எழுதுபவர்கள் கலிபோர்னிய கொச்சை ஆங்கிலத்துக்கு மாறியிருக்க மாட்டார்கள்.

திரைப்பட ஆர்வலர்களுக்கு மொழி ஒரு தடையாக நிச்சயம் என்றும் இருப்பதில்லை.

ஆங்கில மொழியின் வசன அழகை-கமபீரத்தையெல்லாம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் கொண்டிருப்பவை. அவற்றை தம் காலமெல்லாம் மேடையேற்றி இயக்கி நடித்தும், அவற்றையே திரைப்படங்களாய் தயாரித்து இயக்கி நடித்தும் வந்தவர் SIR LAURENCE OLIVER. இவரது HAMLET, RICHRD – THE THIRD, HENRY FIFTH என்ற திரைப்படங்கள் அரிய அற்புத அசல் ஆங்கிலத் திரைப்படங்கள். இங்கிலாந்தின் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அமெரிக்காவிலும் [ORSAN WELSS] ஜப்பானிலும் [AKIRA KUROSAWA] ரஷ்யாவிலும் [GRIGORI KOZINTSEV] அவர்களுக்கேற்ற வடிவிலும் அவர்களின் மொழியிலும் சிறப்பாக திரைப்படமாக்கியுள்ளனர். திரைப்படங்கள் ரீதியாகவும் ஆங்கிலம் உலகமொழியாகிவிட்டது.

பிரிட்டிஷ் புதிய அலை சினிமா 1960-ல் தெரிய வருகிறது. கேரல் ரைஸ் [KAREL REISZ] அன்றைய செகோஸ்லோவாகியாவில் ஆஸ்ட்ராவலா [OSTRAVA] எனும் ஊரில் 1926ல் பிறந்து தன் பன்னிரெண்டாவது வயதில், செக் நாட்டை ஹிட்லரின் நாஜி படை சூழ்ந்து பிடித்துக்கொண்டபோது 1939-ல் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரது பெற்றோர்கள் ஹிட்லரின் போலந்து மரணமுகாமான ஆஸ்விட்ஸில் இறந்து போயினர். கெரல் ரைஸ் இரண்டாம் உலகப் போரில் சேர்ந்த போரிட்டபின் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரசாயனம் படித்தார். அதன்பின் சினிமா விமர்சகரானார். FREE CINEMA MOVEMNET என்ற இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார். இந்த இயக்கம் அரசியல் பிரக்ஞை மிக்க பிரிட்டிஷ் சினிமாவை வளர்த்தெடுத்தது. 1960-ல் இவர் SATURDAY NIGHT AND SUNDAY MORNING என்ற புதிய அலை திரைப்படத்தை செய்து முடித்தார். 1981ல் தமது THE FRENCH LIEUTENANT’S WOMAN என்ற சிறந்த படத்தையும் இயக்கினார்.

1950களின் இறுதியிலிருந்து 1960களின் தொடக்க காலம் வரை பிரிட்டிஷ் சினிமா, சமூக யதார்த்தத்தை நோக்கித் திரும்பியது. உழைக்கும் வர்க்க இளைஞர்களின் கனவுகளை மேம்படுத்தும் வகையிலான கதைகளைத் தேடிச் சென்றன. “கோபக்கார இளைஞர்கள்” என அழைக்கப்பட்ட நாடகாசிரியர்கள், நாவலாசிரியர்களின் படைப்புகளை திரைப்படமாக்கிப் பார்த்தனர், இவ்விதமாக பிரிட்டிஷ் புதிய அலை சினிமா 1958ல் ஜான் ஆஸ்பொர்ன் [JOHN OBSBORNE] என்பவர் எழுதிய LOOK BACK IN ANGER என்ற நாவலும் ஜான் ப்ரெய்ன் [JHON BRAINE] எழுதிய THE ROOM AT THE TOP என்ற நாவலும் 1959-ல் பிரிட்டிஷ் புதிய அலைத் திரைப்படமாக்கப்பட்டன. ஸ்டான் பார்ஸ்டோவின் [STAN BARSTOW] AKIND OF LOVING கதை 1962-ல் புதிய அலை இங்கிலீஷ் படமானது. இவற்றில் ஆலன் சிலிடோ என்பவர் [ALAN SILLITOE] எழுதிய நாவல் SATURDAY NIGHT AND SUNDAY MORNING என்பதை அவரே திரைக்கதையாக்கித்தர, கேரல் ரைஸ் நினைவில் நிற்கும்படியான திரைப்படமாக்கினார். இந்தப் படத்தின் மூலம் பிரிட்டனின் உழைக்கும் வர்க்கத்தை வெள்ளித் திரைக்கு அதுவரையில்லாத வகையில் கொண்டுவரச் செய்தனர். நாவல் ஓரளவுக்கு ஆசிரியரின் சுயவரலாறு என்பர். 70களில் நான் சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் நூலக உறுப்பினராயிருந்த காலத்தில், திரையிடப்பட்ட பல படங்களைப் பார்த்ததில் இந்தப் படமும் ஒன்று.

ஆர்தர் என்ற இளைஞன் தான் பணிபுரியும் தொழிற்சாலை வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக் காட்டிலும் தன் வாழ்க்கையிலிருந்து அதிகம் பெற்றுக்கொள்ள துடிப்பவன். ஓர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆர்தர், எவ்வகையிலும் பிறால், பிறவற்றால் பாதிக்கப்படாதவன். ஆனால் தன் சொந்த விருப்பு வெறுப்புகளாலும் மனக்கசப்புகளாலும் பாதிக்கப்படுபவன். கேரல் ரைஸ் பிரிட்டிஷ் புதிய லை சினிமாவின் தந்தையென கருதப்படுபவர். ஸ்டூடியோவுக்குள் செட்போட்ட படமெடுப்பதிலிருந்து விடுபட்டு வெளியேறி நிஜமான சூழ் நிலையில் – இடங்களில் யதார்த்தமாயிருக்குமாறு படமெடுத்த வகையில் இதுவும் பிரெஞ்சு புதிய அலையொடு கை கோர்த்த இயக்கம். ஆனால், பிரெஞ்சு புதிய லை சினிமாக்காரர்கள் கவனம் செலுத்தி புதிய கோணத்தில் ஒளிப்பதிவு செய்தது போன்ற வழியில் பிரிட்டிஷ் புதிய அலைக்காரர்கள் காமிரா புதுமையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. யதார்த்தம் என்று அவர்கள் அதிகம் கவனம் கொண்டது கதை உள்ளடக்கத்தில்தான். உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த வாழ்க்கை, சொந்த நலன்குள்ளே நுழைந்து படமெடுத்தனர். LOOK BACK IN ANGER [1959] திரைப்படம் நாடகத்தனமாக அமைந்திருந்தது. SATURDAY NIGHT… கிட்டதட்ட ஆவணத்தன்மை கூடியிருந்த திரைப்படம். கதையில் நிகழும் சோரம் போவது, கருக்கலைப்பு, குடிபோதை, தினசரி வன்முறைகளை படம் இடித்துக் காட்டாமலிருப்பது இருப்பதாகவே பார்க்கிறது. பிரெஞ்சு புதிய அலைப்படங்களில் தேர்ந்த பார்வையாளன் விளங்கிக்கொள்ளும் விதமாக அவனுக்கான புதிய பரிமாணமாக உள்ளார்ந்திருக்கும்.

ஆர்தர், இரு சக்கர வண்டிகள் தயாரிக்கும் நாட்டிங்ஹாம் தொழிற்சாலையில் லேத் இயக்குனராக பணிபுரிபவன். நாட்டிங்ஹாம் தொழிற்சாலையில்தான் புகழ்பெற்ற ராலி சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இறக்குமதியாகி விற்கப்பட்டன. என்னிடம் இன்னும் உயிரோடிருக்கும் ராலி ஸ்போர்ட்ஸ் சைக்கிள் அசல் இங்கிலாந்து நாட்டிங்ஹாம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்ட ஒன்றுதான். ஆர்தர் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்புரிகிறான். ஆனாலள் எந்த அரசியல் சார்பான கிளர்ச்சிக்காரனுமல்ல, குற்றவாளியுமல்ல. தனக்கு மூத்த வயதிலுள்ள சக தொழிலாளியின் மனைவியான பிரெண்டா என்பவனோடு உறவு வைத்துக்கொள்ளும் ஆர்தர்\ பேரின்டோரின் எனும் இளம் வளதுப் பெண்ணோடும் பழகுகிறான். இதையும்கூட தனக்கான தன் சொந்த போராட்டம் என்பதால் நினைக்கிறான். யதார்த்த வாழ்வில் அவனது போக்கு மட்டமானது என்பதை உணர்வதில்லை. பிரெண்டா இவனால் கருவுறுகிறாள். அவள் கருக்கலைப்பு செய்யும்போதும் இவன் வருத்தமடைவதில்லை. கடைசியில் பிரெண்டாவின் கணவனாலும் அவனது இராணவு நண்பர்களாலும் ஆர்தர் செம்மையாக தாக்கி உதைக்கப்படுகிறான். உடல் பாதிக்கப்படும் ஆர்தரின் மனசாட்சியோ மனோவலிமையோ நசுக்கப்படுவதில்லை. ALBERT FINNEY ஆர்தராக சிறப்பாக நடிக்கிறார். SHIRLEY ANNE FIELD, RACHEL ROBE3RTS இருவரும் டோரினாகவும் பிரெண்டாவாகவும் இயல்பாக நடித்திருக்கும் இப்படத்தின் சிறப்பான ஒளிப்பதிவு, வெகுஜன சினிமா வெளியிலும் நன்கு அறிமுகமான காமிராமேன் FREDDIE FRANCISஆல் அமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் 1944-ல் லாரன்ஸ் அலிவியரைக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் ஆதரவோடு தயாரிக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் நாடகம் “ஐந்தாம் ஹென்றி” [HENRY-V] ஒரு முக்கியமான திரைப்படம். அந்த தருணத்தில் இப்படம் ஒரு மிகவும் ஏற்றயுத்தகால பிரச்சாரமாயும், தேசப்பற்றைஉசுப்பி உந்திவிடக்கூடிய திரைப்படமென்றும் பிரிட்டிஷ் அரசால் கருதப்பட்டது. இ3ச்சமயம் லாரன்ஸ் அலிவியர் பிரிட்டிஷ் விமானப்படையில் சேர்க்கப்பட்டு உலகப்போரில் ஈடுபட்டிருந்தார். உடனடியாக அரசின் கட்டளைபடி அவர் போரிலிருந்து விடுவிக்கப்பட்டு ஐந்தாம் ஹென்றி படத்தில் முக்கிய பாத்திரமான ஹென்றியாக நடிக்க அனுமதிக்கப்பட்டார். முதலில் படத்தை இயக்கும் பொறுப்பை மற்றொரு சிறந்த பிரிட்டிஷ் இயக்குனர் வில்லியம் வைலரிடம் [WILLIAM WYLER] ஒப்படைக்கப்பட்டபோது அவர் அந்தப் பொறுப்பை நிராகரித்து ஒதுங்கிக் கொண்டதால் லாரன்ஸ் அலிவியரே படத்தின் இயக்குனர் பொறுப்பையும் எற்றுக்கொண்டார்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அரங்கேறுவதும் மேடையேற்றப்படுவதுமாய் புகழ்பெற்ற பிரிட்டிஷ நாடக அரங்காயிருப்பது “க்ளோப் தியேட்டர்” [GLOBE THEATRE]. லாரன்ஸ் அலிவியர், ஒரே சமயத்தில் ஷேக்ஸ்பியரின் நுணுக்கமான நாடகக் கலை அழகியவை போற்றி காக்கும் நோக்கத்தோடும், அக்கதையில் சினிமாவுக்கான சாத்தியக்கூறுகளைதம் தம் நாடக அனுபவங்கள் மேலிட்ட கற்பனை வளத்தோடும் புதிய வடிவில், ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் வேகத்தோடும் தயாரித்து இயக்கி நடித்தார். இதற்காக அவர் இந்தத் திரைப்படத்தை நாடக அரங்கான க்ளோப் தியேட்டரிலேயே, சில காட்சிகளை நாடக ரூபமாகவே படமாக்கினார். ஐந்தாம் ஹென்றி திரைப்படம் தொடக்கக் காட்சியில், அன்றைய காலக்கட்டத்து – அதாவது எலிஸபெத் காலத்திய லண்டன் நகர தோற்றத்தை தத்ரூபமாய் குறும் வடிவில் உருவாக்கப்பட்ட மாதிரியமைப்பை காமிரா அருகிருந்தும் விலகியும் ஒவ்வொரு பகுதியாக நமக்கு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. அடுத்து நடிகர்கள் – அலிவியர் உட்பட நாடகப் பாணியிலேயே மேடையில் தோன்றி நடித்துக் கொண்டு வர, சூழலும் காட்சிகளும் மாறிவந்து, பிரான்ஸை நோக்கி நகருகிறது. பிரான்ஸை நோக்கி இங்கிலாந்து அரச விஷயங்களை பயணிக்கையில், காமிரா இதுகாறும் நாடக வெளியாக இருந்து வந்ததை சினிமாவெளியாக மாற்றுகிறது. இதிலிருந்து ஐந்தாம் ஹென்றி திரைப்படமாகிறது. இந்தக் காட்சி மாறுதல்களுக்கு லாரன்ஸ் அலிவியரும், ஜாக்ஹில்டியார்டு [JACK HILDYARD], ராபர்ட் க்ராஸ்கர் [ROBERT KRASKER] எனும் இரு காமிரா கலைஞர்களும் காரணமானவர்கள். ரஷ்ய திரைப்பட மேதை செர்கை ஐனெ் ஸ்டீன் [SERGEI ELSENSTEIN] தமது “அலெக்சாண்டர் நெவ்ஸ்கி” [ALEXSANDR NEVSKY] எனும் ரஷ்ய மௌனப் படத்தில் 1938-ல் கையாண்ட அபார கலை நுணுக்கத்தைப் பின்பற்றி மேற்கூறிய ஒளிப்பதிவாளர்கள், அலிவியரின் வழிகாட்டலோடு செய்திருப்பது அறியப்படுகிறது. பிரிட்டன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு விதமாயும், பிரான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேறு விதமாயும் படமாக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு அரசவைக் காட்சிகளின்போது வலிந்து ஐரோப்பிய மத்தியகால குறும் ஓவியங்களில் [MEDIEVAL MINIATURE PAINTINGS] கையாளப்பட்டிருக்கும் வண்ணமுறை, அரசவை அலங்கரிப்பு, பாத்திரங்களின் உடை, பிற ஜோடனைகளுக்கு தேர்வாக்கப்பட்டது  போன்ற அறையில் காமிரா படமாக்கியுள்ளது. இதற்கு மிகுந்த கலை ரசனை வேண்டியிருக்கிறது. அலிவியரின் நடிப்பு ஷேக்ஸ்பியரின் பாத்திரத்தையும் வசனங்களையும் உயிர்ப்பித்து காட்டுகிறது. போர் காட்சிகள் இடம்பெறுகையில் இசைக் கலைஞர் வில்லியம் வால்டன் [WILLIAM WALTON] புரிந்துள்ள இசைக்கோர்வை பிரம்மாண்ட எழுச்சியுணர்வை உண்டாக்குகிறது. முற்றிலும் ஒரு ஷேக்ஸ்பியர் காவியமான திரைப்படமாய் அமையப்பெற்ற முதல் திரைப்படம் ஐந்தாம் ஹென்றி.

சர் லாரன் அலிவியர் [SIR LAURENCE OLIVIER] ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள் உட்பட அறுபத்தாறு திரைப்படங்களை இயக்கியவர். ஏராளமான நாடகங்களை மேடைப்படங்களை இயக்கியவர். ஏராளமான நாடகங்களை மேடையேற்றி இயக்கி நடித்தவர். இவர் புகழ்பெற்ற லண்டன் தேசிய நாடக அரங்கான NATIONAL LONDON THEATRE-ன் தலைமை இயக்குனர் பதவியை 1962 முதல் 73 வகித்தவர். அலிவியர் தம் 82வது வயதில் 1989-ல் காலமானார்.

பிரிட்டிஷ் இயக்குனர் டேவிட் லீன் [DAVID LEAN] லண்டன் அருகில் க்ராய்டன் எனுமிடத்தில் 1908-ல் பிறந்தார். இவர் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் புகழ்பெற்ற திரைப்படங்கள், THE BRIDGE ON THE RIVER KWAI; LAWRENCE OF ARABIA; DR. ZHIVAGO; RYAN’S DAUGHTER; A PASSAGE TO INDIA என்பவை. ஆனால் டேவிட் லீன் இயக்கிய புகழ்பெற்ற பழைய திரைப்படங்கள் இன்னும் நினைவிலிருப்பவை. ஆங்கில நாவலாசிரியர்களில் மறக்கமுடியாத படைப்புகளைத் தலைவர் சார்லஸ் டிக்கன்ஸ். அவரது நாவல்களை வெவ்வேறு இயக்குனர்கள் படமெடுத்திருந்தாலும் டேவிட் லீன் 1946-ல் இயக்கிய கருப்பு வெள்ளைப்படம் GREAT EXPECTATIONS (மகத்தான எதிர்பார்ப்புகள் யாருக்கு இல்லை?) மிகச் சிறந்த ஆக்கம். 1948-ல் டிக்கன்ஸின் மற்றொரு முக்கிய நாவல் OLIVER TWIST-யும் டேவிட் லீன் சிறப்புற படமாக்கினார். அங்கில நாவலை திரைப்படமாக்கியதில்  இவையிரண்டும் அற்புதமானதென்றும் தலை சிறந்த பிரிட்டிஷ் திரைப்படமென்றும் பாராட்டப்படுபவை.

படத்தின் தொடக்கக்காட்சி திகிலூட்டுவதாயிருக்கும் பரந்த சகதியான மைதானத்தை நீள-அகலமாய் காமிரா நம் கண்ணுக்கு விரித்துக் காட்டுகிறது. நம் கண்களை காமிரா, கேட்பாரற்ற இடுகாட்டுக்கு இட்டுச் செல்கிறது. இதுபோன்ற ஒளியமைப்புக்காக டேவிட்லீன் முதலில் நியமித்த ஒளிப்பதிவாளர் ROBERT KRASKER- என்பவரை தள்ளிவிட்டு GUY GREEN  என்பவரை நியமித்துக் கொண்டார்.

மாக் விட்ச் [MAGWITCH] என்பவன் பயங்கர குற்றவாளி சிறையிலிருந்து தப்பித்து வந்துவிட்ட மாக் விட்ச் நாவலின்  இனம் கதாநாயகன் PIP- என்பவனை பயமுறுத்தி தனக்கு உணவு வேண்டுமென்றும், தன் கை விலங்குச் சங்கிலியை அறுத்து அகற்ற ஆயுதம் வேண்டுமென்றும் துன்புறுத்துகிறான். இந்த ஆட்சி  திரைப்படத்தில் பிரமாதமாயிருக்கும். பிப், அங்கிருந்து நழுவி பழைய மாளிகையொன்றை அடைகிறான். அங்கே வயதான ஒருத்தியையும் இளம்பெண்  ஒருத்தியையும் பிப் சந்திக்கிறான். வயதான பெண்ணான ஹாவிஷம் [HAVISHAM] சில காலம் முன் தன் கல்யாணத்தில் நிகழ்ந்த கோர முடிவால் திருமணமே நின்றுவிட, மனமுடைந்த அவள் அழுக்காயும் விடாமல் தன் திருமணக்கோல உடையிலேயே சுற்றி வருவதோடு வளர்ப்புப் பெண்ணான இளம் எஸ்டெல்லோ [ESTELLA]வைக் கொண்டு தன்னிடம் சிக்கிய ஒவ்வொரு ஆண்மகனையும் ஆசைகாட்டி, தோல்வியுற்ற தன் திருமணத்துக்கு பழிவாங்க நினைக்கிறாள். பிப் எஸ்டெல்லாவை காதலிக்கிறான். இச்சமயம் நல்ல சமாதித்தர் ஒருவர் உதவியால் பிப் லண்டனுக்கு அனுப்பப்படுகிறான். சில வருடங்கள் கழிந்த பின், வளர்ந்தவனாக அவன் தன் காதலி எஸ்டெல்லாவை தனக்கு மனைவியென்றே முடிவு கட்டி தேடியலைகிறான். இந்தப்படம் அந்தக் காலத்தில் சிறந்த ஒளிப்பதிவுக்கு கை க்ரீனுக்கும் கலை-ஒப்பனைக்கு வில்ஃப்ரெட் ஹிங்கிலிடனுக்கும் ஆஸ்கர் விருதுகள் வாங்கித்தந்தது. தம் எல்லா திரைப்படங்களுக்குமே பல்வேறு அம்சங்களுக்கென டேவிட் லீன் ஆஸ்கர் விருதுகள் பெற்று வந்தவர். இந்தியாவுக்கு வந்து காந்தியைப் பற்றி திரைப்படம் தயாரிக்க அவர் முயன்று வெற்றிபெறவில்லை. அந்த வாய்ப்பும் புகழும் சர் ரிச்சர்டு அட்டன்பரோவுக்கு கிடைத்தது.  அப்படியும் விடாமல், ஈ.எம்.ஃபார்ஸ்டரின் நாவலான ‘A PASSAGE TO INDIA”வை இந்தியாவுக்கு வந்து இயக்கி வெளியிட்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியதோடு, கர்னாடாகவில் மாண்டியா அருகிலுள்ள புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த ராமநகரம் மலையில் வெடி வைத்து செயற்கையாக குகைகளை உண்டாக்கியதற்காக இந்திய புவியியல் துறையால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்துக்கும் போனவர் டேவிட் லீன். டேவிட் லீன் 1991-ல் மரணமடைந்தார்.

தொடர் 30: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 30: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



பிரெஞ்சு சினிமா -3 புதிய அலை

செய்ன்! [SEIN]. பாரிஸ் நகரில் ஓடும் புகழ்பெற்ற அழகிய ஆறு, இதன் அழகிலும் இது இருப்பதின் பெருமையிலும் எழுதப்பட்ட பிரெஞ்சு கவிதைகளும் நிறைய உண்டு. மோலியரின் நாடகங்கள் சிலவற்றில் இடம் பெற்ற வசனங்களிலும் செய்ன் புகழாரம் சூட்டப்பட்ட நதியாகும்.. எனவே இவ்வாற்றின் இடது – வலது கரைகளும் பெருமைக்குரியவை. செய்ன் நதியின் இடது – வலது புறக் கரைப்பகுதிகளிலிருந்து படைக்கப்பட்ட நாடகங்கள், பிற எழுத்து வடிவங்கள், ஓவிய – சிற்ப காரியங்கள், திரைப்படங்கள் என்பவை மிகவும் உன்னிப்பாகவும் எச்சரிக்கை மிக்க மரியாதையோடும் கவனிக்கப்பட்டன. செய்ன் நதியின் வலதுபுறக் கரைப்பகுதியிலிருந்து பிரெஞ்சு புதிய அலை திரைப்பட இயக்கமும் அதன் கர்த்தாக்களான ழான் லக் கோதார், [JEN-LUC GODARD], ராபர்ட் ப்ரெஸ்ஸோன் [ROBERT BRESSON], ஃப்ரான்ஸ்வா த்ரூஃபா [FRANCOIS TRUFFAUT] ஆகியோர் புறப்பட்டனர். அதே சமயம், செய்ன் நதிக்கு இடது புறத்து கரைப்பகுதியிலிருந்து (பெண் இயக்குனர்) ஆக்னஸ் வார்தா [AGNES VARDA], கிறிஸ் மார்கர் [CHRIS MARKER] ஆகியோர் புகழ்பெற்ற புதிய அலைக்காரர்கள்.

“கோதிக்” [GOTHIC] எனும் சிக்கல் – கோலம் போன்ற அலங்கார வடிவமைப்பு கொண்ட கலைப்பாணி முதல் ஓவியம், சிற்பம், நாடகம், எழுத்து, திரைப்படம் வரை சர்வதேச அளவில் எல்லா நாட்டு கலைக் காரியங்களையும் பாதித்துத் தொட்டிருப்பது – இன்றுவரை பிரெஞ்சு கலையலைகள். பிரெஞ்சு புதிய அலையும் அதற்கடுத்த கட்டத்து படைப்புத் தோன்றல்களும் கீழை நாட்டு கலையிலக்கிய வெளிகளிலும் ஒரு தைரியத்தை – தைரியமிக்க முயற்சியை மேற்கொள்ள ஏதுவாயிருந்திருக்கிறது. இந்த கலப்புச் சிந்தனை – முயற்சி – வெற்றி முகங்களை சுமார் இரு நூற்றாண்டுக்கு முன்பே வங்க மறுமலர்ச்சியும், இராஜாராம் மோகன்ராய் – மைகேல் மதுசூதன் – இரவீந்திரநாத் தாகூர் – சத்யஜித்ரே ஆகியோர்களால் சாத்தியமாகியிருக்கிறது. தத்துவ ரீதியாக பிரம்ம சமாஜமும் கலப்பில் புதுமை காட்டியது.

ழான் –லக் கோதார் [JEAN-LUC GODARD] பாரிஸ் நகரில் 1930-ல் பிறந்தவர். இளம் வயதில் – தமது இருபதுகளில் இவர் பாரசிலிருந்த புகழ்பெற்ற “CINE CLUB SCENE” என்ற திரைப்படக் குழுவில் இணைந்து திரைப்பட விமர்சனத்தை மேற்கொண்டவர், இச்சமயம் இவரோடு நட்பு கொண்ட த்ரூஃபா இவரைப் பெரிதும் ஊக்குவித்தார். த்ரூஃபா நன்கு அறியப்பட்ட பிரெஞ்சு நவீன கவிஞரும் இளம் திரைப்பட விமர்சகரும், புதிய அலையின் மற்றொரு ஆரம்ப கர்த்தாவுமாவார். த்ரூஃபாவும் இதே சமயம் திரைப்படங்களை இயக்கத் தொடங்கியிருந்தார். கோதாரும் தமது படங்களை இயக்கத் தொடங்கின காலம் அது. கோதாரின் முதல் படம் “மூச்சிரைப்பு” [ABOUT DE SOUFFLE- அதாவது BREATHLESS]. இப்படம் 1959-60ல் வெளிவந்தது. “பிரெத்லெஸ்” படத்தில் கையாளப்பட்டிருந்த புதிய நடை சினிமா உலகில் புயலைக் கிளப்பிற்று. கோதாரின் படங்களான CONTEMPT; BAND OF OUTSIDERS [1964] ALPHAVILLE மற்றும் A MARRIED WOMEN [1965] என்பவை தோற்றத்திலும் உள்ளடகத்திலும் புரட்சிகரமாகவும் தீவிரமாயும் இருப்பவை. 60-களின் இறுதிக்கு முன்னர் கோதார் இயக்கிய மேற்சொன்ன திரைப்படங்களைப் பார்த்தளவில், அவை வெகுஜன – வணிகத்தனத்தையே புதிய வடிவிலும் உத்திகளோடும் கொண்டிருப்பதாய் எனக்குப்படுகிறது. 60-களின் இறுதியில் அவர் வணிகத்தனமான படைப்பச் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் விலகிப் போனவர் என்பது உண்மை.

கோதாரின் “மூச்சிரைப்பு” [BREATHLESS] திரைப்பட உலகில் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. திருட்டை, ஏமாற்று வித்தையை, பெண்கள் உறவை, கொலை திருட்டை, ஏமாற்று வித்தையை, பெண்கள் உறவை, கொலை ஆகியவற்றில் சமரசமின்றி சாதாரணமாய் புழங்கும் இளைஞன் ஒருவன். எளிதாக கார் திருடுபவன். திருட்டுக்காரில் ஓடுகையில் பைக்கில் துரத்திவரும் போலீஸ்காரர் ஒருவரைச் சுட்டுக்கொன்று விட்டு, திருட்டுக் காரையும் அடகு வைக்கிறான் அந்த டுபாகூர் இளைஞன் மிச்செல் [MICHEL]. மிச்செலின் இளம் அமெரிக்க காதலி பட்ரீஷியா [PATRICIA]. அந்த இளம் அடிமரிக்க பெண் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், போலீஸ்காரனை கொலை செய்து விட்டு ஓடிவந்து பட்ரீஷியாவின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் ஒளிந்திருக்கிறான். அவளுக்கு மிச்செலின் மறுபக்க வாழ்க்கை தெரியாது. இருவரும் இத்தாலி-ரோம் என ஓடிபே்போய் ஹாயாக இருக்கலாமென அவளுக்கு ஆசை காட்டி கார் திருடி விற்று இறுதியில் அவன் கொலைகாரன் என்பதை அறியும் பட்ரீஷியா அவனைப் போலீசுக்கு காட்டிக் கொடுக்க, அவன் தப்பியோடுகையில் சுடப்பட்டு இறக்கிறான். இப்படி சட்டுபுட்டென்று சொல்லப்படும் கதைக்குள் காமிரா புரியும் விந்தை ஒளிப்பதிவு, நிதானமற்ற வேக நகர்வு, அப்படியும் இப்படியுமாய் தாவிக்குதித்து தாண்டி நொண்டியடித்துப் பாண்டியாடும் புதிய காட்சியாடல் உத்திகள் என்று கண்விரித்து வாய் பிளக்க, கோதாரின் முதல் முயற்சியான “மூச்சிரைப்பு” படத்தில் நிறைய இருக்கின்றன. இந்த கோணங்கள், உத்திகளைத் தவிர மற்றவை ஏற்கனவே பார்த்திருக்கும் பல திரைப்படங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் மறுவார்ப்பாகவே அனுபவமாகிறது. கோதாரின் உத்திகளும் நடையும் கோண வகைமையும் நம் நாட்டு புதிய அலை சினிமாவின் ஆரம்ப பூஜை கர்த்தாவாகிய மிர்னாள் சென்னுக்கும் பேய்பிடித்திருந்தது என்று கூற வேண்டும் [உ.ம்: மிரினாள் சென்னின் புகழ்பெற்ற புவன்ஷோம், இண்டர்வியூ முதலான இந்திய புதிய அலைத் திரைப்படங்கள்]
ழான் – லக் கோதார் ஹாலிவுட்டுக்கு அந்நியமானவராகவோ, அதிருப்தியாளராகவோ தோன்றவில்லை. இந்தப் படத்தையோ [BREATHLESS] எடுத்துக் கொண்டால், இதில் அவரது கதாபாத்திரம் மிச்செல் வாயிலாக கோதார் ஹாலிவுட் மீதானதமது அபிமானத்தை கோடிகாட்டும் காட்சியொன்றை வைத்துள்ளார். மிட்செல் தெருவில் நடந்து போகையில் ஹாலிவுட் சினிமா நடிகர்களின் பெரிய அளவு படங்களை நின்று ஆவலோடு கவனிப்பான். அந்தப் படங்களிலொன்று அன்றைய நாள் ஹாலிவுட் பிரபலமான ஹம்ஃப்ரி போகார்டின் [HUMPHREY BOGART] பெரிதாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள படம். அதைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு தனது உதடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுவான். புதிய அலையென்று அழைக்கப்பட்டகோதார் குழுவின் படங்கள் எல்லா திரைப்பட ரசிகர்களையும் கவர்ந்ததாகவோ, சென்றடைந்ததாகவோ சொல்லிவிடவும் முடியாது. சமூகத்தில் வழக்கமாயிருந்து வரும் ஆண்-பெண் ஒழுக்கவியல் – தர்மத்தை குடை சாய்க்கும் அதே சமயம், இறுக்கமில்லாத கதைப்போக்கும், காட்சி ரூபங்கள் நாம் எதிர்பாரா வண்ணம் மாறியும், வெட்டியும் துரித கதியில் நகரும் உத்தியும் இந்த அலைவரிசைப்படங்களில் புகுந்தவை. இதையே, பின்னால் வந்த ஹாலிவுட் இயக்குனர் – பிரபலங்களும் பின்பற்றியிருக்கிறார்கள். புகழ்பெற்ற மார்டின் ஸ்கார்சீசும் [SCORSES] டரண்டினோவும் [TARANTINO] கோதாரின் பங்களிப்புக்கு தாங்கள் கடமைபட்டிருப்பதாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள்.

ஓர் ஓடுகாலி இளைஞனான மிச்செல் [MICHEL] ஒரு கார் திருடன். காரை திருடி விற்பன். காரைத் திருடி ஓடும்போது துரத்தி வந்த போலீஸ்காரரை சுட்டுக் கொன்றுவிட்டு தனது காதலியான பட்ரீஷியா எனும் [PATRICIA] அமெரிக்க மாணவியின் அறையில் போய் ஒளிந்து கொள்ளுகிறான். இவனது செயல்பாடுகள் எதுவும் அறியாத பெண் அவள். கடைசியில் அறிய வருகையில் இவனது தொந்தரவு தாளாது பட்ரீஷியா மிச்செலைப் போலீசிடம் காட்டிக்கொடுத்து விடுகிறாள், அவன் ஓடுகையில் போலீஸ் சுட்டுத்தள்ளுகிறது.

BREATHLESS – படத்தைச் செய்வதற்க முன் கோதார் பிரெஞ்சு சினிமா பத்திரிகை CAHIERS DU CINEMA-வில் சினிமா விமர்சனம் செய்து வந்தவர். இவரும் மற்ற புதிய அலைக்காரர்களும் “CINEMA DE PAPA” – அதாவது அப்பா காலத்து சினிமா எனும் பழைய “ஸ்டூடியோ பாணி” சினிமாவை தூக்கியெறிவதில் உறுதியணாக செயல்பட்டவர்கள். மிகவும் கடினமான சமூக விஷங்களை வெளிப்புறஙய்களில் படப்பிடிப்பு செய்து திரைப்படங்கள் செய்வதில் ஆழ்ந்து இருந்தனர். இவர்களுக்கு முந்தைய இத்தாலிய நியோரியலிஸமும் ஏகதேசம் இப்படித்தான் இருந்தது. சினிமாவின் எதிர்கால பிரச்சினைகளின் மையம் சந்திக்கவிருக்கும் பிரச்சினையோடு மோதுவதில் தம் வாழ்நாளைக் கழித்தவர் கோதார். ஒரு திரைப்படத்துக்கு மிக நன்கு கதையம்சமிக்க கரு இருக்கவேண்டுமென்ற கருத்தை நிராகரித்தவர் கோதார், “ஒரு திரைப்படத்துக்கு வேண்டியது ஒரு பெண்ணும் துப்பாக்கியும்தான்”, என்பார் கோதார்.

1952-ன் பிரான்சிலிருந்த மிச்செல் பொர்டெய்ல் [MICHEL PORTAIL] என்பவன் மோட்டார் சைக்களில் தன்னை விரட்டிய போலீஸ்காரனைச் சுட்டுக்கொன்றவன். அவனது காதலியும் ஓர் அமெரிக்க பெண்ணே. மேற்சொன்ன உண்மை நிகழ்வை தோரயமாகத் தழுவியது கோதாரின் படம் “BREATHLESS”, ஓரிடத்தில் கதாநாயகி பட்ரீஷியா சொல்லுவாள், “நான் சுதந்திரமாயில்லாததால் சந்தோஷமாயில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

கஜககஜவென்று நெருக்கமான தெருக்களில் கையிலேந்தும் காமிராவால் படமாக்குவதும், வேகமாய் பதிவாக்க “டிராலிஷாட்”களுக்கு, நோயாளியின் சக்கர நாற்காலியில் அமர்த்தித் தள்ளச் செய்தும் படமாக்குவார் கோதார். புதியவகை சினிமாவின் வியத்தகு தொழில் நுணுக்க படப்பிடிப்பு உத்தியான “ஜம்ப் கட்” [JUMP CUT] எனும் காமிராவை விந்தை வித்தையும் இவரது கண்டுபிடிப்பு என்றே கூறப்படுகிறது. BREATHLESS முதல் பிரெஞ்சு புதிய அலைத் திறப்படமாகும். ஒளிப்பதிவாளர் ராவுல் கௌடார் [RAOUL COUTAR]ன் காமிரா சுரு சுருவென அழகு விளயைாட்டு காட்டுகிறது இசையமைப்பாளர் மார்ஷல் சோலால்-ன் [MARTIAL SOLAL] இசை அறிவு ஜீவித்தனம் கொண்டது. ஐரோப்பாிய இசை மேதை மொஸார்ட்டின் [MOZART] சிம்ஃபனி ஒன்றை தாம் ஜாஸ் இசையில் உள் நகர்த்திக் காட்டியிருப்பது மிக அரிதான இசைக் கோர்வைச் செயல் இப்படத்தின் துரிதகதி நகர்வுகள் ஒரு சில அமெரிக்க ஆர்சன் வெல்ஸ் [ORSON WELLES] படங்களில் காணும் துரித வகைமையானது. மிச்செல்லாக ழான்-பால் பெல் மாண்டோவும் [JEAN-PAUL BELMANDO] பட்ரீஷியாவாக ழான் செபர்ஜும் [JEAN SEBERG] சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கோதார் “ஆல்ஃபாவில்” [ALPHAVILLE] என்று ஒரு ஜேம்ஸ்பாண்ட் – பாணியிலான விஞ்ஞான கற்பனைத் திரைப்படமொன்றை 1965-ல் இயக்கி வெளியிட்டார். ஆல்ஃபாவில் திரைப்படத்தின் கதை, எதிர்கால அதிசக்திமிக்க விஞ்ஞான வளர்ச்சியின் விளைவில் உருவானதாகக் கொள்ளப்பட்டது. கம்யூட்டரின் மேலாதிக்கம் மனிதனை அடிமைபடுத்துவதாயும் கதை.

ஆல்ஃபாவில், பிரெஞ்சு கலாச்சார மையத்தில் திரையிடுவதற்கு முன்பாக 1965-களில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தொடர்ந்து சென்னையில் ஓடியன், மற்றும் நியூ குளோப் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வந்தன. ஷான்கானரி நடித்த புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அன்றைய சென்னை சினிமா ரசிகர்களுக்கு கொலை குத்து ஒரு வழியாக ஆல்ஃபாவில் பிரெஞ்சு படமும் பிரெஞ்சு கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டு ஆவலோடு பார்த்தபோது பெரும் ஏமாற்றமாகவே போயிற்று.

ழான்-லக் கோதார் ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களிலிருக்கும் எவ்வித சிறப்பு தந்திர யுக்தி [SPECIAL EFFECT]யுமின்றி, பொருட்செலவுமிக்க செட்டுகள் எதுவுமின்றி ஓர் அறிவியல் – கற்பனைக் கதையைக் கொண்ட திரைப்படத்தை 1965-ல் உருவாக்கியதை வைத்துத்தான் மேற்கூறிய ஜேம்ஸ்பாண்ட் படங்கள் குறித்த அடிக்கோடு, பாரிஸ் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலுள்ள ஓட்டல் வரவேற்பறைகள், நியான்சைட் அறிவிப்புகள், அலுவலகக் கட்டிடங்கள், உயர் அதிகாரிகள் கூடுமிடம் ஆகியவற்றைக் கொண்டு அவற்றின் வழியே எதிர்கால யதேச்சாதிகாரத்து மூளைகளையும் ஊற்றுக் கண்களையும் கண்டறியும் முயற்சி இப்படம். எதிர்கால விஞ்ஞான யுகத்து கதைப்போக்கு என்றாலும், இதில் வரும் கம்ப்யூட்டர், “இறந்தகாலமும் எதிர்காலமுமில்லாத ஒரு நிகழ்காலத்தைப் பற்றியது என்றே, “மைக்” குரலில் பேசுகிறது.

தனியார் உளவுத் தளத்தைச் சேர்ந்த எலம்மி காவுஷன் [LEMMY CAUTION] எனும் உளவாளி, லே்ஃபாவில் எனும் நகரத்துக்குள் நுழைகிறான். என்ன நகரம், யார் கட்டுப்பாடிலிருப்பது, என்னவெல்லாம் நடக்கிறது, காவுஷனின் பணி நோக்கம் என்னவென்பதையெல்லாம் அதிதுரிதகதியில் விரிக்கையில், ஆல்ஃபாவில் பிற உளவாளி – விஞ்ஞான சாகசத் திரைப்படங்களினின்றும் புதிய அலையால் மேலெழும்புவதைக் காட்டுகிறார் கோதார். காவுஷன் ஆல்ஃபாவில் பகுதியில் நுழைந்தவுடன் அவருக்கிருந்த தொடர்பாளர் ஆல்ஃபாவில்லை கட்டுப்படுத்தும் மாபெரும் கம்ப்யூட்டரால் கொல்லப்படுகிறார். அந்த கம்ப்யூட்டர் தன் மகா சக்தித் திறனால், ஆல்ஃபாவில் பிரஜைகள் ஒவ்வொருவரும் தமது தனித்தன்மை – தனித்துவத்தையும், சாதாரண மனிதனுக்குள்ள உணர்வுகளையும் இழக்கச் செய்து இயந்திரங்கள் மாதிரி இயங்க வைத்துள்ளது. ஆல்ஃபாவில் என்பது எந்தவித நகரமோ அல்லது விண்வெளி கிரகமோ அல்ல. அண்டவியல், அணு ஆகியவற்றின் அறிவுள்ள பேராசிரியர் வான் ப்ரான் [VON BRAUN] என்பவர் காணாமற்போய்விடுகிறார். அவர் ஆல்ஃபாவில்லில் சிக்கிக் கொண்டிருப்பதை யூகித்து காவுஷன் அங்கு சென்று அவரை விடுவிக்க வேண்டும் அல்லது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற முடிவோடு பயணப்பட்டு நுழைகிறார். அங்கு அவர் சந்திக்கும் முதல் மனிதன் ஹென்றி டிக்சன் [HENRI DICKSON] என்ற இன்னொரு உளவாளி. இவனை கம்ப்யூட்டர் கொன்றுவிடுகிறது. விஞ்ஞானி டாக்டர் வான் ப்ரானினின் மகள் நடஷா [NATACHA]வையும், காவுஷன் சந்திக்கிறார். பேராசிரியர் அவளையும் தன் தனித்தன்மையான பெண்மை உணர்வுகளையும், பிற சிந்தனையையும் அறியாதவளாக ஆக்கியுள்ளார். காவுஷன் நடாஷாவுடன் பேச்சு கொடுக்கையில் அவளுக்கு “காதல்” என்பதே அறிந்திராத விஷயமாகவும், பாலுணர்வு எழுச்சியற்றவளாயும், எவ்வித உள்ளுணர்வும் அற்றவளாய் பொம்மையாக நடமாடுகிறாள். யதேச்சதிகாரத்தின் ஆட்சிக்குட்பட்ட தேசத்து பிரஜைகளின் கதியை இவ்வாறு விமர்சிப்பதாய் கோதாரை எடுத்துக்கொள்ளலாம். ஆல்ஃபாவில் ஒரு அற்புத-பிரம்மாண்ட கம்ப்யூட்டரால் நடத்தப்படுகிறது. இச் சாதனம் உண்மையான மனித உணர்ச்சிகள், பந்தங்களையெல்லாம் மரணதண்டனைக்குரிய குற்றமாகச் செய்திருப்பதோடு, அப்படியாக கம்யூட்டர் தண்டனையளிக்கும் பிரஸைகளை ஒரே சமயத்தில் ஒரு நீச்சல் களத்தில் குதிக்க வைத்து, குதிக்கையிலேயே சிப்பாய்களால் சுட்டுக்கொன்று குளத்தில் தள்ள வைக்கிறது. இந்த கம்யூட்டரையும் பேராசிரியரையும் அழிப்பதுதான் காவுஷன் வேலை. கம்யூட்டருக்கு மனித அறிவார்த்த படைப்பான கவிதைகளை உணவாக ஊட்டுவதன்ள வாயிலாக அதன் பிரதான மூளை மண்டலத்தைக் குழப்பி நாசமாக்கி அழிப்பதுதான் உளவாளி லெம்பி காவுஷன் ஏற்றிருக்கும் கடமை. இந்த கம்யூட்டர் – மனிதன் மோதல் 2001- A SPACE ODYSSEY [STANLEY KUBRIC-இயக்கிய அதி உயரிய திரைப்படம்] திரைப்படத்திலும் வருகிறது. மனிதனின் படைப்பான கம்யூட்டர் மனிதனையே ஆட்டிப் படைப்பதும் அழிப்பதும் விஞ்ஞான ஐரனி!

கோதாரின் பல்வேறு திரைப்படங்களில் ஏற்படும் அனுபவம் போலவே ஆல்ஃபாவில் படத்திலும்முதல் கணிசமான நேரத்துக்கு கதையே கிடையாது. உற்று கவனிக்க இப்படத்தில் வறட்சியான நகைச்சுவையும், கவித்துவமான தீவிரத்தன்மையும் கொண்டிருப்பது விளங்கும்.

ழான்-லக் கோதார் தமது 91-வது வயதில் செப்டம்பர் 13ந்தேதியன்று 2022-ம் ஆண்டில் அமைதியாக காலமானார்.

கோதாரின் சமகாலத்தவர், நெருங்கிய நண்பர், அவ்வப்போது யோசனை. அறிவுரைகளைப் பகிர்ந்து கொண்டவர் என ஒருவரைக் கறிப்பிட்டால் அது ராபெர்ட் ப்ரெஸ்ஸோன் [ROBERT BRESSON]. 1907-ல் பிரெஞ்சு சிறு நகரமொன்றில் பிறந்து கல்லூரியில் தத்துவம் படித்து புகைப்படக்கலை, ஓவியக்கலைகளில் கை நனைத்து, பிறகு திரைபடங்களுக்குக் கதை வசனமெழுதியவர். ப்ரெஸ்ஸோன் முழுசாக ஒரு பதிமூன்று திரைப்படங்கள் இவரது பங்களிப்பாக சொல்லப்படுகின்றன. ப்ரெஸ்ஸோன், 2-ம் உலகப்போரின்போது, நாஜிப்படைகளால் பாரிஸ் ஆக்கிரமிக்கப்பட்டபோது, ஆக்கிரமிப்பை எதிர்த்த புரட்சியாளர்களோடு இணைந்து போராடி, ஜெர்மன் படையால் சிறையிலடைக்கப்பட்டார். ப்ரெஸ்ஸோனின் படங்கள் ஆன்மீக வழியில் மெய்ப்பொருள் உணர்த்தும் வகையானவை. கிறிஸ்துவம் கூறும் கருணை, இறை நம்பிக்கை, விடுதலை, மன்னிப்பு மனிதத்தன்மை ஆகியவற்றுக்கும் மன வக்கிர குரூரங்கள் பொறாமை, கோபதாபம், தண்டிக்கும் மனப்போக்கும் செயலும், பழிவாங்கல் ஆகியவற்றக்கும் இடையே நிகழும் போராட்டங்களை உள்ளடக்கிய கதையாளடல்களைக் கொண்டவை இவரது திரைப்படங்கள். ராபெர்ட் ப்ரெஸ்ஸோன் 1999-ல் காலமானார்.

ப்ரெஸ்ஸோன்1951-ல் இயக்கிய “JOURNAL D”UN CURE DE CAMPAGNE” [DIARY OF ACCOUNTRY PRIEST] எனும் திரைப்படம் உலக சினிமா ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவனமீர்த்தது. திரைப்படமாக்கலுக்கு பெரிய மூலதனமோ, புகழ்வாய்ந்த நட்சத்திரங்களோ, ஸ்பெஷல் EFFECT எனும் உத்திகளோ தேவையில்லாமலே சிறந்த படத்தைச் செய்ய முடியுமென்பதை நிரூபித்துக் காட்டினார் ப்ரெஸ்ஸோன். ஒரு நல்ல திரைப்படம் எந்த கதையையும் சொல்ல வல்லது. எவ்வித உணர்வையும் தட்டியெழுப்ப வல்லது. எல்லா தேவை – தேவையற்ற – அவசிய – அவசியமற்ற – தனியார் மயம் அல்லது பொதுமயம் கொண்ட கருத்தாக்கத்தையும் தனது அடிப்படையான நிஜ கட்டமைப்பு வழியே தன்னை ஆட்படுத்திக்கொள்ள சக்தி கொண்டது என்பார் ப்ரெஸ்ஸோன்.

ஜார்ஜஸ் பெர்னனோவின் [GEORGES BERNANOS] நாவலை தழுவி செய்யப்பட்ட படம் “ஒரு கிராமத்து புரோகிதனின் நாட் குறிப்பு” நகருக்கு ளெியில் சிற்றூர் ஒன்றிலுள்ள ஆலயத்தின் இளம் பூசாரி ஒருவன், பூஜை, தினசரி, வாராந்திர ஜெபகாரியத்தோடு ஊரிலுள்ளோரின் அன்றாட வாழ்க்கையை – அதிலுள்ள வாழ்வியல் கஷ்டங்களையும் கவனித்து தன்னால் ஆவன செய்கிறான். இதன் காரணமாய் கேள்விகள் எழும்போதும் தன் நம்பிக்கை விசாரணைக்கு உள்ளாகும்போதும் அவற்றை எதிர்கொள்ளுகிறான். கிறிஸ்தவ சமயம் உலகிற்கு முன் வைக்கும் செய்தியை, ப்ரெஸ்ஸோனின் திரைப்படம் லியோன் ஹென்றி பியூரெல் [LEONCE-HERI BUREL]-ன் அற்புத காமிரா ஒளிப்பதிவில், அசையும் உருவங்களையும், ஒலியோடும் நாவலின் வார்த்தைகளை சதையும் ரத்தமுமாக்கியிருக்கிறது, ப்ரெஸ்ஸோனின் மற்றொரு சிறந்த படம் ‘A MAN ESCAPED” (1956)

ஒரு கைதி அல்லது கைதிகள் பலர் நாஜி கைதி முகாம்களிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பித்தல், பிடிபடுதல் என்ற மனிதனின் விடுதலை மற்றும் ஜீவித்திருத்தல் கருத்தைச் சொல்ல யுத்த கால உண்மை நிகழ்வுகளையும் அவற்றினடிப்படையிலமைந்த கற்பனைக் கதைகளையும் கொண்டு எடுக்கப்பட்ட அரிய ஹாலிவுட் படங்கள் கண்முன் நிற்கின்றன. பிரிட்டிஷ் சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஜெர்மன் கைதியைப் பற்றி “ONE THAT GOT AWAY”-யை மறக்க முடியுமா? அல்லது “STALAG-17”, ‘THE GREAT ESCAPE” போன்ற படங்களை மறக்க முடியுமா. பிரான்சிலிலேயே எடுக்கப்பட்ட மகத்தான ஃபிரெஞ்சு சிறை-தப்பியோட்டப்படங்களான JACQUES BECKER இயக்கிய “THE HOLE” [1960] JEAN GENET-ன் “A SONG OF LOVE” 91950] போன்ற கைதி தப்பியோடும் படங்கள் மறக்க முடியாதவை.

ப்ரெஸ்ஸோனின் திரைப்படம் “A MAN ESCAPED” மேற்கூறிய சகாசச் சித்தரிப்பையே முதன்மையாக வைத்து பிண்ணப்பட்ட ஜனரஞ்சக – வணிகத்தன படங்களிலிருந்து வெகுவாக தனித்து நிற்கிறது. தொழில் முறையில்லாத கலைஞர்களைக் கொண்டு நாடகத்தனத்தை முற்றிலும் புறந்தள்ளி நடிக்க வைத்திருக்கிறார் ப்ரெஸ்ஸோன், படத்தில் கைதி ஃபாண்டேன் [FONTAINE] யாரும் கூட இல்லாத தனிச் சிறையில் தனிமையென்னும் மனச் சித்ிரவதையில் புழுதெளிவதும் விடுதலைமூலம், இருத்தல் நிலையில் உத்தரவாதத்தை அடையத் துடிப்பதும் இறுதியாக தப்பித்து வெளியேறுவதும் திரைப்படம். இந்த ஓட்டத்தில் எவ்வித தொய்வுமின்றி ஒரு ஆல்ஃப்ரட் ஹிட்ச் காக்கின் படத்திலுள்ள “சஸ்பென்ஸ்” கொண்டாயும் இயக்கியிருக்கிறார் ப்ரெஸ்ஸோன். கைதி ஃபாண்டேனாக FRANCOIS LETTERRIER அற்புதமாகச் செய்திருக்கிறார் LEONCE HENRI BUREL-ன் காமிரா ஒளிப்பதிவும் மிகவும் குறிப்பிடத்தக்கது. ப்ரெஸ்ஸோன் என்றாலே அவரது திரைப்படம் “ஜேப்படிக்காரன்” [PICKPOCKET-1959] பிரபலமாய் தெரியும். ஒன்றுக்கு மேற்பட்ட விஷயற்களால் ப்ரெஸ்ஸோனின் ஜேப்படிக்காரன் முக்கியமான படமாகிறது.

1959-ல் இயக்கி வெளியிட்ட PICKPOCKET, திரைப்படத்தில் கதையை படத்தின் நடிப்பு, காமிரா நகர்வுகள் வாயிலாக ஓட வைக்கிறார் ப்ரெஸ்ஸோன். மிச்செல் எந்த வேலையும் கிடைக்காத, படித்த புத்தி ஜீவித்தனமான இளைஞன். ஓர் சிறிய இருப்பிடத்தில் வாழ்கிறான். நோய்வாய்ப்பட்டதாய் மருத்துவமனையில், ரயிலில், பஸ்ஸில் கூட்டத்தில் ஜேப்படி செய்கிறான். படத்தின் நகர்வுகளிடையே, பா்திரங்களின் உள்நோக்க ஓட்டத்தையும், பண ஓட்டத்தையும் நமக்குச் சொல்ல “பின்குரல்” [voice-over] மூலம் மிகவும் தணிந்த குரலில் பேசிச் சொல்கிறார். இந்த உத்தி பல்வே இயக்குனர்களின் பல்வேறு திரைப்படங்களிலும் கையாளப்பட்ட / நுணுக்க வகை, ப்ரெஸ்ஸோன் தம் படங்களில் பின்னணி இசையைக் கூட கராறாக கதையின் முக்கிய கட்டங்களிலும், வார்த்தைகளைக் கொண்டு வெளியிட முடியதத தருணங்களிலும் மட்டுமே இசையை உபயோகிப்பார். இந்த வகையான எளியபடமாக்கலில் பார்வயைாளர்கள் மிக்க சுதந்திரத்தோடு காட்சிரூப நடப்புகளை ரசிகர்களே சிலாகித்து விமர்சிக்கும்படிக்கு அவர்களுக்கு கிடைத்த சலுகையாகிறது. இவ்வகைத் திரைப்படம் ஒன்று முன் வைக்கும் கேள்விகளுக்கு அப்படத்தின் கதாபாத்திரங்களோடு, படம் பார்ப்பவனும் ஒன்று சேர்ந்து எதிர்கொண்டு விடை தேடும்படியாகிறது.

படத்தில் மிச்செல் ஒரு அமெச்சூர் ஜேப்படிகாரன், தன் அன்றாட செலவினங்களுக்காக அதை கைக்கொண்டவன் போகப்போக அதில் கைதேர்ந்த தொழில்முறை ஜேப்படிக்காரர்களுடன் அறிமுகமாகி அவர்கள் உதவியால் அதில் பயிற்சியளிக்கப்பட்டு பல்வேறு நுணுக்கங்களைக் கற்று அதிலேயே முழுநேர தொழிலாளியாகிறான். அமெச்சூராக இருந்தபோது ஒருமுறை எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டு சமாதானமாய் எடுத்ததை உரியவரிடம் கொடுத்துவிட்டு வேகமாக மிச்செல் ஓடி மறைவதை கூடி நிற்பவர்கள் கவனிக்கும் கட்டம் நடிப்பு காமிரா அனைத்துமே அருமை. ஜேப்படியடிக்கும் காட்சிகளை மயிர்கூடச் செறியும்படி இயக்கியிருக்கிறார் ப்ரெஸ்ஸோன். திரைப்பட வரலாறில் இவர்போல எவருமே செய்ததில்லை, தாய் இறந்துபோய், அவளுக்கும் மிச்செலுக்கும் இடையே வெறும் சேதியேதும் அளவில் தோன்றும் இளம் பெண் ஜீன் [JEANNE] அவனது வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதில்லை. மிச்செலுக்கு வெளியுலகையும், வெளி மனிதர்களோடும் அவனால் ஒருவித உணர்ச்சிவயப்படலோடும் திருப்தியுடன் மனித உணர்வோடும் தொடர்புகொள்ள ஜேப்படித்தல் துணையாயிருப்பதாயும் உணர்கிறான். இறுதியில் பணத்துக்காக ஜேப்படிப்பதையே அவன் விரும்பாது ஒரு கலையாகவும் அதைநினைத்து பிடிபடுவதையும் எதிர்க்காமல் ஏற்கிறான். மிச்செலாக மார்டின் லசேல் [MARTIN LASALLE], [MARIKA GREEN] மரிகா கிரீன் எள்பவர்கள் மிக இயல்பாக தொழில்முறை நடிகர்களை விட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். லியோன் ஹென்றி பியூரெலின் [LEONCE HENRI BUREL] காமிரா மிக முக்கியமான பாத்திரம்.

பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் முக்கியமான திரைப்பட கர்த்தா ஃப்ரான்ஸ்வா த்ரூம்பா [FRANCOIS TRUFFAUT]. த்ரூஃபா என்ற பெயர்சொல் என்னை ஈர்த்ததற்கு முக்கிய காரணம் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக். ஹிட்ச்காக்க பற்றின கட்டுரையை “சுபமங்களா” இதழில் 90களில் எழுதவேண்டியிருந்தது. கராறான ஆசார சினிமா விமர்சகர்கள், கலையழகோடு திகில் சினிமா செய்து வந்த ஹிட்ச்காக்கை எவ்விதத்திலும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் திகில் படங்களை சஸ்பென்ஸ்ஸோடு செய்யும் வெறும் ஜனரஞ்சக சினிமாக்காரன் என்றே தீண்டத் தகாதவராய் தள்ளி வைத்தனர். அந்த சமயத்தில்தான் நன்கறியப்பட்ட ஃபிரெஞ்சு கவிஞரும், பத்திரிகையாளரும், பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் தோற்றுவாய்களில் முக்கியமான ஒருவரான ஃப்ரான்ஸ்வா த்ரூஃபா ஹிட்ச்காக்கை சந்தித்து அரிய நீண்ட நேர்காணலை செய்திருந்தார். அதைஒட்டி ஹிட்ச்காக்கின் கலை நேர்த்தியும் அழகியலும் மிக்க திரைப்படங்களைப் பற்றியும் அவரது பங்களிப்பு வாழ்க்கை குறித்தும் நீண்ட பெரிய நூலை எழுதி, அந்த நேர்காணலையும்சேர்த்து வெளியிட்டார். அதன்பிறகுதான் ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் அழகியல் மிக்க கலைப்படங்களாக அங்கீகரிக்கப்பட்டன. அந்த நூல் மூலம் த்ரூஃபாவை நான் அறிந்தவனாகி அதன் பின்னரே அவரது திரைப்படங்களைப் பார்க்கலானேன்.

ஃப்ரான்ஸ்வா த்ரூஃபா பாரிஸ் நகரில் 1932-ல் பிறந்தார். அதிகம் படிக்கவில்லை. பட்டறையில் வெல்டர் வேலை முதல் கடின வேலைகள் செய்து வந்தவர். புத்தகப் பிரியரும் சினிமா பித்தும் கொண்டவர். CAHIERS DU CINEMA –திரைப்பட இதழில் நிறைய எழுதியவர். 20-திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய த்ரூஃபா 1984-ல் காலமானார்.

த்ரூஃபா 1955-ல் “THE VISIT” எனும் காதல் கதை பற்றிய குறும்படமொன்றை இயக்கித் தயாரித்த ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் போட்டுக் காண்பித்தார். அதன்பிறகு 1958-ல் “வால்கள்” [THE BRATS] எனும் குறும்பு மிக்க சிறுவர்களை பற்றின குறும்படத்தை இயக்கினார். இவரது முதல், முழு திரைப்படம் “400 உதைகள்” [400 BLOWS] 1959-ல் இயக்கி வெளிவந்தது. யாருக்கும் யாரும் எந்த உதையோ அடியோ படத்தில் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் படாத கஷ்டங்கள் பட்டு அனுபவித்தவனைப் பார்த்து சின்னவயசில நல்லா அடிபட்டவன்… செம்ம அடிபட்டவன்”, என்று கூறுகிறோம். இப்படி சொல்லுவது ஒரு சொல்வழக்கு – சொல்லாடலின் மரபுத் தொடர். பிரெஞயு்சு மொழியில், “நானூறு உதைகள் அறிந்தவன்”, என்றால் பல வித கஷ்டங்கள்பட்டு சமாளித்த / அனுபவசாலி என்றாகிறது. 400 BLOWS [LES QUATRE CENTS COUPS] திரைப்படம் பெரும்பான்மைக்கு த்ரூஃபாவின் இளம்பருவத்து நிகழ்வுகளைக் கொண்ட சுயவராற்றுப் படம் எனலாம். படத்தில் – ஆண்ட்வா டய்னெல் [ ] எனும் மைய பாத்திரம் த்ரூஃபா இளமையிலிருந்தது எனப்படுகிறது. சதா குறும்பு செய்யும் பையன், உண்மையை திருத்திச் சொல்லும் பையன். அவனை சோதிக்கும் உளநல மருத்துவர் ஒருநாள் கூறுவார்,

“நீ எப்பப் பாத்தாலும் பொய்யே சொல்றதா ஒங்கம்மா அப்பா சொல்றாங்க”, என்று அதற்கு உடனே ஆண்ட்வா கூறுவான்,

“சில சமயம் அவங்ககிட்டே நா நிழமே பேசுவேன். ஆனா, அப்பவும் அவங்க நம்பறதில்லே, என்று ஆண்ட்வா ஒரு புத்தகப் பிரியன். நிறைய படிப்பான். பால்ஹாக் என்றால் உயிர். ஒரு பள்ளிக்கூட கட்டுரையை எழுதுகையில், தன் சொந்த உணர்வுகளை அதில் வெளியிட்டுக்காட்ட, பால்ஸாக்கின் [HONORE DE BALZA ] ஒரு நூலின் கருத்துக்களை உபயோகித்து எழுத, கருத்துக் களவாடல் [PLAGIARISON] குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான். த்ரூஃபா தன் சிறுவயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஆண்ட்வா எனும் சிறுவன் பாத்திரம் வழியே படமாக்குகையில் தனது விடலைப் பருவ நிகழ்வுகளை வயது வந்த மனிதனின் பார்வை வழியே யோசித்து சொல்லுவதில்லை. ஒரு நிகழ்கால நடப்பாகவே சித்தரித்துள்ளார். ஆண்ட்வா தன் வளர்ப்புத் தந்தையின் தட்டெழுத்து எந்திரத்தைத் திருடி விற்று பாரிஸிலிருந்து ஓடிப்போக பணம் திரட்ட திட்டமிடுகிறான். பிறகு மனம் மாறி அதை எடுத்த மாதிரியே வைக்க முற்படுகையில் அவரிடம் பிடிபட்டு போலீசில் ஒப்படைக்கப்படுகிறான். திருடர்கள், வேசிகளோடு வைக்கப்பட்ட நிலையில் அவன் தப்பி வெளியேறி கடற்கரையை அடைகிறான். இந்த இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அபராம். HENRI DECAE-ன் காமிரா கலை அபாரம். ஆண்ட்வாவாக ழான் பியர் லாட் [JEAN – PIERRE LEAUD] சிறப்பாக நடித்துள்ளார். அவ்வாண்டின் [1859] குறைந்த இயக்குனருக்கான விருது கான் திரைப்பட விழாவில் த்ரூஃபாவுக்கு தரப்பட்டது.

973-ல் த்ரூஃபாவும் திரைப்பட இயக்குனர் ஃபெர்ராண்டு [ ] எனும் பாத்திரத்தில் நடித்து வெளியான படம் “இரவுக்கு பகல்” [DAY FOR NIGHT]. இப்படத்தை புதிய அலை வகைமையில் அமையாத ஒரு படமாகச் செய்தார் த்ரூஃபா. திரைப்படமாக்கல் என்பது ஒரு கலை என்பதைக் காட்டிலும் ஒரு கைவினைக் கலை [CRAFT] யத்தனிப்பென்று உணர வைக்கிறது இத்திரைப்படம். [MEET PAMELA] என்ற திரைப்படம் படமாக்கப்படுகையில் எழும் சிக்கல்கள் இடையூறு என்று “திரைப்படத்துக்குள் திரைப்படம்” எனும் வரிசையிலான படம் இது. எல்லாம் தயார். இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிக, நடிகையர் மற்ற எல்லாரும் ஒரே குடும்பமாய் பழகும் சூழலை படம் காட்டுகிறது. படப்பிடிப்பின்போது முக்கிய கதாநாயகியாக நடிப்பவர் உடல்நிலை மோசமாகி வரமுடியவில்லை. வேறு நபரை கொண்டு வருகையில், தொழிற்சங்கம்போராடத் தொடங்குகிறது. இப்படம் அவ்வாண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப்படம் ஆஸ்கர் விருதைப் பெற்றது.

1975-ல் த்ரூஃபா ஹாலிவுட் மாதிரியில் ஒரு காதல் கதை திரைப்படத்தைச் செய்தார். ஒரு வகையில் பொருட் கெலவுமிக்க வராற்றுப் பின்னணியிலான படம் என்று கொள்ளலாம். THE STORY OF அதேல் ஹியூகோ [THE STORY OF ADELEH] என்ற படம். அதேல் பிரபல 19-ம் நூற்றாண்டு பிரெஞ்சு கவிஞர் – நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் இரண்டாவது மகள். நெப்போலிய ரெசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதின் மூலம் தாம் கைதாவதை தவிர்க்க விக்டர் ஹியூகோ ஒரு தீவுக்கு குடும்பத்தோடு போயிருக்கிறார். அத்தீவு பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்டதாயிருக்க, நாவலாசிரியரின் இரண்டாவது மகளள் அதேல் ஆல்பெர்ட் என்ற பிரிட்டிஷ் போர் வீரனைக் காதலிக்கிறாள். ஆல்பெரட் அதேலை மேலெழுந்தவாரியாக நேசிப்பதோடு வரைவில் HALIFAX எனும் வெகுதூரத்திலுள்ள இடத்துக்கு லெஃப்டினெண்டாக பதவி உயர்ந்து போய்விடுகிறான். விக்டர் ஹியூகோவின் புகழ்பெற்ற நாவல்கள் “லே மிஸிரப்ளே”யும் “நாட்டர்டாம் கூனன்” என்பதும். லே மிஸரப்ளே, பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் பலமுறை திரைப்படங்களாய் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டு வெற்றிபெற்றது. தமிழிலும் “ஏழைப்படும் பாடு” என்ற 50-களில் ராம்நாத் இயக்கத்தில் படமாகி பெரும் வெற்றி பெற்றது. நாட்டர்டாம் கூனனும் இருமுறை வெற்றிகரமான படங்களாயின. அதேலும் தந்தையைப் போல எழுதுபவன். ஆல்பெர்ட் மீது கொண்ட ஆழ்நத காதலால் வீட்டை விட்டு ஓடி கப்பலில் ஆயிரம் மைல் கடந்து ஹாலிஃப்பாக்ஸை அடைகிறான் அதேல். ஓப்ரியன் என்ற வயதான நல்லுள்ளம் கொண்ட கோச்சுவண்டியோட்டியின் நட்பில் பாக்டர் ஸாண்டர் எனும் வயதான மருத்துவரின் விடுதியில் தங்குகிறாள். எல்லாரிடமும் நேரத்துக்கு ஏற்றாற்போல பொய் சொல்லுகிறாள். ஆல்பெர்டை கண்டுபிடித்து தன் காதலை பலவழியிலும் எடுத்துச் சொல்லி தன்னை மணக்கும்படி மன்றாடியும் அவன் அவளை அறவே நிராகரிக்கிறான். அவன் ஒரு பெண்பித்தன், பல பெண்களோடு உறவு வைத்திருப்பதையும் அவள் ஏற்றுக்கொண்டு தன்னை மணக்க கெஞ்சுகிறாள். அவன் மறுத்துவிட்டு பதவி உயர்வில் எவளோடோ எங்கேயோ போய்விட அதேல் புத்தி பிறழ்ந்து வண்டியோட்டியின் உதவியில் விடுதியில் சேர்கிறாள். அங்கிருந்து புத்திபேதலித்து பார்படோஸ் [BARBADOS] எனும் இடத்திலுள்ள கருப்பு இன மக்களின் குடியிருப்பில் அவளை மீட்டெடுத்து வந்து வைக்கிறார்கள். புத்தி பிறழ்ந்த நிலையிலுள்ள அவனை கவனித்து யார் என்பதை அறிந்து கொண்ட பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவன் அங்கு தன் உயரதிகாரியான ஆல்பெர்டைக் கண்டு கூறி அழைத்து விடுகிறான். அதேலுக்கு சுயநினைவும் இன்றி ஆல்பெர்டை பாராது போய்விடுகிறாள். கருப்பின மக்களின் அதிகாரி ஒருவர் விவரமறிந்து அவள் தந்தையும் உலகப் புகழ்பெற்றஎழுத்தாளருமான விக்டர் ஹியூகோவுக்கு கடிதமெழுதுகிறார். இதற்குள் நெப்போலியன் மரணமடையவும், ஹியூகோ ஊர் திரும்புகிறார். அதேல் ஊருக்கு அனுப்பப்படுகிறாள். விக்டர் ஹியூகோ 1895-ல் காலமாகிறார். அதன்பிறகு அதேல் 1915-ல் முதல் உலக மகாயுத்தத்தின்போது காலமானாள். இந்த உண்மை நிகழ்வைக் கொண்டு த்ரூஃபோ எடுத்த இப்படத்தில் அதேலாக நடித்த இஸபெல் அட்ஜான் [ISABELLE ADJANI] பிரம்மாதமாக நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இப்படத்தின் வியத்தகு ஒளிப்பதிவை புகழ்பெற்ற காமிரா கலைஞர் நெஸ்டர் அல்மெண்டரோஸ் [NESTOR ALMENDROS] செய்திருக்கிறார்.

நெஸ்டர் அல்மெண்ட்ரோஸின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவில் 1980-ல் த்ரூஃபா இயக்கிய “கடைசி ரயில்” [LAST METRO] என்ற திரைப்படம் வெளிவந்தது. இரண்டாவது உலகப்போர் பின்னணியில் – பாரிஸ் ஹிட்லரின் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு யூதர்கள் தேடி வேட்டையாடப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் லாஸ்ட் மெட்ரோ முக்கியமான திரைப்படம், புகழ்பெற்ற யூத நாடகத் தியேட்டர் குழுவின் சிறந்த இயக்கனர் லூகாஸ் ஸ்டைனர் [LUCAS STIENER] என்பவர் நாஜிகளால் தேடப்படுவதால் தியேட்டரின் ரகசிய பாதாள அறையில் ஒளிந்திருக்கிறார். அவரது மனைவி மரியன் [MARION] தியேட்டரை நிர்வகித்து புதியதாக வந்து சேர்ந்த பெர்னார்டு கிரேஞ்சர் என்பவனைக் கொண்டு தொடர்ந்து நடத்துகிறார். அதே சமயம் நாஜி ஆதரவாளனும் நாடக விமர்சகனுமான ஒருவனின் இடையூரும் சேருகிறது. மிகத்துல்லியமான காட்சி கூறலோடு சிறந்த நடிப்பும் இணைந்து படத்தை சிகரத்துக்கு இட்டுச் செல்லுகிறது. உடை, காட்சி ஜோடனை சூழ்நிலை என சகலமும் அந்த நாட்களுக்கே இட்டுச் செல்லுகின்றன. பெர்னார்டாக ஜெரார்டு டிபார்டியோவும் [GERARD DEPARDIEU] லூகாசாக ஹைன்ஸ் பென்னன்டும் [HEINZ BENNENT] மரியமாக காத்தரின் டெனும் வயும் [CATHERINE DENUEUVE] மிக இயல்பாக நடித்திருக்கும் த்ரூஃபாவின் சிறந்த படங்களில் ஒன்றான லாஸ்ட் மெட்ரோ மிகச்சிறந்த அயல்மொழி திரைப்பட விருதையும் பிரெஞ்சு அகாதமி விருதுகளையும் பெற்றிருப்பதாகும்.

பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் முக்கிய இயக்குனரும் பெண் திரைப்படக்கலைஞருமான ஆக்னஸ் வார்ததா [AGNES VARDA] பாரிஸில் ஓடும் செய்ன் நதியின் இடப்புறக் கரைப் பகுதியிலிருந்து வந்தவர். பெல்ஜியத்தில் பிறந்து பிரான்ஸில் வளர்ந்த வார்தா 1928-ல் பெல்ஜியத்தில் பிறந்தவர். இவர் சிறந்த தொழில் முறை புகைப்படக் கலை நிபுணர், திரைக்கதை எழுத்தாளரும் கூட, இவரது CLEO FROM 5-9 என்ற திரைப்படமும் (1962) வேகபாண்ட் [VAGABOND] என்ற படமும் [1985] புகழ்பெற்றவை. இவரது தந்தை கிரேக்கர். தாஸ் பிரெஞ்சுக்காரர். ஆகனஸ் வார்தா 2019-ல் தம் 91-வது வயதில் காலமானார்.

வார்தா 1962-ல் செய்த CLEO FROM5-7 என்ற படத்தில் புகழ்பெற்ற பெண் இசைக்கலைஞர் – பாடகி கான்சர் நோய் இருக்குமாவென பரிசோதிக்கச் சென்று பரிசோதனை விடைக்காக காத்திருக்கிறாள். புதிய அலையின் ஒரு கோட்பாடாக கொள்ளப்பட்ட “நேரடியான சினிமா” [DIRECT CINEMA] என்பதற்கு தக்கவாறு வார்தா இப்படத்தை நேரடியான நேரம் காலம் இடம் உத்தேசித்தே படமாக்கியுள்ளார். சாதாரணமான காட்சி நகர்வுகள் புனைகதை சங்கதியை ஆவணப்பட சங்கதியோடு இணைந்து சங்கமித்து, இளம் கதாநாயகியான பாடகி செய்ன் நதியின் இடது கரையில் திரிவதை புதிய ரசனை எழ நம்மை இழுக்கின்றன. அந்தப் பெண்ணின் முக மாறுதல்கள் அற்புதமாக உள்ள ஓட்டத்தைக் காட்டுகின்றன.

க்ளியோ, அன்றைய சமூக அரசியல் சூழலை சிறிதளவே கோடிட்டு காட்டுகிறது. ஒரு மதுக்கடையில் நிகழும் சண்டையையும் தாக்குதலையும் க்ளியோ பார்க்கிறாள். அது சமயம் அல்ஜீரிய போரிலிருந்து விடுப்பில் வந்திருக்கும் சிப்பாய் ஒருவனை அவள் சந்திப்பதும் அந்த சிப்பாய் அல்ஜீரியாவுக்கு திரும்பிப் போக இருப்பதையும் அவள் அறியும் விதத்தில் நமக்கும் தெரிவிக்கிறார் வார்தா.

ஆக்னஸ் வார்தாவின் “திரிந்தலையும் தத்தாரிப்பெண்” [VAGABOND] எனும் படத்தைப் பற்றி பேசுமுன் இதே உணர்வுகளை கொண்டெழுப்பிய கழைய படமொன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 1956-ல் ரோஜர் வாடிம் [ROGER VADIM] என்ற இயக்குனர் “கடவுள் மேலும் பெண்ணைப் படைத்தார்” [AND GOD CREATED WOMAN] எ்ற பிரெஞ்சு திரைப்படத்தை எடுத்தார். யாருக்கும் எந்த நிறுவனத்துக்கும் கட்டுப்படாது அலைத்து, காம வேகத்தில் ஆண்களோடு உறவு கொண்டாடும் இளம் பெண்ணொருத்தியின் கதைப் படம் இதே தலைப்பில் கதையை மேலும் திருத்தியும் நவீனமாக்கியும் 1987-ல் மீண்டும் AND CREATED WOMAN என்ற படத்தை வேறு நடிகை – நடிகர்களை வைத்து இயக்கி வெளியிட்டார் ரோஜர் வாடிம்.

ஆனால் ஆக்னஸ் வார்தா மிக்க பொறுப்போடு பொறுப்பற்ற இளம்பெண் ஒருத்தியின் கதையை வேகபாண்டில் [VAGABOND] சொல்லுகிறார். இந்தப் படத்திலும் வார்தா உயர்ந்த ஆவணப்பட வகைமையையும் மிகவும் பாரம்பரிய கதை கூறல் சினிமா வகைமையையும் இணைந்ததாக்குகிறார். அதன் காரணம் அவர் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைப் பயிற்சி பெற்ற புகைப்படக் கலைஞர் என்பதே.

ஒரு நாள் காலையில் பள்ளத்தில் பணியில் உறைந்து கிடக்கும் இளம்பெண்ணின் உடலைக் கண்டு ஓடிப்போய் பிறரை அழைத்து வருகிறான். போலீசும் வருகிறது. யாருக்கும் சட்டென்று அந்தப் பெண்ணைப் பற்றி தெரியவில்லை. அவள் தங்க ஓரிடமின்றி, வேலை எதுவுமின்றி கிடைத்ததைத் தின்று கொட்டைகையில் உறங்கி ஆண்களோடு சேர்ந்து ஒரு தத்தாரியான பெண்ணாக திரிந்து வந்ததை ஒவ்வொருவராக விசாரிக்க விசாரிக்க தெரிய வருகிறது. இத் தருணங்களில் வார்தாவின் குரலிலேயே விவரணை பேசப்படுகிறது. பிறகு ஒவ்வொரு ஆளாக நேர்காணலாகி, காட்சிகள் பின்னோக்கி நகர்த்தப்படுகையில் அந்தப் பெண்ணின் பெயர் மோனா பெர்ஜரோன் [MONABERGERON] என்பது அறிய வருகிறது. அப்படியும் இப்படியுமாய் கொஞ்சமே அவளைப் பற்றி தகவல் கிடைக்கிறது. அந்த விதமாகவே படத்தின் FLASH BACK காட்சிகளும் அமைந்துள்ளன. நமது அன்றாட வாழ்நாளில் தாம் சந்திக்கும் எவ்வளவோ ஆண் பெண்களை நாம் கவனித்து எடுத்துக்கொள்ளும் விதமும் இப்படித்தான். ஒரு வகையில் அதைத்தான் வார்தாவும் சொல்லுகிறார் போலும். மோனா ஒவ்வொரு இடமாய் நாய் போல சற்றுவது, உணவு, இடம் கிடைத்தால் அவற்றைப் பெற்றுக் கொண்டதற்கான எவ்வித நன்றியுணர்வும் காட்டாதவள். அவள் உடலில் எவ்வித தாக்குதலுக்கான காலமுமில்லை இரவில் தவறி பள்ளத்தில் விழுந்து மோதி அடிபட்டு இறந்திருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. மோனாவாக சாண்ட்ரின் பொன்னேர் [SANDRINE BONNAIRE] எனும் இளம் நடிகை – பரவாயில்லை – நடித்திருக்கிறார்.

பிரெஞ்சு சினிமா நிறைவுறுகிறது.

தொடர் 29: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 29: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



பிரெஞ்சு சினிமா – 2
விட்டல்ராவ்

ஐரோப்பிய சினிமாவின் கதை சங்கதியை கிரேக்க புராணக் கதைகளும் ரோமானிய அரசியல் விசயங்களும் மற்றும் பைபிள், ஷேக்ஸ்பியர்களும் அவ்வப்போது நேரடியாகவும், நிழலாகவும் பாதித்து வருபவை ஃபிரெஞ்சு திரைப்படக் கலைஞர் ழான் காக்டோ JEAN CACTEAJJ வின் படங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமானவை. ஆர்.ஃபியஸ் மற்றும் எ டெஸ்டமெண்ட் ஆஃப் ஆர்ஃபியஸ் (Orphee, A Testament of Orpheus) என்பவை. அதே சமயம் ஒரு தேவதைக் கதையையும் திரைப்படமாக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த பார்வையில் காக்டோவின் படங்கள் அவ்வளவும் தேவதைக் கதைக் காட்சி சித்தரிப்புக்களாகவே தோன்றுகின்றன. ழான் காக்டோ தன்னை ஒரு போதும், ஒரு திரைப்படக்காரன் என்று சொல்லிக் கொண்டதேயில்லை. மாறாக, ஒரு கவிஞன் என்றுதான் அவர் கருதி வந்தவர். தன் வாழ்நாள் கலைக்காரியங்களில் திரைப்படமெடுப்பதையும் பல கலை வடிவங்களில் ஒன்றாக அவர் வைத்திருந்தார். இருப்பினும் அவர் திரைப்படங்கள் ஃபண்டஸி Fantacy தேவதைக் கதைகள் என்பனவற்றையே புதிய வடிவில் புதிய மொழியில் காட்சிப் படுத்தியிருந்தது புதுமையும் மலர்ச்சியும் வியப்புமிக்கதுமானவை. அவரது திரைப்படங்கள் எண்ணிக்கையில் குறைந்தவை என்றாலும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதத்தில் கனவுமயமாய்த் தோன்றுபவை. 1946-ல் காக்டோ இயக்கிய, LABELLE ET LA $ ETE (Beauty and the Beast) மிகச் சிறந்த படமாய்ப் பேசப்படுவது அழகியும் மிருகமும் படம் வயது வந்த சிந்தனை முதிர்ச்சி பெற்றவர்களுக்கான தேவதைக்கதையைக் கொண்டது தேவதைக் கதைகள் இங்கிலாந்திலும் ரஸ்யாவிலும் மிகச் சிறந்த குழந்தைப் படங்களாய் எடுக்கப்பட்டு 90களில் தூர்தர்ஷனில் தொடர்ந்து ஒளிப்பரப்பியது நினைவிலிருக்கலாம். அந்த வகையில் இதே கதையை இருமுறை படமாய்ப் பார்த்தேன். Beauty and the Beast திரைப்படம் காக்டோவின் இரண்டாவது ஆக்கம், 2-வது உலகப் போரின்போது ஜெர்மன் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு திரைப்பட ஆக்கம் மீண்டும் அதன் பெருமைக்குரிய இடத்தையடைவதில் காக்டோவை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர் சினிமா ரசிகர்கள். பிரான்சின் கலாபிமானிகளால் அழகியும் மிருகமும் அதை முன்னெடுக்கக்கூடுமென கருதப்பட்டது.

அதே சமயம், மறுபுறம், பொதுமக்களின் ரசனையிலிருந்து காக்டோ தூரம் விலகி மேல் தட்டு ரசிகர்களுக்கான சினிமாக்காரன் என்ற விமர்சனத்துக்கும் ஆளானார். இதைக் கருத்தில் கொண்டு மேல்தட்டு கீழ்தட்டு கலாரசிகர்களும் கண்டு ரசித்திடும்படி காக்டோ பல நூற்றாண்டுப் பழங்கதையான அழகியும் மிருகமும் எனும் (Fair Tale) தேவதைக் கதையைப் படமாக்கினார். அழகி ஒருத்தியின் தந்தையை உடலெங்கும் உரோமம் முளைத்து சூழ்ந்த மிருகம் ஒன்று காட்டிலுள்ள தன் கோட்டையில் சிறை வைக்க, அழகி தன் தந்தைக்குப் பதிலாக தன்னை பணயம் வைத்து, அவருக்குப் பதிலாக தன்னை சிறையில் வைக்குமாறு கேட்க, மிருகமோ அவள் முதலில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. மிருகத்தின் அன்பு மனம் அழகிக்குப் புரிகிறது.

எனவே ஒப்புக் கொள்ளுகிறாள். காக்டோ இந்த பழங்கதையை தனது கலைபூர்வ மனத்துடிப்புக்கு வடிகாலாக பார்க்கிறார். நேரான இக்கதையை அவர் வெட்டி ஓட்டுகிறார். ஒரு வியத்தகு மாய மாளிகையுள் இருவரையும் நடமாட விடுகிறார் காக்டோ. மாயக் காட்சி காட்சிகளால் நாம் நாஜி ஆக்கிரமிப்பால் பிரெஞ்சு கலை கலாச்சாரத்துக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை நாம் உணருகிறோம். இமைக்கவும் தவறுகிறோம். இந்த காட்சியாடல்கள் ஒவ்வொரு சட்டத்தையும் ஒளிப்பதிவாளர் ஹென்றி அலிகானின் Henri Alikan காமிரா மாய வித்தைப் புரிந்திருக்கிறது.

இந்தக் காட்சிகளில் அழகி சும்மா நடந்துபோகவில்லை. மிதந்து செல்லுவதாய் நாம் பார்க்கும் வகையில் காமிரா விந்தையூட்டுகிறது. மெழுகு வர்த்திகள் வழக்கமாய் அவற்றுக்கான தாங்கியில் இல்லாமல் சுவர்களில் பதிந்த மனிதக் கைகளில் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. முகம் பார்க்கும் நிலைக் கண்ணாடிகள் நீர்த்தடாகமாய் மாறும் விந்தை. விளக்கொளிகள் தம் போக்கில் எரிவதும் அணைவதுமாய் இருக்கின்றன. சிலைகள் உயிர் பெறுகின்றன. கனவு எனும் ஃபிராய்டின் தத்துவத்தை, காக்டோ இந்தக் காட்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார். மிருகம் கடைசியில் சாபம் நீங்கி அழகிய இளவரசனாக உருமாற இருவரும் மனமகிழ்ச்சியோடு வாழ்வதாக கதையும் திரைப்படமும் முடிகிறது.

மிருக ரூபத்தில் நடிக்கும் அன்றைய பிரெஞ்சு நடிகர் ழான் மரியா JEAN MARAIS அற்புதமாகச் செய்திருக்கிறார். இப்படத்தைப் பார்த்த அன்றைய புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கிரேடா கார்போ, என் மிருகத்தையே எனக்குத் திரும்பக் கொடுங்கள் என்று கூறியது படத்துக்கும் நடிகரின் நடிப்புக்குமான புகழாரமாய் கொள்ளப்பட்டது.

ழான் காக்டோ கிரேக்கப் பழங்கதை, ஆர்ஃபியஸ் Orpheus என்பதைக் கொண்டு 1950ல் Orphee என்ற திரைப்படத்தை எடுத்து இயக்கினார். இப்படங்களை 70களின் தொடக்கத்தில் சென்னை பிரெஞ்சு கலாச்சார மைய திரையரங்கில் பார்த்தேன். காக்டோ நன்கறியப்பட்ட கவிஞர். இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான ஆர்ஃபியஸ் 40களிலிருந்த ஒரு கவிஞனாக காக்டோவின் திரைக்கதை அமைகிறது. இவன் மீது பொறாமைக் கொண்ட ஒருவன். இவன் அடையாளம் தெரியாத இரு மோட்டார் சைக்கிள்காரர்களாக சாலையில் இடித்துத் தள்ளப்பட்டு மரணிக்கிறான். அப்போது அங்கு தோன்றும் மரண தேவதை இளவரசிபோல தோன்றவும், கவிஞன் ஆர்ஃபியஸ் மயங்குகிறான். ஆனால் ஆர்ஃபியஸால் கைவிடப்பட்ட அவனது மனைவி யூரிடைஸ் Eurydice திடிரென இறக்கவும், அவன் பாதாள லோகத்தை அடைந்து தன் மனைவியை மீிட்டுக் கொண்டுவரப் போகிறான். இந்தப் படத்தின் நகர்வுகள் உயர்ந்த கவித்துவ கற்பனை வடிவங்களாய்த் தோன்றுமாறு நிக்கோலஸ் ஹேயர் Nicolas Hayer என்ற ஒளிப்பதிவாளரின் காமிரா விந்தை புரிந்திருக்கிறது. ஆனாலும் குழப்பம் சூழ்ந்த அனுபவமாகிறது.

ஆர்ஃபி படத்தின் தொடர்போல ழான் காக்டோ 1959ல் The Testament of Orpheus என்றதொரு ஃபண்டஸி படத்தை, ரோலண்டு போண்டாய்ஜோ என்ற Roland Pontoizeau திறமையான ஒளிப்பதிவாளரின் அற்புத, காமிரா கோணங்கள் மற்றும் தந்திரக் காட்சிகளைக் கொண்டு தயாரித்து வெளியிட்டார். மேற்கூறிய திரைப்படங்களில் இயக்குனர் ழான் காக்டோவே முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஃபண்டஸி- மாய உலகு என்பதால் நிஜமான காலத்துக்கும் யதார்த்த நிலைக்கும் வெளியிலிருந்து நிகழ்வதால் ஒரு கவிஞனின் அனுபவங்களாலான காட்சிக் கூறலுமான படம் இது. ஆர்.பி.யைவிட டெஸ்டமெண்டு ஆஃப் ஆர்ஃபியஸ் பல படிகளில் சிறப்பாக வந்திருக்கிறது. கவிஞன் பழைய கிரேக்க நீதி தேவதையான ஹியூடபைஸ் Heutebise என்ற நடுத்தர வயது பெண்ணுக்கு முன்பாக பல்லாஸ் அதீனாவின் மாளிகையில் நிறுத்தப்படுகிறான். நீதிபதிகளில் ஒரு ஆணும் நீதிதேவதையும் கவிஞன் ஆர்ஃபியஸை மாறி மாறி கேள்விகள் கேட்கின்றனர். கேள்விகளும் பதில்களும் அற்புதமானவை. அவை யாவும் நவீன கவிதைகளுக்கும் சமகால கவிஞர்களுக்கும் (குறிப்பாக எஸ்ரா பெளண்ட் நெரூடா, யெவ்குஷெங்கோ, பிரமிள் தர்மு சிவராம் சரிபோகும்படியாய் தோன்றுபவை. சர்வதேச இலக்கிய சூழலிலும் மலையாள கலையிலக்கிய வெளியிலும் கம்பீர ஆக்ருதியுடன் வெளிவந்த விமர்சகர் எம்.கோவிந்தன், இவர் நோக்குக் குத்தி (Scare Crow) என்ற நீண்ட கவிதையை எழுதினார். அதையே கவிதை நடை மாறாது தம் மகன் மணவேந்திரநாத் நடிக்க திரைப்படமாக்கினார். கவிதைத் திரைப்படம் அது. காக்டோவின் படம் கவிதையைக் காட்சி நகர்வுகளாய் பிம்பங்களைக் கொண்டு பார்த்த அனுபவபூர்வமானது. ஆர்.பியின் வளர்ப்பு மகன் செகஸ்ட் GeGeste செகஸ்ட் தன் தந்தைக்கு கொடுத்த செம்பருத்தி மலரைக் குறித்த கேள்வி கேட்கப்படுகிறது. கவிஞனின் பதில்கள் விரிவடைகையில் திரைப்பட ஆக்கமும் கவிதைப் புனைவும் கேள்விக்குள்ளாகின்றன. அப்பாவித்தனமும் குற்றமாக சுமத்தப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பின் ஆர்ஃபியஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதீனா எனும் கிரேக்க தேவதையிடம் அனுப்பப்படுகிறான். அவள் வீசும் ஈட்டி கவிஞனின் நெஞ்சில் பாய்ந்து இறக்கிறான். இடையில் கவிஞன் ஜிப்ஸிகளை, ஒரு மகத்தான திரைச்சீலையை பார்க்கிறான். இறுதியில் கிரேக்க நாடகமேதை சோஃபக்ளீஸ் எழுதிய ஈடிபஸ் நாடக பாத்திரமான ஈடிபஸ் தன் தாயை உடலுறவு கொண்ட பின் குற்றத்தை உணர்ந்து கண்களைக் குத்திக் கொண்டு குருடனாய் நடந்து போவதோடு படம் முடிகிறது. ழான் காக்டோவின் குரல் ஆரம்பத்தில் கேட்கும்போது அவர் நம்மிடம் கூறுகிறார்.

தான் காணும் கனவையும், படம் பார்க்கும் ஜனங்கள் காணும் கனவையும் இணைந்தே பார்க்கும்படி திரைப்பட இயக்குனரால் செய்ய முடியும். அதே சமயம் பொய்யான மாயக் காட்சிகளை உண்மையும் யதார்த்தமானதாயும் செய்து காட்ட இயலும். எனது திரைப்படம் வெறும் ஒரு ஆடை அவிழ்க்கும் காட்சியே இங்கு என் உடலை களைந்துவிட்டு எனது ஆத்மாவை நான் காட்டுகிறேன். என்கிறார் காக்டோ. அவரே ஆர்ஃபியஸாக நடித்திருக்கிறார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்பட மேதை லூயி புனுவெலை (Luis Bunuel) அறிந்தவரை, உயர்ந்த சர்ரியலிஸ திரைப்படங்களையும் அவற்றினூடாக சமூக நடப்பியல் அங்கதங்கள் மற்றும் மத ரீதியான பைத்தியக்காரத்தனத்துக்கான எள்ளல்களை வெளியிட்டவர் என அறியப்படுபவர்.

சரீ ரியலிஸம் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை கவனிக்கிறது. காதலையும் காமத்தையும் புகழ்ந்து போற்றுகிறது. 1919ல் தன் அறையில் ஆந்த்ரே பிரதான் Andre Breton ஒரு ஜன்னல் புறமாய் உட்கார்நதிருந்தவ், ஜன்னலால் ஒரு மனிதன் இரண்டு பாகங்களாய்த் துண்டாகி நிற்பது போன்று தோற்ற உணர்வையடைந்தார். இந்த புதிய பார்வை உணர்வு விளைவாக கலையிலக்கியத்தில் ஒரு புதிய பாணி சர்ரியலிஸம் என்று அழைக்கப்பட்டது. ஆந்த்ரெ பிரதான் நரம்பியல் மருத்துவர் ஒருவரின் கீழ் மாணவராய் கொஞ்சகாலம் இருந்த சமயம் உளவியல் அறிஞர் சிக்மண்டு ப்ராய்டின் தானியங்கிக் கோட்பாட்டால் Automatism ஈர்க்கப்பட்டார். பிரதோன், ஃப்ராய்டு வழியில், நோயாளிகள் தங்களைப் பற்றி தாங்களே விளக்கிக் கூறுமாறு செய்து அதன்படி சிகிச்சை மேற்கொண்டார். பிரதோன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளராயிருந்தவர். காலப் போக்கில் அக்கட்சியின் இறுக்கமான கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதை சக சர்ரியலிஸ்டுகள் விரும்பவில்லை என்பதால் அவர்களை இயக்கத்திலிருந்து வெளியேற சொன்னார். தொடர்ந்து, நாவல் என்ற உருவக் கூற்றை கடுமையாக எதிர்த்த சரீரிய லிஸ்டான பிரதோன் தானே “நாடியா Nadja என்ற நாவலை எழுதி வெளியிட்டது நகைப்பான ஒரு முரணாக ஆனது. இதைத் தொடர்ந்து லூயி புனுவெல் செய்த திரைப்படங்கள் சிகரத்தைத் தொட்டன.

மார்க்ஸின் பிரக்ஞையை அரசியல் கட்சியாக கட்டும் கம்யூனிஸ்டு அரசியல்வாதிகளின் பிரக்ஞைகளுடைய விட மேன்மை மிக்கதும் முற்றிலும் வேறானது என்றும் மூல தத்துவமான மார்க்ஸிசத்தை கொண்டாடி விமர்சனம் வைத்தனர் சரீரியலிஸ்டுகள். விரைவிலேயே இரு இயக்கங்களுக்கும் ஒட்டாத தன்மை நிலவியபோது சர்வதேச கலாச்சாரப் பாதுகாப்பு காங்கிரஸில் பேசப்பட்டது. இதையடுத்து சரீரியலிஸ்டுகளுக்கும் அரசியல் ரீதியான ஆசார கம்யூனிஸ்டுகளுக்குமாயிருந்த மெல்லிய உறவு இழை முற்றிலுமாக அறுந்து போனது.

ரியலிஸம் எனும் யதார்த்தத்துக்கு, Sur என்ற பிரெஞ்சு சொல் மேலே, அப்பால் சேர்கையில் யதார்த்தத்துக்கு அப்பால் Surreallism என்றாகிறது. மிகச் சிறந்த சரீரியலிஸ ஓவியர் சால்வெடார்டாலி. ரஷ்யாவிலிருந்து வெளியேறி பிரான்சில் குடியேறிய ரஷ்ய யூத ஓவியரான மார்க் சகல் மற்றொரு உலகப் புகழ் பெற்ற சரீரியலிச ஓவியர், என்னை பிரெஞ்சு சினிமாவைப் பார்க்க ஊக்கப்படுத்தி பிரெஞ்சு கலாச்சார மையத்தின் திரைப்படச் சங்கத்தில் உறுப்பினராக்கிய பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் வெ.ராமின் அண்ணன் காலஞ்சென்ற வெ. ஜெயராமன் எனது சக ஓவியர் என்பதோடு மிகச் சிறந்த சர்ரியலிஸ ஓவியருமாவார். லூயிபுனுவெல், சால்வெடார் டாலி, பாப்லோ பிக்காசோ போலவே ஸ்பெயின் தேசத்தவர். அத்தேசத்தின் தென்பகுதியின் பெயர் அந்தாலு. (Andalu), 1928–ல் அந்தாலுசியன் நாய் (Un Chien Andalou= An Andalusian Dog) என்ற மெளனப் படத்தை சர்ரியலிஸ ஓவியர் சால் வெடார் டாலியுடன் சேர்ந்து இருவருமாய் எழுதிய கதையை இருவரும் நடித்து தயாரித்து இயக்கினார். இப்படமே புனுவெலுக்கு முதல் முயற்சி. இது காரிமிருந்து வந்த நமது திரைப்பட வரலாற்று பிரக்ஞைக்குள் தூக்கி வாரிப்போட்ட காட்சி ஒன்று. குளோஸ் அப் காட்சியில் மனித முகம் அதன் இடது கண் விழியை பிளேடால் வெட்டுகிறது என்ன இது.

மத நிறுவனங்கள், சமூகத்தின் பிற இறுக்கமான ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவை மனிதனின் இயல்பாக எழும் அசைகள், விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த பெரும் தடையாக இருந்து அதன் விளைவாக வக்கிரங்கள் எழுகின்றன என்று இப்படம் சொல்லுகிறது. இதையே இவருக்கு முன்பாகவும் பலர் சொல்லியிருக்கிறார்கள், என்றாலும் திரைப்படமென்ற காட்சி ரூப சாதனத்தின் மூலம் அதை வெளிப்படுத்த புனுவெல் கையாண்ட உத்திதான் அதை முதன்மையாக்குகிறது. இது ஒரு குறும்பட விரிசையில் வைக்கப்பட்டாலும் திரைப்பட வரலாற்றில் முதல் சர்ரியலிஸ சினிமா என்று கருதப்படுகிறது. கண் விழியை பிளேடு ஒன்று குறுக்காக வெட்டுவதான காட்சி எதன் குறியீடு? விளக்கங்கள் நிறைய வைக்கப்பட்டன. முழு நில வொன்றை நாம் பார்க்கும்போது, கரிய மேகம் ஒன்று அதை மறைக்கும் கொடுமையை இது குறிப்பதாக ஒரு விளக்கம்.

ஒரு சமயம், பால்கனி ஒன்றில் இரவு நேரத்தில் ஒருவன் பிளேடு ஒன்றை கூர்மையாக்கும் காட்சி. அந்த மனிதன் ஜன்னல் வழியாக முழு நிலவைக் கண்டு ஆனந்திக்கையில் ஒரு கரிய மேகம் நிலவை நோக்கி மெல்ல நகர்கிறது. ஒரு பெண்ணின் அகல விரிந்த கண்களோடான முகம். பிளேடின் கூறிய நுனி கண்ணருகே வருகிறது. ஒரு சிறிய மேகம் நிலவின் முன் நகர்ந்து அதை மறுக்கிறது. கண் முன் பிளேடு நகர்ந்து கண்ணைக் கீறிப் பிளக்கிறது. ஆசைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு- அதன் சாத்தியக் கூறுகள் பிளக்கப்படும் கொடுமையாக இது கொள்ளப்படுகிறது. சினிமாவில் லூயி புனுவெல் என்ற வித்தியாசமான படைப்பாளி உதித்து விட்டதை அறிவித்து விட்டது இத்திரைப்படம்.

புனுவெல், Fever Rises in Elpao எனும் படத்தை மெக்சிகோ சூழலில் 1959-ல் செய்தார். இப்படம் அவரது முத்திரையாக சர்ரியலிஸ கூறுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. என்றாலும் கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டதொரு அரசியல் படம். எல்பவோ ஒரு சிறு தீவு. அதன் அதிபரான மெக்சிகோவின் உபஜனாதிபதி சற்று உளநிலை சமன்பாடற்ற கோபக்காரர். மனைவி மீது சதா சந்தேகம் கொண்டலைபவர். பாலுணர்வு மிக்க அழகிய நடுத்தர வயதுக்காரியான அவர் மனைவிக்கும், அவரது அந்தரங்க செயலாளருக்கும் கள்ள உறவு இருந்து வருவதை உப ஜனாதிபதி தீவிரமாக சந்தேகிக்கிறார்.

செயலாளருக்கு எப்படியும்தானே உபஜனாதிபதியாக வேண்டும் எனும் அதிகார ஆசை வரவும் உபஜனாதிபதியின் மனைவியும் தன் கள்ளக் காதலியுமானவனைத் தூண்டுகிறான். தன் சுதந்திரமான காதல் காமக் களியாட்டத்துக்கு தடையாக நிற்கும் கணவனை அவர் அரசாங்க நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் ஆளை வைத்து சுட்டுக் கொன்றுவிட அந்தப் பழி தீவிரவாதிகள் மீது விழச் செய்கிறாள். மெக்சிகோ தலை நகரிலிருந்து எல்பவோ உப தலைவரின் செயலாளரை உப ஜனாதிபதியாக்கிவிட்டுப் போகிறார். தீவிரவாதிகளின் பலம் அதிகாரிகையில் கள்ளக் காதலி உப ஜனாதிபதியுடன் மெக்சிகோவுக்கு தப்பியோடிவிட துரிதப்படுத்துகிறாள். விமான நிலையம் கண்காணிப்புக்கும் பாதுகாப்புக்கும் கொண்டுவரப்படுகிறது. அவளை முன்னால் காரில் விமான நிலையத்துக்கு ஓடி விடும்படியும், தான் பின்னால் வருவதாயும் உபஜனாதிபதி ஏற்பாடு செய்கிறான். அந்த ஏற்பாட்டில் அவளையும் ஒழித்துவிட திட்டமிடுகிறான். கார் ஏர்போட்டே நெருங்கவும், கேட் சாத்தப்பட்டு அனுமதி மறுக்கப்படுகிறது. தடையை மீறி காரை செலுத்த முற்படுகையில் கார் காவலர்களால் சுடப்பட்டு, சுவரில் மோதி தீப்பிடித்து எரிய அவளும் மாண்டுபோகிறாள். இது புனுவெலைவிட மேலும் சிறப்பாக எடுக்கக்கூடிய இயக்குனர்கள் உண்டுதான் என்றாலும்அவரது முத்திரை என்று சிலவற்றை இப்படத்தில் அரிதாக சில காட்சிகளில் காணமுடிகிறது.

1958-ல் புனுவெல் மெக்சிகோவில் இயக்கிய நாஸரின் குறிப்பிடத்தக்க படம். கிறிஸ்து பிறந்த இடம் நாஸரெத். அதனால் அவரை நஸரேயன் என்று அழைப்பதுண்டு. நாஸரின் படத்தில் நஸரியோ எனும் கிறிஸ்தவ பாதிரியாரின் மையப் பாத்திரத்தினூடே கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை மையமாய்க் கொண்டது கதை. அவரைச் சுற்றி மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அண்டாரா எனும் விலை மாது, அவள் மேல் தீரா ஆசை கொண்ட குள்ள மனிதன் உஜோ. காதலனால் கைவிடப்பட்ட அழகிய இளம் பெண் பீட்ரைஸ். அவள் காதலன் பிண்டோ, நாஸரின் விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் செயல்பாடுகள் வழியே அவரைப் போலவே வாழ முயற்சிக்கிறார். ஒரு நாள் அவரது வேலைக்காரியே அவரது பணம், உடை இதர பொருள்கள் யாவற்றையும் திருடிக் கொண்டு ஓடிவிடுகிறாள். ஏழைகள், திருடர்கள், விபச்சாரிகள் என்று மோசமான சூழலிலிருக்கிறார் பாதிரியார் அவரது ஏழ்மை, அப்பாவித்தனம் கண்டு காசு தர்மம் செய்து விட்டுப் போகிறார்கள். அந்தக் காசையும் ஏழைகளுக்கு அவர் கொடுத்துவிட்டு உணவுக்கும் பிறரை எதிர்பார்க்கிறார். அண்டாரா எனும் விபச்சாரி சக விபச்சாரியோடான சண்டையில் பலமாக காயப்பட்டதுடன் எதிரியைக் கொன்று விடுகிறாள். போலீசிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் தேவாலயத்துள் நுழைந்து நாஸரிடனிடம் அடைக்கலம் கேட்கிறான். அவரும் மனமிரங்கி அவளுக்குப் புகலிடம் அளிப்பதோடு மருத்துவமும் பார்த்து குணப்படுத்துகிறார்.தேவாலயத்துக்குள் போலிசு நுழைய முடியாது. பீட்ரைஸின் காதலன் பிண்ட்டோ அவளை கிடாசிவிட்டுப் போய்விடவும் திக்கற்ற அவள் பாதிரியாரிடம் சேர்கிறாள். பாதிரியார் நாஸரினுக்கும் பெண்களுக்கும் தகாத உறவு இருப்பதாக ஊரெல்லாம் கசமுசா குசுகுசு. இது மதமேலிடத்துக்கு தெரியவரவும் நாஸரின் பாதிரியார் பதவியை இழக்க நேரிடுகிறது. நாஸரின் தேவாலயத்தை விட்டு சாதாரண பிஜையின் உடையில் வெளியேறுகையில் அண்டாராவும் பீரஜையின் உடையில் வெளியேறுகையில் அண்டாராவும் பீட்ரைஸும் கூட வருகின்றனர். அவர் எவ்வளவு தடுத்தும் வருகின்றனர். பெண்கள் இருவரும் ஒரு கட்டத்தில் நாஸரின் காட்டும் பரிவைக் காதலாகவும் நம்பி இருவருக்குள்ளும் பொறாமையும் ஏற்படுகிறது. நாஸரின் குறைந்த கூலிக்கும் ஒப்புக் கொண்டு கூலி வேலையில் சேருகையில், மற்ற கூலிகள், அதை எதிர்க்கவும் வேலையுமிழந்து திரிகிறார்.

அவ்வூரிலுள்ள அனாதைக்குள்ளன் உஜோ அண்டோரா பேரில் அபரிதமான பிரேமை கொள்ளுகிறான். ஊரில் பிளேக் நோய் பரவி மக்கள் மரணமுறுகையில், ஒரு நோயாளிப் பெண்ணை இறைவனிடம் பிரார்த்து பிழைக்கச் செய்கிறார் நாஸரின். அவரை தெய்வாம்ஸமாய் எண்ணி அற்புதங்கள் நிகழ்த்த வேண்டுகின்றனர். அவர்களைத் தேடி வரும் போலீசு பாதிரியாரை விட்டு விட்டு பெண்களைக் கைது செய்கிறது. அந்த சமயம் அங்கு வரும் பிண்ட்டோ தன் காதலி பீட்ரைஸை விடுவித்து அழைத்துப் போக, கொலைக் குற்றத்துக்காக அண்டாராவை மட்டும் கொண்டு ஓடுகிறான். கத்தோலிக்கப் புரோகிதர் ஒருவரின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மைமிக்க வாழ்க்கையைச் சொல்லும் இப்படம் கான் திரைப்பட விழா விருதும் கத்தோலிக்கத் திருச்சபை விருதும் பெற்றது.

லூயி புனுவெல் ஸ்பெயினில் காலந்தா (GALANDA) எனும் ஊரில் 1900ல் பிறந்தவர். சர் ரியலிஸ ஓரியர் சால் வெடார் டாலியையும் நாடகாசிரியர் ஃபெடரிகோ கார்ஷியா லோர்கா (Federico Garcialorca) வையும் சந்திக்கும் வரை கிறிஸ்தவ மதப் பிரிவான ஜெசூட் மத காரியத்துக்கான படிப்பை படித்தவர். பிற இம்மூவரும் இணைந்து செய்த முதல் சர் ரியலிஸ திரைப்படம் அண்டோலேசியன் நாய், ஓராண்டு கழித்து, ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின்போது புனுவெல் அமெரிக்காவுக்கும் அங்கிருந்து மெக்ஸிகோவுக்கும் இறுதியாக 1955ல் பிரான்சுக்கும் மாறிக் கொண்டார். இவரது படங்கள் கான் திரைப்பட விழாக்களிலும், வெனிஸ் பட விழாக்களிலும் வெவ்வேறு விருதுகள் பெற்றவை. லூயி புனுவெல் 1983-ல் காலமானார்.

ஜோசப் கெஸ்ஸெல் Joseph Kessel) என்பவரின் புகழ் பெற்ற நாவலைக் கொண்டு 1967ல் புனுவெல் இயக்கிய ஜனரஞ்சகமான திரைப்படம் பெல்டி ஜோர் Belle De Jour நல்ல வசதி மிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அதே சூழலிலுள்ள அழகியொருத்தி தன் டாக்டர் கணவனுக்குத் தெரியாமல் பணம் – உடல் இச்சை நிமித்தம் விபச்சாரத்தில் ஈடுபடும் செவரின் Severine என்பவளைப் பற்றிய படம் பெல்டி ஜோர். புனுவெல் தம் படத்தை சிறிதும் தயங்காது இது ‘‘ப்ளூ ஃபிலிம்’’ என்று சொன்னதோடு, இப்படம் கற்புத்தன மான பாலுறவு விசயத்தை கண்டறியும் Chaste Eroticism) வகைமையது என்றார். செவரினின் கணவன் அழகிய இளம் டாக்டர் பீர் Pierre டாக்டர் மருத்துவமனைக்குப் போய்விட்டு மாலையில் வீடு திரும்புமுன் செவரின் திரும்பிவிடுவாள். செவரின் திடச் சித்தமுள்ள குடும்பப் பெண். கணவனின் பணக்கார நண்பன் அவளுக்குப் பண ஆசைகாட்டி பாரிஸிலுள்ள அதி உயர்ந்த விபச்சார விடுதியில் இணைந்து பகல் நேர விபச்சாரியாக தொழில் செய்ய வைக்கிறான் அங்கே ஒரு நாள் மோசமான திருடன். கொலைகார இளைஞனிடம் சிக்கி மனமும் பறிகொடுக்கிறாள். அவனோ இரவுக்கும் அவளை அழைக்க, செவரின் மறுக்கிறாள். செவரின் விபச்சாரத் தொழிலுக்கென தன் பெயரை ‘‘பெல் டி ஜோர்’’ என்று எல்லோருக்கும் சொல்லி வருவாள். விடுதி சொந்தக்காரி உட்பட யாருக்குமே தன் பெயரை தொலைப்பேசி எண்ணை, இருப்பிடத்தை தருவதேயில்லை. இரவு மட்டுமே வர மறுக்கும் அவள் இறுதியில் மனசாட்சி வாட்ட தொழிலுக்கு கும்பிடு போட்டுவிட்டு விடுதிக்காரியிடம் விடை பெற்று வருகிறாள். அதே சமயம் அவளைப் பின் தொடர்ந்து காரில் வந்த ரெளடி அவளது இருப்பிடம், பெயர், கணவன் எல்லா விவரமும் அறிந்து வீட்டுக்குள்ளும் வந்து அவளை வற்புறுத்துகிறான். கணவனின் புகைப்படத்தைப் பார்க்கிறான். தன் சுதந்திரமான சுகவாழ்வுக்கு குறுக்கே இருக்கும் டாக்டர் பீரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடுகையில் போலீசாரால் சுடப்பட்டு இறந்துபோகிறான்.

இந்தப் படத்தில் ‘‘செக்ஸ்’’ காட்சி எதையுமே வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பல காட்சிகள் கனவுகளாகவும் கவித்துவத்தோடும் வந்து போகின்றன. புனுவெல் நம்மை கனவு நிலைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் போய் போய் வர இழுத்தடிக்கிறார். கச்சா வீர்னியின் (Sach vierny) காமிரா அப்பழுக்கற்ற காட்சி சட்டகங்களை நகர்த்துகிறது. வெனிஸ் திரைப்பட விழா 1968ல் சிறந்த படமென்ற விருது பெல் டி ஜோருக்கு கிடைத்தது.

1972ல் லூயி புனுவெல், ‘‘பூர்ஸ்வாவின் நளினமான கவர்ச்சி The Discreet charm of the Bourgeoisie)’’ என்ற நகைச்சுவை இழையோடும் அற்புதமான சர்ரியலிஸ திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். நல்ல சமூக அங்கதம் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஏராளமாக பகல் உணவு, இரவு உணவு விருந்துகள் வீடுகளிலும் விடுதிகளிலுமாய் இடம் பெறுவதும் துரித கதியில் அது முழுமை பெறாமல் பாதியிலோ கடைசியிலோ தோல்வியில் முடிவது எதிர்பாராத நிகழ்வுகள். மிகவும் ரசிக்கத் தக்க காட்சியாடல்கள். சிந்தனை மேலிட்ட பகற்கனவுகளும், சிறு உறக்கம் மேலிட்ட கனவுகளுமாய் விபரீதமான நிஜம்போன்ற சித்தரிப்புகள் சர்ரியலிஸ வழியில் படமாக்கப்பட்ட நிகழ்வு ஓட்டங்கள்.

இராச்சாப்பாடு (Dinner) என்பது ஐரோப்பிய நாடுகளில் சமூகத்தின் உயர்மட்ட குடிகள் தங்கள் உண்ணும் கலையை ருசியை, அதன் போது கடைபிடிக்கும் உயர்ந்த பண்பாட்டை, தங்கள் பணம் பகட்டு கையிருப்பு செல்வாக்கையெல்லாம் காட்டிக் கொள்ள ஒன்று கூடும் சமய சந்தர்ப்பமாய் நிலவி வருகிறது. இம்மக்களின் வாழ்வில் டின்னர் எனும் விசயம் மற்றெல்லாவற்றையும் விடவும் உற்சாகமிக்க கெளரவமிக்க கனவான் தனத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்களில் ஒன்று தேவாலய பிஷப். சிறு வயதில் தன் வீட்டுத் தோட்டக்காரன் வேலை செய்வதைக் கவனித்து தோட்ட வேலை யாவும் கற்று கைவரப்பட்ட பிசப், யார் வீட்டில் தோட்டத்தைக் கண்டுவிட்டாலும் தன் பிஷப் அங்கியை கழட்டி விட்டு தோட்ட வேலையில் இறங்கிவிடுவார்.

அந்த மூன்று ஜோடிகளும் டின்னருக்குத் தயாராகையில், நுழையும் தோட்டக்கார உடையிலுள்ள பிஷப்பை வெளியேற்றுகிறார்கள். அவர் போய் உடைமாற்றிக் கொண்டு பிஷப்பாக வரவும் அவரை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். படத்திற்கான பல்வேறு சுவரொட்டிகளில் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஓவியர் ரெனிமாக்ரிட் (Rene Magritte) என்பவர் தீட்டித் தந்த ஓவிய சுவரொட்டி விஷேசமானது. நீண்ட கருப்புநிற காலுரையில் பெண்ணின் கால்கள், அதற்கு மேலே லிப்ஸ்டிக் பூசிய தடித்த பெண் உதடுகள் உணவைக் கண்டதும் எடுத்து லபக் அதற்கு மேலே பெளலர் ரக தொப்பி. ஆறு பேரில் 3 ஜோடிகள் ஒருவர் தென்னமெரிக்க நாட்டின் மிராண்டா குடியரசின் (கற்பனை) பிரான்சுக்கான அம்பாசிடர். அவருக்கு ரகசியமான போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு. போதைப் பொருள் கடத்தலிலும் கில்லாடி. அதனால் ராணுவம், போலீசு, என்ற பயமும் எந்நேரமுமுண்டு. கூடவே தன்னைத் தீர்த்துக்கட்ட தீவிரவாதிகள் பின் தொடர்வதை நம்பி நடுங்குபவர். இவ்வாறாக எதிர்பார்த்து பயமுறும் நிகழ்வுகள் உண்மையிலேயே நடப்பதாய் காட்சிபடுத்தப்பட்டு உடனடியாக அவ்வாறில்லாத யதார்த்த நிலைக்கு காட்சி மாறிக் கொள்ளும். அம்பாசிடர் சுடப்பட்டு இறப்பதும் பிறகு கனவாக அது மாறி, கலைந்து எழுவதுமாய்…

ஆறுபேரும் ஒரு பெரிய எஸ்டேட்டுக்கு காரில் இரவு வந்து மாளிகையுள் நுழைகிறார்கள். அன்றிரவு அங்கு டின்னருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே படத்தின் தொடக்கக் காட்சி. அவர்களை வியப்போடு எதிர்கொள்ளும் வீட்டு எஜமானி, ‘‘இந்த நேரத்தில் என்ன இப்படி?’’ என கேட்கிறாள். வீட்டினர்க்கையில் அணியும் சாதாரண நைட்டிஸில் அவள் இருக்கிறாள் வந்திருப்பவர்கள் அம்பாசிடர் தலைமையில் டின்னருக்கான டிப்டாப் உடையில்!

‘‘இன்றைக்கு எங்களை டின்னருக்கு வரச் சொல்லியிருக்கீங்களே?’’

‘‘அது நாளைக்குத்தானே?’’

‘‘இல்லையில்லை, உறுதியாகத் தெரியும், இன்றுதான். உங்கள் கணவர் எங்கே? அவர்தான் என்னிடம் கூறியது’’

“அவர், அவரது கம்பெனி உயர்மட்ட அதிகாரிகளுக்கான டின்னருக்கு போயிருக்கிறார்.

“சரி நாங்கள் புறப்படுகிறோம். ஒன்று செய்யலாம், இந்தப் பகுதியில் ஒரு உணவு விடுதியுண்டு. சாப்பிட்டிருக்கிறேன், பரவாயில்லை. அங்கே டின்னருக்கு நீங்களும் வரலாம்.

“உடை மாற்றிக் கொள்ளவில்லை

“பரவாயில்லை, உள்ளூர்தானே

எல்லோரும் அந்த ஓட்டலுக்குப் போனால், குடிக்க தண்ணீர் தவிர எதுவுமே அங்கில்லை. உள்ளே எ்ட்டிப் பார்த்தால் சவப் பெட்டியில் ஓட்டல் உரிமையாளரின் உடல். சுற்றி ஓட்டல் சிப்பந்திகளும் உறவினர்களும், ஆக, இந்தப் படத்தில் போதை மருந்து கடத்தும் ஒரு நாட்டின் உயர் அதிகாரி, அதை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் ராணுவம், போதை மருந்தை அபரிதமாய் உட்கொண்டதாலேயே அமெரிக்க ராணுவத்தினரில் 3500 பேர் வியட்நாம் போரில் மாண்டதாய் ஒருவசனம் விருந்தின்போது இப்படத்தில் வருமாறு புனுவெல் வைத்திருக்கிறார் இது போன்றும், ஓட்டல் உரிமையாளர் மரணம் போன்ற நிஜமும் கனவுமான காட்சிமாறுதல்களின் நகர்வுகள் வாயிலாக ஓர் அறுவர் கொண்ட அதி பணக்கார ஆண் பெண்கள் தங்கள் டின்னர் வைபவத்தை கொண்டாடி அனுபவிக்க முடியாவண்ணம் அற்புதமாந நெருக்கடிகளைச் செய்கிறார் லூயி புனுவெல், இந்திப் படத்துக்காக அவ்வாண்டின் சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது புனுவெலுக்குக் கிடைத்தது.

ஒரு முறை சென்னை சஃபையர் தியேட்டர் வளாகத்தில் ப்ளூடயமண்டு தியேட்டரில் ஒரு பிரெஞ்சு திரைப்படம் ஆங்கில உபதலைப்புகளோடு திரையிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியூட்டும்படியான அதி விரு விருப்பான பிரெஞ்சு அரசியல் படம் அது Z Z என்பது கிரேக்க மொழியின் உயிரெழுத்துக்களில் கடைசி உயிரெழுத்து. இதை “ழ்ஜீ என்று தோராயமாக உச்சரிக்கிறார்கள். 1963-ல் கிரேக்க நாட்டில் இடதுசாரி சார்பான கிரேக்க ஜனநாயக ஆட்சி, நடந்த சமயம். உலக அமைதியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்த இடது சாரி பேராசிரியரும், சட்டசபை உறுப்பினருமான கிரிகோரியஸ் லாம்பராகிஸ் (Gregoreos lambrakis என்பவர் சலோனிகாவில் Salonika 1963ல் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து கிரேக்க ஜனநாயக ஆட்சி கவிழ்கிறது. இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு லம்பராகிவிசயத்தை Z என்ர நாவலாக எழுதினார் வாசிலி வாசிலி கோஸ் Vasily Vasily cos) எனும் கிரேக்க நாவலாசிரியர். அந்நாவலை அடிப்படையாகக் கொண்டு Z திரைப்படம் கோஸ்டா. காவ்ராஸ் இயக்கத்தில் 1969ல் மிகச் சிறந்த பிரெஞ்சு அரசியல் சினிமாவாகியது. ‘‘ஜ்ழீ’’ பிரெஞ்சில் எடுக்கப்பட்டாலும் அதில் நடித்தவர்களும் பெரும்பாலும் பிரெஞ்சு நடிகர்களே என்றாலும் அதை இயக்கியவர் கிரேக்கரான கோஸ்டா காவ்ரா. கிரேக்க கோஸ்டா காவ்ரா பிரான்சுக்கு புலம் பெயர்ந்து பிரெஞ்சு படங்களை இயக்கியவர் நாவலிலும் படத்திலும் லிபரல் அரசியல்வாதி யுவஸ் மோன்டாண்டு Yves Montand என்பவர் உலக அமைதி குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையின்போது நாட்டின் இராணுவ அமைப்பு முழுவதையும் கவிழ்க்கும் முயற்சியில் அதிகார மையத்தில் ஊழல் பேர் வழிகள் பெருகிப் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வருகிறது. அற்புதமானதும் துரிதகதியிலுமான காட்சி சட்டகங்கள் மாறுவதும் மிகக் கூர்மையான ஒளிப்பதிவுக்கான காமிரா கையாளலும் இயக்குனரின் கூரிய அரசியல் பிரக்ஞையும் படத்தைப் பார்க்கையில் சில்லிட வைக்கிறது.

“Z பொறுக்க முடியாதளவு உணர்ச்சி வயப்படுத்துகிறது. மிகுந்த பதட்ட நிலையை ரசிகர்களின் ரசனை தளத்தில் பரவி டச் செய்யவல்ல அரசியல் சித்திரம் என்று விமர்சனம் செய்தார் பிரபல சினிமா விமர்சகர் பாலின் கேயெல், (Pauline Kael) இத்திரைப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ள ழான். லூயி ட்ரிண்டிக்னண்ட் (Jean Louis TrintGnant) விசாரணை மாஜிஸ்டிரேட்டாகவும், கொலையுண்ட மோண்டாண்டின் மனைவியாக நடிக்கும் கிரேக்க நடிகை இரின் பாபாசும் (Irene Papas) மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார்கள். இரின் பாப்பாசின் அற்புத நடிப்பை கிரேக்க திரைப்படம், (Zorba the Greek- லும் பார்க்கலாம். படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா கலைஞர் ராவுல் கெளடார்ட் செய்திருக்கிறார்.

கோஸ்டா காவ்ரா பம்பாயில் நடந்த 15-வது மும்பை திரைப்பட விழாவில் வருகை தந்து சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர்.

கோஸ்டா காவ்ரா 1981ல் தனது முதல் ஆங்கிலம் பேசும் அமெரிக்க திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். 1973ல் உலகம் மறக்க முடியாத அரசியல் கலவரமும் சதியும் கொலையும் உள்ளிட்ட ஆண்டு. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் இடது சாரி அதிபராயிருந்த அழண்டே அமெரிக்க சதியாக சிஐஏயின் கை வண்ணத்திலான படுகொலையில் மரணமுறுகிறார். குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதென்பதுபோல் அமெரிக்க வலது சாரி வார இதழ் ‘‘டைம்’’ தனது அவ்வார அட்டைப் படத்தை அழண்டேயின் பெரிய படத்தைப் போட்டு அது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் தலையிலிருந்து ரத்தம் வடியும் கோலத்தில் கொல்லாஜ் ஓவிய புகைப்பட கலப்பாக போட்டு, அவ்வாரத்திய தலையங்கமாய் அழண்டேயின் படுகொலையை சிலியின் ஆட்சி கவிழ்ப்பையெல்லாம் எழுதியிருந்ததை உலக வாசக அன்பர்கள் அறியக்கூடும்.

அழண்டேயின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கலவரம் பரவுகையில் இருள் கவியும் சமயம் ஓர் அமெரிக்க நகரில் மக்கள் குழப்பத்தில சிக்கி அலைபாய்கின்றனர். தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள், மற்ற பொது ஜனம் என்று சகலவித பயணிகளையும் ஏற்றிச் செல்ல பஸ்களும் டாக்சிகளும் மறுத்துவிட்டு நிற்கின்றன அல்லது காலியாக பயணிகளை ஏற்றாமல் போகின்றன. குழப்பத்திலும் கலாட்டாவிலும் மாட்டிக் கொண்ட பாதசாரிகள் பயத்தில் பதுங்கிக் கொள்ள புகலிடம் கேட்டு கெஞ்சுகின்றனர். மாலைப் பதிப்பான செய்தித்தாள்களுக்கு பஞ்சமாகிறது. ஒரு நில நடுக்கம்கூட இந்தளவு மக்களை பதறியோட வைக்காது, எனும் படிக்கு தெரிந்தும் தெரியாத புரிந்தும் புரியாதபடியான கலவரம் குழப்பம். உலகம் ஏதோ ஒரு பயங்கர முடிவுக்கு வந்தாற்போன்று புனையப்பட்ட அறிவியல் நாடகம்போல தோன்றக் கூடும். இது உலகின் சிறந்த அரசியல் சினிமாக்காரர்களில் ஒருவரும் பிரெஞ்சு அரசியல் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனருமான கோஸ்டா காவ்ராவின் Missing எனும் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள். மேற்கத்திய நாடுகளின் பக்கபலத்தோடு ஏற்பட்ட சிலி நாட்டு ராணுவ புரட்சியும் கம்யூனிஸ்டு அதிபர் அழண்டேயின் படுகொலையும் சோவியத் யூனியன் ஹங்கரி- செக்கோஸ்லாவியா- கொலம்பியா கூட்டுத் தயாரிப்பான ‘‘சென்டார்ஸ்’’ Centaurs எனும் திரைப்படமும் மிக முக்கிய அரசியல் படமாகும். மிஸ்ஸிங்கில் காணாமற்போவது- ஓர் இளம் அமெரிக்க இடதுசாரி ஆதரவு எழுத்தாளன், அவனது தந்தையும் இளம் மனைவியும் மனம் பதறி போலீசில் தரும் புகார் ஏற்கப்படுவதில்லை. அவர்களது பரிதவிப்பும் நிராதரவும் அலைபாய்ந்த அலைச்சலும் படத்தின் பதட்ட நிலையை மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்லுபவை. காணாமற்போனவன் திரும்பி வருவதேயில்லை. அவனுடைய தந்தையாக புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ஜாக் லெம்மானும் Jack Lemmon இளம் மனைவியாக சிஸ்ஸி ஸ்பேசெக்கும் (Sissi Spacek) மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

தொடர் 28: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 28: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஃபிரெஞ்சு சினிமா- 1
விட்டல்ராவ்

உலக சினிமாவுக்கு பெரும் பங்காற்றிய நாடுகளில் ஃபிரான்ஸ் மிக முக்கியமானது. பின்னர் புறப்பட்ட புதிய அலை சினிமாவுக்கும் பிரான்ஸ் முக்கிய பொறுப்பு வகித்த நாடு. அத்தோடு நவீன இந்திய சினிமாவின் தோற்றத்திற்கும் பிரெஞ்சு திரைப்படகர்த்தா ஒருவரின் பங்கேற்பு முக்கியமானது. பிரெஞ்சு சினிமாவின் அறிமுகமும் தொடர்பும் பரிச்சிய அனுபவமும் இந்த பயாஸ்கோப்காரனுக்கு சென்னை பிரெஞ்சு கலையிலக்கிய மையத்தின் (Alliance Franchaise) தொடர்பால் ஏற்பட்டது. அப்போது என்னோடு ஓவியராய் செயலாற்றிக் கொண்டிருந்த காலஞ்சென்ற ஓவியர் வெ.ஜெயராமனின் தம்பியும் பிரெஞ்சிலிருந்து நேரிடையாக குட்டி இளவரசன் நூலை The Little Prince பிரெஞ்சு நூலாசிரியர் Antoine De saint Exupery) தமிழில் மொழி பெயர்த்தவரும், பிரெஞ்சு புதிய அலை திரைப்பட கர்த்தா, ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோவைப் பற்றிய Francois Truffaut நூலைத் தமிழில் எழுதியவருமான வெ.ராம், அலியான்ஸ் ஃப்ரான்சேஸ் மையத்தில் படங்கள் திரையிடல் பணியில் துணை புரிந்து வந்தவர். இவர்களின் வழிகாட்டலில் நானும் காலஞ்சென்ற ஓவியர் அச்சுதன் கூடல்லூரும் இன்னும் சில ஓவியர்களும் அம்மையத்தின் கலைப் பிரிவில் உறுப்பினர்களானோம். பிரெஞ்சு கலாச்சார மையத்தில் நாங்கள் எங்கள் ஓவியங்களைக் காட்சிப்படுத்தினோம். சென்னையிலிருந்தபோது அக்கிரகாரத்தில் கழுதை தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த மலையாள திரைப்பட கர்த்தா காலஞ்சென்ற ஜான் ஆப்ரகாம் அவர்கள் பிரெஞ்சு சினிமா பார்க்க வருவார். ஜான் இயக்கிய அம்மா அறியான் படத்தின் சில காட்சிகளில் பிரெஞ்சு திரைப்பட கலைஞர் Jean Cacteajj-ன் பாதிப்பு தெறிக்கும். அச்சுதன் கூடல்லூர் ஜானுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

இதை எழுதும் சமயம் ஆவணப்படங்கள் (Documentary Filim) குறித்து கொஞ்சம் பேசலாம் என்று வரலாறு, அன்றாட நிகழ்வுகள், இடம் பொருள் ஏவல் என்று பலதையும் மாற்றாமல் கலைத் தன்மையோடும்- அழகியலோடும் எடுப்பவை ஆவணப்படங்கள், ஓவியம் சிற்பம் குறித்த ஆவணப் படங்கள் கூடுதல் அழகை இயல்பாகவே கொண்டு விடுகின்றன. தமிழில் எடுக்கப்பட்ட, இந்தியாவில் எடுக்கப்பட்ட அரிய ஆவணப் படங்களையும், அவற்றின் கர்த்தாக்களையும் பற்றிய, சொல்லப்படாத சினிமா, என்ற அரிய தொகுப்பு நூல் நிழல் திருநாவுக்கரசு அவர்களால் தொகுக்கப்பட்டு நிழல் வெளியீடாக சில காலம் முன்பு வந்திருக்கிறது. சொல்லப்படாத சினிமா நூல் விமர்சகர்களால் சொல்லப்படாத நூலாகவே கிடப்பது தமிழின் துரதிர்ஷ்டம்.

அலியான்ஸ் ஃப்ரான்சேஸ் (Alliance Franchaise) 1978-79 காலக் கட்டத்தில் ழான் ரென்வாரின்
Le carrosse DDor’ (1952) (The Golden Coach) என்ற அரிய படத்தை திரையிட்டது. இச்சமயம் கலாச்சார மையம் சிறப்பு ஏற்பாட்டில் ஓவியர்களுக்காக உலகின் மிகச் சிறந்த ஓவியக் கலை நவீன ஓவியங்கள் மற்றும் நவீன பிரெஞ்சு ஓவியர்களைப் பற்றிய மிகச் சிறந்த பிரெஞ்சு ஆவணப் படங்களை ஒரு வாரம் முழுக்க திரையிட்டது. கலைத் தொடர்பான சிறந்த பிரெஞ்சு ஆவணப் படங்களின் திரையிடல் விழா -1977ல் அதி சிறப்பாய் நிகழ்த்தப்பட்டது. க்ளாட் மோனே, ஹென்றிரூஸோ, டாமியர், பஃப்பே, பற்றியும் சர்ரியலிஸம், க்யூபிஸம், இம்ப்ரெசனிஸம் ஆகிய ஓவிய கோட்பாடுகள் பற்றியதுமான வண்ண ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பிக்காஸோ பற்றி மூன்று படங்களும் திரையிடப்பட்டன. மூன்றாவது படத்தில் பிக்காஸோ ஓவியந் தீட்டவும், புகழ் பெற்ற ரஸ்ய இசை மேதை ஸ்ட்ராவின்ஸ்கி (Stravinsky) இசைக் கோர்வை புரியும் பின்னணியும் காட்டப்படுகிறது. ஸ்ட்ராவின்ஸ்கியின் இசைக் கோர்வை ஒரு சமயம் அமைதிச் சூழலை, ெமளன வெளியை ஏற்படுத்தி மெல்ல மெல்ல உயர்த்தியும், மறு சமயம் இசையதிர்வுகளின் உச்சத்துக்கு சென்று அமைதியை அலைக்கழிக்கவும் செய்வதன் வழியே பிக்காஸோவின் ஓவிய உருவச்சிதைவுகள் Distortions) அவை மீண்டும் ஒன்று சேர்வது போன்று முப்பரிமாண வண்ணத் தீட்டுதல்களை கோர்வைபடுத்துகிறது.

மறுநாள் ஓவியர் ஜியார்ஜ் ப்ராக் (George Braaque)கிற்கு அஞ்சலி என்ற அரிய ஆவணப்படம் காட்டப்பட்டபோதும் மலையாள சினிமா இயக்குனர் ஜான் ஆப்ரகாம் வந்திருந்தார். ஜியார்ஜ் ப்ராக், கியூபிஸ பாணி ஓவியத்தின் ஒரு முன்னோடி. ஆனால் பிக்காஸோவுக்கு கிடைத்த உலகளாவிய பெருங் கைத்தட்டல்கள் ப்ராக்குக்கு கிடைக்கவில்லை. கிடைத்திருக்க வேண்டும். அன்று திரையிடப்பட்ட மற்ற மூன்று படங்களில் மார்க் சகல் குறித்து இரண்டும், ஹென்றி மத்தீஸ் (Henry Mathis) பற்றி ஒன்றுமானது. சகல் ரஸ்யாவில் பிறந்து பிரான்சுக்கு ஓடிப் போன ரஷ்ய யூதர்.
மீ மெய்யீய வகை ஓவியங்களில் திளைத்தவர் சகல். இவரை ஓர் அரிய நேர்காணலோடு ஆவணப்படுத்தியவர் மாரிஸ் ரேவல் Marice Ravel என்ற பிரெஞ்சு கலை விமர்சகரும் பிரெஞ்சு ஆவணத் திரைப்பட கர்த்தாவுமானவர் ஹென்றி மத்தீஸ் உலகப் புகழ்பெற்ற மற்றொரு பிரெஞ்சு ஓவியர். இவர்கள் இருவருமே பின் இம்ப்ரெஷனிஸ ஓவியர்கள். (Post Impressionism).

இந்த பிரெஞ்சு ஓவிய ஆவணத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இரு படங்கள் அதி முக்கியமானவை. ஒன்று, இம்ப்ரெஷனிஸம் மற்றும் நியோ- இம்ப்ரெசனிஸம் பற்றிய சற்று நீண்ட படம் அற்புதமானது. அகஸ்டி ரென்வார் இம்ப்ரெசனிஸ ஓவியக் கோட்பாட்டின் தந்தை எனப்படுவர். இவரது “சூரிய அஸ்தமனம் முதலான ஓவியங்களை முன் வைத்து சொல்லும் படம். இம்ப்ரெஸனிஸ வகைமையை அடுத்தும் அதனை மேற்கொண்டு எடுத்துச் சென்று பரவசப் படுத்திய ஓவியர்கள், அவர்களின் ஓவியங்கள் பற்றிய சிறந்த படம். அகஸ்டி ரொதானுக்கு அஞ்சலி (Homage to Rodin) எனும் கருப்பு வெள்ளை படம். அகஸ்டி ரொதான் செய்வித்த ஒரு சிற்பத்தை அணு அணுவாக பல்வேறு கோணங்களில் காமிரா நமக்குக் காட்ட, பின்னணியில் ஸ்டிராவின்ஸ்கியின் அற்புத இசைக் கோர்வை படத்தை முன்னுக்கு இழுக்கிறது. ரொதான் நமது உலகப் புகழ் பெற்ற வார்ப்புச் சிற்பமான நடராசர் சிற்பம் குறித்து அழகியல் ரசனை ரீதியாகவும் சிற்பக் கலை ரீதியாகவும் சிலாகித்துள்ளார். அதே சமயம், நடராஜர் குறித்து அரிய நூலை Dance of siva எழுதிய டாக்டர் ஆனந்த குமாரசாமியின் தத்துவ வெளிப்பாட்டுக்கு அப்பால் விலகியும் பேசியுள்ளார் ரொதான். ரொதானின் சிற்பக் கலை பாதிப்பில் உருவான புகழ்பெற்ற இரு இந்திய நவீன சிற்பிகள், டி.பி.ராய் சவுத்ரி மற்றும் சர்பரிராய் சவுத்ரி.

ழான் ரென்வார் 1894-ல் பாரிசில் மாண்மார்ட் எனுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை புகழ்பெற்ற பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ ஓவியர் அகஸ்டி ரென்வார் ஆவார். ஓவியர்களோடு வளர்ந்த ழான் ரென்வார் முதலில் செராமிக் சிற்பக் கலைஞராக விளங்கியவர். பிறகு 1920களில் திரைக்கதையாசிரியராயிருந்து திரைப்பட ஆக்கத்திலீடுபட்டு 1930களில் வெற்றிகரமான இயக்குனரானார். (The Grand Illusion (1937) The Human Beast (1938) The Rules of the Game (1939) The River (1947) ஆகியவை ரென்வாரின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். 1939பின் ரென்வார் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார். அவர் 1979ல் கலிபோர்னியாவிலுள்ள பீவர்லிஹில்ஸில் காலமானார்.

La Grand Illusion Grand Illusion 1937) போர் என்று வரும்போது மக்கள் தத்தம் சுயநலம், அந்தஸ்து மேலிட்ட நலன்களைக் காட்டிலும் பொதுவானதாக எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே முன் வைத்து முன் நகர்த்தி சிந்திப்பதும் செயலாற்றுவதுமாயிருப்பர். மனித வாழ்வின் விடம்பனமே ரென்வாரின் இந்த மகத்தான பிரமையாக திரைப்படமாகிறது. முதல் உலகப் போர். ஒரு ஜெர்மன் கைதி முகாமில் கைதிகளாக லெப்டினெணட் மேர்சால் மற்றும் காப்டன் டிபோல்டு என்பவர்கள் தங்கள் இதர பிரெஞ்சு சிப்பாய்களோடு, ஜெர்மன் அதிகாரி, வான் ராவ்ஃபென்ஸ்டீனின் சாந்தமான கண்காணிப்பின் கீழ் இருக்கையில் தப்பிச் செல்ல மகத்தான திட்டமொன்றை வகுக்கின்றனர். இருவரும் மகத்தான கற்பனையில் வாழ்கின்றனர். பிரெஞ்சு பாரம்பரியம், பரஸ்பர மரியாதை பேணும் பழக்கம் கவுரவமும் கனவான்தனமான சமூகம் என்று வெளியுலகை இந்த கைதி முகாமலிருந்தவாறு கற்பித்துக் கொள்ளுகின்றனர். அது ஒரு மாயை- கானல் நீர் என்பது புரிபடுவது படத்தின் இறுதிக் கட்டம். கானல் நீரான தம் லட்சியத்தையுடைய லட்சிய வெளியுலகை அடைய மிகவும் கஸ்டப்பட்டு சுரங்கம் ஒன்று தோண்டுகின்றனர். வெளியுலகை அடைந்த பிறகுதான் துப்பாக்கிக் குண்டுக்கு ரத்த வித்தியாசம் தெரியாதென்பதையும், கைதி முகாமின் வன்கொடுமைகளினூடே ஏற்பட்டிருந்த நெருக்கமான தோழமை என்பதுகூட பிரமை என்பதும், தப்பி வெளியில் போனதுமே பழையபடி திரும்பி வாழ்வின் கடுமையான யதார்த்தத்துக்கு திரும்புகின்றனர். இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ஜெர்மன் அதிகாரி பிரெஞ்சு கைதிகளான அதிகாரிகள் பால் உண்மையிலேயே இரக்கமும் அக்கறையும் கொண்டவனாயிருப்பதை பின்னாளில் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் ஜெர்மனி விரும்பவில்லை. நாஜிகள் பிரான்சை முற்றுகையிட்டு ஆக்கிரமித்திருந்தபோது, ரென்வாரின் இப்படத்தை தடை செய்துவிட்டது. பிரெஞ்சு அதிகாரிகளாக ழான் கேபின் (Jean Cabin), பியர் ஃப்ரெஸ்னே மற்றும் (Pierre Fresnay) ஜெர்மன் அதிகாரியாக எரிச்வான் ஸ்ட்ரோஹைம் (Erich von Stroheim) என்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கிறிஸ்டியன் மட்ராசின் காமிரா கோணங்கள் பிரம்மாதம் முஸ்ஸோலினியின் கோப்பைக்கும், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் வெனிஸ் திரைப்பட
விழாவில் பரிசு பெற்றது.

ழான் ரென்வாரின் மறக்க முடியாத மற்றொரு திரைப்படம் La bete Humaine The Humanbeast- 1938).
“நா நா என்ற 19ம் நூற்றாண்டு மகத்தான பிரெஞ்சு நாவலை வாசித்தவர்களோ, குறைந்தது கேள்விபட்டவர்களோ அல்லது அதைக் கொண்டு எடுக்கப்பட்ட பழைய திரைப்படத்தையாவது, பார்க்க நேரிட்டவர்களோ கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய அந்நாவலாசிரியரின் பெயரையும் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஜோலா (Emile Zola) ஜோலாவின் ‘‘நா நா’’வும், ஃப்ளேபரின் மேடம் பொவாரியும், தோல்ஸ்தோயியின் அன்னா கரீனாவும் தத்தம் குணநலன்களில் ஒன்றுபட்ட அக்காதங்கச்சிகள். ஒரு காலக்கட்டத்து நாவல் வாசகர்களுக்கான முப்பெரு நாவல்கள். எமிலி ஜோலாவின் மற்றொரு மகத்தான நாவலைக் கொண்டு திரைக்கதையானது மனித மிருகம் என்று பொருள் கொள்ளும் “La Bete Humaine Yhe Human Beast. இக்கதை ஒரு ரயில் எஞ்சின், அதன் ஓட்டுனர், ஓர் அழகிய பெண் என மூவரிடையேயான முக்கோண காதல் உறவு பற்றியது. இக்கதையை திரைப்படமாக்கும் திட்டம் வகுக்கப்பட்டதையடுத்து அதை இயக்க வேண்டியவர் ழான் ரென்வாரே என்பதை ஓர் குழு தீர்மானித்தது. அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக அன்றைய நாளில் சிறந்த பிரெஞ்சு சினிமா விமர்சகராயிருந்த ஒருவரும் இருந்திருக்கிறார்.

ஹியூமன் பீஸ்ட் திரைப்படத்தில் கதா நாயகன் ஒரு ரெயில் எஞ்சின் டிரைவர். அந்த காலத்து நீராவி எஞ்சினை ஓட்டிச் செல்ல கடினமான பயிற்சி தேவைப்படும். எஞ்சினில் நின்றவாறே பல மணி நேரத்துக்கு பல மைல் தொலைவுக்கு மிக்க வேகத்தில் உடல் உடையெங்கும் கரி பூசிக் கொண்டு நிலக்கரி எரிந்தபடியே இருக்க அனலில் ஓட்ட வேண்டும் இந்தியாவில் அப்போது ஆங்கிலோ இந்தியர்களே பெரும்பாலும் எஞ்சின் டிரைவர்களாயிருந்தார்கள். ரெயில் எஞ்சின்- ஸ்டேசன் தண்டவாளம், டன்னல்கள் என்று இந்தியாவிலும் கொஞ்சம் திரைப்படங்களுண்டு. ழான் ரென்வாரின் படத்தோடு ஒப்பிடவே முடியாதென்றாலும், ஒரு சில காட்சிகள் சிறப்பாய் எடுக்கப்பட்ட இந்திய படங்களில் அபு சன்சார் (சத்யஜித்ரே), நாயக் ரே மற்றும் 27 டெளன் (அவதார் கிருஷ்ண கெளல்) எனும் படங்களிருக்கின்றன. ரென்வாரின் மனித மிருகம் ஓர் இயந்திர மிருகத்தையும் (லிஸோன் என்ற பெயர் கொண்ட ரயில் எஞ்சின்) ஸ்டேசன் மாஸ்டரின் அழகிய மனைவி செவெரின் என்பவளையும் ஏக காலத்தில் காதலிப்பவன். எஞ்சின் டிரைவர் ஜாக்குவிஸ் லாண்டியர் (Jacques Lantier) மிகுந்த பிரியத்தோடு தான் The Lison என்று பெயரிட்ட தன் ரயில் எஞ்சினை எந்தளவுக்கு நேசிக்கிளானோ, அந்த அளவுக்கு மேலே ரித்விக் கடக்கின் அஜாந்திரிக் படத்து கதாநாயகன் பிமல் எனும் டாக்ஸி டிரைவர்தான். “ஜகட்தல் என்று பிரியமாய் பெயரிட்டு ஓட்டி வந்த அதரப் பழைய டாக்ஸியை நேசித்தவன்… ழான் ரென்வார் தனது நேர்காணலில் Human Beast படம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதை விளக்குகிறார். படம் முழுக்கவும் பெரிய ரயில் நிலையம், ஏராளமான இருப்புப் பாதைகள், எஞ்சின்கள், வண்டித் தொடர்கள், ரயில்வே சிப்பந்திகளால் நிறைந்திருக்கிறது. எஞ்சினின் ஆக்ஸில் உடைந்து விடுகிறது. ஒரு காட்சியில் லாண்டியரின் உதவியான் பயர்மேன் பெக்வே எஞ்சின் முன் பக்க வட்டமான மூடியைக் கழட்டிவிட்டு எஞ்சினுக்குள் சேர்ந்து கிடக்கும் சாம்பலை ஷவலால் வெளியில் கொட்டுவது மிகவும் யதார்த்தமானது.

எஞ்சின் டிரைவர் லாண்டியர் என்ற மனிதனுக்குள் மிருகம் பதுங்கியிருக்கிறது. அபூர்வமாய் சில மிருகங்களுக்குள்ளும் மனிதம் இருந்து ஏதாவது செயல்பாடுகளாய் வெளிவருவதுண்டு. மனிதனுக்குள் மிருகம் மிருகத் தன்மையிருப்பது அதிகம். ரயில் எஞ்சினுக்கு கிட்ட தட்ட சமமான மனித எஞ்சின் அவன். இப்படத்தில் அந்த எஞ்சினை ஒரு கதாபாத்திர அந்தஸ்துக்கு கொண்டு போயிருப்பதாய் ரென்வார் கூறுகிறார். ஆரம்பத்தில் ஒரு பெருங் குடிகாரனாயிருந்த தான் அதை அறவே ஒழித்துக் கட்டியதோடு தனது குடிகார மூதாதையர்களால் குடித்து அழிந்த இழப்புகளை நினைத்து வருந்துகிறான். எமிலி ஜோலாவின் சில நாவல்கள் குடி மது மோகிகளால் அழிந்த குடும்பங்கள் பற்றியதாயிருக்கும். Drunkard மற்றும் Earth நாவல்களைக் குறிப்பிடுகிறேன். Human Beast அதில் சேராதது என்றாலும் குடிப் பழக்கத்தின் கொடுமையையும் அதை விட்டொழித்ததையும் கதாநாயகனைக் கொண்டு பேச விடுகிறார் ஜோலா.

ஜோலாவின் சமகால ஓவியரும், நண்பரும், ழான் ரென்வாரின் தந்தையுமான பியர் அகஸ்தெரென்வாரின் ஒரு ஓவியத்தில் நன்றாக குடித்துவிட்டு முகம் உப்பிய கதியில் சாராய விடுதியில் இருவர் உட்கார்ந்திருப்பார்கள். எமிலி ஜோலா நமது வங்க நாவலாசிரியர் சரத் சந்திரருக்கு இவ்விசயத்தில் சற்று மூத்தவர்..

ஜாக்குவெஸ் லாண்டியரின் எஞ்சின் உதவியாள் அதாவது ஃபயர்மேன் பெக்குவா (Pecqueux இருவரையும் முதல் காட்சியில் ரென்வார், அதிவேகத்தில் ஓடும் எஞ்சினில் அறிமுகப்படுத்தும் காட்சியே அற்புதமானது. கருப்பு வெள்ளை காமிரா ஒளிப்பதிவின் சிகரமென்றே இத்திரைப்படத்தின் பல்வேறு சட்டகங்களையும் சொல்ல வேண்டும். இருப்புப் பாதையின் தண்டவாளங்கள் கண்முன் ஓடி நீண்டு பிரிந்து இணைந்து சுரங்கத்தில் நுழைந்து, மீண்டு அப்பப்பா, ரெயில்வே உலகின் மகத்தான விசயங்களை கேமிரா கோணப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கிளாட் ரென்வார் ஜீனியர் (Glaude Renoir JR) மிகவும் பாராட்டத் தக்கவர். படமாக்கப்பட்ட விதம் குறித்து தம் நேர் காணலில் விவரிக்கும் இயக்குனர் ரென்வார், அந்த எஞ்சின் 60 கிலோ மீட்டர் வேகத்திலிருக்கும்போது நாங்கள் அதற்கு இணையாக மற்றொரு இருப்புப் பாதையில் அதே வேகத்தில் ஓடும் இன்னொரு எஞ்சினிலிருந்தும், கதாபாத்திரங்கள் நின்றிருந்த எஞ்சினிக்குள்ளேயே நிலக்கரி தொட்டியை ஒட்டியும் கேமிராக்கள் பொருத்தி படமெடுத்தோம் என்கிறார். அத்தோடு கேமராமேன் க்ளாட் ரென்வார் எஞ்சினுக்கு அடியில் பெரிய சக்கரங்களை ஒட்டியே ஓர் இருக்கை போன்ற பலகையை இணைத்து அதில் தன்னையும் கேமிராவையும் இருத்தி வைத்து ஓடும் வண்டியிலிருந்து (60 கி.மீ.வேகம்) மற்றொரு கோணத்தில் படமாக்கியுள்ளார். எஞ்சினை இயல்பாகவும் லாவகமாகவும் ஓட்டுவதற்கு ஓட்டுனராக நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்தி நடித்திருக்கும் பிரெஞ்சு நடிகர் ழான் காபின் (Jean Gabin)கு பல மாதங்கள் நிஜமாகவே ரயில் எஞ்சின் ஓட்டுனர் பயிற்சியளிக்கப்பட்டதாக ரென்வார் தம் பேட்டியில் கூறுகிறார். எஞ்சினோடு இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் டிக்கட் வாங்கி உட்கார்ந்து பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் தம் தொடர்வண்டியின் எஞ்சினை இயக்கி ஓட்டுபவர் அசல் டிரைவரல்ல, ஒரு நடிகர் என்பதும், சினிமா ஒன்றுக்கான படப்பிடிப்பு பயணத்தோடு நடக்கிறது என்ற விசயங்கள் எதுவுமே இறுதிவரை தெரியாது
என்றும் ரென்வார் கூறுகிறார்.

ரயிலில் ஒரு கொலையும் நடக்கிறது. அதில் சம்மந்தப்படுபவர் ஸ்டேஷன் மாஸ்டர் ரெள பாண்டு என்பவர். இவரது அழகிய மனைவி செவரின் (Sevarin) என்பவள். இவளை எஞ்சின் டிரைவர் லாண்டியர் காதலிக்கிறா். அவள் அவனோடு ஓடிவந்து விடவும் தயாராக இருக்கிறாள். தன் ஸ்டேசன் மாஸ்டர் கணவனைக் கொன்று விடும்படியும் கேட்கிறாள். எல்லாமே ரெயில்வே எஞ்சின்களும் வண்டித் தடங்களும் நின்றபடியும் ஓடினபடியும் இருக்கும் Railway Yardndle தான் நடக்கிறது. லாண்டியருக்குள் கொலை பாதகம் செய்ய முயலும் மிருகம் இருப்பதும் சமயத்தில் அது தயாராகி வந்து உடனே அடங்கி விடுவதுமாயிருக்கிறது. தொடக்கக் காட்சிகள் ஒன்றில் இளம் பெண்ணொருத்தியின் கழுத்தைப் பிடித்து கிட்டதட்ட நெரித்துக் கொன்றுவிடுமளவுக்கு அவன் முயன்றவனே. அப்போதுதான் தனது மூதாதையர்கள் குடிப்பழக்கத்தால் அழித்து அழிந்ததை நினைவு கொண்டு, தான் அதை விட்டு நீ்கியதைப் பற்றியும் யோசிக்கிறான். ரெயில்வே யார்டில் இரவில் நடந்துவரும் ஸ்டேசன் மாஸ்டரை இரும்புக் கடப்பாறையால் கிட்டதட்ட அடித்துக் கொல்லும் முயற்சியில் இறங்கியவன் உடனே அதிலிருந்து பின்வாங்குகிறான். அவனுக்குள்ளிருந்த மிருகத்தை அவனுக்குள்ளிருக்கும் மனிதம் அடக்கியமுக்கிறது. இது செவெரினை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கி லாண்டியரை வெறுக்கிறான். காதலும் வேண்டாம் புண்ணாக்கும் வேண்டாம். இனி சிறு வயதிலிருந்தது போல வெறும் சினேகிதர்களாகவே பழகுவோம் என்கிறாள். செவெரின். பிறகு ஒரு நாள் அவளைச் சந்திக்கும் லாண்டியர் அவளை நிஜமாகவே கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தனது காதல் எஞ்சினை லிஸோனிலிருந்து ஓடிக் கொண்டிருக்கையில் குதித்து உயிரை விடுகிறான்.

இந்தப் படமும் ரென்வாரும் உலகின் பல சிறந்த திரைப்படங்களையும் பல இயக்குனர்களையும் பாதித்திருக்க வேண்டும். ரென்வாரின் நண்பரும் இந்தியாவில் வங்கத்தில் அவர் தயாரித்த The River என்ற வண்ணப்படத்துக்கு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து இட்டுச் சென்றவருமானவர் சத்யஜித்ரே. ரென்வாரின் மனித மிருகம் படத்தால் அங்கிங்கே பாதிப்படைந்து, அபுசன்சார் மற்றும் நாயக் என்ற தம் படங்களில் ரென்வாரைப் பின்பற்றியிருக்கிறார். பெரிய கரிய நீராவி ரெயில் எஞ்சின் தனியாக தண்டவாளத்தில் இலேசாக மூச்சு விட்டுக் கொண்டு புகைக்கசிய நிற்பது யானை நிற்பதுபோலாகும். இந்தக் காட்சிகள் ரென்வாரின் ஹியூமன் பீஸ்ட் படத்தில் நிறையவும் பிரமாதமாயும் வருகின்றன. ரெயின் அபு சன்சார் படத்தில், அப்பு தன் வீட்டையடைய பெரிய ரெயில்வே லைனைத் தாண்டிப் போவான். அப்போது ஒரு பெரிய கரிய நீராவி ரெயில் எஞ்சின் ஒண்டியாக நிற்பதை ரே அற்புதமாய்க் காட்சிப் படுத்தியிருப்பார் (காமிரா: சுப்ரதோ மித்ரா). தண்டவாளங்கள் ஒளியில் மின்னிக் கொண்டு நம் முன்னே ஓடுவதும் பிரிவதும் கூடுவதுமான காட்சிகள் நாயக் படத்தில் காமிரா சுப்ரதோ மித்ரா) நிறைய வருகின்றன. ஹியூமன் பீஸ்ட் படத்தில் எஞ்சின் டிரைவராய் நடித்த ழான் காபின் ஒரு டிரைவராகவே முற்றிலும் மாறிவிட்டார். ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி செவெரினாக சிமோன் சைமன் (Simone Simon) மிக எளிதாக அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். எஞ்சின் உதவியாள் ஃபயர்மேனாக ஜீலியன் காவெட் (Julien Cavette) இயல்பாக செய்திருக்கிறார். படத்தின்
காமிராவை கையாண்டிருப்பவர் ழான் ரென் வாரின் ஒன்றுவிட்ட சகோதரர் க்ளாட் ரெண்வார் – ஜூனியர்.
(Claude Renoir- JR).

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

தொடர் 26: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஜெர்மன் சினிமா ஒன்று
                                          – விட்டல்ராவ்

ஒவ்வொரு நாட்டு சினிமாவும் அதன் மௌனப்படங்களின் செழுமையிலிருந்து தனக்கான உன்னத வடிவை பேசும் படத்துக்கு கொண்டு சென்றதை உலக சினிமா வரலாறு குறிப்பிடும் சிலவரிகளாகும். ஒரு திரைப்படத்தின் கதையம்சம் கொலை, திகில், இசை, நாடகம், காதல், சாகசம், வலாற்று நிகழ்வு, அறிவியல், ஆன்மீகம் என்று பலதரப்பட்டதாயிருக்கலாம். அது முக்கியமல்ல. “ஒரு ஒட்டு மொத்த பார்வைக்கு முழுமையான கலை வடிவாக திரைப்படம் அமைந்திருபபதே அதன் அதி உயர்ந்த மேன்மையைச் சொல்லுவது, இதில் கதைக்கோ, நடிகர்களுக்கோ ஒரு பங்குதான் இருக்கும். இயக்குனரும் காமிரா ஒளிப்பதிவாளரும்தான் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

நவீன கலைகளின் 20-ஆம் நூற்றாண்டுப் பார்வைகளில் முக்கியமான ஒரு பார்வை “எக்ஸ்பிரஷனிஸம்” [EXPRESSIONISM]. எக்ஸ்பிரஷனிஸம் என்பது கலையின் வழியே குறிப்பிட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டுதல் என்றாகிறது. 19-ம்நூற்றாண்டின் இறுதியில் இருந்த ரியலிஸம் மற்றும் இம்ப்ரஷனிஸம் போன்ற கலைக் கோட்பாடுகள் வைக்கும் மரபார்ந்த வடிவங்கள் உண்மையான கலையை உருவாக்குவதில் தடையாக இருந்ததாய் எக்ஸ்பிரஷனிஸ்டுகள் தீர்மானித்தனர். ஜெர்மனியில் இவ்வகை கோட்பாடு அன்றைக்கு பெரிதும் பின்பற்றப்பட்டு “ஜெர்மன் எக்ஸ்பிரஷனிஸம்” என்றே சொந்தம் கொண்டாடினர். ஜார்ஜ் கெய்ஸர், ஏர்னஸ்ட் போல்லர் என்பவர்கள் எக்ஸ்பிரஷனிஸ்ட் நாடகாசிரியர்களென அறியப்பட்டவர்கள். பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் [BERTOLT BRECHAT] உலகப் புகழ்பெற்ற எக்ஸ்பிரஷனிஸ்ட் நாடகாசிரியர். டி.எஸ். எலியட், ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவேல் பெக்கட், போன்றவர்கள் ஆங்கில மொழியில் எழுதிக்கொண்டிருந்த எக்ஸ்பிரஷனிஸ்டுகள் இசையிலும் ரிச்சர்டு வாக்னர் எக்ஸ்பிரஷனிஸ உத்திகளை தத்தம் இசைக் கோர்வைகளில் ஈடுபடுத்தினர். ஜெர்மனி சினிமாவும் அவ்வப்போது குழம்புச் சோற்றுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்ளுவதுபோல எக்ஸ்பிரஷனிஸத்தைத் தொட்டுக் கொண்டது.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

ஜெர்மனிய சினிமாவின் அதிமுக்கிய ஆரம்பப் பேசும்படம் “M” ஒரு தொடர் கொலைகாரனைப் பற்றியது. கொலை [MURDER] அல்லது கொலையாளி [MURDERER] என்பதைக் குறிக்கும். வார்த்தையின் முதல் எழுத்தான “M” படத்தின் பெயராகிறது. தொடர்கொலை சம்பவங்களை வைத்து சுவாரசியமான ஹாலிவுட் படங்களாக BOSTON STRANGLER, NO WAY TO TREAT AZ LADY, 10, RILLINGTON PLACE மற்றும் FRENZY என்பவை “M”–ன் பாதிப்பால் பின்நாட்களில் தயாரிக்கப்பட்டவை. மிகச்சிறந்தவையாகக் கொண்டாடப்பட்ட PSYCHO மற்றும் SILENCE OF THE LAMBS ஆகிய இருபடங்களுக்கும் அரிச்சுவடியாயிருப்பதும் “M”தான்.

1931-ல் வெளிவந்த “M” ஜெர்மன் தயாரிப்பாளர் – இயக்குநர் FRITZ LANG-ன் முதல் பேசும்படம் [ஜெர்மன்மொழி], LANG ஏற்கெனவே ஆல்ஃபர்டு ஹிட்ச்காக் 1927-ல்தயாரித்து இயக்கிய THE LODGER என்ற மௌனப்படத்தின் பாதிப்பாலும், ஹிட்ச்காக்கின் 1929ம் வருடத்து பேசும்படமான BLACKMAIL என்பதின் தொழில் நுணுக்கங்களின் கவனிப்போடும் “M” படத்தை உருவாக்கினதாகக் கூறப்படுகிறது.

ஃபிரிட்ஜ் லேங் 1890-ல் வியன்னா நகரில் பிறந்தவர். இவரது முதல் மௌனத் திரைப்படம்- 1919-ல் HALBBLUT [THE WEAKLING] என்ற பெயரில் ஜெர்மனிய UFA ஸ்டூடியோவில் தயாரித்து வெளியிட்டார். பெண்ணொருத்தியோடான காதலால் அழிந்து போகும் மனிதன் ஒருவனின் கதை இப்படம். இக்கருத்தை அவரது வேறு சில படங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. இப்படங்கள் யாவுமே லேங்குக்கு வெற்றியைத் தந்தவை. கடைசியாக அவர் தயாரித்து இயக்கி மிகப்பெரிய வெற்றியளித்த அறிவியல் கதைப்படம் METROPOLIS [1927]. அதன்பிறகு இயக்கிய திரைப்பட வரலாற்றில் நிலையான பெயரைப் பெற்றது அவரது முதல் பேசும்படமான “M” [1931]. தம் படத்தில் திகில் காட்சிகளின் போக்கில் சஸ்பென்ஸை உருவாக்கி அவர் மிகச் சிக்கலான ஒலிப்பதிவை [RECORDING] பயன்படுத்தியிருக்கிறார். EDVARD GRIEG-ன் இசைக்கோர்வை பிரமிக்க வைத்ததாயிருக்கிறது.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

1933-ல் ஜெர்மனியின் திரைப்பட ஸ்டூடியோக்கள் யாவும் நாஜி விளம்பர இலாகாவுக்கு தலைவராயிருந்த ஜோசப் கோயபெல்ஸின் [JOSEPH GOEBBELS] கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய திரைப்பட இயக்குனர்களும் நட்சத்திரங்களும் ஜெர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் ஹாலிவுட்டை சென்றடைந்தனர். லேங்கின் திறமையைக் கண்டு மகிழ்ந்த நாஜிகள் அவரை ஜெர்ன் UFA ஸ்டூடியோவுக்கு தலைமைப் பொறுப்பேற்குமாறு 1933-ல்கேட்டுக் கொண்டபோது, அவர் அமெரிக்காவுக்குத் தப்பியோடிவிட்டார். மிகுந்த வெற்றிகரமான திரைப்படக் கலைஞராய் விளங்கிய LANG 1976-ல் காலமானார். அவர் இறுதியாக 1953-ல் தயாரித்து இயக்கியது “THE BIG HEAT” என்ற படம்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

ஜெர்மன் நகரமான டுஸ்ஸெல்டார்ஃப் [DUSSELDORF] பகுதியில் பீட்டர் குர்பென் [PETER KURTEN] என்ற மனம் வக்கரித்தவன் சிறுமிகளைக் கொலை செய்து வந்ததை அன்றைய பத்திரிகைச் செய்திகள் “டுஸ்ஸெல்டார்ஃபின் ரத்தக்காட்டேரி” என்று அழைத்து வந்தன. “M” திரைப்படம் 1931-ல் திரையிடப்பட்டபோது பீட்டர் குர்டெனின் கொலைச் செய்திகளைப் படித்து மனத்தில் தேக்கியிருந்த ஜெர்மன் திரைப்பட ரசிகர்கள் படத்தின் கதைக்கு புதியவர்களாய் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு லேங், தன் படத்தின் கதைக்கு குர்டென் விஷயம் மூலக்கருத்தல்லவென்று கூறிவிட்டார். ஆனாலும் படத்தைப் பார்க்கையில் யார் குற்றவாளி என்பது முன்கூட்டியே தீர்மானிக்க இயலாத வகையில் லேங் கொண்டு போயிருப்பார். சிறுமிகளை ஏமாற்றிக் கொன்றுவிட்டு அவர்களின் முதுகில், “M” என்ற எழுத்தை எழுதிவிடுவான். கொலை செய்யுமுன் ஒரு ராகத்தை சீழ்க்கை ஒலியால் எழுப்புவான். இந்த ராகம், [EDVARDGRAIK] எட்வார்டு கிரேக்கின் இசையமைப்பில் திகழும், “HALL OF THE MOUNTAIN KING” எனும் பாடலின் ராகமாகும்.

ஃபிரஞ்ஜ் பெக்கெர்ட் [FRANZ BEKERT] என்ற மனநோய் பீடிக்கப்பட்ட இளைஞன் அழகிய சிறுமிகளை தின்பண்டங்கள் தந்து பாலியல் ரீதியாய் தீண்டி உணர்வுச் சுகம் பெற்றவனாய் கொலை செய்து வருகிறான். ஒவ்வொரு சிறுமியின் கொலைச் செயலும் மிகுந்த பூடகத்தனமாய் ஒருசில குறியீட்டுக் காட்சிகளோடு நமக்கு புரிய வைக்கப்படுகிறது. முதற் கொலைக் காட்சியில், பெக்கர்டின் நிழல்தான் நமக்குக் காட்டப்படுகிறது. உடனே காட்சி மாறி, சிறுமியின் வருகையை எதிர்நோக்கி வீட்டிலிருக்கும் அம்மாவைப் பார்க்கிறோம். அடுத்து ஜன்னலும், வெளிப்பகுதியும் காட்டப்படுகிறது. காலியான அறைகள் காட்டப்படுகின்றன. மேஜைமீது காலியான இரவுச் சாப்பாட்டுத் தட்டும் கடைசியாக புல்தரையில் உருண்டு சென்று நிற்கும் சிறுமியின் பந்தையும் காமிரா காட்டுகிறது, ஓர் ஒற்றை பலூன் காற்றில் மிதந்து போவதைக்காட்டி சிறுமி இறந்ததை உணர வைக்கிறார் லேங். கொலையாளி பெக்கெர்டின் பின்பக்கம் மட்டுமே படம் முழுக்கக் காட்டப்படுகிறது. அவன் தலைக்கு பரிசு ஒன்றை அறிவித்து, போலீசு வேட்டையாடும் சமயம். ஊர்மக்கள் சட்டத்தை தம் கையிலேந்தி ஒன்று திரண்டு அவனை அடித்துக்கொல்ல திட்டமிடுகின்றனர். இந்த முறையில் பெக்கர்டின் முடிவு ஏற்படுகிறது.

பீட்டர் லோரி [PETER LORRE] என்ற ஹங்கேரிய நடிகர் அப்பாவித் தனமான முகத்தோடு சிறுமிகளைக் கொலை செய்யும் பெக்கர்பாக அதிசிறப்பாய் நடிக்கிறார். இன்ஸ்பெக்டர் கார்ல் லேஹ்மன் [KARL LAHMANN] பாத்திரத்தில் ஆட்டோ வெர்னிக் [OTTO WERNICKE] என்பவர் சிறப்பாய் செய்திருக்கிறார். “M” மீண்டும் அதேபெயரில் அமெரிக்க ஹாலிவுட் தயாரிப்பாக 1951-ல் ஜோசப் லோஸி [JOSEPH LOSEY] என்பவரால் இயக்கப்பட்டு திரையிடப்பட்டது அவ்வளவு சிறப்பாயில்லை.

ஜெர்மனி என்றவுடனே சட்டென நினைவுகளில் மேலெழும்புவது ஹிட்லரும், இரண்டாம் உலகப்போரும் யூதர்கள் அழிப்பும். அந்த நினைவுகளை தூண்டும்படி கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களோடு போர் சாகசத் திரைப்படங்களை ஏராளமாய்த் தயாரித்து அளித்தது ஹாலிவுட். ஆனால், அவை பெரும்பாலும் ஒருதலைப்பட்சமான பார்வையில், சிந்தனையில் எடுக்கப்பட்டவை. உலக யுத்தத்தின் இறுதிப் பகுதியின் அரங்குகளில் பங்கேற்ற அமெரிக்கப்போர் இயந்திரம், பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி, ரஷ்யா அளவுக்கு உயிர் பலிகளையும், ஊர்சிதைவு அழிவுகளையும் சந்திக்கவில்லை. ஹாலிவுட் தயாரிப்புகளாய் நாம் பார்க்கநேரிட்ட 2-ம் உலகப்போர் பின்னணியிலமைந்த பெரும்பாலான திரைப்படங்களில் ஜெர்மன் போர் இயந்திரத்தை சுக்குக்கும் உதவாதது போலவும், புத்தி கூர்மை, யுக்தி, வியூகம், என எல்லாவற்றிலுமே அமெரிக்க ராணுவம்தான் மற்ற எல்லா நாட்டு ராணுவங்களைக் காட்டிலும் உயர்ந்ததாயும் சிறப்பானதாயும் காட்டிக்கொள்ளும் விதமாகவே எடுக்கப்பட்டு வந்தன. அதேசமயம் உலகப்போர் பின்னணியில் இத்தாலி, பெல்ஜியம், போலந்து, ஹங்கேரி, ரஷ்யா ஆகிய நாடுகளில் உருவான திரைப்படங்கள் ஓரளவுக்கு நியாயமான பார்வையையும் நம்பகத் தன்மையையும் கொண்டிருப்பன. அவற்றில் ஜெர்மன் தயாரிப்புகளில் உருவான சில திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

EIN LIED VON LIEBE UND TOD- இந்த ஜெர்மன் சொற்றொடர், GLOOMY SUNDAY எனும் ஜெர்மன் திரைப்படத்துக்கான மூல நாவலின் தலைப்பு ஆகும், நாவலை எழுதியவர் NICK BAR KOW என்பவர் மூன்று ஆண்களுக்கு இடையில் ஒரு பெண் என்றும் சொல்லலாம். இத்தோடு கொலைக்காரத்தனமான ஓர் இனியபாடலும் – இசையும் சேர்ந்த பயங்கர காலக்கட்டத்து கதை. கதை, 2-ம் உலகப்போருக்கு முந்தைய 30-களின் ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் ஓர் உயர்தர உணவுவிடுதியில் நடைபெறுகிறது. விடுதியின் பெயர் ஸாபோ [SIABO]. அதன் உரிமையாளரான லாஸ்லோஸாபோ [LASZLOSZABO] ஒரு ஹங்கேரிய யூதர். அந்த உணவுவிடுதியில் பரிசாரகம் செய்யும் அழகிய யூத இளம்பெண் இலோனா வர்னால் [ILLONA VARNAL] என்பவள். இசைஞானமும் இனிய குரலும் கொண்ட இலோனாவும் விடுதி உரிமையாளர் லாஸ்லோஸாபோவும் காதலர்கள்.

மூன்று ஆண்களுக்கிடையில் ஒரு பெண் மற்றும் அபாயகரமானதொரு அற்புதபாடல் என்பது இப்படத்தின் சாரம். மேற்கத்திய சாஸ்திரிய இசை ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி, போலந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் புகழ்பெற்ற இசைமேதைகளை கொண்டிருந்தன. ஹங்கேரிய பெருநகர் புடாபெஸ்டில் [BUDAPEST] உணவு விடுதிகளில் மற்ற ஐரோப்பிய, ஓட்டல்களில் இருப்பது போலவே பியானோ இசைச்சேவை முக்கியமாயிருக்கும். ஸாபோ உணவு விடுதியிலும் மிக மதிப்பு வாய்ந்த பியானா இருந்தது. அதை இசைக்க இசைக்கலைஞன் வேண்டி அறிவிப்பு செய்தபோது பலர் நிராகிக்கப்பட ஓர் இளைஞன் ஏழ்மை கோலத்தில் வந்து வாசித்து ஸாபோவை கவர்ந்து பணியில் அமருகிறான். அவன் பெயர் ஆண்ட்ராஸ் அராடி [ANDRAS ARADJ]. ஆன்ட்ராஸும் இலோனாவும் இசையின் இழுப்பில் ஈர்க்கப்படுகின்றனர். இதன்போக்கில் இலோனா ஒரே சமயத்தில் இரு ஆண்களை மனம் – உடல் ரீதியாக காதலித்து பழகுகிறாள். ஆன்ட்ராசும் ஸாபோவும் இந்த விஷயத்தில் ஒருவரையொருவர் தாராளமாய் அனுசரித்தே நடந்து கொள்ளுகின்றனர். திரௌபதை – பாண்டவர்கள் உறவுகூட இவ்வளவு நெருக்கமாய் இருந்திருக்குமென்பதுகூட சந்தேகம். இச்சமயம் ஜெர்மனியில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் முன்னணியிலிருந்த தொழில் அதிபர் ஹான்ஸ் எபர்ஹார்டுவைக் [hanseberhardwieck] என்பவன் புடாபெஸ்டுக்கு வந்தவன் ஹாபோ உணவு விடுதியில் இலோனா பரிமாறிய மாட்டிறைச்சி ரொட்டிச் சுருளின் சுவைக்கு [BEEF ROLL] அடிமையாவதோடு இலோனாவிடமும் மனம் பறிகொடுக்கிறான்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

இதனிடையில் ஆன்ட்ராஸ் ஒரு புதிய இசைக்கோர்வையை பியானோவில் வாசிக்கிறான். அது அவன் மனதில் அதற்கான வார்த்தை வடிவங்களைக் கொண்ட இசைக்கோர்வை. அதை அவன் “GLOOMY SUNDAY” என அழைக்கிறான். அவ்விசைக் கோர்வை முதலில் மனதைச் சுண்டியிழுக்கும். அது சிறிது சிறிதாக ஓர் உயர்ந்த சோக வேகத்தை நோக்கிச் செல்லும். பரந்து நீண்டு வேகமெடுத்த ஆற்றைப்போல. அதன் ஓட்டம் அதிசோகமானது. இசைக்கோர்வையை கேட்பவர் வாடி வதங்க, சாய்ந்து சுருள வேண்டியது. பிறகு அச்சோக இசைக்கோர்வையால் ஒரு பயங்கர சூழலுக்கு கேட்போரை இழுத்து செல்லும். அதில் கேட்போரில் சிலர் அமிழ்ந்து சுழன்று செத்துப் போவர். நிறையபேர் தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டார்கள். ஆன்ட்ராஸின் நோக்கம், தன் இசையைக் கேட்பவர் தற்கொலை புரியவேண்டுமென்பதல்ல. ஆனால் பலவீனமான இதயமுள்ளவர்கள் அந்த இசையால் தாங்கவொண்ணா சோகம் மேலிட்டு அதீத உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மார்வலி கண்டுமாண்டார்கள்.

பியானோவில் இசைக்கப்பட்ட GLOOMY SUNDAY கோர்வையின் சோகம் மேலிட்ட உணர்ச்சிப் பெருக்கால் ஒரு கனவான ஸாவோ விடுதியில் விழுந்து சாகிறார். அடுத்தடுத்து ஐந்து தற்கொலை நிகழ்வுகளை அந்தப்பாடல் ஏற்படுத்தவும் இதுபோன்ற செய்திகளுக்கே காத்திருக்கும் ஊடகம் ஒன்று தன் நிருபர்களை அனுப்பி ஆன்ட்ராஸை பேட்டியெடுத்து GLOOMY SUNDAY கீத விவகாரம் பத்திரிகையில் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

ஒரேசமயம் இரு ஆண்களோடு உறவு வைத்த இலோனாவின் வாழ்வில் மூன்றாவது காதலனாக அதேசமயம் ஒருதலைக்காதலாக – ஜெர்மன் பணக்காரன் ஹான்ஸ் எபர்ஹார்டுவைக் நுழைகிறான். ஒருநாள் விடுதியில் தனக்கு மிகவும் பிடித்தமான மாட்டிறைச்சி ரொட்டிச் சுருளை நிறைய உண்டு நிறைய குடித்த போதையில் அவன் இலோனாவை தன்னை மணக்கும்படி வற்புறுத்துகிறான். அந்த அழகி அவனது காதலையும் திருமண யோசனையையும் நிராகரிக்கிறாள். மனம் உடைந்த ஹான்ஸ்டான் வூபு ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முற்படுகையில் ஸாபோ குதித்து அவனைக் காப்பாற்றி ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கிறான்.

2வது உலகப்போர் தொடங்கி உலகெங்கும் உள்ள யூத இனத்தை அழிக்கும் காரியத்தில் முன்னேறும் ஹிட்லர், ஜெர்மனிக்கான “இறுதித் தீர்வை” [FINAL SOLUTION] முன்வைக்கிறார். ஹிட்லரின் இறுதித்தீர்வுத் திட்டம் படுபயங்கரமானது. நாஜி ஆக்கிரமிப்பிலிருந்த ஐரோப்பிய பகுதியில் வாழும் யூதர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்தும், துப்பாக்கிச் சூட்டிலுமாய் கொன்றழிப்பதுதான் அது. போர் சுறுசுறுப்படையும் சமயம், ஹான்ஸ் ஜெர்மன் ராணுவத்தில் ஒரு கர்னல் பதவி பெற்று, ஹங்கேரியின் யூதர்களை இறுதித் தீர்வுக்குள் அழிக்கும் படையின் பொறுப்புள்ள ஓர் உயரதிகாரியாக புடாபெஸ்ட்டுக்கு வருகிறான். இப்போது அவன் அதிகாரபூர்வமாகவே இலோனாவை அடைய முயற்சிக்கிறான். அப்போதும் அவன் உடன்படுவதில்லை. இதற்குள் ஆன்ட்ராஸின் இசைக்கோர்வை GLOOMY SUNDAY – நூற்றைம்பது தற்கொலைகளைக் கண்டு விடுகிறது. இலோனாவின் தூண்டுதலின் பேரில் ஆன்ட்ரஸ் “இருள் சூழ்ந்த இரவு” இசைக்க வார்த்தைகளைத் தேடிவார்த்தை வடிவப் பாடலாக்குகிறான். அந்த இசைக் கோர்வையும் பாடலும் மட்டுமே அவனது படைப்பு ரீதியான இசையும் பாடலுமாகும்.

அப்பாடலைத் தன் இனிய குரலில் இலோனா பாடுவாள். ஹான்ஸ் தன் சக அதிகாரி லெப்டினண்டு கர்னல் ஈஷ்மனுடன் உணவருந்த வந்தவன் மாட்டிறைச்சி பண்டத்துக்கு சொல்லிவிட்டு காத்திருக்கையில், ஈஷ்மன் “இதென்ன, யூதனின் ஓட்டலா?” என்று கேட்பதை ஆன்ட்ராஸ் கவனிக்கிறான். இறுதித் தீர்வை நினைவூட்டுகிறான் ஈஷ்மன். இருவரும் அபரிதமாகக் குடித்துவிட்டு பியானோ இசைக்க ஆன்ட்ராசை கேட்க, ஆன்ட்ராஸ் மறுக்கிறான். ஹான்ஸ் வற்புறுத்துகிறான். ஆன்ட்ராஸ் மறுத்து பியானோவிலிருந்து தள்ளி உட்காரவே, நிலைமை விபரீதமாக காத்திருக்க இலோனா இசைக்காக பாடலைப் பாடுகிறாள். அவர்கள் எழுந்து போகையில் ஈஷ்மன் இடறி விழுந்தவன், ஸாபோதான் வேண்டுமென்றே தள்ளியதாக “யூதப்பன்றியே, என திட்டி அடித்து உதைக்கிறான். ஹான்ஸ் சமாதானப்படுத்தி அழைத்துப் போகிறான். ஒரு வெடிச்சத்தம் கேட்கிறது. ஆன்ட்ராஸ், ஹான்ஸின் துப்பாக்கியைப் பறித்துத் தன்னைச் சுட்டுக்கொண்டு செத்து கிடக்கிறான். GLOOMY SUNDAY பாடலுக்கு தற்கொலை புரிந்து கொண்ட 151-வது மனிதனாகிறான் ஆன்ட்ராஸ்.

யூதர்களை கூட்டம் கூட்டமாய் ரயிலில் ஏற்றி காஸ் சாம்பர்களுக்குள் அடைத்துக் கொல்ல கொண்டு போகிறார்கள். பணம், நகைகள் தருபவர்களை அதிகாரிகள் உயிர்பலியிலிருந்து தப்புவித்து போரிலிருந்து விலகி நிற்கும் “நியூடரல்” தேசங்களுக்கு போய்விட அனுமதிச்சீட்டு தருகிறார்கள். இலானாவையும் ஸாபோவையும் காப்பாற்றுவதாய்க் கூறிவிட்டு ஹான்ஸ் ஸாபோவை விஷவாயுப் பயணம் போகும் ரயிலில் ஏற்றியனுப்பி விடுகிறான். இலோனா கெஞ்சுகிறாள். ஸாபோவைக் காப்பாற்ற ஹான்ஸுக்கு அவள்தன் உடலையே தருகிறாள். அவளை அனுபவித்துவிட்டு ஏமாற்றி விடுகிறான் ஹான்ஸ்.

போர் முடிவுக்கு வருகிறது. வயதான ஹான்ஸ் தன் கிழ மனைவியோடு புடாபெஸ்டுக்கு வந்து ஸாபோ விடுதிக்குள் நுழைகிறான். 80-வயதை தொழிலதிப நண்பர்கள் அவனை அங்கு வரவழைத்துக் கொண்டாடுகிறார்கள். அதே மாட்டிறைச்சி ரொட்டிச் சுருள் தட்டில். ஸாபோ விடுதியை வயதான இலோனாவும் அவன் மகனும் பார்த்துக் கொள்ளுகிறார்கள். அதே GLOOMY SUNDAY பாடல் இசைத்தட்டு போடப்படுகிறது. பாடல் முடிகையில் ஹான்ஸ் துடிதுடித்து ஸாபோ விடுதியின் தரையில் சவமாகக் கிடக்கிறான்.

GLOOMY SUNDAY என்ற உள்ளத்தை உருக்கும் பாடலைப் படத்தில் இலோனாவுக்கு குரல் கொடுத்து அருமையாகப் பாடியவர் ஹதர்நோவா [HEATHER NOVA] என்பவர். ஹான்ஸ் எபர்ஹார்டு பாத்திரத்தில் BENBECKER என்ற ஜெர்மன் நடிகரும், ஆன்ட்ராஸாக STEFANO DIONISI என்பவரும், ஸாபோவாக JOACHIM KROL என்பவரும், இலோனாவாக ERIKA MAROZSAN என்ற நடிகையும், அற்புதமாய் நடித்திருக்க, ஒப்பற்ற ஒளிப்பதிவை போலந்து காமிராமென் EDWARD KLOSINSKI என்பவர் செய்திருக்கிறார். இச் சிறந்த ஜெர்மன் திரைப்படத்தை இயக்கிய ஜெர்மன் இயக்குனர் ROLF SCHUBEL தம் நேர்காணலில் கூறியதாவது “IT IS DIFFERENT TO THE WAY AMERICANS DEPICT NAZIS IN THEIR MOVIES, BUT ONE NEEDS STO DIFFERENTIATE AND FIND OTHER WAYS OF PLAYING NAZIS.” இதே கருத்தில்தான் ஜெர்மனியில் வேறு பலர் எடுத்திருக்கும் உலகப்போர் படங்களும் இருக்கின்றன. பெரிய எடுத்துக்காட்டு: “வீழ்ச்சி” – DOWNFALL எனும் ஒப்பற்ற 2-ம் உலகப்போர் பற்றிய ஜெர்மன் படம்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

போரின் கடைசி கட்டம். பெர்லின் முற்றுகை. பெரு நகரம் ரஷ்ய ராணுவத்தால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்டு விட்ட நிலையில், ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் போர் அரங்காக மாறிவிட்ட துரதிர்ஷ்டம். பெர்லினுக்கு மேற்கு முனையில் அமெரிக்கப்படை அதன் நான்கு ஸ்டார் பெற்ற தளபதி ஜெனரல் பேட்டன் [PATTON] தலைமையில் வந்து பெர்லினுக்குள் நுழைய காத்திருந்தது. அவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவரின் அனுமதி – உத்தரவு பெறாது நேரடியாக தன்னிச்சையாக பெர்லின் நகருக்குள் நுழைந்து ஹிட்லரை கைது செய்ய நினைத்தார். பெர்லினுக்கு கிழக்கு முனையில் ரஷ்ய ராணுவம் ஜெனரல் ஜுகாவ் [GEN.ZUCKOV] தலைமையில் பெர்னிலுக்குள் நுழைய கடுமையாகப் போரிட்டு முன்னேறி வந்தது. அவர் எந்த ஒரு காரியத்துக்கும் தன் நாட்டு அதிபர் ஜோசப் ஸ்டாலின் அனுமதியும் உத்தரவுக்குமே பணிந்து செயல்படுவார். ஜெனரல் பேட்டன் பெர்லினுக்குள் முதலில் நுழைவதை சோவியத்துகள் எதிர்த்தார்கள்.

பல வகையிலும் ஜெர்மனியின் ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது நாஜி ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் கோடிக்கணக்கில் ரஷ்யர்களைப் பறிகொடுத்திருந்தது சோவியத் யூனியன். இறுதிப்போரின் வெற்றிமுனைக்கு லகம் வந்ததே, ஜெர்மன் இராணுவத்தை ரஷ்ய கடுங்குளிர் தட்பவெப்பம் வரும் வரை பல இன்னல்களைப் பொறுத்து காத்திருந்து அவர்களை அடித்து நாசமாக்கி இன்று பெர்லின் கிழக்கு வாசலில் வந்து நிற்கும் ரஷ்யாதான். பெர்லினிக்குள் முதலில் நுழையும் வாய்ப்பும் ரஷ்யாவுக்குத்தான் உரித்தானது என்று ஜெனரல் ஜுகாவ் கூறுகிறார். பேட்டனோடு பேசிப் பயனில்லையென்று அவர் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேச, அவர் ஐசனோவரோடு தொடர்பு கொண்டு நிலைமையை கூறுகிறார். ஐசனோவர் ஜெனரல் பேட்டனிடம் ரஷ்யர்களே பெரலின் நுழைவை முதலில் வைத்துக் கொள்ளப்படும் என்று கூறிவிட்டு பேட்டனை தன்னை வந்து பார்க்க கட்டளையிடுகிறார்.

சுயேச்சையாக முடிவு எடுத்ததற்காகவும், ரஷ்ய தளபதியோடு தேவையின்றி வாக்குவாதம் செய்ததற்காகவும் தண்டனையாக ஜெனரல் பேட்டனின் நான்கு நட்சத்திரங்களையும் பறித்துக் கொண்டதோடு அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் எதுவுமில்லாமல் வெற்று மனிதனாக பேட்டனை அனுப்புகிறார். பிற்காலத்தில் அமெரிக்கா தன் பிரபல கவச மோட்டார்களுக்கு ‘PATTON TANKS’ என பெயரிட்டு பாகிஸ்தானுக்கு கொடுத்தது.இந்த பிரம்மாண்ட பேட்டன் கவச மோட்டார்களில் நூற்றுக்கணக்கானவற்றை பாகிஸ்தான் இந்தியபோரில் [60-கள்] இந்திய ராணும் தன்னிடமிருந்த பழங்கால பிரிட்டிஷார் விட்டுப்போன CENTURIAN TANKS-களைக் கொண்டே நாசமாக்கியது வேறு வரலாறு.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் ஜெர்மன் ராணுவமான “வெஹர்மாட்” படையுடன் கடுமையான இறுதிச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறது. இனி DOWNFALL திரைப்படம். இந்தப்படம் மிகச் சிறந்த அந்நிய மொழிப் படம் என 2004-ல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2004-ல் வெளிவந்த இப்படம் மிகச் சிறந்த போர் பின்னணிப் படங்களில் ஒன்றாக உலகளவில் கருதப்படுகிறது.

“THIRD REICH” என்பது ஜெர்மன் அரசின் ஹிட்லர் காலத்தைக் குறிப்பது. “RISE AND FALL OF THIRD REICH” என்பது மற்றொரு பிரம்மாண்டமான பழைய திரைப்படம். “THE FALL OF BERLIN” என்பது ரஷ்ய தயாரிப்பிலான பிரம்மாண்டமான 70MM திரைப்படம். நூற்றுக்கணக்கில் 2-ம் போர் பின்னணியில் சர்வதே மொழிகளில் திரைப்படங்கள் இருக்கின்றன.

ஹிட்லரும் அவரது அதிமுக்கிய அதிகாரிகள் எனும் ஃபாசிஸ சக்திகளும் அடங்கி ஒடுங்கி ஹிட்லரின் பாதுகாப்பு நிலவறைக்குள் [BUNKER] குழுமியிருக்கும் 2-ம் உலகப் போரின் இறுதிக்கட்டம். ஹிட்லர் தன் இறுதி நாட்களில் தனது சிறப்பு பங்கரில் தனக்கான பெண் காரியதரிசியைத் தேர்வு செய்து நியமிப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த அழகிய இளம் பவேரியப் பகுதயைச் சேர்ந்த காரியதரிசியின் பெயர், ட்ரோட்ல் கங்க் [TRAUDL JUNGE] கங்க்-ன் பார்வையில் வார்த்தைகளை வழியே முழுப்படமும் சொல்லப்படுவதாய் இயக்குனர் எடுத்துச் செல்லுகிறார். ஜோக்கும் ஃபெஸ்ட் [JOACHIM FEST]என்பவர் எழுதிய “INSIDE HITLERS’S BUNKER என்ற ஜெர்மன் நூலையும் ஹிட்லரின் இறுதிகால காரியதரிசிப் பெண் ட்ரோடள் கங்க்-ம்மெல்லிசா முல்லர் [MSELISSA MULLER] என்ற பெண்ணும் சேர்ந்து எழுதிய “இறுதி நேரம் வரை” [UNTILTHE FINAL HOUR] என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு DOWNFALL திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

ஹிட்லர தமது வலிமை மிக்க 9-வது படைப்பிரிவை பெரிதும் நம்பியவராய் ஒளிமங்கிய தம் பதுங்கு அறைகளிலிருந்து கொண்டு, முன்னேறிவரும் ரஷ்ய துருப்புகளுடன் பலத்த பதிலடி தந்து விரட்டியடிக்குமென எதிர்பார்த்து தம் படைத் தளபதிகளுக்கு தைரியம் தருகிறார். அவர்களோ, “9-வது படைப்பிரிவு முற்றிலும் ரஷ்யர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் செயலிழந்து நிற்கிறது” என்று பதிலளிக்கின்றனர். நாம் ஹிட்லரின் முகமாற்றத்தைக் கவனிக்கிறோம். அவரது அசுரத்தனமான மன உறுதி கிழட்டு முகத்தில் இன்னும் வெளிப்படுகிறது. அதே சமயம் உடல்ரீதியாக மிகவும் சீணிக்கப்பட்டும் நரம்பு தளர்ந்தும் உளவியல் தொந்தரவும் மேலிட்ட அவரது இடதுகை சதா நடுங்கிக் கொண்டிருப்பதையும் மற்றவர்கள் அதை கவனித்து விடாதபடிக்கு அதை மறைக்கும் பொருட்டு அவர் பின்புறமாய் அந்தக் கையைக் கட்டிக் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். ஜெர்மன் இராணுவத்தில் ஆள் பற்றாக்குறையால் பள்ளிக்கூடப் பையன்களையும் சேர்த்து ஆயுதமேந்த வைக்கின்றனர். அவர்களை நிற்க வைத்து விசாரித்தபடியே, “எதிர்கால ஜெர்மனி” என்று ஹிட்லர் குறிப்பிடுவது திகிலூட்டுகிறது. பெர்லினை சுற்றிவளைத்து நகரை நோக்கி முன்னேறும் ரஷ்யப்படைகளிலிருக்கும் தொலைவை அவ்வப்போது ஹிட்லருக்கு தெரிவிக்கப்படுகையில், அவர் 12-வது படைப்பிரிவை அனுப்பச்சொல்லுகிறார்.

12-வது படைப்பிரிவும் ரஷ்யர்களால் வளைக்கப்பட்டு நகர முடியாதிருக்கிறது” என அவர்கள் சொல்லும்போது ஆத்திரத்தில் கத்துகிறார் ஹிட்லர். ஹிட்லரைத் தப்பித்து ஓடிவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறார்கள். தன்னால் அது இயலாதென்று கூறி மறுத்து விடுகிறார் ஹிட்லர். அதே சமயம் அவரது படைப்பிரிவினருள் பலரும், GESTAPO காவல் துணை அதிகாரிகள் சிலரும்,
எஸ். எஸ். [S.S.(SCHLDZ STAFFEL)] எனும் கொடிய சிறப்புப்படையின் முக்கியமானவர்களும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். அவரைச் சுற்றியிருந்த பெண் ஊழியர்கள் இறுதிவரை அவரோடயே இருந்துவிட முடிவு செய்கின்றனர். நேரம் வந்துவிடுகிறது. “நாம் ரஷ்யர்களிடம் சரணடைவதைவிட அமெரிக்காவிடம் சரணடைவதே நல்லது. நான் வேண்டுமானால் ஐசனோவரிடம் பேசுகிறேன்”, என்கிறார் கோயபெல்ஸ். ஹிட்லர் அந்த யோசனையை ஏற்பதில்லை.

“ஒருவேளை சோவியத் தளபதியுடன் பேசவேண்டியிருக்குமானால் எவ்விதமான முறையில் வணக்கம் செலுத்த வேண்டும், ஹை ஹிட்லர் எனக் கூவி கையை விரைப்பாக உயர்த்தி நீட்டும் நாஜி வணக்கமா அல்லது சாதாரண சல்யூட் செய்வதா?” என்று ஒரு பெண் கேள்வியெழுப்புகிறாள். எதிரிகள் மிக அருகில் வந்துவிட்ட நிலையில் முடிவாக ஹிட்லர் கூறுகிறார், “எல்லாவற்றையும் எரித்து அழித்து விடுங்கள். என் எழுத்துக்கள், பதிவுகள், ஆவணங்கள் வையும் அவர்கள் கையிலல் சிக்கிவிடாவண்ணம் எல்லா கோப்புகளையும் எரித்து விடுங்கள். நானும் போய்விடுகிறேன். என்உடல் அவர்கள் கையில் கிடைத்து உலகுக்கு காட்சிப் பொருளாகாதபடி தீயிட்டு அழித்துவிடுங்கள்” என்று ஹிட்லர் தன் கடைசி இரா போஜனத்தை தம் நெருங்கிய வட்டத்து ஊழியர்கள், தளபதிகள், அதிகாரிகளோடு சாப்பிட்டு முடிக்கிறார். அவர்களை வரிசையாக நிற்க வைத்து கை குலுக்கி விடை பெறுகிறார்.

பெண் ஊழியர்களிடம் விடைபெறும் காட்சியில் ஹிட்லரும்கூட நம் மனதை நெகிழ வைத்துவிடுகிறார். இத்தனைக்கும் தன் காரியங்களுக்காக அவர் வருந்துவதேயில்லை. ஹிட்லர் என்ற அரக்கனின் இறுதிக்கட்டம் கூட மனிதர்களான நம்மை நெகிழ வைத்து விடுகிறது. “NINE HOURS TO RAMA” என்ற 60-களின் தடை செய்யப்பட்ட திரைப்படம் பலத்த எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டே தடை செய்யப்பட்டது. அதை எழுதியவர் ஸ்டான்லி ஓல்பிரட் [STANLEY OOLPRET] என்பவர். காந்தியை சுட்டுக் கொன்தற்கு ஒன்பது மணி நேரம் முன்பாக கோட்சேயின் நினைவுகளை பின்னோக்கிச் சொல்லும் நாவல் அது. அந்த இந்து தீவிரவாதியின் பேரில்கூட ஒரு கணத்தில் நெகிழ்வு ஏற்பட்டுவிடக்கூடும். ஏனென்றால் நாம் சாதாரண மனிதர்கள்.

முதலில் ஹிட்லர் நேசிக்கும் அவரது அல்சேஷன் நாய் விஷம் [சயனேடு] வைத்து சாகடிக்கப்படுகிறது. ஒண்டிக் கட்டையாக ஹிட்லர் சாகக்கூடாதென்று, அத்கு முன் அவருக்கு திருமணம் செய்வித்து இருவரையும் சாகவிடவேண்டுமென்று ஏற்பாடாகிறது. ஈவா ப்ரான் [EVA BRAUN] என்பவளை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஹிட்லரும் மனைவியான ஈவா ப்ரானும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். இக்காட்சி சில கணங்களுக்கு நம்மை சிலிர்க்கச் செய்து விடுகிறது. அந்த இரு உடல்களையும் எரிக்க பெட்ரோல் இல்லை. ஹிட்லருடைய கார் உள்ளிட்ட பல வண்டிகளிலிருந்து பெட்ரோல் எடுக்கப்பட்டு கொண்டு வந்து ஊற்றி எரிக்கிறார்கள். இந்தக் காட்சியம் அசாதாரணமாய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முன்பாக கோயபெல்ஸின் மனைவி பதினான்கு குழந்தைகளுக்கு சயனைடு ஊட்டி கொல்லும் காட்சி நம்மை ஆட வைத்து விடுகிறது. அடுத்து தங்களைச் சுட்டுக் கொண்டு சாகும் கோயபெல்ஸ் தம்பதிகளின் உடல்களும் எரிக்கப்படுகின்றன. பெர்லின் சோவியத் இராணுவம் வசமாகிறது. பெண்கள் வெளியேறுகையில் போரிலீடுபட்ட சிறுவன் ஒருவனோடு ட்ரோட்ல் கங்க் போகையில் ஒரு பாலத்தடியில் கிடாசப்பட்ட சைக்கிள் ஒன்றைப் பையன் எடுத்துவர அவனை முன்னால் வைத்து கங்க் மிதித்துச் செல்லும் காட்சியோடு படம் முடிகிறது.

அடால்ஃப் ஹிட்லராக மிக்க தோற்ற ஒற்றுமையோடும் மிக அற்புதமாயும் நடித்தவர் சுவிஸ் நாட்டு நடிகர் ப்ரூனோ கான்ஸ் [BRUNO GANZ] இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் முக்கிய ஜெர்மன் பேசும் நடிகராக போற்றப்பட்டவர். கான்ஸ் தமது 77-வது வயதில் 2019-ல் ஜுரிச் நகரில் கான்ஸர் நோயால் காலமானார். ட்ரோட்ல் கங்க் பாத்திரத்தில் நடித்தவர் அலெக்ஸாண்ட்ரா மரியா லாரா [ALEXANDRA MARIA LARA] என்பவர். ட்ரோட்ல் கங்க் ஹிட்லரின் இளம் பக்தையென குறிப்பிடப்பட்டவள். ஜெர்மனியிலிருந்த பல்வேறு நிறுவனங்களில் காரியதரிசியாகப் பணியாற்றிய கங்க் 2002-ல் காலமாகும்வரை மியூனிக் நகரில் வசித்து வந்தான். படத்தின் இறுதியில் வயதான கங்க் ஹிட்லரோடுதான் பணிபுரிந்த இறுதி அனுபவத்தை ஓரிரு நிமிடங்களுக்குப் பேசிய பேச்சும் தோற்றமும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு பிறகு படத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் மனைவி ஈவா ப்ரானாக ஜுலியன் கொஹ்லெர் [JULIANE KOHLER] என்பவள் நடித்திருக்கிறாள். திரைக்கதை வசனத்தை பெர்ன்ட் ஐஷிங்கர் [BERND EICHINGER] என்பவர் எழுத ஒளிப்பதிவை ரெய்னர் க்ளாஸ்மன் திறம்பட காமிராவில் செய்திருக்கிறார் [RAINER KLAUSMANN] இசைப் பொறுப்பு ஸ்டீஃபன் ஜக்கரிரியா [STEPHAN ZACHARIA] என்பவரது அற்புதமான முறையில படத்தை இயக்கியவர் ஆலிவர் ஹிர்ஷ்பைகல் [OLIVER HIRSCHBIEGEL] இதே காலத்தில் (2003) வெளிவந்த மிக மிக அற்புதமான 2-ம் உலகப்போர் ஜெர்மன் திரைப்படம் “தஸ் பூட்” [DAS BOAT] ஹிட்லரின் “U BOAT” எனவும் அறியப்பட்ட பயங்கர நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றைக் கொண்ட அரிய படம் புதிய இளையவர்களோடு பயணமாகும். அதி நவீன நீர்மூழ்கியுள்ள காமிராவுடன் பத்திரிகையிலிருந்து வந்த யூத நிருபரும் ஒருவன் வேசிகளோடு கிளப்பில் ஆடலும் பாடலும் குடியுமாய் தொடங்கி ஆழ்கடலுக்குள்ளும் வெளியில் மிதந்தும் பாய்ந்தோடும் நீர்மூழ்கி, குடித்துவிட்டால், உள்மனம் உண்மைகளை உளரவைக்கும். வயதான தாம்ஸன் காப்டன் குடிபோதையில் கூறுகிறார்: “பெண் உறவில்லாத ஹிட்லர். சதா சுருட்டே வாயில் கதியான குண்டன் சர்ச்சில்” இப்படத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே சகல காட்சிகளையும் பார்க்கிறோம்.

மாலுமிகளின் அந்தரங்க வாழ்க்கையும் கோடி காட்டப்படுகிறது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாசகாரி கப்பல் [DESTROYER] ஒன்றை ஓபோட் அடித்து மூழ்கி விடும்காட்சி சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் DAS BOOT நீர் மூழ்கி பலமாய் தாக்கப்பட்டு 260 மீட்டர் ஆழத்துக்கு கீழே மூழ்கி பாறை படிமங்களில் மோதி நிறைய விரசல்களைப் பெற்று கடல் நீரின் அதிவேக பாய்ச்சல் மிக்க கசிவுகளால் சிறுகச் சிறுக செத்துக் கொண்டிருக்கும் இறுதி காட்சிகள். நிகரற்ற இந்த ஜெர்மன் யுத்தப் படத்தை இயக்கியவர் வுல்ஃகாங் பீட்டர்சன். [WOLF GONG PETERSON].

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

தொடர் 25: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



இத்தாலி – 3
ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

நையாண்டி என்பது [SATIRE] கவிதை, கதை, நாடகம் என தொடங்கி, சினிமாவின் ஓர் அங்கமாயும் விளங்கலாயிற்று. தமிழில் சிறுகதைகள் சிலவற்றில் நையாண்டியை [SATIRE] மிக அற்புதமாக செய்து காட்டியவர் புதுமைப்பித்தன். இதில் சுயதிருப்தியும் அடங்கும், பழிவாங்கலுமுண்டு… இந்த முக்கிய இலக்கிய வகைப் பிரிவு மராத்திய நாடகம், தமிழ்சினிமா என்றும் தொட்டிருக்கிறது. உலக சினிமாவில் இத்தாலிய பங்களிப்பாக மிக உயர்ந்த நையாண்டி வகைப் படங்களை இயக்கியளித்தவர், ஃபெடரிகோ ஃபெல்லினி [FEDERICO FELLINI], இத்தாலிய சினிமாவின் முதல் அலை நியோ ரியலிஸம் என்றால், இரண்டாவது அலை பெல்லினியின் Satire வகைப் படங்களும், மைகேலாஞ்செலோ அண்டோனியோனியின் [MICHELANGELO ANTONIONI] அங்கத முடிவைத் தீண்டிய பல படங்களும் எனலாம். பெல்லினி ஓரிரு படங்களை நியோ ரியலிஸப் பாணியில் [LA STRADA; I VITELLONI] இயக்கிய பின்னர் தான் தனது சட்டையர் மற்றும் சுயசரிதை வகைப் படங்களை [ROMA; AMARCORD; SATYRICON] இயக்கினார்.

பெல்லினி 1921-ல் ரிமினி [RIMINI] எனும் சிற்றூரில் பிறந்து தனது 19வது வயதில் ரோமுக்கு இடம் பெயர்ந்தார். சட்டம் படிக்க புறப்பட்டவர், சினிமாவுக்குள் மூழ்கிப் போனார். பத்திரிகைகளில் நிருபராயும், கிசு கிசு விஷயங்களை துண்டுத் துக்கடாவாய் எழுதுபவராயுமிருந்திருக்கிறார். 1944-45ல் அவர் புகழ் பெற்ற இத்தாலிய இயக்குனர் ராபர்டோ ரோசெல்லினியிடம் உதவி இயக்குனராயிருந்து “ROME- OPEN CITY” படத்துக்கு திரைக்கதை எழுதினார். 50-களில் அவர் தாமே திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
1953-ல் அவர் “I VITELLONI” எனும் ஜனரஞ்சகமும் நியோரியலிஸமுமாய் ஒரு கருப்பு வெள்ளைப் படத்தை இயக்கினார். இதற்குப் பிறகு பெல்லினி இந்தப் பாதையை விட்டு வெளியேறினார்.

ஐந்து இளைஞர்கள் தங்கள் வீட்டிலிருந்து கிடைத்த பணத்துடன் மனம்போன போக்கில் மது, மாது, சூது என்று செலவழித்துச் சுற்றும் கதைப் படம். இதில் வரும் பல நிகழ்வுகளில் சில பெல்லினியின் சுய வரலாறுபோல என்பாருண்டு. ஓரளவுக்கு நன்கு எடுக்கப்பட்ட படம். 1954-ல் பெல்லினியின் புகழ் பெற்ற கருப்பு, வெள்ளைப் படம். “LA STRADA” (பாதை) வெளிவந்தது. மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் சங்கமித்த பிரபல குணசித்திர நடிகர் ஆந்தனி குவின் [ANTHONY QUINN] ஜம்பனோ [ZAMPANO] எனும் முரட்டு கோபக்கார கழைக்கூத்தாடி பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஜம்பனோ மனைவியை இழந்த நிலையில், மச்சினியை மணக்க ஏழை மாமியாருக்கு நிறைய பணம் தந்து புது மனைவியோடு தன் பயணத்தைத் தொடருகிறான்.

ஜம்பனோவின் இளம் மனைவி ஜெல்ஸோமினாவாக [GELSOMINA] பெல்லினியின் மனைவி மசீனா [MASINA] நடித்திருக்கிறார். மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்த பெரிய கூடாரம் போனற வாகனத்தில் ஜம்பனோ தனக்கான படுக்கை, சமையல் என்ற சகலத்தையும் ஏற்படுத்தி நீண்ட சாலையில் பயணித்து அங்கங்கே நிறுத்தி சின்னச் சின்ன வித்தைகளைக் காட்டி காசு வாங்கிப் பிழைக்கும் முரட்டுக் கழைக் கூத்தாடி. அந்தப் பாத்திரத்தில் பிரமாதமாக நடிக்கும் ஆந்தனி குவினின் உடல் வாகுவில் மூன்றில் ஒரு பங்கே உடல் வாகு கொண்ட மசீனா, நிஜ வாழ்க்கையில் தன் கணவரும், படத்தின் இயக்குனருமான பெடரிகோ பெல்லினியின் உடல் வாகுவில் நான்கில் ஒரு பங்கே உள்ளவர். இவரது பாத்திரமும் நடிப்பும் இரக்கத்தைக் காட்டிலும் சிரிப்பையே அதிகம் வரவைக்கும்படியாயிருக்கிறது.

ஜம்பனோவுடன் ஊர் சுற்றி, உலகம் சுற்றி உபயோகமாய் புதுப் புது வித்தைகளைக் கற்று அம்மாவுக்கும் நிறைய பணம் அனுப்புவதாய் குதியாட்டம் போட்டு புறப்பட்ட ஜெல்சோமினா ஒரு வேளைச் சோற்றுக்கும் ஒரு பிடி அன்புக்கும் ஏங்கி அவஸ்தைப்படுகிறாள். முதல் நாளே, தான் கம்பி வளையத்துக்குள் நுழைந்து அதை அறுக்கும் வித்தையின்போது கூட்டத்தைப் பார்த்துச் சொல்லும் வசனத்தை மாற்றிச் சொன்னதற்காக அவளைக் குச்சியால் விளாசி வெளியில் படுக்க விடுகிறான் ஜம்பனோ. அவள் இருக்கும்போதே வேறொரு வேசியோடு படுத்ததைக் கண்டு மனமும் உடலும் பதறிய ஜெல்சோமினா ஓர் இரவன்று ஓடிப் போய் விடுகிறாள். ஒரு சிறு சர்க்கஸ் ஆட்டக் குழுவைச் சந்திக்கிறாள். அதில் இசைத்து விதூஷகன் புரியும் விகடனும், மிக உயரத்தில் கட்டில் கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரியும் பபூனையும் சந்திக்கிறாள். அந்த பபூன் பாத்திரத்தில் ரிச்சர்டு பேஸ்ஹார்ட் [RICHARD BASE HEART] மிக நன்றாக செய்திருக்கிறார். ஜம்பனோ அங்கு வந்து சர்க்கஸில் புதிய நட்சத்திரமாய் சேர்கிறான். ஆனால் தன் பழைய எதிரியான பபூனுக்கும் அவனுக்கும் கடும் சண்டை ஏற்படுகிறது. பபூனை தாக்கியதற்காக கைதாகி சிறையிலடைக்கப்படுகிறான் முரடன் ஜம்பனோ.

முரடனை விட்டு விட்டு தன்னோடு வந்து விடும்படி ஜெல்சோமினாவை கேட்கிறான் விதூஷகன். அவள் மறுத்து விடுகிறாள். அதே சமயம் விடுதலையடைந்து வந்த ஜம்பனோ விதூஷகனை தாக்கிக் கொன்றுவிட்டு அவனுடைய காரையும் சேதப்படுத்தி விடுகிறான். ஜெல்சோமினா ஓடிப்போய் கான்வென்ட் ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கேயே மாண்டு போகிறாள். இதை பல நாட்கள் கழித்து அறிய வரும் ஜம்பனோ தனது எல்லா குற்றங்களையும் நினைத்து கடற்கரையில் கதறி விடுகிறான். இப்படம் மெலோடிராமாடித் தனத்தைக் கொண்டிருந்தாலும் பெல்லினியை உச்சத்துக்கு இட்டுச் சென்றது. LASTRADA என்றால் பாதை அல்லது பயணம் என்றாகிறது.

பெல்லினியின் சில திரைப்படங்கள் தேவாலய மதரீதியான ஒழுக்கவியல் தர்மத்துக்கு சிக்கலாயிருந்த காரணங்களால் இத்தாலியில் முக்கியமாக கத்தோலிக்கத் தலைமை பீடமான பாப்பல் நகரம் இருப்பதால், அரசு தணிக்கைக் குழுவினரால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாயின. இவரது பல படங்கள், நெறிப் படி ஒழுங்காக ஒருங்கிணைந்த மதக் கோட்பாடுகளைக் குறித்த எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கும். ஆனால், பசோலினியினின்றும் தூரம் தள்ளியிருப்பவை. ஒரு பார்வைக்கு ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டதாயும் தெரியும். அதே சமயம் சில தகவல்கள் அடிப்படையில் பெல்லினிக்கு நிறைய மூட நம்பிக்கையுமுண்டு. தேவைப்படும்போதெல்லாம் அவர் ESP எனும் மீடியம்களையும் ஜோசியர்களையும் கலந்தாலோசித்ததுண்டு என அறியப்படுகிறது. மற்றொரு வேடிக்கையான செய்தி – அவர் தன் எல்லா படங்களின் ஆரூடங்களையும், அன்றைக்கு டெல்லியில் அசோக் ஓட்டலில் போய் தங்கி உலகின் பல்வேறு பிரபலங்களுக்கு ஜோதிடம் கணித்து இதோபதேசம் புரிந்துவந்த இராமகிருஷ்ண சாரதி என்ற ஜோதிட நிபுணரிடம் ஆலோசித்து [தொலைப்பேசி வழியாக] அறிவாராம். பெல்லினி இந்தியாவுக்கு வருகை புரிந்ததில்லை.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

தன் வரலாறுபோல படங்கள் பண்ணுவதில் பெல்லினி சமர்த்தரீ. அவ்வகையான படங்களில் ஒன்று அவர் 1972-ல் இயக்கிய வண்ணப்படமான, “பெல்லினியின் ரோமா” [FELLIN`S ROMA] இப்படம் அவரின் நினைவுகளிலிருந்து முக்கிய நிகழ்வுகளை நையாண்டி ததும்ப காட்சிக் கோர்வையாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் தம் ரோம் நகரை எவ்வளவுக்கு நேசிக்கிறார் என்பது விளங்கும் மிக தாராளமாயும் அள்ளி வாரியிறைத்து வகை வகையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெல்லினியின் சுய வரலாறு.

முதலில், தன்னைப் பள்ளிச் சிறுவனாக பூகோளமும் சரித்திரமும் ரோம் நகரின் வழியாக காண்பவராகக் காண்பிக்கிறார். அதைச் சொல்ல மாணவ, மாணவிகளை ஒரு தாடி வைத்த குரூர ஆசிரியரும் வயதான வசீகரமிக்க ஆசிரியையும் அழைத்துக் கொண்டு சிறு ஆற்றை கடப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. ஆசிரியர் பெருமையோடு மாணவர்களிடம் சொல்லுகிறார்.
இந்த ஆறுதான் ரூபிகான்; [RUBICN] இந்த ஆற்றை ஜுலியஸ் சீசர் கடந்துபோனார். இப்போது அதை நாம் கடக்கிறோம்.”

பிறகு வகுப்பறைக் காட்சி. ஆதியில் காட்டில் கிடந்த இரு ஆண் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்தது. அவை வளர்ந்து ரோமுலாஸ், ரீமஸ் [ROMULOUS, REEMAS] என்று அழைக்கப்படுகின்றனர். அதனால் அவ்விடமும் ரோம் என பெயர் கொண்டது. அன்றைக்கு தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெண் ஓநாயின் உருவம் இன்றும் ரோம் நகர முக்கிய காட்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெல்லினியின் ஆசிரியர் சிறு ஒளி ஒலி காட்சி மூலம் அந்த தங்க ஓநாயைக் காட்டிவிட்டு தொடர்ந்து ரோம் நகரின் புகழ்பெற்ற இடங்களைக் காட்டிக் கொண்டே வருகையில் ஒரு காட்சியில் படம் சிக்கிக் கொண்டு நின்று விடுகிறது. அக் காட்சியைக் கண்ட சிறுவர்கள் எழுந்து குதித்து கூச்சலிட்டு கைதட்டுகின்றனர். அக்காட்சியை நகர்த்த இயலாது. தாடிக் கார ஆசிரியர், விளக்கை போடுங்கள் என்று கத்துகிறார். கூடவே அதைப் பார்க்காதீர்கள், அது பிசாசு, என்று கத்துகிறார். இருட்டில் ஒரு கணம் அவர் முகம் தாடி வைத்த பிசாசாகவே தோன்றுகிறது பிள்ளைகளுக்கு, கூச்சல் அடங்கவில்லை. அந்த காட்சியில், முழு நிர்வாண கோலத்தில் ஒரு பெண் தன் பின் பக்கத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

பிறகு, ஜீலியஸ் சீசர் நாடகம் நடித்துக் காட்டப்படுகிறது. “YOU TOO BRUTE?” என்று கேட்டுக் கொண்டே புரூட்டஸ்ஸின் கடைசி கத்திக் குத்தோடு சீஸர் சாயும் காட்சி.
அதன் பிறகு பெல்லினி ஓர் இளைஞனாக அறிமுகமாகிறார். நிகழ்வுகள் இதிலிருந்து வேகமாக நகர்த்தப்படுகின்றன. ரோமா பெல்லினியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, அவற்றில் முக்கியமானவற்றை ரோம் நகர வரலாறு வழியாக ஓர் அரிய தினப்படி சேதிக்குறிப்புப் பெட்டகமாய் [DIARY] தத்தளித்திருக்கிறார் ஃபெடரிகோ ஃபெல்லினி, படத்தின் இறுதி காட்சிகளில் ஒன்று ஃபாசன் காட்சி [FASION PARADE] ஆண், பெண்கள் புதுப் புதுசாக உடையணிந்து உடையலங்கார காட்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்று நவீன மோஸ்தரில் மத ரீதியான ஆடைகளை [சாமியார்- கன்னியாஸ்திரிகளின் அங்கிகள்] அணிந்து போப் பாண்டவர் வந்து போகும் காட்சி. அதைத் தொடர்ந்து மடாலய கன்னிகளும், பாதிரியார்களும் ஆடைகளணிந்து ஒயிலாக நடந்துபோகும் காட்சிகள் பெல்லினியின் நையாண்டித்தனத்துக்கு ஆபத்தான உதாரணங்கள், ரோமா ஏற்கெனவே 1969-ல் பெல்லினி இயக்கிய வண்ணப்படமான “சட்டைரிகன்” [SATYRICON] என்ற படத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது.

மிகவும் விவாதிக்கப்பட்ட பெல்லினியின் கருப்பு வெள்ளைப் படம் “8½” 1965-ல் வெளிவந்த இப்படம் சர்வதேச அளவில் விவாதங்களையும் உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டது. இதில் மார்செல்லோ மாஸ்டிரியாயினியின் நடிப்பு அபாரம். கருப்பு வெள்ளை ஒளிப்பதிவை அதன் உச்சத்துக்கு இட்டுச் சென்ற உலகத் திரைப்படங்களில் 8½ ஒன்று என கூறலாம். படம், நாம் ஏற்கெனவே த்ரூஃபா, [DAY FOR NIGHT] மிருனாள் சென் செய்த, திரைப்படங்களுக்கெல்லாம் முன்னோடியாய் எடுக்கப்பட்ட, “திரைப்படத்துக்குள் திரைப்படம்” வகையானது. படத்தின் இறுதிக் காட்சி ஆரம்பக் காட்சிக்கே வந்து நிற்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெறும் சாலைப் போக்குவரத்து நெரிசல் காட்சி நிகழ்வுகள் அதியற்புதம். இதில் பெல்லனி ஒரு “FANTACY” காட்சியையும் புகுத்தியுள்ளார்.

ரோமானிய வரலாற்றை ஒட்டின பழங்கதை, அதற்கான பழங்கட்டிடங்கள் சார்ந்த நாவல் ஒன்றை பெட்ரோநியஸ் [PETRONIUS] என்பவர் எழுதினார். அந்நூலை அடிப்படையாய்க் கொண்டு தன் வரலாறு திரைப்படம் ஒன்றை பெல்லினி “சட்டைரிகன்” [SATYRICON] என்று 1969-ல் இயக்கினார். பெல்லினி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்து காட்டியவர் என்பது ரோமா, சட்டைரிகன் ஆகிய இரு படங்களில் தெரிகிறது. இருபடங்களுமே அவரது இளமைக் கால சம்பவங்களை ரோமானிய வரலாறு ஊடாக நையாண்டி வகையில் கொண்டுசெல்லப்பட்டவை. பெட்ரோ நியஸ்ஸின் நாவலை ரோமானி கொடுங்கோல் மன்னன் நீரோவின் காலத்திலிருந்த வாழ்க்கையை மறு வாசிப்பாக காட்சிரூபப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் வந்த மற்றொரு அரிய படம் “அமர்கார்டு” [AMARCORD].

1973-ல் பெல்லினியின் இயக்கத்தில் வெளிவந்த அமர்கார்டு சென்னைத் தியேட்டர் எங்காவது ஒன்றில் திரையிடப்படக்கூடும் என்று அ.ராமதுரை சொல்லிக்கொண்டிருந்தார். ராமதுரை சேப்பாக்கத்திலுள்ள ரெவின்யூ போர்டில் குமாஸ்தா. சர்வதேச திரைப்பட விழாவின்போது தினமணிகதிர் சார்பாக நான் போயிருந்தபோது, ஆனந்தவிகடன் சார்பாக அவர் வந்திருந்தார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து விலாவாரியாகவும் நன்றாகவும் பல வெகுஜன இதழ்களில் எழுதி வந்தவர் அ.ராமதுரை. இப்போது இல்லை. அவர்தான் பெல்லினி பற்றியும் அவரது அமர்கார்டு பற்றியும் எனக்கு அன்றே சொன்னவர். ஆனால் படம் சென்னையில் பொதுத் திரையிடல் பெறவேயில்லை.

“அமர்கார்டு” என்றால், “நான் நினைவு கூறுகிறேன்” என்றாகிறது. காலம்: முசோலினியின் பாசிஸகாலம். பெல்லினி தம் இளமைப் பொழுதுகளை நக்கல் நையாண்டித்தன காட்சிகள் வழியாக அன்றைய இத்தாலியின் உணர்ச்சிமிக்க ரசாபாச நிகழ்வுகள், பருவ வயதின் ஆசாபாசங்கள் மற்றும் அரசியல் அட்டூழியங்களைக் காட்சி நகர்வுகளால் கோர்த்தளித்திருக்கிறார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் நினா ரோட்டாவின் [NINA ROTTA] உயரிய இசைக்கோர்வை மறக்க முடியாதது. அவரது நினைவுச்சரம் ஒவ்வொன்றும் சிறந்த சிறுகதையொன்றின் உருவைக் கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்வுக் கதைகளிலும் தொடர்ந்து அதே பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பதால் நமக்கு முழுமையான படமாய்க் கிடைக்கிறது. திருமணமாகாத 30 வயது அழகி கிராடிஸ்கா [GRADISCA] இளைஞன் டிட்டோ [TITTO] (இவன்தான் பெல்லினியின் ஆல்ட்டர் ஈகோ) இவனது அம்மா அப்பா, தாத்தா, மனநிலை பிறழ்ந்த 42 வயது மாமா டியோ [TEO] மற்றும் வழக்கறிஞர் ஆகியவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்கும் பாத்திரங்கள், வழக்கறிஞர் ஒருவித கதைசொல்லியாக வருபவர். ஆறு முக்கிய நிகழ்வுகளை கதை வடிவில் தம் நினைவுகளாய் காட்சிபடுத்தியிருக்கிறார் பெல்லினி. முரல் நினைவு கூறல் “சொக்கப்பனை எரித்தல்” அல்லது “போகி கொளுத்துதல்” என்று கொள்ளும் வகையில் இத்தாலிய கலாச்சாரத்தில் கிழட்டு சூனியக்காரியை கொளுத்தும் பிரம்மாண்டமானதொரு BONFIRE மிகவும் ரசிக்கத்தக்கது.

இங்கு கார்த்திகையின்போது பணஓலைக் கூடுகளை கோயில் முன்வைத்துக் கொளுத்தும் சொக்கப்பனை தீயிடலும், பொங்கலுக்கு முன் போகி கொளுத்துவதும், இத்தாலியில் வேறுவிதமாய் கொளுத்தப்பட்டு அட்டகாசமாய்க் கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மைப்போலவே குளிர்கால BONFIRE தான் அங்கும் குளிர்காலம் முடிவடைந்து வசந்தகாலம் தொடங்கும் நாளன்று இரவில் “கடுங்குளிர் ஒழிந்தது” என்பதை “பழைய சூனியக்காரி எரித்துக் கொளுத்தும் வழக்கம் இத்தாலியில் இருந்து வருகிறது. அதற்காக எல்லாரும் தம் வீடுகளிலுள்ள உதவாத பழைய மரச்சாமான்கள், காகிதங்கள், துணி தினுசுகளையெல்லாம் மைதானத்தில் கொண்டு வந்து குவிப்பார்கள். கிழச்சூனியக்காரியின் உருவ பொம்மை ஒன்று, துணி, மரம், நாரால் செய்யப்பட்ட வண்டியில் கொண்டு வந்து, மைதானத்தில் குவித்துள்ள குப்பை கூளங்கள் மேல் நிறுத்தப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்படும். அப்பகுதி மக்கள் கண்டு களித்து போவர். இந்நிகழ்ச்சி அற்புதமாய் படமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிப் பருவ வாழ்க்கை நிகழ்வுகள் மிகவும் ரசாபாசமாய் போகிறது. வரலாறு, கணிதம், அறிவியல் வகுப்புகளும், பையன்களின் அட்டகாசமும், சிரிக்கச் செய்வன. கடைசியாக தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவ சங்கீர்த்தனம் பெறும் வயது வந்த பள்ளிப் பையன்களின் காட்சி பிரமாதமானது. பாதிரியார் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வரும் ஒவ்வொரு பையனையும் பார்த்து கேட்கும் ஒரு கேள்வி, “உன்னை நீ அந்தரங்கமாய் தொட்டுக் கொண்டாயா?” என்பது.

உடனே பையன், “இல்லவே இல்லை” என்று சொல்லவும் மன்னிப்பு பெற்றவனாய் போய்விடுவான். ஒருவன் தனக்குத்தானே தன்னை அந்தரங்கமாய்த் தொடுவதென்பது நாகரிகமான வார்த்தையில் “முஷ்டி மைதுனம் செய்து சுயஇன்பம் அடைந்தாயோ?” எனப்படும் கேள்வி. அதே சமயம் பையன்கள் நால்வர் [பெல்லினியும் ஒருவர்] ஒரு காரில் உட்கார்ந்து அவரவர்கள் தங்களுக்கு இஷ்டமான பெண்ணை கற்பித்து சுய இன்பம் அடையும் காட்சி ஆபாசம் என்பதைவிட நகைச்சுவை மிக்கதாகிவிடுகிறது. அதில் ஒருவருக்கொருவர் சண்டை வேறு. “நீ யாரை மனதில் நினைத்து செய்தாய்?” என்று ஒரு பையன் கேட்க, மற்றவன் தான் மனதில் வரித்த பெண்ணைச் சொல்ல, உடனே முன்னவன், “அது என்னோட ஆளே். அதையேண்டா நீ நினைச்சே?” என்று குஸ்திக்கு வரும் காட்சி.

பாசிஸ ஆட்சியை அமர்கார்டு சமூக நிகழ்வுகள் ரீதியாக கேலி செய்கிறது. கல்யாணச் சடங்கு கூட பாசிஸ முறையிலேயே நடத்தப்படுவதாய் பெல்லினி நைய்யாண்டி செய்கிறார்.

“பாசிஸ்ட் மணமகளுக்கும் பாசிஸ்ட் மணமகனுக்கும்” என்று கூறிவிட்டு சடங்கு தொடங்கும்.

“நான் பாசிஸ்ட் ரோசியை பாசிஸ்ட் மனைவியாக ஏற்கிறேன்” என பாசிஸ மணமகனும், “நானும் அவ்விதமே பாசிஸ்ட் ராபர்டோவை பாசிஸ்ட் கணவராய் ஏற்கிறேன்” என்று பாசிஸ மணப்பெண்ணும் பாசிஸ பாதிரியாரிடம் கூறுவார்கள்.

இறுதிக் காட்சிகளில் ஒன்று, பிரம்மாண்ட பனிமூட்டம், அப்போது ஒரு மயில் பறந்து வந்து தோகை விரிக்கும் காட்சி அருமை. ஒரு மனநல காப்பகத்திலிருந்து 42 வயது மனநோயாளி டியோ என்பவளை, அனுமதியுடன் வெளியில் அழைத்துப்போகும் நிகழ்வு சுவாரசியமானது.

கதாநாயகனுக்கு [பெல்லினி] மாமன் முறையாகும் 42 வயது. மிக உயரமான [TEO] மன நலக் குறைவால் காப்பகத்திலிருப்பவன். ஆணும் பெண்ணுமாய் கூட்டம். கிராமத்து பண்ணை வீட்டுக்குப் போகிற வழியில் மனநலக் காப்பகத்திலிருந்து அனுமதியுடன் டியோ மாமாவையும் [சமர்த்து] அழைத்துப் போகிறது. மற்றவர்கள் அங்குமிங்கும் திரிகையில், ஜேபியில் கற்களோடு டியோ ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்கு போய் கத்துகிறான். மற்றவர்கள் ஓடிவந்து அவனை கீழே இறங்கி வர கத்துகிறார்கள். அவன் இறங்காமல் உரக்க தொடர்ந்து பரிதாபமான தொனியில் கத்துகிறான்.

“எனக்கு ஒரு பெண் வேண்டும்” திரும்பத் திரும்ப அந்த மனநிலை பிறழ்ந்த டியோ தனக்கு ஒரு பெண் வேண்டும் என்பதையே பரிதாபமான தொனியில் கத்தி கேட்கிறான்.
“பைத்தியம் முத்தி விட்டதா?” என்று ஒருவர் கேட்கிறார்.

“இல்லை இப்போதான் தெளிந்திருக்கிறது” என்கிறார் ஒருவர்.

அப்போது டியோவின் தந்தை புன்சிரிப்போடு கூறுகிறார், “டியோவுக்கு 42 வயது. இயல்பான காம உணர்வுதான் அது”

அவனை இறங்கி வருமாறு கேட்டுவிட்டு ஏணி மூலம் ஒருவர் ஏறுகிறார். டியோ தன்னிடமுள்ள கற்களில் ஒன்றால் அவர் மண்டையை அடிக்கிறான். இன்னொருவர் ஏறுகிறார். அவரும் கல்லடிப்படுகிறார். கடைசியாக சொல்லியனுப்பி, மனநலகாப்பக வேன் வருகிறது. குள்ளமான நர்ஸ் ஒருத்தி ஏணியில் ஏறவும் டியோ மகிழ்ந்து இறங்கி வண்டியில் ஏறுகிறான்.
அமர்கோடு தன் இறுதி நினைவும் நிகழ்வுமாக 30 வயது அழகிய கிராடிஸ்கா [GRADISCA]வுக்கு நிகழும் திருமணத்தோடு முடிவுறுகிறது.

ஃபெடரிகோ ஃபெல்லினியின் நான்கு படங்கள் சிறந்த அயல்நாட்டுப் படங்கள் எனும் வரிசையில் பரிசு பெற்றவை. 1993-ல் அவர் வாழ்நாள் சாதனைக்கான ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருது பெற்றார். பெல்லினி அதே ஆண்டு 1993-ல் ரோமில் காலமானார்.

இத்தாலிய சினிமா என்றதும் கூடவே வருவது அதன் நியோரியலிஸ படங்கள். விட்டோரியா டிசிகாவுக்குப் பிறகு வந்த இத்தாலிய இயக்குனர்கள் நியோரியலிஸத்தில் தொடங்கி, போகப்போக வேறு வகைமைகளைப் பிடித்துக்கொண்டனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் மைகலாஞ்சலோ அண்டோனியோனி [MICHELANGELO ANTONIONI] 1912-ல் வட இத்தாலியிலுள்ள ஃ்பெர்ரரா [FERRARA] எனுமிடத்தில் பிறந்த அண்டோனியோனி இருபது திரைப்படங்கள் செய்தவர். BOLOGNA பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப்பட்டப்படிப்பில் முதன்மை மாணவராக தேர்ச்சி பெற்ற அண்டோனியோனி உள்ளூர் பத்திரிகையொன்றில் திரைப்பட விமர்சனம் செய்து வந்தவர். பிறகு ரோமுக்கு போய் “சோதனை வகை திரைப்பட மையம்”, [EXPERIMENTAL CINEMA CENTRE] என்ற திரைப்படக் கலை பள்ளியில் பயின்றவாறே “CINEMA MAGAZINE” இதழில் பணிபுரிந்தவர். இவை இரண்டுமே பாசிஸத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டவையென தீர்மானிக்கப்பட்டவை. 40களின் தொடக்கத்தில் ராபர்டோ ரோசெல்லினியுடன் திரைக்கதை எழுதுவதில் இணைந்திருக்கிறார். 1943-ல் அண்டோனியோனி தனது முதல் ஆவணப்படமான “THE PEOPLE OF THE PO” என்பதை எடுத்தளித்தார். அவர் இயக்கிய முதல் முழு நீள கதைத் திரைப்படம் “CRONACA DI UN AMORE” [CHRONICAL OF A LOVE] 1950-ல் வெளியானது.

இவரது துயர முடிவைக் கொண்ட“IL GRIDO” [THE OUTCRY] என்ற விறுவிறுப்பான படம் 1957-ல் வெளிவந்தது. ஆல்டோ [ALDO] மனைவியை இழந்த ஆறுவயது சிறுமிக்குத் தந்தை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மெகானிக். ஆல்டோ இர்மா [IRMA] என்ற திருமணமானவளை ஏழு வருடமாய் நேசிக்கிறான். அவள் கணவன் வேறு நாட்டில் மரணமுறுவதையடுத்து இர்மா மனம் மாறி விடுகிறாள். ஆல்டோவின் உறவை நிராகரிக்கிறாள். ஆல்டோ வெறுப்பில் வேலையை உதறிவிட்டு, மகளுடன் வேறொரு ஊருக்குப் போனவன் பெட்ரோல் பங்கு வைத்திருக்கும் விதவையுடன் வாழ்கிறான். விதவைக்கு ஆல்டோவின் பெண் ஒரு தலைவலி. அவன், தன் பெண்ணை, தங்கிப்படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டு, அங்கிருந்து வேறு இடம் போய் ஒரு விலை மாதுவுடன் இருந்து பார்த்துவிட்டு, சதா நினைவை அலைக்கழிக்கும் இர்மாவைப் பார்க்கப் போகிறான். ஒரு குழந்தையோடு அவளிருப்பதைப் பார்த்ததும் மனமுடைந்து உயரமான இடத்திலிருந்து விழுந்து சாகிறான். இப்படம் ஒருபோதும் அலுப்பேற்படாத வண்ணம் இயக்கப்பட்டுள்ளது.

அண்டோனியோனி 1966-ல் இங்கிலாந்தில் “ப்ளோ அப்” [BLOW UP] என்ற வண்ணப்படம் செய்தார். இப்படம் சென்னை சஃபையர் வளாகத்து புளூடயமண்ட் தியேட்டரில் திரையிடப்பட்டது. மிகவும் பேசப்பட்ட படம். ஜுலியோ கோர்டஸரர் [JULIO CORTAZAR] என்பவரின் சிறுகதையைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ப்ளோ அப் மென்மையானதொரு திகில் வகைப்படம். அண்டோனியோனியின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் “L`AVVENURA” [THE ADVENTURE] [1960]வும்

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்ஒரு மர்மத்தைக் கொண்டதாகவேபடும். 1960-ல் லவெஞ்சுரா கேன்ஸ் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டபோது, அங்கு அண்டோனியோனியை வெறுத்துவந்த கும்பலால் கத்தி, விசிலடித்து ஆரவாரத்து எதிர்த்தனர். ஆனால் அங்கு வந்திருந்த சக்திமிக்க திரைப்பட விமர்சகர்களும் திரைப்பட இயக்குனர்களும் எதிர்ப்பாளர்களின் செயலை மறுத்து, லவெஞ்சுரா கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட படங்களிலேயே தலைசிறந்ததும் முக்கியமானதுமென்றும் சான்றிதழ் எழுதி கையெழுத்திட்டு வெளியிட்டனர். இது நடந்து இரு ஆண்டுகளுக்குள் பிரிட்டனின் புகழ்பெற்ற தர நிர்ணயப் பத்திரிகையான “்SIGHT AND COUND”-ன் சர்வதேச திரைப்பட விமர்சகக் குழுவினரால், அண்டோனியோனியின் LAVVENTURA படம் அதுவரை வெளிவந்த எல்லா படங்களிலும் இரண்டாவது மகத்தான படம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

பணவசதி கொண்ட ஒரு சிறிய ரோமானிய குழு ஓர் உல்லாச கப்பலிலேறி சிசிலியிலிருந்து பயணிக்கையில் ஆளரவமற்ற பாறைகள் நிறைந்த தீவில் இறங்கி பகற்பொழுதைக் கழிக்க விரும்பி சுற்றி வருகையில் அன்னா என்பவள் காணாமற் போகிறாள். அந்தப்பெண் கப்பலில் வந்த தன் புத்திசாலி சினேகிதி கிளாடியாவிடம் [CLAUDIA] தனக்கும் தன் கட்டிடக் கலை வல்லுன காதலனுக்கும் சரி வரவில்லையென கூறியிருக்கிறாள். தான் ஒரு சுறாமீன் போனதைக் கண்டதாக குளிக்கையில் பொய் சொல்லி பயமுறுத்தியுமிருக்கிறாள். இதன்பின் இருபத்தைந்து நிமிடங்களில் அன்னா காணாமற் போகிறான். ஒரு நிமிடம்விட்டு உண்மையிலேயே நாம் சுறாமீன் ஒன்றைப் பார்ப்பதோடு, நமது பார்வையில் சில கணங்களுக்கே பட்டு மறைகிறது ஒரு படகு. படகு சில வினாடிகளுக்கு தெரிந்து தீவைத் தாண்டி மறைகிறது.

அன்னா என்ன ஆனாள், அவளுக்கு என்னவாயிற்று என்பது எதையும் அண்டோனியோனி படத்தில் இறுதிவரை வெளியிடவேயில்லை. பீட்டர் வயர் [PETER WEIR] இயக்கிய அரிய படமான “PICNIC AT HANGING ROCK” என்ற படத்தின் மர்மமும் கூடவே நினைவுக்கு வருகிறது. பிக்னிக் போன பெண்கள் பள்ளி மாணவிகளில் ஒரு பெண் மர்மமாய் காணமற்போகிறாள். இறுதி வரை அந்த மர்மம் சொல்லப்படாமல் நம்முடைய யூகத்துக்கே விடப்படுகிறது. அண்டோனியோனி, அன்னா என்ன ஆனாள் என்பதைச் சொல்லாததுதான் ரசிகர்களில் ஒரு பிரிவினர் கலாட்டா செய்தது.

அன்னாவின் சினேகிதி க்ளாடியாவும் அன்னாவின் காதலன் சான்ட்ரோவும் [SANDRO] அன்னாவை தீவில் தேடுகையில், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அந்த உறவு, உடலுறவு வரை செல்லுகையில் கிளாடியா குற்ற உணர்வால் வதைபடுகிறாள். தொலைந்து போன ஒருத்தியின் காதலனுக்கும், தொலைந்து போனவளைத் தேட முற்பட்ட அவளது சினேகிதிக்கும் ஏற்படும் காதல் உறவோடு நாம் சமாதானமடைவதில்லை. அந்த மறைவின் மர்மம் தீர்க்கப்படாததோடு, அண்டோனியோனியை மீண்டும் இங்கிலாந்தில் செய்த “BLOW UP” படத்திலும் அவ்விதமான அவிழ்க்கப்படாத மர்மத்தை நீட்டவும் செய்கிறது.

அதே சமயம் ப்ளோஅப் லவஞ்சுராவின் தீர்க்கப்படாத மர்மத்துக்கும் அப்பால் அதாவது அந்த மர்ம உணர்வுக்கான வெளியையும் தாண்டிச் செல்லுகிறது எனலாம். விரிவான போலீஸ் புலனாய்வு, சோதனைகளையும் கடந்து கதாநாயகனான புகைப்படக் கலைஞனின் மனவெளிக்கும் வெளியே அந்த மர்மம் தன் பூடக இருப்பை உ ணர்த்துகிறதா என்பது நமக்கான பரிதவிப்பு என்றால் அதையே அண்டோனியோனி மிக அழகாக படத்தின் இறுதிக் காட்சியில் மற்றொரு பூடக முடிச்சவிழ்ப்பாக மிக நாசுக்காக காட்டிச் செல்லுகிறார்.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

மைய பாத்திரமான தாமஸ் [DAVID HEMMINGS என்ற நடிகர்] ஒரு ஃபாஷன் புகைப்படக் கலைஞர். அவன் புகைப்படக் காட்சிகள் கொண்ட காஃபி டேபுள் புத்தகமொன்றைச் செய்ய மேற்கொண்ட நிலையில், ஒருநாள் ஆட்கள் இல்லாத பூங்காவுக்குள் நுழைந்து தன் நூலுக்கான இறுதி வடிவின் சில காட்சிகளை அங்கு படமெடுக்கிறான். தாமஸ், வயதான ஒரு மனிதனும், இளம் பெண் ஒருத்தியும் அங்கு காதலர்களாய் சுற்றுவதைக் கண்டு படமெடுத்து விடுகிறான். அது வேறுவிதமாகிறது. அவனைத் தொடர்ந்து வந்த அந்த இளம் பெண் அவனிடம் சண்டை போட்டு அந்த படத்தைக் கொடுக்கும்படி கேட்கிறாள். தாமஸ் உள்ளே போய் வேறொரு நெகட்டிவ் சுருளைத் தந்துவிட்டு பூங்காவில் எடுத்த படச்சுருளின் நெகட்டிவை மறைத்து விடுகிறான். பிறகு அந்த படச் சுருளை டார்க் ரூமில் கழுவிப் பார்க்கையில் புதர் ஒன்றில் கை ஒன்று யாரையோ குறி பார்த்து துப்பாக்கியொன்றை நீட்டினபடியிருக்கிறது. அடுத்த சட்டகத்தை மேலும் பெரிதாக்கிப் பார்க்கிறான். புகைப்படத்தை அதன் அளவுக்கு மேல் பெரிதாகுவதை “BLOW UP” என்பர். இங்கு படத்தை ப்ளோ அப் செய்வதோடு, ஒரு விஷயமும் ப்ளோ அப் செய்யப்படுகிறது.

அண்டோனியோனி அற்புதமான தலைப்பை அளித்துள்ளார். அடுத்த படம், புதர் அருகே ஒரு மனிதன் கிடப்பது போல. மறுநாள் தாமஸ் அங்கே போய் பார்த்தபோது, ஒரு சடலம் கிடக்கிறது. ரத்தக்கறை. உடனே இதை போலீசிடம் அவன் கூறவும், அவர்கள் அவனோடு அங்கு போய்ப் பார்க்க அங்கே எதுவுமே இல்லை. போலீசார் அவனைத் திட்டி எச்சரித்து அனுப்புகின்றனர். அவனுக்கு குழப்பம் தீரவில்லை. ஒரு வண்டியிலிருந்து கூட்டமாய் ஆணும் பெண்ணும் இறங்கி இரு குழுக்களாக பிரிந்து பந்து விளையாடும் காலி மைதானத்தை அடைகிறார்கள். வாலிபால் விளையாட்டடைத் தொடங்குகின்றனர். வலை கிடையாது, பந்தும் கிடையாது. ஆனால் சகல ஆட்ட நுணுக்கங்களோடும் ஆடுகிறார்கள்.

“லவ் ஆல்”, பந்தை அடிப்பது போல நெட்டுக்கு மேலே போகுமாறு ஒருவன் சர்வீஸ் அடிக்க, மறு அணியில் ஒருவன் திருப்பியடிக்கிறான். இதை தாமஸ் தள்ளி நின்று பார்க்கையில், பந்து கோட்டுக்கு வெளியில் போய் விழுந்ததாய், “அவுட்” என்று கத்துகிறார்கள். ஒருவன் தாமஸைப் பார்த்து, “பால் ப்ளீஸ்”, என்கிறான் புரிந்து கொண்டவனாய் தாமஸும் தரையில் குனிந்து பந்தை எடுப்பது போல் பாவனை செய்து, அதை அவர்களை நோக்கி வீசுவது போல பாவனை செய்ய, படமும் முடிகிறது.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்
JACK NICHOLSON

மைகலேஞ்சலோ அண்டோனியோனியின் மற்றொரு அற்புத படம் “பயணி” [PASSENGER] பயணியாக புகழ்பெற்ற நடிகர். ஜாக் நிக்கல் சன் [JACK NICHOLSON] நடிக்கிறார். டேவிட் லோகே [DAVID LOCKE] ஒரு தொலைக்காட்சி நிருபர். வட ஆப்ரிக்காவின் மணல் மேலிட்ட கிராமத்தில் வந்தவன், ஒரு விடுதியில் அறை தேடுகிறான். இன்னொரு பயணியோடு சேர்ந்து தங்க ஒப்புக்கொண்டு அறைக்குப் போனால், அந்த பயணி இறந்து கிடக்கிறான். அவனது டைரியை எடுத்துப் படித்துவிட்டு இறந்தவன் முகத்தை கவனிக்கிறான். ஒரே அச்சில் வார்த்தாற்போல, – தமிழ் சினிமாவின் சகல காலந்தோரும் நடிகர்கள் நடிப்பதற்கேற்றபடி கற்பிக்கப்பட்ட இரட்டை வேடத்துக்கேற்ப – இருக்கவும் நிருபர் இறந்தவனாக மாறிக்கொள்ளுகிறான். T.V நிருபர் இறந்துபோக, இறந்தவன் உயிரோடு நடமாடுகிறான். அதற்குமேல் பிரச்சினைகளை எதிர்கொள்ள திணறுகிறான். இறந்தவனுக்கும் பயங்கரவாத கும்பலுக்குமான தொடர்பு, இறந்தவனின் காதலி என்று ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளுகிறான். வெளியில் வந்தவுடனே அவனைக் குறி வைத்து தாக்க பின் தொடரும் நபர்கள். இறுதியில் இவனும் சோக முடிவை மேற்கொள்ளுவதாக படம் முடிகிறது. மைகலேஞ்சலோ அண்டோனியோனி வாழ்ந்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது உட்பட நிறைய விருதுகளையும் பெற்றவர். அண்டோனியோனி தமது 94ம் வயதில் 2007-ல் காலமானார்.

(இத்தாலிய சினிமா முடிவுற்றது)

தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்


இத்தாலி- 2
லூசினோவிஸ் கோண்டி பசோலினி

இத்தாலிய திரைப்பட மேதைகளில் லூசினோவிஸ்கோண்டி (LUCHINO VISCONTI) குறிப்பிடத்தக்கவர். முப்பதுகளின் இறுதியில் புகழ்வாய்ந்த பிரெஞ்சு திரைப்பட மேதை ழான் ரென்வாரிடம் உதவி இயக்குனராயிருந்தவர். இவரது முதல் திரைப்படம். 1943ல் இயக்கி வெளிவந்தது. இப்படம், OSSESSIONE என்பது, சரியாகச் சொன்னால், ராபர்டோ ரோஸ்ஸெலினி முதல் நியோரியலிஸ திரைப்பட இயக்குனரல்ல. விஸ்கோண்டிதான் என்பதற்கு அவரது ஒஸ்ஸெஷன் சாட்சி. அதனால்தான் ராபர்டோவும் தம் கட்டுரையொன்றில், நியோ ரியலிஸத்தின் தந்தை நான் இல்லை, என்று குறிப்பிட்டிருந்தார். ஒஸ்ஸெஷன்தான் அந்த வகையாக 1943ல் செய்யப்பட்ட முதல் நியோரியலிச திரைப்படம். ஆனால்  அதன் மூலக்கதை ஜேம்ஸ் எம்.கேய்ன் (James M.Caine என்றவர் எழுதிய 1934ல் பிரசாரமான  The Postman Always Rings Twice  என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இப்படம் வெளிவரும் சமயம் கேய்ன் இறந்துவிட்டார். இந்த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் எனும் மர்ம நாவல் அதே பெயரில் 1946ல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இதனால் விஸ்கோண்டியை அவரது படம் ஒஸ்ஸெஷனை முதல் நியோ ரியலிஸத் திரைப்படமாய் எடுத்துக் கொள்ளுவதில்லை.

விஸ்கோண்டியின் அத்திரைப்படம், அன்றைய இத்தாலிய சர்வாதிகாரி முஸ்ஸோலியின் அரசின் ஃபாசிஸ கொள்கையை வன்மையாக எதிர்த்து கண்டிக்கும் ரீதியில் இருந்ததால் இத்தாலியின் பாசிஸ அரசின் அனுமதி வழங்கப்படவில்லை. மூல நாவலை விஸ்கோண்டிக்குப் படிக்கத் தந்தவர் பிரெஞ்சு இயக்குனர் ழான்ரென்வார்தான். அவரிடம் பெற்ற பயிற்சியின் தாக்கம் இந்தப் படத்தில் நன்கு தெரியும் படத்தைப் பார்த்துவிட்டு முஸோலினியின் கலாச்சார அமைச்சராயிருந்த கேய்டனோபோல் வெரெல்லி (Gaetano Polverelli) கக்கூஸ் நாற்றமடிக்கும் படம், என்று விமர்சித்தார்.

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஒஸ்ஸெஷன் ஒரு குற்றம் தொடர்பான கதையாயிருந்த போதிலும் விஸ்கோண்டி அந்த மர்மம் குற்றம் எனும் அம்சத்தை மிக மிக அமுக்கி வாசித்து, பொறாமையுணர்வு, அது தொடர்பாக தவிர்க்க முடியாத கொலை செய்யத் தூண்டும் உளவியல் விசயமாய் கதை வடிவை மாற்றிக் கொண்டார். முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டு, அவற்றில் ஒன்று வழியிலேயே திருமணம் ஒன்றில் சங்கமித்துவிடும். இத் திருமண நிகழ்ச்சியும், அடுத்து கதா பாத்திரம் அதில் அமிழும் நிகழ்வும் அற்புதமாக காட்சி ரூப சித்தரிப்பை படத்தில் கொண்டு வரப் பட்டிருக்கும். இன்னொரு கதாபாத்திரம் சாலையிலேயே நின்றுவிடும். ஒஸ்ஸெஷன் இத்தாலிய நியோரியலிஸ வகைமையையும், அமெரிக்க திரைப்பட வகைமையையும் இணைந்த பெரிய பெரியதொரு எடுத்துக்காட்டாக இருந்திருக்ககூடும். ஆனால் அவை இரண்டின் மூலத் தன்மைகளிலும் ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இருவித இயக்கங்களும் இணையாமல் தனித்தனியே இருப்பது தெரியவருவதால், படமும் வேறுபட்டுத் தோன்றுகிறது.

விஸ்கோண்டி 1960ல் இயக்கிய படம், ரோக்கோவும் அவனது சகோதரர்களும் Rocco and His Brothers இப்படத்தின் வாயிலாக, விஸ்கோண்டி, தொடக்கத்தில் தாம் கொண்டிருந்த இத்தாலிய நியோரியலிஸ கோட்பாட்டுணர்விலிருந்து வெளியேறி, உணர்ச்சி வயப்படும் மெலோடிராமா முடிவு கொண்டவிதமான திரைப்படமாக்கலுக்கு வந்தவராகத் தெரிகிறார். இதிலிருந்து அவர் மேற்கொண்டு இசை நாடகத் தன்மை மிக்கதும், பிரம்மாண்டமான ஜோடனைகள் மிக்க கதையாடல்களின் மேல் அமைக்கப்பட்ட சிறந்த திரைப்படங்கள் லெபார்டு Leopard வேங்கை மற்றும் லூட்விக் Ludwig 1972, Damned ஆகியவற்றை இயக்கினார். ரோக்கோ, விஸ்கோண்டியின் கடைசி நியோரியவிஸ படமென்று கூறலாம். ரோக்கோவும் அவன் சகோதரர்களும் விஸ்கோண்டியின் சிறந்த படங்களில் ஒன்று. இப்படத்தின் கருப்பு- வெள்ளை ஒளிப்பதிவை காமிரா கலைஞர் ஜிசெப்பெரோடுன்னோ Giuseppe Rotonno அதியற்புதமாய் செய்திருக்கிறார். ஆவணப் படம் போன்ற நியோரியலிஸ வகைமையையும், ஹாலிவுட் மாதிரி ஸ்டைல் வகைமையையும் கலந்தாற்போன்றதொரு வகைமை. இத்தாலியின் சிசிலி நகரிலிருந்து பிழைப்பு தேடி ஒரு விவசாயக் குடும்பம் மிலன் நகருக்கு வருகிறது. அக்குடும்பத்து சகோதரர்களில் ரோக்கோ என்பவன் முன்னுக்கு வர, ஒரு குத்துச் சண்டைக்காரனாகிறான். இவனுக்கு மூத்தவன் முரடன் பொறுப்பற்றவன். பேராசையும் பொறாமையும் நிரம்பியவன், குடும்பத் தலைவரில்லாத அக்குடும்பத்தின் பொறுப்பு குடும்பத் தலைவியான ரோக்கோவின்

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்அம்மா மீது விழுகிறது.

ரோக்கோவின் ஒத்துழைப்பிலும் சாந்த குணத்தாலும் தாய் கடினமான கணங்களை சமாளிக்கிறாள். மூத்த மகன் குடும்பத்தைப் பிரித்து நாசமாக்குவதிலும் ஈடுபடுகிறான். சகோதரர்கள் இருவருமே ஆசைப்படும் அழகியும் கவர்ச்சி மிக்கவளுமாய் பெண்ணொருத்தி, ரோக்கோ, பெண்ணுக்காக குடும்பம் சிதறுவதை விரும்பாது, அவளை அண்ணனுக்கே விட்டுக் கொடுத்து காதலைத் தியாகம் செய்கிறான். ஆனால் இறுதியில் அந்தப் பெண் இறந்து போகிறாள். ரோக்கோவாக பிரெஞ்சு நடிகர் ஆலன் டெலான் நடிக்கிறார். பரவாயில்லை. ஆனால் முரட்டுத்தனம், பொறாமை முதலான குணச்சித்திரங்களை நன்கு வெளிப்படுத்தி பாராட்டப் பட்ட மூத்த சகோதரனாய் நடித்த இத்தாலி நடிகர் ரெனாடோ சால்வடோரி நடிப்பில் முந்திவிடுகிறார்.

லூசினோ விஸ்கோண்டி 1963ல் லெபாரடு Leopard வேங்கை என்ற  மகத்தானதும் பிரம்மாண்டமானதுமான வண்ணப் படத்தை இயக்கி வெளியிட்டார். அவரது மிகச் சிறந்த படங்களில் லெபார்டும் ஒன்று. 1965ல் இப்படம் சென்னை குளோப் தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த அரிய பொருள் பொதிந்த அழகியல் செறிவு மிக்க படம் மூன்று வாரங்களில் திரையிடல் நிறுத்தப்பட்டது. பிறகு வந்த From Russia With Love  ஜேம்ஸ் பாண்ட் படம் இதே தியேட்டரில் பத்து வாரங்கள் ஓடியது. சிசிலியில் 1860களில் கரிபால்டியின் இத்தாலிய புரட்சியின்போது நடப்பதான கதை. இத்தாலியின் சிறந்த வரலாற்று நாவலாசிரியர் ஜிசிபேடொமாசி டி லாம்பெடுசா Giusepde Tomasi Di Lampedusaவின்  நாவலைத் தழுவி எடுத்த படம் விஸ்கோண்டியின் திரைக் காவியமென்றே கூறலாம். பகட்டும் படாடோபமும் மிக்க சீமான்களும், சீமாட்டிகளும் நிறைந்த இத்தாலிய நகர்புற உயர்குடிகளின் பிடி தளர்கிறது. மத்தியதர வர்க்கம் எழுகிறது. இந்த எழுச்சிக்கு
தலைமை தாங்கியவர் கரிபால்டி, Garibaldi இவ்வெழுச்சியால் ஓர் ஒன்றிணைந்த புதிய ஜனநாயகம் இத்தாலியில் மலர்கிறது.Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

The Leopard Il Gattopardo-1963 இத்தாலியின் இளவரசர் (இளவரசர் 60 வயதானவர் ஃபாப்ரிஜியோ டி சாலினா Prince Fabrizio Di Salina என்பவரது கதை வழியாக ரிசாரிமெண்டோ இயக்கத்துக்குப் பிந்தைய முக்கிய சமூக மாற்றங்களை படம் சொல்லுகிறது. கரிபால்டியின் புரட்சி படை சிசிலியில் நுழைந்ததும் அரசுப் படையோடு கடுமையான போர் நிகழ்கிறது. போர்க் காட்சி குறைந்த நேரமே இடம் பெற்றாலும் விருவிருப்பானது நகரின் தேவாலய பாதிரியார் இளவரசரோடு ஒட்டிக் கொள்பவர். வேடிக்கையான பாதிரியார். ஃபாப்ரிஜியோ இளவரசருக்கு பாதிரியாரை கிண்டல் செய்யாமலிருக்க முடியாது. ஒரு காட்சியில் இளவரசர் குளித்துக் கொண்டிருக்கும்போது அவசர சமாச்சாரமென்று சந்திக்க வரும் பாதிரியார், இளவரசர் முண்டக் கட்டையாகக் குளிப்பதைப் பார்க்க விரும்பாததைச் சொல்லுவார். அதற்கு இளவரசர் நக்கலாகச் சொல்லுவார்.

பாதிரியார் மனித ஆவியையும், ஆத்மாவையும் நிர்வாண கோலத்தில்தான் மனதில் கற்பித்து ஆசீர்வதிப்பார், என்று கரிபால்டியுடனான சண்டையை இளவரசர் தவிர்க்கும் முடிவோடு, குடும்பத்தோடு டொன்னா ஃபுகட்டா Donna Fugata எனும் ஊருக்கு போகிறார். உலகம் மாறிவரும் யதார்த்ததை அறிந்த சீமான்களில் இளவரசரும் ஒருவர். ஒவ்வொன்றும் அப்படியே இருக்க நாம் விரும்பினால், ஒவ்வொன்றும் மாற்றம் பெற்றாக வேண்டும், என்ற கொள்கையுடையவர் அவர். எனவே தம் இனத் தகுதிக்கும், செல்வாக்குக்கும்  மிகவும் குறைந்த உள்ளூர் மேயரின் பெண்ணை திருமணம் முடிக்க தம் சகோதரனின் மகன் டாங்க்ரெடி ஃபல்கோனெரியை மணமகனாக்க  முடிவு செய்கிறார். அவரது வேங்கை வம்சத்துக்கும் மேயரின் குள்ளநரி வம்சத்துக்கும் இடையேயான திருமண பந்தம் படத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெறுகிறது. இப்பகுதிக் காட்சி மிக அற்புதமாக ஜிசிப்பெ ரோட்குன்னோ Giuseppe Rotonnoவின் காமிராவால் ஒளிப்பதிவாயிருக்கிறது. வங்கத்தின் பிரம்மாண்ட மாளிகைகள் சத்யஜித்ரேயின் சில படங்களில் இடம் பெற்றது போன்று, இப்படத்தில் ஓர் அழகிய அசத்தலான மாபெரும் மாளிகை இக் காட்சிகளில் இடம் பெறுகிறது. ஒளிப்பதிவு அபாரம். மாளிகையின் ஓவியங்கள், சிற்பங்கள், பிரமிப்பூட்டும் மரவேலைப் பாடுகள்… ஆனால் சாலினா வம்சாவளி குடும்பத்தின் ஆண், பெண்களின் முகங்கள் இத்திருமணத்தில் வெளுத்து சோபையிழந்து தோன்றுகின்றன. சினிமா வரலாற்றில் நாவல் ஒன்றைத் தழுவி திரைப்படமாக்கியதில் மிகச் சிறந்த படைப்புகளில் விஸ்கோண்டியின் லேபார்டும் ஒன்று என விமர்சிக்கப்பட்டுள்ளது. இளவரசர் சாதாரண வம்சத்து மேயருடன் திருமண உறவு கொள்ளுவதை விஸ்கோண்டியின் சுய வரலாறு ரீதியான திரைப்பட காட்சியாடல் என்பாருண்டு. பிறப்பில் அதி செல்வாக்கான பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த லூசினோ விஸ்கோண்டி ஒரு பொதுவுடைமைவாத கொள்கையை ஏற்று கம்யூனிஸ்டாகத் திகழ்ந்ததை அவ்வாறு பேசுவார்கள்.

மணமகனாக பிரெஞ்சு நடிகர் ஆலன் டெலான் இளமை, வசீகரமாய் நடிக்கிறார். அவருக்கு இணையாக கிளாடியா கார்டினேல் Claudia Cardinale நடிக்கிறார். சாலினா இளவரசராக படம் முழுக்க வந்துபோகும் மறக்க முடியாத நடிப்பின் மூலம் கொள்ளை கொள்ளுபவர் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் பர்ட் லங்காஸ்டர் லங்காஸ்டர் படத்தைக் கையாண்டு நடித்திருக்கிறார். போலவே, விஸ்கோண்டியளவுக்கு எந்த இயக்குனரும் லங்காஸ்டரை இதுவரை வார்த்து நடிக்கச் செய்ததில்லை. தனித்த அதி உயர்ந்த சீமானாகத் தோன்றி நடிக்கும் அதே நேரம் மிகுந்த மனிதநேயம்  கொண்டவராகவும் நடிப்பால் வெளிப்படுகிறார். அவ்வாண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பதக்க விருது லெபார்டுக்கு கிடைத்தது.

லூசினோ விஸ்கோண்டிக்கு மரணம் குறித்தான சிந்தனை சுற்றிச் சுற்றி வந்திருக்க வேண்டும். இப்படத்தில் இறுதிக் காட்சியான பிரம்மாண்ட திருமண ஒப்பந்த ‘‘பால் ரூம் நடனத்தின்போது இளவரசர் ஃபாப்ரிஜியோ ஒரு பெரிய தைல வண்ண ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் மரண கோலத்தை அவ்வுடலைச் சுற்றியமர்ந்துள்ள பெண்களையெல்லாம் பார்க்கிறார். தன் மரணம் குறித்தும் யோசிக்கிறார். லாம்படூசாவின் நாவலில் இறுதியில் இளவரசர் இறந்துவிடுவதாயிருக்கும் முடிவை கிட்டதட்ட மரணவுணர்வோடு சிம்பாலிக்கலாக விஸ்கோண்டி படத்தில் மாற்றியிருக்கிறார். தொடர்ந்து தாம் இயக்கிய STRANGER DAMNED மற்றும் DEATH IN VENICE ஆகிய படங்களின் முடிவும் மரணத்தையே கொண்டவையாக விஸ்கோண்டி உருவாக்கியிருக்கிறார்.Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

DAMNED 1969ல் விஸ்கோண்டியின் இயக்கத்தில் உருவான மிகச் சிறந்த படம். இப்படம் எழுபதுகளின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதும், சென்னையில் நடந்தேறிய சர்வதேச திரைப்பட விழாவின்போது  இப்படம் பாண்டி பஜாரிலிருந்த ராஜகுமாரி தியேட்டரில் திரையிடப்பட்டது. இரண்டாவது சுற்றில் பொதுத் திரையிடலாக சஃபையர் திரையரங்கில் வெளியானது. இரு தியேட்டர்களில்  திரையிடப்பட்டபோதும் நானும் எழுத்தாளர் மா. அரங்கநாதனும் இரு முறை பார்த்தோம். டாம் டூம் படம் விழாவில் திரையிடப்பட்ட ஆண்டுதான் இந்திய அரசு  தங்க மயில் பரிசை நிறுவியது. அப்பரிசை சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற மிகச் சிறந்த படம் என லூசினோ விஸ்கோண்டியின் டாம்டு
படத்துக்குக் கிடைத்தது.

டாம்டு படத்தின் கதை, ஹிட்லரின் நாஜிக் கட்சி 1933ல் ஜெர்மனியில் அதிகாரத்தைப் பிடித்த காலச் சூழலில் நடக்கிறது. முப்பதுகளின் ஜெர்மன் தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்துக்குள் நாஜிஸம் எப்படியெல்லாம் புகுந்து எதிரொலித்தது என்பதை, விஸ்கோண்டியின் படம் நம்மை திகிலுக்கு ஆட்படுத்துகிறது. இவரது திரைப்படங்கள், கதையின் காலத்தின் நகர வீதியமைப்பு, வாகனங்கள், உடைகள், சிகை பேச்சு பாவனையென்று சகலமும், அந்த காலத்துக்கே நம்மை அழைத்துப் போய்விடும். இந்த விஷத்தில் அவருக்கு திலெபார்டு, ரோகோ ஆகிய படங்களில் கலைப் பொறுப்பேற்ற ஆர்ட் டைரக்டர் பியரோ டோசி (PIERO TOSI) பெரிதும் துணை நின்றவர் விஸ்கோண்டி பிரபு குடும்பத்தில் (COUNT LUNCHINO VISCONTI DIMODRONE) 1906ல் இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவர். மாபெரும் பிரெஞ்சு திரைப்பட மேதை ழான் ரென்வாரிடம் ஒரு மாதகாலம் மூன்றாவது உதவி இயக்குனராயிருந்து வேணிக் கற்றவர் பலமுறை வீட்டையும், கல்லூரியையும் விட்டு ஓடிப்போன விஸ்கோண்டியை அவரது தந்தை அவரை குதிரைப் படைப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். நாஜி எதிர்ப்பாளரும் கம்யூனிஸ்டாகவும் செயலாற்றியதற்காக விஸ்கோண்டி நாஜிகளால் கைது செய்யப்பட்டவர், இவர் திரைப்படங்கள் செய்ததைக் காட்டிலும் மிலன், வியன்னா ஆகிய நகர அரங்கங்களி்ல் நாடகங்களையும், இசை நாடகங்களையும் தான் அதிகளவு இயக்கியவர். DAMNED  படத்தில் ஜெர்மனியில் புகழ் பெற்ற தொழில் நகர் ஒன்றில் மாபெரும் நிஹர் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வதில் தடுமாறி அழிந்துப்போன தொழிலதிபக் குடும்பத்தின் கதை.

ஒரு முக்கிய குடும்ப உறுப்பினனாக பிரிட்டிஷ் நடிகர் டர்க் போகார்டு (DIRK BOGARDE)  நடிக்கிறார். சிறந்த தொழில்  மற்றும் வர்த்தக அதிபருக்கான பெரும் பரிசொன்றை பெறும் பொருட்டு அதற்குப் போட்டியாக விளங்கிய சிலரை மிகத் தந்திரமாய் இவர் கொலை செய்கிறார். இவரது மனைவியாக அற்புதமாய் வந்து சோஃபி எனும் பாத்திரத்தை இன்கிரிட் தூலின் செய்கிறார். இவர்களுக்கு ஒருவித மனநோயாளியான மார்டின் என்ற வயது வந்த மகன். இந்த இருபது வயதுப் பையன் மார்டினை, இவன் அம்மா சோஃபி தன் மன ஆளுமைக்குள் அமுக்கியிருக்கிறாள். அவள் மீது மார்டினுக்கு ஈடிபஸ் (OEDIPUS வகை சரீர ஆசையுண்டு. தன்மீதுள்ள தன் தாயின் ஆளுமையை உடைத்து அதிலிருந்து விடுதலையாகும் வேகத்தில் தன் மீது அவளுக்கு மாறாத பகைமையேற்படும் வண்ணம் மார்டின் தன் தாய் சோஃபியைக் கற்பழித்து வல்லுறவு கொள்ளுகிறான். முடிவில் எல்லோரும் விஷமருந்தி இறக்கிறார்கள். சோஃபியாவாக இங்மர் பெர்க்மனின் ஏழெட்டு சுவீடிஷ் படங்களில் நடித்த இங்ரிட் தூலின் சிறப்பாக நடிக்கிறார். மார்டினாக மிகவும் கடினமான மனோவியாதியாளனாய் அபாரமாய் நடித்திருப்பவர் ஹெல்மட் பெர்ஜர் என்ற ஜெர்மன் நடிகர். நாவலாசிரியர் ஆல்பர்ட் காம்யூவின் (ALBERT CAMUS) மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று அன்னியன் இருத்தலியல் (LA STRANGES) தத்துவத்தின் வாழ்வியல் மாதிரியாக இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையை மிக அற்புதமாயும் எளிமையாயும் தயாரித்து இயக்கினார் லூஷினோ விஸ்கோண்டி, OUT SIDER என்று ஆங்கிலத்தில் கிடைத்த நாவலை நானும்
மா.அரங்கநாதனும் இரு முறை வாசித்தோம். அந்த சமயம்தான், அக்கதையை விஸ்கோண்டி STRANGER என்று படமாக்கி, சென்னை காசினோ திரையரங்கில் திரையிடப்பட்டது. அது ஒரு கோடையில் சென்னையில் கோடை வெயிலின் தகிப்பு பேதலிக்க விடுவதுபோல, படத்திலும் சூரியனின் அல்ஜீரிய வெப்பத்தின் கொடுமையில் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறான் அந்நியன் மத்தியான காட்சி பார்த்து முடித்து வெளியில் வந்த சுருக்கிலேயே மாலைக் காட்சிக்கான வரிசையில் நானும் அரங்கநாதனும் போய் நின்றோம். நானும் மா.அரங்கநாதனும் ஒரே சமயத்தில் ஒரே நாளில் தொடர்ந்து இருமுறை பார்த்தும் வெறி தணியாத படம் விஸ்கோண்டியின்  STRANGER.

இப்படத்திற்கு இந்திய திரைப்படத் தணிக்கைக் குழு M சான்றிதழ் அதாவது MATURED AUDIENCE ONLY என்ற அறிவு. மனமுதிர்ச்சி பெற்றவருக்கான பிரத்தியேக சான்றிதழ் வழங்கியிருந்தது. இத்தகைய சான்றிதழ் அபூர்வமாக ஒரு சில படங்களுக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. காம்யூவுக்கும் விஸ்கோண்டிக்கும் ஒரு நெருங்கின தொடர்புண்டு. நாஜிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருவருமே பிரான்ஸில் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள்.

மார்சா பிரெஞ்சு அல்ஜீரியாவில் குமாஸ்தா வேலைப் பார்த்துக் கொண்டு சுய சமையல், காதலியுடன் விடுமுறைகளில் உடலுறவு உட்பட்ட இனிய பொழுதுகளாய்  கழிக்கும் இளைஞன். பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து புரட்சியும், சண்டையுமாய் இருப்பதால் அரபியர் சிலர் இவனோடு வம்பிலிழுக்கின்றனர். இச்சமயம் அவனது அம்மா ஊரில் இறந்துபோகிறாள். சம்பாதித்து தாயைக் காப்பாற்றாது முதியோர் விடுதியில் அவளை சேர்த்திருந்தபோது அவள் இறந்து விடுகிறாள். அவளை ஒரு முறை கூட போய் பார்த்திராத மார்சா இப்போதுபோய் விடுதிக்காரரைப் பார்க்கிறான். இறந்துபோனவளைப் பார்க்காமலேயே திரும்பியும் வந்து விடுகிறான். இவையெல்லாம் இவனைப் பற்றின பெருந்தவறான நடவடிக்கை, இயல்புகளாய் சமூகத்தை உறுத்துகிறது. சமுதாயத்தின் கண்களுக்கு மார்சா ஒரு சராசரி மனிதனுக்கான அடிப்படை குறைந்தபட்ச உணர்வுகளும், மனித நேயமும் ஒரு நிகழ்வுக்கான எதிர்வினையும் இல்லாதவனாய் படுகிறான். உயிர் வாழ்தல், மரணம், உடலுறவுடனான காம உணர்வு என்பனவற்றை அவன் உள்ளார்ந்து உட்சென்று ஈடுபடாது சகலத்தையும் வெளியில் நின்றே வெளிமனிதனாகப் பார்க்கிறான். அதேசமயம் அறிவோடும் உணர்ச்சிகளோடும் இயங்குகிறான். BEING IN NOTHINGNESS என்கிறார் ழான் பல் சார்தர். ஒரு முடிவில்லா நிகழ்காலமாகவே படும் தன் நடப்பியல் வாழ்வில் எந்த எதிர்பார்ப்புமிக்க ஆவலுமற்றவனாய் மார்சா, சிந்திக்க, சிந்தித்து வெளிப்படுத்த தேவையற்றவனாய் தெரிகிறான்.

காதலியுடன் கடும் வெயிலில் ஒரு நாள் கடற்கரையிலிருக்கையில் இரு அரபிய ரவுடிகளுடன் ஏற்படும் மோதலில் ஒருவனை மார்சா கொன்றுவிடுகிறான். கைது, சிறை, விசாரணை, பைபிள் மீது சத்தியம் செய்ய மறுப்பு. இறுதியில் அவனை கில்லடின் முறையில் சிரச்சேதம் எனும் தண்டனை வழங்கப்படுகிறது. இப்படத்தில் மார்சாவாக வரும் புகழ்பெற்ற இத்தாலிய நடிகர் மார்செல்லோ மாஸ்டிரியாயினி மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அன்றைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படத்திற்கு எழுதிய விமர்சனத்தின் இறுதிவரி: EXISTENCIALISM LIVED OUT, என்று குறிப்பிட்டிருந்தது.

பிரம்மாண்டமான மற்றொரு படைப்பை லூட்விக் எனும் திரைப்படம் வழியே தருகிறார் விஸ்கோண்டி. 1972-ல் விஸ்கோண்டி தயாரித்து இயக்கிய இம்மாபெரும் வரலாற்றுப் படம் லூட்விக் மூன்று பகுதிகளாக தரப்பட்டிருக்கிறது. பிரஷ்ஷியாவை (PRUSSIA) அன்றிருந்த சிறிய ஜெர்மனி, மற்றும் பவேரியா என்பனவற்றை ஒன்றிணைத்து ஓர் அகண்ட ஜெர்மனியாக உருவாக்குவதின் வரலாற்றுப் பகுதி இப்படம் லூட்விக்கின் மகுடாபிசேகம் மிக பிரம்மாண்டமானது. பவேரியாவின் இளவரசனாயிருந்து அரசனாகும் லூட்விக்கின் திருமணம் அவன் மனம் போலவே அவ்வளவு பிரமாதமாயில்லை. அவன் ஒரு மனோவியாதிக்காரன். நரம்பு பலவீனம், உணர்ச்சிவயப்படல், ஓரின பாலுறவு என் பதிலும் இசை, இசை நாடகத்திலும் மிக்க ஆர்வம் கொண்டவன்.

வான் பிஸ்மார்க்கின் அகண்ட ஜெர்மனி உருவாக்கத்தில் பவேரியாவும் சங்கமிக்கத் தயாராகும் 19ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் படம். படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக இருப்பவர் புகழ் பெற்ற பவேரிஸ,  ஆஸ்திரிய பின்னர் ஜெர்மனியரான  இசை மேதாவியும் இசை நாடகக் கலைஞருமான ரிச்சர்டு வாக்னர் (RICHARD WAGNER) ஹிட்லர் தம் கோப உணர்ச்சிகளின்போது வாக்னரின்  இசையை வைத்து கேட்பதின் மூலம் தணிந்துபோவார் என்பதும் வரலாறு வாக்னராக பழம் பெரும் பிரிட்டிஷ் நடிகர் டிரெவார் ஹோவார்டு (TREVOR HOWARD) அற்புதமாய் நடித்திருக்கிறார். லூட்விக் பாத்திரத்தை பிரமாதமாய் நடித்திருப்பவர் ஹெல்மட் பெர்கர் (HELMUT BERGER).

பியர் பவோலோ பசோலினி (PIER PAOLO PASOLINI) என்ற இத்தாலிய பிரமுகரின்  பெயர் உலகத் திரைப் பட வரலாற்றில் பெரும் பரபரப்பை செய்து வந்த ஒன்று மதரீதியான கெடுபிடிகளை, மத ரீதியான ஒழுக்கவியலின் பல்வேறு தளங்களை, சீமான்களை சீமாட்டிகளை, சமூகத்தின் மிகவும் தாழ்ந்த அடித்தட்டு மனிதர்களை ஏன், மனிதன் வசமுள்ள மிருகங்களையும் கூட, பசோலினியளவுக்கு காட்சி ரூப ரீதியாக திரைப்படங்களில் காட்டியதுமில்லை. அதற்காக வாங்கிக் கட்டியதுமில்லை- வேறெவரும் இறுதியாக பொதுவிடத்தில்  அவர் கொலையே செய்யப்பட்டவர். இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் வறுமையை, வறியவர்கள் குவிந்த சேரிகளையும் அதிகரிக்கச் செய்த அதே சமயம் பக்தியையும் பயமுறுத்தல் சேர்த்து புகட்டியது. இலக்கியங்களும் நாடகமும் பிற நிகழ்த்துக் கலை வடிவங்களும் மனிதனை இவற்றின் தார்மீக, சுழல்களின் அமுக்கலினின்றும் விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது அவற்றுடன் சினிமாவும் கைகோர்த்துக் கொண்டது. அவற்றில் ஒன்றாக வந்தது பசோலினியின் சினிமா. அவர் புகழ் பெற்ற சிறுகதைகளை திரைப்படமாக்கியவர். அவற்றில் முக்கியமானவை இரு படங்கள். ஒன்று, டெக்கமரான் (DECAMERON).Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

டெக்கமரான் கதைகள் கேலியும், கிண்டலும் சமூக நடப்பியலை ஒளிவு மறைவின்றி பச்சையாகக் காட்டி விமர்சிப்பவை. பாலுறவு சமாச்சாரங்கள் அதிகம். டெக்கமரான் கதைகளை எழுதியவர் இத்தாலிய எழுத்தாளர் பொக்காஷியோ BOCCACCIO ஒரு சமயம் நான் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவர் உணவு இடைவேளையில் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்துப் படிப்பார். அந்த காலத்தில் பிரேமா பிரசுரம் என்று ஒன்றிருந்தது. அது பெரும்பாலும் துப்பறியும் நாவல்களையும் ஆபாசம் மிக்க சில கதைப் புத்தகங்களையும் பதிப்பித்து வெளியிடும். வரவேற்பு அதிகம். அவற்றில் ஒன்று, நண்பர் ஒளித்து படித்துக் கொண்டிருந்தது. எனக்கு மிகவும் வேண்டியவராதலால் என்னிடம் அதையெல்லாம் காட்டுவார். வாங்கிப் பார்த்தேன். பொக்காஷியோ எழுதிய கதைகள், டெக்கமரான் கதைகள், என்றிருந்தது. எப்படி போகுது? என்று கேட்டேன்.

சரோஜாதேவி கதைபோல இல்ல, படிச்சிட்டு வேணும்னா தாருங்க, என்றார் நண்பர். அப்படித்தான் பொக்காஷியோ அருளிச் செய்த டெக்கமரான் கதைகள் படிக்கக் கிடைத்தது. டெக்கமரான் கதைகள் படிக்கக் கிடைத்தது. டெக்கமரான் கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த ஒன்பது கதைகளைக் கொண்ட வண்ணப்படம் டெக்கமரான் பசோலினியின் அரிய இயக்கத்தில் 1970ல் திரைப்படமாயிற்று. அனேகமாய் தான் இயக்கிய படங்களில் ஏதேனும் ஒரு சிறு பாத்திரத்தில் பசோலினியும் நடித்திருப்பார். ஒரு கதை மிக்க நகைச்சுவையும் கிறிஸ்தவ மடாலயங்கள் குறித்த நக்கல் மிக்கதுமானது. எல்லா மதங்களின் மடாலயங்களிலும் இவ்வகை
கூத்து இருக்கவே கூடும்.

ஒரு கன்னியாஸ்திரீகளின் வசிக்குமிடம், பரந்த செழித்து வளர்ந்த காடும் தோட்டமுமான பகுதிக்குள் ஏராளமான குடியிருப்புகள். அவர்களின் தலைவி நடுத்தர வயதுக்காரி. தோட்டக்கார கிழவனால் அவ்வளவு பெரிய தோட்டத்தை சமாளிக்க முடியாமல் உதவியாள் ஒருவனைக் கொண்டு வருகிறான். அவன் ஒரு இளைஞன், கன்னியாஸ்திரிகளின் இடத்தில் இளைஞனாக ஆண்கள் இருக்க அனுமதியில்லை. ஆனால் ஊமை செவிடாயிருந்தால் இளைஞனும் வந்து வேலை செய்யலாம் என்பதால் தோட்டக்கார கிழவனின் சொந்தக்கார இளைஞன் ஊமை. செவிடு என பொய் கூறி வேலையில் அமர்கிறான். தோட்ட வேலை செய்து கையில் இரு இளம் கன்னியாஸ்திரிகள் கவனிக்கின்றனர். காம இச்சை மேலிட்டு அவனோடு ரகசியமாய் உடலுறவு கொள்ள விழைகையில், ஒருத்தி கேட்கிறாள், சரி, குழந்தை உண்டாகி விட்டால் என்ன செய்வது? என்று அதற்கு மற்றவன் அலட்சியமாய் சொல்லுகிறாள், அது இப்போது கவலையில்லை. ஆனால்  பார்த்துக் கொள்ளலாம் அவனையிழுத்துக் கொண்டு இருவரும் பாழடைந்த அறைக்குள் போகின்றனர். வெளியில் நின்று பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஒருத்தி போகிறாள். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து மற்றவளையும் போக சொல்லுகிறாள். அடுத்தவள் கேட்கிறாள், எப்படியிருந்தது? என்று  ஓ, அருமை, என்கையில் மற்ற கன்னிப் பெண்களும் கவனித்துவிட்டு குடியிருப்புக்குள்ளேயே போலி ஊமையனை அழைத்து உடலுறவுச் சுகம் பெறுகின்றனர். ஒரு நாள் இதைக் கவனித்து கண்டு கொண்ட கன்னிமார் தலைவி ஊமையனை தன் அறைக்கு அழைத்துதனக்கும் உடலுறவுச் சுகமளிக்க கட்டளையிடுகிறாள். அவன் களைத்துப் போய் எழுந்துவிடவும்,  ஏன் முடிக்காது போகிறாய், முடித்துவிட்டுப் போ, என்கிறாள் கன்னிமார் தலைவி. போலி ஊமையன் சலிப்பும் கோபமுமடைந்தவனாக, நான் என்ன மெசினா, ஒரு சமயம் ஒருத்தியோடுதான் முடியும் என்று கத்திவிடுகிறான். தலைவி திடுக்கிட்டு அதிர்ந்துபோய், ஆஹா, ஊமை பேசிவிட்டான், ஊமை பேசிவிட்டான், அற்புதம் அற்புதம் நிகழ்ந்துவிட்டது. என்று கத்திக் கொண்டே ஓடுகிறாள். இப்படியாக மற்ற எட்டு கதைகளும் செக்ஸியும் பக்தியையும் மூட நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடி  பஸோலினியின் அற்புத இயக்கத்தில் படமாக்கப்பட்டுள்ளன டெகமரான்.

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்ஆங்கில இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜியாஃப்ரி செளஸர் (GEOFFREY CHAUCER) இவர் 1340 வாக்கில் லண்டனில் பிறந்தார். ஏராளமான பயணங்களை மேற்கொண்டவரும், இராணுவம் மற்றும் அரசுப் பணிகளில் பல பதவிகளிலிருந்தவர். ஏராளமான கவிதைகளை எழுதியவர். செளஸர் தமது புகழ் பெற்ற காண்டர்பரி கதைகள் படைப்பை 1387 வாக்கில் எழுதத் தொடங்கியவர். காண்டர்பரி கதைகள் தொகுப்பில் மொத்தம் 24 (இருபத்து நான்கு) கதைகள்  இருக்கின்றன. இவை யாவும் கரடு முரடான ஆங்கில  எழுத்தாயில்லாது  இடைபட்ட ஒரு மொழியில் எல்லா கதைகளையும் கவிதை ரூபத்தில் எழுதியிருக்கிறார் கதையின் முடிவில் தகுந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. செளஸரின் காலத்தில், பொதுமக்கள் காண்டர்பரி புனித தேவாலயத்துக்கு லண்டனிலிருந்து புனித பயணம் மேற்கொள்ளுவது சாதாரண காட்சி. அது சமயம் இந்த யாத்திரையை மேற்கொண்ட யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தவர், யாத்திரிகர்களை கதை சொல்லவைத்து போட்டி வைப்பது வழக்கம். அவர்களும் நிறைய கதைகளைப் போட்டியில் சொல்லுவார்கள். இந்த நிகழ்வைத் தம் கதைத் தொகுப்புக்கான களமாய் அமைத்து, இங்கிலாந்தின் மத்திய காலத்து சூழலில் கதைகளை எழுதியுள்ளார். சில கதைகள் பொக்காஷியோவின் டெக்கமரான் கதைகளை ஒத்திருக்கின்றன. The CANTERBURY TALES  தொகுப்பின் முதல் பதிப்பு WILLIAM CAXTON ன் அறிமுக உரையோடு 1470ல் அச்சு வடிவில் வெளிவந்தது. காண்டர்பரி கதைகளில் தமக்கு உகந்ததாயும் ரசிகர்களைக் கவரக்கூடியதுமாய் தேர்ந்தெடுத்து  THECANTERBURY TALES  என்ற வண்ணப் படத்தை பிரமிக்கும்படியான காட்சியமைப்புகளோடு பஸோலினி 1971ல் இயக்கினார். பணக்கார கிழட்டு கணவர்கள், அவர்களின் பாலுறவுகள், இளம் மனைவிகளின் கள்ளக் காதலுறவுகள் பாவிகளின் நரகப் பயணம், சாத்தானின் ஆளுமை நரகக் காட்சிகள் யாவும் மற்ற இயக்குனர்கள் அதுவரை துணிந்து அணுகியிருக்காத, முயற்சி செய்திருக்காத வடிவில் பஸோலினி செய்திருக்கிறார். இவரது மற்றொரு முக்கிய- அதிமுக்கிய திரைப்படப் படைப்பு, சாலோ, அல்லது சோடோமின் 120 நாட்கள்  SALO OR THE 120 DAYS OF SODOM எனும் படம். 1975ல் தயாரிக்கப்பட்டது.

பஸோலினியின் சாலோ, வை எவ்வளவுதான் நாகரிக உணர்வோடு பார்த்தோமானாலும், ஓர் அநாகரீக கசப்புச் சுவை நாக்கில் நிற்கும். அல்லது, எவ்வளவு அநாகரிக ரசனையோடு பார்த்தாலும், நாகரிக உணர்வு முன்னதை ஒதுக்கித் தள்ளிவிட்டு தலையெடுக்கும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி, மிகச் சொற்ப காலமே ஒரு குடியரசு அந்தஸ்தோடிருந்த ஸாலோ நகரில் கடைசியாகத் தோன்றி உரையாற்றினார்.

மார்க்விஸ் டிசேட்  THE MARQUIS DE SADE என்ற வக்கரித்த பிரபு, வக்கரிப்பான பாலுறவு வகைக்கு தம் பெயரையே சூட்டி, சாலோ அல்லது சோடோமின் 120 நாட்கள், என்ற நூலை எழுதினார்.  பஸோலினி அந்நூலின் விஷயத்தை தம் திரைப்படம் ஊடாக கண்டறிய வைக்கிறார். சேட்-ன் மூல நூலிலிருந்து வெகுவாக படம் வேறுபாட்டாலும், ்அதன் முக்கிய சாரத்தைக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் நடந்த ஃபாசிஸ கொடுமைமிக்க நிகழ்வுகளின்போது சாலோ நகரில் பஸோலினி சிக்கியிருந்தவர். அவரது சகோதரர் சாலோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாரத்தை உச்சத்திலேற்றி, அதிகாரத்தை கடவுளாகக் கொள்ளும் ஃபாசிச தத்துவத்தை சிதைக்கும் முடிவோடு பாலுணர்வு வக்கரத்தை பாசிஸ குறியீடாக்கி காட்டுகிறார் பஸோலினி.

நான்கு பாசிஸ அதிகாரிகள், இளம் வாலிபர்களும் இளம் பெண்களும் கைதிகளாகப் பிடிக்கப் பட்ட நிலையில் அவர்கள் மீது தங்கள் முழு அதிகாரத்தையும் பிரயோகித்து அவர்களை வெவ்வேறுவிதமான இயற்கைக்கு மாறான பாலுறவு நடவடிக்கைகளில் உட்படுத்தி சித்திரவதை செய்து மகிழ்கிறார்கள். திரும்பவும் சொன்னார் பஸோலினி,  சாலோ- படம், 1944-ன் முஸோலினியின் பாசிஸ குடியரசை கண்டித்து எதிர்க்கும் விதமாய் செய்யப்பட்ட ஒன்று என்று அந்த நான்கு பாசிஸ பணக்கார உயர்குடியைச் சேர்ந்த கனவான்கள் பிரம்மாண்டமான மாளிகையில் வைத்து இந்த அநியாய அக்கிரம கூத்தை நடந்தேறுகிறார்கள். ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த நிர்வாண கோல திருமணத்தை அந்த நால்வரில் ஒருவரான பாதிரியார் அதை நடத்தி வைக்கிறார். ஒரு நிர்வாணமான பெண்ணை மலம் உண்ண வைக்கிறார்கள். இக்காட்சி பார்க்கக் கூச வைக்கும் ஒன்று. அதே சமயம் பசோலினி அதற்கு கூறும் விளக்கம், நுகர்வோர் முதலாளித்துவத்துக்கு எதிரான எதிர்வினை நுகர்வோர் முதலாளித்துவத்தின் பல உணவுப் பொருள் தயாரிப்புகள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் அதே சமயம் அப்பாவி மக்களை ஈர்க்கவல்ல JUNK FOOD கலாச்சாரத்துக்கு எதிர்வினையான காட்சி சித்தரிப்பு என்று கூறுகிறார்.

இறுதியில் படத்தில் ஆண், பெண்கள் கழுத்து நெரிக்கப்பட்டு, நாக்குகள் துண்டிக்கப்பட்டு, தலைமுடி நீக்கப்பட்டு அவர்களின் முலைக் காம்புகள் தீயில் எரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்ததொரு இசை நாடக ரீதியிலிருக்குமாறு செய்திருக்கும் பஸோலினி, அதற்கென உயர்ந்த ஒரு விதத்தில் வக்கரிப்பான இசை மேதை. காரல் ஆர்ஃப்ஸ் CARL ORFF சின் இசைக் கோர்வையான கார்மினா புரானா) CARMINA BURANA என்பதை பின்னணி இசையாக உபயோகித்திருக்கிறார். இவ்விசையை பஸோலினி அப்பட்டமான பாசிஸ இசையென்றே உறுதியோடு தீர்மானித்தவர். மற்றொரு விசயம், அமெரிக்க கவிஞரான எஸ்ரா பெளண்ட் முஸ்ஸோலினியை ஆதரித்தவர் என்பதால், இன்றைய அரசியலுக்கும் அதன் ஃபாசிஸ வாத கொள்கைகளுக்கும் பின்னணியிலும் முன்னணியிலுமாய் உலகப் பெரும்பணக்காரர்களும் கலைஞர்களுமிருப்பதை கொள்ளலாம். உடலையும், அது சார்ந்த பாலுணர்வையும் வெறுக்குமளவுக்கு பஸோலினியின் சாலோ சித்தரிப்புகளைக் கொண்டது. பாலுணர்வை ஈர்ப்பதற்கு பதிலாக வெறுத்தொதுக்கும் விதமாயுள்ளது.

மிகவும் சக்திவாய்ந்ததும், மனதைப் போட்டு வதைக்கும்படியுமான இத்திரைப்படம் சாலோ முடிக்கப்பட்டு திரையிடலுக்கு வெளிவரும் முன் பொதுவிடம் ஒன்றில் பஸோலினி பரிதாபமாக கொலை செய்யப்பட்டார். 1975ல் நடந்தேறிய இக் கொலை இன்றளவும் அதற்கான முக்கிய காரணத்தை அவரவர் தீர்மானத்துக்கே விட்டுவிட்டது. இவரது கடைசி படமான சாலோ பல நாடுகளில் திரையிட தடை செய்யப்பட்டது. சமீபகாலமாய்த்தான் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இப்படம் பல்வேறு வழிகளில் பார்க்க கிடைக்கிறது.